Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஸ்யாவையும் சீனாவையும் யார் அங்கீகரித்தது?

Featured Replies

அங்கீகாரத்துக்காக மண்டியிட வேண்டியது இல்லை: கருணாரட்ணம் அடிகளார்கருணாரட்ணம் அடிகளார்

[செவ்வாய்க்கிழமை, 24 ஒக்ரொபர் 2006, 18:48 ஈழம்] [ம.சேரமான்]

புரட்சிகள் நடைபெற்ற ரஸ்யா, சீனாவை எந்த சர்வதேச சமூகம் அங்கீகரித்தது? அங்கீகாரத்துக்காக நாம் மண்டியிடத் தேவையில்லை என்று வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் (நிசோர்) பொறுப்பாளர் கருணாரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22.10.06) ஒளிபரப்பான "நிலவரம்" நிகழ்வில் கருணாரட்ணம் அடிகளார் தெரிவித்ததாவது:

இன்றைய சர்வதேச சமூகம் உண்மையாகவே தமிழ் மக்களுக்கான தீர்வை வைத்திருக்கிறார்களா? அதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டனவா? எனில் எதுவுமே நடைபெற்றதாக இல்லை.

நான்கரை ஆண்டுகாலமாக தமிழ் மக்களின் கருத்துக்களை பிரதிபலித்து கோரிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைக்கின்ற போது அதை நடைமுறைப்படுத்த சர்வதேச சமூகம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடனான ஜெனீவாப் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட விடயங்களைக் கூட நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் இந்தப் பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் போகத்தான் வேண்டுமா? மேலும், மேலும் உயிரிழப்புக்கள் மற்றும் உரிமை இழப்புக்கள்தான் ஏற்படுமா என்று தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தமிழ் மக்கள் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் இன்றைக்கான புதிய விடயம் அல்ல. 1958 முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. எண்ணிக்கைதான் அதிகரித்திருக்கிறது. தமிழ் மக்கள் கொல்லப்படும்போதோ, தமிழர் தாயகப் பகுதிகள் பறிக்கப்படும்போதோ அல்லது தமிழர்கள் துரத்தப்படும்போதோ இடம்பெயருகிற போதோ இந்த சர்வதேச சமூகம் கண்டு கொள்வதில்லை. ஆனால் சிறிலங்கா இராணுவத்துக்கு பலத்த இழப்பு- சிறிலங்கா அரசாங்கத்தின் பொருளாதாரத்துக்கு முடக்கம் ஏற்படுகின்ற நிலையில் சர்வதேச சமூகம் மல்லுக்கட்டிக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று அழைக்கிறார்கள்.

சந்திரிகா பதவியில் அமரும்போது சிறிலங்கா ஒரு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்தது. அப்போது சந்திரிகா ஒரு தீர்வுத் திட்டப் பொதியை சுமந்து கொண்டு சமாதானத்துக்கான யுத்தமாக மாற்றி சிறிலங்காவின் பொருளாதாரத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

அக்கினிச்சுவாலையில் பட்ட மூக்குடைவு, கட்டுநாயக்க அழிவும் ஏற்பட்ட நிலையில் பலாலியும் அழிந்துவிடுமோ என்ற நிலையில்தான் ரணிலும் பேச்சுக்கு வந்தார்.

அதாவது ஏ-9 பாதையை கைப்பற்றி ஆனையிறவைத் திறந்துவிட்ட புலிகள் பலாலி நோக்கி முன்னேறிவிடுவார்கள் என்று கருதிதான் அமைதிப் பேச்சுக்கு ரணில் முன்வந்தார்.

சிறிலங்கா என்கிற நாட்டைத் தக்க வைத்துக் கொள்ளத்தான் சர்வதேச சமூகம் பேச்சுவார்த்தைக்கு இழுக்கின்றனரே தவிர தமிழினத்தின் அபிலாசைகளுக்காக அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.

வடக்கு-கிழக்கில் ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்தோர் மற்றும் நூற்றுக்கு மேலான அரச சார்பற்ற நிறுவனங்கள், கண்காணிப்புக் குழுவினர் என உள்ளனர். அவர்களுக்கு தமிழ் மக்கள் கொல்லப்படுகிறமை தொடர்பிலான நிலைமை தெரியும்.

ஆழிப்பேரலை கட்டமைப்பு அவசரகால வேலைத் திட்டம் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால் அதனை நடைமுறைப்படுத்தாத நிலையில் சர்வதேச சமூகம் எதனையும் செய்யவில்லை.

18 ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்ட வடக்கு-கிழக்கு இணைப்பு என்கிற ஏற்பாட்டைக்கூட சிறிலங்காவின் அதிஉயர் நீதிமன்றம் தகர்த்தெறிந்து விட்டது. இதனை அரசும் எதிர்க்கட்சியும் சர்வதேச சமூகமும் இந்தியாவும்கூட பார்த்துக் கொண்டிருக்கிறது.

தமிழர்களுக்குரிய நியாயப்பூர்வமான- கௌரவமான சமத்துவமான தன்மானமான தீர்வுக்காக பேச்சுக்கு வராமல் சிறிலங்காவைக் காப்பாற்றுவதற்காகவே பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன. ஏதோ ஒரு தீர்வுக்கான வலைப்பின்னலைத் திணிக்கவே இந்தப் பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன.

சர்வதேச சமூகத்தை நம்பி தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடங்கப்படவில்லை. தமிழ் மக்கள் ஒருபோதும் சர்வதேச சமூகத்திடம் பொருளாதாரம் மற்றும் ஆயுத உதவி கேட்டு போராட்டத்தைத் தொடங்கவில்லை. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநியாத்தையும் நட்டங்களையும் மனதில் வைத்து ஓர்மத்தோடும் வைராக்கியத்தோடும் "எங்கள் உரிமைகளை நாங்களே வென்றெடுப்போம்" என்றுதான் இப்போராட்டம் தொடங்கப்பட்டது. இடையில்தான் சர்வதேச சமூகம் உள்நுழைந்தது. தமிழ் மக்கள் இதனைப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

உலகம் பேசச் சொல்கிறது. பேசுமாறு புலிகளைப் பணித்திருக்கிறார்கள். போய் பேசிப் பாருங்கள். புலிகள் ஒன்றும் தாங்களாகப் பேச்சுக்குச் சென்றதாகக் கூறமாட்டேன். பேச்சுவார்த்தை என்பது இப்போது நடப்பது ஒன்றும் அல்ல. இராமநாதன் காலத்திலிருந்துதான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். எப்போதும் மூக்குடைபட்டுக் கொண்டிருக்கிறோம். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்பது சாத்தியமானது அல்ல என்பது ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் தெரியும்.

தமிழ் மக்கள் தங்கள் சுயபொருளாதாரத்தில் தங்கள் சுய உருவாக்கத்தில் பயிற்சிபெற்று வெற்றி பெறுகிறார்களே தவிர தமிழ் மக்கள் தங்களது போராட்டத்தில் பின்னடைவைக் காணவில்லை.

சர்வதேச சமூக நீரோட்டத்துடன் நீந்திச் செல்ல வேண்டிய காரணத்தால் நீந்திப் பார்க்கிறோம்.

ரஸ்யாவில் கம்யூனிச புரட்சி ஏற்பட்டு ஆட்சியைக் கைப்பற்றியபோது எந்த நாடய்யா அங்கீகாரம் செய்தது?

சீனத்திலே மா சேதுங் தலைமையில் நாடு உருவாக்கப்பட்ட போது எந்த நாடு அவர்களை அங்கீகரித்தது?

அமெரிக்காவின் தலைவாசலில் அமர்ந்து கொண்டிருக்கும் கியூபா அஞ்சாமல் இருக்கிறதே...

தமிழர்கள் தங்களது நாட்டையும் படைப்பலத்தையும் பொருளாதாரத்தையும் உருவாக்கிக் கொண்டுள்ளபோது எந்த ஒரு அங்கீகாரத்தையும் எதிர்பார்க்கத் தேவையில்லை. அதற்கான நேரம் தானாக வரும்.

இந்த அங்கீகாரத்துக்காக மண்டியிட வேண்டிய தேவையும் இல்லை.

சிறிலங்காவின் வரவு-செலவுத் திட்ட அறிக்கையைப் பார்த்தால் பாதுகாப்புக்காக கோடிக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கியிருக்கிறார்கள்.

தமிழர்கள் எந்த நாட்டிடம் கடன்பட்டுள்ளார்கள்? எந்த நாடு எங்களுக்கு ஆயுதம் வழங்கியது? எந்த நாடு எங்களுக்கு இந்தா பிடி என்று நிதி உதவி வழங்கியிருக்கிறது? எந்த நாடும் எதுவும் செய்யவில்லை.

சர்வதேச சமூகத்தளத்தில் நாம் நிற்க வேண்டுமெனில் நமக்கான அரசியல்- இராணுவ மற்றும் பொருளாதார பலத்தை நாட்டுக்குரிய தாய் நிலப்பரப்பை கட்டிக்காக்க வேண்டும்.

1958 கலவரத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கும் திறந்த பொருளாதாரக் கொள்கையின் கீழ் 1970-களில் ஜெயவர்த்தானா மேற்கொண்ட நடவடிக்கையால் இலங்கை முழுமைக்கும் தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கும் எதுவித நடவடிக்கையையும் சிறிலங்கா மேற்கொள்ளவில்லை.

சிறிலங்காவில் தமிழர்களைக் கொல்லுவது சொத்துகளை அழிப்பது மற்றும் இடம்பறிப்பது போன்றவைகள் மீது எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

தமிழர்களைச் சுட்டுக்கொன்ற காவல்துறையினருக்கு பண்டாரநாயக்க விருது வழங்கினார்.

ராஜீவ் காந்தியை அடித்த சிப்பாய்க்கு தேசமானியப் பட்டம் வழங்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான குழந்தைகளைப் படுகொலை செய்தோர் மீது எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. விடுதலை செய்திருக்கிறார்கள்.

இப்போது உதாரணமாக ஜிம் ப்ரௌன் அடிகளாரை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி. கடத்திக் கொண்டு வைத்திருக்கிறது. கொன்றுவிட்டது என்று சொல்லவில்லை. வத்திகான் உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமிருந்து ஒரு அழுத்தமும் இல்லை. அவர் ஒரு அப்பாவி குருவானவர். இளம் குரு. மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்ட அவர் கடத்திச் செல்லப்பட்டுள்ள நிலையில் இதற்குக் கூட சர்வதேச சமூகம் எதனையும் செய்யவில்லையே.

சர்வதேச சமூகம்- சிறிலங்கா அரசாங்கம்- சிறிலங்காவின் நீதி நிர்வாகம்- சட்டவாக்கம் ஆகியவை எதனையுமே செய்யாது என்பது தமிழ் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

அவசரகாலச் சட்டத்தை பயங்கரவாத தடைச் சட்டத்தை இருபத்தைந்து ஆண்டு காலத்துக்கும் மேலாக வைத்துக் கொண்டு ஆட்சி புரியும் இந்த நாட்டில் எப்படி நட்ட ஈடும் நீதியும் கிடைக்கும்?

அவர்களிடமிருந்து நாம் நீதியை எதிர்பார்க்கவில்லை- எங்கள் நீதியை நாங்களே கையிலெடுக்கவே விரும்புகிறோம்.

பேச்சுவார்த்தை- பேச்சுவார்த்தை- பேச்சுவார்த்தை- பேச்சுவார்த்தை அழிந்தே போய்விட்டார்கள்.

அமெரிக்கா உள்ளிட்ட இணைத் தலைமை நாடுகள் இருதரப்பும் பேச வேண்டும் என்று சொல்லுகிறார்களேயொழிய அதற்குரிய தீர்வை சிறிலங்காவிடம் வலிந்து திணிக்கவில்லையே. தயாராகவும் இல்லை. எங்கள் தரப்பு நியாயத்தைச் சொல்ல வாய்ப்பும் இல்லை. ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருக்கிறது.

நாங்கள் சொன்னால் மட்டும் ஜெனீவாவுக்கு வா.. ஓஸ்லோவுக்கு வா என்கிறது சர்வதேச சமூகம். மற்றபடி நீங்கள் வன்னிக்குள்ளேயே வாழுங்கள் என்கிறது கட்டுப்பாடு வைத்துக் கொண்டிருக்கிறது சர்வதேச சமூகம்.

500 ஆண்டுகால அடிமை வாழ்க்கையில் 50 ஆண்டுகால கொடூரமான அடிமை வாழ்க்கையில் தமிழ் மக்கள் தங்களது போராட்டத்தினூடே சிறிலங்காவை மண்டியிட வைத்துள்ளனர். சர்வதேச சமூகத்துக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.

இந்த விடுதலைப் போராட்டத்தை மென்மைப்படுத்துவது அல்லது ஒழித்துவிடுவது அல்லது இதன் போக்கை திசைதிருப்பி விடுவது அல்லது ஒற்றையட்சியின் கீழ் சிறுபான்மைத் தேசிய இன அடையாளம் இல்லாத நிலையில் ஏதோ பரங்கியர்கள் இங்கே வாழ்வது போல் வாழ்ந்துவிடுங்கள் என்பதுதான் சர்வதேச சமூகத்தினது நோக்கம் என்றார் கருணாரட்ணம் அடிகளார்.

நன்றி : புதினம்

www.pathivu.com

ஈழத்திலிருந்து

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.