Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புகையிரதம் வரும் கவனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

e2615c6cdd187570ec9af61584f47e61.jpg

போக்குவரத்து வீதிகளை புகையிரதம் கடக்கும் போது ஏற்படுத்தப்படும் சமிஞ்ஞையினையும் பொருட்படுத்தாது பொதுமக்கள் வீதியை கடந்து செல்வதைக் காண முடிகின்றது. 
 
யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களது பாவனையில் உள்ள போக்குவரத்து வீதிகளை புகையிரதம் கடக்கும் போது எச்சரிக்கை சமிஞ்ஞை ஒலி 5 நிமிடங்களுக்கு முன்னரே எழுப்பப்படுகின்றது.
 
எனினும் குறித்த போக்குவரத்து பாதையினைக் கடந்து செல்வோர் அதனைப் பெருட்படுத்தாது புகையிரதம் இன்னமும் வரவில்லை என்றும்  புகையிரதம் வருவதற்கு முன்னர் பாதையைக் கடந்து விடலாம் என்றும் தங்களுடைய சிந்தனையில் சமிஞ்ஞை ஒலியினையும் பொருட்படுத்தாது வீதியைக் கடந்து செல்கின்றனர்.
 
இவ்வாறான செயற்பாட்டினை பொதுமக்கள் அனைவரும் செய்வதில்லை. மாறாக ஒரு சிலரே முட்டாள் தனமாக இவ்வாறு செயற்படுகின்றனர். இவ்வாறான அவசர போக்குடையவர்கள் வீதியைக் கடக்கும் போது பலர் வீதியின் இரு மருங்கிலும் புகையிரதம் செல்லும் வரை காத்திருந்து செல்கின்றனர். 
 
எனவே இவ்வாறு அவசர போக்கினை கொண்டவர்கள் பொறுமையாக இருந்து புகையிரதம் வீதியைக் கடந்ததும் தாமும் பயணிக்க முடியும். அத்துடன் புகையிரதம் வரும் போது மெதுவாகவே வருவது போல எமக்கு தென்படும். அதனை அவதானித்து வீதியைக் கடந்து விடலாம் என்று சிந்தித்து வீதியை கடப்பதற்குள் புகையிரதம் அடித்துவிட்டு சென்றுவிடும்.
 
ஆகவே போக்குவரத்து செய்பவர்கள் மிகவும் அவதானத்துடன் புகையிரதக் கடவையில் செல்ல வேண்டும். தங்கள் உயிரை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகளை பொலிஸார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
இதேவேளை, தென்மராட்சிப்பகுதியில் புகையிரத எச்சரிக்கை சமிஞ்ஞை போடப்பட்ட வீதிக்கடவையை கடந்த ஒருவரை பொலிஸார் கைது செய்ததுடன் அவரை நீதிமன்றிலும் முற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 

http://onlineuthayan.com/News_More.php?id=213483673525549148

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.