Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரதிபுரம் கிளிநொச்சியில்சிறுவர்கள் மீது இராணுவத்தினா் மிலேச்சத்தனமாக தாக்குதல்! பதற்றம் நீடிப்பு

Featured Replies

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியினில் இன்றிரவு இலங்கை இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஆறு வயது சிறுகுழந்தை உள்ளிட்ட பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனிடையே தாக்குதலை நடத்திய சிப்பாய் மனநிலை பாதிக்கப்பட்டவரென கூறி கிளிநொச்சி வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

முன்னதாக அப்பகுதியினில் தையலகம் நடத்தி வந்திருந்த பொதுமகன் ஒருவரை சிப்பாயொருவர் சீருடையுடன் வந்து தாக்கியுள்ளார்.இதில் சிவராசா(வயது 46) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவத்தையடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு படைமுகாம் முன்பதாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.அதனையடுத்து அவாகள் மீது படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய தாக்குதலில் ஆறு வயதேயான பிறின்ஸி என்றழைக்கப்படும் சதீஸ்குமார் சதுஸிகா(வயது 6) படுகாயமடைந்து வைத்தியசாலையினில் அவசர சிகிச்சை பிரிவினில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஆர்ப்பாட்டம் செய்திருந்த தாயரொருவருடன் வந்திருந்த குழந்தையினை சிப்பாய் ஒருவர் காலால் மிதித்ததாலேயே அக்குழந்தை படுகாயமடைந்துள்ளது.

இதனிடையே இத்தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்திருந்த போதும் அவர்களை வைத்தியசாலைக்கு செல்ல படையினர். அனுமதிக்கவில்லையெனவும் தொடர்ந்தும் பதற்றம் நீடிப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.pathivu.com/news/36620/57//d,article_full.aspx

Edited by sudaravan

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி மேலும் மேலும் எமது மக்கள் நொந்து நூலாக வேண்டும் என்பதே, தேர்தலை புறக்கணிக்குமாறு கூறும் "தற்கொலை ராஜதந்திரிகள்" வேண்டுவது.

மைத்திரி வந்தால் இது மாறுமா என்று குதர்க்கமாக கேட்ப்பார்கள். மகிந்த இருக்கும் வரை இது மாறாது. மைத்திரி வந்தால் மாறும் அல்லது மாறாது ஆனால் மாறுவதற்கான ஒரு சிறு ஒளிக்கீற்றாவது தெரியும். குறைந்த பட்ட்சம் மாற்றத்துக்கான ஆரம்ப புள்ளியாக ஆவது அது அமையும்.

ஆனால் அது நடக்கக்கூடாது - நடந்தால் எமது யாவாரம் படுத்துவிடும். எனவே 1931 இல் இருந்து எமது சாபக்கேடாக அமைந்த தேர்தல் புறக்கணிப்பை செய்து, மகிந்தவின்கரத்தை பலப்படுத்துவோம் வாரீர்.

இப்படி மேலும் மேலும் எமது மக்கள் நொந்து நூலாக வேண்டும் என்பதே, தேர்தலை புறக்கணிக்குமாறு கூறும் "தற்கொலை ராஜதந்திரிகள்" வேண்டுவது.

மைத்திரி வந்தால் இது மாறுமா என்று குதர்க்கமாக கேட்ப்பார்கள். மகிந்த இருக்கும் வரை இது மாறாது. மைத்திரி வந்தால் மாறும் அல்லது மாறாது ஆனால் மாறுவதற்கான ஒரு சிறு ஒளிக்கீற்றாவது தெரியும். குறைந்த பட்ட்சம் மாற்றத்துக்கான ஆரம்ப புள்ளியாக ஆவது அது அமையும்.

ஆனால் அது நடக்கக்கூடாது - நடந்தால் எமது யாவாரம் படுத்துவிடும். எனவே 1931 இல் இருந்து எமது சாபக்கேடாக அமைந்த தேர்தல் புறக்கணிப்பை செய்து, மகிந்தவின்கரத்தை பலப்படுத்துவோம் வாரீர்.

 

முன்பெல்லாம் இப்படி  மகிந்தவின் இராணுவத்திற்கு எதிராக இப்படி ஒரு செய்தி வந்தால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை  இவர்கள்  புலம் புலம் பெயர்ஸ் சும்மா ஊதி பெருப்பிக்கிறார்கள் என்று மகிந்தவிற்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் இப்போது மகிந்தவின் இராணுவத்தின் அஜாகரத்தை ஒழிக்கவேண்டும் என்று எழுதும் அளவுக்கு வந்துட்டீங்க. அரசியல்ல்ல இதெல்லாம் ரொம்ப சகஜமப்பா.

 

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்தில் தேங்காய் விழுந்தாலும், பாவாடை காணாமல் போனாலும் ஆமிதான் அதுக்கு காரணம் என்று நிக்கும் காமெடிபீசுகளை, எதை எடுத்தாலும் தீர்விசாரிக்காமல் ஆமி செய்தது என்போரை நான் மறுத்துரைதேன், உரைப்பேன்.

அதே சமயத்தில் ராணுவ அடக்குமுறை, காணிப்பறிப்பு பற்றி நான் என்ன சொல்லி இருக்கிறேன் என்பது, அடிக்கடி வருபவர்களுக்கு தெரியும்.

ஆடிக்கொருக்கா அமவாசைக்கு ஒருக்கா வந்து, நகைச்சுவை செய்யும் தனிமனித துதிபாடிகளுக்கு இது புரிய நியாயமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவ வீரரை தாக்கமுற்பட்டதாலேயே ஆறு வயது புலிப்பயங்கரவாதி மீது ராணுவத்தினர் தற்பாதுகாப்பு தாக்குதலை மேற்கொண்டனர்.(யாழ் செய்திகளை வாசித்து எனக்கும் மறை கழன்றுவிட்டது.)

  • கருத்துக்கள உறவுகள்

ஆமிக்காரனுக்கு லூசு.. அவனுக்கு வக்காளத்து வாங்கும் கோச்சான் எப்படிப்பட்ட..????! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

வாய்விட்டுச் சிரித்தேன் நெடுக்ஸ். உங்கள் சீரியஸ் கருத்துக்கள்தான் செம காமெடியா இருக்கும் எண்டு நினைச்ச்சா, நீங்க காமெடியும் நல்லாப் பண்ணுறீங்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.