Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா சொத்து குவிப்பு அப்பீல் மனு மீதான விசாரணை

Featured Replies

  • தொடங்கியவர்

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை வரும் 8-ம் தேதி நடைபெறாது: உச்ச நீதிமன்ற பதிவுத்துறை அறிவிப்பு

 
 
supremecourt_2587096h.jpg
 

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு விசாரணை வரும் 8-ம் நடைபெறாது என உச்ச நீதிமன்ற பதிவுத் துறை அறிவித்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடக நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து, கர்நாடக மாநில அரசு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனால் ஜெயலலிதா உட்பட நால்வர் தரப்பிலும் எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மேல் முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது மனுக்களை விசாரித்த நீதிபதிகள், ''இந்த வழக்கு தொடர் பாக கர்நாடக மாநில அரசு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட நால்வர் தரப் பிலும் இருந்து ஆயிரக்கணக்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.

வழக்கின் விசாரணை தொடங்குவதற்கு முன்பாக இரு தரப்பினரும் இறுதிவாதம் தொடர்பான தொகுப்பை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின் மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கும்’’என தெரிவித்து, வழக்கை ஜனவரி 8-ம் தேதி ஒத்திவைத்தனர்.

இதையடுத்து கர்நாடக அரசு, திமுக தரப்பு மற்றும் ஜெயலலிதா தரப்பு சார்பில் இறுதிவாத தொகுப்பு உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் வரும் 8-ம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்ததால், அதற் கான இறுதி தயாரிப்புகளில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் விடு முறைக்கு பின், உச்ச நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை முதல் செயல் படத் தொடங்கியதை அடுத்து, இந்த வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வழக்கு கள் தொடர்பான இறுதி பட்டியலை உச்ச நீதிமன்ற பதிவுத் துறை அலுவலகம் நேற்று வெளி யிட்டது. அதில்,

‘உச்ச நீதிமன்றத்தில் அதிகப்படியான முக்கிய வழக்கு கள் தேங்கி கிடப்பதால் நீதிபதி களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.

எனவே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு வரும் 8-ம் தேதி விசாரிக்கப்பட மாட்டாது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஓரிரு வாரங் களுக்கு பின் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் உச்ச நீதிமன்ற பதிவுத்துறை அலுவலக வட்டாரங் கள் தெரிவிக்கின்றன.

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8071563.ece?homepage=true&relartwiz=true

  • Replies 311
  • Views 29.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஜெ.வுக்கு எதிரான மேல் முறையீடு வழக்கில் விசாரணை நீதிபதி மாற்றம்!

 

புதுடெல்லி: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள jaya%20350%20a.jpgசொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கின் விசாரணை நீதிபதி மாற்றப்பட்டுள்ளார். 
 
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.  வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, தனி நீதிமன்றம் தீர்ப்பை ரத்து செய்ததுடன், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.

இதனை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்கும் விசாரணை நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீதிபதி ஆர்.கே அகர்வாலுக்கு பதிலாக அமித்வா ராய் விசாரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது, வழக்கை தினந்தோறும் விசாரிப்பது குறித்து முடிவு எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/57350-sc-judge-replaced-assets-case-appeal-jayalalitha.art

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா களி தின்னும் படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கின்றது! 

  • கருத்துக்கள உறவுகள்

jaya-dinner.jpg

  • கருத்துக்கள உறவுகள்

உது இருமலுக்கு மருந்து குடிக்கிற மாதிரி எல்லோ கிடக்குது!

  • கருத்துக்கள உறவுகள்

அவ லன்டன் ரிட்டேர்ன்  எல்லோ... ,

அதுதான் ஈற்றிங் கம்பங் களி வித் கரண்டி...!!  :)

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மீது இன்று விசாரணை.

[ Friday,8 January 2016, 04:31:02 ]   
1.jpg

 

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு உச்ச  நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கைவிசாரித்த நீதிபதி ஆர்.கே. அகர்வாலுக்கு பதிலாக நீதிபதி அமிதவா ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலை யில், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்புவழக்கை கர்நாடக நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து, கர்நாடக மாநில அரசு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில்மேல்முறையீடு செய்யப்பட்டமைக்கு  எதிராக ஜெயலலிதா உட்பட நால்வர் தரப்பிலும் எதிர் மனு தாக்கல்செய்யப்பட்டது.  

இதைத்தொடர்ந்து கர்நாடக அரசு, திமுக தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்றுவிசாரணைக்கு வருகிறது.

கடந்த 4-ம் திகதி, உச்ச நீதிமன்றத்தில் அதிகப்படியான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜெயலலிதா மீதானசொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு 8-ம் திகதி  விசாரிக்கப்படாது என உச்ச நீதிமன்ற பதிவுத்துறைஅறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://ibctamil.com/news/index/16594

  • தொடங்கியவர்

Breaking Now

ஜெ.விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட அப்பீல் மனு பிப்.2 முதல் இறுதி விசாரணை - சுப்ரீம் கோர்ட்
 

ஜெ. சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கு: பிப்ரவரி 2முதல் சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை

பிப்ரவரி 2ம் தேதிக்கு முன்பாக மனுதாரர்கள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தினமும் விசாரிப்பது பற்றி பிற வழக்குகளின் அடிப்படையில் முடிவு

ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: பிப். 2 முதல் இறுதி விசாரணை
-------------------------------------------------------------------------
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணை வரும் ஃபிப்ரவரி 2ஆம் தேதி முதல் நடக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.

அந்த மேல் முறையீட்டு மனு, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரா, அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கின் இறுதி விசாரணை ஃபிப்ரவரி 2ஆம் தேதி முதல் நடக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதற்கு முன்பாக இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டவர்கள், வழக்குத் தொடர்ந்திருக்கும் கர்நாடக அரசு, தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் விசாரிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து தெரிவிக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.

இந்த விசாரணையை தினமும் நடத்துவது குறித்து, அப்போது உள்ள வழக்குகளின் நிலவரத்தைப் பொறுத்து முடிவுசெய்யப்படுமென நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.facebook.com/bbctamil/?fref=nf

  • தொடங்கியவர்
ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: பிப்ரவரி 2 முதல் சுப்ரீம் கோர்ட்டில் தினசரி விசாரணை
 

டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி 2ம் தேதி முதல் ஆரம்பிக்கும் என்றும், அதற்கு முன்பாக, விசாரிக்க வேண்டிய அம்சங்களை மனுதாரர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக ஹைகோர்ட்டில் செய்த மேல்முறையீட்டின்போது, தனிக்கோர்ட்டு தீர்ப்பை நீதிபதி குமாரசாமி ரத்து செய்ததுடன், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.

 இதனை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்கும் விசாரணை நீதிபதிகளில் ஒருவரான ஆர்.கே.அகர்வால் திடீரென மாற்றம் செய்யப்பட்டார்.

 

நீதிபதி ஆர்.கே அகர்வாலுக்கு பதிலாக அமித்வா ராய் விசாரிப்பார் என்று தெரிவிக்கப்படுள்ளது. அதேநேரம், பெஞ்சின் மற்றொரு நீதிபதியான பினாகி சந்திரகோஷ் அதே பொறுப்பில் தொடருகிறார். இந்நிலையில், சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கு இன்று, நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, "வழக்கை தினமும் விசாரிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்பது பற்றி பிற வழக்குகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். பிப்ரவரி 2ம் தேதி முதல் 4ம் தேதிவரை இவ்வழக்கு முக்கியத்துவம் கொடுத்து தினசரி விசாரிக்கப்படும்.

 

அதன்பிறகு, வழக்குகளின் நிலைமைக்குதக்கபடி விசாரணை நடைபெறும். வழக்கில் எந்தெந்த முக்கிய அம்சங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பது குறித்த விவரத்தை வரும் பிப்ரவரி 2ம் தேதிக்கு முன்பாக கோர்ட்டில் மனுதாரர்கள் தாக்கல் செய்ய வேண்டும்" என்று நீதிபதிகள் அறிவித்து, வழக்கை பிப்ரவரி 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இதற்கு முன்பாக அப்பீல் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி பினாகி சந்திரகோஷ் கூறுகையில், "சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் 18 ஆண்டுகள் நடந்துள்ளது. சுப்ரீம்கோர்ட் என்பது விசாரணை நீதிமன்றம் கிடையாது. எனவே எந்தெந்த அம்சங்களை விசாரிக்க வேண்டும் என்பது குறித்து குறிப்பிட்டால், அந்த அம்சங்களை விசாரித்து, குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்தது, சரிதானா அல்லது தவறுதானா என்பது குறித்து தீர்ப்பளிக்க முடியும்" என்று தெரிவித்திருந்தார்.

 

எனவேதான், பிப்ரவரி 2ம் தேதிக்கு முன்பாக விசாரிக்க வேண்டிய அம்சங்களை தாக்கல் செய்யுமாறு மனுதாரர்களுக்கு நீதிபதிகள் தற்போது உத்தரவிட்டுள்ளனர். கர்நாடக அரசு, அன்பழகன், ஜெயலலிதா உள்ளிட்ட தரப்புகள் தங்கள் மனுக்களை பிப்ரவரி 2ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயமாகும். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கு இறுதி விசாரணை பிப்ரவரி முதல் தொடங்க உள்ளது, அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு.. 16 அம்சங்களை விசாரிக்க கோரி கர்நாடகா பதில் மனு
 
 
 டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரிக்க வேண்டிய அம்சங்கள் எவை, எவை என்பது குறித்த பதில் மனுவை கர்நாடக அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக ஹைகோர்ட்டில் செய்த மேல்முறையீட்டின்போது, தனிக்கோர்ட்டு தீர்ப்பை நீதிபதி குமாரசாமி ரத்து செய்ததுடன், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.
 

இதனை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றது. விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்தநிலையில், சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்கும் விசாரணை நீதிபதி மாற்றம் செய்யப்பட்டார். நீதிபதி ஆர்.கே அகர்வாலுக்கு பதிலாக அமித்வா ராய் விசாரிப்பார் என்று தெரிவிக்கப்படுள்ளது.

மற்றொரு நீதிபதியாக பினாகி சந்திரகோஷ் தொடர்கிறார். இந்த விசாரணை கடந்த 8ம் தேதி நீதிபதிகள், பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள், "ஜெயலலிதா உள்ளிட்டோர் சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு, அன்பழகன் ஜெயலலிதா ஆகியோர் பதில் அளிக்க வேண்டும். பிப்ரவரி 2ம் தேதிக்கு முன்பாக பதில் அளிக்க வேண்டும்.

அதில் விசாரணையின்போது எந்தெந்த அம்சங்களில் சந்தேகம் உள்ளதோ அந்த விஷயங்களை மட்டும் தெரிவித்து, பதில் இருக்க வேண்டும். பிப்ரவரி 2ம் தேதி முதல் இறுதி விசாரணை நடத்தப்படும்" என கூறினர். இதையேற்று மூன்று தரப்பினரும், பதில் மனு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதில் கர்நாடக அரசு தனது பதிலை இன்று சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. மேல்முறையீட்டு மனு தொடர்பான விசாரணையில் விவாதிக்கப்பட வேண்டிய 16 அம்சங்களை கர்நாடக அரசு குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • தொடங்கியவர்

'நீதிபதி குமாரசாமி தீர்ப்பு சரியானது; கணக்கில் தவறில்லை' - ஜெயலலிதா மனு தாக்கல்!

 

tamil%20nadu%20cm%20jayalalitha.jpgபுதுடெல்லி: தங்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில்,   கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு சரியானது என்றும், அவர் சொத்து மதிப்பை கணக்கிட்டதில் தவறு எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.


உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி. சந்திரகோஸ் மற்றும் அமிர்தவராய் அடங்கிய பெஞ்ச்  முன்பு ஜெயலலிதா ,சசிகலா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு மனு கடந்த 8 ம் தேதி விசாரணைக்கு வந்தபோதே,  விசாரணையில் விவாதிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து அனைத்து தரப்பினரும் எழுத்துப் பூர்வமாக மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

அதன் அடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை கர்நாடக அரசு மனுத்தாக்கல் செய்தது. அதில்,  சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு தவறானது என்பது உள்ளிட்ட வாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய 16 அம்சங்களையும் அளிக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் ஜெயலலிதா உள்ளிடோர் இன்று தாக்கல் செய்துள்ள மனுவில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு சரியானது என்றும், அவர் சொத்து மதிப்பை கணக்கிட்டதில் தவறு எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

மேலும் அந்த மனுவில்,  சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய அன்பழகன் மற்றும் கர்நாடக அரசுக்கு எந்த வீதமான உரிமையும் இல்லை என்பதால், அவர்களின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி 2ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

http://www.vikatan.com/news/india/57937-assets-casejayalalithaa-filed-petition-sc.art

  • தொடங்கியவர்

சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு, திமுக தரப்புக்கு உரிமை இல்லை: உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா புதிய மனு தாக்கல்

 

 

கர்நாடக அரசுக்கும் திமுக தரப்புக்கும் சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்யும் உரிமை இல்லை என ஜெயலலிதா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட் டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட் டதை எதிர்த்து கர்நாடக அரசு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் த‌ரப்பில் உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்யப்பட் ட‌து. இதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவா ராய் அடங்கிய அமர்வு, ‘‘சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இறுதி விசாரணை தொடங்கு வதற்கு முன்பாக மனுதாரர்கள் அனைவரும் தங்கள் தரப்பில் இறுதிவாதத்தில் முன்வைக்கும் முக்கிய‌ அம்சங்கள் அடங்கிய தொகுப்பை வருகிற பிப்ரவரி 2-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும்''என உத்தரவிட்டனர்.

இதையடுத்து கடந்த திங்கள்கிழமை கர்நாடக அரசு தரப்பில் 16 அம்சங்கள் அடங்கிய 7 பக்க அளவிலான மனுவை தாக்கல் செய்தனர். அதில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை விடுதலை செய்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமியின் தீர்ப்பில் கூட்டுப்பிழை இருக்கிறது. கட்டிடங்களின் கட்டுமான செலவு, சுதாகரனின் ஆடம்பர திருமண செலவு, ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் வருமானம், சூப்பர் டூப்பர் டிவியின் வருமானம் போன்றவற்றை கணக்கிட்டதில் அடிப்படை தவறுகள் நடந்துள் ளன என தெரிவிக்கப்பட்டி ருந்தது.

இதற்கு ஜெய‌லலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முறையாக விசாரித்து சரியாக தீர்ப்பு அளித்துள்ளார். அவரது தீர்ப்பில் எவ்வித கணிதப் பிழைகளும் இடம்பெறவில்லை. மேலும் வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்களால் முன்வைக்கப்பட்ட செலவு, வருமானம் ஆகியவற்றை சரியாக கணக்கிட்டுள்ளார்.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை யால் தொடுக்கப்பட்ட இவ்வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுக்கும் எவ்வித உரிமையும் இல்லை. அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்தில் திமுக இவ்வழக்கில் மேல்முறையீடு செய்துள்ளது. எனவே முகாந்திரம் இல்லாத கர்நாடக அரசு, திமுக தரப்பின் மேல்முறையீட்டு மனுக்களை த‌ள்ளுபடி செய்ய வேண்டும் என்பது போன்ற 19 முக்கிய அம்சங்களை தங்களது இறுதிவாதத்தில் முன் வைக்கப் போவதாக ஜெயலலிதா தரப்பில் தெரிவித்துள்ளனர்.

வருகிற பிப்ரவரி 2-ம் தேதி சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழ‌க்கு விசாரணைக்கு வரவிருப்ப தால், இறுதிவாதம் தொடர்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/article8138245.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

 

jayalali.jpgபுதுடெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணையை வருகின்ற பிப்ரவரி 23-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டின்போது, தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதி குமாரசாமி ரத்து செய்ததுடன், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. நீதிபதீகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, இறுதி விசாரணை பிப்ரவரி மாதம் 2-ம் தேதி முதல் நடைபெறும். மேலும், விசாரிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை எழுத்து வடிவில் தொகுப்பாக தாக்கல் செய்யுமாறு வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து, ஜெயலலிதா தரப்பு, கர்நாடகா, அன்பழகன் உள்ளிடோர் தரப்பு சமீபத்தில் ஆவணங்களை தாக்கல் செய்ததுடன், இந்நிலையில், விசாரணையை ஒத்திவைக்க கோரி கர்நாடக அரசு மற்றும் ஜெயலலிதா தரப்பு கால அவகாசம் கேட்டு கோரிக்கை விடுத்திருந்தது. இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், பிப்ரவரி 2-ம் தேதி விசாரிக்கப்பட இருந்த இந்த வழக்கை, பிப்ரவரி 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

http://www.vikatan.com/news/india/58262-wealth-case-trial-against-jayalalitha-adjourned.art

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
சொத்துக் குவிப்பு வழக்கை ஜெ. இழுத்தடிக்கிறார்.. விசாரணையை விரைந்து நடத்துங்கள்: கர்நாடகா வாதம் ரெடி
 
 
டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கை தள்ளி வைக்க முயலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தரப்புக்கு ஷாக் கொடுக்க முடிவு செய்துள்ளது கர்நாடக அரசு. வழக்கை மேலும் ஒரு வாரம் ஒத்தி வைக்க கோரிய ஜெயலலிதா தரப்பு மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கர்நாடக தரப்பு முடிவு செய்துள்ளது. நாளைய விசாரணையின்போது, தனது எதிர்ப்பை கர்நாடகா தெரிவிக்க உள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பெங்களூர் தனிக் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
 
நீதிபதி குன்ஹா அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதி குமாரசாமி இந்த அப்பீல் மனுவை விசாரித்து, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து கர்நாடக அரசும் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். ஜெயலலிதா தரப்பினர் பதில் தருமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்தனர். இந்த மேல் முறையீட்டு மனுவின் விசாரணை பிப்ரவரி 23ம் தேதி முதல் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தினசரி விசாரணை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
 
இந்நிலையில், விசாரணையை மேலும் ஒருவாரம் தள்ளி வைக்குமாறு சுப்ரீம்கோர்ட்டில் ஜெ. தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு பற்றி நாளை சுப்ரீம்கோர்ட் முடிவெடுக்க உள்ளது. அதேநேரம், ஜெயலலிதா கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க கர்நாடக அரசு தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்லது. கர்நாடக தரப்பு, நாளை தாக்கல் செய்ய உள்ள மனுவில், ஜெயலலிதா வேண்டுமென்றே, வழக்கை ஒத்திப்போட முயலுவதாக குற்றம்சாட்டப்பட உள்ளதாம். ஜனவரி மாதம் ஒருமுறை, இப்படித்தான் ஜெ. தரப்பு வழக்கை ஒத்திப்போட கோரிக்கைவிடுத்ததையும், கர்நாடக தரப்பு சுட்டிக்காட்ட உள்ளது.
 
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஏற்கனவே பல ஆண்டு காலம் தாமதமான வழக்கு என்பதையும், இனியும் தாமதிக்காமல் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதையும், கர்நாடக தரப்பு சுட்டிக்காட்ட உள்ளதாம். இதனிடையே, பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் அமர்விலிருந்து வேறு அமர்வுக்கு சொத்துக்குவிப்பு வழக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு மாற்றப்பட்டாலும், அதை வாரக்கணக்கில் இழுத்தடிக்காமல் விரைந்து பெஞ்ச்சை நிர்ணயிக்க வேண்டும் என்பது கர்நாடக தரப்பு வாதமாக இருக்கப்போகிறதாம்.

Read more at: http://tamil.oneindia.com/news/india/jayalalithaa-making-deliberate-attempt-delay-da-case-karnataka-to-tell-supreme-court-247450.html
  • தொடங்கியவர்
வருமானத்துக்கு அதிகமாக ரூ55 கோடி சொத்து குவித்தார் ஜெ: சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா அரசு வக்கீல் தவே வாதம்
 
ஜெ. வழக்கை மிக மேம்போக்காகவே விசாரித்தது கர்நாடகா ஹைகோர்ட்: மூத்த வக்கீல் தவே வாதம்
 
சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்ற முடிவுகளை கர்நாடகா ஹைகோர்ட் கணக்கில் எடுக்கவில்லை- வக்கீல் தவே

 
சொத்து குவிப்பு வழக்கு- சுப்ரீம் கோர்ட்டில் இறுதிவாதம் தொடக்கம்- ஜெ.வின் அவகாச கோரிக்கை நிராகரிப்பு!
 

டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் இறுதிவாதத்தை கர்நாடகா அரசு இன்று தொடங்கியுள்ளது. இந்த விசாரணையை இழுத்தடிக்கும் வகையில் ஒரு வார கால அவகாசம் கோரிய ஜெயலலிதாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் அதிரடியாக நிராகரித்துவிட்டது.

 

சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூர் தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதி குன்ஹா அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். நீதிபதி குமாரசாமி இந்த அப்பீல் மனுவை விசாரித்து, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.  இதை எதிர்த்து கர்நாடக அரசும் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். ஜெயலலிதா தரப்பினர் பதில் தருமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்தனர். இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை பிப்ரவரி 2-ந் தேதி முதல் நாள்தோறும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

ஆனால் திடீரென இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவரான பினாகி சந்திர கோஷ், அருணாச்சல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிப்பதால் ஒரு வார காலம் ஒத்தி வைக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை கர்நாடகா அரசு அப்போது எதிர்க்கவில்லை. இதனால் ஜெயலலிதாவின் கோரிக்கை ஏற்கப்பட்டு பிப்ரவரி 23-ந் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடைபெறும் என ஒத்திவைக்கப்பட்டது.

 

இதனிடையே மீண்டும் விசாரணையை மேலும் ஒருவாரம் தள்ளி வைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் ஜெ. தரப்பு மனு தாக்கல் செய்தது. ஆனால் இதற்கு கர்நாடகா அரசு மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கை திட்டமிட்டு இழுத்தடிக்கும் முயற்சியாகத்தான் இந்த அவகாசம் கோரப்படுகிறது; ஆகையால் இதனை நிராகரிக்க வேண்டும் என கர்நாடகா தமது பதிலைத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.

 

அப்போது வழக்கை ஒரு வார காலம் ஒத்திவைக்கக் கோரிய ஜெயலலிதாவின் கோரிக்கையை நீதிபதிகள் அதிரடியாக நிராகரித்தனர். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு எதிராக கர்நாடகா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தம்முடைய இறுதிவாதத்தை தொடங்கினார். அப்போது, இறுதிவாதத்தை நிறைவு செய்ய 3 நாட்கள் தேவை என தவே குறிப்பிட்டார். சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை மீண்டும் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் அதிரடியாக நிராகரித்திருப்பது ஜெயலலிதா தரப்புக்கு பெரும் பின்னடைவாகும்.

  • தொடங்கியவர்

ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெ.க்கு பல கோடி ரூபாய் எப்படி வந்தது?- கர்நாடக அரசு வக்கீல் கேள்வி

 

1991ல் முதல்வராக இருந்தபோது ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயலலிதாவுக்கு பல கோடி எப்படி வந்தது என்று சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகா தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
 

sasikala-%20elavarasi-%20jaya-%20sudhaka

முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோரை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார். இதனை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது, கர்நாடகா அரசு தரப்பு தங்களது இறுதி வாதத்தை முன்வைத்தது. வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிடுகையில், ஜெயலலிதா உள்பட 4 பேரும் சேர்ந்து ரூ.55 கோடிக்கு அதிகமாக சொத்துகளை குவித்துள்ளனர். 1991ல் முதல்வராக இருந்த போது ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயலலிதாவுக்கு பல கோடி எப்படி வந்தது. முறைகேடாக சேர்ந்த பணம் எல்லாம் பல நிறுவனம் மூலம் வந்ததாக காட்டியுள்ளனர். ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ், நமது எம்.ஜி.ஆர் மூலம் வந்ததாக கூறுகின்றனர்.

நிறுவனங்கள் மூலம் வந்த வருமானம் என்பது உண்மைக்கு மாறானது. பல கோடி ரூபாய் சொத்தும் முறைகேடாக சேர்த்ததற்கு ஆவண ஆதாரம் உள்ளது. அரசு ஊழியர் என்ற முறையில் ஜெயலலிதா சொத்து விவரங்களை தெரிவிக்கவில்லை. ஜெயலலிதா உள்பட 4 பேரும் கூட்டுச்சதியில் ஈடுபட்டனர். ஆதாரம் இருந்தும் கர்நாடக உயர் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. குற்றச்சாட்டுகளை கர்நாடக உயர் நீதிமன்றம் சாதாரணமாகக் கருதி விட்டது" என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

http://www.vikatan.com/news/tamilnadu/59515-jaya-da-case-karnataka-final-argument.art

  • தொடங்கியவர்
பொதுவாழ்வில் ஊழல் செய்ததால்தான் ஜெ.மீது வழக்கு.. வருமான வரிக்காக அல்ல.. சுப்ரீம்கோர்ட்டில் தவே வாதம்
 
 
டெல்லி: முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு என்பது வருமான வரி செலுத்தாத விவகாரம் அல்ல; பொதுவாழ்க்கையில் உள்ள ஒருவர் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதால் தொடரப்பட்ட வழக்காகத்தான் அணுக வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிட்டார்.
 
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது.நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் முன்னிலையில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக கர்நாடகா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே 2-வது நாளாக தமது இறுதிவாதத்தை முன்வைத்தார்.
 
தம்முடைய இறுதிவாதத்தில் துஷ்யந்த் தவே கூறியதாவது:
 
ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் எப்படி வருமானம் வந்தது என பதில் தர வேண்டும் என நெருக்கடி கொடுத்தது.
உடனே தொண்டர்கள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பெற்றதாகக் கூறி தப்ப முயற்சித்தது ஜெயலலிதா தரப்பு.
 
கர்நாடகா உயர்நீதிமன்றமோ, ஜெயலலிதா பெற்ற கடன்களைக் கூட வருமானமாக மதிப்பீடு செய்திருக்கிறது. 1960ஆம் ஆண்டு உச்சநீதிமன்றமானது பயணப்படியை வருமானமாக கருதக் கூடாது என தீர்ப்பளித்துள்ளது.
 
அது இதற்கும் பொருந்தும். அரசியல்வாதிகள் பொதுவாக தங்களுக்கு பரிசுப் பொருட்கள் மூலம் சொத்து வந்ததாக கூறி அடைக்கலம் தேடுகின்றனர். இந்த பரிசுப் பொருட்கள் மூலமாக வரும் சொத்துகளையும் சட்டப்பூர்வமான வருமானமாக கருதினால் அவர்களால் தப்ப முடியாது.
 
மேலும் வருமான வரி விதிகளை சுட்டிக்காட்டியிருக்கிறது ஜெயலலிதா தரப்பு. ஆனால் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டோருக்கு வருமான வரி விதிகள் பொருந்தாது. பொதுவாக எந்த ஒரு அரசியல் கட்சியும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வர மறுக்கின்றன. ஜெயலலிதா மீதான வழக்கு வருமான வரி வழக்கு அல்ல. பொதுவாழ்வில் உள்ள ஒருவர் மீது தொடரப்பட்ட ஊழல் வழக்காகத்தான் பார்க்க வேண்டும்.
 
ஊழலை ஒழிப்பதற்காக வலிமையான செயல்முறை எதுவும் நம் நாட்டில் இல்லை. அது உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு தவே வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், முதலமைச்சர் போன்ற பதவியில் இருப்போருக்கு தனிப்பட்ட நடத்தை விதிகள் எதுவும் உண்டா? அது குறித்து கர்நாடகா அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டடனர்.
 
உணவு இடைவேளைக்கு பின்னர் தொடர்ந்த வாதத்தில், இந்த வழக்கில் ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளன. இதற்காக ஜெயலலிதாவுக்குதான் நன்றி தெரிவிக்க வேண்டும். நமது நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கான செயல்முறை என்பது 0%தான் உள்ளது. அதனால்தான் அரசியல்வாதிகள் தப்பிவிடுகின்றனர் என்றார் தவே.

Read more at: http://tamil.oneindia.com/news/india/jayalalithaa-case-is-about-corruption-public-life-says-karnataka-247624.html
 
 
 
Breaking Now ஜெ. சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை 4 வாரங்களில் முடிக்கிறது உச்சநீதிமன்றம்

Read more at: http://tamil.oneindia.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
ஜெ. வழக்கு விசாரணையை 4 வாரத்தில் முடிக்கும் சுப்ரீம் கோர்ட்- வேட்புமனு தாக்கலுக்கு முன் "ரிசல்ட்"?
 
 
டெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து கர்நாடகா அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை 4 வாரங்களில் முடித்து தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாகவே இந்த வழக்கில் தீர்ப்பு வர வாய்ப்புள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் தனிநீதிமன்ற நீதிபதி குன்ஹா 4 ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்தார்.
 
இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தனிநீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்தார். இதை எதிர்த்து கர்நாடகா அரசு, திமுக பொதுச்செயலர் அன்பழகன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
 
தவே இறுதிவாதம்
இந்த வழக்கில் கடந்த 2 நாட்களாக கர்நாடகா அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தமது இறுதி வாதத்தை முன்வைத்து வருகிறார். அவரது வாதம் நாளையுடன் முடிவடைகிறது. பின்னர் அன்பழகன் தரப்பும் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பும் வாதங்களை முன்வைக்க உள்ளது
 
நீதிபதிகள் கண்டிப்பு
 
இந்த வழக்கின் விசாரணை நேற்று தொடங்கிய போதே ஏதேனும் காரணங்களை கூறி விசாரணையை தவிர்க்கக் கூடாது என்று அனைத்துத் தரப்புக்கும் அறிவுறுத்தியிருந்தனர் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வாராய். அத்துடன் வழக்கை ஒரு வார காலத்துக்கு ஒத்திவைக்கக் கோரிய ஜெயலலிதாவின் கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்திருந்தனர்.
 
4 வாரத்துக்குள்...
. இந்த வழக்கை அதிகபட்சம் 4 வாரங்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து வரும் நாட்களில் தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகிவிடும். அதனைத் தொடர்ந்து பிரசாரம் களைகட்ட, வேட்புமனுத் தாக்கல் நடைமுறைகள் தொடங்கும்.
 
வேட்புமனு தாக்கலுக்கு முன்னரே ரிசல்ட்
 
உச்சநீதிமன்றத்தின் தற்போதைய முடிவின்படி அனேகமாக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாக ஜெயலலிதாவின் விடுதலை செல்லுமா? செல்லாதா? என்ற இறுதித் தீர்ப்பு வந்துவிடும் என தெரிகிறது. ஜெயலலிதாவை விடுதலை செய்த குமாரசாமி தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்து குன்ஹா தீர்ப்பின்படி சிறைத் தண்டனை செல்லும் என தீர்ப்பளித்தால் ஜெயலலிதா சிறைக்கு செல்ல நேரிடும். சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் இது தமிழக அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகையால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் தமிழக அரசியல்தலைவர்கள்.

Read more at: http://tamil.oneindia.com/news/india/sc-likely-wind-up-hearing-jayalalithaa-case-4-weeks-247638.html
  • தொடங்கியவர்
ஜெ. வளர்ப்பு மகன் சுதாகரன் திருமண செலவில் குளறுபடி- கர்நாடகா விளக்கம் அளிக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவு
 
 
 
 டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக இருந்த சுதகாரனின் திருமண செலவில் குளறுபடி இருப்பதாகவும் அது குறித்து கர்நாடகா அரசு விளக்கம் தர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு விசாரணை நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். ஆனால் மேல்முறையீட்டு விசாரணையில் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்தார் 
SC seeks clarification from karnataka regarding calculations in jaya case
 
ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு, திமுக பொதுச்செயலர் அன்பழகன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று முதல் விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 2 நாட்களாக ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக கர்நாடகா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தமது இறுதிவாதங்களை முன்வைத்து வருகிறார். இன்றைய விசாரணையின் முடிவில் நீதிபதிகள் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
 
 
அதாவது, ஜெயலலிதா தன்னுடைய வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்துக்காக ரூ6.45 கோடி செலவு செய்ததாக விசாரணை அமைப்பு தெரிவித்திருக்கிறது. இதனை ஆராய்ந்த விசாரணை நீதிமன்றமோ, ஆதாரங்கள் அடிப்படையில் ரூ3 கோடியைக் குறைத்தது. அதனால் திருமண செலவு வெறும் ரூ3 கோடி என்றுதான் தீர்ப்பில் கூறியுள்ளது. அப்படியானால் எஞ்சிய ரூ45 லட்சம் எங்கே போனது? விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் கணக்கீடுகளில் 90% வித்தியாசம் இருக்கிறது. ஆகையால் சுதாகரன் திருமண செலவு குறித்து கர்நாடகா அரசு நாளை விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/india/sc-seeks-clarification-from-karnataka-regarding-calculations-in-jaya-case-247646.html
  • தொடங்கியவர்
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி குன்ஹா தீர்ப்பிலும் கணித பிழை... சுட்டிக்காட்டிய சுப்ரீம்கோர்ட்
 
 

 டெல்லி: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழக்கிய தீர்ப்பில், கணித தவறு இருப்பதை உச்சநீதிமன்ற நீதிபதி பினாக்கி சந்திர கோஸ் சுட்டிக்காட்டி விளக்கம் கேட்டார். சொத்துகுவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பெங்களூர் தனிக் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

நீதிபதி குன்ஹா அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதி குமாரசாமி இந்த அப்பீல் மனுவை விசாரித்து, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

அப்பீல் இதை எதிர்த்து கர்நாடக அரசும், அன்பழகன் தரப்பும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் முதல், கர்நாடக தரப்பு வாதம் தொடங்கியுள்ளது. ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி தனது தீப்பில் செய்த கணித தவறுகளை முன்வைத்து, கர்நாடக தரப்பு வழக்கறிஞர் தவே வாதிட்டு வருகிறார்.
 
கணித தவறு இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பில், கணித தவறு இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார் நீதிபதிகளின் ஒருவரான பினாக்கி சந்திரகோஸ். ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமண நிகழ்ச்சியில் செய்யப்பட்ட செலவீனம் குறித்த வாதம் வந்தபோது இந்த சந்தேகத்தை நீதிபதி கேட்டுள்ளார்.
 
பாதியை கணக்கிட்டது தவே வாதிடுகையில், சுதாகரன் திருமணத்திற்கு மொத்தம் ரூ.6 கோடியே 45 லட்சம் செலவிடப்பட்டுள்ளது என்பது குற்றச்சாட்டு. இதற்கான செலவீனங்களை ஜெயலலிதா மேற்கொண்டுள்ளார். சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டபோது, அரசு தரப்பின் வாதத்தை நீதிமன்றம் முழுமையாக ஏற்கவில்லை. திருமண செலவீனமாக ரூ.3 கோடியை மட்டுமே கணக்கில் எடுத்தது. அப்படி குறைத்து மதிப்பிட்டுமே ஜெயலலிதா வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணமானது.
 
ரூ.45 லட்சத்திற்கு கணக்கு அப்போது குறுக்கிட்ட நீதிபதி பினாக்கி சந்திரகோஸ், திருமண செலவு ரூ.6.45 கோடி என அரசு தரப்பு குற்றம்சாட்டிய நிலையில், ரூ.45 லட்சத்தை கணக்கில் எடுக்காமல், திருமண செலவு ரூ.6 கோடி என்றும், அதில் 3 கோடியை வேண்டுமானால் கழித்துவிடலாம் என்றும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கூறியுள்ளது. அந்த ரூ.45 லட்சம் குறித்து கணக்கில் வரவில்லை. ரூ.45 லட்சத்திற்கான செலவு கணக்கை இப்போது, காண்பிக்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.
 
ஜெ. தரப்புக்கு பின்னடைவு ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமியின் கணித தவறு குறித்து கர்நாடகா வாதம் செய்துவரும் நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவும் ரூ.45 லட்சத்தை கணக்கிடாமல் விட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இருப்பினும், இந்த தொகையை கணக்கில் கொள்ளாமலே கூட ஜெயலலிதா வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக நிரூபணாகியது. இப்போது சுப்ரீம் கோர்ட் இந்த தொகையையும் கணக்கில் சேர்க்க விளக்கம் கேட்டுள்ளது. இது ஜெயலலிதா தரப்புக்கு பின்னடைவாக மாற வாய்ப்புள்ளது.
 
  • தொடங்கியவர்
ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: அப்பீல் மனு மீதான விசாரணை மார்ச் 10-க்கு ஒத்திவைப்பு!
 

 

டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மார்ச் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார் பெங்களூர் தனிநீதிமன்ற நீதிபதி குன்ஹா. ஆனால் மேல்முறையீட்டு விசாரணையில் ஜெயலலிதாவை விடுதலை செய்தார் கர்நாடகா உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி. ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசும் திமுக பொதுச்செயலர் அன்பழகனும் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.

 

இந்த மனு மீதான விசாரணை முதலில் பிப்ரவரி 2-ந் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் இம்மனுவை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவரான பினாக்கி சந்திரகோஷ், அருணாசலப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிப்பதால் விசாரணையை ஒத்திவைக்கக் கோரி ஜெயலலிதா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்று மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப்ரவரி 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனடிப்படையில் கடந்த 23-ந் தேதி விசாரணை தொடங்கியது. அப்போதும் கூட இவ்வழக்கின் விசாரணையை 1 வார காலத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு அவகாசம் கோரியது.

 

ஆனால் நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வாராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதனை நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக கர்நாடகா அரசின் இறுதிவாதம் முன்வைக்கப்பட்டு வந்தது. ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக கர்நாடகா அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதங்களை முன்வைத்து வந்தார்.

 

இன்று 3-வது நாளாக இறுதிவாதத்தை துஷ்யந்த் தவே முன்வைக்க இருந்தார். இன்றைய விசாரணையின் போது அனைத்து தரப்பும் சாட்சிகள் பட்டியலை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். மேலும் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமண செலவு குறித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பில் உள்ள குளறுபடி குறித்து விளக்கம் அளிக்கவும் கர்நாடகா அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

 

இந்நிலையில் இன்று இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மார்ச் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அனைத்து தரப்பும் ஆதாரங்கள், சாட்சிகள், விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவரங்களை ஒட்டுமொத்தமாக தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல் கர்நாடகா அரசு தமது இறுதிவாதத்தை மார்ச் 10-ந் தேதியன்று முன்வைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த 2 நாட்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை 4 வார காலத்துக்குள் முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும் என உச்சநீதிமன்ற வட்டாரங்கள் கூறின. அதாவது தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாக இவ்வழக்கில் தீர்ப்பு வந்துவிடும் எனவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது மார்ச் 10-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இவ்வழக்கு விசாரணை மேலும் தாமதமாகும் என தெரிகிறது.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை முதல் மீண்டும் விசாரணை!
 

 

டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை முதல் மீண்டும் நடைபெற உள்ளது. கர்நாடகா அரசு தரப்பு தமது இறுதிவாதத்தை மேலும் 4 நாட்கள் முன்வைக்க உள்ளது.

1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்பது வழக்கு. இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்தார். இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த தனிநீதிமன்ற நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்தார்.

 

இதனை எதிர்த்து கர்நாடகா அரசு, திமுக பொதுச்செயலர் அன்பழகன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. அப்போது, கர்நாடகா அரசு தமது இறுதி வாதத்தை வைத்தது. கர்நாடகா அரசு தரப்பில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தமது வாதங்களை முன்வைத்தார்.

அவர் தமது வாதத்தில், முதல்வராக இருந்த ஜெயலலிதா ஊதியமாக ஒரு ரூபாய் பெற்றார்; ஆனால் அந்த கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ55 கோடி சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்; அவரது வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணம் இந்த நூற்றாண்டின் மிகப் பிரம்மாண்ட திருமணம்; கட்சி தொண்டர்களிடம் இருந்து தாம் நிதி பெற்றதாக ஜெயலலிதா கூறுவது பொய்; கர்நாடகா உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவின் சொத்துகளை மதிப்பிட்டதில் வெளிப்படையாகவே கணித பிழைகள் இருக்கிறது என சுட்டிக்காட்டினார்.

பின்னர் வழக்கின் தீர்ப்புகள் உள்ளிட்ட ஆவணங்களை அனைத்து தரப்பும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 10-ந் தேதிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு உடனடியாக வழக்கு ஆவணங்களைத் தாக்கல் செய்தது. கர்நாடகா அரசு சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நாளை மீண்டும் நடைபெற உள்ளது. கடந்த முறை விசாரணையின் போது இறுதிவாதத்தை முன்வைக்க 3 நாட்கள் தேவை என கர்நாடகா அரசு கோரியிருந்தது. தற்போது கர்நாடகா அரசு தரப்பு மேலும் 4 அல்லது 5 நாட்கள் அவகாசம் கோர இருக்கிறது.

கர்நாடகாவைப் பொறுத்தவரையில் எந்த ஒரு காரணத்துக்காகவும் ஒத்திவைக்கப்படாமல் இருந்தால் இந்த வழக்கு விசாரணை மொத்தம் 12 நாட்கள் நடைபெற்று தீர்ப்பு வந்துவிடும் என எதிர்பார்க்கிறது.

  • தொடங்கியவர்
Breaking Now
 
சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு வாதம் துவங்கியது
 
 
வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரிக்க அதிகாரமில்லை என ஜெ. தரப்பு வாதம்
 
ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் பரமானந்த் கட்டாரியா வாதம்
கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து வழக்கு
குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து 2 நீதிபதிகள் கொண்ட கர்நாடக நீதிமன்ற பெஞ்ச் தான் விசாரிக்க முடியும்- ஜெ. வக்கீல்
ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் உச்ச நீதிமன்றம் விசாரிக்க முடியாது- ஜெ. வக்கீல்
ஜெ. தரப்பு வாதத்தை விசாரிக்க நீதிபதிகள் ஒப்புதல்- மனு தாக்கல் செய்ய உத்தரவு

Read more at: http://tamil.oneindia.com/
  • தொடங்கியவர்
ஜெ.வுக்கு எதிரான அப்பீல்: 2 நீதிபதிகள் கொண்ட கர்நாடக பெஞ்ச் தான் விசாரிக்க முடியும்- ஜெ. வக்கீல்
 

 

 டெல்லி: முதல்வர் ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் விசாரிக்க முடியாது. மாறாக கர்நாடக உயர்நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச்தான் விசாரிக்க முடியும் என்று ஜெயலலிதா தரப்பில் இன்று ஆஜரான மூத்த வழக்கறிஞர் பரமானந்த் கட்டாரியா வாதிட்டார். இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், இந்தக் கோரிக்கையை மனுவாக (interlocutory application) தாக்கல் செய்யுமாறு ஜெயலலிதாவின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டது.

 

சொத்துகுவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பெங்களூர் தனிக் கோர்ட் தீர்ப்பளித்தது. நீதிபதி குன்ஹா அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதி குமாரசாமி இந்த அப்பீல் மனுவை விசாரித்து, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

 

  இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசும் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனும் அப்பீல் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான பிப்ரவரி 23ம் தேதி நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணை தொடங்கியது. முதலில் கர்நாடகத் தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிட்டார். அப்போது குமாரசாமியின் தீர்ப்பில் லாஜிக் இல்லை. அவரது தீர்ப்பில் கணிதப் பிழை அடங்கியுள்ளது. எனவே தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். துஷ்யந்த் தவே தம்முடைய வாதத்தை முன்வைக்க 3 நாட்கள் அவகாசம் கோரியிருந்தார். ஆனால் 2 நாட்கள் மட்டுமே அவர் வாதத்தை முன்வைத்த நிலையில் வழக்கில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு இன்றைய தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

 

இதனிடையே ஜெயலலிதா தரப்பு உடனடியாக சொத்து குவிப்பு வழக்கின் ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இன்றைய விசாரணையின் போது ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பரமானந்த் கட்டாரியா ஆஜரானார். அவர் தனது வாதத்தின்போது எடுத்து வைத்ததாவது: முதலில் இந்த மேல் முறையீட்டு மனுக்களை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரமே இல்லை. முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பை அளித்தது கர்நாடக உயர் நீதிமன்றம் (நீதிபதி குமாரசாமி). அந்தத் தீர்ப்பை எதிர்க்க வேண்டுமானால், 2 நீதிபதிகள் கொண்ட கர்நாடக உயர்நீதின்ற டிவிஷன் பெஞ்ச்சில்தான் அப்பீல் செய்திருக்க வேண்டும்.

 

ஏற்கனவே ஏராளமான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தேங்கி இருக்கும் நிலையில், இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரிக்க வேண்டியது இல்லை. 7 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை கொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என்றார். கட்டாரியாவின் வாதம் குறித்து விசாரிப்பதாகவும், இதுதொடர்பாக தனியாக மனு செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக கர்நாடா அரசு தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தமது இறுதிவாதத்தை தொடர்ந்து முன்வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து தவே தம்முடைய இறுதிவாதத்தை முன்வைத்து வருகிறார். மேலும் கர்நாடகா அரசு தரப்பில் ஜெயலலிதாவுக்கு எதிரான இந்த சொத்து குவிப்பு வழக்கின் அனைத்து ஆவணங்களும் இன்று தாக்கல் செய்யப்பட்டன.

  • தொடங்கியவர்
ஜெ. சிறை தண்டனையை கண்மூடித்தனமாக ரத்து செய்தார் நீதிபதி குமாரசாமி- கர்நாடகா வக்கீல் தவே
 
 
  டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை கர்நாடகா உயர்நீதிமன்றம் (நீதிபதி குமாரசாமி) கண்மூடித்தனமாக ரத்து செய்தது என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிட்டார்.
 
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு, திமுக பொதுச்செயலர் அன்பழகன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இம்மனுவை நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ் மற்றும் அமித்வாராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த மாதம் 23-ந் தேதி முதல் விசாரித்து வருகிறது.
Karnataka HC blindly reversed verdict of trial court in Jayalalithaa case
 
 இன்றைய விசாரணையின் போது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பரமானந்த் கட்டாரியா, மேல்முறையீட்டு மனுவையே உச்சநீதிமன்றம் விசாரிக்க முடியாது; கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தான் விசாரிக்க முடியும் என வாதிட்டார். இதை தனி மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தம்முடைய இறுதி வாதத்தை முன்வைக்க அனுமதித்தனர்.
 
இதைத் தொடர்ந்து தவே முன்வைத்த வாதம்:
 
ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதித்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை (நீதிபதி குன்ஹா தீர்ப்பை) கர்நாடகா உயர்நீதிமன்றம் (நீதிபதி குமாரசாமி) கண்மூடித்தனமான ரத்து செய்துள்ளது. எதற்காக ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்பதற்கான காரணம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்படவில்லை.
 
ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ66 கோடி சொத்து குவித்தார் என்பதை முதலில் ஏற்றுக் கொண்ட கர்நாடகா உயர்நீதிமன்றம் பின்னர் அந்த சொத்துக்களின் மதிப்பை வெகுவாக குறைத்துவிட்டது. எதற்காக கர்நாடகா உயர்நீதிமன்றம் இப்படி செய்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
 
ஜெயலலிதா உள்ளிட்டோரை கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது தவறுதான் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமே இல்லை. நீதியை நிலைநாட்டுவதற்கு ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அத்துடன் இந்த வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் முதலில் கர்நாடகா அரசை ஒருதரப்பாகவே சேர்க்கவில்லை.
 
பின்னர் உச்சநீதிமன்றம் தலையிட்ட நிலையில் ஒரே ஒரு நாள் வாதிட அனுமதித்தது. அதுவும் எழுத்துப்பூர்வமாக மட்டுமே வாதங்களை முன்வைக்க கர்நாடகா உயர்நீதிமன்றம் அனுமதித்திருந்தது. எதற்காக கர்நாடகா உயர்நீதிமன்றம் (நீதிபதி குமாரசாமி) இப்படி செய்ய வேண்டும்?
 
ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்த நீதிமன்ற தீர்ப்பில் ஜெயலலிதாவின் சொத்து விவரங்கள் முழுவதுமாக கணக்கிடப்பட்டுள்ளது. அதில் சாட்சிகளின் வாக்குமூலங்கள், ஆவணங்கள் அனைத்தும் மிகத் தெளிவாக இருக்கிறது. ஆகையால் ஜெயலலிதாவை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்து தண்டனை விதித்த விசாரணை நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தவே வாதிட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.