Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்

Featured Replies

  • தொடங்கியவர்

உலகக்கோப்பை நடத்தப்படும் வடிவம் பிடிக்கவில்லை: திராவிட்
 

 

உலகக்கோப்பை போட்டிகள் தற்போது நடத்தப்படும் முறை பிடித்தமானதாக இல்லை. சுலபமாக கணித்து விடக்கூடியதாக இருக்கிறது என்று ராகுல் திராவிட் விமர்சித்துள்ளார்.

இது குறித்து ஈ.எஸ்.பி.என் - கிரிக் இன்ஃபோ இணையதளம் வெளியிட்டுள்ள வீடியோ விவாதத்தில் திராவிட் கூறியதாவது:

"எனக்கு இப்போது நடத்தப்படும் முறை பிடிக்கவில்லை. காலிறுதிக்கு முன்னேறும் டாப் 8 அணிகள் எதுவென்று முன் கூட்டியே கணித்துவிடக் கூடியதாக உள்ளது. கடந்த உலகக் கோப்பையிலும் என்னால் கணித்து விட முடிந்தது. அனைவரும் காலிறுதிப் போட்டிகளுக்காக காத்திருக்கத் தொடங்கி விட்டனர்.

 

என்னைப் பொறுத்தவரையில் 1999 மற்றும் 2003 உலகக் கோப்பை நடத்தப்பட்ட வடிவம்தான் சிறந்தது. குரூப் பிரிவு ஆட்டங்கள் அதன் பிறகு சூப்பர் சிக்ஸ். அதன் பிறகு அரையிறுதி, பிறகு இறுதி. இதில் சூப்பர் சிக்ஸில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளை எதிர்த்து ஆட வேண்டும்.

தொடர் முழுதும் நன்றாக ஆட வேண்டும். மேலும் மீண்டெழவும் ஒரு வாய்ப்பு இருந்தது.

 

2007 உலகக்கோப்பை எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை, ஆனால் ஏன் பிடிக்கவில்லை என்பது ஆச்சரியமாகவே உள்ளது. அதிலும் மீண்டும் எழுச்சியுற வாய்ப்பிருந்தது. நோக்கம் சரிதான். ஆனால் ஒரு மோசமான ஆட்டம் அணியை வெளியேற்றுவது கஷ்டமாக இருக்கிறது” என்றார்.

மேலும் அவர் அந்த கலந்துரையாடலில் தெரிவிக்கும் போது, “தொடக்கத்தில் எட்ஜ் கொடுத்து ஆட்டமிழக்காத பேட்ஸ்மெனும் தேவை, அதே வேளையில் ரன்களை விரைவில் எடுக்கும் திறமையும் தேவை. பிட்சில் வேகமும் பந்துகள் எழும்பும்போதும் பலமான பேக்ஃபுட் ஆட்டம் தேவை.

இப்படிப்பட்ட வீரர்களை முன்னால் களமிறக்கி பின்னால் பவர் ஹிட்டர்களை அனுப்புவதுதான் சரியாக இருக்கும்.

 

இரு முனைகளிலும் புதிய பந்துகள் வீசப்படுவதால் தலா 25 ஓவர்கள்தான் இரு பந்துகளிலும் வீசப்பட்டிருக்கும். புதியதாகவே பந்துகள் இருந்தால் ரிவர்ஸ் ஸ்விங் வீச முடியாது. ஆஸ்திரேலிய பிட்ச்களில் புதிய பந்துகளின் தாக்கம் அதிகம் இருக்கும். மேலும் மைதானங்கள் பெரியது. அதனால் சிக்சர்கள், பவுண்டரிகள் கடினம்.

மேலும், 5 பீல்டர்கள் 30 அடி வட்டத்திற்குள் நிற்கும்போது பகுதி நேர வீச்சாளரைப் பயன்படுத்த முடியாது. 5 சிறப்பு வீச்சாளர்களையே அணியில் தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. கடந்த உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் முழு 10 ஓவர்களையும் வீச முடிந்தது. இம்முறை அதனைச் செய்ய முடியாது என்றே கருதுகிறேன்.” இவ்வாறு கூறினார் திராவிட்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/article6805528.ece

  • Replies 827
  • Views 43.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் உலகக்கோப்பை பயிற்சி ஆட்டங்கள்; போட்டி அட்டவணை
 

 

ஐசிசி உலகக்கோப்பை போட்டிகளுக்கு முன்னதான பயிற்சி ஆட்டங்கள் பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.

அடிலெய்ட், கிறைஸ்ட் சர்ச், மெல்போர்ன், சிட்னி ஆகிய மைதானங்களில் பிப்ரவரி 8 முதல் 13 வரை மொத்தம் 14 பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இது அதிகாரபூர்வ போட்டியல்ல என்பதாலும் முழுதும் பயிற்சிக்கான வாய்ப்பளிக்கப்படும் போட்டிகள் என்பதாலும் அணிகள் 15 வீரர்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

பயிற்சி போட்டிகள் அட்டவணை வருமாறு:

 

பிப்ரவரி 8: இந்தியா-ஆஸ்திரேலியா, அடிலெய்ட் ஓவல்

 

பிப்ரவரி 9: தென் ஆப்பிரிக்கா-இலங்கை, ஹேக்லி ஓவல் (நியூசிலாந்து)

 

பிப்ரவரி 9: நியூசிலாந்து-ஜிம்பாப்வே, லிங்கன் ஓவல் (நியூசிலாந்து)

 

பிப்ரவரி 9: பாகிஸ்தான் - வங்கதேசம், பிளாக் டவுன் (ஆஸ்திரேலியா)

 

பிப்ரவரி 10: இந்தியா-ஆப்கானிஸ்தான், அடிலெய்ட், ஓவல்

 

பிப்ரவரி 10: அயர்லாந்து - ஸ்காட்லாந்து, பிளாக் டவுன்

 

பிப்ரவரி 11: தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து, ஹேக்லி ஓவல்

 

பிப்ரவரி 11: இலங்கை-ஜிம்பாப்வே, லிங்கன் ஓவல்

 

பிப்ரவரி 11: ஆஸ்திரேலியா-யு.ஏ.இ., மெல்போர்ன்

 

பிப்ரவரி 11: இங்கிலாந்து-பாகிஸ்தான், சிட்னி

 

பிப்ரவரி 12: மே.இ.தீவுகள்-ஸ்காட்லாந்து, சிட்னி

 

பிப்ரவரி 12: வங்கதேசம்-அயர்லாந்து, பிளாக் டவுன்

 

பிப்ரவரி 13: ஆப்கானிஸ்தான் - யு.ஏ.இ., ஜங்ஷன் ஓவல்
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-8%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88/article6811943.ece

  • தொடங்கியவர்

உலக கோப்பை கிரிக்கெட் தமிழில்....

ஜனவரி 24, 2015.புதுடில்லி: உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தமிழ், கன்னடம் உட்பட மாநில மொழிகளிலும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் இணைந்து, உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன. பிப்., 14 முதல் மார்ச் 29 வரை போட்டிகள் நடக்கவுள்ளன.

‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஒப்பந்தம் பெற்றுள்ளது. வழக்கமாக ஆங்கிலம் மற்றும் இந்தி வர்ணணைகளுடன் தான் போட்டிகள் ஔிபரப்பாகும்.

தற்போது, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் வங்கம் என, மாநில மொழிகளிலும் வர்ணணை செய்யப்படவுள்ளது. இதனால், ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த மொழிகளில் தேர்வு செய்து, உலக கோப்பை போட்டியை காண முடியும்.

 

http://sports.dinamalar.com/2015/01/1422120228/WorldCupCricket.html

  • தொடங்கியவர்

உலக கிண்ண போட்டிகளில் இருந்து சுனில் நரைன் விலகல்.

 

http://www.espncricinfo.com/icc-cricket-world-cup-2015/content/current/story/824461.html

  • தொடங்கியவர்

ஸ்டார்க் மூலம் ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வெல்ல முடியும்: வாசிம் அக்ரம்
 

 

மிட்செல் ஜான்சனைக் காட்டிலும் மிட்செல் ஸ்டார்க் தனது அபாரமான பந்துவீச்சினால் ஆஸ்திரேலிய அணியை சாம்பியனாக்க முடியும் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

மிட்செல் ஸ்டார்க் இதுவரை 32 ஒருநாள் போட்டிகளில் 20.62 என்ற சராசரியின் கீழ் 61 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் இதே 30க்கும் மேற்பட்ட போட்டிகளில் கிளென் மெக்ரா, பிரெட் லீ, கிரெய்க் மெக்டர்மட், மிட்செல் ஜான்சன் ஆகியோரைக் காட்டிலும் முன்னிலை வகிக்கிறார்.

 

இந்நிலையில் வாசிம் அக்ரம் கூறியிருப்பதாவது, “ஸ்டார்க்கிடம் அத்தகைய திறமை இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படும் திறமை அவரிடம் உள்ளது.

அவரிடம் வேகம் உள்ளது, ஸ்விங் உள்ளது, மேலும் சாதுரியமாக வீசும் திறமையும் உள்ளது. குறிப்பாக புதிய பேட்ஸ்மென் களமிறங்கும் போது அவர்களை கதிகலங்கச் செய்யும் திறமை மிக முக்கியமானது.

 

மிட்செல் ஜான்சன், ஸ்டார்க் இருவரும் அணியில் இருப்பது எதிரணியினருக்கு பெரும் அச்சுறுத்தல்தான். இந்த பிட்ச்களில் இவர்கள் வீசும் வேகத்தில் எதிர்கொள்வது மிகக்கடினமான சமாச்சாரம். புதிய பந்தில் வீச இவர்கள் இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்கக் கூறினால் என்னுடைய தெரிவு மிட்செல் ஸ்டார்க்தான்.

நான் கேப்டனின் பார்வையிலிருந்து பார்க்கும்போது வேகம், ஸ்விங், யார்க்கர்கள் என்று அச்சுறுத்தக்கூடிய 2 பேர் ஒரு அணியில் இருப்பது ஒரு பெரிய விஷயம்.

மேலும் முடிவு ஓவர்களில் ரவுணட் த விக்கெட்டிலிருந்து ஸ்டார்க் யார்க்கர்களை வீசுகிறார். இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை ரவுண்ட் த விக்கெட்டில் ஆடுவது மிக மிக கடினம்.”

என்றார் வாசிம் அக்ரம்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article6830053.ece

  • தொடங்கியவர்

உலகக்கோப்பையிலிருந்து மே.இ.தீவுகளின் புதிர் ஸ்பின்னர் சுனில் நரைன் விலகல்
 

சந்தேகத்துக்கிடமான பந்துவீச்சுக்காக கடந்த ஆண்டு புகார் தெரிவிக்கப்பட்ட சுனில் நரைன் இன்னமும் தன்னுடைய பந்துவீச்சு முறை பற்றி முழு நம்பிக்கை பெறாததால் உலகக்கோப்பை போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.

கடந்த செப்டம்பரில் இவரது பந்துவீச்சு த்ரோ போல் இருப்பதாக புகார் எழுப்பப்பட்டது. ஆனால் அப்போது அவர் இந்தியாவில் நடைபெற்ற அந்தப் போட்டிகளில் மட்டும் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.

 

அவர் பந்துவீச்சு பயிற்சி மேற்கொண்டு தன்னைத்தானே முறையான பந்துவீச்சாளராக மாற்றிக் கொண்டதையடுத்து அவர் மே.இ.தீவுகள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

ஆனாலும் தற்போது தனது புதிய பந்துவீச்சு முறையில் சரியாக வீசுவதற்கான தன்னம்பிக்கையின்மையால் உலகக்கோப்பை போட்டிகளிலிருந்து விலகியதாக மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

 

இவர் வீசும் வேகமான பந்து த்ரோவாக இருப்பதாக தெரியவந்ததால் இவர் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டார்.

ஏற்கெனவே பொலார்ட், டிவைன் பிராவோ ஆகியோர் அணியில் தேர்வு செய்யப்படாததையடுத்து கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வரும் நிலையிலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சகல முறைகளிலும் தோல்வி அடைந்து வரும் நிலையிலும் தற்போது அந்த அணியின் சிறந்த பவுலர் சுனில் நரைன் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட முடியாமல் போனது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/article6829509.ece

  • தொடங்கியவர்

இருந்த இடத்திலிருந்து உலகக் கோப்பைப் போட்டிகள் குறித்து அறிய புதிய "ஆப்"!

 

ரியாத்: ரிலையன்ஸ் கம்யூனிகேஷனோடு இணைந்து ஐசிசி தயாரித்த புதிய அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ஐசிசி உலகக்கோப்பை 2015 தொடர்பானது. அடுத்த மாதம் 14ம் தேதி ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. இதில் 14 அணிகள் இடம் பெறுகின்றன. இந்நிலையில், புதிய அப்ளிகேஷன் ஒன்றைத் தயாரித்துள்ளது ஐசிசி.

 

இதன் மூலம் ஐசிசி உலகக் கோப்பை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் உலகின் எந்த மூலையில் இருந்தும் தெரிந்து கொள்ள இயலும். இருந்த இடத்திலிருந்து உலகக் கோப்பைப் போட்டிகள் குறித்து அறிய புதிய அப்ளிகேஷன் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே மூலம் இந்த அப்ளிகேஷனை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள மைதானத்திலிருந்தும், உலகின் பிற பகுதிகளிலிருந்தும் இந்த தகவல்களைப் பெற முடியும். ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்லெட் மூலம் இதைப் பெறலாம். போட்டிகளை முழுமையாக ரசிக்க இந்த ஆப் உதவியாக இருக்கும் என்றும் ஐசிசி கூறியுள்ளது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/icc-launches-official-world-cup-2015-app-219833.html

  • தொடங்கியவர்

தோனியும் கோலியும் மட்டுமே வெற்றி பெறச் செய்ய முடியாது; 6 வீரர்கள் சிறப்பாக ஆட வேண்டும்: திராவிட்
 

 

வரவிருக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் தோனி, விராட் கோலி ஆகியோர் மட்டுமே கோப்பையை வென்று விட முடியாது, குறைந்தது 6 வீரர்கள் சிறப்பாக ஆடுவது அவசியம் என்று ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பையில் இந்தியாவின் வாய்ப்புகள் பற்றி திராவிட் கூறும்போது, “இது மிகப்பெரிய சவால், எளிதானது கிடையாது, முற்றிலும் வேறு சூழல்களில் நாம் விளையாடவிருக்கிறோம்.

 

ஆஸ்திரேலிய, நியூசி. பிட்ச்கள் எதிர்பார்த்தை விட மெதுவாகவும் பந்துகள் திரும்புவதற்கு சாதகமாகவும் அமைந்தால் 2 அல்லது 3 ஸ்பின்னர்களைக் கூட அணியில் சேர்த்து விளையாடலாம் இது இந்தியாவுக்கு சாதகமாக அமையும்.

போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இவர்கள் தவிர, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் இலங்கை ஆகிய அணிகளும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது.

இதில் நெருக்கடி நிலைமைகளை எந்த அணி சமாளித்து வெல்கிறது என்பதே. நெருக்கடி தருணங்களில் சிறப்பாக செயல்படும் அணியே வெற்றி பெறும். இந்தியா காலிறுதிக்குத் தகுதி பெறும். அந்த மட்டத்தை எட்டுவதற்கான வீரர்கள் நம்மிடையே உள்ளனர். ஆனால் அதன் பிறகு 3 போட்டிகளில் தொடர்ந்து அதிசிறப்பாக விளையாட வேண்டும். இந்த நிலைக்கு முன்னேறினால் 11 வீரர்களும் டாப் ஃபார்மில் இருப்பது அவசியம்.

 

 

விராட் கோலி ஆட்டத்தின் 10 அல்லது 12 ஓவர்கள் சென்ற பிறகு களமிறங்க வேண்டும், அப்போதுதான் அவர் ஒரு பெரிய இன்னிங்ஸை திட்டமிட முடியும். ரோஹித் சர்மா காயம் பெரிய பின்னடைவுதான், உலகக்கோப்பைக்குள் அவர் தயாராகி விடுவார் என்று நம்புவோம். ஷிகர் தவான் இன்னும் கொஞ்ச நேரம் கிரீஸில் நிற்க முயற்சி செய்ய வேண்டும்.

 

பந்துவீச்சு சமீபகாலமாக மோசமாக உள்ளது. ஆனால் இசாந்த் சர்மா, ஜடேஜாவின் வரவு அணிக்கு பலம் சேர்க்கும்.

ஃபார்ம் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை. அதிக போட்டிகளில் விளையாடினால் ஃபார்ம் மீண்டும் தானாகவே வந்து சேரும்.

தோனியும், விராட் கோலியும் மட்டுமே உலகக்கோப்பையை வென்று விட முடியாது, குறைந்தது 6 வீரர்கள் சிறப்பாக பங்களிப்பு செய்வது அவசியம்.” என்று கூறினார் திராவிட்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-6-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/article6830993.ece

 

  • தொடங்கியவர்

இந்திய அணியின் உ.கோப்பை வாய்ப்புகளை புறமொதுக்குவது முட்டாள்தனம்: நியூசி. முன்னாள் வீரர் ஜெஃப் ஆலட்
 

 

1999-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் விளையாடிய நியூசி. வேகப்பந்து வீச்சாளர் ஜெஃப் ஆலட், இந்த உலகக்கோப்பையில் இந்திய அணியின் வாய்ப்பை குறைத்து மதிப்பிடுவது முட்டாள் தனம் என்று கூறியுள்ளார்.

 

ஜெஃப் ஆலட் 1999-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் 23 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, முத்தரப்பு ஒருநாள் தொடரில் கடந்த உலகக்கோப்பை சாம்பியன்கள் என்ற எந்த வித சாயலுமில்லாமல் ஆடி வரும் இந்திய அணி வீரர்களின் காயங்கள், ஃபார்ம் இன்மை, மோசமான பந்துவீச்சு என்று கடுமையான பின்னடைவுகளைச் சந்தித்து வரும் நிலையில், ஜெஃப் ஆலட் இந்தியாவை இதற்குள் புறமொதுக்க முடியாது என்று ஆறுதலாகக் கூறியுள்ளார்.

 

இது குறித்து அவர் கூறியதாவது, “இந்தியாவை இதற்குள் புறமொதுக்குவது முட்டாள்தனம். என்னுடைய மதிப்பீடு என்னவெனில், ஒவ்வொரு போட்டியில் இந்தியா ஆடும் போதும் அது ஒரு மிகப்பெரிய போட்டியாகவே உள்ளது. இப்போதைக்கு முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை. ஆனால், மற்ற அணிகளுக்கு இல்லாத அனுகூலம் அந்த அணிக்கு உள்ளது. அது என்னவெனில், ஆஸ்திரேலிய பிட்ச்களில் அந்த அணி சமீபமாக தொடர்ந்து விளையாடி வருகிறது.

இது மற்ற அணிகளுக்கு எதிராக இந்தியா விளையாடும்போது பெரிய அளவுக்கு உதவும். எனவே இந்தியாவின் வாய்ப்புகளை முத்தரப்பு ஒருநாள் தொடரை வைத்து எடைபோட முடியாது.

 

மேலும் கிரிக்கெட் என்பது அந்தந்த தினத்தில் ஆட்டம் அமைவதைப் பொறுத்தது. இந்திய அணி ஏற்கெனவே 2 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. ஆனால் நியூசிலாந்து போன்ற அணிகள் 6 முறை அரையிறுதிக்குள் நுழைந்தும் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. எனவே இந்திய அணியின் வாய்ப்புகளை அதற்குள் மூட்டைக் கட்டிவிடக்கூடாது.” என்றார் ஜெஃப் ஆலட்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D/article6830489.ece

 

  • தொடங்கியவர்

உலக கோப்பை பைனல் 'டை'யானால், சூப்பர் ஓவருக்கு அனுமதி: ஐசிசி அறிவிப்பு

 

துபாய்: உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி டையில் முடிந்தால், சூப்பர் ஓவர் மூலம் சாம்பியனை தேர்ந்தெடுக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அடுத்த மாதம், 14ம்தேதி தொடங்கி மார்ச் 29ம்தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெறுகிறது. இந்த போட்டியின்போது சில விதிமுறைகளை அமல்படுத்த ஐசிசி முடிவு செய்துள்ளது. ஐசிசி ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: உலக கோப்பையின் லீக் சுற்றுக்களிலோ அல்லது காலிறுதி, அரையிறுதி போட்டிகளின்போதோ, வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் நடைமுறை பயன்படுத்தப்பட மாட்டாது.

 

லீக் புள்ளிகள் காலிறுதி, அரையிறுதி போட்டிகளில் ஏதாவது டிராவில் முடிவடைந்தால், லீக் ஆட்டங்களில் அவ்விரு அணிகளில் எந்த அணி அதிக புள்ளிகளை பெற்றுள்ளதோ அதுவே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

 

பைனலில்.. அதேநேரம் இறுதி போட்டியின்போது ஆட்டம் டையில் முடிவடைந்தால், சூப்பர் ஓவர் நடத்தப்படும். சூப்பர் ஓவர் மூலமே யார் சாம்பியன் என்பது முடிவு செய்யப்படும். எனவே போட்டி டையில் முடிவடைந்தால் இரு அணிகள் கோப்பையை பகிர்ந்து கொள்ள தேவையில்லை.

 

மெதுவாக ஓவர்கள் வீசியவர்கள் கவனத்திற்கு... மேலும், உலக கோப்பை தொடருக்கு முன்பாக, நடந்த போட்டியில், எந்த ஒரு அணியின் கேப்டன் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும், அது உலக கோப்பைக்கு பொருந்தாது. மெதுவாக ஓவர்கள் வீசியதற்காக எந்த ஒரு கேப்டனாவது சஸ்பெண்ட்டுக்கு உள்ளாகியிருந்தாலும்கூட, உலக கோப்பை போட்டியில் அவர் விளையாட தடை கிடையாது.

 

உலக கோப்பையில் ஒழுங்கா இருக்கனும்.. ஆனால் உலக கோப்பை தொடரின்போது மெதுவாக ஓவர் வீசும் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, சஸ்பெண்ட் செய்யப்பட்டால், அதை தடுக்க முடியாது. இவ்வாறு ஐசிசி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

 

ரூல்ஸ் மாற்றம் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான அறிவிப்பில், உலக கோப்பை கிரிக்கெட்டில், பைனல் உட்பட எந்த ஒரு போட்டியிலும் சூப்பர் ஓவருக்கு அனுமதி கிடையாது என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/super-over-decide-world-cup-2015-final-case-a-tie-219897.html

  • தொடங்கியவர்

2qxxb8h.jpg

  • தொடங்கியவர்

உலகக்கோப்பை அணியில் இடம்பெறவில்லை: யுவராஜ், கம்பீர் ஏமாற்றம்

 

உலகக்கோப்பை அணியில் இடம்பெறாமல் போனது பெரும் ஏமாற்றளிப்பதாக யுவராஜ் சிங், கம்பீர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

நியூஸ்24 கிரிக்கெட் கான்க்ளேவ்வில் கலந்து கொண்ட போது இவர்கள் இருவரும் ஏமாற்றம் தெரிவித்தனர்.

2011 உலகக்கோப்பையில் விளையாடிய சேவாக், கம்பீர், யுவராஜ், ஹர்பஜன், முனாப் படேல், நெஹ்ரா ஆகியோரை அணித்தேர்வுக் குழு புறக்கணித்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தது.

 

 

"உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது. இந்த முடிவு நம் கையில் இல்லை. இப்போதைக்கு நான் ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்தி வருகிறேன். இதில் சிறப்பாக விளையாடி அணிக்குள் மீண்டும் வர முயற்சி மேற்கொண்டு வருகிறேன்.” என்றார் யுவராஜ் சிங்.

கம்பீர் கூறும்போது, “நான் ரன்களை எடுத்து போட்டிகளில் வெற்றி பெறுவதற்காக கிரிக்கெட் ஆடுகிறேன். இந்திய அணி, டெல்லி, ஐபிஎல் அணி என்று எதில் விளையாடினாலும் ரன்கள் அடிக்க வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்பதில் எனக்கு நிறைய ஆர்வம் உண்டு.

 

இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து எனக்கு ஏமாற்றமாகவே இருக்கிறது. நாம் கடந்த உலகக்கோப்பை சாம்பியன் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. இந்த உலகக்கோப்பை அணியிலும் விளையாட நிச்சயமான விருப்பம் என்னிடத்தில் இருந்தது.” என்றார்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article6849320.ece

  • தொடங்கியவர்

உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெறும்: அதிரடி வீர்ர் சேவாக் நம்பிக்கை
 

 

வரவிருக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி நிச்சயம் அரையிறுதிக்கு முன்னேறும் என்று அதிரடி வீரர் விரேந்திர சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

92.7 பிக் எஃப்.எம்-இன் புதிய நிகழ்ச்சி அறிமுக விழாவில் கலந்து கொண்ட சேவாக் இதனை தெரிவித்தார்.

"நிச்சயம் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்று நான் நம்புகிறேன். அதன் பிறகு அந்தக் குறிப்பிட்ட நாளில் எப்படி ஆடுகிறோம் என்பதைப் பொறுத்து இந்திய அணியின் கோப்பை வெல்லும் வாய்ப்புகள் உள்ளன.

 

 

இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்குள் நுழையும். சமீபத்திய தோல்விகள் அணியை பாதிக்காது. உலகக்கோப்பை தொடங்கியவுடன் ஒவ்வொருவரும் 100% பங்களிப்பு செய்வர். இதனால் சமீபத்திய தோல்விகள் தாக்கம் செலுத்த வாய்ப்பில்லை.

2003ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளுக்கு முன்பு மிக மோசமான நியூசிலாந்து தொடர் நம் அணிக்கு அமைந்தது. அனைவரும் உலகக்கோப்பையில் இந்திய அணி அவ்வளவுதான் என்றனர். ஆனால் நடந்தது என்ன? நாம் இறுதிப்போட்டிக்குள் சென்றோம்.

வீரர்கள் தங்களிடம் உள்ள பிரச்சினைகளைக் களைய முற்படவேண்டும். அனைவரும் உலகக்கோப்பையில் சிறப்பாக ஆட தயாரித்துக் கொள்வார்கள் என்பதை நான் உறுதிபட நம்புகிறேன். இதில் சிலர் பெரிய அளவுக்கு திறமையை வெளிப்படுத்துவார்கள் என்றே நான் கருதுகிறேன்.

 

 

2011 உலகக்கோப்பையில் பிட்ச்கள் வேறு, தற்போது வேறு. மேலும், அங்கு பகுதி நேர பவுலர்களுக்கு வாய்ப்புகள் குறைவு. குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் விதிமுறைகள் மாறிய பிறகு 30 அடி வட்டத்திற்குள் எப்போதும் 5 வீரர்கள் இருந்தேயாக வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால் பகுதி நேர வீச்சாளரை பந்து வீச அழைப்பது கடினம். இதுதான் இந்திய அணிக்கு பலவீனமாகிறது.

 

 

இந்நிலையில் 11-வது வீரரை தேர்வு செய்வதில் ஏகப்பட்ட தடுமாற்றங்கள் ஏற்படுகிறது. கடந்த உலகக்கோப்பையில் பகுதி நேர வீச்சாளராக யுவராஜ் சிங்கின் பவுலிங் மிகப்பெரிய அனுகூலங்களை உண்டாக்கியது. இந்த முறை ஸ்டூவர்ட் பின்னி அல்லது ரவீந்திர ஜடேஜா இந்தப் பணியை செய்வார்கள் என்று நம்புகிறேன்.

எப்போதும் முதல் போட்டியை வென்று விட்டால் பெரிய அழுத்தத்திலிருந்து விடுபடலாம். முதல் ஒன்று அல்லது 2 போட்டிகளில் பெரிய அணிகளை வீழ்த்திவிட்டால் மற்ற அணிகளை எதிர்கொள்வதில் சிக்கல் இருக்காது. முதல் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி விட்டால் அது ஒரு மிகப்பெரிய தன்னம்பிக்கை ஊக்குவிப்பாக அமையும்.

பாகிஸ்தான் போட்டியை இறுதிப் போட்டிக்கு முந்தைய இறுதிப் போட்டியாக நினைத்துக் கொள்ளவேண்டும். நான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்றால் நான் என்னை முழுதும் தயார் படுத்திக் கொள்வேன், அது என் வாழ்நாளின் முக்கியப் போட்டியாக எப்போதும் கருதுவேன்.

 

நான் இப்போதும் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறேன், தொடர்ந்து விளையாடுவேன், 2 ஆண்டுகளுக்கு எனக்கு வேறு சிந்தனை எதுவும் கிடையாது.” என்றார் சேவாக்.

விராட் கோலி சரியாக விளையாட முடியாமல் போனதற்கு அனுஷ்கா சர்மாவுடனான அவரது உறவே காரணம் என்ற ரீதியில் சூசகமாக கேட்கப்பட்ட கேள்விக்கு சூசகமாக பதில் கூறிய சேவாக், “கிரிக்கெட் வீரர் மீது விமர்சனம் வைக்கும் போது அவரது ஆட்டம் மைதானத்தில் எப்படி இருக்கிறது என்ற அளவில் மட்டுமே இருக்க வேண்டும், அவர் யாருடன் இருக்கிறார் என்பதன் மீது விமர்சனங்கள் செய்ய கூடாது.” என்றார்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article6849233.ece

  • தொடங்கியவர்

இந்திய அணியிடம் அனுபவம் இல்லை, போராட்ட குணம் உள்ளது: கபில் தேவ்
 

 

தற்போதைய உலகக்கோப்பை இந்திய அணியிடத்தில் அனுபவம் இல்லாவிட்டாலும் போராடும் குணம் உள்ளது என்று கபில் தேவ் கூறியுள்ளார்.

2011- உலகக்கோப்பையை வென்ற அணியுடன் ஒப்பிட்டால் இந்த அணியில் அனுபவம் இல்லை என்று கூறலாம் ஆனால் போராட்ட குணம் உள்ளது என்று கூற முடியும் என்று கபில் தேவ் கூறுகிறார்.

 

இந்திய உலகக்கோப்பை அணியில் யுவராஜ் சிங், சேவாக், கம்பீர் ஆகியோரைத் தேர்வு செய்யாதது பெரும் சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில் கபில் இவ்வாறு கூறியுள்ளார்.

“2011 உலகக்கோப்பையை வென்ற அணியுடன் இந்த அணியை ஒப்பு நோக்குககையில் சில பெரிய வீரர்கள் பெயர் இடம்பெறவில்லை என்று புரிகிறது, இந்த அணியின் அனுபவம் குறைவு, ஆனால் இந்த அணியிடத்தில் ஆற்றல் மற்றும் உற்சாகத்துக்கு குறைவில்லை. போராட்டக்குணம் உள்ளது, இது அவர்களை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்லும் என்று நம்புவோம்.

 

ஒவ்வொரு முறை களத்தில் இறங்கும் போதும், கடமை உணர்வுடன் இறங்க வேண்டும், அதுதான் வித்தியாசத்தை ஏற்படுத்தும்.” என்று கபில் தேவ் நியூஸ்24 கிரிக்கெட் கருத்தரங்கில் கூறினார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D/article6848735.ece

  • தொடங்கியவர்

நான்கு இந்திய வீரர்களுக்கு சோதனை: உலக கோப்பை தொடரில் சிக்கல்
பிப்ரவரி 02, 2015.

 

புதுடில்லி: காயத்தால் அவதிப்பட்டு வரும் இஷாந்த் சர்மா, ரவிந்திர ஜடேஜா, ரோகித் சர்மா,  புவனேஷ்வர் குமார் ஆகிய நான்கு இந்திய வீரர்களுக்கு வரும் பிப்.,7ல் உடற்தகுதி சோதனை நடக்கவுள்ளது.      

 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ‘கவாஸ்கர்–பார்டர்’ கோப்பை தொடரில் முதல் 3 டெஸ்டில் பங்கேற்றவர் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, இதில் 9 விக்கெட் வீழ்த்திய நிலையில், முழங்கால் காயத்தால் அவதிப்பட்டார்.     

       

பின், கடந்த ஜன. 26ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடர் லீக் போட்டியில் இடம் பெற்றார். கடைசியில் மழை காரணமாக போட்டி ரத்தாக, இவர் பவுலிங் செய்யவே இல்லை.            

 

தவிர, புவனேஷ்வர் குமார் (கணுக்கால்), ரவிந்திர ஜடேஜா (தோள்பட்டை), ரோகித் சர்மா (தொடையின் பின் பகுதி)  உள்ளிட்டோர் முழு உடற்தகுதி இல்லாமல் அவதிப்படுகின்றனர்.            

காயம் அதிகம்: இவற்றில் இஷாந்த் காயம் தான் பெரியதாக உள்ளது. புவனேஷ்வர் குமாரும் கடந்த சில மாதங்களாகவே கண்காணிப்பு வளையத்தில் சிக்கியுள்ளதாக தெரிகிறது.           

 

வரும் 8ம் தேதி உலக கோப்பை பயிற்சி ஆட்டங்கள் துவங்குகின்றன. இதற்கு ஒருநாள் முன்னதாக 7ம் தேதி, இந்த நான்கு பேருக்கும் உடற்தகுதி சோதனை நடக்கவுள்ளது.      

மாற்றம் வருமா: இதுகுறித்து அணி நிர்வாகம் தரப்பில் வெளியான செய்தி:     

காயத்தில் உள்ள 4 வீரர்களில் ரோகித் சர்மா 80 சதவீதம் தேறியுள்ளார். மற்றவர்கள் நிலை குறித்து தெரியவில்லை. இவர்களுக்கு இரு பிரிவுகளாக உடற்தகுதி தேர்வு நடக்கிறது. பிப்., 7ல் தேர்வாகும் வீரர்கள், மறுநாள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் பங்கேற்க வேண்டும்.     

இதன் பின் தான் அணியில் மாற்றம் குறித்து முடிவு செய்யப்படும். மற்றபடி, இப்போதைக்கு யாரையும் திருப்பி அனுப்பும் எண்ணம் கிடையாது.     

இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.      

 

 

வருகிறார் மோகித் சர்மா     

இஷாந்த் சர்மா காயம் அடைந்த நிலையில், அவருக்குப் பதில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா இடம்பெறுவார் எனத் தெரிகிறது.      

இதுகுறித்து பி.சி.சி.ஐ., நிர்வாகம் தரப்பில் ஒருவர் கூறுகையில்,‘‘ வீரர்கள் காயத்தின் நிலை குறித்து அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இப்போதைய நிலையில் இஷாந்த் உலக கோப்பை தொடரில் பங்கேற்பது சந்தேகம் தான்,’’ என்றார்.        

   

எங்கும் செல்லவில்லை

இந்திய அணி வீரர்கள், நிர்வாக அனுமதியுடன் அடிலெய்டு புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர அந்தஸ்துள்ள ‘ரிசார்ட்சில்’ தங்கியுள்ளதாக செய்தி வெளியானது.      

இதுகுறித்து அணி நிர்வாகம் தரப்பில் கூறுகையில்,‘ ஒட்டுமொத்த அணியினரும் அடிலெய்டின் சர்வதேச ஓட்டலில் தான் தங்கியுள்ளனர். மற்றபடி, இவர்கள் குறித்து வெளியான செய்தியில் எவ்வித அடிப்படை உண்மையும் இல்லை,’’ என, கூறப்பட்டது.

 

http://sports.dinamalar.com/2015/02/1422895407/IndiaWorldCupInjuryRavindraJadejaIshantRohitBhuvaneshwar.html

  • தொடங்கியவர்

இஷாந்த் ஷர்மாவின் உலக கோப்பை கனவு கலைந்தது.. காயத்தால் வெளியேறுகிறார்

 

பெர்த்: இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா மூட்டு காயத்தால் அவதிப்பட்டுவருவதால், உலக கோப்பை போட்டியில் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு கிரிக்கெட் மற்றும் அதற்கு முன்பாக நடந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் ஆகியவற்றில் ஒரு போட்டியில் கூட இந்தியாவெற்றி பெறவில்லை. இந்நிலையில், உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா காயமடைந்துள்ளது இந்திய அணி நிர்வாகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

 

இஷாந்த் ஷர்மாவின் உலக கோப்பை கனவு கலைந்தது.. காயத்தால் வெளியேறுகிறார் வலைப்பயிற்சியில் இஷாந்த் ஈடுபட்டபோது அவருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இஷாந்த் ஷர்மா கடந்த மாதம் 26ம்தேதி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் பங்கேற்றார். ஆனால் மழை காரணமாக போட்டி பாதியில் கைவிடப்பட்டதால் அவருக்கு பந்து வீச வாய்ப்பு கிடைக்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இஷாந்த் விளையாடவில்லை. உலக கோப்பைக்கான அணியில் இஷாந்த் இடம்பெற முடியாவிட்டால், அவர் இடத்திற்கு மற்றொரு ஷர்மா வரப்போகிறார்.

 

அவர்தான் கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக பந்து வீசிய மோஹித் ஷர்மா. 2011 உலக கோப்பை தொடங்கும் முன்பாக, 15 பேர் அணியில் இடம் பெற்றிருந்த பிரவீண்குமார் காயமடைந்தார். அவருக்கு பதிலாக ஸ்ரீசாந்த் அணியில் சேர்க்கப்பட்டார். அந்த கோப்பையை இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/paceman-ishant-sharma-s-world-cup-dream-over-220194.html

  • தொடங்கியவர்

உலகக் கிண்ண வாய்ப்பை ஜுனைத் இழந்தார்
2015-02-03 11:23:36

 

பாகிஸ்­தானின் உலகக் கிண்ண கிரிக்கெட் குழா­மி­லி­ருந்து வேகப்­பந்­து ­வீச்­சாளர் ஜுனைத் கான் நீக்­கப்­பட்­டுள்ளார்.

உபா­தைக்­குள்­ளா­கி­யி­ருந்த ஜுனைத் கான் தனது உடற்ற­கு­தியை நிரூ­பிக்கத் தவ­றி­ய­மையே இதற்­கான கார­ண­மாகும்.

 

நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ராக நடை­பெற்­று­வரும் இரண்டு போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொட­ரி­லி­ருந்தும் அவர் வில­கிக்­கொண்­டி­ருந்தார்.

ஜுனைத் கானுக்குப் பதி­லாக 15 வீரர்­களைக் கொண்ட உலகக் கிண்ண குழாமில் இடம்­பெ­ற­வுள்ள வீரர் யார் என்­பதை விரைவில் அறி­விக்­க­வுள்­ளது.

இதே­வேளை, அவ­ருக்கு பதி­லாக நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ரான தொடருக்காக பிலாவல் பாத்தி பெயரிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.metronews.lk/article.php?category=sports&news=8744

  • தொடங்கியவர்

ஜேம்ஸ் போக்னரின் உலக கிண்ண வாய்ப்பு கேள்விக்குறி?
2015-02-03 11:12:27

 

கார்ல்டன் மிட் மும்­முனை சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இங்­கி­லாந்­துக்கு எதி­ரான இறுதிப் போட்­டியில் அதி­ரடி துடுப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட அவுஸ்­தி­ரே­லிய வீரர் ஜேம்ஸ் ஃபோக்னர், உலக கிண்ண வாய்ப்பை இழப்­பாரோ என்ற சந்­தேகம் எழுந்­துள்­ளது.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிகள் ஆரம்­ப­மா­வ­தற்கு இன்னும் சில தினங்­களே உள்ள நிலையில் சக­ல­துறை வீரர் போக்னர் உபா­தைக்­குள்­ளா­கி­யி­ருப்­பது அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு பெரும் சிக்­கலைத் தோற்­று­வித்­துள்­ளது.

 

பேர்த் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற இங்­கி­லாந்­துக்கு எதி­ரான இறுதி ஆட்­டத்­தின்­போது தனது இரண்­டா­வது ஓவரை வீசிக்­கொண்­டி­ருந்­த­போது போக்னர் திடீ­ரென உபா­தைக்­குள்­ளாகி அணித் தலைவர் ஜோர்ஜ் பெய்­லி­யுடன் கலந்­தா­லோ­சித்த பின்னர் களம் விட்­ட­கன்றார்.

இதே­வேளை, ஸ்டீவன் ஸ்மித்தின் தலை­மைத்­து­வத்தின் விளை­யா­டு­வ­தற்கு தான் தயார் என மைக்கல் க்ளார்க் தெரி­வித்­துள்ளார்.

 

ஸ்மித்­துக்கு முழு­நேர தலைவர் பத­வியை வழங்­கு­வ­தற்கு தெரி­வா­ளர்கள் தீர்­மா­னித்தால் அவ­ருக்குக் கீழ் விளை­யாடத் தயா­ராக இருப்­ப­தாக க்ளார்க் கூறி­யுள்ளார்.

அவுஸ்­தி­ரே­லி­யாவின் டெஸ்ட் மற்றும் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அணி­களின் தலை­வ­ராக மைக்கல் கிளார்க் தொடர்ந்தும் பதவி வகிக்­கின்றார்.

ஆனால் இந்­தி­யா­வுக்கு எதி­ரான போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரின் முத­லா­வது போட்­டி­யின்­போது கிளார்க் உபா­தைக்­குள்­ளா­னதால் எஞ்­சிய மூன்று போட்­டி­க­ளிலும் ஸ்டீவன் ஸ்மித் பதில் அணித் தலைவராக விளையாடியிருந்தார்.

 

மேலும் அத்தொடரில் அவர் நான்கு போட்டிகளிலும் சதம் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=8742#sthash.XuZiPxIa.dpuf

  • தொடங்கியவர்

கிளார்க் இல்லாமல் ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வெல்ல முடியாது: ஷேன் வார்ன்
 

 

மைக்கேல் கிளார்க் இல்லாமல் ஆஸ்திரேலியாவால் உலகக்கோப்பையை வெல்ல முடியாது என்று ஷேன் வார்ன் கூறியுள்ளார்.

“மைக்கேல் கிளார்க் இல்லாமல் ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வெல்ல முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. 12 மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா சிதறுண்டு கிடந்தது. கிளார்க் கேப்டன்சிக்குப் பிறகே ஆஷஸ் தொடரை 5-0 என்றும் தென் ஆப்பிரிக்காவை தென் ஆப்பிரிக்க மண்ணிலும் வீழ்த்த முடிந்தது.

 

 

ஒரு கேப்டனாக கிளார்க்கின் கற்பனைத்திறனும், ஆக்ரோஷமும் நாம் அறிந்ததே. எனவே அவர் உடல் தகுதி பெற்றால் முதல் போட்டியில் அவர் விளையாட வேண்டியது அவசியம். ஜார்ஜ் பெய்லி தேறமாட்டார். அவரை நீக்கி விட்டு கிளார்க்கை அணியில் சேர்க்க வேண்டும். நல்ல பவுலர்கள் ஜார்ஜ் பெய்லியை வீழ்த்தி விடுவார்கள். பெய்லியை நீக்கி விட்டால், பின்ச், வார்னர், வாட்சன், ஸ்மித், கிளார்க் என்று பலமான லைன் - அப் கிடைக்கிறது.

 

பவுலிங்கில் மிட்செல் ஸ்டார்க் மிக முக்கியமானவர். வெள்ளைப் பந்தை அவர் பேச வைக்கிறார். 3 இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை ஆஸ்திரேலியா வைத்துக் கொள்ளாது என்றாலும் ஜான்சன், ஸ்டார்க், பாக்னர் உள்ள ஃபார்மில் அதனையும் செய்து பார்க்க வேண்டியதுதான் என்ற முடிவை ஆஸ்திரேலியா எடுக்கலாம்.” இவ்வாறு கூறினார் ஷேன் வார்ன்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B7%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D/article6852404.ece

  • தொடங்கியவர்

உலகக்கோப்பையை வெல்வதே முக்கியம்; இந்தியாவிடம் தோற்றால் கவலையில்லை: இன்சமாம்
 

 

உலகக்கோப்பையை பாகிஸ்தான் வெல்லும்பட்சத்தில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தால் அதைப்பற்றி கவலையில்லை என்று முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கூறியுள்ளார்.

"இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை வெல்லும் பட்சத்தில் இந்தியாவுடன் தோற்றாலும் கவலையில்லை.

 

1992-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளுக்கு ஒரு மாதம் முன்பு ஆஸ்திரேலியா சென்றோம். 6 பயிற்சிப் போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வியடைந்தோம், ஆனால் கோப்பையை வென்றோம்.

அங்கு உள்ள பிட்ச்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வது முக்கியம், இந்த விதத்தில் இந்தியாவுக்கு கூடுதல் அனுகூலம் உள்ளது. அங்கு ரிவர்ஸ் ஸ்விங் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்காது, காரணம் இரு முனைகளிலும் இரு பந்துகள் என்பதால் பந்தின் பளபளப்பு மாறாது.” என்றார்

 

கேப்டன் தோனி இந்திய அணியின் மிகப்பெரிய பலம்: இன்சமாம்

"ஒரு கேப்டனாக தோனி இந்திய அணியின் மிகப்பெரிய பலம் என்றே நான் கருதுகிறேன். உலகக்கோப்பை போன்ற பெரிய போட்டித் தொடர்களில் அனுபவமிக்க ஒரு கேப்டன் என்பது மிகப்பெரிய பலம். இந்திய அணி நெருக்கடியில் இருக்கும் போதெல்லாம் தோனி என்ற ஒருவரே அந்த அணியை மீட்டுள்ளார். எண்ணற்ற போட்டிகளை அவர் தனிநபராக வெற்றிபெற்றுக் கொடுத்துள்ளார்.

எனவே நெருக்கடி தருணங்களை சிறப்பாகக் கையாள்வது என்ற விஷயத்தில் மற்ற கேப்டன்களை விட தோனியே சிறந்தவர்." என்றார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/article6852632.ece
 

  • தொடங்கியவர்

உலகக்கோப்பை போட்டிகளில் கிளென் மேக்ஸ்வெல் பொறுமை காக்க வேண்டும்: வார்னர் அறிவுர

 

சக்தி வாய்ந்த ஷாட்களை ஆடும் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் உலகக்கோப்பை போட்டிகளில் பொறுமையுடன் விளையாட வேண்டும் என்று டேவிட் வார்னர் அறிவுரை வழங்கியுள்ளார்.

 

முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில் 95 ரன்களையும் பிறகு பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய கிளென் மேக்ஸ்வெல் உலகக்கோப்பை போட்டிகளில் ஒரு ஆல்ரவுண்டராக அச்சுறுத்தலாகத் திகழ்வார் என்று டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

 

"கிளென் மேக்ஸ்வெல் ரன்களை சேர்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அன்று இறுதிப் போட்டியில் இன்னமும் 9 ஓவர்களே உள்ள நிலையில் அப்படியொரு ஷாட்டை ஆடுவது தேவையற்றது. அதுவும், அந்த ஓவரில் ஏற்கெனவே 9 ரன்கள் எடுத்துவிட்டோம்.

இப்போது அவர் புரிந்து கொண்டிருப்பார், ஒரு ஓவரில் அதிக ரன்கள் வந்து விட்ட பிறகே பொறுமை கடைபிடிக்க வேண்டும் என்பதை. இருபது ஓவர் கிரிக்கெட்டில் ஒவ்வொரு முறையும் எதிரணியிடமிருந்து ஆட்டத்தை தன் அணிப்பக்கம் மேக்ஸ்வெல் தனி நபராக திருப்புவதை பார்த்திருக்கிறோம், இப்போது ஒருநாள் போட்டிகளிலும் அவர் இதனைச் செய்வது மிகப்பெரிய பலம்.

 

ஆனால், ரன்கள் வந்து கொண்டிருக்கும் போது காத்திருப்பது அவசியம்.

அவர், 95 ரன்கள் எடுத்த போது தொடக்கத்தில் எப்படி ஆடினார் என்ற வீடியோ பதிவை பார்க்க வேண்டும். இரண்டு டிரைவ்களை ஆட முயன்று தோற்றவுடன் தயக்கம் அவரை பீடிக்கத் தொடங்கியது. ஆனால் அதன் பிறகு நன்றாக விளையாடி பிறகு 9 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தை அடிக்க நினைத்து ஆட்டமிழந்தார்.

இதிலிருந்து அவர் பாடம் கற்பார் என்று கருதுகிறேன்.”

 

இவ்வாறு வார்னர் ஆஸ்திரேலிய இணையதளம் ஒன்றில் கூறியுள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/article6856195.ece
 

  • தொடங்கியவர்

மைக்கேல் கிளார்க் அணியை வழி நடத்துவார்: பயிற்சியாளர் டேரன் லீ மேன் உறுதி
 

 

உலகக்கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை மைக்கேல் கிளார்க் வழிநடத்துவார் என்று கூறி டேரன் லீ மேன் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

காயமடைந்த மைக்கேல் கிளார்க் தற்போது உடல்நிலையில் தேறி ஆஸ்திரேலிய அணியை உலகக்கோப்பை போட்டிகளில் வழிநடத்துவார் என்று பயிற்சியாளர் டேரன் லீ மேன் உறுதி அளித்துள்ளார்.

 

"ஒரு அணியாக எங்களுக்குத் தெரியும், மைக்கேல் கிளார்க் அவர் விளையாடுவார். நாங்கள் அவர் உலகக்கோப்பைப் போட்டிகளில் விளையாட விரும்புகிறோம். அவர் அணியின் தலைவர், அவர்தான் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக வழிநடத்திச் செல்வார்.

 

கடந்த 23 ஒருநாள் போட்டிகளில் 19 போட்டிகளில் வென்றுள்ளோம். ஆகவே அணி நல்ல நிலையில் உள்ளது. அவரவர்கள் தங்கள் கருத்தைக் கூற உரிமையுண்டு, ஆனால் உள்ளே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது ஒரு அணியாக எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அணித் தலைவராக அவர் தேவை, அவர்தான் கேப்டன்சி செய்யப் போகிறார்.” என்று மைக்கேல் கிளார்க் உறுதிபட கூறியுள்ளார்.

 

பிரிஸ்பன் மைதானத்தில் மைக்கேல் கிளார்க் பேஸ்பால் மட்டையுடன் கடும் பயிற்சியில் ஈடுபட்டார். பந்துகள் அவருக்கு த்ரோ செய்யப்பட்டன என்றும் அத்தனை பந்துகளையும் அவர் அடித்து நொறுக்கினார் என்றும் ஆஸ்திரேலிய ஊடகமான சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

“பேஸ்பால் மட்டையில் விளையாடும் போது பந்துகளை நெருக்கமாக பார்க்கும் பயிற்சி ஏற்படுகிறது. நான் இதனை கடந்த 4 ஆண்டுகளாக செய்து வருகிறேன். பயிற்சிக்கு இது மிகச்சிறந்தது.” என்று கிளார்க் கூறியதாக அந்த பத்திரிகை மேற்கோள் காட்டியுள்ளது.

 

கட்டுப்பாடற்ற ஆக்ரோஷத்தைக் கிளார்க் காண்பித்து ஆடியதாகவும் ஒரு பந்து கிரெக் சாப்பல் நெஞ்சில் பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது கிரெக் சாப்பல், கிளார்க் அடித்த ஷாட் தன் மார்பை நோக்கி வருகிறது என்று தெரிந்து நகர முயற்சி செய்தார், ஆனால் அவரது முயற்சி பலனளிக்கவில்லை என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/article6856818.ece

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நவீனன்..... சளைக்காமல் பதிவுகள் இடுவதற்கு...! :)

  • தொடங்கியவர்

நன்றி நவீனன்..... சளைக்காமல் பதிவுகள் இடுவதற்கு...! :)

 

யாரும் கருத்து எழுதா விடினும் :D பலர் வாசிக்கிறார்கள்  என்பது தெரியும்.

 

அதுவும் டோனி சம்மந்தபட்ட செய்தியாக இருந்தால் சில மணி நேரங்களில் 1000 பேருக்கு மேல் பார்த்திருப்பதையும் அவதானித்து இருக்கிறேன்.

  • தொடங்கியவர்

கேப்டன் பதவி யாருக்கு.. ஆஸ்திரேலிய அணியில் குழப்பம்: கிளார்க், ஸ்மித் இடையே போட்டி

 

உலகக் கோப்பை நெருங்கி வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பதவி யாருக்கு என்பதில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அணி வீரர்கள் பலர் ஸ்டீவன் ஸ்மித்தை கேப்டனாக்க வேண்டும் என்று விரும்பும் நிலையில், அணியின் பயிற்சியாளர் டேரன் லெமன், மைக்கேல் கிளார்க் கேப்டனாக தொடர் ஆதரவு தெரிவித்துள்ளார். முன்னாள் வீரர்கள் பலரும் கிளார்க்கை ஆதரித்துள்ளனர்.

 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி, இந்த உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் ஆஸ்திரேலியாவில் தான் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது.

 

இந்நிலையில் கேப்டன் பதவி குறித்து அணியில் வீரர்களுக்கும், பயிற்சியாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஸ்மித்தின் வளர்ச்சி

25 வயதாகும் ஆல் ரவுண்டரான ஸ்டீவன் ஸ்மித் 2010-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியில் முதல்முறையாக இடம் பிடித்தார். 26 டெஸ்ட், 50 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது கிளார்க் காயமடைந்தார். அதன்பிறகு நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளுக்கு ஸ்டீவன் ஸ்மித் தற்காலிக கேப்டனாக இருந்து அணியை சிறப்பாக வழி நடத்தினார். அதன் பிறகு முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஜார்ஜ் பெய்லிக்கு பதிலாக ஒரு போட்டியில் கேப்டனாக இருந்து சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

 

அவர் கேப்டனாக பொறுப்பேற்ற எந்த போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியடையவில்லை. கேப்டனாக களமிறங்கிய போட்டிகளில் அவரது பேட்டிங்கும் அற்புதமாக அமைந்தது. இதனால் அவர் அனைவரது கவனத்தையும் பெற்றார். ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் கேப்டன் கிளார்க் காயம் காரணமாக உலகக் கோப்பையில் களமிறங்குவது சந்தேகம் என்று கூறப்பட்ட நிலையில், அடுத்த கேப்டனாக ஸ்மித்தை நியமிக்க வேண்டுமென்று அணி வீரர்கள் பலரும் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து உலகக் கோப்பையில் விளையாடும் அணியில் கிளார்க் இடம் பெறுவதே கேள்விக்குறியானது.

 

கிளார்க்கின் மனநிலை

இருநாட்களுக்கு முன்பு கிளார்க் ஆஸ்திரேலிய வானொலிக்கு பேட்டியளித்தார். அதில், நான் கேப்டனாக இருப்பதைவிட ஸ்மித் கேப்டனாக இருப்பதைத்தான் அணியில் பிற வீரர்கள் விரும்புகிறார்கள் என்று கூறப்படுவது தவறான தகவல்.

ஸ்மித்தும் நானும் சிறந்த நண்பர்கள். இனியும் அப்படியே இருப்போம். உலகக் கோப்பையில் கேப்டன் யார், களமிறங்கும் வீரர்கள் யார் என்பதை அணி நிர்வாகிகள் முடிவு செய்வார்கள். ஸ்மித்தை கேப்டனாக நியமித்தால் அவரது தலைமையில் விளையாட நான் தயாராக இருக்கிறேன் என்று கிளார்க் கூறினார்.

 

காயம் காரணமாக அணியில் இடம் பிடிக்க போராடி வரும் அவர், தனக்கு கேப்டன் பொறுப்பு அளிக்கப்படாவிட்டால் கூட பரவாயில்லை அணியில் ஒரு வீரராக கிடைக்க விளையாட வாய்ப்பு கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார் என்பதை வெளிக்காட்டுவதாக இந்த பேட்டி அமைந்தது.

எனினும் இது தொடர்பாக ஸ்டீவன் ஸ்மித் இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

 

பயிற்சியாளரின் உறுதி

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் லெமன், கிளார்க் தான் கேப்டன் என்று உறுதிபடக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியது:

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கிளார்க் காயத்தில் இருந்து மீண்டும் முழு உடல் தகுதி பெற்றுள்ளார். உலகக் கோப்பை போட்டியில் அவர்தான் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கேப்டன் பதவி குறித்து அணியில் எந்த சர்ச்சையும் இல்லை என்றார்.

 

முன்னாள் வீரர்கள் கருத்து

 

முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னேவும் கிளார்க்குக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித் துள்ளார். அதில், மைக்கேல் கிளார்க் இல்லாமல் ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வெல்ல முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.

12 மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா அணி மோசமான நிலையில் இருந்தது. கிளார்க் தலைமையில்தான் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 5-0 என்றும், தென் ஆப்பிரிக்காவை அவர்களின் சொந்த மண்ணிலும் வீழ்த்த முடிந்தது என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியை ‘மியூசிக்கல் சேர்’ விளையாட்டு போல மாற்றிவிடக் கூடாது என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article6859845.ece
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.