Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதெல்லாம் ஒரு பிழைப்பு?

Featured Replies

yarlppana%20thampy%20-%20mahi_CI.jpg

 

வடக்கு கிழக்கு மக்களை தோல்வியடையச் செய்து அவையின்ட போராட்டத்தை தோல்வியடை செய்யிறதில மகிந்தவுக்கு இருக்கிற சிங்களப் பேரினவாத வெறியை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.. அதே மகிந்த வடக்கிலயே தோல்வி வடிய வடிய பேசுற ஒரு காலம் வந்துட்டுது பாருங்கோ. மனுசன் பயப்பிடுது…

சுதந்திரக் கட்சி தேர்தல் பிரசாரம் ஒண்டு கொழும்பில நடந்தது. அதில சுசந்திகா பேசும்போது தங்கட சனாதிபதியில சில சில குறைபாடுகள் இருக்கலாம் எண்டா… பிறகு அவரின்ட நடவடிக்கையால எங்களுக்கு சில சில பாதிப்ப வந்திருக்கலாம் எண்டா… அப்பிடி இப்பிடி மகிந்தவ சொந்தக் கட்சியே கூட்டத்திலே போட்டு உடைச்சிட்டே?

சரி அதுவும் கொழும்போட போகட்டும்…

நேற்று யாழ்ப்பாணத்தில நடந்த நீங்கள் பாத்தியள் எண்டால் வாய் விட்டு சிரிச்சு நோய்விட்டு வாழ்வியள். நாப்பதாயிரம் மக்கள் திரண்டனர். மகிந்தவுக்கு தேவ மரியாதை எண்டு அரசாங்க ஆதரவாளர் ஒருவர் முகப்புத்தகத்தில போட்டிருக்கிறார். நீங்கள் எப்பிடி ஆக்கள சேத்தனீங்கள் எண்டுறது ஊருக்கே தெரியுமே?

இத்தின பேருந்தில எங்க இருந்தடா இந்த சனங்கள கொண்டு வந்து குவிச்சீங்கள்? சனங்கள கொண்டுவந்து மகிந்தவும் அங்கயிருந்து வந்து மீட்டிங் நடத்திறதுக்கு அங்கயே அதை நடத்த வேண்டியதுதானே? அதுக்கு இவ்வளவு தூரமா வாறாது? இது ரொம்ப ஓவராய் தெரியேல்லையே?

அங்கயன் ராமநாதன் தெரியும்தானே? லிங்காயன் இராமநாதன் இல்ல. ஓ பேஸ்புக்கில உண்மை ஓர்நாள் வெல்லும் உலகம் உன் பெயர் சொல்லும் எண்டுற பாடலில நான் நடந்து திரியிற வீடியோவ கொளுவி எடிட் பண்ணி பேஸ்புக்கில காசு கட்டி உலவ விட்டிருக்கிறார். அடப்பாவி மகனே? அந்தப் பாடலில ஒரிஜினலாய் நடிச்ச ரஜனியையே எப்பிடி ஓட்டு ஓட்டுறாங்கள்?

அதில போய் நீ திரும்ப ரீ மேக் பண்ணியிருக்கிறியே அண்ணா? பரவாயில்லை. உனக்காவது அந்தப் பாடல் யூஸ் ஆகுதே என்று ஏ.ஆர்.ரகுமான் சந்தோசப்பட்டும்…

சரி அதுவும் பாட்டோ போகட்டும்…

நேற்று மக்கள் மத்தியில் நீங்கள் பசும்போது பட்ட அவமானம் இருக்குதே? அது ரொம்ப வலிய தந்திச்சுது. யாருக்கு? உங்களுக்குத்தான். மக்களப் பாத்து நாங்கள் ஜனாதிபதியோட இருப்பம் எண்டியள். இருப்பம்தான? இருப்பம் எண்டு சொல்லுங்கோ. எண்டியள் சனங்களின்ட முகத்தில ஈகூட ஆடேல்ல. பிறகு இருப்பம் எண்டுறியள் எண்டு நீங்களே சொல்லிக் கொண்டு தடுமாறினியள்.

ஏற்கனவே பீதியில மகிந்தர் இருக்கிறார். இதில நீங்கள் மக்கள கேள்வி கேட்டு வேற பீதியக் கிளப்பியியளே?

பஸ் விட்டு எங்கயோயிருந்து ஏந்தி வந்த மக்களே இப்பிடி ஈ ஆடாமல் இருந்தால் வடக்கு மாகாண மக்களிட்ட உங்கட நிலமையை யோசிச்சு பாருங்கோ… ரொம்ப பரிதாபத்திற்கு உரியதுதான்… சரி அதுவும் போகட்டும்…

டக்ளஸ் தேவானந்தா.. அவர் அடுத்தவர்… சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுத்த மனுசன். பின்ன என்ன? மைத்திரிபால சிறிசேன கொத்துக் குண்டு போட்டு மக்களை கொண்டவர் எண்டுறியள். சரத்பொன்சேகா, மைத்திரிபால, சந்திரிக்கா தமிழ் பேசும் மக்கள அழிச்சத ஏற்றுக்கொள்ளேல்ல எண்டுறியள்..

அடப்பாவமே விசாரணை இல்லாமல், சர்வதேச கண்காணிப்பாளர் இல்லாமல், நீதிமன்றம் இல்லாமல் மகிந்த அரசு செய்த போர்க்குற்றம் இனப்படுகொலையள காட்டிக் குடுத்திட்டியயேள? மைத்திரிபால பண்ணினாலும் அது மகிந்த அரசு என்றத மறந்திட்டிங்களே அமைச்சர்?

அது சரி சந்திரிக்காவின்ட அரசில செல்ல அமைச்சராய் இருந்தியள். இப்ப அந்த அம்மாவை பார்த்து மக்களை அழிச்சதாய் கேள்வி கேட்கிறியள்? நாளைக்கு மைத்திரி வந்தால் அவருடன் ஆட்சி செய்யப் போவியள். ஏனெண்டால் ஆர் வந்தாலும் அமைச்சர்தானே உங்கட கொள்கை… அப்ப மகிந்தவ இனப்படுகொலையாளி எண்டுவியளா? அதான் நீங்கள் பேசேக்குள்ள பேசாமல் வந்து வாய மூடிக்கொண்டு இரும் எண்டு மகிந்த சொன்னவரா? சும்மா சின்ன டவுட்டுத்தான்… 

சரி இடையில பேசும் போது ஏன் உங்கட வாய் பொது எதிரணயின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே எண்டு வந்தது?

மகிந்தவா? மைத்திரியா எண்டு கென்பியூஸ் ஆகிட்டார்...

  

சரி.. அதுவும் போகட்டும்…

வட மாகாண எதிர்கட்சித் தலைவர் அவர் அடுத்தவர்… நல்லா விளங்கும்… பின்ன என்ன? இராணுவமற்ற தேசம் ஆக்கினவராம் ஜனாதிபதி… இனியும் இராணுவமற்ற தேசம் ஆக்குவாராம்… அட நாசமாய் போக…. இராணுவத்த வெளியேற்றத்தானே நாவறண்ட நிலையில எங்கட சனம் கத்திக் கொண்டு கிடக்குது… வலி வடக்க விடுங்கோ..  எங்கள மீள்குடியேற்றுங்கோ எண்டுதானே கேக்கிறம்…

ஏதோ அடுத்த நாட்டு இராணுவத்த எங்கட மண்ணில நிக்கிற மாதிரியும் அத மகிந்த வெளியேற்றின மாதிரியும், இன்னும் வெளியேற்றிற மாதிரியும் சொல்லி தேர்தலில ஓட்டு கேக்கிறயளே? இதெல்லாம் ஒரு காரணம்.. இத மீட்டிங்க போட்டு சொல்லி ஓட்டுக் கேக்கிறியள் வேற? இதெல்லாம் ஒரு பிழைப்பு போங்கோ?

கடைசியில இராணுவ ஆக்கிரமிப்பில வடக்கு இருக்குது எண்டுற நீங்களும் ஒத்துக் கொண்டுவிட்டியளே வட மாகாண எதிர்கட்சித் தலைவர்?

தவராசா முதலில கிட்டு பூங்கா எண்டார்.. பிறகு சங்கிலியன் என்றார்.. முடியாது... உங்களால என்ன செய்தும் எங்கட அடையாளத்த மாத்த முடியாது..

பிறகு தமிழர்கள் சிங்களவர்களை அண்டித்தான் வாழ வேண்டுமென்று கனடாவிற்குச் சென்று உரையாற்றி இருந்தவர். அப்படியான மகிந்த ராஜபக்சவைத் தான்…. எண்டு மனுசன் தடுமாறிச்சுது.. பிறகு மன்னிக்க வேண்டும்… எண்டு தொடர்ந்தார்...

மகிந்தவா? சரத்பொன்சேகாவா? எண்டு கென்பியூஸ் ஆகிட்டார்...

மகிந்த கடும் கடுப்பரகிட்டார்...

பிறகென்ன? ஒருத்தனா இரண்டு பேரா? எல்லாமரும் அந்த மனுசனா இப்பிடியா?

சொந்தச் சிலவில சூனியம் வைக்கிற எண்டு ஆக்களக் கொண்டு வந்து மகிந்தவக் கூப்பிட்டு வைச்சு இப்பிடி உள்ளதையும் கெடுத்திட்டியளே?

சனம் கைதட்டாததால காங்கேசன்துறைக்கு ரயில் விட வரமாட்டன் எண்டிட்டாராம் மகிந்த..

இது என்ன பெரிய காமடியாய் இருக்குது... 

யாழ்ப்பாணத் தம்பி 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115094/language/ta-IN/article.aspx

ar_sirisena_001.jpg

வரலாறு தெரியாமல் ஆபிரிக்காவின் காந்தி எனவும், இந்தியாவின் நெல்சன் மண்டேலா எனவும் அதில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் காலக்கூத்துக்கள் ஒரே சில்லெடுப்பாக  இருக்கின்றது.
மகிந்த தோற்றால் வீணைக்கட்சிக்காரர் பாடு அம்போதான் :D

  • கருத்துக்கள உறவுகள்

 

yarlppana%20thampy%20-%20mahi_CI.jpg

 

 

 

வெல்லும் பக்கம் சாய்வதற்கான ஏற்பாடுகள் தேர்தல் மேடைகளிலேயே  தொடங்கிவிட்டன

வென்றவுடன்

உங்கள் ஆட்கள் எம்மை தாக்கினார்கள்

அது தான் இடம் மாறிவிட்டேன் என்பார் பாருங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.