Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

India Beat Ireland by 8 wickets

  • Replies 827
  • Views 43.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Breaking Now 37வது ஓவரிலேயே, அயர்லாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது இந்தியா

Read more at: http://tamil.oneindia.com/

  • தொடங்கியவர்

உலகக் கோப்பை: இந்தியா - அயர்லாந்து போட்டிப் பதிவுகள்

அயர்லாந்தை பந்தாடி இந்தியா 'உலகக் கோப்பை' சாதனை வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் பி - பிரிவு லீக் ஆட்டத்தில், அயர்லாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு சமி, அஸ்வின் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சும், தவண், ரோஹித், கோலி, ரஹானா ஆகியோரின் அபார பேட்டிங்கும் துணைபுரிந்தன.

இந்த வெற்றியின் மூலம், உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 9 வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா சமன் செய்தது. அதேவேளையில், இந்தியா ஏற்கெனவே செய்த சாதனை முறியடிக்கப்பட்டது.

 

முன்னதாக, கடந்த உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டம் முதல் இந்த உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டம் வரை தொடர்ச்சியாக 8 வெற்றிகளைப் பதிவு செய்து, தனது முந்தைய சாதனையை (2003-ல் கங்குலி தலைமையிலான அணி 8 வெற்றி) சமன் செய்தது.

இந்த நிலையில், தோனி தலைமையிலான இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று, உலகக் கோப்பையில் புதிய வரலாறு படைத்தது.

 

அதேவேளையில், கிளைவ் லாய்டு தலைமையில் மேற்கிந்திய தீவுகள் அணி உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 9 வெற்றிகளைப் பெற்று செய்த சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. இந்த வகை சாதனையில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியான 24 உலகக் கோப்பை வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது.

இந்த உலகக் கோப்பையில் விளையாடிய முதல் 5 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, முந்தைய போட்டியின் வெற்றியின்போதே காலிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், நடப்பு உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 5 எதிரணிகளை ஆல் அவுட் செய்து இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.

 

 

அயர்லாந்துக்கு நெருக்குதல்:

அதேவேளையில், இன்றைய ஆட்டத்தில் தோல்வியுற்றதால், இதுவரை 3 வெற்றிகளைப் பெற்றுள்ள அயர்லாந்து அணி தனது கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தானை வெல்ல வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது.

 

தவண் - ரோஹித் அபார ஆட்டம்

இப்போட்டியில், 260 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணி, 36.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் சேர்ந்த இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் என்ற சிறப்பை, ரோஹித் சர்மாவும் ஷிகர் தவணும் பெற்றனர். இந்த இணை 174 ரன்கள் குவித்து, 1999-ல் கென்யாவுக்கு எதிராக ஜடேஜா - சச்சின் இணை நிகழ்த்திய 163 ரன்கள் என்ற சாதனையை முறியடித்தது.

ஆட்டத்தின் 26.5-வது ஓவரில் தவண் தனது சதத்தை பூர்த்தி செய்தார். 84 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார். இது நடப்பு உலகக் கோப்பையில் இவர் அடித்த இரண்டாவது சதமாகும். பின்னர், 27.4-வது ஓவரில் தாம்சம் பந்துவீச்சில் போர்ட்டர்ஃபீல்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் தவண். 85 பந்துகளில் 100 ரன்கள் என்ற நிலையில் அவர் பெவிலியன் திரும்பினார்.

 

 

முன்னதாக, 23.2 ஓவரில் தாம்சன் வீசிய பந்தில் ரோஹித் சர்மா பவுல்ட் ஆனார். அவர் 66 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்திருந்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த கோலி - ரஹானே இணை மிகச் சிறப்பாக பேட் செய்து அணியை வெற்றிக்கு எளிதாக அழைத்துச் சென்றனர். விராட் கோலி ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 40 ரன்களும், ரஹானே 28 பந்துகளில் 39 ரன்களும் சேர்த்தனர்.

 

அயர்லாந்து இன்னிங்ஸ்:

ஹாமில்டனில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அற்புதமான துவக்கத்துடனும், மோசமான கடைசி நேர ஆட்டத்தாலும் அந்த அணியால் 260 என்ற வெற்றி இலக்கையே நிர்ணயிக்க முடிந்தது.

எனினும், இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த அணி அயர்லாந்துதான் என்பது கவனிக்கத்தக்கது.

அதேபோல், இதுவரை மோதிய எதிரணிகள் அனைத்தையும் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆல் அவுட் ஆக்கியுள்ளார்கள் என்பது மற்றொரு சிறப்பு.

சீராக ரன் சேர்த்து வந்த அயர்லாந்து, துவக்க வீரர்களால் விக்கெட் இழப்பின்றி 10 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்தது. 15-வது ஓவரில், அஸ்வினின் சுழலில் துவக்க வீரர் ஸ்டிர்லிங் 42 ரன்களுக்கு வீழ்ந்தார்.

 

அடுத்த சில ஓவர்களில் ரெய்னாவிடம் ஜாய்ஸ் 2 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். இந்த விக்கெட்டை அடுத்து, அயர்லாந்து ரன் சேர்க்கும் வேகத்தைக் குறைத்தது.

போர்டர்ஃபீல்ட் - நியால் ஓ ப்ரெய்ன் பார்ட்னர்ஷிப்பில் 53 ரன்கள் சேர்த்த நிலையில், 32-வது ஓவரில் போர்டர்ஃபீல்ட் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்குப் பிறகும், 38 ஓவர்கள் வரை சிறப்பாகவே ஆடி வந்த அயர்லாந்து அணி, ஒரு ஓவருக்கு சராசரியாக 5 ரன்களுக்கு குறையாமல் சேர்த்து வந்தது.

 

38 ஓவர்களில் 194 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த நிலையில், இந்த உலகக் கோப்பையில் முதன் முறையாக ஒரு அணி இந்தியாவுக்கு எதிராக 50 ஓவர்கள் முழுவதுமாக ஆடி முடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 39-வது ஓவரின் கடைசி பந்தில் பால்பர்னியை அஸ்வின் வெளியேற்றினார். அவர் 24 ரன்கள் சேர்த்திருந்தார்.

தொடர்ந்து அடுத்த ஓவரில் கெவின் ஓ ப்ரெய்ன் 1 ரன்னுக்கு சமியின் வேகத்தில் வீழ்ந்தார். இதையடுத்து வில்சன், நியால் ஓ ப்ரெய்ன், தாம்ப்ஸன் என ஆட்டமிழக்க, இறுதியில் அயர்லாந்து அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளயும் இழந்து 259 ரன்களைச் சேர்த்தது.

 

இந்தியத் தரப்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். உமேஷ் யாத்வ், மோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6977628.ece?homepage=true

 

  • தொடங்கியவர்

உலகக் கோப்பையை வெல்லப் போகிறோம்: ரவி சாஸ்திரி
 

உலகக்கோப்பையை வெல்வதை நோக்கி இந்திய அணி சென்று கொண்டிருக்கிறது என்கிறார் இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி.

தொடர்ச்சியாக 5 வெற்றிகளை நடப்பு உலகக்கோப்பையில் பெற்றுள்ள இந்திய அணி கோப்பையை வெல்லும் கணம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

 

"இப்போதுள்ள இந்திய அணியின் ஆட்டத்திறன் படி நல்ல நிலையில் உள்ளோம். ஒவ்வொரு போட்டியையும் நாக்-அவுட் போட்டியாகவே அணுகினோம். வெற்றிபெறத் தொடங்கிவிட்டால், மகிழ்ச்சி வர, களைப்பு நீங்கி விடும். தோற்கும்போது தான் ஓய்வறையில் அடைபட்டுக் கிடப்போம். இப்போதைக்கு இந்திய அணியினர் ஒரு மகிழ்ச்சிகரமான குழுவாக இருந்து வருகின்றனர். கால்பந்து விளையாடுகின்றனர், உற்சாகமாகத் திகழ்கின்றனர்.

எண்ணிக்கைகளை பூர்த்தி செய்ய நாம் இங்கு வரவில்லை. எந்த ஒரு எதிரணியினருக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் அளிக்கப்போவதில்லை. உலகக்கோப்பையை வெல்லப் போகிறோம்.” என்றார்.

 

இவரது கருத்தை எதிரொலித்த சுனில் கவாஸ்கர், “பந்துவீச்சாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்துப் பாராட்டுகளுக்கும் அவர்கள் உரித்தானவர்களே. இது சிறந்த சாதனையாகும். நிறைய தருணங்களில் பவுலர்களின் திறமை மீது பேட்ஸ்மென்களின் திறமை என்ற நிழல் படிந்து விடுகிறது. இப்போது பேட்ஸ்மென்களுக்கு புகழ் சென்றடையாது.

 

பவுலர்களுக்கு புகழாரம் குவிந்து வருவது மகிழ்ச்சியான விஷயம்.” என்றார்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/article6978237.ece?homepage=true

  • தொடங்கியவர்

நடப்பு உலகக்கிண்ணத்தில் சதங்களால் சாதனை
 

 

நடப்பு உலகக் கிண்ண போட்­டித்­தொ­டரில் பல்­வேறு சாத­னைகள் நிகழ்த்­தப்­பட்­டுள்­ளன. உலகக் கிண்ண வர­லாற்றில் இது­வரை 24 சதங்கள் அடிக்­கப்­பட்­டதே சாத­னை­யாக இருந்­தது.
ஆனால் நடப்பு உலகக் கிண்ண லீக் போட்­டிகள் முடி­வ­டை­வ­தற்குள் அந்த சாதனை முறி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த 1975ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்­டியில் வெறும் 6 சதங்­களே அடிக்­கப்­பட்­டன. கடை­சி­யாக 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்­டியில் 24 சதங்கள் அடிக்­கப்­பட்­டி­ருந்­தன.

நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் சங்­கக்­கார நேற்று முன்­தினம் பெற்ற சதம் 25ஆவது சத­மாகும். இது உலகக் கிண்ணத் தொடரில் புதிய சாத­னை­யாக பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

மெக்ஸ்வெல்லையும் சேர்த்து இந்த உலகக்கிண் ணத்தில் 5-ஆவது வரிசை துடுப்பாட்ட வீரர்கள் மட்டும் 5 சதங்கள் அடித்திருக் கிறார்கள். டேவிட் மில்லர் (தென்னாபிரிக்கா), மஹேல ஜெயவர்தன (இலங்கை), டிவில்லியர்ஸ் (தென்னா பிரிக்கா), பிரன்டன் டெய்லர் (சிம்பாப்வே) ஆகியோர் 5-ஆவது வரிசை ஆட்டக்காரராக இறங்கி சதம் அடித்த மற்ற நால்வர் ஆவர். 5-ஆவது வரிசை வீரர்கள் அதிக சதங்கள் பெற்ற உலகக் கிண்ணம் இது தான்.

 

இதற்கு முன்பு 1996-ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் இந்த வகையில் 2 சதங்கள் (இந்தியாவின் வினோத் காம்ப்ளி மற்றும் நியூசிலாந்தின் கிறிஸ் ஹாரிஸ்) அடிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.
 

 

http://www.virakesari.lk/articles/2015/03/10/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88

  • தொடங்கியவர்

உலகக் கிண்ண தொடரில் இருந்து சந்திமால் விலகல்
 

 

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் சந்திமால், உபாதை காரணமாக உலகக் கிண்ண தொடரில் இருந்து விலகியுள்ளார். அவுஸ்திரேலியா அணியுடன் நடைபெற்ற போட்டியில் துடுப்பாடும் போது தசை பிடிப்பு அவருக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக தொடர்ந்து துடுப்பாட முடியாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

அவரை தொடர்ந்து கண்காணித்த வந்த உடல் இயக்க நிபுணர் அவர் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததை அடுத்து, தினேஷ் சந்திமால் உலகக் கிண்ண தொடரில் தொடர்ந்து விளையாட முடியாமல் நாடு திரும்பவுள்ளார்.

 

அணியுடன் ஏற்கெனவே இணைந்து பயிற்சிகளை பெற்று வரும் குஷால் ஜெனித் பெரேரா, சர்வதேசக் கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் குழுவினால் மாற்று வீரராக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இவர் 11 பேர் அடங்கிய இறுதி அணிக்குள் தெரிவானால் மத்திய வரிசை வீரராகவே விளையாடுவர் என நம்பப்படுகின்றது. கடந்த போட்டியில் உப்புல் தரங்க, மத்திய வரிசை வீரராக அணியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.

 

இலங்கை உலகக் கிண்ண குழுவில் இருந்து உபாதை காரணமாக தம்மிக்க பிராசாத், ஜீவன் மென்டிஸ், தினேஷ் சந்திமால், திமுத் கருணாரத்ன ஆகியோர் விலகியுள்ளனர். ரங்கன ஹேரத்திற்கு கையில் ஏற்பட்ட காயம் மாறாத நிலையில் அவர் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என்ற நிலை உள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/141369#sthash.NhhsXv3a.dpuf

  • தொடங்கியவர்

தினேஷ் சந்­திமால், ரங்­கன ஹேரத் ஆகி­யோ­ருக்கு தயார் நிலை வீரர்­க­ளாக கித்ருவன், கௌஷால் அவுஸ்திரேலியா பயணம்
 

 

உபாதை மற்றும் காயத்­திற்­குள்­ளா­கி­யுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்­க­ளான தினேஷ் சந்­திமால், ரங்­கன ஹேரத் ஆகி­யோ­ருக்கு தயார் நிலை வீரர்­க­ளாக கித்­ருவன் வித்­தா­ன­கேயும் தரிந்து கௌஷாலும் நேற்று இரவு அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டனர்.


தெரி­வா­ளர்­க­ளுக்கும் அணி முகா­மைத்­து­வத்­திற்கும் இடையில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டலை அடுத்து இந்தத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

புதி­தாக அனுப்­பப்­படும் இவர்கள் இரு­வ­ருக்கும் போதிய சர்­வ­தேச கிரிக்கெட் அனு­பவம் இல்லாத­ போ­திலும் உள்ளூர் போட்­டி­களில் அவர்கள் வெளிப்­ப­டுத்­திய திற­மை­களின் அடிப்­ப­டை­யி­லேயே அனுப்பி வைக்­கப்­ப­டு­கின்­றனர்.

எவ்­வா­றா­யினும் சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வை யின் தொழில்­நுட்பக் குழு­வி­னரில் அங்கீகாரம் கிடைத்தால் மாத்திரமே இவர்கள் இலங்கை குழா மில் ஈர்த்துக் கொள்ளப்படுவர்.

 

http://www.metronews.lk/article.php?category=sports&news=9205

 

  • தொடங்கியவர்

ஸ்காட்லாந்து
v
ஸ்ரீலங்கா
(14:30 local | 03:30 GMT | 04:30 CET)

  • தொடங்கியவர்
281ymus.jpg
  • தொடங்கியவர்
344dutw.jpg
  • தொடங்கியவர்

Sl bat first

  • தொடங்கியவர்

23/1 after 5.5 overs

  • தொடங்கியவர்

64/1 after 13.1 overs

  • தொடங்கியவர்

SL 97/1 after 20 overs

  • தொடங்கியவர்

SL 192/1 after 31 overs

  • தொடங்கியவர்

சங்ககாரா 100

டில்சன் 100

  • தொடங்கியவர்

தொடர்ந்து 4வது சதம்: சங்ககாரா புதிய உலக கோப்பை சாதனை
 

 

ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து உலகக் கோப்பையில் புதிய சாதனையை படைத்துள்ளார் இலங்கை வீரர் சங்க்காரா.

ஸ்காட்லாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி ஹோபர்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை அணி ஸ்காட்லாந்து பந்துவீச்சை எதிர்பார்த்தது போல விளாசித் தள்ளி வருகிறது.

 

துவக்க வீரர் திரிமன்னே 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, தில்ஷான் - சங்ககாரா ஜோடி எளிதாக ரன் சேர்க்க ஆரம்பித்தது. இதில் தில்ஷான் 97 பந்துகளிலும், சங்கக்காரா 86 பந்துகளிலும் தங்களது சதத்தை எட்டினர்.

 

வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக கடைசி மூன்று போட்டிகளிலும் சதமடித்திருந்த சங்கக்காரா, ஸ்காட்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியிலும் சதம் எடுத்து, உலகக் கோப்பையில் தொடர்ந்து 4 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

 

சதமடித்த அடுத்த ஓவரிலேயே தில்ஷான் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ஜெயவர்த்தனேவும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்ப, அடுத்த பந்திலேயே 124 ரன்கள் எடுத்திருந்த சங்ககாரா கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 95 பந்துகளை சந்தித்த சங்ககாரா அதில் 13 பவுண்டரிகளையும், 4 சிக்ஸர்களையும் எடுத்திருந்தார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/article6981646.ece

 

  • தொடங்கியவர்

2i20i8g.png

 

 

s2ur0j.png

 

  • தொடங்கியவர்

hvdzpk.png

  • கருத்துக்கள உறவுகள்

SCO 107/3 after 23 overs

  • தொடங்கியவர்

Breaking Now 148 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது இலங்கை

Read more at: http://tamil.oneindia.com/

  • தொடங்கியவர்

#‎SLvSCO‬ ‪#‎CWC15‬ Presentation Ceremony;

Kumar Sangakkara, Man of the Match: "It was a pretty good game. It was important we finished off strong, especially when playing a team like Scotland. We could have got complacent, but we came in and put up the necessary fight. Once you get used to a certain routine (keeping and batting in ODIs), it isn't so bad, but now that I am 37, the joints are creaking. I consider myself lucky to be part of such a good side. Sometimes things just fall in place. Everything clicks. No matter how hard you try to find that one thing, it becomes difficult. I am not sure what that one thing is, but it is definitely working for me at the moment, so hopefully I can keep onto it. As long as we enjoy ourselves and believe we can do it, then we can go far. The squad has changed a bit from the start, and we have had a lot of injuries. The key for us is the way we enjoy our cricket. As long as there is a smile on our face, then that is what matters most. Would love to see myself, and all of us, on the winning podium, but you can't want it too much. Just need to keep focused on the present and work hard each day. We are just concentrating on the quarter-final and semi-final thereafter"

  • தொடங்கியவர்

Angelo Mathews, Sri Lanka captain: I've got a sore Achilles tendon, so management thought it would be wise for me to stay out of the field as a precautionary measure. I don't think I will be out, but we will have to assess it over the next couple of days. I think the boys played really well. Credit goes to Sangakkara and Dilshan. Sangakkara is getting better with every game. We just have to take one game at a time and then play positive cricket, which we have done pretty well in the past few games. Got to keep playing the same kind of game. If we can improve our bowling and fielding quite a bit it would be a great thing going forward. (Twitter question - Is there anyways you can stop Sangakkara from retiring? I have gone on my knees to beg him out of retirement, but at the end of the day, it is his decision, and he has served his team and country for such a long time.

  • தொடங்கியவர்

148 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை பந்தாடியது இலங்கை! சங்ககாரா சாதனை சதம்!!

 

ஹோபர்ட்: ஸ்காட்லாந்துக்கு எதிராக டாசில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்து 363 ரன்களை குவித்தது. சங்ககாரா மற்றும் தில்ஷன் ஆகியோரின் சதங்கள், இலங்கை ரன் குவிப்புக்கு பக்க பலமாக இருந்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து 215 ரன்களில் ஆல் அவுட் ஆனது. எனவே 148 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவின், ஹோபர்ட் நகர மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய போட்டியில், ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கையும், ஸ்காட்லாந்தும் மோதின.

 

148 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை பந்தாடியது இலங்கை! சங்ககாரா சாதனை சதம்!! டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. திரிமன்னே மற்றும், தில்ஷன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தில்ஷன் அதிரடி காண்பித்தாலும், ஸ்காட்லாந்து பந்து வீச்சில், திரிமன்னேமிகவும் திணறினார். 21 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில், அவர் அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 21ஆக இருந்தது. இதன்பிறகு, தில்ஷனுடன் ஜோடி சேர்ந்தார், குமார் சங்ககாரா. இந்த ஜோடி, ஸ்காட்லாந்து பந்து வீச்சை நாலாபுறமும் அடித்து நொறுக்கியது. இவர்களை கட்டுப்படுத்த முடியாமல், ஸ்காட்லாந்து பவுலர்கள் திணறினர். அடுத்தடுத்து இவ்விருவருமே செஞ்சுரி அடிக்க, அரங்கத்தில் குவிந்திருந்த இலங்கை ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளந்தது.

 

அதிலும், குமார் சங்ககாரா, ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அடித்த நாலாவது சதம் இதுவென்பது சிறப்பு. இதன்பிறகு 104 ரன்களில் தில்ஷன் அவுட் ஆன நிலையில், 124 ரன்களில் சங்ககாராவையும், 2 ரன்களில் ஜெயவர்தனேவையும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆக்கினார் ஜோஸ் தாவே. இருப்பினும், கேப்டன் மேத்யூஸ் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில், 51 ரன்களை குவித்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இலங்கை 363 ரன்களை குவித்தது. இதையடுத்து விரட்டலை தொடங்கிய ஸ்காட்லாந்துக்கு 2வது பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மலிங்காவின் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார் கைல் கோட்சர்.

 

கலம் மேக்லியோட் 11 ரன்களிலும், மேட் மாச்சன் 19 ரன்களிலும் நடையை கட்ட, அந்த அணி 44 ரன்களுக்கு முதல் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் கேப்டன், பிரிஸ்டன் மோம்சன் மற்றும், பிரெட்டி கோல்மேன் ஆகியோர் பொறுப்பாக ஆடி, அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் முறையே 60 மற்றும் 70 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். இந்த ஜோடி பிரியும்போது ஸ்காட்லாந்து 32 ஓவர்களில் 162 ரன்களை எடுத்திருந்தது. ஆனால் அதன்பிறகு மளமளவென விக்கெட்டுகள் சரியவே, 43.1 ஓவர்களில், 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஸ்காட்லாந்து. இதனால் 148 ரன்கள் வித்தியாசத்தில், இலங்கை வெற்றி பெற்றது. குலசேகரா மற்றும் சமீரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சங்ககாராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/sl-won-the-toss-elected-bat-222500.html

  • தொடங்கியவர்

இங்கிலாந்தை நாங்களும் வீழ்த்துவோம்: ஆப்கன் பயிற்சியாளர்
 

 

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறி பலரது கிண்டலுக்கும், வசைக்கும் ஆளாகியுள்ள இங்கிலாந்து அணியை தங்கள் அணியும் வெல்லும் என்று கூறியுள்ளார் ஆப்கன் அணியின் பயிற்சியாளர்.

 

ஆப்கன் அணியின் பயிற்சியாளர் ஆன்டி மோல்ஸ் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணியை முதலில் ஆஸ்திரேலியா மவுன வதைக்குள்ளாக்க, நியூசிலாந்து அணி துவைத்து எடுக்க, இலங்கை அணி காயவைக்க, பிறகு வங்கதேச அணி மடித்து பேக் செய்து வீட்டுக்கு அனுப்பியது.

 

இந்நிலையில் ஆப்கன் பயிற்சியாளர் ஆன்டி மோல்ஸ் கூறியிருப்பதாவது:

"இந்த உலகக்கோப்பையில் விளையாடியதன் மூலம் நிறைய அனுபவங்களைப் பெற்றுள்ளோம். ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தினோம். ஆனால் உலகின் தலை சிறந்த அணிகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிக்கு எங்கள் அணி எந்த விதத்திலும் பொருத்தமுடையதல்ல.

ஆனால் இப்போது இங்கிலாந்துடன் மோதவிருக்கிறோம். இந்தத் தொடரில் அவர்கள் ஒருவர் கூட ஃபார்மில் இல்லை. வெள்ளிக்கிழமையன்று நடக்கும் இந்தப் போட்டியில் நன்றாக விளையாடி, எங்கள் பதட்டத்தை அமைதிப் படுத்தி இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளிப்போம்.

 

நாங்கள் உலகக்கோப்பையை வெல்ல இங்கு வரவில்லை என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும், ஆனால் எங்களால் என்ன முடியும் என்பதைக் காட்டியுள்ளோம். இலங்கையை அன்று அச்சுறுத்தினோம்.

 

அடிலெய்டில் அன்று வங்கதேச அணி செய்த சாதனையைப் பார்த்தோம், எனவே நாங்களும் அதிர்ச்சியளிக்கத் தயாராக இருக்கிறோம்." என்றார்.

நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சிட்னியில் ஆப்கன் அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/article6982365.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.