Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யூனிஸ் கான் சாதனை சதம்

Featured Replies

யூனிஸ் கான் சாதனை சதம்
அக்டோபர் 22, 2014.

 

துபாய்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் சதம் அடித்தார். இதையடுத்து, டெஸ்ட் விளையாடும் அந்தஸ்து பெற்ற அனைத்து அணிகளுக்கும் எதிராகவும் சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனை படைத்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ள ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணிக்கு ஷேசாத் (3), முகமது ஹபீஸ் (0) சொதப்பல் துவக்கம் தந்தனர். பின் இணைந்த அசார் அலி, யூனிஸ் கான் ஜோடி இணைந்து ஆமை வேக ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அசார் அலி டெஸ்ட் அரங்கில் 16வது அரை சதம் கடந்தார்.

மூன்றாவது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்த நிலையில், அசார் அலி (53 ரன், 167 பந்து) அவுட்டானார்.

மறுமுனையில், லியான் பந்தை சிக்சருக்கு அனுப்பிய யூனிஸ் கான் டெஸ்ட் அரங்கில் 25வதுசதம் எட்டினார். இவர் 106 ரன்கள் (223 பந்து) எடுத்து, ஜான்சன் வேகத்தில் வீழ்ந்தார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில், பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்திருந்தது. மிஸ்பா (34), அசாத் சபிக் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

சாதனை சதம்:

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான துபாய் டெஸ்டில் சதம் அடித்த யூனிஸ் கான், டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து அணிகளுக்கும் எதிராக சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமை பெற்றார்.

* தவிர, அதிக சதம் அடித்த பாகிஸ்தான் வீரர்கள் பட்டியலில் முதலிடத்திலுள்ள இன்சமாம் (25) சாதனையை, யூனிஸ் சமன் செய்தார்.

http://sports.dinamalar.com/2014/10/1413983300/YounisKhanpakistan.html

 

  • தொடங்கியவர்

80 பந்துகளில் சதம் அடித்த சர்பராஸ் அகமட்: பாகிஸ்தான் 454 ரன்கள் குவிப்பு
 

 

துபாயில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாளான இன்று பாகிஸ்தான் தன் முதல் இன்னிங்ஸில் 454 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

யூனிஸ் கான் கடினமான நேரத்தில் இறங்கி 106 ரன்கள் எடுத்து தனது அனுபவத்தைக் காட்ட, கடைசியில் இறங்கிய விக்கெட் கீப்பர் சரபராஸ் அகமட் அதிரடியாக விளையாடி, 80 பந்துகளில் சதம் எடுத்தார்.

 

பாகிஸ்தானில் குறைந்த பந்துகளில் டெஸ்ட் சதம் எடுத்த சாதனையை வைத்திருப்பவர் முன்னாள் தொடக்க வீரர் மஜீத் கான் ஆவார். இவர் 74 பந்துகளில் சதம் எடுத்துள்ளார். பிறகு ஷாகித் அப்ரீடி இருமுறை 78 பந்துகளில் சதம் கண்டுள்ளார். இப்போது சர்பராஸ் அகமட்.

வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மார்ஷ் வீசிய பந்தை ஸ்லிப் திசையில் பவுண்டரி அடித்து தனது 14-வது பவுண்டரியில் 80 பந்துகளில் சதம் கண்டார் சர்பராஸ். தேநீர் இடைவேளைக்கு சற்று முன் நேதன் லயன் பந்தில் ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார் சர்பராஸ். அவர் ஆட்டமிழந்த பிறகு பாகிஸ்தான் ஒரு ரன்னைக் கூட சேர்க்க முடியாமல் 454 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சுல்பிகர் பாபர் என்ற வீரர் காயம் காரணமாக களமிறங்கவில்லை.

 

இன்று 219/4 என்று தொடங்கியது பாகிஸ்தான். 4 மணி நேர ஆட்டத்தில் 235 ரன்களை விளாசியது. கேப்டன் மிஸ்பா உல் ஹக், ஆசாத் ஷபிக் ஆகியோர் இணைந்து 93 ரன்கள் சேர்த்தனர். பிறகு ஷபிக்-சர்பராஸ் ஜோடி 6-வது விக்கெட்டுக்காக 124 ரன்கள் சேர்த்தனர். ஷபிக் 89 ரன்களிலும் கேப்டன் மிஸ்பா 69 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஆசாத் ஷபிக் இன்று காலை 2-வது ஓவரில் அவுட் ஆக வேண்டியது, ஆனால் பேட்-கால்காப்பு கேட்சை அலெக்ஸ் டூலன் கோட்டை விட்டார். நேதன் லயன் ஏமாற்றமடைந்தார்.

இன்று 34 ரன்களுடன் தொடங்கிய மிஸ்பா, மிட்செல் ஜான்சன் வீசிய அசாத்திய பவுன்சர்களை காமெடியாக தவிர்த்தாலும் விக்கெட்டைக் கொடுக்காமல் நின்றார். தனது கடைசி 9 இன்னிங்ஸ்களில் மிஸ்பா எடுக்கும் முதல் அரைசதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அரைசதம் கண்டவுடன் லயன் பந்தை லாங் ஆனில் சிக்சருக்கு அடித்தார். ஸ்மித்தையும் ஒரு சிக்ஸ் அடித்தார்.

 

நேற்று அசர் அலி(53) யூனிஸ் கான் (106) பாகிஸ்தானை 7/2 என்ற சரிவு அபாயத்திலிருந்து மீட்டனர்.

பாகிஸ்தான் பேட்ஸ்மென்கள் வேகப்பந்து வீச்சில் 72 ஓவர்களில் 133 ரன்களையே அடிக்க முடிந்தது. மிட்செல் ஜான்சன் 31 ஓவர்கள் 18 மைடன், 39 ரன்கள் 3 விக்கெட்டுகள். சிடில், மிட்செல் மார்ஷ் அனைவரும் சிக்கனமாக வீசினர்.

454 ரன்களில் 133 ரன்களை வேகப்பந்து வீச்சில் எடுத்த பாகிஸ்தான் மீதி ரன்களை லயன், ஸ்மித், ஓ’கீஃப் ஆகியோரது ஜெண்டில் ஸ்பின் பந்து வீச்சிலேயே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.thehindu.com/sports/80-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-454-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6527973.ece

  • தொடங்கியவர்

வார்னர் சதமடித்தும் ஆஸி. 303-க்கு ஆல்அவுட்: முதல் இன்னிங்ஸில் பாக். 151 ரன்கள் முன்னிலை
 

 

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 103.1 ஓவர்களில் 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 133 ரன்கள் குவித்தபோதும் அந்த அணியால் வலுவான ஸ்கோரை எட்ட முடியவில்லை. இதனால் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 151 ரன்கள் முன்னிலை பெற்றது.

துபாயில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 145 ஓவர்களில் 454 ரன்கள் குவித்தது. அந்த அணியில் யூனிஸ்கான் 106 ரன்களும், சர்ஃப்ராஸ் அஹமது 109 ரன்களும் குவித்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 31 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 113 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் 75, கிறிஸ் ரோஜர்ஸ் 31 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

வார்னர் 9-வது சதம்

3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் கிறிஸ் ரோஜர்ஸ் 38 ரன்களில் ஆட்டமிழக்க, அலெக்ஸ் டூலன் களம்புகுந்தார். இதனிடையே வார்னர் 128 பந்துகளில் சதம் கண்டார். இது அவருடைய 9-வது டெஸ்ட் சதமாகும். இதுதவிர தொடர்ச்சியாக 3 இன்னிங்ஸ்களில் சதமடித்துள்ளார் வார்னர்.

இதன்பிறகு ஆஸ்திரேலியா சரிவுக்குள்ளானது. அலெக்ஸ் டூலன் 5, பின்னர் வந்த கேப்டன் கிளார்க் 2, ஸ்டீவன் ஸ்மித் 22 ரன்களில் ஆட்டமிழக்க, வார்னர் 133 ரன்கள் குவித்து வெளியேறினார். பின்னர் வந்தவர்களில் பிராட் ஹேடின் 22, மிட்செல் மார்ஷ் 27, மிட்செல் ஜான்சன் 37 என வேகமாக வெளியேற, ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் 103.1 ஓவர்களில் 303 ரன்களோடு முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா 3 விக்கெட்டுகளையும், ரஹத் அலி, ஜல்பிகர் பாபர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-303%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-151-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/article6531070.ece

  • தொடங்கியவர்

அதிக டெஸ்ட் சதங்கள்: இன்சமாம் சாதனையைக் கடந்து யூனிஸ் கான் முதலிடம்
 

 

அதிக டெஸ்ட் சதங்களுக்கான பாகிஸ்தான் சாதனையை வைத்திருந்த இன்சமாம் உல் ஹக்கின் 25 சதங்களை இன்று யூனிஸ் கான் கடந்து சாதனை செய்துள்ளார்.

துபாயில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து சாதனை புரிந்த யூனிஸ் கான், அதிக டெஸ்ட் சதங்களுக்கான இன்சமாம் சாதனையைக் கடந்து முதலிடத்திற்கு வந்தார்.

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 106 ரன்களை எடுத்த யூனிஸ் கான், 2வது இன்னிங்ஸில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 103 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இதன் மூலம் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு வீரர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்து சாதனை புரிந்தவர் என்ற பெருமையை பெற்றார் யூனிஸ் கான்.

 

மேலும் அவர் அடித்த 26-வது டெஸ்ட் சதமாகும் இது. இதனால் 25 சதங்கள் எடுத்து பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் சாதனையை தன் வசம் வைத்திருந்த இன்சமாம் உல் ஹக்கைக் கடந்து சென்று முதலிடம் வகிக்கிறார் யூனிஸ் கான்.

92 டெஸ்ட் போட்டிகளில் 164 இன்னிங்ஸ்களில் யூனிஸ் கான் 26 சதங்களை எடுத்துள்ளார். இவரது சராசரி 52.47 என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதிக டெஸ்ட் ரன்களில் இன்சமாம் இன்னமும் முன்னிலையில் உள்ளார். அவர் 119 டெஸ்ட் போட்டிகளில் 8829 ரன்களை எடுத்துள்ளார்.

யூனிஸ் கான் தற்போது டெஸ்ட் போட்டிகளில் 7,819 ரன்கள் எடுத்துள்ளார். எனவே இன்சமாம் உல் ஹக்கை இதிலும் கடந்து சென்று விரைவில் முதலிடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

 

மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1974-ஆம் ஆண்டு நியூசிலாந்து பேட்ஸ்மென் கிளென் டர்னர் 101 மற்றும் 110 நாட் அவுட் என்று கிறைஸ்ட் சர்ச் மைதானத்தில் எடுத்ததே யூனிஸ் கானுக்கு முன்பு ஆஸி. அணிக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸ் சத சாதனையாகும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்த ஒரே இந்திய வீரர் விஜய் ஹசாரே. இவர் 1948ஆம் ஆண்டு அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 116 மற்றும் 145 ரன்களை எடுத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்ததில்லை என்பது அவரிடமிருந்து விடுபட்ட சாதனைகளில் அரிய ஒன்றாகும்.

 

ஆக மொத்தம் 9 முறையே டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 இன்னிங்ஸ்களிலும் ஒரு வீரர் சதம் எடுத்தது நிகழ்ந்துள்ளது. அதில் 3 முறை மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் எடுத்துள்ளனர். ரோஹன் கன்ஹாய் ஒரு முறை வால்காட் இருமுறை.

3 இங்கிலாந்து வீரர்கள் (டெனிஸ் காம்ப்டன், ஹாமண்ட், சட்கிளிஃப்) மற்றும் ஒரு இந்திய வீரர், ஒரு நியூசி. வீரர். தற்போது பாகிஸ்தான் வீரர்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article6533407.ece

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியாவைத் தோல்வியின் முனைக்குத் தள்ளிய பாகிஸ்தான்

துபாயில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை கடும் நெருக்கடிக்குள்ளாக்கி, தோல்வியை நோக்கித் தள்ளியுள்ளது.

வெற்றி பெற 438 ரன்கள் தேவை என்ற மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவை இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இழக்கச் செய்துள்ளது. 4ஆம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 59/4.

டேவிட் வார்னர், அலெக்ஸ் டூலன், மைக்கேல் கிளார்க், இரவுக்காவலனாக இறக்கப்பட்ட நேதன் லயன் ஆகிய நாலவரும் ஆட்டமிழந்தனர். இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுல்பிகர் பாபர் 2 விக்கெட்டுகளையும் இளம் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஸ்டீவன் ஸ்மித் 3 ரன்களுடனும் தொடக்க வீரர் கிறிஸ் ராஜர்ஸ் 23 ரன்களுடனும் களத்தில் நிற்கின்றனர். நாளை 90 ஓவர்களையும் பாகிஸ்தான் ஸ்பின் பந்தை வெற்றிகரமாக எதிர்கொண்டு ஆஸ்திரேலியா டிரா செய்வது மிக மிகக் கடினம் என்றே தெரிகிறது.

4-வது இன்னிங்ஸை ஓரளவுக்கு சிறப்பாகத் தொடங்கிய ஆஸ்திரேலியா 44/0 என்று இருந்தது. அப்போது 14வது ஓவரில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுல்பிகர் பாபர் டேவிட் வார்னர் (29) விக்கெட்டை ஸ்டம்ப்டு முறையில் கைப்பற்றினார். அதே ஓவரில் டூலனை எல்.பி. செய்தார்.

கேப்டன் மைக்கேல் கிளார்க் இளம் லெக்ஸ்பின்னர் யாசிர் ஷா பந்தில் நெருக்கமான எல்.பி முறையீட்டில் தப்பித்தார். ஆனால் அவரிடமே 3 ரன்களில் எல்.பி. ஆகி வெளியேறினார். அதே ஓவரில் இரவுக்காவலன் நேதன் லயனையும் யாசிர் ஷா வீழ்த்தினார்.

முன்னதாக அகமது ஷேஜாத் 131 ரன்களையும், யூனிஸ் கான் 103 ரன்களையும் எடுக்க பாகிஸ்தான் 286/2 என்று டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை 151 ரன்கள். ஆஸி.க்கு இலக்கு 438 ரன்கள். 38/0 என்று தொடங்கிய பாகிஸ்தான், யூனிஸ், மற்றும் ஷேஜாத் மூலம் 168 ரன்கள் 2வது விக்கெட்டுக்காக சேர்த்தது.

அகமது ஷேஜாத் சதம் எடுத்து முடித்த பிறகு ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடிலை 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் அடித்தார். ஷேஜாதிற்கு இன்னிங்ஸ் தொடக்கத்திலேயே விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் கேட்ச் விட்டது குறிப்பிடத்தக்கது.

நாளை ஆட்டத்தின் 5-வது நாள். ஆஸ்திரேலியா தோல்வியைத் தவிர்ப்பது கடினமே.

ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் கூறியதாவது:

"என்னுடைய ஆட்டம் எனக்கு பெரும் ஏமாற்றமளிக்கிறது. நான் யாரையும் குற்றம் சொல்லவோ விமர்சிக்கவோ விரும்பவில்லை. கிரிக்கெட்டின் அனைத்து விஷயங்களிலும் நாங்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டோம்.

நாளை போராட வேண்டும், பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.” இவ்வாறு கூறினார்.

http://tamil.thehindu.com/sports/ஆஸ்திரேலியாவைத்-தோல்வியின்-முனைக்குத்-தள்ளிய-பாகிஸ்தான்/article6533431.ece?homepage=true

  • தொடங்கியவர்

சில நிமிடங்களுக்கு முன் ஆஸ்திரேலியா 221 ஓட்டங்களால்  தோல்வி அடைந்தது

  • தொடங்கியவர்

பாகிஸ்தானிடம் வீழ்ந்தது ஆஸி.,
அக்டோபர் 25, 2014.

 

துபாய்: முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி ‘சுழல்’ வீரர்கள் அசத்த ஆஸ்திரேலிய அணி 221 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

துபாயில், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நடந்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 454, ஆஸ்திரேலியா 303 ரன்கள் எடுத்தன. பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.நான்காம் நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்கு 59 ரன்கள் எடுத்திருந்தது. ரோஜர்ஸ் (23), ஸ்டீவன் ஸ்மித் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

நேற்று கடைசி மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது. ரோஜர்ஸ் 43 ரன்களில் வெளியேறினார். பாபர் ‘சுழலில்’ மார்ஷ் (3), ஹாடின் (0) சிக்கினர். ஸ்மித் அரை சதம் (55) கடந்தார். சிறப்பாக விளையாடிய ஜான்சன் 61 ரன்கள் எடுத்தார். சிடில் (15) ரன்களுக்கு அவுட்டாக, ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 216 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி தோல்வியடைந்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக பாபர் 5 விக்கெட் வீழ்த்தினார்.

 

http://sports.dinamalar.com/2014/10/1414257050/YouniskhanrecordTesttonforPakistanAustralia.html

  • தொடங்கியவர்

யூனிஸ் கான், அசார் சதம்: வலுவான நிலையில் பாக்.,
அக்டோபர் 30, 2014.

அபுதாபி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் யூனிஸ் கான், அசார் அலி சதம் அடிக்க பாகிஸ்தான் அணி வலுவான நிலையில் உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ள பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. துபாயில் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி அபுதாபியில் நேற்று துவங்கியது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

 

பாகிஸ்தான் அணிக்கு ஷேசாத் (35), முகமது ஹபீஸ் (45) சிறப்பான அடித்தளம் அமைத்தனர். பின் இணைந்த அசார் அலி, யூனிஸ் கான் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. எதிரணி பந்துவீச்சை இவர்கள் சுலபமாக சமாளித்தனர். இந்த ஜோடியை பிரிப்பதற்காக ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், எட்டு பவுலர்களை பயன்படுத்தினார். இதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

 

யூனிஸ்கான் சதம்:

மேக்ஸ்வெல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய யூனிஸ் கான் இத்தொடரில் ‘ஹாட்ரிக்’ சதத்தை பதிவு செய்தார். தவிர இது டெஸ்ட் அரங்கில் இவரது 28வது சதம். இவருக்கு ஒத்துழைப்பு தந்த அசார் அலி, டெஸ்ட் அரங்கில் தனது 6வது சதம் அடித்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்தது. யூனிஸ் கான் (111), அசார் அலி (101) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

90 ஆண்டுகளுக்குப்பின்...

இத்தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பாகிஸ்தானின் யூனிஸ் கான், ‘ஹாட்ரிக்’ சதத்தை (106, 103, 111*) பதிவு செய்தார். இதன் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 90 ஆண்டுகளுக்குப்பின் தொடர்ச்சியாக மூன்று சதம் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன், இங்கிலாந்தின் ஹெர்பர்ட் சுட்கிலிப் (1924–25) இந்த சாதனையை நிகழ்த்தினார்.

 

* தவிர, பாகிஸ்தான் அணி சார்பாக தொடர்ச்சியாக மூன்று சதம் அடித்த நான்காவது வீரர் ஆனார். இதற்கு முன், ஜாகிர் அப்பாஸ் (எதிர்–இந்தியா, 1982), முடசார் நஜார் (எதிர்–இந்தியா, 1982), முகமது யூசுப் (எதர்–வெ.இண்டீஸ், 2006) இம்மைல்கல்லை எட்டினர்.

 

http://sports.dinamalar.com/2014/10/1414689438/YounisKhanpakistan.html

  • தொடங்கியவர்

யூனிஸ் கான் இரட்டைச் சதம்; மிஸ்பா சதம்: பாகிஸ்தான் 570 ரன்களுக்கு டிக்ளேர்
 

 

அபுதாபியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 570 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

நேற்று தொடர்ச்சியாக 3-வது சதமெடுத்து சாதனை புரிந்த யூனிஸ் கான் இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 5-வது இரட்டைச் சதத்தை எடுத்து 213 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

 

கேப்டன் மிஸ்பா உல் ஹக் 101 ரன்கள் எடுத்தார். இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 181 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலியாவை வெறுப்பேற்றினர்.

யூனிஸ் கான் 349 பந்துகளில் 15 பவுண்டரி 2 சிக்சருடன் 213 ரன்கள் எடுத்து பீட்டர் சிடில் பந்தில் பவுல்டு ஆனார். மிஸ்பா உல் ஹக் 10 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 168 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஸ்மித் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

நேதன் லயன் 37 ஓவர்கள் வீசி 154 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஒருவரும் நல்ல வேளையாக ‘சதம்’ எடுக்கவில்லை.

இன்று காலை அசார் அலி 109 ரன்களில் ஹேடினுக்கு பதிலாக கீப் செய்த வார்னரிடம் கேட்ச் கொடுத்து ஸ்டார்க் பந்தில் வெளியேறினார். மிட்செல் ஜான்சன் தனது முழு வேகத்தையுன் தோள்பட்டைப் பலத்தையும் காட்டி யூனிஸ் கானை கொஞ்சம் பிரச்சினைக்குள்ளாக்கினார். அப்போது யூனிஸ் கான் கொடுத்த கேட்சை வார்னர் கல்லியில் கோட்டை விட்டார்.

 

பீட்டர் சிடில் பந்தை எட்ஜ் செய்த யூனிஸ் கான் கேட்சைப் பிடிக்கச் சென்ற பிராட் ஹேடின் காயம் அடைந்தார். அதன் பிறகு அவர் வெளியேற வார்னர் கீப் செய்தார்

அப்போது லயன் பந்தில் யூனிஸ் கானுக்கு ஸ்டம்பிங் வாய்ப்பைக் கோட்டை விட்டார் வார்னர்.

இன்று இன்னமும் 9 ஓவர்களை கடத்த வேண்டிய ஆஸ்திரேலியா, விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர், ராஜர்ஸ் ஆடி வருகின்றனர்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-570-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/article6552735.ece

 

  • தொடங்கியவர்

ரிவர்ஸ் ஸ்விங்கில் கிளார்க் பவுல்டு: 7 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா திணறல

 

அபுதாபி டெஸ்ட் போட்டியின் 3-வது நாளான இன்று ஆஸ்திரேலியா தங்கள் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் எடுத்து தோல்வியைத் தவிர்க்க கடுமையாக போராடி வருகிறது.

மிட்செல் மார்ஷ் 58 ரன்களுடன் ஒரு முனையில் நிலைத்து ஆடி வருகிறார்.

3ஆம் நிலையில் கிளென் மேக்ஸ்வெல் களமிறக்கப்பட்டார். அது நல்ல பயனைத் தந்து கொண்டிருந்தது. 28 பந்துகளில் அவர் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 37 ரன்கள் எடுத்திருந்த போது சுழற்பந்து வீச்சாளர் சுல்பிகர் பாபரிடம் பவுல்டு ஆனார்.

காலையில் டேவிட் வார்னர் சரிவைத் தொடங்கி வைத்தார். வேகப்பந்து வீச்சாளர் ரஹத் அலி இருபுறமும் நன்றாக ஸ்விங் செய்து வரும் நிலையில் அவரது பந்து ஒன்றை பொறுப்பற்ற முறையில் ஆடி கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

நேதன் லயன் 85 பந்துகளை சந்தித்துப் போராடி 15 ரன்கள் எடுத்து ரஹத் அலி பந்தில் பவுல்டு ஆனார். மட்டைக்கும், பேடிற்கும் இடையே புகுந்து பந்து ஸ்டம்ப்களை பதம் பார்த்தது.

 

ஸ்டீவ் ஸ்மித், சுல்பிகர் பாபர் வீசிய அருமையான பந்தை ஆட முயன்று தோல்வியடைந்தார், பந்து பின்னங்காலைத் தாக்கியது எல்.பி. என்று தீர்ப்பளிக்கப்பட்டார். ஆஸ்திரேலியா உணவு இடைவேளைக்கு முன்னரே 100/5 என்று சரிவை நோக்கித் தள்ளப்பட்டது.

அதன் பிறகு கிளார்க், மிட்செல் மார்ஷ் இணைந்து 64 ரன்கள் சேர்த்தனர். கிளார்க் 62 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்து விளையாடி வந்தார். அப்போது வேகப்பந்து வீச்சாளர் இம்ரான் கானை அழைத்தார் மிஸ்பா. அவர் வந்ததிலிருந்தே தனது அபார ரிவர்ஸ் ஸ்விங்கின் மூலம் கிளார்க்கை பாடாய்ப் படுத்தினார். ஒரு ஓவரில் 5 பந்துகள் மட்டையின் உள் விளிம்பில் பட்டு அபாயகரமாகச் சென்றது.

 

கடைசியில் ஒரு பந்து ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியேயிருந்து தரையில் படுவதற்கு முன்பே ஸ்டம்பை நோக்கி பயங்கரமாக இன்ஸ்விங் ஆனது. கிளார்க் அதனை தடுக்க நினைத்தார் பந்து கால்காப்பிற்கும் மட்டைக்கும் இடையே சென்று மிடில் ஸ்டம்பைத் தாக்கியது.

பிராட் ஹேடின் 10 ரன்கள் எடுத்து யாசீர் ஷாவின் அபாரமான பந்தில் பவுல்டு ஆனார். பாலோ ஆனைத் தவிர்க்க இன்னும் 169 ரன்கள் இருக்கிறது.

பாகிஸ்தான் தரப்பில் இம்ரான் கான், சுல்பிகர் பாபர், ரஹத் அலி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, யாசிர் ஷா ஒரு விகெட்டைக் கைப்பற்றியுள்ளார்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-7-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/article6555365.ece

  • தொடங்கியவர்

லுவான நிலையில் பாகிஸ்தான்
நவம்பர் 01, 2014.

 

அபுதாபி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், 370 ரன்கள் முன்னிலையில் உள்ள பாகிஸ்தான் அணி வலுவான நிலையில் உள்ளது.     

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) சென்றுள்ள பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. துபாயில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 1–0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் அபுதாபியில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 570 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டுக்கு 22 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் (16), நாதன் லியான் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.  

               

மார்ஷ் அரைசதம்: நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் (19) ஏமாற்றினார். அடுத்து வந்த மேக்ஸ்வெல், 28 பந்தில் 37 ரன்கள் எடுத்து அவுட்டானார். ‘நைட் வாட்ச்மேன்’ நாதன் லியான் (15) நிலைக்கவில்லை. ஸ்டீவன் ஸ்மித் ‘டக்–அவுட்’ ஆனார். பின் இணைந்த கேப்டன் மைக்கேல் கிளார்க், மிட்சல் மார்ஷ் ஜோடி பொறுப்பாக ஆடியது. ஆறாவது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த போது இம்ரான் கான் பந்தில் கிளார்க் (47) அரைசத வாய்ப்பை இழந்தார். அடுத்து வந்த பிராட் ஹாடின் (10), மிட்சல் ஜான்சன் (0) சொதப்பினர். பொறுப்பாக ஆடிய மிட்சல் மார்ஷ் (87) அரைசதம் அடித்தார். பீட்டர் சிடில் (28) நிலைக்கவில்லை. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 261 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் சார்பில் இம்ரான் கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.        

   

பின், 309 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணியின் அகமது சேஷாத் (14), முகமது ஹபீஸ் (3), ஜான்சன் ‘வேகத்தில்’ வெளியேறினர். மூன்றாம் நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்து, 370 ரன்கள் முன்னிலை பெற்றது. அசார் அலி (21), யூனிஸ் கான் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://sports.dinamalar.com/2014/11/1414859906/PakistanAustraliaAbuDhabiTestCricketImranKhan.html

  • தொடங்கியவர்

மிஸ்பா உல் ஹக் புதிய சாதனை ; தோல்வியின் விளிம்பில் அவுஸ்திரேலியா
2014-11-02 21:33:03

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதத்தை மிஸ்பா உல் ஹக் சமப்படுத்த, அபு தாபி மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 603 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலியா பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு தோல்வியின் விளிம்பில் இருக்கின்றது.

போட்டியின் நான்காம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவின்போது அவுஸ்திரேலியா அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.


டேவிட் வோர்னர் 58 ஓட்டங்களைப் பெற்றார். ஸ்டீவன் ஸ்மித் 38 ஓட்டங்களுடனும் மிச்செல் மார்ஷ் 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

பந்துவீச்சில் சுல்ஃபிகார் பாபார் 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

இப் போட்டியில் அவுஸ்தீரெலிய சுழல்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஸ்மித்தின் ஒரு ஓவரில் 22 ஓட்டங்களைக் குவித்த மிஸ்பா உல் ஹக், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 21 பந்துகளில் அதிவேக அரைச் சதத்தைக் குவித்தார். இதன் மூலம் ஜெக்ஸ் கலிஸுக்கு சொந்தமாகவிருந்த 24 பந்துகளில் அரைச் சதம் என்ற சாதனையை மிஸ்பா உல் ஹக் முறியடித்தார்.

அத்துடன் நின்று விடாமல் 28 வருடங்களாக விவியன் ரிச்சர்ட் வசம் இருந்த 56 பந்துகளில் அதிவேக சதம் என்ற சாதனையையும் மிஸ்பா நேற்று சமப்படுத்தினார்.


இப் போட்டியில் சாதனைகளுடன் மிஸ்பா உல் ஹக் இரண்டாவது சதத்தைக் குவிக்க, இதே போட்டியில் அஸ்ஹர் அலி பெற்ற இரண்டு சதங்கள் பெரும்பாலும் கவனிக்கப்படாத நிலைக்கு தள்ளப்பட்டது.

நியூஸிலாந்துக்கு எதிராக 1974இல் செப்பல் சகோதரர்களான கிறெக் மற்றும் இயன் ஆகிய இருவரும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்த பின்னர் ஒரே வீரர்கள் இருவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.


இப் போட்டியில் முதலாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 6 விக்கெட்களை இழந்து 570 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.
அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 261 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பாகிஸ்தான் தனது இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. இதில் மிஸ்பா உல் ஹக் ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களையும் அஸ்ஹர் அலி ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=7539#sthash.gyF71BhN.dpuf

  • தொடங்கியவர்

பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றி: 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி.க்கு எதிராக தொடரைக் கைப்பற்றியது
 

 

அபுதாபியில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 356 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மிகப்பெரிய டெஸ்ட் வெற்றியைப் பெற்று அந்த அணிக்கு எதிராக 20 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ரன்கள் அளவில் பாகிஸ்தான் பெற்ற மிகப்பெரிய டெஸ்ட் வெற்றி இதுவே. வெற்றி பெற 603 ரன்கள் என்ற இமாலய இலக்கை எதிர்த்து ஆஸ்திரேலியா 5-ஆம் நாளான இன்று 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி கண்டு தொடரை 0-2 என்று இழந்துள்ளது.

 

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேறியது. கடைசி 5 விக்கெட்டுகளை எந்த வித போராட்டமும் இன்றி ஆஸ்திரேலியா 8 ரன்களுக்குப் பறிகொடுத்தது. பாகிஸ்தான் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுல்பிகர் பாபர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லெக்ஸ்பின்னர் யாசிர் ஷா 3 விக்கெட்டுகளையும், ஹபீஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

ஆஸ்திரேலிய அணியில் வார்னரின் 58 ரன்களுக்குப் பிறகு ஸ்டீவ் ஸ்மித் 97 ரன்களை அதிகபட்சமாக எடுக்க மிட்செல் மார்ஷ் 47 ரன்களை எடுத்தார்.

ஸ்மித், மிட்செல் மார்ஷ் ஜோடி 5-வது விக்கெட்டுக்காக 107 ரன்களைச் சேர்த்தனர். இந்த ஜோடியை உடைத்த பிறகே படபடவென ஆஸ்திரேலிய பின்கள வீரர்கள் வெளியேறினர்.

முதலில் மார்ஷ், ஹபீஸ் பந்தை லெக் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 204 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் எடுத்த ஸ்மித், யாசிர் ஷாவின் பந்தில் எல்.பி.ஆனார். மேல் முறையீடு செய்தார் ஆனால் பலனில்லை. காயமடைந்த ஹேடின் 13 ரன்கள் எடுத்து மேலேறி வந்து அடிக்க முயன்று பாபர் பந்தில் பவுல்டு ஆனார்.

அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே யாசிர் ஷாவிடம் ஜான்சன் பவுல்டு ஆனார். மிட்செல் ஸ்டார்க்கும் பெரிய ஷாட்டை முயற்சி செய்து யாசிர் ஷாவிடம் பவுல்டு ஆனார். கடைசியாக லயன் விக்கெட்டை பாபர் வீழ்த்த பாகிஸ்தான் வெற்றிக் கொண்டாட்டம் தொடங்கியது.

 

மிஸ்பா உல் ஹக் ஆட்ட நாயகனாகவும், யூனிஸ் கான் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

மைக்கேல் கிளார்க்: "பாகிஸ்தான் அணி மிகச்சிறப்பான, ஆதிக்க பாணி கிரிக்கெட்டை ஆடினர். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று சோடை போனோம். துணைக் கண்டத்தில் துரதிர்ஷ்டவசமாக ஆஸ்திரேலியாவின் நிலை இதுவாகவே இருந்து வருகிறது." என்றார்.

மிஸ்பா உல் ஹக்: "நாங்கள் சிறப்பாகவே ஆடிவந்தோம், ஆனாலும் வெற்றி பெற முடியாமல் இருந்தோம், ஒருநாள் போட்டிகளில் பெற்ற தோல்விகள் எங்களைக் காயப்படுத்தியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் விட்டுவிடக்கூடாது என்று உறுதியுடன் ஆடினோம், இந்த அணியை வழி நடத்திச் செல்வதில் மிகவும் பெருமை அடைகிறேன். ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட பங்களிப்பு செய்தனர். இது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.” என்றார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-20-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/article6560768.ece

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் வெண்டதை விட அவுஸ் தோத்தது மிக்க மகிழ்ச்சி.பாராட்டுக்கள் யுனிஸ்கான்

  • தொடங்கியவர்

பாக்கிஸ்தான் வெண்டதை விட அவுஸ் தோத்தது மிக்க மகிழ்ச்சி.பாராட்டுக்கள் யுனிஸ்கான்

 

எனக்கும் தான் ரதி :) , தாங்கள் செய்தால் எல்லாம் சரி என்ற கொள்கை அவர்களுக்கு :icon_mrgreen:

 

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/148155-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.