Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுபல சேனா ஜனாதிபதிக்கு நிபந்தனை அற்ற பூரண ஆதரவு! அரசாங்கத்தை விட்டு விலகுவாரா பைசர் முஸ்தபா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"பொதுபல சேனா ஜனாதிபதிக்கு ஆதரவளித்தால் அரசாங்கத்தை விட்டு விலகுவேன்" டிசம்பர் 12ல் பைசர் முஸ்தபா விடுத்த சவால் இணைப்பு:-

Gota%20Pothu_CI.jpg


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்யவென எந்தவொரு நிபந்தனையும் இன்றி பூரண ஆதரவு அளிக்கப்படும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

27,000 இராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்து மீட்ட நாட்டை சீர்குலையச் செய்ய நூல்பாவை தலைவர் ஒருவருக்கு இடமளிக்கப்பட மாட்டாதென கொழும்பில் இன்று (24.12.14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

பொது வேட்பாளரின் கொள்கை ´கூட்டாக்கம்´ என்றும் அதில் உள்ள சூழ்ச்சியை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

´ஒன்றாக உண்டு குடித்து இருந்துவிட்டு பங்கு குறைந்ததால் இப்போது அவதூறு பேசுகிறார்´ என்று தேரர் தனது மொழியில் கூறினார்.

´ராஜபக்ஷகள் இறுதியில் விகாரை அமைத்து வணங்கப்பட வேண்டியவர்கள். ஊழல் மோசடி இருந்தால் முன்னரே சரிசெய்து கொள்ள இடமிருந்தது´ என தேரர் தெரிவித்துள்ளார்.

ரத்தன தேரர் பௌத்தர்களின் பிரச்சினை குறித்து பேசினால் நன்று எனவும் அப்படி செய்திருந்தால் இந்தளவிற்கு தீவிரமாகியிருக்கத் தேவையில்லை என ஞானசார தேரர் சுட்டிக்காட்டினார்.

பொதுபல சேனா ஜனாதிபதிக்கு ஆதரவளித்தால் அரசாங்கத்தை விட்டு விலகுவேன் பைசர் முஸ்தபா-
12 டிசம்பர் 2014
 

 

Gota%20Pothu_CI.jpg

பொதுபல சேனா ஜனாதிபதிக்கு ஆதரவளித்தால் தாம் அரசாங்கத்தை விட்டு விலகப் போவதாக பைசர் முஸ்தபா எச்சரிக்கை

பொதுபல சேனா இயக்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளித்தால், தாம் அரசாங்கத்தை விட்டு விலக நேரிடும் என முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுபல சேனா இயக்கம் ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்தால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனா இயக்கம் இதுவரையில் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பது குறித்து இதுவரையில் உத்தியோகபூர்வமாக எவ்வித அறிவிப்புக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114770/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.