Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் முன்னால் உறுப்பினர் கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் கொலை சந்தேக நபர்களின் தடுப்பு நீடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிராம அலுவலகர் உள்ளிட்ட 07 பேரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார்:-

Nakules_CI.jpg

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னால் உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கிராம அலுவலகர் உள்ளிட்ட 07 பேரை தொடர்ந்தும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி.

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமத்தில் உள்ள ஈசன் குடியிறுப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னால் உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் கொலை தொடர்பான வழக்கு விசாரனை இன்று புதன் கிழமை (10.12.14) மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற்றது.
 
இதன் போது கைது செய்யப்பட்ட வெள்ளாங்குளம் கிராம சேவகர் உற்பட 07 சந்தேக நபர்களையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மன்றில் ஆஜர் படுத்தினர்.
 
குறித்த 07 சந்தேக நபர்களையும் தொடர்ந்து 90 நாட்களுக்கு தடுத்து வைத்து  விசாரனைக்கு உற்படுத்த வேண்டும் என மன்றில் பயங்கர வாத தடுப்பு பிரிவினர் அனுமதி கோரினர்.
 
அதற்கமைவாக குறித்த 07 சந்தேக நபர்களையும் 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரனைகளை மேற்கொள்ள மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் அனுமதி வழங்கினார்.
 
குறித்த காலம் முடிந்தவுடன் மன்னார் நீதிமன்றத்தில் குறித்த 07 சந்தேக நபர்களையும் ஆஜர் படுத்துமாறு மன்னார் நீதவான் பயங்கர வாத தடுப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டார்.
 
இதே வேளை கிருஸ்ணசாமி நகுலேஸ்வரனின் மரணம் தொடர்பான மரண விசாரனை இன்று புதன் கிழமை மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற்றது. இதன் போது அவரது மனைவி மன்றில் சாட்சியமளித்தார்.
 
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமத்தில் உள்ள ஈசன் குடியிறுப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த தமிழீழ காவல் துறையின் முன்னால் உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது-40) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தை கடந்த மாதம் 12 ஆம் திகதி புதன் கிழமை  இரவு 8.30 மணியளவில் அவருடைய வீட்டில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். 
 
இவரது கொலை தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரனைகளின் போது வெள்ளாங்குளம் கிராமத்திற்கு பொறுப்பான கிராம அலுவலகர் உற்பட அக்கிராமத்தைச் சேர்ந்த 7 பேரை கட்டம் கட்டமாக பொலிஸார் கைது செய்தனர். இதன் போது கொலைக்கு பயண்படுத்தப்பட்ட துப்பாக்கியினையும் பொலிஸார் கைப்பற்றிய நிலையில் குறித்த 07 சந்தேக நபர்களையும் பொலிஸார் மேலதிக விசாரனைக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.