Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விழாவுக்கான அழைப்பு விடுப்பதற்கே கஜதீபனிடம் தகவல் திரட்டினோம்: இராணுவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Army-logo(3).jpg

-செல்வநாயகம் கபிலன் 

வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபனை விழாக்களில் கலந்துகொள்ள அழைப்பதற்காகவே அவரது விபரங்களை திரட்டினோம் என்று யாழ்.மாவட்ட படைகளின் ஊடகப்பேச்சாளர் மேஜர் ரஞ்சித் மல்லவாரச்சி ஞாயிற்றுக்கிழமை (19) கூறினார்.

வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபனின் ஏழாலையில் அமைந்துள்ள வீட்டிற்கு சனிக்கிழமை (18) காலை சென்ற இராணுவத்தினர் மூவர் கஜதீபனிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர். 

வீட்டுக்கு சென்ற இராணுவத்தினர், வசாவிளான் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மற்றும் இராணுவ வீரர்கள் என தங்களை அடையாளப்படுத்திக்கொண்டனர். 

தொடர்ந்து, உங்களுக்கு திருமணமாகிவிட்டதா, எத்தனை குழந்தைகள்?, உங்கள் கிராமஅலுவலர் பிரிவு என்ன? போன்ற கேள்விகளை கஜதீபனிடம் கேட்டுள்ளனர்.

விசாரணை செய்தமைக்கான காரணத்தை கஜதீபன் கேட்டபோது, அது மேலிடத்து உத்தரவு என குறித்த அவர்கள் கூறியிருநடதனர். 

இது தொடர்பில் மேஜர் ரஞ்சித் மல்லவாரச்சியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, 'இராணுவத்தினர் நடத்தும் நிகழ்வுகளுக்கு கஜதீபனை அழைக்கும் பொருட்டு அவரிடம் தரவுகள் பெறப்பட்டதாகவும் மாறாக இராணுவ விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை' எனவும் அவர் மேலும் கூறினார். 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/130433-2014-10-19-08-31-09.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களைப் பலிகொடுப்பதன்மூலமே இலங்கை அரசதேவி மகிழ்ந்து மகிந்த அரசு நீடித்திருக்க அருள்பாலிக்கின்றார். வடமாகாண சபை உறுப்பினர் கயதீபனும் பலிகொடுகக் கூடிய பருவத்தை அடைந்துவிட்டாரா என்பதை அறியவே அவரிடம் தரவுகள் பெறப்பட்டதாக நம்பலாம். :o

இராணுவத்தினர் நடத்தும் விழா என்றால் என்ன? உலகில் எங்காவது இராணுவத்தினர் விழா நடத்துவது உண்டா? வேண்டுமானால் தங்களுக்குள் பார்டிடி நடத்தலாம். அதற்கு ஏன் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் போக வேண்டும்.புரியவில்லை.

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.