Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேச்சு வேண்டாம்- போரைத் தொடருங்கள்

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம்- போரைத் தொடருங்கள் என்று மகிந்தவின் கூட்டுக்கட்சிகளான ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியவை வலியுறுத்தியுள்ளன.

கொழும்பு ஊடகவியலாளர்களிடம் ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச நேற்று புதன்கிழமை கூறியதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சு மேசைக்கு வர தயாராக இல்லை. பேச்சுக்கள் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காண அவர்கள் விரும்பவில்லை.

அவர்களது நடவடிக்கைகள் அனைத்தும் போரை விரும்புவதாக தெரிகிறது.

இந்த வாரத்தில் வடக்கு-கிழக்கில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தவில்லை. ஹபரணை மற்றும் காலி போன்ற இடங்களில்தான் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

முக்கிய இராணுவ நிலைகள் மற்றும் பொருளாதார மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

வடக்கு-கிழக்கு இணைப்புக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பானது பிரிவினைவாதத்துக்கு பாரிய தோல்வியாகும். முஸ்லிம் தலைவரான அஸ்ரப் போன்றோர் வடக்கு-கிழக்குப் பிரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் தற்போதைய முஸ்லிம் தலைவர்கள் அதனை விரும்பவில்லை.

ஜெனீவாவில் நடைபெற உள்ள பேச்சுக்களை சிறிலங்கா அரசாங்கம் கைவிட வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலைகளை நிர்மூலமாக்க வேண்டும்.

1983ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதலை நடத்தி நாம் பாரிய தவறு செய்துவிட்டோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பயனளிக்கக்கூடியதான தமிழர் மீதான தாக்குதலை நடத்த வேண்டாம் என்றார் விமல் வீரவன்ச.

ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளர் ஓமல்பே சோபித தேரர் கூறியுள்ளதாவது:

பேச்சுக்களுக்கு செல்லாமல் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தொடர்ந்து அரசாங்கம் தாக்குதலை நடத்த வேண்டும்.

அவர்களுக்குத் தெரிந்த மொழி போர்தான்.

சிறிலங்கா அரசாங்கத்தை பலமுறை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏமாற்றியுள்ளனர். இப்போது ஒக்ரோபர் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் ஜெனீவாவில் பேச்சுக்கள் நடைபெற உள்ளன.

சிறிலங்கா இராணுவம் மீது பாரிய தாக்குதல்களை நடத்துகின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் ஏன் பேச்சுக்கு வர வேண்டும்?

தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவத்தினர் தோற்கடித்து வந்தனர். முகமாலை பின்னடைவுக்குப் பின்னர் இராணுவத்தினரை நிலைகுலைய வைக்க முயற்சிக்கின்றனர். அண்மைய தாக்குதல்களில் எமது கடற்படையினர் பாரிய பங்காற்றினர் என்றார் அவர்.

ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகச் செயலாளர் நிசாந்த சிறி வர்ணசிங்க கூறுகையில், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கையளித்த பின்னரே பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும் என்றார்.

ஜெனீவாப் பேச்சுக்களை வரவேற்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திச அத்தநாயக்க கூறியுள்ளார்.

http://www.eelampage.com/?cn=29389

  • தொடங்கியவர்

சந்திரிகாவின் வழியைப் பின்பற்ற மகிந்தவை மக்கள் தெரிவு செய்யவில்லை: ஜாதிக ஹெல உறுமய சாடல்

சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகாவின் வழியைப் பின்பற்ற மகிந்தவை மக்கள் தெரிவு செய்யவில்லை என்று ஜாதிக ஹெல உறுமய சாடியுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் பேசியதாவது:

வன்முறைகளை நிறுத்துவதற்கு விடுதலைப் புலிகள் ஒப்புக்கொண்டனரா என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

சிறார் படை சேர்ப்பு மற்றும் ஆயுதக் கடத்தலை நிறுத்த வேண்டும் என்பது பேச்சுக்கான முன்நிபந்தனைகள். இவை தொடர்பில் விடுதலைப் புலிகள் எழுத்துப்பூர்வமான உறுதிமொழி வழங்கியுள்ளனரா? என்பதை பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க விளக்க வேண்டும்.

பிரிவினைவாதத்தைக் கைவிட வேண்டும், ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயகப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பது உள்ளிட்டவைதான் மகிந்த சிந்தனையின் கொள்கைகள். இதனை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

தேசிய இனப்பிரச்சனையில் உறுதியான நிலைப்பாட்டை மகிந்த மேற்கொள்வார் என்றுதான் மக்கள் அவரைத் தெரிவு செய்தனர். ஆழிப்பேரலை பிரச்சனையில் சந்திரிகா குமாரதுங்க மேற்கொண்டதைப் போன்ற வழியைப் பின்பற்றுவதற்காக மகிந்தவை மக்கள் தெரிவு செய்யவில்லை.

அமைதிக்கான சர்வதேச அனுசரணையாளர்கள் இங்கு இருக்கும்போதே பாதுகாப்புப் படையினரது சடலங்கள் வீதிகளில் துண்டு துண்டாக சிதறி விழுகின்றன.

நாங்கள் இணைத் தலைமை நாடுகளினாலோ அல்லது நோர்வே அனுசரணையாளர்களாலோ தெரிவு செய்யப்பட்டவர்கள் அல்ல என்றார் அத்துரலிய ரத்ன தேரர்.

http://www.eelampage.com/?cn=29388

ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளர் ஓமல்பே சோபித தேரர் கூறியுள்ளதாவது:

பேச்சுக்களுக்கு செல்லாமல் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தொடர்ந்து அரசாங்கம் தாக்குதலை நடத்த வேண்டும்.

............................................................................

இதைத்தானே செய்து கொண்டிருக்கிறார்கள் விளக்கமில்லாத ஆமத்துரு போல இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளர் ஓமல்பே சோபித தேரர் கூறியுள்ளதாவது:

பேச்சுக்களுக்கு செல்லாமல் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தொடர்ந்து அரசாங்கம் தாக்குதலை நடத்த வேண்டும்.

............................................................................

இதைத்தானே செய்து கொண்டிருக்கிறார்கள் விளக்கமில்லாத ஆமத்துரு போல இருக்கு

:):lol::lol::lol::lol::lol::lol:

அது தான் சொல்லுறது மொட்டைகளுக்கு மண்டைக்குள்ளையும ஒன்டுமில்ல வெளியையும் ஒன்டுமில்லை என்டு. இப்ப மட்டும் என்னத்தை புடுங்கிக் கொண்டிருக்கினமாம்?

ஈழத்திலிருந்து

ஐhனா

  • தொடங்கியவர்

இவங்களுக்கு வெளியிலதான் மூழை இருந்ததாம் மொட்டையடிக்கையில நாய் நக்கீற்றுதாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.