Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா சொத்து குவிப்பு அப்பீல் மனு மீதான விசாரணை

Featured Replies

  • தொடங்கியவர்

தீர்ப்பு எப்படி இருக்குமோ என்ற பயம்: ஜாமீனை நீட்டிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஜெ. திடீர் மனு!

 

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமது ஜாமீன் காலத்தை நீட்டிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீது நாளை மறுநாள் விசாரணை நடைபெற உள்ளது. பெங்களூரு தனிநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து அ.தி.முக. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர்.

 

 

தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் கடந்த அக்டோபர் 17ம் தேதி ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அத்துடன் விசாரணையை டிசம்பர் 18-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அப்போது, டிசம்பர் 18-ந் தேதிக்குள் மேல்முறையீட்டு மனுவை 4 பேரும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

 

ஏப்.18 வரை ஜாமீன் இந்த நிபந்தனையின் பேரில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இதன் பின்னர் உச்சநீதிமன்றத்தில் டிசம்பர் 18ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு அக்டோபர் 17ம் தேதி வழங்கப்பட்ட ஜாமீனை மேலும் நான்கு மாதங்களுக்கு அதாவது ஏப்ரல் 18ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

 

தனி பெஞ்ச் அமைக்க உத்தரவு அத்துடன், ஜெயலலிதா உள்ளிட்டோர் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க தனி பெஞ்சை ஏற்படுத்த வேண்டும். இந்த பெஞ்ச் மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். ஜெயலலிதா தரப்பு தங்களுடைய வாதங்களை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க ஒரு மாத கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். ஏதேனும் காரணங்களால் ஒரு மாதத்துக்குள் உத்தரவு வழங்க முடியவில்லை என்றால் மேலும் 15 நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

 

தீர்ப்பு ஒத்திவைப்பு இதன்படி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்றது. இந்த மேல்முறையீட்டு விசாரணை முடிந்து தீர்ப்பை நீதிபதி குமாரசாமி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.

 

ஜாமீன் காலம் முடிவடைகிறது.. இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட இடைக்கால நிபந்தனை ஜாமீன் ஏப்ரல் 18ம் தேதியோடு முடிவடைகிறது. ஆனால், கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பு இன்னும் வெளியாகவில்லை. ஜெயலலிதாவுக்கு எதிராக பவானி சிங் அரசு வழக்கறிஞராக ஆஜரானது செல்லாது என்ற திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் மனு மீது இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.

 

தீர்ப்பு பாதகமானால்... இந்த வழக்கில் பவானி சிங் ஆஜரானது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால் மீண்டும் புது வழக்கறிஞரை நியமித்து மீண்டும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு விசாரிக்கப்படும். அப்படி ஒரு நிலைமை உருவானால், 18ம் தேதியோடு ஜாமீன் முடிவதால், ஜெயலலிதா மீண்டும் சிறைக்குப் போக வேண்டிய நிலைமை வரும்.

 

ஜாமீன் நீட்டிப்பு கோரி மனு இந் நிலையில் ஜெயலலிதா உள்ளிட்டோர் தங்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் காலத்தை நீட்டிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீது நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 17ம் தேதியன்று தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து மற்றும் நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நடைபெற உள்ளது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sc-hear-jayalalithaa-s-extension-bail-plea-on-apr-17-224734.html

  • Replies 311
  • Views 29.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஜெ. வழக்கில் பவானி சிங்கை நீக்கக் கோரும் மனுவை பேரமர்வுக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: பவானி சிங்கை நீக்கக் கோரும் மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

*

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் அரசு வழ‌க்கறிஞராக பவானிசிங் ஆஜராவது தொடர்பாக க.அன்பழகன் தொடர்ந்து மனு வேறு பெரிய அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

இரு நீதிபதிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக மனு பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவானிசிங்கை நீக்கக்கோரும் திமுகவின் மனு இன்று பிற்பகல் 1.05 மணிக்கு விசாரணைக்கு வந்தது.

 

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது இரு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர். க.அன்பழகன் மனுவை ஏற்க நீதிபதி மதன் பி.லோகுர் சம்மதம் தெரிவித்தார்.

 

நீதிபதி லோகூர் மேலும் கூறும்போது, "பவானி சிங் அரசு வழக்கறிஞராக தொடர அனுமதித்தால் அது கிரிமினல் வழக்கு நீதி வழங்கும் முறைக்கு கிடைத்த தோல்வியாகும். மேல்முறையீட்டு மனு விசாரணை முழுவதும் அதிகார பலத்தால் சிதைக்கப்பட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கு 15 ஆண்டுகள் நடைபெற்றது என்பதே நாட்டில் நீதி வழங்கும் முறையில் அதிகாரம் படைத்தவர்கள் தலையீடு எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதற்கு ஒரு சான்று. எனவே, பவானி சிங், ஜெயலலிதா மேல்முறையீட்டு மனுவில் அரசு தரப்பில் தொடர்ந்து ஆஜராவது உகந்தது அல்ல" என்றார்.

 

ஆனால், நீதிபதி பானுமதியோ பவானி சிங் இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக தொடர முழு அதிகாரமும் இருக்கிறது என்றார்.

இரு நீதிபதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வழக்கு விசாரணை 3 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 11-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

 

இந்நிலையில் ஜெயலலிதா வழக்கில் அரசு வழ‌க்கறிஞராக ஆஜரான பவானிசிங்கின் நிய மனத்தில் குளறுபடி நடந்துள்ளது. இவ்வழக்கில் பவானிசிங் ஆஜரானது சட்டப்படி செல்லாது. எனவே அவரை நீக்க வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பை 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

 

மேலும் பவானிசிங் நியமனம் தொடர்பான மனுவில் தீர்ப்பு வெளியாகும் வரை கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவின் வழக்கில் தீர்ப்பு வழங்க தடை விதித்து உத்தரவிட்டது.

இதனால் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு எழுதும் பணிகள் நிறைவடைந்தும் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. இதனிடையே கர்நாடக உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி டி.ஹெச்.வகேலா சில நாட்களுக்கு முன்னர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இத்தகைய சூழலில் இன்று விசாரணைக்கு வந்த திமுக மனு வேறொரு பேரமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

தீர்ப்பு எப்போது?

கர்நாடக உயர் நீதிமன்றம் சிறப்பு அமர்வில் உள்ள மேல்முறையீட்டு மனு தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக 'தி இந்து'வுக்கு பேட்டியளித்த கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் படேல், "ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு வழங்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு விதித்த தடை நீக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் இருந்து எந்த ஒரு எழுத்துப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. தீர்ப்பு நகல் வந்த் பிறகே இவ்விவகாரத்தில் அடுத்த கட்ட நிலவரம் தெரியவரும்" என்றார்.
 

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article7105130.ece

  • தொடங்கியவர்

ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எப்போது?
 

 

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த வழக்கில் பவானி சிங்கை நீக்கக் கோரி திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

திமுக மனுவை விசாரித்த 2 நீதிபதிகளில், நீதிபதி மதன் பி.லோகுர் திமுக மனு ஏற்புடையதே என்றும் நீதிபதி பானுமதி பவானி சிங் வழக்கில் தொடர்வதில் சட்ட விதிமீறல் இல்லை என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து திமுக மனு பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. | செய்திக்கு - ஜெ. வழக்கில் பவானி சிங்கை நீக்கக் கோரும் மனுவை பேரமர்வுக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம் |

 

 

மனு மீது மாறுபட்ட கருத்து தெரிவித்த நீதிபதிகள் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு வழங்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு விதித்த தடையை நீட்டிப்பதாக ஏதும் கூறவில்லை. எனவே கர்நாடக நீதிமன்றத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை விலக்கிக்கொள்ளப்பட்டதாகவே கருதப்படுகிறது.

இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றம் சிறப்பு அமர்வில் உள்ள மேல்முறையீட்டு மனு தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

 

 

இத்தைகய சூழலில், தி இந்துவுக்கு பேட்டியளித்த கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் படேல், "ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு வழங்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு விதித்த தடை நீக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் இருந்து எந்த ஒரு எழுத்துப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. தீர்ப்பு நகல் வந்த் பிறகே இவ்விவகாரத்தில் அடுத்த கட்ட நிலவரம் தெரியவரும்" என்றார்.

இருப்பினும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கறிஞர்கள் குவிந்துள்ளனர். தீர்ப்புக்கு தடை நீட்டிக்கப்படாததால் இன்றைக்கே நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கக்கூடும் என அதிமுகவினர் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
 

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/article7105286.ece

  • தொடங்கியவர்

"பவானி சிங் நியமனத்தில் தவறில்லை'' என தீர்ப்பளித்த நீதிபதி பானுமதி தமிழகத்தை சேர்ந்தவர்!

 

டெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானதில் தவறு இல்லை என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தமிழகத்தைச் சேர்ந்தவர். ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில், அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராக கூடாது என்று தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை நீதிபதிகள் மதன் லோகூர் மற்றும் பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து இன்று தீர்ப்பளித்தது.

 

 

இதில் பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்ததில் தவறு எதுவும் இல்லை நீதிபதி பானுமதியும், அவரது நியமனம் தவறானது என நீதிபதி மதன் லோகூரும் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தற்போது 3 நீதிபதிகள் கொண்ட அரசிய சாசன பெஞ்ச்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்ததில் தவறு இல்லை தீர்ப்பளித்த நீதிபதி தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பிரேமானந்தா சாமியார் வழக்கு, ஜல்லிக்கட்டு போன்ற பல முக்கிய வழக்குகளில் அதிரடித் தீர்ப்பு அளித்தவர் அவர். நீதிபதி பானுமதி, தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர். 20-7-1955 அன்று பிறந்தார்.

 

 

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். பின்னர் 16-11-88 அன்று நேரடியாக மாவட்ட நீதிபதியானார். கோவை, சென்னை, வேலூர், புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நீதிபதியாக அவர் பணியாற்றியுள்ளார். பானுமதி வழங்கிய அதிரடி தீர்ப்புகள்.. சர்ச்சைக்குரிய சாமியார் பிரேமானந்தா மீதான பலாத்கார வழக்கில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அளித்த தீர்ப்பின் மூலம் நீதிபதி பானுமதியின் பெயர் பிரபலமானது. 2003ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியானார் அவர். ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து நீதிபதி பானுமதி முக்கிய தீர்ப்பளித்திருந்தார்.

 

 

2009 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் நடைபெற்றது தொடர்பான வழக்கில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரடியாக சஸ்பென்ட் செய்து நீதிபதி பானுமதி உத்தரவிட்டிருந்தார். 2010ஆம் ஆண்டு சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு ஏற்று நடத்துவது சரியே என தீர்ப்பளித்ததுடன், கோயில் நிர்வாகம் என்பது மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும்; அரசுக்கு அதில் தலையிட உரிமை உண்டு என்ற அதிரடித் தீர்ப்பையும் அவர் கொடுத்தார். இதேபோல் சந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்றதற்காக ஆயிரத்துக்கும் அதிகமான அதிரடிப்படையினருக்கு பணி மூப்பு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை அதிரடியாக ரத்து செய்து தமிழக அரசுக்கு கண்டனமும் தெரிவித்திருந்தார்.

 

 

மேலும் திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதை தடை விதித்தவரும் நீதிபதி பானுமதிதான். அதன் பின்னர் 2013ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண் பானுமதிதான்... தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராவது குறித்த வழக்கில், அவரது நியமனத்தில் தவறில்லை என்று அதிரடி தீர்ப்பளித்திருக்கிறார். நீதிபதி மதன் லோகூர்.. இதே வழக்கில் பவானிசிங் நியமனம் தவறானது என்று தீர்ப்பளித்து ஜெயலலிதா தரப்பை மிகவும் சாடியிருக்கும் மற்றொரு நீதிபதியான மதன் லோகூர் டெல்லியைச் சேர்ந்தவர்.

 

 

டெல்லி பல்கலைக் கழகத்தில் பட்டம் மற்றும் சட்டப்படிப்பை முடித்தவர். 1977ஆம் ஆண்டு வழக்கறிஞராக சட்டப் பணியை தொடங்கினார். 1998ஆம் ஆண்டு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார் லோகூர். 1999ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார். டெல்லி உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியாக சில மாதங்கள் அவர் பணியாற்றினார். குவஹாத்தி மற்றும் ஆந்திர மாநில உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக பணியாற்றி லோகூர் 2012ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உச்சநீதிமன்றம் நியமித்த பல்வேறு குழுக்களில் நீதிபதி மதன் லோகூர் இடம்பெற்றிருக்கிறார்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/bhavani-singh-continue-appeal-high-court-justice-banumathi-224778.html

  • தொடங்கியவர்

நீதி நடைமுறையை, ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்தலாம் என்பதன் உதாரணம்.. ஜெ.வழக்கு பற்றி நீதிபதி ஆதங்கம்

 

டெல்லி: அதிகாரத்தில் இருப்பவர்கள் நீதி பரிபாலன நடைமுறையை எப்படி கட்டுப்படுத்த முடியும் என்பதற்கு, ஜெயலலிதா வழக்கு ஒரு உதாரணம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் லோகூர் கடுமையாக கூறியுள்ளார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வக்கீலாக ஆஜரான, பவானிசிங், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது ஆஜராக கர்நாடக அரசால் நியமிக்கப்படவில்லை. நீதி நடைமுறையை, ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்தலாம் என்பதன் உதாரணம்.. ஜெ.வழக்கு பற்றி நீதிபதி ஆதங்கம் இருப்பினும், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையே, ஒரு அனுமதி கடிதத்தை கொடுத்து பவானிசிங்கை ஆஜராக கேட்டுக் கொண்டது.

 

 

அதன் அடிப்படையில் பவானிசிங் ஆஜரானார். எனவே, இந்த நியமனம் செல்லாது என்பது அன்பழகன் தரப்பின் உச்ச நீதிமன்ற வாதமாக இருந்தது. இந்த வழக்கு புதுமையானது. பல வழக்குகளுக்கு முன்னுதாரணமாக ஆக வேண்டியது. அதாவது, கீழ்மை நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜரான ஒரு வழக்கறிஞர், வழக்கை நடத்துபவர் சம்மதம் இன்றியே உயர் நீதிமன்றத்திலும், ஆஜராகலாமா, ஆக முடியாதா என்பதை தீர்மானிக்க இந்தியா முழுமைக்குமே, இந்த தீர்ப்பு முன்னுதாரணமாக மாறும். எனவே, மிகுந்த கவனத்துடன் வழக்கு விசாரிக்கப்பட்டது. மதியம், 1 மணிக்கு நீதிபதி மதன் லோகூர் முதலில் தனது தீர்ப்பை வழங்கினார்.

 

 

அதில் பவானிசிங் ஆஜரானது தவறு என்று குறிப்பிட்டார். ஒரு கிரிமினல் வழக்கை எப்படி நடத்த கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றும் மதன் லோகூர் தெரிவித்தார். தீர்ப்பை தாண்டி, தனது விசாரணையின் மூலம் கிடைத்த அனுபவத்தை கொண்டு, சில கருத்துக்களை கடுமையாக பதிவு செய்துள்ளார் நீதிபதி மதன் லோகூர். அவர் கூறியதாவது: ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், பவானிசிங் ஆஜரானது, நீதி பரிபாலன முறையின் தோல்வியை காண்பிக்கிறது. பவானிசிங் ஆஜரானதால், மேல்முறையீட்டு விசாரணை முழுவதுமே, சிதைக்கப்பட்டுவிட்டது.

 

 

அதிகாரத்தில் உள்ளவர்கள் நினைத்தால், நீதி பரிபாலன நடைமுறையை எப்படி கட்டுப்படுத்த முடியும் என்பதை, இந்த வழக்கு காண்பிக்கிறது. வழக்கு விசாரணையே, 15 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்றுள்ளது என்பதை வைத்து பார்க்கும்போதே, அதிகாரத்தில் உள்ளவர்களின் கைப்பாவையாக, துரதிருஷ்டவசமாக, நீதிபரிபாலன நடைமுறை மாறியது என்பது தெளிவாகிறது. இந்த தவறை திருத்திக்கொள்ள இப்போதுதான் நேரம் கூடியுள்ளது.

 

 

ஏனெனில், இந்த வழக்கே அதற்கு ஒரு சரியான உதாரணம். இந்த வழக்கில், மொத்த இழப்புமே, நீதிபரிபாலன நடைமுறைக்குதான். இவ்வாறு லோகூர் தனது ஆதங்கத்தை கூறியுள்ளார். ஆனால், நீதிபதி பானுமதியோ, கீழ்மை நீதிமன்றத்தில் ஆஜராக கர்நாடக அரசு கொடுத்த அனுமதி ரத்து செய்யப்படாததை காரணமாக கூறி, பவானிசிங் ஆஜரானது செல்லும் என்று கூறியுள்ளார். மூன்று நீதிபதிகள் பென்ச் எடுக்கும் முடிவு, வருங்காலத்தில் பல வழக்குகளுக்கு முன்னுதாரணமாக மாறும் என்பதால், இவ்வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/bhavani-singh-appearance-affects-jaya-case-sc-judge-224779.html

  • தொடங்கியவர்

ஜெ. மேல்முறையீட்டு வழக்கில் ஏப்.30-ல் தீர்ப்பு? நீதிபதி குமாரசாமியின் கடிதத்தால் பரபரப்பு!!

 

 

பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை வழங்குவதற்கு ஏப்ரல் 30-ந் தேதி வரை கால அவகாசம் தேவை என்று தலைமை நீதிபதி ஹெச்.எல் தத்துவுக்கு கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.

 

 

இதனால் ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் ஏப்ரல் 30-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜெ. மேல்முறையீட்டு வழக்கில் ஏப்.30-ல் தீர்ப்பு? நீதிபதி குமாரசாமியின் கடிதத்தால் பரபரப்பு!! வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதமும் இதர மூவருக்கு தலா ரூ10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தனர்.

 

 

இதனிடையே ஜெயலலிதாவுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச், மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க தனி பெஞ்ச் நீதிபதியை கர்நாடகா உயர்நீதிமன்றம் நியமிக்க வேண்டும்; ஜெயலலிதா தரப்பு எந்த தாமதமும் செய்யக் கூடாது; வழக்கை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்; தீர்ப்பு வழங்க மேலும் ஒரு மாதம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் தனி பெஞ்ச் நீதிபதியாக குமாரசாமி நியமிக்கப்பட்டார். அவர் கடந்த ஜனவரி 5-ந் தேதி முதல் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜனவரி 5-ந் தேதி தொடங்கி மார்ச் 11-ந் தேதியன்று முடித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனைப்படி ஏப்ரல் 17-ந் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஆஜராவதை எதிர்த்து தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தாங்கள் தீர்ப்பு வழங்கும் ஏப்ரல் 15-ந் தேதி வரை மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை வெளியிட கூடாது என்று இடைக்காலத் தடை விதித்திருந்தனர்.

 

 

இந்நிலையில் பவானிசிங்கை நீக்கக் கோரும் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று இறுதித் தீர்ப்பளித்தது. நீதிபதிகள் மதன் லோகூர், பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இவ்வழக்கில் இருவேறுபட்ட தீர்ப்புகளை அளித்தது. மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானது சட்டவிரோதம் என்றும் நீதிபரிபாலனத்தை குற்றவாளிகள் தரப்பு வளைப்பதற்கு அரசு வழக்கறிஞர் உடந்தையாக இருந்தார் என்றும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தார் நீதிபதி லோகூர். ஆனால் நீதிபதி பானுமதியோ, ஒரு வழக்கின் இன்சார்ஜ் ஆக வழக்கறிஞர் நியமிக்கப்படும் போதே அது மேல்முறையீட்டுக்கும் பொருந்தும் என்பதால் பவானிசிங் ஆஜரானதில் தவறில்லை என்று தீர்ப்பளித்தார். மேலும் மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடகா தனி நீதிபதி பெஞ்ச் குமாரசாமி தீர்ப்பளிக்கத் தடை இல்லை என்றும் அது நீதிபதி குமாரசாமியின் கையில் இருக்கிறது என்றும் நீதிபதி பானுமதி தமது தீர்ப்பில் கூறினார். ஆனால் நீதிபதி லோகூர், மேல்முறையீட்டு தீர்ப்பு வழங்குவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

 

 

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு 3 நீதிபதிகளைக் கொண்ட பெரிய பெஞ்ச்சுக்கு மாற்றப்பட்டது. இதனால் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எப்போது என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் கர்நாடகா தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குமாரசாமிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் தற்போதைய நிலையில் தீர்ப்புக்கு இறுதி வடிவம் தர இயலாத நிலை உள்ளது. இதனால் தீர்ப்பு வழங்க மேலும் 15 நாட்கள் அதாவது ஏப்ரல் 30-ந் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார். இதனால் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் ஏப்ரல் 30-ந் தேதி தீர்ப்பு வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/justice-kumaraswamy-seeks-extend-time-pronounce-verdict-jaya-224813.html

  • தொடங்கியவர்

சட்டமா, தார்மீகமா; நீதிபதி குமாரசாமி முடிவு என்ன? 17ம் தேதி தெளிவு பிறக்கும்

 

 

முன்னாள் முதல்வர் ஜெ., மீதான சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க, உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை; ஆனால், வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, தீர்ப்பு வழங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

3 நீதிபதிகள் :

அரசு வழக்கறிஞர் பவானிசிங் நியமனத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் தொடர்ந்த மனுவை, நீதிபதிகள் மதன் லோகூர், பானுமதி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது.நீதிபதிகள் இருவரும், தனித்தனியே உத்தரவு பிறப்பித்தனர். தீர்ப்பு மாறுபட்டதால், இந்த வழக்கு, மூன்று நீதிபதிகள் எண்ணிக்கையை கொண்ட, 'பெஞ்ச்' விசாரணைக்கு செல்கிறது.பொதுவாக, உயர் நீதிமன்றங்களில், இவ்வாறு மாறுபட்ட தீர்ப்பை வழங்கும்போது, அந்த வழக்கை, மூன்றாவதாக ஒரு நீதிபதி விசாரிப்பார். அந்த நீதிபதி வழங்கும் உத்தரவைப் பொறுத்து, முடிவு மாறும்.உதாரணத்துக்கு, பவானிசிங் நியமனம் தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது என எடுத்து கொள்வோம். இரண்டு நீதிபதிகள், இந்த வழக்கை விசாரிக்கின்றனர்.

 

 

ஒரு நீதிபதி, 'நியமனம் செல்லும்' என்றும், மற்றொரு நீதிபதி, 'செல்லாது' என்றும், உத்தரவு பிறப்பிக்கின்றனர். அப்போது, அந்த வழக்கு, மூன்றாவது நீதிபதி ஒருவரின் விசாரணைக்கு அனுப்பப்படும்.அந்த நீதிபதி, 'நியமனம் செல்லும்' என, தீர்ப்பளித்தால், ஏற்கனவே, ஒரு நீதிபதி, 'செல்லும்' என தீர்ப்பளித்திருப்பதால், 'நியமனம் செல்லும்' என்பது, இறுதி தீர்ப்பாக அமையும். எனவே, மூன்றாவது நீதிபதியின் முடிவைப் பொறுத்து, தீர்ப்பு அமையும்.உச்ச நீதிமன்றத்தில், அவ்வாறு இல்லை; இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கும் போது, அந்த வழக்கு, மூன்று நீதிபதிகள் கொண்ட, 'பெஞ்ச்' விசாரணைக்கு அனுப்பப்படுகிறது.

 

 

இனிமேல், அந்த, 'பெஞ்ச்'சில் உள்ள நீதிபதிகள், யார் யார் என்பதை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தான் முடிவு செய்ய வேண்டும். அவர் முடிவெடுத்து, நீதிபதிகளை நியமித்த பின், வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும்.தற்போது, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை முடிந்து, தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்பழகன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'தீர்ப்பை, 15ம் தேதி வரை வழங்க வேண்டாம்' என, கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது. தற்போது, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து விட்டதால், தீர்ப்பு வழங்குவது, நீதிபதி குமாரசாமியின் கையில் உள்ளது.அ.தி.மு.க.,வினரைப் பொறுத்தவரை, 16ம் தேதி (இன்று) தீர்ப்பு வெளிவந்து விடும் என, மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பில், பலத்த அடி விழுந்துள்ளது.

தார்மீக அடிப்படை:

உச்ச நீதிமன்றம் தடை ஏதும் விதிக்காத நிலையில், நீதிபதி குமாரசாமி ஏன் தீர்ப்பு வழங்க கூடாது என்ற கேள்வியும் எழுகிறது.சட்ட ரீதியாக அவருக்கு தடை இல்லை என்றாலும், தார்மீக அடிப்படையில் பார்த்தால், தீர்ப்பு வழங்க மாட்டார் என்றே கூறப்படுகிறது. நீதிபதி குமாரசாமியைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்றம் விதித்த வரம்பின்படி, மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடித்து விட்டார்.இந்த வழக்கில், அரசு வழக்கறிஞர் நியமனம் பற்றி அடிப்படை பிரச்னை எழுப்பப்பட்டுள்ளதால், உச்ச நீதிமன்ற விசாரணையின் முடிவில், 'அரசு வழக்கறிஞர் பவானிசிங் நியமனம் செல்லாது' என, உத்தரவிடப்பட்டால், உயர் நீதிமன்ற உத்தரவு கேள்விக்குறியாக விடும்.மாறுபட்ட உத்தரவை பிறப்பித்தாலும், அந்த வழக்கில் முடிவு வரும் வரை, கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க முடியாது என்றே, வழக்கறிஞர்களும் கூறுகின்றனர்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், ஜாமின் மனு, 17ம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது, இந்த விஷயத்தில் தெளிவு கிடைக்கும் என, வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1231007

  • தொடங்கியவர்

ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: பவானிசிங் ஆஜரானதற்கு எதிரான மனு மீது 21- ஆம் தேதி விசாரணை

 

டெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரானதை எதிர்த்த மனு மீதான விசாரணை வரும் ஏப்ரல் 21-ந் தேதி விசாரனைக்கு வருகிறது. ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் பவானிசிங் அரசு வழக்கறிஞராக ஆஜரானார்.

 

 

இதேபோல் மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையிலும் அரசு வழக்கறிஞராக பவானிசிங்கே ஆஜரானார். ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: பவானிசிங் ஆஜரானதற்கு எதிரான மனு மீது 21- ஆம் தேதி விசாரணை இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று கோரியும் தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோகூர், ஆர்.பானுமதி ஆகியோர் கொண்ட பெஞ்ச்சில் நடைபெற்று வந்தது.

 

 

இந்த வழக்கில் நீதிபதிகள் மதன் பி.லோகூர் மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் நேற்று தனித்தனியாக மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். அதாவது நீதிபதி மதன் பி.லோகூர், 'பவானிசிங் நியமனம் செல்லாது' என்றும் மற்றொரு நீதிபதி பானுமதி, ‘பவானிசிங் நியம‌னம் செல்லும்' என தீர்ப்பை வழங்கினர். இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், 3 நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் விசாரிக்கவும் பரிந்துரை இருவரும் செய்தனர்.

 

இதையடுத்து பவானி சிங் நியமனத்துக்கு எதிரான க. அன்பழகனின் மனு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் வரும் 21-ந் தேதி விசாரணைக்கு வரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனுவை விசாரிக்கும் பெஞ்ச்சில் இடம்பெறும் நீதிபதிகள் பெயரை பின்னர் தலைமை நீதிபதி தத்து அறிவிப்பார் என்றும் தெரிவ்க்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sc-3-member-bench-will-start-hearing-dmk-plea-agains-bhavani-224881.html


ஜெ. ஜாமீன் நீட்டிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி திடீர் மனு!!

 

டெல்லி : சொத்துக் குவிப்பு வழக்கில் தமக்கு வழங்கப்பட்ட ஜாமீன் மனுவை நீட்டிக்கக் கோரி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ரத்து செய்ய கோரி டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட இடைக்கால நிபந்தனை ஜாமீன் ஏப்ரல் 18-ந் தேதியுடன் முடிவடைகிறது.

 

 

ஜெ. ஜாமீன் நீட்டிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி திடீர் மனு!! இதனிடையே சொத்து குவிப்பு வழக்கின் தண்டனையை எதிர்த்து தாம் செய்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஜெயலலிதா தமது ஜாமீனை நீட்டிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை நாளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து முன்னிலையில் நடைபெற உள்ளது.

 

 

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கான ஜாமீனை நீட்டிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்துவிடம் ஒருமனுவத் தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/traffic-ramaswamy-opposes-jaya-s-bail-extension-224880.html


உச்சநீதிமன்றம் 'கிரீன் சிக்னல்'.. ஜெ. அப்பீல் வழக்கில் ஏப். 30ம் தேதி நீதிபதி குமாரசாமி தீர்ப்பு?!

 

 

பெங்களூரு: ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எப்ப வருமோ? என்னவாகுமோ? என்று தமிழக அரசியல் வட்டாரங்கள் பரபரக்க ஏப்ரல் 30ம் தேதி நீதிபதி குமாரசாமி தீர்ப்பு வழங்கலாம் என்று தெரிகிறது. ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் நியமனத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் தொடர்ந்த மனுவை, நீதிபதிகள் மதன் லோகூர், பானுமதி அடங்கிய பெஞ்ச்' விசாரித்தது. நீதிபதிகள் இருவரும், தனித்தனியே உத்தரவு பிறப்பித்தனர்.

 

 

தீர்ப்பு மாறுபட்டதால், இந்த வழக்கு, மூன்று நீதிபதிகள் எண்ணிக்கையை கொண்ட, பேரமர்வு விசாரணைக்கு செல்கிறது. உச்சநீதிமன்றம் 'கிரீன் சிக்னல்'.. ஜெ. அப்பீல் வழக்கில் ஏப். 30ம் தேதி நீதிபதி குமாரசாமி தீர்ப்பு?! பொதுவாக, உயர் நீதிமன்றங்களில், இவ்வாறு மாறுபட்ட தீர்ப்பை வழங்கும்போது, அந்த வழக்கை, மூன்றாவதாக ஒரு நீதிபதி விசாரிப்பார். அந்த நீதிபதி வழங்கும் உத்தரவைப் பொறுத்து, முடிவு மாறும். உதாரணத்துக்கு, பவானிசிங் நியமனம் தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது என எடுத்து கொள்வோம். இரண்டு நீதிபதிகள், இந்த வழக்கை விசாரிக்கின்றனர். ஒரு நீதிபதி, 'நியமனம் செல்லும்' என்றும், மற்றொரு நீதிபதி, 'செல்லாது' என்றும், உத்தரவு பிறப்பிக்கின்றனர். அப்போது, அந்த வழக்கு, மூன்றாவது நீதிபதி ஒருவரின் விசாரணைக்கு அனுப்பப்படும். அந்த நீதிபதி, 'நியமனம் செல்லும்' என, தீர்ப்பளித்தால், ஏற்கனவே, ஒரு நீதிபதி, 'செல்லும்' என தீர்ப்பளித்திருப்பதால், 'நியமனம் செல்லும்' என்பது, இறுதி தீர்ப்பாக அமையும். எனவே, மூன்றாவது நீதிபதியின் முடிவைப் பொறுத்து, தீர்ப்பு அமையும். உச்ச நீதிமன்றத்தில், அவ்வாறு இல்லை; இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கும் போது, அந்த வழக்கு, மூன்று நீதிபதிகள் கொண்ட, 'பெஞ்ச்' விசாரணைக்கு அனுப்பப்படுகிறது.

 

 

இனிமேல், அந்த, பெஞ்ச்சில் உள்ள நீதிபதிகள், யார் யார் என்பதை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தான் முடிவு செய்ய வேண்டும். அவர் முடிவெடுத்து, நீதிபதிகளை நியமித்த பின், வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும். தற்போது, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை முடிந்து, தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்பழகன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'தீர்ப்பை, 15ம் தேதி வரை வழங்க வேண்டாம்' என, கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது. தற்போது, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து விட்டதால், தீர்ப்பு வழங்குவது, நீதிபதி குமாரசாமியின் கையில் உள்ளது என்று நீதிபதிகளே தெரிவித்துவிட்டனர். அ.தி.மு.கவினரைப் பொறுத்தவரை, இன்று தீர்ப்பு வெளிவந்து விடும் என, மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர்.

 

 

அது நடக்காத காரியம் என்பது தற்போது தெளிவாகிவிட்டது. நீதிபதி குமாரசாமியைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்றம் விதித்த வரம்பின்படி, மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடித்து விட்டார். தீர்ப்பு வழங்க நீதிபதி குமாரசாமிக்கு சட்ட ரீதியாக அவருக்கு தடை இல்லை என்றாலும், தார்மீக அடிப்படையில் பார்த்தால், தீர்ப்பு வழங்க மாட்டார் என்றே கூறப்பட்டது. இந்த வழக்கில், அரசு வழக்கறிஞர் நியமனம் பற்றி அடிப்படை பிரச்சனை எழுப்பப்பட்டுள்ளதால், உச்ச நீதிமன்ற விசாரணையின் முடிவில், 'அரசு வழக்கறிஞர் பவானிசிங் நியமனம் செல்லாது' என, உத்தரவிடப்பட்டால், உயர் நீதிமன்ற உத்தரவு கேள்விக்குறியாக விடும் என்று கூறப்படுகிறது. மாறுபட்ட உத்தரவை பிறப்பித்தாலும், அந்த வழக்கில் முடிவு வரும் வரை, கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க முடியாது என்றே, வழக்கறிஞர்களும் கூறிவந்தனர்.

 

 

இது ஒருபுறம் இருக்க சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை வழங்க, கூடுதல் அவகாசம் தருமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹச் எல் தத்துவுக்கு, கர்நாடகா சிறப்பு நீதிமன்ற நீதிபதி குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில், மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை வழங்க ஏப்ரல் 15ம் தேதி வரை உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி குமாரசாமி, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தீர்ப்பு வழங்க இயலாததால், ஏப்ரல் 30ம் தேதிவரை அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து, நாளை முடிவெடுப்பார் எனத் தெரிகிறது. இதனால் ஏப்ரல் 30ம் தேதியன்று தீர்ப்பு வழங்குவதற்கு நீதிபதி குமாரசாமி தயாராகிவிட்டார்... என்பதையே அவரது கடிதம் வெளிப்படுத்துகிறது. ஆக ஏப்ரல் 30-ல் க்ளைமாக்ஸ்!!

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/will-justice-kumarasamy-deliver-the-judgement-224838.html

  • தொடங்கியவர்

ஜெயலலிதா ஜாமீனை மே 12 வரை நீட்டித்தது உச்ச நீதிமன்றம்

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிக்கு மே 12 வரை அவகாசம் வழங்கியது உச்ச நீதிமன்றம்

*

சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மே 12 வரை ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பிறப்பித்தது.

 

மேலும், ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மேல் முறையீட்டில் தீர்ப்பு வழங்க, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிக்கு மே 12 வரை கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

பவானி சிங்கை நீக்கக் கோரும் திமுக மனு பேரமர்வுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கர்நாட உயர் நீதிமன்ற நீதிபதிக்கு மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு கூற கூடுதல் அவகாசம் கோர சட்டப்பூர்வமாக அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

சொத்துக் குவிப்பு வழக்கில், கடந்த 27-ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி’குன்ஹா ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டார். சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கும் தலா 4 ஆண்டு காலம் சிறையும், ரூ.10 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டார். அன்றைய தினமே ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

 

இதனையடுத்து ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 17 வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 18 வரை 4 மாதங்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் ஜாமீன் நாளையுடன் நிறைவடைகிறது. தங்களது ஜாமீனை நீட்டிக்கக் கோரி அவர்கள் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து, ஏ.கே.மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மே 12 வரை ஜாமீன் நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும், ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மேல் முறையீட்டில் தீர்ப்பு வழங்க, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிக்கு மே 12 வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.
 

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87-12-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article7112992.ece

  • தொடங்கியவர்

ஜெ. மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானதை எதிர்த்து அன்பழகன்

பவானிசிங்கை நீக்கக் கோரும் அன்பழகன் மனுவை விசாரிக்கும் 3 நீதிபதிகள் பெஞ்ச் அறிவிப்பு

 

நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே. அகர்வால், பிரபுல் சி. பந்த் ஆகியோர் அன்பழகன் மனுவை விசாரிப்பர்

Read more at: http://tamil.oneindia.com/

 

  • தொடங்கியவர்

பவானி சிங்கை நீக்கக் கோரும் மனு: 3 நீதிபதிகள் அமர்வை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
 

 

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராவதற்கு தடை விதிக்கக் கோரும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் மனுவை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது.

 

உச்ச நீதிமன்றம் இதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அமர்வில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல சி. பன்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மூவர் அமர்வில் இடம்பெற்றுள்ள ஆர்.கே.அகர்வால், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

 

ஏப்.21-ல் விசாரணை:

பவானி சிங் ஆஜராவதற்கு தடை விதிக்கக் கோரும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் மனு வரும் 21-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

 

வழக்கு பின்னணி:

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராவதற்கு தடை விதிக்கக் கோரும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் மனு, முரண்பட்ட தீர்ப்பால் பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

ஜெயலலிதா வழக்கில், அரசு தரப்பில் பவானி சிங் ஆஜராவதற்கு தடை கோரி அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இம்மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி. லோகுர் தலைமையில், நீதிபதி ஆர். பானுமதி அடங்கிய இருநபர் அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது.

ஏப்ரல் 15-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனவும், அதுவரை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் மேல் முறையீட்டு மனு மீது தீர்ப்பு வழங்க இடைக்காலத் தடை விதித்தும் உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டிருந்தது.

 

முரணான தீர்ப்பு

இந்நிலையில், நேற்று அன்பழகன் மனு மீது தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நீதிபதி மதன் பி. லோகுர், “பவானி சிங் அரசு வழக்கறிஞராக தொடர அனுமதித்தால் அது கிரிமினல் வழக்கில் நீதி பரிபாலன முறைக்கு கிடைத்த தோல்வியாகும். மேல்முறையீட்டு மனு விசாரணை முழுவதும் அதிகார பலத்தால் சிதைக்கப்பட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கு 15 ஆண்டுகள் நடைபெற்றது என்பதே, அதிகாரம் படைத்தவர்களின் தலையீடு நீதித்துறையில் எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதற்கு ஒரு சான்று. எனவே, பவானி சிங், ஜெயலலிதா மேல்முறையீட்டு மனுவில் அரசு தரப்பில் தொடர்ந்து ஆஜராவது உகந்தது அல்ல” எனத் தீர்ப்பளித்தார்.

 

ஆனால், மற்றொரு நீதிபதி ஆர். பானுமதி, பவானி சிங் அரசு தரப்பில் ஆஜராவதற்கு முழு அதிகாரம் உள்ளது எனத் தீர்ப்பளித்தார். மேலும், “கர்நாடக அரசு கடந்த 2013 பிப்ரவரி 2-ம் தேதி அரசுத் தரப்பு வழக்கறிஞராக நியமித்த அறிவிப்பை ரத்து செய்யும்வரை பவானி சிங் அரசுத் தரப்பு வழக்கறிஞராகத் தொடரலாம்” எனத் தெரிவித்தார்.

 

பெரிய அமர்வுக்கு மாற்றம்

இரு நீதிபதிகளும் தீர்ப்பில் முரண்பட்டதால், இம்மனுவை பெரிய அமர்வுக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்துவுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

 

3 பேர் கொண்ட அமர்வு:

இந்நிலையில், பவானி சிங் ஆஜராவதற்கு தடை விதிக்கக் கோரும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் மனுவை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று (சனிக்கிழமை) அமைக்கப்பட்டது. இந்த அமர்வில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல சி. பன்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
 

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-3-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article7116693.ece?homepage=true

  • தொடங்கியவர்

Exclusive: ஜெ.வழக்கில் எனக்கு தனிப்பட்ட இன்டரஸ்ட் இல்லை, கடமையைத்தான் செய்தேன்: பவானிசிங் பேட்டி

 

பெங்களூரு: ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராக வேண்டும் என்று எனக்கு தனிப்பட்ட விருப்பு எதுவும் கிடையாது, நான் எனது கடமையைத்தான் செய்தேன் என்று சொத்துக்குவிப்பு வழக்கின் அரசு வழக்கறிஞரான பவானிசிங் தெரிவித்தார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக வாதிட்டவர் பவானிசிங். இதற்கான உத்தரவை கர்நாடக அரசு பிறப்பித்திருந்தது.

 

அந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறையும், 100 கோடி அபராதமும் விதித்தது சிறப்பு நீதிமன்றம். இந்நிலையில், தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மற்றும் தண்டனை பெற்ற மற்ற மூவரும் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு மீதான விசாரணைக்காக, அரசு வழக்கறிஞராக யாரையும் கர்நாடக அரசு நியமிக்கவில்லை. ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் அனுமதியின் பேரில் வக்காலத்து வாங்கிய பவானிசிங், அரசு வழக்கறிஞராக வாதிட்டு வருகிறார். Exclusive: ஜெ.வழக்கில் எனக்கு தனிப்பட்ட இன்டரஸ்ட் இல்லை, கடமையைத்தான் செய்தேன்:

 

 

பவானிசிங் பேட்டி பவானிசிங் மீது நம்பிக்கையில்லை என்றும், அவர் முறைப்படியாக அரசு வக்கீலாக நியமிக்கப்படவில்லை என்றும் திமுக அன்பழகன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த மதன் லோகூர், பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தது. கீழ்நீதிமன்றத்தில் ஆஜரானதை காரணமாக வைத்துக்கொண்டு, ஒரு வக்கீல் உயர் நீதிமன்றத்தில் அதே வழக்கில் அனுமதியின்றி ஆஜரானது தவறு என்று லோகூர் தீர்ப்பளித்தார். ஆனால், பவானிசிங் ஆஜரானது சரிதான் என்று பானுமதி தீர்ப்பளித்தார். எனவே வழக்கு விசாரணை மூவர் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. நாளை, ஏப்ரல் 21ம்தேதி அந்த அமர்வு விசாரணையை ஆரம்பிக்கிறது.

 

 

இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்துதான், ஜெ. அப்பீல் மனு மீதான தீர்ப்பு உள்ளிட்ட பல நடவடிக்கைகள் அமையும் என்பதால் இவ்வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த சர்ச்சைகளின் நடு நாயகமாக இருப்பவர் பவானிசிங். இந்த பரபரப்பான சூழ்நிலையில், 'ஒன்இந்தியா' செய்தி இணையதளத்திடம் பவானிசிங் கூறியதாவது: எனது நியமனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளவருக்கும், அரசுக்கும் இடையேதான் வழக்கு நடந்து வருகிறது. எனவே, இந்த வழக்கில் எனக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு எதுவும் கிடையாது.

 

 

நான் சிறப்பு நீதிமன்றத்திற்கான அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டேன். அங்கு, எனது பணி முடிந்ததால், உயர் நீதிமன்றத்தில் பணியை தொடர்ந்தேன். நான் எனது கடமையைத்தான் செய்தேன். எனக்கு தனிப்பட்ட முறையில் இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது கிடையாது. எனவே, உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையின்போது எனது தரப்பில் வாதிடப்போவதில்லை. ஏற்கனவே, இரு நபர் பெஞ்ச் விசாரிக்கும்போதும், எனது தரப்பில் வாதம் முன்வைக்கப்படவில்லை. இவ்வாறு பவானிசிங் கூறினார்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jayalalithaa-case-i-have-no-personal-interest-it-says-spp-225070.html

  • தொடங்கியவர்

பவானிசிங் நியமன வழக்கு: மூவர் பெஞ்ச் விசாரிக்க வேண்டிய முக்கியமான 2 பாயிண்டுகள்

 

l சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நியமித்தது செல்லாது என்று அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் தொடர்ந்த வழக்கில் இன்னும் உறுதியான உத்தரவு வரவில்லை.

 

உச்ச நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், அன்பழகன் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் டி.ஆர்.அந்தியர்ஜுனாவும் விகாஷ் சிங்கும் ஆஜராகி வாதாடினார்கள். கர்நாடகா அரசு சார்பில், மூத்த வழக்கறிஞர் எம்.என்.ராவ் ஆஜரானார்.

 

பவானிசிங் நியமன வழக்கு: மூவர் பெஞ்ச் விசாரிக்க வேண்டிய முக்கியமான 2 பாயிண்டுகள் ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமனும் மற்றவர்களுக்கு டி.கே.எஸ்.துள்சியும் ஆஜராகி வாதாடினார்கள். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் லோக்கூர் மற்றும் ஆர்.ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது. அதில் கடந்த 15ம் தேதி பரபரப்பான தீர்ப்பு வெளியானது.

 

பவானி சிங் நியமனம் பற்றி இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால், தற்போது வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பவானி சிங்கின் நியமனம் செல்லாது என்று அறிவித்த நீதிபதி மதன் லோக்கூர் தீர்ப்பின் ஒரு முக்கிய பாயிண்ட் இதுதான்: தமிழகத்தில் நடைபெற்று வந்த ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.

 

 

அதில் உத்தரவு வழங்கிய நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களையும் குறிப்பிட்டு இருந்தது. அதில் அந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுவது எப்படி? அதற்காகச் சிறப்பு நீதிமன்றம் எந்த அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும் என்றெல்லாம் தெளிவாகச் சொல்லப்பட்டு இருந்தது. அதோடு மிக முக்கியமாக, அந்த வழக்குக்கு அரசு வழக்கறிஞரை யார் நியமிக்க வேண்டும்? அதில் என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டு இருந்தது.

 

அதன்படி அரசு வழக்கறிஞரை கர்நாடக அரசாங்கம்தான் நியமிக்க வேண்டும். அவருக்கான ஊதியத்தையும் கர்நாடக அரசே வழங்க வேண்டும். மேலும், அப்படி அரசு வழக்கறிஞரை நியமிக்கும்போது, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியோடு கலந்தாலோசித்து அவருடைய வழிகாட்டுதல்படி நியமனம் செய்ய வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. ஆனால், அந்த நடைமுறைகள் எல்லாம் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் அரசு வழக்கறிஞரை நியமித்தபோது பின்பற்றப்படவில்லை.

 

அரசு வழக்கறிஞரை கர்நாடக அரசு நியமிக்கவில்லை. அதற்காக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவும் இல்லை. மாறாக தமிழக அரசு இந்த வழக்கில், அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு மாநிலத்தில் இருந்து ஒரு வழக்கு வேறொரு மாநிலத்துக்கு மாற்றப்பட்டுவிட்டால் அதில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை, ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் Vs ஸ்டேட் ஆஃப் தமிழ்நாடு வழக்கு தெளிவுபடுத்துகிறது.

 

அதன்படி, ‘ஒரு மாநிலத்தில் இருந்து ஒரு வழக்கை வேறொரு மாநிலத்துக்கு மாற்றிவிட்டால் வழக்கை மாற்றிக் கொடுத்த மாநிலம் அதில் நீண்ட காலத்துக்குத் தலையிட முடியாது. வழக்கை மாற்றிப் பெற்றுக்கொண்ட மாநிலம்தான், அதில் அதிகாரப்பூர்வமான முடிவுகளை எடுக்க வேண்டும். ஏனென்றால், வழக்கைப் பெற்றுக் கொண்ட மாநிலம்தான் தற்போது, அந்த வழக்கின் எல்லையாகத் திகழ்கிறது. அதன்படி அரசு வழக்கறிஞரை நியமிக்கும் பொறுப்பும் கடமையும் கர்நாடகத்துக்குத்தான் உண்டு. இது அண்மையில் அலகாபாத் உயர் நீதிமன்றமும் டெல்லி உயர் நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இப்படிச் சட்டமும் விதிகளும் தெளிவாக உள்ளன. அதன்படி, இந்த வழக்கை மாற்றிப் பெற்றுக்கொண்ட மாநிலம் கர்நாடகம். சிறப்பு நீதிமன்றம் அமைந்ததும் அங்குதான். வழக்கு விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கியதும் கர்நாடகத்தில்தான் நடந்தது. குற்றவாளிகள் அதன் காரணமாக சிறையில் வைக்கப்பட்டு இருந்ததும் கர்நாடகத்தில்தான். தண்டனை பெற்றவர்களும் கர்நாடகத்தில்தான் மேல்முறையீடு செய்துள்ளனர். மேல்முறையீட்டு விசாரணையும் கர்நாடகத்தில்தான் நடந்து வருகிறது. அப்படி இருக்கும் நிலையில், அரசு வழக்கறிஞரை மட்டும் தமிழகம் எப்படி நியமிக்க முடியும்?

 

அந்த முடிவை எடுக்கும் உரிமையும் அதிகாரமும் கர்நாடகத்துக்குத்தான் இருக்கிறது. மேலும், இந்த வழக்கை ஏற்கெனவே நடத்தியவர் என்ற முறையில் பவானி சிங் எப்படி மேல்முறையீட்டு விசாரணையிலும் அரசு வழக்கறிஞராகத் தொடர முடியும்? ஏனென்றால், கர்நாடக அரசு அவரை அரசு வழக்கறிஞராக நியமித்தது சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு மட்டும்தான். அந்த விசாரணை நடந்து முடிந்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை அளிக்கப்பட்டதோடு பவானி சிங்கின் நியமனமும் முடிந்துவிட்டது. அதன்பிறகு மேல்முறையீட்டிலும் அவரையே அரசு வழக்கறிஞராக நியமிக்க கர்நாடக அரசு எந்த புதிய உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

 

மாறாக, தமிழக அரசு அதைச் செய்துள்ளது. என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் கவனிக்கப்பட வேண்டியது, கர்நாடகாவில் நடக்கும் வழக்கிற்கு, தமிழகம் எப்படி வக்கீலை நியமிக்க முடியும் என்ற கேள்வியாகும். அதேநேரம், பவானி சிங்கை நியமித்தது செல்லும் என்ற நீதிபதி ஆர்.ஆர்.பானுமதியின் தீர்ப்பில் கவனிக்கவேண்டிய அம்சம்: அரசு வழக்கறிஞராக பவானி சிங்கின் நியமனம் என்பது சிறப்பு நீதிமன்றத்துக்கு மட்டும்தான்.

 

அங்கு வழக்கு முடிந்ததும் அவருடைய நியமனமும் முடிந்துவிட்டது என்பதையும் அவரை அரசு வழக்கறிஞராக நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதையும் அதற்கு கர்நாடக அரசுக்கு மட்டும்தான் அதிகாரம் உள்ளது என்பதையும் நான் முழுமையாக ஏற்கிறேன். ஆனால், 301(1)சி.ஆர்.பி.சி சட்டம் ஒரு வழக்கின் ‘இன் சார்ஜ்' என்ற முறையில், யாருடைய எழுத்துபூர்வமான உத்தரவும் இல்லாமல், அந்த வழக்கின் மேல்முறையீட்டிலும் அவரே அரசு வழக்கறிஞராகத் தொடரலாம் என்ற உரிமையை வழங்குகிறது. ஹரியானா மாநிலம் Vs சுர்ஜித் சிங் வழக்கு இதற்கு முன் உதாரணமாக உள்ளது.

 

எனவே, பவானி சிங் அரசு வழக்கறிஞராக நீடித்தது செல்லும். இவ்வாறு பானுமதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். இவரது தீர்ப்பில் கவனிக்க வேண்டியது, இன் சார்ஜ் என்ற வார்த்தையாகும். இதற்கு முன்னுதாரணமான வழக்கையும் நீதிபதி எடுத்து காட்டியுள்ளார். ஆனால், தனது தரப்புக்காக, ஜெயேந்திரர் வழக்கை, மதன் லோகூர் உதாரணமாக காண்பித்துள்ளார். இரு நீதிபதிகளுமே, முன் உதாரணங்களுடன் தீர்ப்பு அளித்துள்ளனர். எனவே, பிற மாநில அரசு வக்கீல் நியமனம் செய்யலாமா, இன்சார்ஜ் என்பவருக்கு அதிகாரம் உள்ளதா என்பதே தீபக் மிஸ்ரா தலைமையிலான, 3 நீதிபதிகள் விசாரிக்க வேண்டிய பாக்கியாகும். இரு நீதிபதிகள் பெஞ்ச் அளித்த மாறுபட்ட தீர்ப்பை தொடர்ந்து, மூவர் பெஞ்ச் அமைக்கப்பட்டு, நாளை அந்த பெஞ்ச் விசாரணையை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/supreme-court-bench-s-decision-will-decide-pace-appeal-verdi-225100.html

  • தொடங்கியவர்

சிக்கலான நீதிபதி முன் "பவானி சிங் வழக்கு"... நாளை மூவர் பெஞ்ச் முன் விசாரணை தொடக்கம்! 

 

டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரானது சரியா, தவறா என்பது குறித்த 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சில் நாளை வழக்கு விசாரணைக்கு வருகிறது. பெங்களூரு தனிக்கோர்ட்டில் நடந்து வந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜரானார்.

 

இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், 4 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ.10 கோடியும், தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. சிக்கலான நீதிபதி முன் இதை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்தது. இந்த வழக்கிலும், பவானிசிங்கே ஆஜரானார். இதற்கு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் எதிர்ப்பு தெரிவித்தார்.

 

 

குமாரசாமி கோர்ட்டிலும், கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் அவர் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தினார். ஆனால் அவரது அனைத்து கோரிக்கைகளும் இங்கு தள்ளுபடியாகி விட்டன. தற்போது மேல் முறையீட்டு வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பை நீதிபதி குமாரசாமி ஒத்தி வைத்து இருக்கிறார். இதனிடையே பவானிசிங்கை நீக்கவேண்டும் என்று கோரி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. விசாரணைக்குப் பின்னர் கடந்த 15-ந் தேதி அவர்கள் தீர்ப்பளித்தபோது ஆளுக்கு ஒரு தீர்ப்பை அளித்தனர்.

 

 

பவானி சிங்கின் நியமனம் செல்லும் என்று நீதிபதி பானுமதியும், செல்லாது என்று மதன் பி.லோகுரும் தீர்ப்பளித்தனர். முரண்பட்ட தீர்ப்பு காரணமாக இந்த வழக்கை 3 பேர் கொண்ட பெஞ்சுக்கு மாற்ற அவர்கள் தலைமை நீதிபதி எச்.எல். தத்துவுக்கு பரிந்துரைத்தனர். அதன்படி தற்போது இந்த வழக்கு 3 பேர் கொண்ட பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால் மற்றும் பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். நாளை இந்த வழக்கு 3 பேர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வருகிறது.

 

 

சிக்கலான நீதிபதி முன்பு நாளை விசாரணையைத் தொடங்கவுள்ள 3 பேர் கொண்ட பெஞ்சுக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை வகிப்பார். இந்த நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏற்கனவே ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான ஒரு மனுவை 3 ஆண்டுகளுக்கு முன்பு விசாரித்தவர் ஆவார். அப்போது ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவை விசாரித்த நீதிபதி மிஸ்ரா, தமிழக அரசுக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். அப்போது நீதிபதி கூறுகையில், விசாரணையை கேலிக் கூத்தாக்க முயல்கிறது தமிழக அரசு. தமிழக அரசின் நோக்கம் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது என்று கடுமையாக சாடியிருந்தார். தற்போது அதே நீதிபதி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/3-judge-bench-hear-anbalagan-s-plea-tomorrow-225033.html

  • தொடங்கியவர்

பவானி சிங் மீது சந்தேகம் உள்ளது.. ஆஜராகக் கூடாது... 3 நீதிபதிகள் முன்பு அன்பழகன் வக்கீல் வாதம்

 

டெல்லி: அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் செயல்பாடுகள் சந்தேகப்படும்படி இருக்கிறது. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையில் சரிவர அவர் ஆஜராகவில்லை. மேலும் அவருக்கு ஜாமீனையும் அவர் எதிர்க்கவில்லை. எனவே அவர் ஆஜராகக் கூடாது என்று மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் ஆஜரான அன்பழகன் வழக்கறிஞர் அந்தியர்ஜூனா வாதிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நியமித்தது செல்லாது என்று அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் தொடர்ந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணை தொடங்கியுள்ளது.

 

அப்பீல் வழக்கு சொத்து வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா அப்பீல் செய்துள்ளார். தனி நீதிபதி குமாரசாமி முன்பு நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பை நீதிபதி குமாரசாமி ஒத்தி வைத்துள்ளார்.

 

பவானிசிங் ஆஜராக எதிர்ப்பு இந்த நிலையில் அப்பீல் விசாரணையில் பவானிசிங் அரசு வழக்கறிஞராக ஆஜரானது செல்லாது என்றும் வேறு வழக்கறிஞரை நியமிக்க கோரி தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 

இருவேறு தீர்ப்புகள் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, மதன் பி.லோகூர் அடங்கிய அமர்வு இரு வேறு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் 3 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு கடந்த வாரம் மாற்றப்பட்டது.

 

வழக்கு விசாரணை இன்று அன்பழகன் மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்லா சி.பந்த் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணை தொடங்கியது. அன்பழகன் தரப்பில் மூத்த வக்கீல் அந்தியர்ஜுனா ஆஜராகி வாதாடினார்.அப்போது நீதிபதி பந்த் அவரிடம், ஒரு வழக்கில் அரசு வக்கீல் நியமனத்தை தனி நபர் எப்படி கேள்வி எழுப்ப முடியும்? என்றார்.

 

கர்நாடகாவிற்கு வழக்கு மாற்றம் அதற்கு வக்கீல் அந்தியர்ஜுனா பதில் அளிக்கையில், இந்த வழக்கை தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கு மாற்ற காரணமாக இருந்தவரே அன்பழகன்தான் என்றார்.

 

பவானிசிங்கின் செயல்பாடு எப்படி தொடர்ந்து நீதிபதி அவரிடம், ஒவ்வொரு முறையும் அரசு வழக்கறிஞர் நிலைப்பாடு பற்றி கேள்வி எழுப்புவது ஏன்? விசாரணை நீதிமன்றத்தில் பவானிசிங் எப்படி செயல்பட்டார்? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அந்தியார்ஜூனா, பவானி சிங் செயல்பாடுகள் சந்தேகப்படும்படி இருக்கிறது. அவர் விசாரணையில் ஆஜராகாமலும், ஜாமீனை எதிர்க்காமலும் செயல்பட்டார் என்றார்.

 

விசாரணை ஒத்திவைப்பு காலை தொடங்கி பிற்பலிலும் அன்பழகன் வழக்கறிஞர் அந்தியார்ஜூனா வாதிட்டார். ஜெயலலிதா சார்பில் பாலி நாரிமன் வாதிட்டார். விசாரணைக்கு பின்னர் வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/3-judge-bench-begins-its-hearing-on-anbalagan-s-plea-225166.html

  • தொடங்கியவர்

பவானிசிங் வழக்கில் ஏப்ரல் 27ல் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் அறிவிப்பு

  • தொடங்கியவர்

ஜெ. வழக்கில் பவானிசிங் நியமனம் தவறுதான்.. ஆனாலும் மறுவிசாரணை தேவை இல்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து

 

டெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானது தவறுதான்... ஆனாலும் மறுவிசாரணை தேவை இல்லை என்று உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் பெஞ்ச் கருத்து தெரிவித்துள்ளது. அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராவதை எதிர்த்து தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

 

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் லோகூர், பானுமதி ஆகியோர் இருவேறுபட்ட தீர்ப்புகளை அளித்தனர். ஜெ. வழக்கில் பவானிசிங் நியமனம் தவறுதான்.. ஆனாலும் மறுவிசாரணை தேவை இல்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து அத்துடன் 3 நீதிபதிகள் பெஞ்சுக்கு பரிந்துரைத்தனர். இந்த 3 நீதிபதிகள் பெஞ்ச் நேற்று முதல் விசாரணை நடத்தியது. இன்றும் 2வது நாளாக விசாரணை நடத்தப்பட்டது.

 

இன்றைய விசாரணையின் போது 3 நீதிபதிகள் பெஞ்ச் தெரிவித்த கருத்துகள்:

 

அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானது தவறானது... அரசுத் தரப்பு வழக்கறிஞராக ஆஜராக அவருக்கு அதிகாரம் இல்லை.. சட்டப்படி மோசமானது..

 

தமிழக அரசுக்கு அரசு தரப்பு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் இல்லை. அதே நேரத்தில் இது நடைமுறைகளில் ஏற்பட்ட தவறுகள்தான்...இதனால் மேல்முறையீட்டு வழக்கில் மறுவிசாரணை என்பதும் தேவை இல்லை.

 

அன்பழகன் தரப்பு கூடுதலாக தங்களது புதிய வாதங்களை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்ய கர்நாடகா உயர்நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்..

 

இதேபோல் குற்றவாளிகள் தரப்பும் தங்களது தரப்பு வாதத்ங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

 

இருதரப்பு தரப்பு வாதங்களை ஆராய்ந்த பின்னர்தான் கர்நாடகா உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கில் இறுதித் தீர்ப்பளிக்க வேண்டும். கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி தீர்ப்பு வழங்குவதற்கு தடை ஏதும் இல்லை.

 

இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் திங்கள்கிழமையன்று (ஏப்ரல் 27) வழங்கப்படும்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jaya-appeal-prosecutor-appointment-wrong-but-case-won-t-be-reheard-225237.html

  • கருத்துக்கள உறவுகள்

மே 5 பரப்பன அக்ரஹார சிறையில் ஜெயலலிதாவுக்கு களி ரெடியாக இருக்கும்! :D

  • தொடங்கியவர்

மே 5 பரப்பன அக்ரஹார சிறையில் ஜெயலலிதாவுக்கு களி ரெடியாக இருக்கும்! :D

அந்த நாளை ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறேன்.
  • தொடங்கியவர்

பவானி சிங் நியமன வழக்கு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு எழுப்பும் சந்தேகங்கள்
 

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் நியமனம் செல்லாது - அதேநேரத்தில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் மறு விசாரணை தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. | முழுமையான செய்தி: ஜெ. மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் நியமனம் செல்லாது; மறு விசாரணை இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு |

 

இந்தத் தீர்ப்பு, கர்நாடக நீதிபதிகள், வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞராக பவானி சிங் நியமனம் செல்லாது என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல பந்த் அடங்கிய அமர்வு இன்று (திங்கள்கிழமை) வழங்கியுள்ள தீர்ப்பு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சந்தேகங்கள் என்ன?

பவானி சிங் நியமனம் செல்லாது என உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், வழக்கில் மறு விசாரணை தேவையில்லை என கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இது முரண்பட்ட தீர்ப்பாக இருக்கிறது.

அதுபோலவே, அன்பழகன் தரப்பு 90 பக்கங்களிலும், கர்நாடக அரசு தரப்பு 50 பக்கங்களிலும் நாளைக்குள் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

 

ஏற்கெனவே, ஜெயலலிதா மேல்முறையீட்ட்டு வழக்கை மூன்று மாதங்களுக்குள் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என நீதிபதி ஹெச்.எல்.தத்து கூறியதே பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதே பாணியில், தற்போது பவானி சிங் வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வும் எழுத்துப் பூர்வ வாதத்துக்கு கால நிர்ணயம் செய்துள்ளது. எத்தனைப் பக்கங்களில் வாதம் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன் இத்தகைய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளதா என ஆராயும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கர்நாடக நீதிமன்ற வட்டாரத்தில் பேசப்படுகிறது.

 

தயார் நிலையில் திமுக:

இதற்கிடையில், பவானி சிங் நியமனம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், மேல் முறையீட்டு வழக்கில் மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருப்பதாக திமுக தரப்பு வழக்கறிஞர் தி இந்துவிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எழுத்துப்பூர்வ வாதமும் தயார் நிலையில் இருப்பதாகவும். 80 பக்கங்களில் வாதம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

தீர்ப்பு எப்போது?

பவானி சிங் நியமனத்துக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. வழக்கில், தீர்ப்பு வழங்க நீதிபதி குமாரசாமிக்கு மே 12 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், மே 12-க்குப் பிறகே தீர்ப்பு வெளியாகும் என கர்நாடக நீதிமன்ற வட்டாரம் தெரிவிக்கிறது.
 

 

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7146194.ece

  • தொடங்கியவர்

ஜெ. மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் நியமனம் செல்லாது; மறு விசாரணை இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
 

 

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் நியமனம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதேநேரத்தில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் மறு விசாரணை தேவையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பு தெளிவுபட தெரிவித்துள்ளது.

 

பவானி சிங் நியமனம் குறித்த இறுதி தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல பந்த் அடங்கிய அமர்வு இன்று காலை வழங்கியது.

அப்போது நீதிபதிகள், "பவானி சிங்கை, தமிழக லஞ்ச ஒழிப்பு துறை நியமித்திருக்கிறது. வழக்கு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நடைபெறுவதால் அங்குள்ள நீதிமன்றமே அரசு வழக்கறிஞரை நியமித்திருக்க வேண்டும். அரசு வழக்கறிஞரை நியமிக்க தமிழக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால், இவ்வழக்கில் மறு விசாரணைக்கு அவசியமில்லை" என தெரிவித்துள்ளனர்.

 

மேலும் நீதிபதிகள் கூறும்போது, "மனுதாரர் க.அன்பழகன், 90 பக்கங்களுக்குள் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும், கர்நாடக அரசு 50 பக்கங்களுக்குள் எழுத்துப்பூர்வ வாதத்தை நாளை (ஏப்ரல் 28-க்குள்) தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேல்முறையீட்டு வழக்கில் அன்பழகன் மற்றும் கர்நாடக அரசும் எழுத்துமூலம் அளிக்கும் வாதத்தை பெற்றுக் கொண்டு தீர்ப்பளிக்கவும் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராகி வாதாடினார்.

அவரது நியமனமே செல்லாது என்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இரண்டு நீதிபதிகள் முரண்பட்ட தீர்ப்பை அளித்ததால், இவ்வழக்கு மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது.

 

மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘உச்ச நீதிமன்றத்தால் வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்ட ஒரு வழக்கில், அந்த மாநில அரசுதான் அரசு வழக்கறிஞரை நியமிக்க முடியும். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்தது செல்லாது’ என்று வாதிடப்பட்டது. ‘வழக்கின் விசாரணை அமைப்பு என்ற முறையில் அரசு வழக்கறிஞரை நியமிக்க எங்களுக்கு அதிகாரம் உண்டு’ என்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வாதிடப்பட்டது.

கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதியன்று, சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, அவர்கள் அனைவருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடியும், மற்ற மூவருக்கும் தலா ரூ. 10 கோடியும் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

 

இதனையடுத்து, ஜெயலலிதா ஜாமீனில் வெளிவந்தார். அவர் தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி தலைமையில் நடந்து வருகிறது.

 

இந்த மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

தீர்ப்பு எப்போது?

 

பவானி சிங் நியமனத்துக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. வழக்கில், தீர்ப்பு வழங்க நீதிபதி குமாரசாமிக்கு மே 12 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், மே 12-க்குப் பிறகே தீர்ப்பு வெளியாகும் என கர்நாடக நீதிமன்ற வட்டாரம் தெரிவிக்கிறது.

 

அதேவேளையில், பவானி சிங் நியமன வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பு குறித்து கர்நாடக நீதிபதிகள், வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன. அதன் விவரம் பவானி சிங் நியமன வழக்கு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு எழுப்பும் சந்தேகங்கள்
 

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7146119.ece

  • தொடங்கியவர்

நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதை நீதிபதி குமாரசாமி கருத்தில் கொள்ள வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

 

டெல்லி: ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பளிக்கும் போது நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதையும் நீதிபதி குமாரசாமி கருத்தில் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் தமக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

 

இம்மனு மீது தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி விசாரணை நடத்தி தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார்.

 

இதனிடையே இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவர் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டது செல்லாது; அவரை நீக்க வேண்டும் என்று தி.மு.க. பொதுச் செயலாளர் க. அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை மனு நீதிபதிகள் எம்.பி.லோகூர், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தது. இதையடுத்து இந்த வழக்கு 3 பேர் கொண்ட பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே. அகர்வால் மற்றும் பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இது தொடர்பாக விசாரணை நடத்தி இன்று தீர்ப்பளித்தது.

 

அப்போது பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக தமிழக அரசு நியமித்தது செல்லாது; கர்நாடகா அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு, அவரது எழுத்துப்பூர்வமான வாதத்தை கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி ஏற்கக் கூடாது என்று உத்தரவிட்டனர். நாட்டில் ஊழலை ஒழிக்க.. அத்துடன் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவடைந்துவிட்ட நிலையில் மறுவிசாரணை தேவை இல்லை என்றும் எந்த ஒரு ஊழல் வழக்கையும் ஏனோதானோவென பார்க்கக் கூடாது;

 

ஊழல்வாதிகள் பெற்ற ஆதாயத்தை கருத்தில் கொள்ள வேண்டும். சமுதாயத்தை ஊழல் பாதித்துள்ளதை அறிந்து செயல்படுவது அவசியம். நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டு நீதியை நிலைநாட்டும் வகையில் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் நீதிபதி மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் அறிவுறுத்தியுள்ளது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/karnataka-hc-keep-mind-gravity-offence-corruption-cases-sc-225553.html

  • தொடங்கியவர்

பவானிசிங் நியமன வழக்கில், நாட்டுக்கே முன்னுதாரணம் காட்டிய 3 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு!

 

டெல்லி: ஜெயலலிதா அப்பீல் மனு மீதான விசாரணையில், அரசு வழக்கறிஞராக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பவானிசிங் ஆஜரானது தவறு என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்மூலம், இதுபோன்ற வழக்கில் நாடு முழுமைக்கும் புது முன்னுதாரணம் உருவாகியுள்ளது. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை கர்நாடக அரசுதான் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தேவைப்படும் உதவிகளை செய்ய மட்டுமே தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு.

 

தமிழகத்திலேயே இந்த வழக்கு நடந்தால், அதிகார துஷ்பிரயோகம் நடந்துவிடும் என்பதால், உச்சநீதிமன்றம் இவ்வாறு கர்நாடகத்தில் சிறப்பு நீதிமன்றத்தை அமைத்து உத்தரவிட்டிருந்தது. முதலில், ஆச்சாரியாவை சிறப்பு வழக்கறிஞராக கர்நாடக அரசு நியமித்த நிலையில், அப்போதைய பாஜக அரசால் அவருக்கு நெருக்கடி தரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஆச்சாரியா பதவியை ராஜினாமா செய்தார். எனவே, அப்போதைய பாஜக அரசு, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து பவானிசிங்கை, இவ்வழக்கில் அரசு வக்கீலாக நியமித்தது.

 

இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ஹைகோர்ட்டில் குற்றவாளிகள் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந் நிலையில், கீழ்கோர்ட் தீர்ப்பு வெளியான சில நாட்களிலேயே ஹைகோர்ட்டில், பவானிசிங்கை ஆஜராக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி வழங்கியது. இதில்தான் சிக்கல் ஏற்பட்டது. வழக்கில் துஷ்பிரயோகம் நடக்க கூடாது என்பதற்காகத்தான், வேறு மாநிலத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. ஆனால், சம்மந்தப்பட்ட மாநிலமே அரசு வக்கீலை நியமித்தால், அது எப்படி சரியாகும் என்று கேள்வி எழுப்பி உச்ச நீதிமன்றம்வரை சென்றார் திமுகவின் அன்பழகன். வழக்கை நடத்தும் மாநிலம் அல்லாது, வேறு மாநிலம், அரசு வழக்கறிஞரை நியமிக்க அதிகாரம் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள இந்த வழக்கு பிற மாநிலங்களுக்கும் ஒரு முன் உதாரணமாக மாறியது. இந்நிலையில்தான், இரு பெஞ்ச் நீதிபதிகள் லோக்கூர் மற்றும் பானுமதி ஆகியோர் முரண்பட்ட தீர்ப்பை வழங்கினர்.

 

பவானிசிங்கை, தமிழக அரசு நியமிக்க முடியாது என்பதில் இரு நீதிபதிகளுமே ஒரே கொள்கை வைத்திருந்தனர். ஆனால், பவானிசிங்தான் இந்த வழக்கின் பொறுப்பாளர் என்ற முறையில் ஆஜராகியதில் தவறில்லை என்று பானுமதி கூறினார். எனவே மூன்று நீதிபதிகள் பெஞ்ச் விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் வேறு மாநிலத்தில் நடைபெறும் வழக்கில், மற்றொரு மாநிலம் அரசு வக்கீலை நியமிக்க முடியாது என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பவானிசிங் வாதிட்டதை ஏற்க கூடாது என்றும் கடுமையாக உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற முன் உதாரண வழக்குகள் இல்லாத நிலையில், இந்த வழக்கு புது முன் உதாரணத்தை நாடு முழுமைக்கும் அளித்துள்ளதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். இனிமேல், மாநிலங்கள் இதுபோன்ற வழக்குகளில் அரசு வக்கீலை நியமிக்கும்போது, இந்த தீர்ப்பு ரெஃபரன்ஸ் செய்யப்படுவது உறுதி.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/bhavani-singh-case-milestone-judgement-given-3-judge-bench-225565.html

  • தொடங்கியவர்

பவானி சிங் வாதத்தை கருத்தில் கொள்ளாவிட்டாலும் வழக்கிற்கு பாதிப்பு இல்லை.. எப்படி தெரியுமா?

 

டெல்லி: ஜெயலலிதா அப்பீல் மனு விசாரணையில் பவானிசிங் அரசு வக்கீலாக ஆஜரானது தவறு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய தேவையில்லை என்றும் கூறியுள்ளது. அரசு வழக்கறிஞர் வாதத்தையே கணக்கில் கொள்ளாமல், அது எப்படி ஹைகோர்ட் தீர்ப்பளிக்க முடியும்..வழக்கை விரைந்து முடிப்பதற்காக, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தப்பிக்க வழிவகுத்துவிடுமே..என்ற சந்தேகங்கள் எழலாம். ஆனால் அவ்வாறெல்லாம் பிரச்சினை ஆகாது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். இதுகுறித்து உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வெங்கடேசன் கூறியதாவது: 90 நாட்களுக்குள் ஜெயலலிதா அப்பீல் வழக்கை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் கர்நாடக ஹைகோர்ட் உள்ளது.

 

கோர்ட்டுக்கு கட்டாயம் எனவேதான் நீதிபதி குமாரசாமி தினசரி விசாரணையை நடத்தினார். ஆனால், ஜெயலலிதா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அதற்கடுத்த சில நாட்களிலேயே, தமிழக அரசு பவானிசிங்கை, மேல்முறையீட்டு வழக்குக்கான அரசு வக்கீலாக நியமித்துவிட்டது. எனவே கர்நாடகம், வக்கீல் நியமனத்தில் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில்தான், சம்மந்தப்பட்ட மாநிலத்தை தவிர்த்து வேறு மாநிலம், அரசு வக்கீலை நியமிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு கூறியுள்ளது.

 

ஒன்றுக்கு ரெண்டு இருக்குதே எனவே, அரசு வக்கீல் வாதம் கணக்கில் எடுக்கப்படாது. ஆனால், இந்த வழக்கில், அன்பழகன் மற்றும் கர்நாடக அரசு ஆகிய இரண்டுமே, குற்றவாளிகளுக்கு எதிரான தரப்பாக உள்ளன. அதாவது ஒரு அரசு தரப்புக்கு பதிலாக, இந்த வழக்கில், 2 எதிர்தரப்பு வாதங்கள் ஏற்கப்பட்டுள்ளது.

 

பாதிப்பில்லை எனவே, பவானிசிங் வாதத்தை கழித்துவிட்டு பார்த்தால், ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக அன்பழகன் மற்றும் கர்நாடக அரசு ஆகியோரின் வாதங்கள் உள்ளன. எனவே அரசு வக்கீல் வாதத்தை கணக்கில் எடுக்காவிட்டாலும் வழக்கில் அது பாதிப்பை ஏற்படுத்தாது.

 

நல்ல தீர்ப்பு எனவேதான், உச்சநீதிமன்றம் இந்த மாதிரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பால், காலக்கெடுவிற்குள்ளும் வழக்கை முடிக்க முடியும், அரசு வக்கீல் நியமனம் செல்லாது என்ற தீர்ப்பும் புது உதாரணம் தந்துவிடும். இவ்வாறு வெங்கடேசன் தெரிவித்தார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/bhavani-singh-abcent-will-not-affect-jayalalitha-case-225555.html

  • தொடங்கியவர்

ஜெ. அப்பீல் மனு: 81 பக்க எழுத்துப்பூர்வ இறுதி வாதத்தை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்தார் அன்பழகன்!

 

பெங்களூரு: ஜெயலலிதா அப்பீல் விசாரணைக்கு தேவையான கூடுதல் வாதங்களை எழுத்துப்பூர்வமாக அன்பழகன் தரப்பு இன்று கர்நாடக ஹைகோர்ட்டில் தாக்கல் செய்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கிலும் கர்நாடக ஹைகோர்ட்டில் அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜரானார். அவரது நியமனத்தை எதிர்த்து தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

 

அதை விசாரித்த நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் முரண்பட்ட தீர்ப்பு வழங்கியதால், மனு மீதான விசாரணை 3 நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் முன்னிலையான அமர்வில் இந்த விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், பவானி சிங் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், பவானி சிங் நியமனம் செல்லாது என்று அறிவித்தாலும், வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்தை முன்வைத்தனர். .

 

மேல்முறையீட்டு வழக்கில் அன்பழகன் எழுத்துமூலம் அளிக்கும் வாதத்தை பெற்றுக் கொண்டு தீர்ப்பளிக்கவும் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு அனுமதி அளித்திருந்தனர். மேலும், கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி சிறப்பு கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும், வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையிலும் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்க எவ்விதமான தடையும் இல்லை என்று தெரிவித்தனர். இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் பவானிசிங் ஆஜரானது செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பவானிசிங்கை அரசு வக்கீலாக நியமிக்க தமிழக அரசுக்கு உரிமையில்லை என்றும் தீர்ப்பு அளித்துள்ளது.

 

எனவே எழுத்துப்பூர்வமாக அன்பழகன் தரப்பு கர்நாடக ஹைகோர்ட்டில் கூடுதல் வாதங்களை சமர்ப்பிக்கலாம் என்று, மீண்டும் ஒருமுறை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, அன்பழகன் சார்பில் கர்நாடக ஹைகோர்ட் பதிவாளரிடம் எழுத்துப்பூர்வ இறுதிவாதம் சமர்ப்பிக்கப்பட்டது. மொத்தம் 81 பக்கம் கொண்டதாக அந்த வாதம் இருந்தது. அதில், 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது வாங்கிய சம்பளம் ரூ.26 மட்டுமே. ஆனால், அவரது வங்கி கணக்கில் கோடிக்கணக்கான ரூபாய் புழங்கியுள்ளது.

 

வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்திற்கான செலவு தொகைகள், ஜெயலலிதா வங்கி கணக்கில் இருந்து சென்றுள்ளது. மேலும் சிறப்பு நீதிமன்றத்தில், ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள், ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இதனிடையே, நாளைக்குள், கர்நாடக அரசு தனது தரப்பு வாதத்தை தாக்கல் செய்யுமா என்பது உறுதியாகவில்லை. அவர்கள் தாக்கல் செய்யாமல் இருக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/anbalagan-will-fill-writtern-submission-karnataka-high-court-today-225545.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.