Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களை இலங்கையர்கள் அல்ல என்கிறது மஹிந்த அரசு: மனோ கணேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mano%2520and%2520hakkeem.jpg

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் ‘நாம் இலங்கையர்கள்’ என்று சொன்னால் மஹிந்த அரசோ, ‘இல்லை, நீங்கள் வேற்று நாட்டவர்’ என்று கூறி கொச்சைப்படுத்துகின்றது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெறவுள்ள தேர்தல், நம் நாட்டு ஜனாதிபதி தேர்தல், நாம் இந்த நாட்டு குடிமக்கள், நாம் இந்த நாட்டு தேர்தல் ஆணையாளரின் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வாக்காளர்கள், தேர்தலில் பங்குபற்றி, வாக்களித்து நமது தேசிய கடமையை நாம் செய்வோம் என வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் முன் வந்தால், அதை இந்த மஹிந்த அரசு கொச்சைப்படுத்துகிறது. அதாவது, நாம் இந்நாட்டவர், இது ஒரே நாடு என்று தமிழர் சொன்னால், இல்லை நீங்கள் வேறு நாட்டவர் என்று மஹிந்த அரசு சொல்கிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் ஆணையை பெற்ற ஒரு கட்சி. நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் அந்தக் கட்சி தனது நிலைப்பாட்டை இரண்டு தினங்களுக்கு முன் அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பு, ஆளும் அரசுக்கு எதிரான, பொது எதிரணிக்கு ஆதரவான அறிவிப்பு என்றவுடன் இந்த அரசுக்கு கோபம், ஆற்றாமை, ஆத்திரம் வந்துவிட்டது. ஒருவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு அரசுக்கு கிடைத்து இருந்தால், இந்த கோபம் மறைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது காதல் பிறந்திருக்கும்.

இந்த அரசு ஒரு சின்னத்தனமான கொள்கையை பின்பற்றுகிறது. நாடு என்பது வேறு, அரசாங்கம் என்பது வேறு என்பதை இந்த அரசு மறந்துவிட்டது. நாட்டை நேசிப்போர் தாங்கள் என்று அடிக்கொரு தரம் கூறுபவர்கள், இன்று நாட்டை விட தங்கள் கட்சிஅரசியல்தான் முக்கியம் என்று நிரூபித்துவிட்டார்கள்.

இந்த தேர்தல், சிங்கள நாட்டு தேர்தல், இதில் பங்கு பற்றி வாக்களிக்கும் அவசியம் எமக்கு கிடையாது என்று ஒருகாலத்தில் செயற்பட்டு வந்த வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களும், அவர்களது தலைமைகளும், இன்று இந்த தேர்தலில் பங்கு பற்றுவதன் மூலம் தாம் இந்த நாட்டு குடி மக்கள் என்ற அடிப்படையை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். இது ஒரு வரவேற்க கூடிய மாற்றம். இந்த நாட்டை நேசிக்கும் எவரும் இந்த மாற்றத்தை வரவேற்க வேண்டும்.

ஆனால், இந்த மஹிந்த அரசு இதை புரிந்துகொள்ள மறுக்கின்றது. மஹிந்த தனது அமைச்சரவை சகாக்கள் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிவிப்பை திரித்து கூறி துர்பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு தருகிறது என்பதைவிட, வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலில் பங்கு பற்றுகிறார்கள் என்பது முக்கியமானதாகும்.” என்றுள்ளார்.

http://4tamilmedia.com/newses/srilanka/28235-2015-01-02-06-27-16

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.