Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கர்ப்பம்- தெய்வப் பிறவி-ஆண்-பெண்-திருநங்கை-கூன்-கு்ருடு-முடம் -குள்ளம்- என்ன சொல்கிறார் திருமூலர்?

Featured Replies

தந்திரம் எண் 07:பகுதி எண் 37:பாடல் எண் 03: மொத்தப் பாடல்களின் வரிசை எண் 2104

ஒன்றே குலமும் ஒரு்வனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்க்கதி இல்லுநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்னினைந் து்ய்மினே. 07:37:03:2104

(திராவிடநாடு கோரிக்கையைக் கைகழுவியபின்,பகுத்தறிவுப் பகலவர்கள் தேர்தலில் ஓட்டுச் சேகரி்த்திட ஏற்றுக்கொண்ட "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" திருமூலர் தந்ததுதான்.)

திருமூலர் ஓர் சித்தர். தமிழகத்தில் வாழ்ந்தவர். திருமந்திரம் என்ற நூலை இயற்றியவர். திருமந்திரத்தில் 3000-ம் பாடல்கள் இருக்கின்றன. திரு்மந்திரம் கூறும் உடற்கூறு் வாழ்வியல் தத்துவங்கள் அறிவியல் அறி்ஞர்களால் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன. திருமூலர், நாகை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை-என்னும் திருத்தலத்தில் ஜீவசமாதி அடைந்தவர்.

மதம் என்பதைவிட, சமயம் என்று சொல்வதே சரியாகத் தோன்றுகின்றது.
சமயம்- என்றால் சமைத்தல் பக்குவப் படு்த்துதல் என்று பொருள் கொள்ளலாம். மனிதனைப் பக்குவப் படுத்துவதற்கு தோற்றுவிக்கப் பட்டவையே சமயங்கள் .அவற்றுள் .சைவமும் ஒன்று. சைவ சமயம் பேணிடப் பாடிய பாடல்களின் தொகுப்பு, பன்னிரு திருமுறைகள் என்று அழைக்கப்படுகின்றன். அவற்றுள் பத்தாவதாக வருவது திருமந்திரம்.

3000-ம் பாடல்களைக் கொண்டது திருமந்திரம்.பாயிரம் மற்றும் ஏழு தந்திரங்களைக் உள்ளடக்கியது. ஒவ்வொரு தந்திரத்திலும் பல தலைப்புக்களில் பாடல்கள் உள்ளன். நாம் இங்கே காணவிருப்பது இரண்டாம் தந்திரம். அதில் 14-வதாக வரு்வது் கர்ப்பக் கிரியை 41 பாடல்களை உள்ளடக்கியது.

கருவுறுதல், பத்துமாத கால வரையறை, ஆண்,பெண்,அலி, குட்டை,நெட்டை, முடம்,கூன்,குருடு, முதலான மனிதப் பிறப்புக்கள் மற்றும் குழந்தயின்மைக்கான காரணங்கள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன். அந்தப் பாடல்களை மட்டும் இங்கே காண்போம்.

இறைவன்,திருமால்,பிரமன்,அரசாள்வோர் போன்ற பிறப்புக்கள் எப்பொழுது தோன்றும்?
ஏற எதிர்க்கில் இறையவன் தானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் தானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே. 02:14:08:488

எண்சாண் அளவு உடம்பு குழந்தைக்கு உண்டாவது எப்போது?
சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தே தோன்றுமவ் யோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கரம் எட்டு்மெண் சாணது வாகுமே. 02:14:14:464

உயிரில் பால் வேறுபாடு இல்லை;உடம்பில்தான் பாலியில் வேற்றுமை தோன்றும்: எப்படி?
மாண்பது வாக வளர்கின்ற வன்னியைக்
காண்பதுஆண்பெண் அலிஎயனும் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தான் அச்சோதிதன் ஆண்மையே. 02:14:27:477

ஆண்,பெண்,அலி உருவாதல் மற்றும் அரசாள் உருவாதல் எவ்வாறு?nt>
ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்
பூணிரண்டு ஒத்துப் பொருந்த்தில் அலியாகும்
தாள்மிகு மாகில் தரணி முழுதாளும்
பாணவம் மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே. 02:14:28:478

ஆயுட்காலம் 100/80 ஆண்டுகள் என்றாக்கிட எப்படிப் பொருந்த வேண்டும்?
(யோகியரால்தான் முடியும் என்கிறர்ர் திருமூலர்).
பாய்ந்தபின் அஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந்து இவ்வகை
பாய்ந்த்திடும் யோகிக்குப் பாய்ச்சலும் ஆமே. 02:14:29:479

குட்டை(குள்ளம்),மூடம்,கூனம் பிறப்பது எப்போது?
பாய்கின்ற வாயுக் கு்றையில் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
காய்கின்ற வாயு நடுப்படில் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப் பார்க்கிலே. 02:14:30:480

மந்தபுத்தியுள்ளவரும், ஊமையரும், குருடரும் பிறப்பது எப்போது?
மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வைத்த குழவிக்கே. 02:14:31:481

ஆண், பெண், இரட்டைக்குழந்தை, அலி பிறப்பது எப்போது?
குழவி ஆணாம் வலத்தது ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே. 02:14:32:482

குழந்தை அழகாய்ப் பிறப்பதும் கருத்தரிக்காமல் போவதும் எப்போது?
கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியும் கோமளம் ஆயிடும்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளையாட்கே. 02:14:33:483

திருமந்திரப் பாடல்களிலிருந்து. -

  • கருத்துக்கள உறவுகள்

முடியல! இந்த வாயு என்றால் என்ன? ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும் இரண்டும் ஒன்றானால் அலியாகும், இது சொல்ல திருமூலர் அங்கிள் எதுக்கு? :unsure: யாரும் சொல்லக் கூடியது தானே இது? பிறப்பில் நடக்கிறத வைச்சுக் கொண்டு தெய்வப் பிறவி குரங்குப் பிறவி எல்லாம் தீர்மானிக்கப் படுவதாகச் சொல்லபடுவது eugenics வாதம் போல இருக்குது. 1920 களில் மேற்கத்தையர் தூக்கி வைத்திருந்த eugenics ஐ நாங்கள் இனி உயிர்ப்பித்து முன்னேறலாம் போல தெரியுது! :D

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா அது குழவி?

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா அது குழவி?

என்ன இசை, தமிழுக்கு "எஸ்" போல! குழவி=குழந்தை. குளவி=கொட்டும் குளவி, குலவி="கசமுசா" :icon_mrgreen: (பலான விஷயம்!). இப்ப கிளியரா? :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இசை, தமிழுக்கு "எஸ்" போல! குழவி=குழந்தை. குளவி=கொட்டும் குளவி, குலவி="கசமுசா" :icon_mrgreen: (பலான விஷயம்!). இப்ப கிளியரா? :D

ஓ.. அந்தக் குழவியா? :unsure: இப்ப கிளியர்.. :D

Spoiler
சமயம் பார்த்து அடிக்கிறாங்கப்பா.. :o:wub:
  • கருத்துக்கள உறவுகள்

ஆயுட்காலம் 100/80 ஆண்டுகள் என்றாக்கிட எப்படிப் பொருந்த வேண்டும்?

(யோகியரால்தான் முடியும் என்கிறர்ர் திருமூலர்).

பாய்ந்தபின் அஞ்சோடில் ஆயுளும் நூறாகும்

பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்

பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந்து இவ்வகை

பாய்ந்த்திடும் யோகிக்குப் பாய்ச்சலும் ஆமே. 02:14:29:479

பொழிப்புரை:

துணையர் (தம்பதிகள்) கூட்டத்தில் வெண்டுளி கருப்பையினுள் சென்றபின்பும் ஆடவனுக்கு ஐந்து மூச்சு நிகழுங் காறும் இருவரும் பிரியாது முன்போலவே புல்லிக் கிடப்பாராயின், பிறக்கின்ற குழவியது வாழ்நாள் நூறாண்டாக அமையும். நான்கு மூச்சு நிகழுங்காலும் பிரியாதிருப்பாராயின் அஃது எண்பது ஆண்டாக அமையும். இவ்வாறே ஒரு மூச்சிற்கு இருபது ஆண்டாகக் கணக்கிட்டு அறியலாம். ஆயினும், மூச்சுக்களின் கணக்கை உண்மையாக அறிவதோ, மூச்சினை நெறிப்படுத்தி இயக்குதலோ பொதுமக்களுக்கு இயலாது. யோகிகளாயின் அக்கணக்கினை அறியவும், அதன்படி மூச்சினை நெறிப்படுத்து இயக்கவும் வல்லராவர்.

வெண்டுளி உள்ளே சென்ற பின் புல்லிக் கிடக்க முடியாமல் களைச்சுப் போய் தள்ளி படுத்தால் என்னவாகும்? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வெண்டுளி உள்ளே சென்ற பின் புல்லிக் கிடக்க முடியாமல் களைச்சுப் போய் தள்ளி படுத்தால் என்னவாகும்? :rolleyes:

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

வெண்டுளி உள்ளே சென்ற பின் புல்லிக் கிடக்க முடியாமல் களைச்சுப் போய் தள்ளி படுத்தால் என்னவாகும்? :rolleyes:

புல்லிக் கிடக்க முடியாமல் களைச்சுப் போய் தள்ளி படுத்தால் அவர்களுக்கு ஆயுள் கெட்டியாகும் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.