Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி தனது தூக்கத்தை தொலைத்து விட்டார். இனி அவரால் தூங்க முடியாது

Featured Replies

அரசாங்கத்தின் பற்களை வ்வொன்றாக கழற்றி எடுப்போம் : ராஜித:-

Mahi%20sad_CI.jpg

தனது புல­னாய்வு பிரி­வினர் சிறந்­த­வர்கள் என மார் தட்டும் மஹிந்த ராஜபக் ஷவிற்கு பொது வேட்­பாளர் யார் என்­பதை கண்­டு­பி­டிக்க முடி­யாமல் போய்­விட்­டது. தனது போட்­டி­யா­ளரை தன்­னு­ட­னேயே வைத்­திருந்துள்ளார் என குறிப்­பிட்ட ராஜித சேனா­ரத்ன, அர­சாங்­கத்தின் மொத்த பற்­க­ளையும் ஒன்­றாக கழற்றாது ஒன்­றொன்­றாக கழற்றி எடுப்போம். மஹிந்­தவின் தூக்­கத்தை கெடுப்போம் எனவும் குறிப்­பிட்டார்.

பொது எதி­ர­ணி­யினர் நேற்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் மாகாண மாவட்ட உறுப்­பி­னர்­களை சந்­தித்த போது அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

நாங்கள் அரசில் இருந்து வெளி­யே­றுவோம் என குறிப்­பிட்டோம் இன்று அதை செய்து காட்­டி­விட்டோம். ஜன­நா­ய­கத்தை வென்­றெ­டுக்கும் புதிய கூட்­ட­ணி­யி­னையும் உரு­வாக்­கி­விட்டோம். இந்த கூட்­டணி தமிழ், முஸ்லிம், சிங்­கள மக்­களின் உரி­மைக்­கான கூட்­டணி. இதில் சகல மக்­களின் உரி­மை­களும் சுதந்­தி­ரமும் தங்­கி­யுள்­ளன. ஆகவே, அனை­வரும் கைகோர்த்து எமது பய­ணத்­தினை வெற்றிப் பய­ண­மாக மாற்­றி­ய­மைக்க வேண்டும்.

ஜனா­தி­பதி யுத்­தத்­தினை வென்­றெ­டுத்­ததும் தனக்­கெ­தி­ரான சக்­தி­களை இனங்­கண்­டதும் தனது புல­னாய்வு பிரி­வி­னரை வைத்தே. இதை தான் பெரிதாக மார்­தட்டிக் கொள்வார். ஆனால், ஜனா­தி­ப­தியின் புல­னாய்வு பிரி­வினரை வைத்து தனக்கு எதி­ரான வேட்­பாளர் யார் என்­பதை இனம்­காண முடி­யாது போய்­விட்­டது. தனது எதி­ரணி வேட்­பா­ளரை தன்­னு­ட­னேயே வைத்துக் கொண்டு வெளியில் தேடி­யுள்ளார். 

இன்று நாங்கள் வெளி­யே­றி­யது அவ­ரு­ட­னான தனிப்­பட்ட விவ­கா­ரத்தில் அல்ல, நாட்டில் அவரை சர்­வா­தி­கா­ரி­யாக உரு­வெ­டுக்க விடக்­கூ­டாது என்­ப­தற்­காகவேயாகும். எமக்கு கட்­சி­யினை விடவும் நாடும் மக்­க­ளுமே முக்­கியம். நாங்கள் சாவுக்கு அஞ்­ச­வில்லை. துணிந்து களத்தில் இறங்­கி­யுள்ளோம். எனவே, இதில் வெற்­றி­பெற வேண்டும்.

அதேபோல் இன்று அரசில் இருந்து நாளுக்கு நாள் உறுப்­பி­னர்கள் வெளி­யே­று­கின்­றனர். நாம் வெளி­யே­றி­ய­வுடன் வேறு எவரும் வெளி­யேவர மாட்­டார்கள் என அரசாங்கத்தில் தெரி­வித்­தனர். ஆனால் நேற்று ஒருவர் இன்று ஒருவர் என வெளி­வர ஆரம்­பித்து விட்­டனர். 

நாங்கள் அரசின் முழுப் பற்­க­ளையும் ஒன்­றாக பிடுங்­கி­விட நினைக்­க­வில்லை. தனித்­த­னி­யா­கவே பிடுங்­குவோம். இன்னும் சில நாட்­களில் அரசின் முக்­கியப் பற்­களை கழற்றி எடுப்போம். நாம் சொல்வதை செய்து காட்டுவோம். ஜனாதிபதி தனது தூக்கத்தை தொலைத்து விட்டார். இனி அவரால் தூங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113939/language/ta-IN/article.aspx

தூங்கும் வியாதியும் உண்டு. இது தூங்க முடியாத வியாதி.

என்னை பொறுத்தவரை மகிந்ததான் வெல்வார், அப்பிடியே தேற்று போனாலும் இராணுவத்தின் உதவியுடன் கோத்தபாய அதிகாரத்தை தக்கவைக்கலாம்.

 

எதுக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.