Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'''போரிட்டுக் கொண்டே விடுதலைப் புலிகளுடன் பேசுவோம்'''

Featured Replies

monk4.gif

'போரிட்டுக் கொண்டே விடுதலைப் புலிகளுடன் பேசுவோம்" என்பதே சிறிலங்கா அரசின் தற்போதைய நிலைப்பாடாகும். அதாவது அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் தொடர்ச்சியாகப் போரிடப் போகின்றது என்பதே இதன் அர்த்தமாகும். கடந்த 11 ஆம் திகதி முகமாலையில் இராணுவம் பேரிழப்பினைச் சந்தித்தது தொடர்பாக அபிப்பிராயம் வெளியிட்டிருந்த சிறிலங்கா சமாதானச் செயலகப் பணிப்பாளர் பாலித கோகன்ன 'விடுதலைப் புலிகளை மீண்டும் முகமாலையில் சந்திப்போம்" எனக்கூறியதில் இருந்து அரசாங்கத்தின் கொள்கை உறுதிப்படுத்தப்படுவதாகிறது.

முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 1995 இல் யுத்ததத்தை ஆரம்பித்த போது அதனைச் 'சமாதானத்திற்கான யுத்தம்" என அதற்குத்தத்துவ விளக்கம் அளிக்க முற்பட்டார். இதையொத்ததாகவே தற்பொழுது மகிந்த ராஜபக்ச 'போரிட்டுக் கொண்டே பேசுவோம்" என்ற தத்துவத்தை முன்நிறுத்தியுள்ளார்.

ஆனால் சந்திரிகாவின் சமாதானத்திற்கான யுத்தத்திற்கும் மகிந்தவின் போரிட்டுக் கொண்டே பேசுவோம் என்பதற்கும் இடையில் பெரியளவிலான வேறுபாடு ஒன்றுமில்லை. இருவருமே யுத்தத்தையே முன்நிறுத்தியுள்ளனர். ஆனால் சனாதிபதி சந்திரிகாவின் தத்துவத்தில் புலிகளைத் தோற்கடித்த பின்பே பேச்சுவார்த்தை என்பதாக இருந்தது.

இதேவேளை மகிந்த ராஜபக்சவின் தத்துவத்தின் படி போர் ஒருபுறமும் பேச்சுவார்த்தை மறுபுறமும் என்ற தோற்றப்பாடு வெளிப்படுவதாய் இருப்பினும் இதிலும் முதன்மையானது யுத்தமே. ஆனால் சந்திரிகாவின் சித்தாந்தத்தில் இருந்து வெளிப்படுவதானது புலிகளைத் தோற்கடித்த பின் பேச்சுவார்த்தை என்பது மகிந்தவின் சிந்தனையின் படி இராணுவ வெற்றிகளுடன் பேச்சுவார்த்தை என்பதாகவுள்ளது.

ஆனால் இவ்விரண்டிலும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் பலவீனமானவையாக வேயுள்ளன. விடுதலைப் புலிகளை இராணுவ hPதியில் தோற்கடிக்கும் வரையில் பேச்சுவார்த்தை இல்லை. அன்றிப் பேச்சுவார்த்தைகளைப் இழுத்துச் செல்லுதல் என்பது சிறிலங்கா ஆட்சியாளர்களின் நிலைப்பாடாகும்.

ஆனால் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் சித்தாந்தம் சிறிலங்கா இராணுவத்திற்குப் பேரழிவைத் தேடிக்கொடுத்ததோடு இராணுவ இயந்திரம் செயலிழக்குமொரு கட்டத்தையும் ஏற்படுத்தியது. தீச்சுவாலை இராணுவ நடவடிக்கையில் சந்தித்த பேரிழப்பும், கட்டுநாயக்க விமானத்தளம் மீதான தாக்குதலும், சந்திரிகாவின் எதிர்பார்ப்பிற்கு மாறாக அரசாங்கத்தையே யுத்த நிறுத்த உடன்பாட்டிற்கும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து வைப்பதற்கும் நிர்பந்தித்தது.

இவ்வரலாற்றை மகிந்த ராஜபக்ச விளங்கிக் கொள்ளவில்லையா? அன்றி விளங்கிக்கொண்டாலும் புறந்தள்ளியுள்ளாரா? விளங்கிக்கொண்டே இதனை அவர் மேற்கொள்வாரெனின் அவர் சமாதான முயற்சிகளிலிருந்து முற்றாக விலகிக்கொள்ள முற்படுபவராகவே இருக்க முடியும். ஆனால் போரிட்டுக் கொண்டே பேசுவோமென்பது தத்துவார்த்த hPதியில் கூட ஏற்புடையதாக இருக்க முடியாது.

மகிந்த ராஜபக்சவின் கணிப்பீட்டின் படி யுத்தம் ஒன்றை ஆரம்பிப்பதன் மூலம் புலிகள் இயக்கத்தை இராணுவ hPதியில் நெருக்குதலுக்கு உள்ளாக்க முடியும் அன்றித் தோற்கடிக்க முடியும் என்பதாக இருந்தது. சுருக்கமாகக் கூறுவதானால் இராணுவ வலுச் சமநிலையைப் புலிகளுக்குப் பாதகமாக்கி பேச்சுவார்த்தை மேசையில் புலிகள் மீது செல்வாக்கைச் செலுத்துதல் என்பதாகும்.

ஆனால் மகிந்த ராஜபக்சவின் எதிர்பார்ப்பை முகமாலையில் விடுதலைப் புலிகள் கொடுத்த பலத்த அடியும் ஹபறணை-தியம்பொத்தனவிலும், காலித்துறைமுகத்திலும் சிறிலங்காக் கடற்படை சந்தித்த பாரிய ஆளணி, தளவாட இழப்பும் தமது தத்துவம் சந்திக்கக்கூடிய பெரும் சவாலை அவருக்கு உணர்த்தியிருக்கும் என்றே கூறலாம்.

ஒக்ரோபர் மாதத்தின் நடுப்பகுதியில் சிறிலங்கா ஆயுதப்படை சந்தித்த மூன்று சம்பவங்கள் அதற்கும் சிறிலங்கா அரசிற்கும் பேரதிர்ச்சியாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் கொள்ள எதுவுமில்லை. சிறிலங்கா அரசாங்கத்தை இவை உறை நிலைக்குக் கொண்டுசென்றன என்றே கூறலாம்.

இதில் முதலாவது முகமாலையில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட பாரிய வலிந்த தாக்குதலில் அது சந்தித்த பாரிய இழப்பாகும். முகமாலையில் இராணுவம் சந்தித்த பேரிழப்பானது சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஒருபுறத்தில் பெரும் ஏமாற்றத்தையும், மற்றுமொரு புறத்தில் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருந்ததெனலாம்.

படை நடவடிக்கையை முன்நின்று நடத்திய படை அதிகாரிகள் இருவர் மீது விசாரணைக்கு உத்தரவிடும் அளவிற்கு இத்தோல்வி சிறிலங்காப் படைத்தரப்பை பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளதெனலாம். இத்தகையதொரு சீற்றத்திற்கு காரணமும் இல்லாமலில்லை.

ஒருபுறத்தில் இப் படை நடவடிக்கையின் போது பெரும் ஆளணி இழப்பு மட்டுமல்ல, ஆயுதத் தளவாட இழப்பும் ஏற்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாகச் சிறிலங்கா கவசப் படைப் பிரிவு சந்தித்த இழப்பு சிறிலங்காப் படையினரின் போரிடும் ஆற்றலையும், மனோபலத்தையும் வெகுவாகப் பாதித்ததொன்றாக மாறியது.

இராணுவத் தரப்பால் முகமாலையில் தாக்குதலிற்கு கவசப்படை பிரிவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இதற்குச் சிறிலங்கா இராணுவம் யுத்த நிறுத்த உடன்பாட்டுக் காலப்பகுதியில் கவசப்படைப்பிரிவின் பலத்தை அபரிமிதமாகப் பெருக்கியிருந்தமையும்,- யாழ். மாவட்ட இராணுவத் தளபதியாக கவசப் படைப்பிரிவைச் சார்ந்த மேஜர் ஜெனரல் ஜி.ஓ.சந்திரசிறி இருந்தமையும் காரணமாக இருத்தல் கூடும்.

ஆனால் களமுனையில் கவசப்படைப்பிரிவிற்கு ஏற்பட்ட இழப்பானது கவசப்படைப் பிரிவின் மீதான நம்பிக்கையை மட்டுமல்ல கவசப்படைப்பிரிவின் தளபதிகள் மீதான ஆற்றலையும் கேள்விக்குள்ளாக்கியிருந்தத

  • தொடங்கியவர்

SLN, Sea Tigers clash in Jaffna lagoon

Gunboats of Sea Tigers and Sri Lanka Navy (SLN) clashed for 5-hours in the Kilaly bay Thursday morning from 3:30 a.m. to 8:30. A Sri Lankan naval source that did not wish to be identified said their gunboats off Kerathivu had mistaken Sea Tiger patrol vessels in Sangupitty area as an LTTE attempt to launch an attack on Jaffna.

LTTE vessels alleged to have set off from Pooneryn Munai via Sangupitty jetty area toward the Kilaly bay, were observed by Keratheevu naval troops who began the attack on the Sea Tigers.

The Sri Lanka Army (SLA), based in Gurunagar, Pasaiyoor, Ariyalai east, southern and western parts of Thenmaradchy, Kokilakandy, Thanagkilappu and Keratheevu supported the SLN with heavy mortar and artillery fire launched form their positions.

The LTTE from its Sangupitty base retaliated.

[TamilNet]

SLN, Sea Tigers clash in Jaffna lagoon

Gunboats of Sea Tigers and Sri Lanka Navy (SLN) clashed for 5-hours in the Kilaly bay Thursday morning from 3:30 a.m. to 8:30. A Sri Lankan naval source that did not wish to be identified said their gunboats off Kerathivu had mistaken Sea Tiger patrol vessels in Sangupitty area as an LTTE attempt to launch an attack on Jaffna.

LTTE vessels alleged to have set off from Pooneryn Munai via Sangupitty jetty area toward the Kilaly bay, were observed by Keratheevu naval troops who began the attack on the Sea Tigers.

The Sri Lanka Army (SLA), based in Gurunagar, Pasaiyoor, Ariyalai east, southern and western parts of Thenmaradchy, Kokilakandy, Thanagkilappu and Keratheevu supported the SLN with heavy mortar and artillery fire launched form their positions.

The LTTE from its Sangupitty base retaliated.

[TamilNet]

mayoosony@gmail.com

வாகரையில் புதிய வலிந்த தாக்குதல் முறியடிப்பு: இ.இளந்திரையன்

[வெள்ளிக்கிழமை, 27 ஒக்ரொபர் 2006, 17:28 ஈழம்] [ம.சேரமான்]

வாகரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை நோக்கிய சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த தாக்குதல் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை முறியடிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கந்த மற்றும் கரடிக்குளம் சிறிலங்கா இராணுவ முகாம்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஆர்ட்டிலறி மற்றும் மோர்ட்டார் தாக்குதல்களுடன் திருகோணமடு பகுதி வழியாக இன்று காலை 7.30 மணியளவில் வலிந்த தாக்குதலை மேற்கொண்டனர்.

திருகோணமலை பிரதேச எமது படையினர் இந்த வலிந்த தாக்குதலை காலை 9.30 மணியளவில் முறியடித்தனர் என்றார் இளந்திரையன்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வாகரைப் பிரதேசத்தின் உள்ளே இருக்கும் கட்டுமுறிவை இலக்கு வைத்து இந்நடவடிக்கையை சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.