Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பாறையில் சிங்களப் படைகள் முன்னேற்ற முயற்சி

Featured Replies

அம்பாறை மாவட்டத்தின் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆழுகைக்குட்பட்ட பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் இன்று வியாழக்கிழமை காஞ்சரங்குடா விசேட அதிரடிப்படையினரின் தளத்தில் இருந்து பெரும் எடுப்பிலான பாரிய படை நகர்வொன்றை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினருடன், ஒட்டுக்குழுக்களும் இணைந்து தாக்குதல்களை நடத்திவருவதாகவும், அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்த நகர்வுகளுக்கு உதவும் முகமாக காஞ்சிரங்குடா அதிரடிப்படையினரின் தளத்தில் இருந்து தொடர்ச்சியாக ஷெல்த்தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதுடன், சிறீ லங்கா விமானப்படையினரின் கிபிர் குண்டுவீச்சு விமானங்கள் இப்பகுதிகளில் சரமாரியான தாக்குதல்களையும் மேற்கொண்டவண்ணம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல்கள் காரணமாக பொதுமக்களின் பல வீடுகள் பெரும் சேதமடைந்துள்ளதாகவும், பலர் காயங்களுக்குள்ளானதாகவும் அங்கிருந்து வரும் முதல் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இத்தாக்குதல்கள் காரணமாக அவசர அவசரமாக தமது உயிர்களை காப்பாற்றும் பொருட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கிச்சென்றுகொண்டுள்ளனர் எனவும் தெரியவருவருகின்றது.

இதேவேளை மாந்தோட்டம் இராணுவ தளத்தில் இருந்தும் தாக்குதல்களை தொடுத்தவண்ணம் இராணுவத்தினர் முன்னேற முற்படுபதாகவும் தெரியவருகின்றது.

இது குறித்த உத்தியோக புூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://sankathi.org/news/index.php?option=...id=825&Itemid=1

அம்பாறையில் படையினரின் வலிந்த ஆக்கிமிப்பு இராணுவ நடவடிக்கை ஆரம்பம்.

இன்று காலை 7.30 மணிக்கு அம்பாறை மாவட்ட கச்சிக்குடிச்சாறுப் பகுதியயை நோக்கி சிறீலங்காப் படையினர் பாரிய வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இன்றை இராணுவ நடவடிக்கை குறித்து கருத்துரைத்திருக்கும் அம்பாறை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு.ஜெயா ...

ஆரம்பத்தில் எம்.ஜ 24 உலங்கு வானூர்த்தித் தாக்குதல்கள், கிபிர் விமானங்களும் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்க அம்பாறை மாவட்டத்தின் எல்லையோரக் கிராமமான பல்லலகம என்ற இராணுவ முகாமிலிருந்து ஆட்லறி மற்றும் மோட்டார் எறிகணைச் சூட்டாதரவு வழங்க படையினரின் வலிந்த அக்கிரமிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கப்பட்டதாகத் அம்பாறை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

படையினரின் எறிகணைத் தாக்குதல்களில் கச்சிக்குடிச்சாறுப் பகுதியில் உள்ள பொதுமக்களின் குடியிருப்புக்கள் கட்டடங்கள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன எனவும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கிச் இடம்பெயர்ந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் பகுதியில் உள்ள காஞ்சிரங்குடா, தாண்டியடி, சாகாமம் இராணுவ முகாங்களின் உதவியுடன் மூர்க்கமான எறிகணைத் சூட்டாதரவு படையினருக்கு வழங்கப்பட்டு படையினர் கச்சிக்குடிச்சாறு குளத்தை நோக்கி முன்னேறியுள்ளதாக அம்பாறை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் ஜெயா தெரிவித்துள்ளார்.

இவர்களை வழிமறித்து இடையிடையே போராளிகள் எதிர்த் தாக்குதல்களைத் தொடுத்துள்ளனர். சேதவிபரங்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இதைத் தொடர்ந்து அப்பகுதிக்குள் நுழைந்த படையினர் மக்களின் குடியிருப்புக்கள் மற்றும் கட்டங்களை அடித்துடைத்துள்ளனர்.

நேற்றைய தினம் சிறீலங்காவின் வேவு விமானம் அம்பாறையில் வேவு பார்க்கின்றததை அடுத்து விமானத் தாக்குதகள் அல்லது இராணுவுத் தாக்குதல்ககள் நடத்தப்படும் என போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடம் முறையிட்டிருந்தோம்.

இதேநேரம் சிறீலங்காப் படையினரின் இராணுவ நடவடிக்கை தொடர்பில் முறையிட்டபோது சம்பவ இடத்திற்கு வருகை தர கண்காணிப்புக் குழுவினர் முயன்ற போது காஞ்சிரங்குடா விசேட அதிரடிப்படையினரின் முகாமில் வைத்து கண்காணிப்புக் குழுவினர் தடுக்கப்பட்டுள்ளார்கள்.

இப்பகுதியில் புலிகளுக்கும் கருணா குழுவினருக்கும் மோதல்கள் நடைபெறுவதாகவும் இது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளதாக கண்காணிப்புக் குழுவினர் திரு.ஜெயாவிடம் தெரிவித்துள்ளார்.

கண்காணிப்புக் குழுவினரின் பதிலை அடுத்து கண்காணிப்புக் குழுவினரினடம் கருணா குழுவினர் கிபிர் விமானங்கள், எம்.ஜ.24 உலங்குவானூர்த்திகள் வைத்து தாக்குதல்கள் நடத்துகின்றனரா என கேள்வி எழுப்பப்பட்டபோது கண்காணிப்புக் குழுவினரால் சரியான பதில் வழங்கமுடியா நிலையில் மேலிடத்திற்குக இதனை அறிவிப்பதாகத் தெரிவித்ததாக கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்தாக அம்பாறை மாவட் அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு.ஜெயா மேலும் தெரிவித்துள்ளார்.

pathivu

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் ஏற்ப்பட்ட தோல்விகளை சரிகட்டும் முயற்சி...........

Sri Lankan offensive in Amparai - LTTE

Sri Lankan Special Task Force (STF) troopers launched a pre-dawn offensive into Liberation Tigers territory in Amparai Thursday. "The STF ground troopes have moved in 6 km into our territory inside Kanchikudicharu," said LTTE Amparai District Political Head S. Jeya. STF was continuing to target villages in the area surrounding Kanchikudichcharu with artilery shelling from Thirukkovil, Sahama, Kanjirankudah camps and Sri Lanka Air Force (SLAF) bombers were also targeting the villages, Mr. Jeya said.

The Liberation Tigers fighters were engaged in defensive clashes with the STF troopers, according to the Tiger political head of Amparai district.

Kanchikudicharu villagers have fled inwards into other villages via Santhanaru.

Some civilian houses have been burnt down by the STF troopers who advanced into Kanchikudicharu, the Tigers said.

LTTE Amparai District political head has complained to the SLMM stating that the STF offensive was a major violation of the CFA.

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, என்று சொல்கின்ற பழமொழி சிங்கள அரசுக்கு நல்ல உவமை. ரெசியல்ரீதியான தோல்வியையும், பேச்சுவார்த்தையைக் குழப்பும், சிங்களத்தின் செயலை புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு வெளிப்படுத்தலாம்? இதனால் அரசியல்ரீதியில் ஒரு தமிழர் தரப்புக்கு சிறு வெற்றியாவது கிடைக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா அங்கேதானெ ஒரு சில வாரங்களுக்கு முன் அடி வாங்கினவ? அடி பத்தேல போல? :roll:

எருமைத் தோலுக்கு மேல மழை பெஞ்சா எப்பிடி அப்பிடித் தான் இதுவும்.

ஈழத்திலிருந்து

ஐhனா

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, என்று சொல்கின்ற பழமொழி சிங்கள அரசுக்கு நல்ல உவமை. ரெசியல்ரீதியான தோல்வியையும், பேச்சுவார்த்தையைக் குழப்பும், சிங்களத்தின் செயலை புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு வெளிப்படுத்தலாம்? இதனால் அரசியல்ரீதியில் ஒரு தமிழர் தரப்புக்கு சிறு வெற்றியாவது கிடைக்கும்.

இது நல்ல கருத்து..நாம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாமே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப அங்கு நிலமை எப்படி?

செத்தவங்களை அடக்கம் செய்ய முன் அடுத்தவங்களை சுடு காட்டுக்கு அனுப்புறார் மகிந்த...நல்ல சிந்தனை கண்டியளே....

முக்கி தக்கி ஒத்து கொண்டிச்சினம் தோல்வி தான் எண்டு....

நம்மட கட்டளை தளபதி கவனிப்பார் விடுங்கோ....81..மீ.மீ..2 எடுத்தவையள் இது கழிக்கில புளுக்குனாவ முகம் அடியில் கிழக்கில் புலிகள் எடுத்த மோட்டக்..அன்றய காலத்தில் குலிகளுக்கு இது தான் ஆட்லெறி...கடந்த தாக்குதலில 2....

முகமாலையிலும் புலிகள் புதிய ரகம் பாவிச்சவயாம்...தாங்கள் பாவிச் சரக்கு எப்டி அவங்களுக்கு போனது எண்டு மேல் இடம் மண்டைய போட்டு குழப்புதாம்...

கொக்கர கூ....கூவினம்..கூவட்டும்...கூவட்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்பாறையில் புலிகளின் பகுதிகளை ஆக்கிரமித்தது சிறப்பு அதிரடிப்படை: கொழும்பு ஊடகம்

[ஞாயிற்றுக்கிழமை, 15 ஒக்ரொபர் 2006, 06:02 ஈழம்] [கொழும்பு நிருபர்]

அம்பாறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகள் சிலவற்றை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை ஆக்கிரமித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தி விவரம்:

அம்பாறை மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த வியாழக்கிழமை சில பகுதிகளை சிறப்பு அதிரடிப்படையினர் மீள கைப்பற்றியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் வலுவான பகுதியாகவும் விடுதலைப் புலிகளால் கிழக்கு மாகாணத்தில் பல தாக்குதல்கள் நடத்தப்பட்ட பிரதேசமான கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் வலிந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

பொத்துவில், பன்னலொய மற்றும் மொனறாகலை ஆகிய மூன்று பகுதிகளுக்கு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் சிறிலங்கா அதிரடிப்படையினர் உள்நுழைந்தனர்.

விமானப் படையினரும் இந்த தாக்குதலுக்கு ஆதரவாக வான் தாக்குதலை நடத்தினர் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=29314

என்னப்ப அங்க நடக்கிது? இதைப்பற்றி மேலதிக விபரங்கள்? :?

:lol::D:lol::(:(:(:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::D:lol::(:(:(:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

வைக்கோவிக்கு இப்ப என்ன சிரிப்பு வேண்டியிருக்கு? :roll:

அது தான் எனக்கும் விளங்கவில்லை ஏன் சிரிக்கிறார் எண்டு. மேலே சொல்லபட்ட செய்தி உண்மையா? தமிழ் நெட்டில் அதன் பிறகு எந்தசெய்தியும் வந்ததாக தெரியவில்லயே?

தம்பி எங்கடை(?) நோர்வே நாட்டிலை இந்த மாதம் 16-30 ஆம் திகதிகளுக்கிடையிலையுள்ள இரண்டு கிழமையையும் "சாவிலும் வாழ்வோம்" கவனஈர்ப்பு வாரமா பிரகடனப் படுத்தியெல்லே இருக்கிறம். நோர்வே புூராவும் பல முக்கியமான நாரங்களிலை றோட்டிலை இறங்கி நோர்வேஜிப் பிரசைகளைச் சந்திச்சுக் கதைச்சு பரப்புரை செய்யப்போறம். இதிலை என்ன விசேஷமெண்டா அரசியல் கட்சிகளையும் ஆதரவுகேட்டிருக்கிறது மட்டுமல்லாமை எங்கடை புள்ளைகளும் சின்னஞ் சிறுசுகளும் பள்ளிக்கூடத்திலையிருந்து வெள்ளைக்காறப் புள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வருகினம். இங்கையிருக்கிற தமிழ் இளையோரமைப்பும் முழு முயற்சியோடை அலுவல்லை இறங்கிப்போட்டினம்.

சிங்களவன் பேச்சுவாத்தைக்குப் போகாமை சண்டையைத்தொடக்கி நெருக்குவாரத்தைப் போட்டுட்டு பிறகு புலியள் தான் குழப்பினவையெண்டு சொல்லி சர்வதேசத்தையும் எங்களுக்கு எதிரா திசை திருப்பிற மாதிரி முயற்சிகள் நடக்குது.

இப்ப இப்பிடியான வேலைகள்ளை இறங்காட்டி பிறகு நாங்கள் இங்கை இருந்து என்ன பிரியோசனம். இல்லை கேக்கிறன். நாச்சியார், இந்த வெத்திலையை ஒருக்கா மடிச்சித் தாபிள்ளை. வர வர சப்பிறதுக்கும் முடியேல்லை பல்லெல்லே விழத்தொடங்கீற்றுது. ஊர்லையிருந்து ஏதம் தகவல் வந்ததே. எந்த ரெலிபோனும் கனநாளா வேலை செய்தில்லை.

எனக்கு ஒண்டுமா விளங்கேல்லைப் புள்ளை.

ஓம் அண்ணாச்சி ஊரில புூசிக் குளிக்க சவுக்காரமில்லையாம் மறுக்காவும் பனம் பழம் தானாம். அது சரி அப்ப நீங்க புலத்திலையும் போர ஆரம்பிச்சிட்டிங்க என்டு சொல்லுங்கோ. நல்ல செயல் வாழ்த்துக்கள். அதோட ஒரு மூன்டு மாசமா ஒன்டுமில்லாம வடகிழக்கு சனம் ஊரடங்கால சாகுறதையும் கொஞ்சம் கதைச்சு வையுங்கோ. புண்ணியமாப் போகும்.

ஈழத்திலிருந்து

ஐhனா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி எங்கடை(?) நோர்வே நாட்டிலை இந்த மாதம் 16-30 ஆம் திகதிகளுக்கிடையிலையுள்ள இரண்டு கிழமையையும் "சாவிலும் வாழ்வோம்" கவனஈர்ப்பு வாரமா பிரகடனப் படுத்தியெல்லே இருக்கிறம். நோர்வே புூராவும் பல முக்கியமான நாரங்களிலை றோட்டிலை இறங்கி நோர்வேஜிப் பிரசைகளைச் சந்திச்சுக் கதைச்சு பரப்புரை செய்யப்போறம். இதிலை என்ன விசேஷமெண்டா அரசியல் கட்சிகளையும் ஆதரவுகேட்டிருக்கிறது மட்டுமல்லாமை எங்கடை புள்ளைகளும் சின்னஞ் சிறுசுகளும் பள்ளிக்கூடத்திலையிருந்து வெள்ளைக்காறப் புள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வருகினம். இங்கையிருக்கிற தமிழ் இளையோரமைப்பும் முழு முயற்சியோடை அலுவல்லை இறங்கிப்போட்டினம்.

சிங்களவன் பேச்சுவாத்தைக்குப் போகாமை சண்டையைத்தொடக்கி நெருக்குவாரத்தைப் போட்டுட்டு பிறகு புலியள் தான் குழப்பினவையெண்டு சொல்லி சர்வதேசத்தையும் எங்களுக்கு எதிரா திசை திருப்பிற மாதிரி முயற்சிகள் நடக்குது.

இப்ப இப்பிடியான வேலைகள்ளை இறங்காட்டி பிறகு நாங்கள் இங்கை இருந்து என்ன பிரியோசனம். இல்லை கேக்கிறன். நாச்சியார், இந்த வெத்திலையை ஒருக்கா மடிச்சித் தாபிள்ளை. வர வர சப்பிறதுக்கும் முடியேல்லை பல்லெல்லே விழத்தொடங்கீற்றுது. ஊர்லையிருந்து ஏதம் தகவல் வந்ததே. எந்த ரெலிபோனும் கனநாளா வேலை செய்தில்லை.

எனக்கு ஒண்டுமா விளங்கேல்லைப் புள்ளை.

[2006100801.jpg

இதோ இந்த படங்களையும் போட்டுக்காட்டி இந்தப் பிக்குகளின் மன நிலையையும் எடுத்துக் காட்டுங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது தான் எனக்கும் விளங்கவில்லை ஏன் சிரிக்கிறார் எண்டு. மேலே சொல்லபட்ட செய்தி உண்மையா? தமிழ் நெட்டில் அதன் பிறகு எந்தசெய்தியும் வந்ததாக தெரியவில்லயே?

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19921

படங்கள் தந்து எதவியமைக்கு நன்றி அல்லிகா.

மேலதிக விபரங்கள் புதினத்தின்வாயிலாக பின்வரும் இணையத்தளத்தில்:

http://www.eelampage.com/?cn=29325

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.