Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கெஹெலிய ரம்புக்வெலவுக்கு அழைப்பாணை விடுத்தது யாழ்.நீதிமன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லலித் மற்றும் குகன் காணாமல் போனமை தொடர்பான வழக்கில் மன்றில் ஆஜராகுமாறு ஊடகத்துறை அமைச்சரும் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெலவுக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. 

 
லலித் மற்றும் குகன் யாழ்ப்பாணத்தில் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் திகதி காணாமல் போயிருந்தனர். இவர்கள் தொடர்பிலான வழக்கு இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் நீதவான் எஸ். சிவகுமார் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கினை விசாரணை செய்த நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
 
மேலும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துநெத்தியையும் மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
குறித்த வழக்கில் எதிர்மனுதாரராக சட்டமா அதிபர் திணைக்களமும் உள்ளது. எனினும் கடந்த 3 வழக்கு தவணைகளுக்கு அவர்கள் சார்பிலான சட்டத்தரணிகள் எவரும் மன்றில் ஆஜராகவில்லை.
 
எனவே எதிர்வரும் வழக்கு விசாரணைகளில் சட்டத்தரணிகள் ஆஜராக வேண்டும் என்றும் அவ்வாறு ஆஜராகாத பட்சத்திலும் தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெறும் என்றும் நீதவான் மன்றில் தெரிவித்தார். 
 
குறித்த வழக்கு மீண்டும் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
லலித் மற்றும் குகன்  சார்பில் மணிவண்ணன், நுவான் போபகே ஆகியோர் சட்டத்தரணிகளாக மன்றில் ஆஜராகியிருந்தனர்.
 
இதேவேளை, லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் போனதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி குறித்த இருவரும் எங்கே என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.
 
அவர்கள் உயிருடன் தான் உள்ளர் என அமைச்சர் பதிலளித்தார். குறித்த பதிலளிப்பு தென்னிலங்கையில் உள்ள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
 
அதனை ஆதாரமாக கொண்டு குறித்த வழக்கு தொடர்கின்றது. இதற்கு முன்னர் குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்திப் பொறுப்பாளர் மன்றிற்கு அழைக்கப்பட்டிருந்தார். 
 
கேள்வியை தொடுத்த சுனில் ஹந்துநெத்தி , பதிலளித்த கெஹலிக ஆகியோரும் எதிர்வரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். 
 
சட்டத்தரணிகள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், 
 
தென்னிலங்கையிலும், வடக்கிலும் கடந்த காலங்களில் பலர் காணாமல் போயுள்ளனர். அவர்களுக்கு என்ன ஆகியது என்று இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.
 
எனவே அவ்வாறான சம்பவங்களுக்கு ஒரு நல்ல தீர்வினைக் கொண்டுவருவதற்கே லலித் மற்றும் குகன் தொடர்பான வழக்கை இவ்வளவு தூரம் கொண்டுவந்தோம்.
 
நீதிமன்றினால் அழைக்கப்பட்டவர்கள் எதிர்வரும் வழக்கு தவணைக்கும் ஆஜராக தவறின் பிடியாணை பிறப்பிக்குமாறு மன்றில் கோரவுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=206583717910342670#sthash.oM5a9RDo.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.