Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்

Featured Replies

  • தொடங்கியவர்

டிவில்லியர்ஸ், கெய்ல், மெக்கல்லம் அடிக்கத் தொடங்கிவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது: தோனி
 

 

டிவில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், மெக்கல்லம் போன்ற அதிரடி வீரர்கள் அடித்து நொறுக்கத் தொடங்கிவிட்டால் கேப்டனோ, பவுலரோ ஒன்றும் செய்வதற்கில்லை என்று இந்திய கேப்டன் தோனி கூறியுள்ளார்

 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டிவில்லியர்சை நெருக்கி 2-வது ரன் ஓட வைத்து ரன் அவுட் செய்தது இந்தியா, ஆனால் அடுத்த மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு இன்னொரு பெரிய தலைவலி கிறிஸ் கெய்ல், இவருக்கு ஆட்டம் பிடித்தால் எந்த ஒரு இலக்கும் மண்தான்.

டிவில்லியர்ஸ், மெக்கல்லம் கிறிஸ் கெய்ல், முந்தைய உலகக்கோப்பையில் நம் சேவாக், யூசுப் பத்தான், பாகிஸ்தானின் அஃப்ரீடி, ஆஸி.யின் கிளென் மேக்ஸ்வெல், ஜேம்ஸ் ஃபாக்னர் உள்ளிட்ட வீரர்களிடம் ஒரு எக்ஸ்-ஃபேக்டர் உள்ளது. அன்றைக்கு சிக்கினால் எதிரணியினருக்கு திண்டாட்டம்தான்.

 

இந்நிலையில் கெய்லுக்கு எதிராக எதுவும் முன் திட்டம் உள்ளதா என்று தோனியிடம் கேட்ட போது, சிறந்த திட்டம் என்னவெனில் எதுவும் திட்டமிடாமல் இருப்பதே என்றார்:

“திறந்த மனதுடன் கூறினால்...இவர்கள் ஆடத் தொடங்கி சிக்சர்கள் அடிக்கத் தொடங்கினால் ஒன்றும் செய்ய முடியாது என்பதே. சிக்சருக்கு வியூகம் அமைக்க இயலாது.

ஏதாவது முன் திட்டமிட்டால் அதில் நாம் தோற்றுத்தான் போவோம். உதாரணமாக ஷாட் பிட்ச் வீசலாம் என்று தீர்மானித்தால் அத்தனை ஷாட்பிட்சும் பவுண்டரி போக ஆரம்பித்தால் அவ்வளவுதான்.

 

இப்படிப்பட்ட பேட்ஸ்மென்களை ஏமாற்றிப் பார்க்கலாம். இதன் மூலம் பவுலர்கள் வித்தியாசமாக ஏதாவது முயற்சிகளை மேற்கொள்ளலாம். அதைத் தவிர இதைச் செய்தால் இது நடக்கும் என்றவாறான நிலையான திட்டம் அவர்களுக்கு எதிராக செய்ய முடியாது.

இங்குதான் பந்துவீச்சாளர்கள் ஒரு கூடுதல் முயற்சி மேற்கொள்வது அவசியம். பீல்டர்களும் அவருக்கு உதவி புரியவேண்டும். ஒரு அரை வாய்ப்பு கிடைத்தால் கூட அவர்களை வீழ்த்த முனைப்பு காட்ட வேண்டும். அதாவது ஒரு வேட்டைக்குழு போல ஒன்றாக செயலாற்ற வேண்டும். அப்போதுதான் அவர்களை வீழ்த்த முடியும்.” என்கிறார் தோனி.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/article6959345.ece

  • Replies 827
  • Views 43.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சேவாக், கில்கிறிஸ்ட், டோணியை விட பாகிஸ்தானின் அப்ரிடிதான் அதிரடி வீரராம்!

 

நேப்பியர்: பாகிஸ்தானின் அதிரடி வீரர் ஷாகித் அப்ரிடி, இன்றைய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். குறைநத் பந்துகளை சந்தித்து 8 ஆயிரம் ரன்களை கடந்தவர் என்பதுதான் அந்த சாதனையாகும். இதன் மூலம் உலகின் முன்னணி அதிரடி வீரர் தான்தான் என்பதை அப்ரிடி பறைசாற்றியுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக இன்று பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 339 ரன்களை குவித்தது. அணியின் மூத்த வீரர் ஷாகித் அப்ரிடி 7 பந்துகளில், 2 சிக்சர், 1 பவுண்டரி உதவியுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

குறைந்த பந்து இந்த ரன்களின் மூலம், அப்ரிடி புது சாதனை படைத்துள்ளார். அதாவது இன்று 8 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இந்த ரன்களை கடக்க அவர் இதுவரை 6857 பந்துகளை சந்தித்துள்ளார். அதன் அடிப்படையில், அப்ரிடியின் ஸ்டிரைக் ரேட் 116.86 ஆக உள்ளது.

 

சேவாக்கின் சாதனை முறியடிப்பு இந்தியாவின் அதிரடி வீரர் விரேந்திர சேவாக் 7658 பந்துகளை சந்தித்து 8 ஆயிரம் ரன்களை கடந்து பெற்றிருந்த அதிரடி சாதனையை, அப்ரிடி முறியடித்துள்ளார். சேவாக்கின் ஸ்டிரைக் ரேட் 104.33 ரன்களாகும். அதாவது 100 பந்துகளை சந்தித்தால் சேவாக் 104 ரன்களை எடுப்பார் என்பது சராசரி. நூற்றுக்கு மேலே ஸ்டிரைக் ரேட் வைத்து 8 ஆயிரம் ரன்களை கடந்தது இவ்விரு வீரர்களும் மட்டுமே.

 

கில்கிறிஸ்ட் ஆஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க வீரர் கில்கிறிஸ்ட் 8310 பந்துகளை சந்தித்துதான், 8 ஆயிரம் ரன்களை கடந்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 96.94 ஆகும். ஜெயசூர்யா 8920 பந்துகளிலும், இந்திய கேப்டன் டோணி, 8950 பந்துகளிலும் 8 ஆயிரம் ரன் என்ற சாதனையை எட்டினர்.

 

கெய்ல், கிப்ஸ் இந்த பட்டியலில் 84.82 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் கெய்ல் 9வது இடத்திலும், தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிரடி வீரர் கிப்ஸ் 83.26 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 10வது இடத்திலும் உள்ளனர்.

 

பினிஷிங் சரியில்லையே.. ஆனால் பிற பேட்ஸ்மேன்களை ஒப்பிட்டால் அப்ரிடியின் ரன் சராசரி குறைவேயாகும். வந்தோமா.. அதிரடியாக இரண்டு ஷாட்டுகளை அடித்தோமா.. அவுட் ஆகி போனோமா என்பதுதான் அப்ரிடி வாடிக்கை. எனவேதான் அவரது ரன் குவிப்பு சராசரி குறைவாக உள்ளது. அந்த வகையில் ஷேவாக் ஒரு படி மேல்தான். ஏனெனில், அவர் இந்தியாவின் மேட்ச் வின்னராகும்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/shahid-afridi-completes-8000-odi-runs-with-amazing-strike-rate-222116.html


70i4aq.jpg

10981697_793979480686373_200618734032568


மண் கவ்வ பயிற்சி . :icon_mrgreen:

  • தொடங்கியவர்

10981697_793979480686373_200618734032568

மண் கவ்வ பயிற்சி . :icon_mrgreen:

 

ஹோலிதான் அவர்களுக்கு.. கொண்டாடப்போவது என்னவோ நாங்கதான்: வெஸ்ட் இண்டீஸ் வீரர் தடாலடி பேட்டி :o:lol:

 

 

  • தொடங்கியவர்

ஹோலிதான் அவர்களுக்கு.. கொண்டாடப்போவது என்னவோ நாங்கதான்: வெஸ்ட் இண்டீஸ் வீரர் தடாலடி பேட்டி

 

பெர்த்: இந்தியாவுக்கு வேண்டுமானால் 6ம் தேதி ஹோலி பண்டிகையாக இருக்கலாம், ஆனால் அதை கொண்டாடப்போவது என்னவோ நாங்கள்தான் என்று சவடால் விடுத்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டேரன் சம்மி. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வரும் 6ம்தேதி, வெள்ளிக்கிழமை, பெர்த் மைதானத்தில் பலப் பரிட்சை நடத்த உள்ளன. அன்றைய தினம் இந்தியாவில் ஹோலி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். எனவே வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணி ஹோலி பண்டிகையை கொண்டாடப்போவதைப் போல ஸ்டார் டிவி மோக்கா.. மோக்கா.. தொடர் விளம்பரத்தையும் வெளியிட்டுள்ளது

2enrx9u.jpg

இந்தியாவிடம் எனர்ஜி இந்நிலையில் மே.இ.தீவுகளின் முன்னாள் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான டேரன் சம்மி அளித்த பேட்டி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடினால் ஒரு தன்னம்பிக்கை கிடைக்கும். வெறியேறும். இதை பெரும்பாலான வீரர்கள் ஒப்புக்கொள்வார்கள். ஆனால், அதேபோன்ற, மனநிலையில் இந்தியாவுடன் மோத முடியாது. இந்தியாவுக்கு எதிரான போட்டி வேறுமாதிரியான எனர்ஜியை எங்களுக்கு அளிக்கும்.

 

ரசித்து ஆடுவோம் இந்தியா, மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளில் பலரும் நண்பர்களாக உள்ளோம். எங்களுக்குள் மோதிக்கொள்வது ஆக்ரோஷமானதாக இருக்காது. ஆனால் விறுவிறுப்பாக இருக்கும். இரு அணிகளுமே, ரசித்து விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

 

ஐபிஎல் உதவி ஐபிஎல் போட்டிகள் மூலமாக, இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளின் வீரர்கள் முன்பைவிட மிகவும் நெருங்கி வந்துள்ளோம். இந்திய வீரர்களின் எதிர்மறை விஷயங்கள் எங்களுக்கு தெரியும். அதற்கேற்ப வியூகம் வகுப்போம். ஆனால், அதேபோல எங்களைப் பற்றியும், அவர்களுக்கு தெரியும் என்பதையும் நாங்கள் மறுக்கவில்லை.

 

சுற்றுப் பயண ரத்து இந்திய சுற்றுப் பயணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு திரும்பியதால், எங்கள் அணி மீது இந்தியர்கள் அதிருப்தியடைந்திருப்பார்கள் என்று நம்பவில்லை. எங்களுடைய பிரச்சினைக்காகவே நாங்கள் திரும்பினோம். ஆனால், இந்தியாவுடன் எந்த பிரச்சினையும் கிடையாது. கெய்ல் முதுகு வலி பிரச்சினையால் கடந்த 3 வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவார் என்றுதான் நினைக்கிறேன்.

 

ஹோலி எங்களுக்குதான் பெர்த் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது. எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்தால், விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவை திணறடிக்கலாம். இந்தியர்களுக்கு எனது ஹோலி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் ஹோலி நாளில் வெற்றியை கொண்டாடப்போவது என்னவோ நாங்கள்தான். இவ்வாறு டேரன் சம்மி கூறினார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/india-could-celebrate-holi-we-could-hopefully-celebrate-win-222097.html

  • தொடங்கியவர்

ஸ்காட்லாந்தை வீழ்த்தி காலிறுதி ஆசையை தக்க வைக்குமா வங்கதேசம்?

 

வெலிங்டன்: உலக கோப்பையில் நாளை வங்கதேசமும், ஸ்காட்லாந்தும் மோத உள்ளன. நியூசிலாந்தின் சாக்சன் பீல்ட் மைதானத்தில் வைத்து நடைபெறும் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள வங்கதேசமும், ஸ்காட்லாந்தும் மோத உள்ளன.

 

ஸ்காட்லாந்தை வீழ்த்தி காலிறுதி ஆசையை தக்க வைக்குமா வங்கதேசம்? 3 போட்டிகளில் ஆடியுள்ள வங்கதேசம் ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டதால் அதிலிருந்து ஒரு புள்ளியை பெற்றது. ஆனால் ஸ்காட்லாந்து மூன்று போட்டிகளிலும் தோற்றது.

 

ஆப்கனுக்கு எதிராக கடந்த போட்டியில் அந்த அணி தோற்றது அதற்கு பெரும் பின்னடைவாக இருக்கும். இப்போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றால்தான் காலிறுதிக்கு தகுதி பெறும் ஆசையை தக்க வைத்துக் கொள்ள முடியும். இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு இப்போட்டி தொடங்க உள்ளது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/icc-world-cup-bangladesh-vs-scotland-preview-222152.html

  • தொடங்கியவர்

27th Match, Pool A: பங்களாதேஷ் v ஸ்காட்லாந்து at Nelson

Mar 5, 2015 (11:00 local | 22:00 GMT -1d | 23:00 CET -1d)

  • தொடங்கியவர்

5ba1yb.png

  • தொடங்கியவர்

கால் இறுதி ஆட்டங்கள் பின்வருமாறு அமையும்

 

A1 V B4

A2 V B3

A3 V B2

A4 V B1

 

கால் இறுதி ஆட்டங்கள் நடைபெறும் இடங்கள்

 

Wednesday 18 March -SCG, Sydney
Thursday 19 March - MCG, Melbourne
Friday 20 March - Adelaide Oval
Saturday 21 March - Wellington Stadium

 

ஆஸ்திரேலியாவும்  நியூசீலாந்தும் தங்கள் சொந்த நாட்டில் தான் கால் இறுதி போட்டிகளில் விளையாடுவார்கள்.

 

  • தொடங்கியவர்

ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி!

 

நெல்சன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலக கோப்பை போட்டியில் 27-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏ பிரிவில் உள்ள வங்கதேசம்- ஸ்காட்லாந்து அணிகள் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பீல்டிங்கை தேர்வு செய்தது. ஸ்காட்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மெக்லியோட்- கோயட்செர் களமிறங்கினர்.

 

3வது ஓவரிலேயே மெக்லியோட் 11 ரன்களில் அவுட் ஆனார். ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி! அடுத்து வந்த கார்டினெர் 19 ரன்களில் அகமது வீசிய பந்தில் அவுட் ஆனார். 4வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மேச்சன் நிதானமாக கோயட்சருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். ஆனால் 35 ரன்களை எடுத்திருந்தபோது சபீர் ரஹ்மான் பந்தில் மேச்சன் ஆட்டமிழந்தார். அடுத்த களமிறங்கிய மோம்சன் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க தொடங்கினார். கோயட்சர் முதல் ஸ்காட்லாந்து வீரராக சதமடித்தார். 45வது ஓவரில் 156 ரன்களுக்கு கோயட்சர் ஆட்டமிழந்தார்.

 

அடுத்து வந்த பெரிங்டன் 16 பந்துகளில் 26 ரன்களிலும், கிராஸ் 20 ரன்களிலும், ஹக் 1 ரன்னிலும் அவுட் ஆகினர். இதனால் ஸ்காட்லாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் குவித்தது. வெற்றிக்கு 319 ரன்கள் தேவை என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக தமிம் இக்பால், சவும்யா சர்க்கார் ஆகியோர் களமிறங்கினர். 2 ஓவரில் சர்க்கார் 2 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். ஆனால் அதன் பின்னர் களமிறங்கிய மகமதுல்லா, தமிம் இக்பாலுடன் இணைந்து நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

 

வங்கதேச அணி 23.3 ஓவரில் 144 ரன்களை எட்டிய நிலையிம் மகமதுல்லா அவுட் ஆனார். அவர் 62 பந்துகளில் 62 ரன்களைக் குவித்திருந்தார். தொடக்க வீரராக களம் இறங்கிய தமிம் இக்பாலுடன் ரஹிம் கை கோர்த்தார். வங்கதேசம் 201 ரன்களை எட்டிய நிலையில் தமிம் இக்பால் அவுட் ஆனார். அவர் 100 பந்துகளை எதிர்கொண்டு 95 ரன்களை எட்டியிருந்தார். சதமடிக்க இருந்த நிலையில் அவர் அவுட் ஆனாலும் வங்கதேசம் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. 48.1 வது ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கான 319 ஐ கடந்து 324 ரன்களை எட்டியது வங்கதேசம் அணி. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வெற்றி கொண்டது வங்கதேசம்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/world-cup-2015-coetzer-takes-scotland-record-318-against-bangladesh-222163.html

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலிய அணியிலிருந்து நீக்கப்பட்ட ஷேன் வாட்சன் வருத்தம்
 

 

சரியாக விளையாட முடியாமல் போன ஷேன் வாட்சனை ஆஸ்திரேலியா அன்று ஆப்கன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் உட்கார வைத்தது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு வாட்சனை ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிகளில் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தனது நீக்கத்துக்குக் தானே காரணம் என்கிறார் ஷேன் வாட்சன். கடந்த 18 மாதங்களாக நம்பர் 3 நிலையில் வாட்சன் களமிறங்கினார். ஆனால், ஸ்டீவ் ஸ்மித் நேற்று ஆப்கன் அணிக்கு எதிராக இந்த நிலையில் களமிறங்கி ரன்களைக் குவிக்க இனி ஷேன் வாட்சனின் எதிர்காலம் ஒருநாள் போட்டிகளப் பொருத்தவரை கடினமே.

"எனக்கு நிறைய வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. நான் ரன்களை எடுக்கவில்லை. அணியிலிருந்து நீக்கப்படுவது என்பது எப்போதும் ஏமாற்றமளிக்கக் கூடியதே.

 

அணித்தேர்வுக்குழுவினர் என்னிடம் பேசினர். நான் போதுமான ரன்களை எடுக்கவில்லை. என் மீதுதான் இதற்கான முழு காரணமும் உள்ளது. நான் என்னையே குறைகூறிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை, காரணம் நிறைய வாய்ப்புகள் எனக்கு அளிக்கப்பட்டது. நான் ரன்கள் எடுக்கவில்லை.

எனவே ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் அப்போது அதனை பயன்படுத்திக் கொள்வேன். இப்போதைய நிலைக்கு நானே காரணம்.” என்றார்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B7%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article6962772.ece

 

  • தொடங்கியவர்

இதுதான் இந்த உலகக் கோப்பையில் சிறந்த "சேஸிங்"... வங்கதேசம் புதிய சாதனை!

 

பெங்களூரு: ஸ்காட்லாந்து அணியை அபாரமான முறையில் சேஸ் செய்து வென்றுள்ள வங்கதேச அணி, நடப்பு உலகக் கோப்பையில் இதில் ஒரு சாதனையையும் செய்துள்ளது. இதுதான் இந்த உலகக் கோப்பையில் சிறந்த நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் பெரிய ஸ்கோரை சேஸ் செய்து வெற்றி பெற்ற அணியாக வங்கதேசம் சாதனை படைத்துள்ளது. நடப்பு உலகக் கோப்பையில் 300 பிளஸ் ரன்கள் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்டிருப்பது இது 3வது முறையாகும்.

 

தற்போதைய உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட ஸ்கோர்கள் விவரம்:

 

ஸ்காட்லாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் வீழ்த்தியது (ஸ்கோர் - ஸ்காட்லாந்து 318-8. வங்கதேசம் 322-4.)

 

இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது (ஸ்கோர் - இங்கிலாந்து 309-6, இலங்கை 312-1)

 

மேற்கு இந்தியத் தீவுகளை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய அயர்லாந்து (ஸ்கோர் மேற்கு இந்தியத் தீவுகள் 304-7,

 

அயர்லாந்து 307-6) எமிரேட்ஸை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஜிம்பாப்வே (ஸ்கோர் எமிரேட்ஸ் 285-7, ஜிம். 286-6)

 

எமிரேட்ஸை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய அயர்லாந்து (ஸ்கோர் - எமிரேட்ஸ் 278-9, அயர்லாந்து 279-8)

 

ஆப்கானிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை (ஸ்கோர் - ஆப்கானிஸ்தான் 232, இலங்கை 236-6)

 

ஸ்காட்லாந்தை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் (ஸ்கோர் - ஸ்காட்லாந்து 210. ஆப்கானிஸ்தான் 211-9)

 

ஆஸ்திரேலியாவை 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து (ஸ்கோர் - ஆஸ்திரேலியா 151, நியூசிலாந்து 152-9)

 

ஸ்காட்லாந்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து (ஸ்கோர் - ஸ்காட்லாந்து 142. நியூசிலாந்து 146-7)

 

இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து (ஸ்கோர் - இங்கிலாந்து 123. நியசிலாந்து 125-2)

 

எமிரேட்ஸை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா (ஸ்கோர் - எமிரேட்ஸ் 102, இந்தியா 104-1)

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/wc-2015-highest-successful-run-chases-222185.html

  • தொடங்கியவர்

ஸ்ரீலங்கா வீரர் கருணாரட்ணா  பயிற்சின் போது ஏற்பட்ட கை விரல் முறிவு காரணமாக உலக கிண்ண போட்டிகளில் இருந்து வெளியேறுகிறார்.

இவருக்கு பதிலாக குசல் பெரேரா இன்று அவுஸ்திரேலியா பயணம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா வீரர் கருணாரட்ணா  பயிற்சின் போது ஏற்பட்ட கை விரல் முறிவு காரணமாக உலக கிண்ண போட்டிகளில் இருந்து வெளியேறுகிறார்.

இவருக்கு பதிலாக குசல் பெரேரா இன்று அவுஸ்திரேலியா பயணம்.

இவையள் சும்மா கைமுறிவு, கால்முறிவு எண்டு பொய் சொல்லி ஆக்களை மாத்துகினம்.. :lol:

  • தொடங்கியவர்

20qi5np.jpg

  • தொடங்கியவர்

இந்தியா
v

மேற்கிந்தியாத்தீவுகள்
(14:30 local | 06:30 GMT | 07:30 CET)

  • தொடங்கியவர்

இந்தியாவைத் தாக்க வந்த கெய்ல் புயல் வலுவிழந்து 21 ரன்களில் கரை ஒதுங்கியது.. 4 விக்கெட் காலி!

 

பெர்த்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் மிக சிறப்பான பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கால் மேற்கிந்திய தீவுகள் அணி கெய்ல் உட்பட 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து ரன்களை எடுக்க முடியாமல் பரிதாபமான நிலையில் தவித்து வருகிறது. 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 54 ரன்களையே மேற்கிந்திய தீவுகள் அணியால் எடுக்க முடிந்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பி பிரிவில் இடம் பெற்றுள்ளது.

 

இதே பிரிவில் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் உள்ளன. டோணி தலைமையிலான இந்திய அணி விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளை கைப்பற்றி உள்ளது. பாகிஸ்தானை 76 ரன் வித்தியாசத்திலும், தென்ஆப்பிரிக்காவை 130 ரன் வித்தியாசத்திலும், ஐக்கிய அரபு எமிரேட்சை 9 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா தோற்கடித்தது. இந்தியாவைத் தாக்க வந்த கெய்ல் புயல் வலுவிழந்து 21 ரன்களில் கரை ஒதுங்கியது.. 4 விக்கெட் காலி! இந்திய அணி இன்றைய 4-வது ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டுள்ளது.

 

முதல் இரண்டு ஆட்டத்திலும் முதலில் பேட்டிங் செய்து வென்ற இந்திய அணி பலவீனமான ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிராக 2-வது ‘பேட்டிங்' செய்தது. இந்திய அணியின் 4-வது தொடர் வெற்றிக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ்கெய்ல் மிகப்பெரிய சவாலாக இருப்பார். ஜிம்பாப்வேக்கு எதிராக இரட்டை சதம் அடித்த அவரை கட்டுப்படுத்துவது இந்திய பந்துவீச்சாளர்களுக்கு நிச்சயம் சவால்தான். வேகப்பந்து வீச்சில் முகமது ஷமி, மொகித் சர்மாவும், சுழற்பந்தில் அஸ்வினும் நல்ல நிலையில் உள்ளனர். கிறிஸ்கெய்லை வீழ்த்த வியூகம் அமைத்தால் மட்டுமே அவரது ரன் குவிப்பை தடுக்க இயலும். இதற்காக கேப்டன் டோணி புதிய முயற்சியை மேற்கொள்வார் என்று தெரிகிறது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை புது பொலிவுடன் உள்ளது. கோஹ்லி, ஷிகார் தவான், ரகானே ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.

 

இதேபோல ரெய்னா, ரோகித்சர்மா, கேப்டன் டோணி ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளை மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது. அயர்லாந்து, தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றது. 4 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி இந்தியாவை வீழ்த்த அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்தும். கிறிஸ்கெய்ல் அந்த அணியின் துருப்புசீட்டாக உள்ளார். அவர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தால் கட்டுப்படுத்த இயலாது. மீண்டும் ஒரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆர்வத்தில் கெய்ல் இருக்கிறார். இதுதவிர சாமுவேல்ஸ், லெண்டில் சிம்மன்ஸ், டாரன்சேமி, ரஸ்சல் டெய்லர் போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.

 

இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டத்தில் இந்தியா 3-ல் வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஒரு போட்டியில் வெற்றி கிடைத்தது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தர்மசாலாவில் மோதிய ஆட்டத்தில் இந்தியா 59 ரன்னில் வெற்றி பெற்றது. பெர்த் மைதானத்தில் இரு அணிகளும் ஒரே ஒரு முறை மோதியுள்ளன. 1991-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி நடந்த இந்த ஆட்டம் ‘டை'யில் முடிந்தது. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்து இந்தியாவை பந்து வீச கேட்டுக் கொண்டது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/world-cup-2015-india-hope-continue-winning-run-against-west-222219.html

  • கருத்துக்கள உறவுகள்

Espn Cricinfo இல் இந்த ஆட்டத்தின் வர்ணனையை காணமுடியவில்லை..

  • தொடங்கியவர்

Espn Cricinfo இல் இந்த ஆட்டத்தின் வர்ணனையை காணமுடியவில்லை..

 

இப்ப பார்த்தேன் இருக்கே இசை

 

http://www.espncricinfo.com/icc-cricket-world-cup-2015/engine/match/656453.html

 

ஏன் நீங்கள் மேட்ச் live ஆக பார்ப்பதில்லையா

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பார்த்தேன் இருக்கே இசை

http://www.espncricinfo.com/icc-cricket-world-cup-2015/engine/match/656453.html

ஏன் நீங்கள் மேட்ச் live ஆக பார்ப்பதில்லையா

நன்றி நவீனன்.. இப்ப பின்னிரவு 3:10. இப்பப் போய் டிவியை போட்டால் செத்தாண்டா சேகரில் கதை எழுதிப் போட்டுவிடுவார்கள்.. :o:lol:

  • தொடங்கியவர்

நன்றி நவீனன்.. இப்ப பின்னிரவு 3:10. இப்பப் போய் டிவியை போட்டால் செத்தாண்டா சேகரில் கதை எழுதிப் போட்டுவிடுவார்கள்.. :o:lol:

 

ஓஓ அந்த பிரச்சினை இங்கும் தான் :lol: நான் டிவியில் head phone யைதான் போடுவது இரவில் :D

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நவீனன்.. இப்ப பின்னிரவு 3:10. இப்பப் போய் டிவியை போட்டால் செத்தாண்டா சேகரில் கதை எழுதிப் போட்டுவிடுவார்கள்.. :o:lol:

 

:D :D :lol:

 

இந்தியா 25/2/8 முதல் ஆட்டக்காரர் இருவரும் அவுட்

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் சிஷ்யப்பையன்தான் சிரிக்கப்போறார் போலிருக்கு.. :o:D

  • கருத்துக்கள உறவுகள்

கோலியும் போய்விட்டார்  இந்தியா 63/3/15

  • கருத்துக்கள உறவுகள்

78/4 in 17.5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.