Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருக்கும் நண்பர்களையும் இழக்க வேண்டாமே......

Featured Replies

அப்படிவாங்கோ வழிக்கு புலிகள் சமயம் சார்பானவர்கள் இல்லை பொங்கல் தமிழன் விழா தமிழன் விழா என்றால் கொண்டாடுவார்கள் ஆனால் தீபாவளி தமிழனின் வரலாற்றுக்கு எதிரான விழா ஜயா

இங்கு எவராவது பொங்கல் தமிழன் பண்டிகை இல்லை என்கிறீர்களா

  • Replies 157
  • Views 11.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் தீபாவளியைக் கொண்டாட வேண்டாம் என்றார்களா? இல்லைப் பொங்கலை கொண்டாடுங்கள் என்றார்களா?

நீங்களா ஏன் விடுதலைப் புலிகள் கொண்டாடுகிறார்கள் எனவே அவைதான் தமிழர்களின் கொண்டாட்டங்கள் என்ற போக்கில் எழுந்தமானமான பிரகடனங்களைச் செய்து மக்களையும் குழப்பி புலிகள் மீதான மக்களின் நம்பிக்கைகளுக்கும் தேசம் ஏற்படுத்துகின்றீர்கள். விடுதலைப் புலிகள் எந்தக் கொண்டாட்டங்களையும் கொண்டாட வேண்டாம் என்றோ இந்து, வைச சமயத்தைப் பின்பற்ற வேண்டாம் என்றோ அல்லது இந்து, சைவ சமயக் கோட்பாடுகள் அநாவசியங்கள் என்றோ மூட நம்பிக்கைகள் என்றோ கூறி மக்களின் வெறுப்புக்கு தங்களை இலக்காக்கிக் கொண்டிருக்கிறார்களா?

நீங்களா ஒரு சிலர் புகலிடத்தில் பதுங்கி இருந்து கொண்டு சுயவிளம்பரத்துக்குப் புலிகளின் பெயரையும் தமிழ் தேசியத்தையும் உச்சரித்துக் கொண்டு புலிகள் அப்படிச் சொன்னார்கள் இப்படிச் செய்தார்கள் என்று புலிகளின் நடவடிகைகளை பிரகடனங்களாக ஆக்கிக் கொண்டு உங்கள் உங்களுக்கு விளங்கியமட்டில் கட்டுரைகளையும் எடுதிக் கொண்டு மக்களைக் குழப்பும் நடவடிக்கையில் இறங்கியுள்ளீர்கள். இவை தவிர்க்கப்பட வேண்டும்.

விடுதலைப் புலிகளுக்குத் தெரியும் தாம் சார்ந்த போராடும் இனத்துக்கு எப்படி அறிவுறுத்துவதென்று. தமிழர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. பெரியார் போல பகுத்தறிவு பேசுறம் என்று ஒரு சில பெரிய மனிதர்கள் வந்துதான் மக்களை அறிவூட்ட வேண்டும் என்றில்லை. மக்களுக்கு ஆதாரங்களோடு அறிவு பூர்வமாக விடயங்களை நிரூபிக்கும் போது அவர்களே அதை ஏற்றுக் கொள்வார்கள். அது புலிகள் மீதானதோ அல்லது தமிழ் தேசியம் மீதான வெறுப்பாக மாறாது என்பது கருத்திக் கொள்ளப்படும்.

அதைவிடுத்துப் புலிகள் சொன்னார்கள் செய்தார்கள் என்று மக்களுக்குள் கருத்துக்களைத் திணிக்க நினைப்பதை பல இணையத்தள சுயாதீன எழுத்தாளர்களை கைவிட வேண்டும். விடுதலைப் புலிகளின் பெயரையும் தமிழ் தேசியத்தையும் உச்சரிக்கும் போது அவை இரண்டும் மக்கள் மத்தியில் விதைக்கப்படும் கருத்தால் சேதமாகமல் இருக்கவும் கவனிக்க வேண்டும். அநாவசியமாக புலிகளின் பெயரைப் பாவித்துப் போலித்தனமாக எழுதுக்களை படைப்புக்களை மக்கள் மத்தியில் விதைப்பவர்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவர்கள். :idea:

  • தொடங்கியவர்

யோ அதான் தலைப்ப மத்தி பூட்டியாச்சில்ல...

எவ்வளவு பண்பான வார்த்தைகள். நாங்கள் எங்கட தமிழ் பண்பாட்டைப் பற்றி எவ்வளவு பெருமை அடித்துக்கொண்டாலும் இங்கு சிலபேரின் கருத்துக்களில் அதை தேடியும் பிடிக்க ஏலாம் இருக்கு. இவர்கள் எல்லாம் கூடி கதைச்சுத்தான் எங்களுக்கான மக்கள் ஆதரவைத் தேடி தரப்போகினம்.

  • கருத்துக்கள உறவுகள்

வரவர தமிழ் கெட்டுப் போகுது சுண்டல்! இப்போது யாருக்குப் பனி?? :lol::lol:

சொறிப்பா டென்ஷன் ஆகிட்டன்.. :lol::( :cry:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஈழவன் யாரு இங்க ஆயரை பற்றி தர குறைவா பேசினது? மத தலைவர் என்ற முறையில் அவா மீது மதிப்பு இருந்தாலும் ஒரு தரப்புக்கு எதிரான செய்திகளை வெளியிடும் போது மான முள்ள தமிழன் என்ற முறையில் எதிர்க்க தான் செய்வோம் அது உங்கள ஆயராக இருந்தால் கூட உங்கள மத விசுவாசத்தை ஏன் இதில் காட்ட முட்படுகின்றீர்கள்?

சொறிப்பா டென்ஷன் ஆகிட்டன்.. :lol::lol: :cry:

இதுக்கேவா...??? இன்னும் எவ்வளவு இருக்கு... :wink: :D:D

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ வாசகா றொம்ப தான் பீல் பன்னிறிங்க... :cry: :cry: :cry:

சரி மதவுரிமை பற்றியும் ஆயர் கேள்விக்கு அப்பால் பட்டு இயங்குகிறார்..... என்பவர்கள் வரும் காலத்தில் இந்து மதத்தையும் கேவலப்படுத்தாக கருத்துக்களை கொன்டு வராமல் இருப்பார்கள் எண்றும்... பிழையே செய்யாத ஆயர் விடயத்தைபோல... இங்கு களத்தில் இருக்கும் உறுப்பினர்களின் பிழைகள் எண்று ஒப்பாரி வைக்கமாட்டர்கள் எண்றும் நம்புவோம்....!

ஓகோ அப்ப தீபாவளி பற்றி விமர்சித்து இந்து மதத்தை கேவலப்படுத்தியதால் தான் ஆயரின் கடிதத்திற்கு அரசியல் சாயம் பூசப்பட்டதோ? :? :roll:

ஜயா சுண்டல் நான் சைவன் சமயத்தால் என் மத விசுவாசத்தை நான் காட்டவில்லை நான் சவன் என்று சொல்வதிலும் தமிழன் என்று சொல்வதில் பெருமைபடுகிறேன் என் இனத்தின் வரலாற்றில் பெருமையடகிறேன் அன்றி நான் மதவாதியல்ல

  • தொடங்கியவர்

நிச்சயமாக கவலைப்படுகிறேன் சுண்டல். ஆதரவை பெருக்குவதற்கு பதிலாக இருப்பதையும் இழக்கும் முகமாகவே சில நண்பர்களின் வார்தை பிரயோகம் இருக்கிறது.

உதவி செய்யாட்டிக்கு கூட பறவாய்யில்லை உபத்திரம் கொடுக்காமலாவது இருக்கலாம் அல்லவா

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா சுண்டல் நான் சைவன் சமயத்தால் என் மத விசுவாசத்தை நான் காட்டவில்லை நான் சவன் என்று சொல்வதிலும் தமிழன் என்று சொல்வதில் பெருமைபடுகிறேன் என் இனத்தின் வரலாற்றில் பெருமையடகிறேன் அன்றி நான் மதவாதியல்ல

நீங்கள் சைவமா இல்லையா என்பது உங்கள் பிரச்சனை! ஆனால் ஆயரின் மடல் தொடர்பான விடயத்தில், மதம் எங்கே வந்தது? நீங்களாகவே மதவாதமாக ஏன் திருஸ்டிக்கின்றீர்கள்?

துயவன் நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டிருகிறீர்கள் சுண்டல் 2 ம் பக்கத்தில் மதவிசுவாசத்தை காட்டுகிறீர்கள் என்று கேட்டிருந்தார் அதுக்குதான் இவ்வாறு பதில் அனுப்பினேன் என்னை கிறீஸ்தவனாக நினைத்துவிட்டார் போல

மற்றவர் மனதைப் புண் படுத்தாமல் நாகரீகமாக இங்கே எதை வேண்டுமென்றாலும் கள விதிகளுக்கு அமைவாக விமர்சிக்கலாம்.தெரு ஓரத்தில் பாவிக்கும் சொற்களைத் தவிர்த்து எந்த கோட்பாட்டையோ சமயத்தையும் நேர்மையாக ஆதர பூர்வமாக தர்க்க ரீதியாக விமர்சிக்கலாம்.கருத்துச் சுதந்திரம் என்பது அது தான்.இங்கே சிலர் ஒரு முகமூடியில் கீழ்தரமாகவும் இன்னொரு முகமூடியில் உத்தமரைப்போலவும் வேசமிடுகின்றனர்.கருத்தை கருத்தால் வெல்ல முடியாமல்,, நேர்மையான ஆதாரங்களை முன் வைக்க முடியாமல், குதர்க்கமாக பொய்களையும் கருத்துத் திரிப்புக்களையும் அவிழ்துவிட்டுக் கொண்டிருகின்றனர்.

ஆரியர் பற்றி தேசியத் தலைவரின் நிலைப்பாடு என்ன வென்று வெகு தெளிவாகவே அவர் எழுதிய முன் உரையில் இருந்து தெளிவாகிறது.ஆனால் புலிகள் எந்த மததிற்கும் எதிரானவர்கள் கிடையாது.எந்த மதத்தையும் வழி பட ஒவ்வோரு மனிதனுக்கும் சுதந்திரம் இருகிறது.அது அவர் அவரின் தனி மனித சுதந்திரம்.ஆகவே இங்கே எவரும் தீபாவளியைக் கொண்டாடதீர்கள் அது தடை செய்யப் பட வேண்டும் என்று கோரவில்லை.தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது அதன் பின்னணி என்ன என்று விளங்கிக் கொள்ளுங்க்கள் என்றும் உங்கள் வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள் என்றுமே எழுதப்பட்டது.இவை பற்றி அறிந்தபின் ஒருவர் தீபாவளியைக் கொண்டாட விரும்புகிறாரா இல்லையா என்பது அவர் அவர் தனிப்பட்ட பிரச்சினை.இங்கே சிலர் கருதுக்களுக்குப் பதிற் கருத்து எழுத முடியாமல் கருதுத் திருப்புக்களை மேற் கொண்டு மத வெறியை தமக்குச் சாதகமாக இங்கே வளர்க்க விரும்புகின்றனர்.இவர்கள் வாதிடப்படும் விடயங்கள் பற்றிய அறிவு அற்றவர்களாகவும் மட்டுப்படுத்தப்பட்ட பின் புல அறிவை உடையவர்களாகவும் இருந்து கொண்டு பதில் அழிக்க முடியாத தருணங்களில் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றனர்.இவர்களின் நோக்கம் சிந்தனையைத் தூண்டும் ,விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய கருதுக்களை இங்கே எழுதப்படுவதைத் தடை செய்வதே அன்றி வேறு அல்ல.இது எந்தவிதமான ஆரோக்கியமான கருதாடலுக்கும் வழி வகுக்காது.

இவர்களின் நோக்கங்களை எல்லா கள உறவுகளும் இனங்காணுமாறு வேண்டுகிறேன்.மிகவும் குள்ளத் தனமாக வெவேறு முகமூடிகளுக்குள் இருந்து கொண்டு இங்கே நாடகமாடப்படுகிறது.

சமயம் பற்றி கடவுள் கொள்கை பற்றி அவர் அவர் தமது சுய சிந்தனையின் பாற்பட்டே முடிவுகளை மேற் கொள்ள வேண்டும்.இங்கே இவை பற்றி எழுதுபவர்கள் உங்களை சிந்திக்கத் தூண்டுகிறார்களே ஒழிய உங்கள் நம்பிக்கைகளை ஏளனம் செய்யவோ அன்றி பரிகசிக்கவோ அல்ல என்பதை உணருங்கள்.அதற்கு எதிராக இங்கே உங்கள் உணர்வுகளைத் துண்டி இந்த சிந்தனையை மழுங்கடிக்க சிலர் சூழ்ச்சிகரமாக வெவ்வேறு பெயர்களில் தலைப்புக்களைத் துவங்கி கருதாடல்களைக் குழப்ப எண்ணுகின்றனர்.

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான். முகமூடிக்குள் மாறியபோதும், எழுதும் வசனங்கள் அடையாளப்படுத்தி விடும்.

இருக்க,

இந்து மதத்தைப் பற்றி விமர்சனம் வைக்க எவ்வளவு தூரம் அனுமதியிருக்கோ, அவ்வாறே மற்றய மதங்கள் பற்றிய விமர்சனத்தையும் நிர்வாகம் அனுமதிக்கும் என்கின்றீர்களா?

அப்படியான கருத்துக்கள் விமர்சிக்கப்பட்டதோடு, தூக்கவும் பட்டதே?

நிச்ச்யமாக இருகிறது என்பதுவே எனது கருத்து. நானே முன்னர் ஒரு துள் இசைப்பாடலை இயேசு போன்ற ஒருவர் நடனமாடுவதைப் போல் இணைத்திருந்தேன், அது இங்கே தடை செய்யப் படவில்லை.அதே போல் கதவைத் தட்டி மதப் பிரச்சாரம் செய்பவர்கள் பற்றியும் இங்கு எழுதப்பட்டது.

இங்கே ஆயரின் அறிக்கை பிழையான வியாக்கியானம் கொடுத்துத் தலைப்பிடப் பட்டிருந்தது அதுவே திருத்தப்பட்டது.இதற்கு எந்த மதப் பின்னணியும் கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பில என்ன பிழை? அவர் அரசியல் வாதி மாதிரி தான் அண்மை hகலமாக செயல் படுகின்றார்...

  • கருத்துக்கள உறவுகள்

ஓகோ அப்ப தீபாவளி பற்றி விமர்சித்து இந்து மதத்தை கேவலப்படுத்தியதால் தான் ஆயரின் கடிதத்திற்கு அரசியல் சாயம் பூசப்பட்டதோ? :? :roll:

இந்த முடிச்சுப் போடல் வேலை எதற்காக என்று அறிந்து கொள்ளலாமா? மதச் சுதந்திரத்தைப் பற்றி வாசகன் எழுதியதற்கான பதிலாக மட்டும் தான், எழுதப்பட்டது.

தலைப்பில என்ன பிழை? அவர் அரசியல் வாதி மாதிரி தான் அண்மை hகலமாக செயல் படுகின்றார்...

எதை அரசியல் என்கிறீர்கள்? அவர் மக்களின் மனிதாபிமானப் பிரச்சினை பற்றி கவனம் எழுப்பி உள்ளார்.அவர் யாழ்ப்பாணத்தில் இருக்கும் கிரித்துவ மக்களின் பிரதி நிதி என்ற வகையில்.அவர் இதைத் தீருங்கள் என்று தானே கூறி உள்ளார்? எவ்வாறு என்று கூறினால் அது அரசியலாகக் கருதப்படலாம். இங்கே சிறிலங்கா அரசே இந்த மனிதாபிமானப் பிரச்சினையைத் தோற்று வித்து உள்ளது,ஜெனிவாப் பேச்சுவார்த்தைகளிலும் மக்களிற்கான உணவு வழங்கலும் ஏ 9 பாதை திறப்புமே முக்கியமான உடனடிப் பிரச்சினைகளாக எடுத்துக் கொள்ளப்பட இருகின்றன.

இந்த முடிச்சுப் போடல் வேலை எதற்காக என்று அறிந்து கொள்ளலாமா? மதச் சுதந்திரத்தைப் பற்றி வாசகன் எழுதியதற்கான பதிலாக மட்டும் தான், எழுதப்பட்டது.

யோ அதான் தலைப்ப மத்தி பூட்டியாச்சில்ல...அப்பறம் என்ன....

அப்பிடியே யாழ் ஆயர பற்றி விமாசித்தாளே பயந்து போய் அரக்க பறக்க தலைப்பை மாற்றி செய்திகளை பூட்டும் கள நிர்வாக் தீபாவளிய பற்றி கேலயாக பேநி இந்தக்கள் மனதை புண்படுத்தும் தலைப்புக்களுக்கு வலு சேர்க்கும் முகமாக பழைய செய்திகளை எல்லாம் எடுத்து கொடுத்து..அவர்களுக்கு ஒத்து ஊதுகின்ற செயலில் ஈடுபடுகின்றது வாழ்க உங்கள் பனி...

சரி மதவுரிமை பற்றியும் ஆயர் கேள்விக்கு அப்பால் பட்டு இயங்குகிறார்..... என்பவர்கள் வரும் காலத்தில் இந்து மதத்தையும் கேவலப்படுத்தாக கருத்துக்களை கொன்டு வராமல் இருப்பார்கள் எண்றும்... பிழையே செய்யாத ஆயர் விடயத்தைபோல... இங்கு களத்தில் இருக்கும் உறுப்பினர்களின் பிழைகள் எண்று ஒப்பாரி வைக்கமாட்டர்கள் எண்றும் நம்புவோம்....!
  • கருத்துக்கள உறவுகள்

இவற்றின் மூலம் இங்கிருக்கின்றது.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தி முதலில் டென்மார்க்கிலும் பின் வேறுபல நாடுகளிலும் புத்தகங்களிலும் பத்திரிகைகளிலும் கேலிசித்திரங்கள் வெளியிடப்பட்டன. அப்படியான கருத்து சுதந்திரத்தை அடிப்படை அளவிலேயே நான் வெறுக்கிறேன். ஜனநாயகத்தை பற்றி ஒரு வசனம் சொல்வார்கள் " உனது கைத்தடியை சுற்றுவது உனது உரிமை+ ஆனால் அது மற்றவரின் மூக்கை தொடாத மட்டிலும்தான்" என்று. இதையே கருத்து சுதந்திரத்துக்கு போட்டு பாருங்கள். எமக்கு சரியாக தெரியாத அல்லது விளங்காத விடயங்களுக்கு கூட நாங்கள் கற்பனை செய்து ஏதோ கருத்து எழுதி விடுகிறோம். அதனால் ஏற்படும் பாதிப்புகள்????

...........

இப்போ புதிசா இலங்கை மததலைவர்களை விமர்சிக்க தொடங்கி இருக்கிங்கள். எங்க கொண்டுபோய் முடிக்க போறிங்களோ???? ........

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலர் தாங்கள் சொல்லவரும் கருத்துக்கு முக்கியமளிக்காமல் கருத்துச் சொல்பவர்களை நளினம் செய்வதும் அவர்களின் பின் புலம் வெளிப்புலம் அறிந்த ஞானிகள் போலவும் கருத்து எழுதுவதைத் தவிர்த்து மக்களின் சிந்தனையைத் தூண்டுவதற்கு ஆரியமும் இந்துமதமும் விட்தலைப்புலிகளும் தமிழ் தேசியமும் பின்னிப் பிணைய வேன்டிய அவசியம் எழக்கூடாது. அவை தனித்தனியே ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை.

சிலர் முகமூடிகள் என்று உச்சரிக்கும் அவசியம் இங்கு தேவையில்லை. இங்கு பலரும் முகமூடிகள் தான். கருத்துக்கள் மட்டுமே நோக்கப்பட வேண்டும். சிலரின் நடவடிக்கைகள், எழுத்துக்களே கருத்துக் களத்துக்கு பாதகமான கருத்துக்கள் வர வைக்கிறது என்பதும் பல நட்புரீதியான விவாதங்களில் குரோதத்தைத் தூண்டி கருத்துக்களை மலினப்படுத்தும் கீழ்த்தரமான செயலகளுக்கும் யாழ் களத்தில் சிலர் இருப்பது வருத்தமளிக்கும் விடயம்.

எங்கிருந்தோ ஆக்கங்கள ஒட்டுவிட்டு ஏதோ தாங்கள் தங்கள் ஆற்றலால் ஆராய்ச்சி செய்து ஆக்கங்களை இடுவது போல மற்றவர்களின் திறமைகளைப் பற்றிப் பேச முன்னர் மக்களுக்கு சொல்லப்படும் விடயத்தின் ஆதாரத்தன்மை என்பது முக்கியமாக நோக்க வேண்டும்.

தர்க்கவியல் ரீதியாக தமிழர்களின் வரலாற்றை எழுதிவிட முடியாது. ஆய்வுகளும் சான்றுகளும் அறிவியலும் ஒருங்கிணைய வேண்டிய தருணத்தில் ஆரிய எதிர்ப்பு திராவிட இனவாதிகளால் எழுதப்படும் ஆக்கங்களை மட்டும் ஆரிய பார்ப்பர்ணிய எதிர்ப்புக்கு பாவிப்பதே இங்கும் நிகழ்கிறது. அதனாலே இவ்வெழுத்துக்க்ள் மக்களைச் சென்றடைய முடியாமல் பெறுமதியற்று உறங்கிவிடுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா நெடுங்காலபோவன்!

தமிழரின் வரலாற்றுக்கு சான்றுகள் கேட்கும் நீர், இந்துக் கல்லூரி பற்றி விமர்சிக்கும் போது ஏன் இப்படியான சிந்தனைகளோடு விவாதிக்கவில்லை.

நிகழ்காலத்தில் நடந்த சம்பவம் என்று நீர் குறிப்பிட்டு விவாதித்த விடயத்தில் ஆதாரம் காட்ட முடியாது தத்தளித்த நீர், இன்றைக்கு பல நூறு தலைமுறைகள் கடந்த சமுதாயத்தில் ஆதாரம் கேட்பது வாதத்தை மழுங்கடிக்ப்பதாக, அல்லது திசை திருப்புவதாகத் தான் கொள்ள முடியும்

முதலில் திராவிட இனவாதிகள் என்றால் யார் என்று விளங்க்கப் படுத்துவீரா?

தொல் பொருள் ஆராச்சி செய்வது எனது தொழில் இல்லை.அந்த அந்தத் துறைகளில் விற்பன்னரானவர்களையே அந்த அந்த துறை சார் கருதுக்களுக்கு மேற் கோள் காட்ட முடியும்.எனது துறை சார் கருதுக்களிலையே நான் எனது சொந்தக் கருத்தை ஆதாரமாக மேற்கோள் காட்ட முடியும். இங்கே அதைக் கூடச் செய்யாமல் வெறும் விதண்டாவாதமாக கருத்து எழுதும் உம்மை விட, எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் நான் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு இருக்கிறது.எங்கிருந்து பொருத்தமான மேற்கோள்களை இணைப்பது யார் அந்தத் துறை சார் விற்பன்னர் என்றாவது எனக்குத் தெரியும்.அதை விடுத்து கூகிளில் தட்டி வரும் குப்பைகள் எல்லாவற்றையும் மேற் கோள்காட்டி உம்ம நீரே பல முறை வெளிக்காடி உள்ளீர்.

மற்றவரை பரிகசிக்கும் நீர் எந்தத் துறையில் சொந்த ஆய்வை மேற் கொண்டுளீர் என்று அறியத் தரலாமே? சபேசன் கேட்ட கேள்விகள் எதற்கு நீர் பதில் சொல்லவில்லையே?

சும்மா கதை விடுவதை நிறுத்தி விட்டு ஆதாரபூர்வமாக முன் வைக்கப்பட்ட கருதுக்களுக்கு பதிலை முன் வைய்யும்.இங்கே ஆதாரங்களைக் கோரியவர் நீர் தான்.அதனால் தான் ஆதாரங்கள் இணைக்கப் பட்டன.எதோ ஆதாரபூர்வமாக அறிவியல் ரீதியாக மற்றவர்களைக் கருதாடச் சொல்லி விட்டு இங்கு நீர் செய்வது என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.