Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

தீபங்கள் வரிசையாக ஏற்றி

தீமைகள் நீங்கிய நன் நாளாம்

ஈழத்தின் அவலங்கள் நீங்கி

ஈர இரத்த ஆறுகள் அடங்கி

ஈன சிங்கள் அரக்கன் வீழ்ந்து

ஈழம் மலரும் நன்நாள்-எம்

ஈழத்தமிழருக்கு தலைத்தீபாவளி

உங்களுடைய கையெழுத்தில் "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா " என்று உள்ளது.

ஆனால் உங்கள் கவிதை தமிழனை தலை குனிவுக்கு உள்ளாக்குகிறது.

மாமன்னன் நரகாசுரனுக்கு வீரவணக்கம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுடைய கையெழுத்தில் "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா " என்று உள்ளது.

ஆனால் உங்கள் கவிதை தமிழனை தலை குனிவுக்கு உள்ளாக்குகிறது.

மாமன்னன் நரகாசுரனுக்கு வீரவணக்கம்!

நரகாசூரன் தம் மக்களையே துன்பப்படுத்தியதாக வரலாறு

தீமைகள் நீங்கி நன்மை பெற்ற நாள்தானே தீபாவளி. நாட்டில் காட்டிக் கொடுப்பவனும் தமிழந்தானே அதற்காக அவனையும் தலையில் தூக்கி வைக்க முடியுமா?

இது என் கருத்து தாயக சிந்தனையுடன் உணர்ச்சிக்கவிதைகள் தருபவர் இலக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுகள் உண்ண உணவு உடை இடம் இன்றி அகதிகளாகி

சாவுக்குள் வாழும் போது இங்கு கொண்டாட்டம் தேவைதானா?ஈழத்தமிழருக்கு விடிவு வரும் நாள்தான்

தீபாவளி உங்கள் உணர்வுகளுக்கு என் வாழ்த்துக்கள்

தயவுசெய்து இக் கட்டுரையை முழுமையாக படிக்கவும்!

தீபா"வலி"யும் தமிழரும்!

உலகில் வாழும் அனைத்து இனங்களும் பல வகையான விழாக்களை ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றன. போரில் வெற்றி பெற்ற நாள், விடுதலை அடைந்த நாள், வருடத்தின் முதன் நாள், கடவுளோ அல்லது கடவுளின் தூதரோ பூமிக்க வந்ததாக நம்பப்படுகின்ற நாள் என்று மகிழ்ச்சியையும், வெற்றியையும், விடுதலையையும் குறிக்கின்ற பலவிதமான விழாக்களை மனித இனம் கொண்டாடி வருகிறது.

ஆனால் தான் தோற்கடிக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட ஒரு நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற ஒரு வெட்கம் கெட்ட இனமும் இந்த உலகத்தில் உண்டு. அது வேறு யாரும் அல்ல. கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன்னே வாளோடு தோன்றிய மூத்த குடி என்று தன்னை அறிமுகம் செய்கின்ற தமிழினம்தான் அது. பொங்கல் போன்ற விழாக்களுக்கு கொடுக்காத முன்னுரிமையை தீபாவளிக்கு கொடுத்து, தன்னுடைய அடிமை சாசனத்தை ஆண்டு தோறும் புதுப்பித்துக் கொண்டிருக்கிற தமிழினமாகிய நாங்கள்தான் அந்த பெருமைக்குரியவர்கள்.

இதோ! இந்த ஆண்டும் தீபாவளி வந்து விட்டது. தமிழர்கள் புத்தாடை அணிந்து கோயிலுக்கு போகிறார்கள். நேரிலும், தொலைபேசியிலும் "தீபாவளி வாழ்த்துக்கள்" சொல்லி மகிழ்கிறார்கள். தமிழர் கடைகளில் தீபாவளி சிறப்பு விற்பனை விளம்பரப்படுத்தப்படுகின்றன. தீபாவளி திரைப்படங்கள் அணி வகுக்கின்றன. தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்கள் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறன. புத்தக நிறுவனங்கள் தீபாவளி சிறப்பு மலர் வெளியிடுகின்றன. கொண்டாட்டம் களை கட்டுகிறது.

ஆனால் இந்த தீபாவளியின் பின்னணி வரலாறு எத்தனை பேருக்கு தெரியும்? எங்களின் மூதாதையர் அழிக்கப்பட்ட நாளை, தமிழினம் தோற்கடிக்கப்பட்ட நாளை நாம் கொண்டாடுகிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

அதைப் பார்ப்பதற்கு முன் தீபாவளியை தமிழினத்திற்குள் திணித்த ஆரியப் பார்ப்பனர்கள் தீபாவளி குறித்து சொல்லுகின்ற கதையை சுருக்கமாகப் பார்ப்போம்.

முன்பொரு காலத்தில் ஒரு அரக்கன் இருந்தானாம். அவன் பூமியை பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டானாம். படைப்புத் தொழிலை செய்வதற்கு பூமி இல்லையே என்று கவலைப்பட்ட பிரம்மா விஸ்ணுவிடம் முறையிட்டாராம். விஸ்ணு பன்றியாக மாறி அரக்கனோடு சண்டை போட்டு அவனை கொன்று பூமியை மீட்டாராம். பூமிக்கு தன்னை மீட்ட பன்றியின் மீதே காதல் வந்துவிட்டதாம். பன்றியும் சரியென்று சொல்ல இருவரும் உறவு கொண்டார்களாம். அதனால் ஒரு பிள்ளை பிறந்ததாம். அவன்தான் நரகாசுரன் என்ற அரக்கனாம். அவன் தவம் செய்து தன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றானாம். வரம் பெற்ற அரக்கன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினானாம். கடைசியில் விஸ்ணு கிருஸ்ணனாகவும் பூமாதேவி சத்தியபாமாவாகவும் அவதாரமெடுத்து நராகசுரனோடு போரிட்டார்களாம். கடைசியில் நரகாசுரன் பெற்ற வரத்தின்படி அவனுடைய தாயாகிய சத்தியபாமாவால் கொல்லப்பட்டானாம். அவன் கொல்லப்பட்ட நாள்தான் தீபாவளியாம்.

இப்படி ஒரு ஆபாசமான புராணக் கதையைக் அடிப்படையாகக் கொண்டு இந்த தீபாவளியை ஆரியப் பார்ப்பனியம் தமிழர்களுக்குள் திணித்தது. உருண்டையாக இருக்கின்ற பூமியை எப்படி பாயாக சுருட்டலாம் என்றோ, பூமியிலே இருக்கின்ற கடலுக்குள் எப்படி பூமியையே ஒளித்து வைக்கலாம் என்றோ, பூமியாலும் பன்றியாலும் உறவு கொள்ள முடியுமா என்றோ கேள்விகளை எழுப்ப முடியாதபடி தமிழினத்தை மடமைக்குள் தள்ளியது

ஆனால் தீபாவளி கொண்டாடப்படுவதன் பின்னணி வேறு. இங்கே நராகசுரன் என்று உருவகப்படுத்தப்படுபவன் யார்? புராணங்களில் அசுரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? இதற்கு பதில் தெரிந்தவர்கள் தீபாவளியை கொண்டாட மாட்டார்கள். தெரிந்த பின்பும் கொண்டாடினால் அவர்கள் சூடு சுரணை உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள்.

பாரத கண்டத்தின் வரலாறு என்பது ஆரிய திராவிடப் போரை அடிப்படையாகக் கொண்டது. திராவிடர்கள் எனப்படுகின்ற தமிழர்கள் ஆண்டு கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பை வந்தேறு குடிகளான ஆரியர்கள் மெது மெதுவாக ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். நில ஆக்கிரமிப்போடு, மொழி ஆக்கிரமிப்பும், பண்பாட்டு ஆக்கிரமிப்பும் நிகழந்தது. ஆரியர்களின் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து தமிழர்கள் நீண்ட காலம் வீரப் போர் புரிந்தார்கள். இந்தப் போர்கள்தான் புராணக் கதைகளில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போர்களாக வர்ணிக்கப்படுகின்றன.

சுர பானம் அருந்துகின்ற ஆரியர்கள் சுரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். சுர பானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று குறிப்பிடப்பட்டார்கள். அத்துடன் அசுரர்கள் தெற்கே வாழ்பவர்கள் என்றும் புராணக் கதைகளில் குறிப்பிடப்படுகிறார்கள். கிருஸ்ணனும் சரி அதற்கு முந்தையவனாக சொல்லப்படுகின்ற இராமனும் சரி, அசுரர்களை அழிப்பதற்கு தெற்கு நோக்கி படை எடுத்து வந்ததாகவே ஆரியர்களின் புராணங்கள் சொல்லுகின்றன. அசுரர்கள் கறுப்பாக இருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறார்கள

வணக்கம்.

மதலில் இலக்கயின் படைப்புக்கு நன்றிகள்...

ஜயா..சபேசன் அவர்களுக்க

தாங்கள் கூறிய இந்த மடல் ஊடான கருத்துகள்

எந்த ஆதரத்தை வைத்து எவர் செய்த ஆய்தலின் பின்னும்

தாங்கள் இந்த கருத்தை தெட்ட தெழிவாக உரைக்கிறீர்கள்...???

என்பதனையும் அதன் தொடர்சியையும் இங்கு தெழிவாக விளக்குக...

தங்கள் பதில் ''விளக்க மடல் எதிர் பார்க்கிறோம்''

நன்றி

வன்னி மைந்தன்

தினம் தினம் ஒரு கவிதை எழுதுகின்ற வன்னிமைந்தனுக்கு கூடவா இந்த விடயம் தெரியாமல் இருக்கிறது? இது பற்றி பல ஆண்டுகளாக எத்தனை பேர் பல கட்டுரைகளை எழுதிவிட்டார்கள்.

மேலே எழுதிய கட்டுரையை விடவும் மேலான விளக்கத்தை எதிர்பார்க்கின்றீர்கள் என்றால், நான் என்ன எழுதியும் நீங்கள் நம்பப் போவதில்லை.

நீங்கள் தொடர்ந்தும் பன்றியும் புூமியும் கூடிப் பிறந்த பிள்ளையை சத்தியபாமா கொன்ற கதையையே பின்பற்றுங்கள். நாம் சொல்வதை விட அதுதானே நம்பக்கூடியதாக இருக்கிறது.

இவைகள் "நரகாசுரனுக்கு அஞ்சலி" என்ற பதிவில் மோகன் இணைத்தவைகள்

தமிழர்களுக்கு மானக்கேடான தீபாவளிப் பண்டிகை

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=7256

தீபாவளி! தமிழனுக்கு மானக்கேடு

http://www.yarl.com/forum/viewtopic.php?t=7265

தீபாவளி தமிழர் பண்டிகையா?

http://www.yarl.com/forum/viewtopic.php?t=516

இன்னும் பல பதிவுகளை தீபாவளி என்று தேடினால் பார்வையிடலாம்.

அன்புடன்..

ஜயா சபேசன் அவர்களுக்கு....

தாங்கள் மேற் கூறப்பட்ட கருத்துகளை

எந்த ஆய்வாளரின் ஆய்தல் ஊடாக

எந்த இராமாயணத்தை அடிப்படை

கருத்தாய் வைத்து இந்த இறுதி

முடிவிற்குள் வந்தீர்கள்....????

ஏன் எனில் மகாவம்சத்தை கட்டுகதை

என்று எவ்வாறு நாங்கள் எதிர்கிறோமோ

அதை போல தென்னிலங்னை பெருபான்மை

அதை முற்று முழுதாக ஏற்கிறது....

இந்த புராண கதைகளை படிக்கும் போது நானே

குழம்பி போனேன்...

இவை பின்வருமாறு...

இராவனன் தமிழ் மனன்ன் என்று கூறினாலும்

அந்த காலத்தில் அவன் தமிழில் பேசவில்லையாம்

என்று ஒரு சாரரும்...

அவன் சமஸ்கிருதமே பேசியதாக ஒரு சாரரும்....

அவனுக்கு பத்து தலை என்று பிறிதாரரும்

இல்லை என்று மறு தாரருமாக...

இப்படி பல்வேறு பட்ட பாத்திரங்களில் மோதிக்கொண்டன...

ஆனால் தீர்க்கமான முடிவிற்குள் எம்மால் வரமுடியவில்லை...

ஏனெனில் அதை ஆய்வு செய்த ஒவ்வொரு தரும் தாம் தாம்

தம்மை நிலை நிறுத்தி கொள்ளவும் தம் வாதமே சரியென்று

கூறிக்கொள்ளவுமேமுட்டி மோதி கொள்ள முடிந்தது...

அதன் ஒரு கட்டமாக அவர் அவர் தமது நோக்கின் படி

தமது கருத்துகளும் ஆய்வுகளுமே சரியென்று வாதிட்டனர்...

அத்துடன் அவர்கள் யுத்திம் நின்றுது.

பிற்காலத்தில் அதை படித்தவர்கள் பைத்தியம் பிடிக்கும்

நிலைக்கு ஆழானர்கள்..எனவே இதில் எது உண்மை எது பொய்..

எது கட்டு கதை என்று நாம் எடுக்க...???

இது தவிர்ந்த ஒரு கதை படித்தேன்...

தீபகத்தில் முன்னர் ஆண்ட குறு மன்னர்களிடையே

ஒரு யுத்தம் வந்ததாம் அப்போது கௌதம புத்தர் சென்று

அதை தடுத்து சமாதானத்தை உண்டு பண்ணியதாக கூறியது...

இதில் எது உண்மை...???

மறு புறத்தே அதே கருத்தை சிங்களவரிடம் கேட்டால் மறுக்கிறார்கள்

எமது மாகபாரதம் கட்டு கதை என்றும்

இவ்வாறான வரலாறுகள் பிழை என்வும் உரைத்தார்கள்...

ஏன் எம் தமிழரிடை கேட்டால் அவர்களும் அப்படியே

கூறினார்கள்...

இதில் முரன் பட்டு முட்டி மோதியது ''சிவதம்பி அவர்கள்'' எழுதிய புத்தகம்

நான் படித்தேன் அதே போல் பிறதொருவர் எழுதியதையும் நான் படித்தேன் முரன் பாடுகள்

இருவருக்கும் இடையில்....

அப்போ நாம் எப்படி தெழிவாவது....???

அதே போல தாயக பிரதேசத்தில் ஊர்கள் பிறந்த கதை சொன்னார்கள்

இதில் உன்றை உதரணம் தருகிறேன்...

சாவகர் ஆண்ட பிரதேசம்..மருவி

சாவகச்சேரி என்று வந்ததாம்..

இதை நீங்கள் ஏற்று கொள்கிறீர்களா....???

இது போல பல இன்னும் உன்று தசதரனுக்கு அறுபாதாயிரம் மனைவியர் என்று உன்றும்

இல்லை ஜம்பதாயிரம் மனைவியர் என்று பிறிதொன்றும் கூறுகிறது...

இதில் எது உண்மை....??

வீரமணி அவர்கள் எழுதிய தொகுப்பை தங்கள் இணையத்தில்

போட்டு உள்ளீர்கள் அதில் எத்தனை முரன் பாடுகள் உள்ளன....???

அவை ஏற்புடையதா...???

ஆக மொத்தம் எல்லாம் குழப்பமே...

இதை நிவர்த்p செய்ய வேண்டுமாயின் வானலையில் நேரடி விவாதம் நடத்துங்கள்

அப்போ ஒரு விடிவு பிறக்கும் என்பதே '' எங்களுடய கருத்தாக இருக்கிறது''

நன்றி

அன்புடன்

- வன்னி மைந்தன்

பிற்குறிப்பு...

மேற் கூறப்பட்ட மடலில் சில

இடங்களில் எழுத்து பிழை வந்துள்ளது அதை

திருத்தி படிக்கவும்...

உதரணம்...உன்று- ஒன்று

நன்றி

வன்னி மந்தன்

நான் மீண்டும் சொல்கிறேன்!

பன்றியும் புூமியும் கலவி செய்து பிள்ளை பெற்றதையும்

ஒரு குரங்கு 32 கடல்மைல்களை தாவிக் கடந்ததையும்

ஒரு மனிதன் 10 தலையோடு இருந்ததையும்

புத்தர் வானத்தால் வந்து 3 மன்னர்களின் பிரச்சனையை தீர்த்தையும்.............

இப்படி பலதையும் கேள்வி கேட்காமல் நம்ப முடிகின்ற உங்களால் நடந்திருக்கக்கூடிய ஒரு வரலாற்றை சொல்கின்ற பொழுது நம்பக் கடினமாக இருக்கிறது.

முதலில் நான் மேலே குறிப்பிட்ட (பன்றி, புூமி, குரங்கு....) போன்ற விடயங்கள் நடந்திருக்க முடியாது என்பதை நீங்கள் உங்கள் பகுத்தறிவைக் கொண்டு உணர வேண்டும்.

அதன் பிறகே மற்றவற்றை பற்றி பேச முடியும்.

மகாவம்சம், மகாபாரதம், இராமாயணம், புராணக் கதைகள் போன்றவைகள் கற்பனைக் கதைகள். அதே வேளை மனித இயல்பின் அடிப்படையில் நடந்த சம்பவங்களே மிகைப் படுத்தப்பட்டு கதைகளாக வடிக்கப்படுகின்றன.

ஆகவே இந்தக் கதைகள் எந்தக் காலத்தில் எழுதப்பட்டன? அப்பொழுது நடந்த சம்பவங்கள் என்ன? அந்தக் கதைகளில் வரும் பாத்திரங்கள் யாரைக் குறிக்கின்றன? என்ற கேள்விகள் ஆராய்வுக்கு உட்படுத்தப்படுகின்ற பொழுது நாம் சொல்பவையே பதிலாக வருகின்றன. சில வேளைகளில் ஒரு சில வேறுபாடுகள் இருக்கலாம். மறுப்பதற்கில்லை.

ஆனால் என்னால் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது ஒரு விடயம்தான்.

இத்தனை காலமாக பார்ப்பனர்கள் "பன்றி, புூமி" என்று ஆபாசக் கதைகளை திணித்து உங்களை தீபாவளி கொண்டாடச் சொன்ன பொழுது, பேசாமல் தலையாட்டிக் கொண்டு கொண்டாடிய நீங்கள், எங்களை மட்டும் இத்தனை கேள்வி கேட்கிறீர்களே???!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீபவளி.... என்பது தங்களை 'வேதமாந்தர்' என்று தங்களை அழைத்துக்கொள்ளும் 'நிலத்தேவர்களினால்' உருவாக்கப் பட்டு தினிக்கப்பட அவர்களுக்கென்றே கொண்டாடப்படும் பன்டிகையே.

எனது பக்கத்து வீட்டிலிருக்கும் ஒரு வட நாட்டுக்காரனிடம் ஏன் நீங்கள் தீபாவளி கொண்டாடுகிறீர்கள் என்று கேட்ட போது. அவர் சொன்னார்: 'இது இராமர் இராவணன் என்னும் தென்னாட்டு அர்க்கனை கொண்ட நாள்" என்வே தான் கொண்டாடுகிறோம் என்றுச் சொன்னான்.

எனக்கு ரத்தமே கொதிக்கத் துடங்கி விட்டது... ஒரே குத்துல அவனுடைய மூக்கை உடைக்கனும் போல இருந்தது...

அவர், திரும்பி என்னிடம் "உங்கள் தீபவளி எப்படி" என்று கேட்டார். நான் எந்த பன்டிகையையும் கொன்டாடுவதில்லை... நீங்கள் இப்பொழுது கொண்டாட்டத்திலே இருக்கிறீர்கள். நாலைக்கு வந்து உங்களிடம் பதில் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு உடனே அங்கிருந்து நகர்ந்துவிட்டேன்.

எதற்கும் தேடிப் பார்ப்போம் என்று wikipedia க்கு போன போது அங்கு இப்படியாக குறிக்கப்பட்டிருந்தது:

"The festival of Diwali or Deepawali (literal meaning: lines of lamps) is rooted in the mythological epic Ramayana, and is a celebration of the return of Lord Ram after killing Ravan the Demon.... "

தமிழனே இதை நீ கொண்டாடத்தான் வேண்டுமா?

ஏன்?

எதற்கு?

எப்படி?

என்று பகுத்தறிவுமிக்க மனிதன் கேட்க வேண்டிய கேள்விகளை கேட்டாயா?

மகாவம்சம்இ மகாபாரதம்இ இராமாயணம்இ புராணக் கதைகள் போன்றவைகள் கற்பனைக் கதைகள். அதே வேளை மனித இயல்பின் அடிப்படையில் நடந்த சம்பவங்களே மிகைப் படுத்தப்பட்டு கதைகளாக வடிக்கப்படுகின்றன.

சரி..மகாவம்சத்தை கட்டு கதை என்கிறீர்கள் அனால் அதில் தான்

எள்ளாள தமிழ் மன்ன் கதை வரகிறதே

அவன் வயாதான காரணத்தால் தான் நாம் இன்று

அடிமையாகி வாழ்கிறோம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்களே

அப்போ அதையும் நீங்கள் கட்டு கதை என்ற சொல்ல வருகிறீர்கள்....???

மகாவம்சத்தின் பிறப்பான தீபவம்ச கதையை ஏற்கிறார்களே

அதில் எம்மை பற்றி குறிப்பிடுகையில்.

அவ்வாறானல் தாங்கள் எப்படி

அவை முழுவதையும் கட்டு கதை என கூறுவீர்கள்...????

தற்பொழுதும் சாதரண மக்களால் எள்ளாளன் எம் தமிழன் எனதானே

கூறப்படுகிறது அதை அந்த மகாவம்சம்தானே கூறுகிறது....

அப்போ எப்படி அதை முற்று மழுதாய் தாங்கள்

கட்டு கதை என கூற முனைவீர்கள்....???

சரி..புத்தர் வந்து புத்தமத்தை தோற்றம் பெற மனையும் போது

காற்றையும். இருளையும். காட்டி பயமுறுத்தியே

தமிழரை இணைத்ததாய் அதிலேயே குறிப்பிடப்பட்டதாய் பலர் கூறுகிறார்களே

அது பற்றி தாங்கள் என்ன சொல்ல முனைகிறீர்கள்....???

இந்த தீபாவளி எபண்டிகை எம்மீது

திணிக்கப்பட்டதாயின் ஏன் இன்றுவரை எம்தமிழர்

அதை எதிர்து கைவிடவில்லை.....???

எனவே தாங்கள் இது தான் என அடித்து கூறும்போது

எந்த காலம் தொட்டு இதை ஆய்வு செய்தீர்கள்...???

இதை இதுதான் என தாங்கள் இடித்து கூறுவதாயின்

அதற்கு நீண்ட கால பழமைவாத சரித்திரங்களை தாங்கள் மழுமையாக

அறிந்தே இதை செய்திருக்க வேண்டும்.

அவ்வாறாயின் ஏன் இதங்கு யார் யாரால் எந்த காலம் தொட்டு

எந்த காலம் வரையிலான என்ற வரலாற்று தரவுகளை தங்களால்

சிறப்பாக தர முடியவில்லை....???

நான் ஒரு சாதரன மனிதனாகவே இருந்து

தங்களிடம் கேட்கிறேன்....

தங்களை நகைப்புடைக்கும் நோக்கம் எனக்கல்ல...

எனவே தங்களுடய கருத்தை நாம் ஏற்ற இது தான்

சரிஎன வாழ வேண்டு மாயின் மேற் குறிப்பிடப்பட்ட

அத்தனைக்கும் விளக்கம் தர வேண்டும்....

வரலாறுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலத்திற்கேற்ப மாறுபட்டு

புசி மெழுகப்பட்டே இது தான் உண்மை என மக்கள் முன்னால்

வைக்கப் பட்டுள்ளது....

இதை எழுதில் புரிதல் கடினமே...

எனவே தாங்கள் விளக்கி விளங்க உரைத்தால் நானும்

தங்களால் பயன் அடைவேன் அவ்வளவுதான்...

ஏன் எனில் இந்த வரலாறுகளை படித்து நானே குழம்பி

போய் உள்ளேன்....

நன்றி

- வன்னி மைந்தன் -

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் இலக்கியன்.

மகாவம்சம் என்பது இலங்கைத்தீவின் வரலாற்றை திரிவுபடுத்தி எழுதப்பட்ட ஒரு நு}ல். விஜயனின் தந்தை சிங்க முகத்தை கொண்டவன் என்று மகாவம்சம் சொல்கிறது. இப்படி பல கற்பனைகளை வரலாற்றுக்குள் இணைத்த ஒரு மோசடித்தனமான நு}ல். எல்லாளன் பற்றி சொன்னீர்கள். எல்லாளன் தமிழ்நாட்டில் இருந்து படை எடுத்து வந்த மன்னன் என்று மகாவம்சம் சொல்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் எல்லாளன் என்ற ஒருவனையே தெரியாது என்கிறார்கள். இன்று சில தமிழீழ வரலாற்று ஆய்வாளர்கள் எல்லாளன் என்பவன் புூனகரியில் இருந்து அனுராதபுரத்தின் மீது படை எடுத்திருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

நீங்கள் மகாவம்சத்தை நம்புபவர் என்றால், இந்தக் கவிதை எழுதுகின்ற வேலையை விட்டுவிடுங்கள். தமிழீழம் பற்றி பேசுவதை விட்டு விடுங்கள். மகாவம்சத்தின் படி இலங்கை பௌத்த சிங்களவர்களுக்கு உரியது. நீங்கள் பேசாமல் இந்தியாவுக்கு ஓடிவிடுங்கள்!

மகாவம்சத்தில் வருகின்ற பெரும்பாலான பெயர்கள், இடங்கள், ஆண்டுகள் அனைத்தும் உண்மையாக இருக்கட்டும். ஆனால் அது சிங்களவர்களுக்கு சார்பாக திரிவுபடுத்தப்பட்டுள்ளது.

சிங்களவர்கள் இலங்கைக்கு முதலில் வந்தார்கள் என்று மகாவம்சம் சொல்லுகிறது.

ஆனால் தமிழர்களில் இருந்து பிரிந்த இனம்தான் சிங்களவர்கள் என்று சொல்லப்படுகின்ற ஒரு நம்பத்தகுந்து ஆய்வு பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

மகாவம்சம் பற்றி பல தகவல்கள் சில வாரங்களிற்கு முன்னர் நடந்த தமிழ்த் தேசிய தொலைக்காட்சியின் "நிலவரம்" நிகழ்ச்சியில் கலந்துரையாடப்பட்டது.

http://www.eelamist.com/podcast/index.php?d1=NTT&p=28

நான் மகாவம்சத்தை நம்பவில்லை

ஆனால் அதன் பிறப்புக்கு காரணமாய் இருந்த

தீபவம்சத்தில் எங்கள் தமிழ் மன்னர்கள் பற்றியும்

அவர்களின் சிறப்பு பற்றியும் கூறப்பட்டுள்ளது. .

எனவே தான் ஆய்வாளர்கள் ஆராயச்சி யாளர்களால்

அது ஏற்று கொள்ளப் பட்டுள்ளது. .

விஜயனுடய வருகைக்கு முன்னரே தமிழர் இலங்கையை

ஆண்டார்கள் என்று பிறிதொரு தாரர் கூறுகிறார்கள்

அந்த அடிப்படையிலேயே அவ்வாறு

குறிப்பிட்டேன் .

மாறாக நான் கூட சிங்க முகத்தை கொண்டவர்களின்பிறப்பு

அதன் நம்பதாக கதைகளை நான் நம்பவில்லை

மாறாக அதில் எம் தமிழ் மன்னர்களின் ஆளுமையை

ஏற்று கொள்கிறேன் அவ்வளவு தான்.

அதற்காக மகாவம்சம் என்ற தொகுதியை நான்

நம்பவில்லை.

அது நிற்க.

தற்காலத்தில் எம் தமிழர் மீது

நடாத்தப் படுகின்ற சிங்கள வெறியாட்டம்

அதனால் அவல நிலைக்கு உள்ளான மக்களின்

குமுறல்களை இயன்றவரை என்னறிவுக்கு

எட்டியவரை நான் சில கவிதைகளை வரைகிறேன்

அதை யாரும் நிறுத்தும்படி கேட்பது உகந்ததல்ல.

; என் தலைவன் மீதும் அதன் படைகள் மீதும்

கொண்டிருக்கும் என்; நம்பிக்கை பற்றை யாராலும் சிதைக்க முடியாது

ஏனெனில் அது ஒரு தனித்துவம் கொண்டது.

அதற்கும் இந்த புராண கதைக்கும் முடிச்சு போடுதல் என்பது

ஏற்கலாகா ஒன்று . எனவே இது தொடர்பாக நாம் இன்னும்

அலசி ஆராய வேண்டும் அது தான் சிறந்தது .

எனவே என் மீது தாங்கள் சீற்றம்; கொள்ள வேண்டாம்

தங்களுடன் இங்கு முட்டி மோதுவதால் தான் பல விடயங்கள்

தெளிவாகிறது வெளிப்படையாய் விளங்கி கொள்ள முடிகிறது .

எனவே தங்களை இழிவு படுத்தும் நோக்கோடு

நான் இங்கு வரவில்லை .

அதை புரிந்து கொள்ளுங்கள்.

நன்றி

- வன்னி மைந்தன் -

யோ ஆதிவாசி இராமர் கதையை ஏற்றுக் கொண்டா பிறகு தொங்குமான் இறச்சி சாமிக்குற்றம் ஆகிவிடுமோய் அது தான் பந்தி பந்தியா விளக்கம். குளம்பாதையும்

  • தொடங்கியவர்

கருத்துக்கள் தந்த அனைவருக்கும் நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.