Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா சொத்து குவிப்பு அப்பீல் மனு மீதான விசாரணை

Featured Replies

  • தொடங்கியவர்

சொத்துக்குவிப்பு வழக்கில் அப்பீல்: ஜெ. முதல்வர் பதவி தப்புமா? சட்டம் சொல்வது என்ன?

 

பெங்களூர்: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மேல்முறையீடு செய்வதன் மூலம், தமிழக முதல்வர் பதவியில் இருந்து ஜெயலலிதா நீக்கப்படுவாரா, அவரது அரசியல் எதிர்காலம் என்ன ஆகும் என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. 19 வருடங்கள் நடைபெற்ற சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, 4 ஆண்டு சிறை தண்டனையும், விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து பெங்களூர் மத்திய சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார்.

 

21 நாள் சிறைவாசம் ஹைகோர்ட் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில், தலைமை நீதிபதி தத்து அமர்வு, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியது. 21 நாள் சிறைவாசத்துக்கு பிறகு ஜெயலலிதா சென்னை திரும்பினார்.

 

முதல்வரானார் இந்நிலையில், குமாரசாமி தலைமையிலான, ஹைகோர்ட் அமர்வு, ஜெயலலிதா அப்பீல் மனுவை விசாரித்து வந்தது. இந்த வழக்கில் கடந்த மாதம் 11ம் தேதி தீர்ப்பளித்த கர்நாடக ஹைகோர்ட் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் விடுதலை செய்தது. இதையடுத்து மே 23ம் தேதி, ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்றார்.

 

நெருக்கடி இதனிடையே ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார், அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோரும் கர்நாடக அரசை வலியுறுத்தி வந்தனர்.

 

மேல்முறையீடு இந்நிலையில், முதல்வர் சித்தராமையா தலைமையில், தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டின்போதும், அரசு சிறப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா மற்றும் அவரது டீம் களமிறங்க உள்ளது.

 

ஆலோசனைகள் மேல்முறையீடு முடிவை எடுக்கும் முன்பு, கர்நாடக அரசு பல சுற்று ஆலோசனைகளை நடத்தியது. தற்போது ஜெயலலிதா முதல்வராக இருப்பதால், மேல்முறையீடு செய்ய ஆளுநரின் அனுமதி வேண்டுமா மற்றும், மேல்முறையீட்டின்போது அரசு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதியை பெற வேண்டுமா ஆகிய இரு சந்தேகங்களை கர்நாடக சட்டத்துறை அமைச்சகம், அதன் தலைமை வழக்கறிஞர் ரவிவர்மகுமாரிடம் கேட்டிருந்தது.

 

உடனே மேல்முறையீடு அவர் கடந்த வெள்ளிக்கிழமை அரசுக்கு அளித்த அறிக்கையில், ஜெயலலிதா மீதான மேல்முறையீட்டுக்கு ஆளுநர் அனுமதி தேவையில்லை, மேலும், சிறப்பு வழக்கறிஞரை கர்நாடகாவே தன்னிச்சையாக நியமிக்க சட்டத்தில் இடமுள்ளது என்று தெளிவுபடுத்தியிருந்தார். மேலும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யாவிட்டால், உச்சநீதிமன்றம் கர்நாடகா மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு துரோகம் இழைத்தது போலாகிவிடும் என்றும், நீதியை கேலிக்கூத்தாகுவதை போலாகிவிடும் என்றும் எச்சரித்திருந்தார். எனவே உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று ரவிவர்மகுமார் கேட்டுக் கொண்டார். எனவே கர்நாடக அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது.

 

இவ்வாரத்தில் இவ்வழக்கில் தீர்ப்பு வெளியாகி 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய சட்டத்தில் இடமுள்ளது. தற்போது தீர்ப்பு வந்து 20 நாட்கள் கடந்துள்ளன. எனவே இன்னும் 2 மாதங்களுக்கு மேல், கர்நாடக அரசுக்கு கால அவகாசம் உள்ளது. இருப்பினும் இவ்வாரத்திலேயே, மேல்முறையீடு செய்ய, ஆச்சாரியா மற்றும், தலைமை வக்கீல் ரவிவர்ம குமார் விரும்புகின்றனர்.

 

வழக்கு இழுக்கலாம் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்த பிறகு, அந்த வழக்கு விசாரணை எப்போது முடியும் என்பதை கணிக்க முடியாது. ஹைகோர்ட் இவ்வழக்கை 3 மாதங்களில் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து முன்பு உத்தரவிட்டதை போல இம்முறை உத்தரவிடுவாரா என்பது கேள்விக்குறி. மேல்முறையீடு வழக்குகள் பல, நீண்ட பல ஆண்டுகளாக நிலுவையிலுள்ள வரலாறு உச்சநீதிமன்றத்துக்கு உள்ளது. இதனால், ஜெயலலிதா தரப்புக்கு உடனடியாக எந்த பாதிப்பையும், அல்லது தாக்கத்தையும் இந்த மேல்முறையீடு செய்யாது.

 

இடைக்கால தடை அதேநேரம், மேல்முறையீட்டின்போது, ஹைகோர்ட் தீர்ப்பிலுள்ள சில பிழைகளை சுட்டிக் காட்டி தீர்ப்புக்கு இடைக்கால தடை வாங்கினால், அப்போது ஜெயலலிதா தரப்புக்கு பாதிப்பு ஏற்படும். அரசு தரப்பில் இருந்து ஹைகோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை வாங்க திட்டமுள்ளதா என்பது இதுவரை தெளிவாகவில்லை. அவ்வாறு இடைக்கால தடைக்காக கோரிக்கை விடுத்தாலோ அந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இடைக்கால தடை விதித்தாலோ அப்போது, நீதிபதி குன்ஹா கொடுத்த தீர்ப்பே அமலுக்கு வரும்

 

பதவி பறிபோகும் இதுகுறித்து அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் குழுவின் சீனியர் வக்கீல், பாலாஜி சிங்கை தொடர்பு கொண்டு கேட்டபோது "ஹைகோர்ட் தீர்ப்புக்கு ஸ்டே வாங்கப்பட்டால், கீழ்க்கோர்ட் கொடுத்த தீர்ப்பு படி ஜெயலலிதா குற்றவாளியாகவே பார்க்கப்படுவார். இதனால் அவர் முதல்வர் பதவியில் தொடர முடியாத சட்டச் சிக்கல் ஏற்படும். கணித தவறை ஆதாரமாக கொண்டு, ஹைகோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க கோர அனைத்து முகாந்திரமும் உள்ளது. மேலோட்டமாக பார்த்தாலே, தவறு தெரிவதால், ஹைகோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட வாய்ப்பு அதிகம் என்று கருதுகிறேன்" என்றார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jaya-case-will-karnataka-s-appeal-supreme-court-affects-her-227858.html

  • Replies 311
  • Views 29.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை வாங்க முயற்சி செய்வேன்: அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தகவல்
 

 

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய போவதாக கர்நாடகா அறிவித்துள்ளது. அதனை வரவேற்றுள்ள அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா, இவ்வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை வாங்க முயற்சி செய்வேன் எனத் தெரி வித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆச்சார்யா கூறியதாவது: சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் வெளியான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அறிவித்துள்ள கர்நாடக அரசின் முடிவை வரவேற்கிறேன்.

 

உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் நிறைய குளறுபடிகள் இருப்பதை முன்வைத்து பரிந்துரை செய்தேன். என‌து கோரிக்கையை ஏற்று, எடுக்கப்பட்டிருக்கும் இந்த முடிவு மகிழ்ச்சியை அளிக் கிறது.

 

என்னுடைய உடலும், மனமும் ஒத்துழைக்கும் வரை இவ்வழக்கில் பணியாற்றுவேன். எத்தகைய அழுத்தம் வந்தாலும் உச்ச நீதிமன்றமும், கர்நாடக அரசும் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற முயற்சிப்பேன்.

 

மேல்முறையீட்டு மனு தாக்க லுக்கு தேவையான ஆவணங் களை நீதிமன்றத்தில் இருந்து பெற வேண்டும். அதன் பிறகே மேல்முறையீடு செய்யப்படும்.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்கு 3 மாத காலம் அவகாசம் அளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, இம்முறை அது போன்ற உத்தரவை பிறப்பிப்பாரா என்பது பெரும் கேள்விக்குறி. எந்த வழக்கையும் முன் முடிவோடு அணுகக் கூடாது. குறிப்பாக உச்ச நீதிமன்றத்தின் விசாரணைப் போக்கை கணிக்க முடியாது.

 

கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில், ஜெயலலிதா உள்ளிட்டோர் வாங்கிய கடன்களை கணக்கிட்டதில் பிழை ஏற்பட்டுள்ளது. இதனை வெறுமனே கூட்டல் பிழை என கருத முடியாது.

 

அதை சரி செய்தாலே ஜெயலலிதா உள்ளிட்ட நால் வரையும் குற்றவாளிகளாகத்தான் அறிவிக்க வேண்டும். ஆனால், அதை பிரதானமாக வைத்து வாதிட மாட்டேன். இதை விடவும் பல முக்கிய தவறுகள், சட்ட ரீதியான முரண்பாடுகள், தவறான முன் உதாரணங்கள் பல இருக்கின்றன. அதை அடிப்படையாக வைத்துத்தான் வாதிடுவேன். இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றமும், கர்நாடக உயர் நீதிமன்றமும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி இருப்பதால் உச்ச நீதிமன்றம்தான் இறுதி தீர்ப்பை வழங்க வேண்டும்.

 

மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டாலும், அந்த மனுவுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு தடைக்கோரும் சிறப்பு உரிமையும் அதிகாரமும் இருக்கிறது.

எனவே, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை வாங்க முதலில் ஆச்சார்யா முயற்சிக்கிறார் என ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவேளை ஜெய‌லலிதாவை விடுதலை செய்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டால், நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பு அமலுக்கு வந்துவிடும். அப்போது முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவின் பதவிக்கு பாதிப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

3-ம் தரப்பாக திமுக

கர்நாடக அரசின் முடிவு தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பு வழக்கறிஞர்களின் ஒருவரான பாலாஜி சிங் கூறும்போது, “கர்நாடகா மேல்முறையீடு செய்தாலும் நாங்களும் வழக்கம் போல மூன்றாம் தரப்பாக மேல்முறையீடு செய்வோம். இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி ஏற்கெனவே அறிவித்து விட்டார்.

எங்களது தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு தடை வாங்க முயற்சிப்போம். உச்ச நீதிமன்றம் தடை வழங்கினால் ஜெயலலிதா குற்றவாளியாகவே கருதப்படுவார். எனவே மீண்டும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும். உயர் நீதிமன்றம் வழங்கிய பல தீர்ப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளதால், இந்த வழக்கிலும் தடை கிடைக்கும் என முழுமையாக நம்புகிறோம்''என்றார்.

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article7273838.ece?homepage=true

ஜெ. விடுதலைக்கு 'ஸ்டே..' அரசு வக்கீல் ஆச்சாரியா பரபரப்பு பேட்டி! அப்போ முதல்வர் பதவி?
 

பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சாரியாவே தொடர உள்ளார். மேல்முறையீட்டின்போது, ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு தடை (ஸ்டே) கேட்கப்படும் என்று பி.வி.ஆச்சாரியா தெரிவித்தார். பெங்களூரில் இதுகுறித்து பி.வி.ஆச்சாரியா அளித்துள்ள பேட்டி: ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடியே 82 லட்சத்து 36 ஆயிரத்து 812 மதிப்புக்கு சொத்து சேர்த்துள்ளதாகவும், இது வருவாயைவிட 10 சதவீதத்துக்குள்ளாக இருப்பதால் அவர் விடுதலை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

ஆனால், நீதிபதியின் கணித தவறை திருத்தினால், சுமார் 76 சதவீதம் அளவுக்கு வருவாய்க்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து சேர்த்ததாக தீர்ப்பிலேயே உள்ளது. இதுமட்டுமல்லாமல், இன்னும் ஏகப்பட்ட தவறுகள் அந்த தீர்ப்பில் உள்ளன.

 

919 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் 800க்கும் மேற்பட்ட பக்கங்களில், பழைய காலத்து விவரங்கள்தான் உள்ளன. எஞ்சிய 119 பக்க தீர்ப்பிலும் நூற்றுக்கும் மேற்பட்ட முரண்பாடுகள் உள்ளன. எனவேதான், தீர்ப்பை சரி செய்ய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கர்நாடக சட்டத்துறை முதன்மை செயலாளர் மற்றும் மாநில அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

 

எனது நியாயமான கோரிக்கையை அரசு பரிசீலனை செய்தது. முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும்போது, ஹைகோர்ட் பிறப்பித்த தீர்ப்புக்கு முதலில் தடை கேட்கப்படும். ஹைகோர்ட் தீர்ப்புக்கு தடை பெற்று, பெங்களூர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை நிலைநாட்டுவேன். இவ்வாறு ஆச்சாரியா தெரிவித்தார்.

 

கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தால், சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்புபடி, ஜெயலலிதா குற்றவாளியாகிவிடுவார். எனவே ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்க வேண்டிவரும். சிறைவாசத்தில் இருந்து தப்ப உடனடியாக ஜாமீன் கேட்க வேண்டிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Read more at: http://tamil.oneindia.com/news/india/will-pray-stay-on-jayalalithaa-s-acquittal-acharya-227903.html?utm_source=article&utm_medium=fb-button&utm_campaign=article-fbshare

  • தொடங்கியவர்

ஹைகோர்ட் தீர்ப்பை அசைக்கும் அப்பீல் மனு.. முழு வீச்சில் ஆச்சாரியா டீம்!

 

பெங்களூர்: உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக கர்நாடக அரசு மிகவும் வலிமையான மேல்முறையீட்டு மனுவை தயாரித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு நேற்று முடிவு செய்து அறிவித்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கடந்த மாதம் 11ம் தேதி கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையில், மேல்முறையீடு முடிவுக்கு கர்நாடகா வந்துள்ளது.

 

2 விஷயங்கள் இந்த அப்பீலில் அதிரடியாக இரு விஷயங்கள் அடிப்படையாக காண்பிக்கபட உள்ளன என்று சட்டக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன. முதல் விஷயம், நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பிலுள்ள கணித பிழையாகும். அந்த கணித பிழையை திருத்தினால் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது போலாகிவிடும். எனவே, இந்த விவகாரம் முதல் மையப்பொருளாக வைக்கப்படுகிறது.

 

வழக்கில் சேர்க்கவில்லை இரண்டாவது விஷயம், கர்நாடக தரப்பை, வழக்கில் இணைத்துக் கொள்ளாமலேயே ஹைகோர்ட் தனது விசாரணையை நடத்தி முடித்து தீர்ப்பையும் வழங்கியது தவறு என்பதாகும். குற்றம்சாட்டப்பட்ட தரப்புக்கு 2 மாத காலம் வாதிட அனுமதி கொடுத்த நீதிபதி, வழக்கை நடத்தும் கர்நாடக தரப்பை வாதிட அழைக்கவில்லை. முக்கியமான ஒரு வழக்கில், எதிர்தரப்பின் கருத்தை கூட கேட்கவில்லை.

 

ஒருநாள் மட்டுமே சட்ட விரோதமாக அரசு வக்கீலாக ஆஜராகி வாதத்தை எடுத்து வைத்தார் பவானிசிங் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையிலும், அரசு தரப்புக்கு வாதிட கிடைத்தது 1 நாள் மட்டுமே. அதுவும், எழுத்துப்பூர்வமாக மட்டுமே. இந்த விவகாரத்தையும் தங்கள் அப்பீலில் முக்கிய விவகாரமாக்க உள்ளது அரசு தரப்பு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://tamil.oneindia.com/news/india/jayalalithaa-appeal-how-karnataka-will-fight-supreme-court-227925.html

ஜெ. வழக்கில் அப்பீல்: கர்நாடக அரசின் அதிரடியும், 'அந்த' தொலைபேசி அழைப்பும்..!
 

 

பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இழுபறி நிலைமாறி திடீரென மேல்முறையீடுக்கு கர்நாடக அரசு பச்சைக்கொடி காட்டியதன் பின்னணியில் சில பரபரப்பு காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்து கடந்த மாதம் 11ம் தேதி தீர்ப்பு வெளியானது. பொதுவாக விடுதலை செய்யப்பட்ட வழக்கில், மேல்முறையீடு செய்ய 3 மாத கால அவகாசமும், தண்டனை வழக்கில் அப்பீல் செய்ய 2 மாத காலங்கள் அவகாசமும் வழங்கப்படும். எனவே ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்ய 3 மாதகாலம் அவகாசம் இருந்தது.

 

இருப்பினும், தமிழக எதிர்க்கட்சிகள், கர்நாடக அரசு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வெளியானது முதலே வலியுறுத்தி வருகின்றன. திமுக தலைவர் கருணாநிதி இதுகுறித்து அறிக்கை வெளியிட்டார். பாமக நிறுவனர் ராமதாஸ், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி, அதை கட்சி நிர்வாகிகள் மூலம் நேரடியாக கொடுக்கச் செய்தார். எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்தும், சித்தராமையாவுக்கு கடிதம் அனுப்பினார்.

 

அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா, தலைமை வழக்கறிஞர் ரவிவர்மகுமார், சட்டத்துறை செயலாளர் செங்கப்பா ஆகியோரும், மேல்முறையீடு அவசியம் என்று, சட்டத்துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். பல முனைகளில் இருந்து நெருக்கடி அதிகரித்தாலும்கூட, கர்நாடக அரசு அசையாமல் இருப்பதை போலவே காட்டிக் கொண்டது. நெருக்கடியில் இருந்து தப்பிக்க, கர்நாடக காங்கிரஸ் சட்டப்பிரிவு தலைவர் தனஞ்சயா, திட்டக்குழு தலைவர் சி.எம்.இப்ராஹிம் ஆகியோரை வைத்து பிளே செய்தது கர்நாடக அரசு.

 

தனஞ்சயா, முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கர்நாடகா இதில் நிர்வாக உதவிகளைதான் செய்தது. நமது உதவி முடிந்துவிட்டது. சட்டரீதியில் நமக்கு தொடர்பில்லை. எனவே, இந்த வழக்கில் இருந்து பின்வாங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இப்ராஹிம் அளித்த பேட்டியிலும் ஏறத்தாழ இதே கருத்து எதிரொலித்தது. எனவே கர்நாடக அரசு, இந்த விவகாரத்தை கைகழுவுவதற்காக, இதுபோன்ற கருத்தை பரப்பிவருவதாக பரபரப்பாக பேசப்பட்டது.

 

கடந்த வாரம் கர்நாடக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றபோதுகூட, ஜெயலலிதா விவகாரம் விவாதத்துக்கு எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசு தலைமை வக்கீலிடம் இரு சந்தேகங்கள் கேட்க வேண்டும் என்று கூறி, நைசாக அந்த விவகாரத்தை ஒத்திப்போட்டது கர்நாடக அரசு. ஏன் இப்படி இழுத்தடிக்கிறது என்ற சந்தேகம் சாமானியர்களுக்கும் தோன்றியது. ஆனால், ரவிவர்மகுமார் அந்த இரு சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்து கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை அளித்ததும், சட்ட அமைச்சர் ஜெயச்சந்திராவிடம் நிருபர்கள் இதுபற்றி கேட்டதற்கு, திங்கள்கிழமை நடைபெறும் அமைச்சரவையில் இதுகுறித்து விவாதிக்கப்படுமா என்பது தெரியாது என்றுதான் ஜெயச்சந்திரா கூறியிருந்தார்.

 

இந்நிலையில், இரு நாட்களில், அதுவும் வீக் என்ட் நாட்களில், முடிவு செய்து, ஜெயலலிதா விவகாரத்தை அமைச்சரவை அஜென்டாவிலும் சேர்த்து, திங்கள்கிழமை அமைச்சரவையில், மேல்முறையீடு குறித்து முடிவெடுத்த காரணம் என்ன என்பது பற்றிபல்வேறு பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் முக்கியமானது, காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து காட்டப்பட்ட பச்சைக்கொடிதான் என்கின்றன பட்சிகள்.

 

ஜெயலலிதா அப்பீல் வழக்கு சட்டத்துறை சார்ந்ததை தாண்டி, அரசியல்மயமாகி விட்டதைத்தான், தமிழக எதிர்க்கட்சிகளின் கடிதங்கள், கர்நாடக அரசின் மவுனம் போன்றவை உணர்த்திவந்தன. அப்பீல் செய்யாமல் காரணம் காட்டி தப்பித்துவிட்டால், தங்களின் கைக்குள் ஜெயலலிதா வந்துவிடுவார் என்று காங்கிரஸ் மேலிடம் கருதியதாகவும், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தங்களுக்கு ஜெயலலிதா அணுசரனை செய்வார் என்று எதிர்பார்த்ததாகவும் கர்நாடக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், எந்த ஒரு அசைவும், கார்டனில் இருந்து வரவில்லை என்பதுதான் காங். மேலிட அதிருப்திக்கு காரணம் என்கிறார்கள்.

 

கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள அதிமுக அபிமானிகளான, மூத்த அமைச்சர் சிவகுமார் கோஷ்டி போன்ற சில கோஷ்டிகள் மேல்முறையீட்டை தடுத்தால் தடுக்கட்டும். அல்லது, மேல்முறையீட்டு விவகாரத்திற்காக, காங்கிரசின் அரசியல் நிர்பந்தம் எதற்கும், அசையக்கூடாது என்பது கார்டன் கட்டளை என்கின்றனர் கர்நாடக காங்கிரஸ் வட்டாரத்தில். இவ்வாறு கார்டன் உறுதி காட்ட காரணம், தாமரையை பிரியக்கூடாது என்பதுதானாம்.

 

காங்கிரசுடன் நெருக்கம் காட்டினால், தாமரை கட்சிக்கு ஆகாது என்பதால், தாமரையே நமது நண்பன் என்ற முடிவுக்கு கார்டன் வந்துவிட்டது. இதனால், காங்கிரஸ் காட்டிய எந்த பூச்சாண்டியும் இங்கு பலிக்கவில்லை. எப்படியும், நீதியை நிலைநாட்டி, உச்சநீதிமன்றத்திலும் வெற்றி பெறலாம். இக்கணித தவறையும் உச்சநீதிமன்றத்தில் சரி செய்துவிடலாம் என்ற நம்பிக்கை தாமரை மற்றும் கார்டனுக்கு உள்ளது. இந்த நம்பிக்கை இருக்கும்போது, ஏன் காங்கிரஸ் பூச்சாண்டிக்கு அஞ்ச வேண்டும் என்பதே நிலைப்பாடாம்.

 

இந்நிலையில்தான், காங். மேலிடத் தலைமையின் வலது கரமாக செயல்படும் அதிகாரம்மிக்க ஒருவரிடமிருந்து திங்கள்கிழமை காலையில், சித்தராமையாவுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அப்போது, பச்சைக்கொடி ஓங்கி அசைக்கப்பட்டதாகவும் கிசுகிசுக்கிறார்கள். இதையடுத்துதான், இனியும் தாமதிக்க வேண்டாம், தொடருவோம் வழக்கை என்ற முடிவுக்கு சித்து அன்டு டீம் வந்துள்ளதாம்.

 

ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்யாமல் தவிக்க அரசியல் ரீதியாக எந்த ஆதாயமும் காங்கிரசுக்கு கிடைத்திருக்காது. ஆனால், தவிர்த்தாலோ, கர்நாடக மக்கள் மத்தியில் சித்தராமையா அரசு மீது தவறான பார்வை ஏற்பட்டுவிடும். எடியூரப்பா ஆட்சி காலத்தில், கனிம குவாரி முறைகேடு பிரச்சினைக்காக 350 கிலோமீட்டர் பாத யாத்திரை சென்றவர் அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த சித்தராமையா. தற்போது, ஜெ. வழக்கில் மேல்முறையீடு செய்யாவிட்டால், இரட்டை நிலைப்பாடுடையவராக சித்து பார்க்கப்படுவார். எனவே, இந்த வழக்கை மக்களிடம் நற்பெயரை ஈட்ட கர்நாடக அரசு பயன்படுத்திக்கொண்டது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/do-you-know-why-karnataka-decides-appeal-the-jayalalitha-asset-case-227922.html

 

அம்மாவின் இந்த இருப்பு பெண் போன்ற தோற்றப்பாடு தான் சுப்பிரமணியசுவாமி வழக்கு போட காரணமாய் இருந்தது என்று படித்திருக்கின்றேன்.அஷோக்லேய்லன்ட் நிறுவரால் வழங்கப்பட்ட தேர்தல் நிதியைஅம்மா தனதாக்கி கொண்டார் என்றும் தனக்கு தொகுதி வழங்கவில்லை என்றும் கூறித்தான் சுப்பிரமணிய சுவாமி இந்த முடிச்சு அவிழ்க்க முடியாத வழக்குகளை போட்டிருக்கின்றாராம்.

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதால் கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் பேருந்துகள் எல்லைப் பகுதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. மேல்முறையீட்டு முடிவால் பாதுகாப்பு கருதி சத்தியமங்கலம் வழியாக தமிழகத்திற்கு இயக்கப்படும் கர்நாடக அரசு பேருந்துகள் புளிஞ்சூர் சோதனை சாவடி வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. கர்நாடகா மாநிலத்திலிருந்து ஓசூர் வழியாக தமிழகத்திற்கு வந்து செல்லும் கர்நாடகா அரசு பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன. அதேபோல கர்நாடகா மாநிலத்திலிருந்து ஒசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இயக்கப்பட்ட கர்நாடகா அரசு பேருந்துகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கர்நாடகா மாநிலத்திற்கு செல்லவிருந்த பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதேபோல் சென்னை கோயம்பேட்டில் இருந்து கர்நாடாக செல்லும் 50க்கும் மேற்பட்ட கர்நாடக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karnataka-buses-stopped-tn-227898.html

நீதித்துறை மீதான நம்பிக்கை காக்கப்பட்டுள்ளது.. ஜெ.க்கு காங். தலைவர் வாழ்த்து!

 

 

பெங்களூர்: பாஜக மட்டுமல்ல காங்கிரசில் இருந்தும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து வந்துள்ளது. அதுவும் ராஜ்யசபா துணை தலைவர் பி.ஜே.குரியனிடமிருந்து. சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்ட நிலையில், பிரதமர் நரேந்திரமோடியே, தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

03-1433328309-jayalalitha-kirien566.jpg

 

தமிழக பாஜக தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், தற்போது காங்கிரஸ் தரப்பில் இருந்தும் ஒரு வாழ்த்துக்குரல் வந்துள்ளது. அதுவும் வாழ்த்தை தெரிவித்திருப்பது வேறு யாருமல்ல, ராஜ்யசபாவின் துணை தலைவராக உள்ள பி.ஜே.குரியனாகும். ஜெயலலிதாவுக்கு அவர் எழுதியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் மீண்டும் முதல்வராக பதவிக்கு வந்துள்ள உங்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள். இது உங்களுக்கு ஒரு தார்மீக வெற்றியாகும். தமிழக மக்கள், நீதித்துறை மீது வைத்திருந்த நம்பிக்கை காக்கப்பட்டுள்ளது. உங்கள் வெற்றி மாநிலத்திலும், தேசிய அளவிலும் தொடர்ந்து, மக்களின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும், அவர்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும், அனைத்துவகையிலும் வளர்ச்சியடைய வேண்டும் என்று வாழ்த்திக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதம் புகழாரம் சூட்டுகிறது. ராஜ்யசபா துணை தலைவராக குரியன் பதவி வகித்தாலும், காங்கிரஸ் கட்சி தரப்பில் இருந்து சென்றுள்ள முதல் வாழ்த்தாகவே இது பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவை காங்கிரஸ் கட்சியும் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை என்பதை இது காட்டுகிறது. அதேநேரம், கர்நாடக காங்கிரஸ் அரசு, ஜெயலலிதா விவகாரத்தில் அப்பீலுக்கு சென்றுள்ளதை, அதிமுக பத்திரிகையான நமது எம்ஜிஆர் கடும் சொற்களால் கண்டித்துள்ளது.

http://tamil.oneindia.com/news/india/now-congress-try-woo-j-jayalalitha-228034.html

  • தொடங்கியவர்

ஜெ. வழக்கில் மேல்முறையீடு செய்ய விரைவில் அரசாணை பிறப்பிப்பு: கர்நாடக சட்ட அமைச்சர்

 

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும் என்று கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

 

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு முடிவை எடுப்பதில் எந்தவித நெருக்கடியும் ஏற்படுத்தப்படவில்லை என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

 

 இந்நிலையில் இது குறித்து கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதில் கர்நாடக அரசு தீர்க்கமாக உள்ளது.

 

மேல்முறையீடு செய்ய ஏதுவாக விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை நடத்த மட்டும் கடந்த 11 ஆண்டுகளில் ரூ.5.12 கோடி செலவாகியுள்ளது என்றார்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/will-pass-g-o-soon-facilitating-the-appel-jaya-s-case-karnataka-228115.html

ஜெயலலிதாவின் வழக்குத் தீர்ப்பானது ஒரு கணக்குக் கூட்டல் தவறைக் கொண்டுள்ளது. மோசடி மூலம் சேர்க்கப்பட்டதான சொத்து, முழுச் சொத்திலும் 10 வீதத்திற்கு குறைவாக இருந்ததாக கூறியே அவர் விடுதலை செய்யப்பட்டார்.

ஜெயலலிதாவின் வழக்கறிஞர் சமர்ப்பித்த வங்கிக்கடன் 10.67 கோடியாக இருக்க, நீதிபதி தனது கணக்குப் பார்த்தலில் வங்கிக் கடனை 24.17 கோடி எனக் குறிப்பிட்டு தீர்ப்புக் கூறியிருக்கின்றார்.

இந்த மேன்முறையீடு இந்திய நீதித்துறைக்கும் அரசியலிற்குமிடையேயான போட்டியாக அமையப் போகின்றது. ஜெயலலிதாவின் பலம், பலவீனம் என்ன என்பதை லங்காசிறி வானொலியின் இவ்வார நிஜத்தின் தேடலில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா பகிர்ந்து கொண்டார்.

- See more at: http://www.canadamirror.com/canada/44046.html#sthash.IOIv57gA.dpuf

ஒன்பது கிரகமும் உச்சமுள்ள ஒருவருக்கு கெட்டஸ்தானத்திலும் உச்சமாகினால் சிறை செல்வதை தவிர்க்கமுடியாதாம்.அக் காலகட்டம் முடிய சாகும் வரை அம்மாதானாம் பதவியிலிருப்பார் என்கிறார்கள் பார்ப்போம்

  • தொடங்கியவர்

ஜெ.,விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு: ஜூலை முதல் வாரத்தில் மனு தாக்கல்?

 

 

பெங்களூரு: முதல்வர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜூலை முதல் வாரத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக, அம்மாநில அரசு தரப்பு வக்கீல் ஆச்சார்யா கூறி உள்ளார்.

 

சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ஜெயலலிதா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என, தி.மு.க., பா.ம.க, உள்ளிட்ட தமிழக எதிர்கட்சிகள் கர்நாடக அரசை கேட்டுக் கொண்டன.

 

வழக்கின் இறுதியில் அரசு தரப்பு வக்கீலாக செயல்பட்ட ஆச்சார்யா,' இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான அனைத்து வாய்ப்புக்களும் உள்ளது,' என்றார். அட்வகேட் ஜெனரல் ரவிவர்மா குமாரும் ஆச்சாரியாவின் கருத்தையே அரசுக்கு தெரிவி்த்தார். இதையடுத்து, சமீபத்தில் கூடிய கர்நாடக அமைச்சரவை, ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவெடுத்தது. ஆனால், தேதி குறிப்பிடவில்லை.

 

இந்நிலையில், மேல்முறையீட்டு மனு எப்போது தாக்கல் செய்யப்படும் என்பதற்கு ஆச்சார்யா ஒரு பத்திரிகை நிறுவனத்தின் பேட்டியில் கூறி உள்ளார். அதன்படி, ஜூலை முதல்வாரத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறத என்றார்.

 

இது சம்பந்தமாக ஆச்சார்யா கூறுகையில், 'மேல் முறையீட்டு மனுவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இதற்கு ஒருவாரத்திற்கு மேல் ஆகும். ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பில் பல்வேறு தவறுகள் உள்ளன. அவற்றை சுட்டிக்காட்டி உள்ளேன். தற்போது சுப்ரீம் கோர்ட்டிற்கு விடுமுறை என்பதால், விடுமுறை கால நீதிபதிகளிடம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்வதில் சிக்கல் உள்ளது. எனவே, ஜூலையில் ரெகுலர் கோர்ட் திறந்தவுடன், முதல் வாரத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும்,' என்றார்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1268130

  • தொடங்கியவர்

ஜெ. வழக்கில் அப்பீல் மனு தாக்கல் எப்போது?: ஆச்சாரியா பேட்டி

 

பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் எப்போது மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள பி.வி.ஆச்சாரியா, ஆங்கில பத்திரிகையொன்றுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில் ஆச்சாரியா கூறியுள்ளதாவது:

 

பெரிய வழக்கு வழக்கமாக, அப்பீல் மனுக்கள் மீது சட்டத்துறை செயலாளர் இறுதி முடிவு எடுப்பார். இந்த வழக்கு, ஒரு மாநில முதல்வருக்கு எதிரானது என்பதால், கர்நாடக முதல்வர், ஒட்டுமொத்த அமைச்சரவை சம்மதத்துடன் இம்முடிவை எடுத்துள்ளார். இந்த கூட்டு முடிவு மகிழ்ச்சியளிக்கிறது. சட்டப்படிதான் எல்லாம் நடந்துள்ளது.

 

காங்கிரசில் கருத்து வேறுபாடு காங்கிரசில் ஒரு கோஷ்டி, மேல்முறையீடு வேண்டாம் என்று கூறிவந்தாலும், மற்றொரு கோஷ்டி மேல்முறையீட்டுக்கு ஆர்வம் காண்பித்தது. எனக்கே காங்கிரசிலிருந்து சிலர் கடிதம் எழுதி, உங்கள் முயற்சி தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இறுதியில் சட்டப்படியே மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

ஹைகோர்ட் தீர்ப்பில் தவறுகள் ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பிலுள்ள ஏகப்பட்ட தவறுகளை அடிப்படையாக வைத்து, மேல்முறையீட்டின்போது வாதம் செய்யப்படும். அக்னிகோத்ரி வழக்கில், வருமானத்துக்கு அதிகமாக 10 சதவீதத்துக்கு குறைவாக சொத்து இருந்ததால் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறப்பட்டது. ஆனால், அது ஒன்றும் கணக்கீடு அல்லது அறிவியல் பார்முலா கிடையாது. எல்லாவற்றிலும் அதை அப்ளை செய்யவும் முடியாது.

 

900 கோடி குவித்தால் விட்டுவிடலாமா? உதாரணத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருமானம் வைத்துள்ள ஒருவர், 900 கோடிகளை வருவாய்க்கு அதிகமாக சேர்த்தாலும், அது 10 சதவீதத்துக்கு குறைவாகத்தான் வருகிறது. இதற்காக 900 கோடி ரூபாயை சுருட்டியவரை விடுதலை செய்துவிட முடியுமா? 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான வித்தியாசமாக இருந்தால், பரவாயில்லை என்று சொல்லலாம். இதையெல்லாம், உச்சநீதிமன்றத்தில் எடுத்து வாதிடுவோம்.

 

ஹைகோர்ட்டில் 4 மாதங்கள்தான் மேல்முறையீடு எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாது. 18 வருடங்களாக நடந்த வழக்கு, ஹைகோர்ட்டில் நான்கே மாதங்களில் முடிவடைந்தது. உச்சநீதிமன்றத்தில் எப்படி நடைபெறும் என்று தெரியாது. ஆனால், ஊழல் தடுப்பு சட்டப்படி, இதுபோன்ற வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.

 

ஜூலையில் தாக்கல் தற்போது உச்சநீதிமன்றத்தில் கோடை விடுமுறை நடைமுறையில் உள்ளது. எனவே அவசர வழக்குகளை மட்டுமே உடனடியாக விசாரணைக்கு எடுப்பர். இவ்வழக்கு அவசர வழக்காக கருதப்பட முடியாது என்பதால், விடுமுறை கால பெஞ்சில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாது என்று கருதுகிறேன். எனவே, ஜூலை 1ம் தேதிக்கு பிறகு மேல்முறையீடு தாக்கல் செய்யப்படும். இவ்வாறு ஆச்சாரியா கூறியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.com/news/india/jayalalitha-case-we-will-file-appeal-after-july-1-says-acharya-228182.html

  • தொடங்கியவர்

ஜெ. வழக்கில் ஒரு வாரத்தில் அப்பீல் மனு ரெடி: கர்நாடக சட்ட அமைச்சர்

 

 

பெங்களூர்: இன்னும் ஒரு வாரத்தில், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு அப்பீல் மனு தயாராகும் என்று கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்தார். பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் ஜெயச்சந்திரா கூறியதாவது: சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனுவில் வாதிட, சிறப்பு வழக்கறிஞராக ஆச்சாரியாவும், சீனியர் வழக்கறிஞராக டெல்லியிலுள்ள அரிஸ்டாடிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

அவர்கள் இணைந்து, மேல்முறையீட்டு மனுவை தயாரித்து வருகின்றனர் என்றார். 

 

இன்னும் எத்தனை நாட்களில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படும் என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜெயச்சந்திரா, நான் 3 நாட்கள் முன்பு டெல்லி சென்றிருந்தேன். அப்போது அப்பீல் பணிகளை மேற்பார்வையிட்டேன். இன்னும் ஒரு வாரத்தில் அப்பீல் மனு தயாராகும் வாய்ப்பு உள்ளது என்றார். அதேநேரம், கடந்த வாரம் ஆச்சாரியா அளித்த பேட்டியில், ஜூலை 1ம் தேதிக்கு பிறகு அப்பீல் மனு தாக்கல் செய்யப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/appeal-petition-jayalalitha-asset-case-will-be-ready-within-228409.html

  • தொடங்கியவர்

ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் மேல் முறையீட்டு மனு தாக்கல்: வேகமாக ஆவணங்களை திரட்டும் கர்நாடகா
 

 

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

 

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், கடந்த மே 11-ம் தேதி நால்வரையும் விடுவித்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, அரசு தலைமை வழக்கறிஞர் ரவி வர்ம குமார் ஆகியோர் பரிந்துரை செய்திருந்தனர்.

 

இதையடுத்து, கடந்த 1-ம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜெயலலிதா வழக்கில் மேல் முறையீடு செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது பெரும்பான்மையான அமைச்சர்கள் ஒப்புதல் அளித்ததால், ஜெயலலிதாவின் விடுதலைக்கு எதிராக‌ மேல்முறையீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

 

இதையடுத்து அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தலைமையில் சந்தேஷ் சவுட்டா உள்ளிட்ட சட்டத் துறை அதிகாரிகள் ஜெயலலிதாவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.

 

முதல்கட்டமாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான அரசு தரப்பு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சியங்கள் அளித்த வாக்குமூலம், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை திரட்டிய ஆதாரங்கள், அரசு சான்று ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைக் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

இதுதவிர நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பில் உள்ள முக்கிய அம்சங்கள், குற்றவாளிகள் தரப்பு வாதத்தை நிராகரிக்க அவர் எடுத்துரைத்த வாதங்கள் ஆகியவற்றை ஒரு பிரிவினர் ஆராய்ந்து வருகின்றனர். மேலும் நீதிபதி குமாரசாமி தீர்ப்பில் உள்ள அடிப்படை தவறுகள், கணித பிழை ஆகியவை விரிவாக அலசப்படுகிறது. மேலும் அரசு தரப்பின் வாதத்தை நிராகரித்த குமாரசாமி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டது தொடர்பாகவும் ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதனிடையே கர்நாடக சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கான ஆவணங்களை கர்நாடக அரசு தயாரித்து வருகிறது.

 

இதற்கான பணிகளை அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா செய்து வருகிறார். ஆவணங்கள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்த பிறகு, அடுத்த வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும்” என்றார்.

 

இது தொடர்பாக ஆச்சார்யாவிடம் கேட்டபோது, “மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வதற்கான ஆவணங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே எப்போது மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என தேதியை தெரிவிக்க முடியாது.

 

உச்ச நீதிமன்றம் கோடை விடுமுறையில் இருப்பதை கருத்தில் கொண்டு, கூடிய விரைவில் மேல்முறையீடு செய்யப்படும்” என்றார்.

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE/article7299059.ece?homepage=true&relartwiz=true

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஜெ., மீதான 'அப்பீல்' அடுத்த வாரம் தாக்கல்: கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தகவல்

 

பெங்களூரு : தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட, நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், 'அப்பீல்' செய்யும் பணிகள், துரித கதியில் நடந்து வருகிறது. அடுத்த வாரத்தில், உச்ச நீதிமன்றத்தில், அப்பீல் செய்யப்படும், என்று அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்தார்.

 

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி குன்ஹா அளித்த தண்டனையை எதிர்த்து, நான்கு பேரும், கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கை விசாரித்த, நீதிபதி குமாரசாமி, நான்கு பேரையும் நிரபராதிகள் என்று கூறி விடுதலை செய்தார்.இந்த தீர்ப்பில் பிழை உள்ளது. இதை எதிர்த்து, அரசு, உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய வேண்டுமென்று, அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, அரசு அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார் ஆகியோர், அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

 

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய, ஜூன் 1ம் தேதி, கர்நாடக அமைச்சரவை முடிவு செய்தது. உச்ச நீதிமன்றத்தில் வாதிட உள்ள ஆச்சார்யா, இரு தீர்ப்புகளையும் அலசி வந்தார்.அமைச்சரவையில் முடிவு செய்து, இரு வாரங்கள் கடந்தும், அப்பீல் செய்வது குறித்து, எந்த தகவலும் வெளியாகவில்லை. கிணற்றில் போட்ட கல் போன்று, அமைதியாக இருந்தது.

 

இதுகுறித்து, ஆச்சார்யாவிடம், எப்போது அப்பீல் செய்வீர்கள்? ஜெயலலிதா விடுதலையை, நிறுத்தி வைக்குமாறு, உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுப்பீர்களா என்ற நிருபர்களின் கேள்விக்கு, பதிலளித்த அவர், “அப்பீல் செய்யும் பணி, துரித கதியில் நடந்து வருகிறது; அடுத்த வாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்படும். குமாரசாமி அளித்த தீர்ப்பை, நிறுத்தி வைக்க கோரிக்கை விடப்படுமா என்பது குறித்து, அப்பீல் செய்யும் போது தான் முடிவு செய்யப்படும்,” என்றார்.

 

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1276982

  • தொடங்கியவர்

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு? - கர்நாடக சட்ட அமைச்சருடன் ஆச்சார்யா ஆலோசனை

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்
தமிழக முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் கர்நாடக அரசு நாளை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்கிற‌து. விடுமுறை காலம் முடிவதற்குள் திடீரென மேல்முறையீடு செய்வ‌து தொடர்பாக அம்மாநில சட்ட அமைச்சர் டி.பி.ஜெயசந்திராவுடன் அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா அவசர ஆலோசனை நடத்தினார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்த‌ மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், கடந்த மே 11-ம் தேதி நால்வரையும் விடுதலை செய்தது.

“நீதிபதி சி.ஆர். குமாரசாமி அளித்த தீர்ப்பில் பல்வேறு அடிப்படை தவறுகளும், கணித பிழைகளும் இருக்கிறது. எனவே கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்” என்று அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, சட்டத்துறை செயலர் சங்கப்பா, அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார் ஆகியோர் கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்தனர். எனவே ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து மேல்முறை யீடு செய்வதென‌ கடந்த 1-ம் தேதி கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட‌து.

இதையடுத்து அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தலைமையில் அவர‌து உதவி வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா மற்றும் சட்டத்துறை அதிகாரிகள் ஜெயலலிதா தரப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டன‌ர். ஆச்சார்யா கேட்டுக் கொண்டதற்கிணங்க பவானிசிங்கின் உதவியாளராக இருந்த முருகேஷ் எஸ். மரடியும் கடந்த சில தினங்களாக இரவு பகலாக உழைத்தார்.

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரின் வருமானம், செலவு, கடன், இருப்பு ஆகியவை குறித்து தனித்தனியாக அட்டவணை தயாரித்துக் கொடுத்தார். அதில் நீதிபதி குமாரசாமி தவறாக கணக்கிட்ட கடன் தொகை, முரணாக ஏற்றுக்கொண்ட வருமானம் ஆகியவற்றை சுமார் 150 பக்க பச்சை நிற முத்திரைத் தாளில் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதாவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தயாரித்துள்ள அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, அதனை கர்நாடக அரசின் சட்ட ஆலோசகர் பிரிஜேஷ் கல்லப்பா, சட்ட‌த்துறை செயலர் சங்கப்பா ஆகியோருடன் விவாதித்தார்.

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு எதிராக வலுவான மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்வது குறித்து ஆச்சார்யா நேற்று கர்நாடக சட்ட அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திராவையும், அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமாரையும் சந்தித்து சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

அப்போது க‌ர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை கோருவது, ஜெயலலிதாவின் விடுதலைக்கு தடை கோருவது, ம‌க்கள் பிரதிநிதி என்ற அந்தஸ்தில் இருந்து தகுதி நீக்கம் செய்ய கோருவது ஆகியவை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக ‘தி இந்து' விடம் ஆச்சாரியா கூறும்போது, “சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இது தொடர்பான ஆவணங்களை ஏற்கெனவே டெல்லிக்கு அனுப்பி இருக்கிறோம். ஆவணங்களை இறுதி செய்யும் பணிகள் முடிந்து விட்டதால் விடுமுறை கால நீதிமன்றத்திலேயே பணிகளை தொடங்கலாம் என டெல்லி வழக்கறிஞர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். எனவே வழக்கமான நீதிமன்றம் தொடங்கும் வரை காத்திருக்காமல் விடுமுறை கால நீதிமன்றத்திலேயே, அதாவது திங்கள்கிழமையோ அல்லது ஓரிரு நாட்களிலோ மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யலாம் என முடிவெடுத் திருக்கிறோம்.

தமிழக‌ முதல்வர் ஜெயல லிதாவின் விடுதலைக்கு தடை கோருவது உட்பட எங்களுடைய எந்த கோரிக்கையையும் இப்போது வெளிப்படையாக கூற முடியாது. எங்களுடைய கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைப்போம்” என்றார்.

 

http://tamil.thehindu.com/india/ஜெயலலிதா-விடுதலையை-எதிர்த்து-உச்ச-நீதிமன்றத்தில்-நாளை-மேல்முறையீடு-கர்நாடக-சட்ட-அமைச்சருடன்-ஆச்சார்யா-ஆலோசனை/article7337210.ece

  • தொடங்கியவர்

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது கர்நாடக அரசு

சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்த‌ மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், கடந்த மே 11-ம் தேதி நால்வரையும் விடுதலை செய்தது.

"நீதிபதி சி.ஆர். குமாரசாமி அளித்த தீர்ப்பில் பல்வேறு அடிப்படை தவறுகளும், கணித பிழைகளும் இருக்கிறது. எனவே கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்" என்று அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, சட்டத்துறை செயலர் சங்கப்பா, அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார் ஆகியோர் கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

எனவே, ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து மேல்முறை யீடு செய்வதென‌ கடந்த 1-ம் தேதி கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட‌து.

இதையடுத்து அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தலைமையில் அவர‌து உதவி வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா மற்றும் சட்டத்துறை அதிகாரிகள் ஜெயலலிதா தரப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டன‌ர். ஆச்சார்யா கேட்டுக் கொண்டதற்கிணங்க பவானிசிங்கின் உதவியாளராக இருந்த முருகேஷ் எஸ்.மரடியும் கடந்த சில தினங்களாக இரவு பகலாக உழைத்தார்.

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரின் வருமானம், செலவு, கடன், இருப்பு ஆகியவை குறித்து தனித்தனியாக அட்டவணை தயாரித்துக் கொடுத்தார். அதில் நீதிபதி குமாரசாமி தவறாக கணக்கிட்ட கடன் தொகை, முரணாக ஏற்றுக்கொண்ட வருமானம் ஆகியவற்றை சுமார் 150 பக்க பச்சை நிற முத்திரைத் தாளில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தயாரித்த அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, அதனை கர்நாடக அரசின் சட்ட ஆலோசகர் பிரிஜேஷ் கல்லப்பா, சட்ட‌த்துறை செயலர் சங்கப்பா ஆகியோருடன் விவாதித்தார்.

இதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதாவுக்கு எதிராக வலுவான மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்வது குறித்து ஆச்சார்யா சமீபத்தில் கர்நாடக சட்ட அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திராவையும், அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமாரையும் சந்தித்து சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

அப்போது க‌ர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை கோருவது, ஜெயலலிதாவின் விடுதலைக்கு தடை கோருவது, ம‌க்கள் பிரதிநிதி என்ற அந்தஸ்தில் இருந்து தகுதி நீக்கம் செய்ய கோருவது ஆகியவை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

 

http://tamil.thehindu.com/india/ஜெயலலிதா-விடுதலையை-எதிர்த்து-உச்ச-நீதிமன்றத்தில்-மேல்முறையீடு-செய்தது-கர்நாடக-அரசு/article7345480.ece

  • தொடங்கியவர்

ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு: கர்நாடக அரசின் 'விடுமுறை கால' வியூகம்!

 

சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வு முன் ஆஜரான கர்நாடக அரசு உதவி வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா சிறப்பு மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு சுமார் 2700 பக்கங்கள் கொண்டதாக இருந்தது.

மனுவில் இருப்பது என்ன?

கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், "ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் அப்பட்டமான கணிதப் பிழைகள் உள்ளன. இந்த வழக்கில் கர்நாடக அரசை சிறப்பு நீதிமன்றம் ஒரு வாதியாகக் கூட கருதவில்லை.

பவானி சிங் அரசு சிறப்பு வழக்கறிஞராக நீக்கப்பட்டபோது உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை முன் வைத்தது. ஆனால் அதைகூட சிறப்பு நீதிமன்றம் பின்பற்றவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீட்டு மனுவின் முக்கிய அம்சங்கள்:

'சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்பட்டது நீதிக்கு முரணானது. கடந்த மே 11-ம் தேதியன்று நீதிபதி குமாரசாமியால் வழங்கப்பட்ட தீர்ப்பு பூடகமானது. தர்க்கரீதியாக தவறானது. அப்பட்டமான கணிதப்பிழைகள் உள்ளன.

கடந்த 2014-ல் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பினை ரத்து செய்ததற்கான காரணங்களைக்கூட குமாரசாமி தனது தீர்ப்பில் அறிவுறுத்தவில்லை.

மேலும் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா தரப்பினர் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன்களையெல்லாம், ஜெயலலிதாவின் வருமானமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கூறி, வங்கியிலிருந்து ஜெயலலிதா தரப்பினர் கடன்களைப் பெற்றார்கள் என்ற பட்டியலையும், அதன் கூட்டுத் தொகையையும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா தரப்பினர் பெற்ற கடன் 24,17,31,274 ரூபாய் என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அவரே பட்டியலிட்ட பத்து கடன்தொகையை கூட்டினால், அதன் கூட்டுத் தொகை 10,67,31,274 ரூபாய்தான் வரும். இதன்படி ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 76.7% வரும்.

அக்னிஹோத்ரி வழக்கை மேற்கோள் காட்ட முடியாது

ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு வருமானத்தை விட 8.12 சதவீதமே அதிகமாக உள்ளதால் அவரை விடுதலை செய்வதாக குமாரசாமி கூறியுள்ளார். ஜெயலலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற அக்னிஹோத்ரி வழக்கை மேற்கோள் காட்டியுள்ளார். அது செல்லாது.

ஏனெனில், அக்னிஹோத்ரி வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்தின் மதிப்பு வெறும் ரூ.11,350. ஆனால் ஜெயலலிதா வழக்கில் சொத்து மதிப்பு கோடிகளில் உள்ளன. அக்னிஹோத்ரி வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்து சொற்பமானதாக இருந்ததாலேயே அவர் விடுவிக்கப்பட்டார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை கால அமர்வு முன்பு ஏன்?

கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை மிக மிக ரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

'தி இந்து'வுக்கு நேற்று பேட்டியளித்த கர்நாடக சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா இன்றைக்கு மேல்முறையீடு செய்வதாக தெரிவிக்கவில்லை.

இது குறித்து கர்நாடக நீதிமன்ற வட்டாரம் கூறும்போது, "உச்ச நீதிமன்றத்தின் கோடை விடுமுறை காலம் அடுத்த வாரத்துடன் முடிந்து நீதிமன்ற‌ அலுவல்கள் தொடங்க இருக்கின்றன. இந்த விடுமுறை கால அமர்வுக்கு மதன் பி லோகூர் நீதிபதியாக இருக்கிறார். அவர் ஜெயலலிதாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டவர்.

எனவே, விடுமுறை கால அமர்வு முன் ஜெயலலிதா மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தால் தங்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும் என்பது கர்நாடக அரசின் கணிப்பு.

எனவேதான், கோடை விடுமுறை காலம் முடிவதற்கு முன்னதாக‌ கர்நாடக அரசு சார்பாக ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தது.

மேலும், ஜூலை முதல் வாரத்தில் வழக்கு விசாரணைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://tamil.thehindu.com/india/ஜெயலலிதா-விடுதலைக்கு-எதிராக-மேல்முறையீடு-கர்நாடக-அரசின்-விடுமுறை-கால-வியூகம்/article7345588.ece

  • தொடங்கியவர்
ஜெ. வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அப்பீல் மனுவில் அப்படி என்ன உள்ளது?
 
டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு சாப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அப்பீல் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள்:
 
சொத்துக்குவிப்பு வழக்கில் ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பு லாஜிக் இல்லாதது. குழப்பம் நிறைந்தது.
 
ஹைகோர்ட்டின் உத்தரவால், நீதி நிலைகுலைந்து போயுள்ளது. தப்பான ஒரு கணித கூட்டலை அடிப்படையாக வைத்து ஜெயலலிதா மற்றும் மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 
 ஜெயலலிதா சொத்துக்களின் கட்டுமான செலவையும், அவரது வளர்ப்பு மகன் திருமணச் செலவையும் ஹைகோர்ட் தவறுதலாக கணக்கிட்டுள்ளது.
 
காவல்காரர்களுக்கு போடப்படும் ஷெட்டுக்கு என்ன மதிப்பு கணக்கிடப்பட்டதோ அதே மதிப்பை, பிரமாண்டமான பங்களாக்களுக்கும், அடுக்குமாடிகளுக்கும் கணக்கிட்டுள்ளது ஹைகோர்ட்.
 
கீழ்நீதிமன்றத்தின் ஒரு உத்தரவை முற்றாக மறுத்து தீர்ப்பு எழுதிய ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி, தனது தீர்ப்பை நியாயப்படுத்தும் வலுவான காரணம் எதையுமே கூறவில்லை. அதேநேரம், கீழ்நீதிமன்றமோ, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள்தான் என்பதை ஆதாரத்துடனும், முழு விவரத்துடனும் கூறியிருந்தது.
 
ஹைகோர்ட் கூட்டலில் பெரும் தவறிழைத்துவிட்டது. கடன் தொகையை தப்பாக கூட்டி 24,17,31,274 ரூபாய் என்று கணக்கு காட்டியுள்ளது ஹைகோர்ட். ஆனால், சரியாக கூட்டினால் 10,67,31,274 ரூபாய்தான் வருகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய இந்த தப்பான கூட்டல் பயன்பட்டுள்ளது. தப்பான கூட்டல் மூலம், ஜெயலலிதா 8.12 சதவீதம்தான் அதிகமாக சொத்து குவித்துள்ளதாகவும், இதனால் விடுதலை செய்வதாகவும் ஹைகோர்ட் கூறியுள்ளது.
 
ஆனால், அதே தொகையை சரியாக கூட்டினால் அது 76.7 சதவீதமாக அதிகரித்துவிடும்.
 
ஹைகோர்ட் நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதாட வாய்ப்புகளை அள்ளிக்கொடுத்தார். ஆனால் அரசு தரப்பான கர்நாடக தரப்பை வழக்கில் சேர்க்கவேயில்லை. இறுதியில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஒருநாள் மட்டுமே கர்நாடகாவுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. அதுவும்கூட எழுத்துப்பூர்வமாக மட்டுமே.
 
அக்னிகோத்ரி என்பவர் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததை உதாரணமாக காண்பித்து, ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதும் தவறானது. ஏனெனில், இந்த வழக்கில், குற்றச்சாட்டு பல கோடி சொத்துக்கள் தொடர்பானது. அக்னிகோத்ரி வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர், வருவாய்க்கு அதிகமாக 11 ஆயிரத்து 350 ரூபாய் சேர்த்திருந்தார். அதை கணக்கு காட்ட முடியாமல் திணறியதால் கோர்ட் அவரை விடுவித்தது. ஆனால் ஜெயலலிதா வழக்கிலோ, சொத்து மதிப்பு கோடிக்கணக்கிலானது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/jaya-appeal-hc-verdict-illogical-cryptic-lacks-reasoning-229416.html
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10458800_992657187413770_275403899263992

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியார் கொடுத்தது, இரு மாநிலங்களுக்கும் இடையே பகை வளர்க்காமல், பிரச்சனையினை, டெல்லி உச்ச நீதிமன்றிடம் தள்ளி விடும்அரசியல் நோக்கம் கொண்ட, சட்ட ரீதி இல்லாத தீர்ப்பு.

:rolleyes:

  • தொடங்கியவர்
ஜெ., வழக்கில் கர்நாடகா அரசு மேல்முறையீடு: தி.மு.க., தனியாக வழக்கு தொடருமா?
 

 

 
Tamil_News_large_1284589.jpg

சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா உட்பட, நால்வரை, கர்நாடகா உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து, அம்மாநில அரசு, உச்ச நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்துள்ளது.

அதன் மீதான விசாரணை விவரம், அடுத்த வாரத்தில் தெரிய வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், இதில், தி.மு.க.,வின் நிலை குறித்து, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, தி.மு.க., சட்டப்பிரிவு நிர்வாகி ஒருவர் கூறியதாவது:கர்நாடகா உயர் நீதிமன்றம்,ஜெயலலிதாவை விடுதலை செய்ததும், அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் செல்வது என, முடிவு செய்து விட்டோம்; ஆனால், கர்நாடகா அரசின் நிலைப்பாட்டை அறிவதற்காக காத்திருந்தோம். தற்போது, கர்நாடகா அரசு, மேல்முறையீடு செய்துள்ளது. எனவே, வழக்கில் புகார்தாரர் என்ற முறையில், தி.மு.க., தரப்பிலும், மேல்முறையீடு மனு போடுவதா அல்லது கர்நாடகா தொடர்ந்துள்ள வழக்கில், இணைந்து கொள்வதா என, ஆலோசிக்கப்படுகிறது. இவ்வழக்கில், தி.மு.க., தரப்பு கருத்துக்களை, எடுத்து வைக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்காக டில்லியில், மூத்த வழக்கறிஞர்களின் கருத்தை கேட்டுள்ளோம்.கர்நாடகா வழக்கில், தி.மு.க., தரப்பையும் சேர்த்துக் கொள்ளும்படி, 'இம்ப்ளீட்' மனு செய்யும் பட்சத்தில், அதை உச்ச நீதிமன்றம் ஏற்காவிட்டால், வேறு வாய்ப்பு இல்லாமல் போய் விடும்.

அதற்கு பதிலாக, கர்நாடகாவை போல், தி.மு.க.,வும், 'அப்பீல்' செய்வதே நல்லது என, சட்ட யோசனை சொல்லப்படுகிறது. கர்நாடகா ஏற்கனவே, அப்பீல் செய்துள்ளதாக கூறி, தி.மு.க., மனுவை தள்ளுபடி செய்ய நேரிட்டாலும், 'அந்த வழக்கில், ஒரு, 'பார்ட்டி'யாக சேர்ந்து கொள்ளுங்கள்' என, உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு உள்ளது.ஒருவேளை, எந்த உத்தரவுமின்றி, தி.மு.க., மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும், தி.மு.க.,வை வழக்கில் சேர்க்கக் கோரி, மீண்டும் மனு போட வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, அந்த நிர்வாகி தெரிவித்தார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1284589

  • தொடங்கியவர்

1,068 பக்கங்களில் என்ன இருக்கிறது ? முழு விவரம்

 

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதிக் களமாக உச்ச நீதிமன்றம் இருக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த 22-ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டுவிட்டது. இதே வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த ஆச்சார்யா இப்போது மனுதாரர். ஆச்சார்யாவின் சார்பில் வழக்கைத் தாக்கல் செய்துள்ளவர் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில்.

1,068 பக்கங்கள் கொண்ட மேல்முறையீட்டு மனுவில், 1,002 பக்கங்கள் வரை வழக்கின் வரலாறும், நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பின் மொத்த நகலும் இணைக்கப்பட்டுள்ளது. 1,003-ம் பக்கத்தில் இருந்துதான் மேல்முறையீட்டுக்கான காரண காரியங்களை ஆச்சார்யா அடுக்கி உள்ளார். அதன் உள்ளடக்கத்தைப் படிக்கும்போது திகிலாக இருக்கிறது.

நீதியை கல்லறைக்கு அனுப்பிய தீர்ப்பு

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில், ஆவணங்களின் முக்கியத்துவம், ஆதாரங்களின் உறுதி, சாட்சிகளின் நேர்மை முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு உள்ளன. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. தமிழக அரசு தன்னிச்சையாக அரசு வழக்கறிஞரை நியமித்ததில் தொடங்கி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்ததில் பல குளறுபடிகள் நிகழ்ந்தன. அவற்றில் தலையிட்டு நீதிபதி குமாரசாமி, ஒருமுறைகூட கறார் காட்டவில்லை. மேலும், ‘பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்தது செல்லாது’ என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் எப்படித் தீர்ப்பளிக்க வேண்டும் என்று, நீதிபதி குமாரசாமிக்கு பல வழிகாட்டுதல்களை எடுத்துரைத்தது. அதில் ஒன்றைக்கூட அவர் கடைப்பிடிக்கவில்லை. மொத்தமாக நீதியைக் கல்லறைக்கு (grave miscarriage of justice) அனுப்பி சமாதி கட்டிய தீர்ப்பாக குமாரசாமியின் தீர்ப்பு உள்ளது.

p02a.jpg

சில ஆயிரங்களும் பல கோடிகளும் ஒன்றா?

ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரை விடுதலை செய்வதற்கு அக்னிஹோத்ரி வழக்கை முன்னுதாரணமாகக் காட்டி உள்ளார் நீதிபதி குமாரசாமி. அந்த வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக அக்னிஹோத்ரியிடம் இருந்த சொத்து மதிப்பு வெறும் 11 ஆயிரத்து 350 ரூபாய். அது சேர்க்கப்பட்ட காலம் 13 ஆண்டுகள். சொத்து சேர்க்கப்பட்ட காலத்தை ஒப்பிடும்போது அக்னிஹோத்திரியின் வருமானம் மிகக்குறைவு. அதனால்தான் அந்த வழக்கில் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டார். ஜெயலலிதா வழக்கில் வருமானம் பல கோடிகள். அது ஈட்டப்பட்ட வருடங்கள் மிகக் குறைவு. அதுவும் 1947 சட்டப்படி தான் அக்னிஹோத்ரி விடுதலை செய்யப்பட்டார். அதன்பிறகு, ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ஆக என சட்டம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. அதில், பிரிவு 13 (1) (e) நியாயமான வருமானம் என்பது ‘நியாயமான வழிகளில் வந்த வருமானம் மட்டுமே’ என்று தெளிவுபடுத்தி உள்ளது. மேலும், வருமானத்துக்கு அதிகமாக ஏதாவது சொத்துகள் பொது ஊழியருக்கு வரும்போது, அதுபற்றி அவர் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு உரிய தகவல்களைத் தெளிவுபடுத்தி இருக்க வேண்டும் என்றும் வரையறுத்துள்ளது.இதனைக் கவனத்தில் கொள்ளவில்லை.

ஆதாரங்கள், ஆவணங்கள், சாட்சிகள் புறக்கணிக்கப்பட்ட தீர்ப்பு நீதிபதி

குமாரசாமி தனது தீர்ப்பில், கட்டடங்களின் மதிப்பீடுகள் (பக்கம் 776 முதல் 797), வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணச் செலவுகள் (பக்கம் 797 முதல் 843), கடன் மூலம் வந்த வரவுகள் (பக்கம் 850 முதல் 852), திராட்சைத் தோட்ட வருமானம் (பக்கம் 853), பரிசுப் பொருள்கள் மூலம் வந்த வருமானங்கள் (பக்கம் 853 முதல் 854), சசி என்டர்பிரைஸஸ் (பக்கம் 854 முதல் 860), ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் நமது எம்.ஜி.ஆர் மூலம் வந்த வருமானங்கள் (பக்கம் 860 முதல் 876), சூப்பர் டூப்பர் டி.வி (பக்கம் 876 முதல் 883), வாடகை வருமானம் (பக்கம்-883) ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளார். ஆனால், இதுபற்றிய ஆதாரங்களும் ஆவணங்களும் ஏராளமாக இருக்கும்போது அவற்றை எல்லாம் சரியாகப் பரிசீலிக்காமல் தவறு செய்துள்ளார்.

p02b.jpg

கட்டடங்களின் மதிப்பீடுகள்

ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கட்டடங்களின் மதிப்பு என அரசுத் தரப்பு 28 கோடியே 17 லட்சத்து 40 ஆயிரத்து 430 ரூபாயைக் கணக்கிட்டது. அதனைத் தீர ஆராய்ந்து அந்தத் தொகையில் இருந்து 20 சதவிகிதத்தை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து, 22 கோடியே 53 லட்சத்து 92 ஆயிரத்து 344 ரூபாயைக் கட்டடங்களின் மதிப்பாக எடுத்துக்கொண்டது.

ஆனால், நியாயமான கணக்கீடுகள், மதிப்பீடுகள், கட்டடங்களின் ஆடம்பரத் தன்மை, கட்டடங்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கிரானைட்கள், மார்பிள்கள், அதில் செய்யப்பட்ட வேலைப்பாடுகள், கட்டடங்களில் இருந்த சொகுசு இருக்கைகள், நாற்காலிகள், மேஜைகள், அவற்றின் கலை வேலைப்பாடுகளை எல்லாம் புறக்கணித்துவிட்டு, ஒரு சதுர அடிக்கு 28 ஆயிரம் ரூபாய் என தட்டையாக நீதிபதி குமாரசாமி கணக்கிட்டுள்ளார். பொதுப்பணித் துறை பொறியாளர்கள், போயஸ் கார்டன் இல்லத்தின் மதிப்பு 7 கோடி ரூபாய் என்று கணக்கிட்டனர். இந்த மதிப்பீடு மிகவும் அதிகம் என்று குறிப்பிட்ட நீதிபதி குமாரசாமி, மொத்தமாக 17 கட்டடங்களையும் ஒரே மதிப்பில் கணக்கிட்டுள்ளார். 17 கட்டடங்களின் தன்மைகளும் வேறானவை. அதில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருள்களின் தரம் வேறு வேறானவை. அதில் இடம் பெற்றுள்ள வேலைப்பாடுகளின் கலைநயம் வித்தியாசமானவை. அவற்றைக் கருத்தில் கொள்ளாமல் அனைத்துக்கும் ஒரே தொகையை நிர்ணயித்து கணக்கிட்டது நேர்மையற்ற கணக்கீடு.

இன்னும் சொல்லப்போனால், ஜெயலலிதா தரப்பு சிறப்பு நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த சாட்சியத்தில், தங்களின் கட்டட மதிப்பு  ரூ.8 கோடியே 60 லட்சம் என்று வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆனால், குற்றவாளிகள் சொன்ன மதிப்புக்கும் குறைவாக நீதிபதி குமாரசாமி மதிப்பிட்டது முறையற்றது. 

சுதாகரன் திருமணச் செலவுகள்

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணச் செலவாக அரசுத் தரப்பு கணக்கிட்ட தொகை 6 கோடி ரூபாய். ஆனால், சிறப்பு நீதிமன்றம் மூன்று கோடி ரூபாயை மட்டும் சுதாகரன் திருமணச் செலவாக எடுத்துக்கொண்டது. நீதிபதி குமாரசாமி, வெறும் 28 லட்சம் ரூபாயை மட்டும் திருமணச் செலவாகக் காட்டுகிறார். ஜெயலலிதா வருமானவரித் துறைக்கு அளித்த விவரங்களின் அடிப்படையில் இதை எடுத்துக்கொண்டதாக அவர் குறிப்பிடுகிறார். ஆனால், ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குமூலத்திலேயே, “சுதாகரன் திருமணத்துக்கு தன்னுடைய செலவு 29 லட்சத்து 92 ஆயிரத்து 761 ரூபாய்’’ என்று குறிப்பிட்டு உள்ளார். அவர் சொன்ன வாக்குமூலத்தைக்கூட ஏற்காமல், அதையும்விட குறைவானத் தொகையைக் கணக்கிட்டு குற்றவாளிகளை விடுதலை செய்தது தவறான சட்ட நடைமுறை.

கடன் மூலம் வந்த வருமானங்கள்

மிக மிக முக்கியமான பகுதி இது. தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்களின் மூலம் அவர்களுக்கு 27 கோடியே 17 லட்சத்து 31 ஆயிரத்து 271 ரூபாயை கணக்கில் எடுத்துக்கொண்டு, அதில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறை கணக்கிட்டு வைத்திருந்த தொகை 5 கோடியே 99 லட்சம் ரூபாயை கழித்துவிட்டு, 18 கோடியே 17 லட்சத்து 46 ஆயிரம் ரூபாயை கடன் மூலம் வந்த வருமானமாகக் காட்டி உள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்துப்படி, 10 தேசிய வங்கிகளில் இவர்கள் வாங்கிய கடன் தொகையைக் கணக்கிட்டால், 10 கோடியே 67 லட்சத்து 31 ஆயிரத்து 271 ரூபாய் மட்டுமே வருகிறது. இந்தத் தொகை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சொன்ன தொகையோ அல்லது அரசுத் தரப்பு சொன்ன தொகையோ அல்ல. நீதிபதி குமாரசாமி போட்டுக் காட்டி உள்ள அட்டவணைப்படி கணக்கிட்டாலே 10 கோடிதான் வருகிறது.

p02d.jpg

அப்படி இருக்கும்போது, அவர் 27 கோடி என்று கணக்கிட்டுள்ளார். இந்தப்  பிழையைச் சரி செய்தால், மொத்தக் கணக்கீட்டில் அடியோடு மாற்றம் வருகிறது. அதாவது கடன் மூலம் குற்றவாளிகளுக்கு வந்த வருமானம் வெறும் 4 கோடியே 67 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மட்டுமே என்று தெளிவுபடுகிறது. இதன்படி கணக்கிட்டால், குற்றவாளிகளின் முறையற்ற வருமானம் 76.7 சதவிகிதம் என்றாகிறது. அப்படி ஆகும்போது, ஜெயலலிதாவிடம் இருந்த வருமானத்துக்கு அதிகமான சொத்து மதிப்பு வெறும் 8.12 சதவிகிதம் என்பது தவறாகி, அவரை நீதிபதி குமாரசாமி விடுதலை செய்ததும் தவறாகிவிடுகிறது.

குற்றவாளிகள் தேசிய வங்கியில் வாங்கிய கடன்களை ஏற்கெனவே சேர்த்துக் கணக்கிட்டுத்தான் அரசுத் தரப்பு அவர்களுக்கு கடன் மூலம் வந்த வருமானம் என்று 5 கோடியே 99 லட்சம் என்று காட்டி உள்ளனர். ஆனால், நீதிபதி குமாரசாமி அதைப் புரிந்துகொள்ளாமல் இரண்டு முறை இந்தத் தொகையை கணக்கில் சேர்த்துள்ளார். இந்தத் தவறைச் சரி செய்தால், குற்றவாளிகள் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 126.19 சதவிகிதமாக வரும். இப்படி எந்தக் கணக்கின்படி பார்த்தாலும் குற்றவாளிகளை அக்னிஹோத்ரி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியாது. கடன் மூலம் பெற்ற வருமானங்களைக் கணக்கிட்டதில் ஒட்டுமொத்தமாக நீதிபதி குமாரசாமி தவறிழைத்து, அந்தத் தவறையே சரியெனக் காட்டி குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளார். இந்த ஒரு காரணத்தை வைத்தே, குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுதலையை ரத்து செய்யலாம். அதற்கு இதுவே போதுமானது. அப்போதுதான் நீதி கேலிக்குரியதாக மாற்றப்பட்டுள்ள நிலையில் இருந்து மீண்டு வரும்.

திராட்சைத் தோட்ட வருமானம்

ஜெயலலிதாவுக்கு திராட்சைத் தோட்டத்தில் இருந்து வந்த வருமானமாக அரசுத் தரப்பு 5 லட்சத்து 78 ஆயிரத்து 340 ரூபாய் என்று கணக்கிட்டது. ஆனால், ஜெயலலிதா தரப்பு தங்களுக்கு திராட்சைத் தோட்டத்தில் இருந்து 52 லட்சத்து 50 ஆயிரம் வருமானம் வந்ததாக சொன்னார்கள். இரு தரப்பின் வாதங்கள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மற்றும் விவசாய அதிகாரிகள் கணக்கிட்ட மதிப்பீடுகளை தீர ஆராய்ந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, திராட்சைத் தோட்டத்தில் இருந்து ஜெயலலிதாவுக்குக் கிடைத்த வருமானம்  10 லட்ச ரூபாய் எனக் கணக்கில் எடுத்துக்கொண்டார். ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி இவற்றில் எதையும் கருத்தில்கொள்ளாமல், காலம் கடந்து தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் வருமானவரிக் கணக்கை மட்டும் கருத்தில் கொண்டு 46 லட்சத்து 70 ஆயிரத்து 600 ரூபாய், ஜெயலலிதாவுக்கு திராட்சைத் தோட்டத்தில் இருந்து வருமானம் வந்ததாகக் கணக்கிட்டுள்ளார்.

கிரிமினல் வழக்குகளைப் பொறுத்தவரை, நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள், சாட்சிகளின் உண்மைத் தன்மையைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் சட்ட விதிமுறை. ஆனால், இந்த வழக்கில் அதை மீறி, வருமானவரி அதிகாரிகள் அளித்த சான்றுகளின் அடிப்படையில் நீதிபதி குமாரசாமி கணக்குப் போட்டுள்ளார்.

பரிசுப்பொருள் மூலம் வந்த வருமானங்கள்

p02c.jpgஜெயலலிதாவுக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் வருமானம் அவருடைய 44-வது பிறந்த நாளுக்குப் பரிசுப்பொருளாகக் கிடைத்துள்ளது. அதில் தவறில்லை என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில், சி.பி.ஐ லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன்படி ஒரு பொது ஊழியர் பரிசுப் பொருள் பெறுவது குற்றம் என்று வழக்குத் தொடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனால், அந்த வழக்கை காலம் கடந்து தொடுக்கப்பட்ட வழக்கு என்று சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. சி.பி.ஐ சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, இந்த நீதிமன்றத்தில் (உச்ச நீதிமன்றத்தில்) வழக்குத் தொடுத்துள்ளது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த விவரங்கள் எதையும் எதிர் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்காமல் மறைத்துவிட்டனர்.

ஊழல் தடுப்புச் சட்டம் 13 (1) (e), ஒரு பொது ஊழியர் பெறும் பரிசுப் பொருள்கள் பற்றிய விவரங்களை உரிய முறையில் தகவலாக சம்பந்தப்பட்ட துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்கிறது. ஆனால், இந்த வழக்குத் தொடுக்கப்படும் வரை, ஜெயலலிதா, தான் பரிசுப் பொருள் பெற்ற விவரத்தை அரசாங்கத்துக்குத் தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக சி.பி.ஐ வழக்கு நிலுவையில் இருக்கும் விவரத்தையும் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கவில்லை.

சசி என்டர்பிரைஸஸ்

சசி என்டர்பிரைஸஸ் நிறுவனத்தில் இருந்து தங்களுக்கு 95 லட்சம் வருமானம் வந்தது என்று எதிர்தரப்பு தெரிவித்தது. அதில் வாடகை வருமானம் தனியாக 12 லட்சம் ரூபாய் கிடைத்தது என்றும் தெரிவித்தது. ஆனால், அரசுத் தரப்பு 6 லட்சம் ரூபாயைக் கணக்கில் எடுத்துக் கொண்டது. ஆனால், இரண்டு தரப்பு சொன்னதற்கும் ஆதாரமாக எந்த ஆவணங்களையும் சிறப்பு நீதிமன்றத்தில் இருவராலும் சமர்ப்பிக்க முடியவில்லை. அதனால், சிறப்பு நீதிமன்றம் அந்தத் தொகையை தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி, அதைக் கணக்கில் கொள்ளாமல் வெறும் யூகத்தின் அடிப்படையில் சசி என்டர்பிரைஸஸ் நிறுவனத்தில் இருந்து குற்றவாளிகளுக்குக் கிடைத்த வருமானம் என்ற வகையில் 25 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டுள்ளார்.

ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் நமது எம்.ஜி.ஆர் வருமானம்

நமது எம்.ஜி.ஆரில் இருந்து தங்களுக்குக் கிடைத்த வருமானம் ஒரு கோடியே 15 லட்சம் என்று ஜெயலலிதா சசிகலா இருவரும் எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்ட நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி நமது எம்.ஜி.ஆரில் இருந்து அவர்களுக்குக் கிடைத்த வருமானம் என்று 4 கோடி என்று கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளார். தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அவர்களே சொன்ன வருமானத்தைக் காட்டிலும், நீதிபதி அவர்களுக்குச் சாதகமான வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார். அதுவும் காலம் கடந்து பல ஆண்டுகள் கழித்து தாக்கல் செய்யப்பட்ட வருமானவரி ஆவணங்களின் அடிப்படையில் இதை நீதிபதி எடுத்துக்கொண்டுள்ளார். ஆனால், நமது எம்.ஜி.ஆர் திட்டம் மற்றும் அதன் சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தில் இருந்த நம்பகமற்ற தன்மை மற்றும் அந்தத் திட்டத்தில் இருந்த போலித்தன்மை ஆகியவற்றை கருத்தில்கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ‘இந்தத் திட்டம் போலியானது. இதில் சொன்ன சாட்சிகள் பிறழ்சாட்சிகள்’ என்றும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் டூப்பர் டி.வி

சூப்பர் டூப்பர் டி.வி மூலம் தனக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக சுதாகரன் தெரிவித்தார். ஆனால், சூப்பர் டூப்பர் டி.வி மூலம் சுதாகரனுக்கு கிடைத்த வருமானம் என்று அரசுத் தரப்பு 9 லட்சம் ரூபாய் என்று குறிப்பிட்டது. ஆனால், எந்த ஆவணங்களையும் பரிசீலிக்காமல்,  சுதாகரன் சொன்னதையே நீதிபதி கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார்.

சொத்துகள்...

அசையா சொத்துகள் மொத்தம் 146 என்று சிறப்பு நீதிமன்றம் கணக்கிட்டுள்ளது. ஆனால், அதில் எந்தவிதமான குறையும் இல்லாத நிலையில் 49 சொத்துகளை எந்தக் காரணமும் இன்றி நீதிபதி குமாரசாமி நீக்கிவிட்டார். எதற்காக அவற்றை நீக்கினார் என்று அவர், அவருடைய தீர்ப்பில் எந்த இடத்திலும் விளக்கவில்லை. வெறும் 97 சொத்துகளை மட்டும் கணக்கில் கொண்டுள்ளார். மேலும், அந்தச் சொத்துகளின் மதிப்பாக எதிர்தரப்பு நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்ட தொகையே 16 கோடி. ஆனால், உயர் நீதிமன்றம் வெறும் 6 கோடி ரூபாயை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது.

இதுபோன்ற குளறுபடிகளால், எதிர்தரப்பு முறைகேடான வழிகளில் சம்பாதித்த சொத்துகளாக ஆதாரப்பூர்வமாக அரசுத் தரப்பு நிரூபித்த 60 கோடி ரூபாயை, நீதிபதி குமாரசாமி வெறும் 37 கோடி ரூபாய் என்று குறைத்துக் காட்டி உள்ளார்.

- இவ்வாறு பட்டியல் போட்டுள்ளது அப்பீல் மனு. நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை வரிக்கு வரி விமர்சித்து இந்த மனுவைத் தயாரித்துள்ளார் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா.

தமிழக அமைச்சர்களுக்கு மீண்டும் கோயில் வேலைகள் காத்திருக்கின்றன என்று கிண்டல் அடிக்கிறார்கள் கர்நாடக வழக்கறிஞர்கள்.

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=107661

  • தொடங்கியவர்
ஜெ. விடுதலைக்கு எதிராக கர்நாடகா அப்பீல்- அடுத்த வாரம் விசாரணை.. என்ன முடிவெடுக்கும் சுப்ரீம் கோர்ட்?
 
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஓரிருநாட்களில் உச்சநீதிமன்றத்தில் தொடங்க உள்ளது. இந்த மனு மீதான விசாரணையின் தங்களுக்கு பாதகமான அம்சங்களாக இருப்பதாக கருதுவதால் போயஸ் தோட்டம் கதிகலங்கித்தான் இருப்பதாக கூறப்படுகிறது.
 
ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடகா உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தற்போது உச்சநீதிமன்றத்துக்கு கோடை விடுமுறைகாலமாகும்.
 
 வரும் ஜூலை 1-ந் தேதி முதல் உச்சநீதிமன்றம் வழக்கமாக இயங்கத் தொடங்கும். அனேகமாக ஜூலை முதல் வாரத்திலேயே கர்நாடகாவின் அப்பீல் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது. அப்படி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நிலையில் 3 வாய்ப்புகளைத்தான் உச்சநீதிமன்றம் பரிசீலிக்குமாம்.
 
அதாவது உச்ச நீதிமன்றம் இப்போது கோடைகால விடுமுறையில் இருக்கிறது. ஜூலை 1-ந் தேதியில் இருந்துதான் செயல்படும். - கர்நாடகாவின் அப்பீல் மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு நீதிபதி குமாரசாமியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படலாம்
 
- அல்லது கர்நாடகாவின் அப்பீல் மனுவை ஏற்றுக்கொண்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்காமல் மேல்முறையீட்டு விசாரணையை மட்டும் தொடங்கலாம்
 
- அல்லது - தொடக்கத்திலேயே அப்பீல் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யலாம் இந்த மூன்றில்தான் நிச்சயம் நடக்கும் என்கிறது உச்சநீதிமன்ற வட்டாரங்கள்..இருப்பினும் மூன்றில் 2 வாய்ப்புகள் ஜெயலலிதாவுக்கு பாதகம் என்பதால் போயஸ் தோட்டம் கையை பிசைந்து கொண்டுதான் இருக்கிறது என்கிறது அதிமுக வட்டாரங்கள்..

Read more at: http://tamil.oneindia.com/news/india/sc-hear-karnataka-s-appeal-against-jaya-on-july-1st-week-229897.html
  • தொடங்கியவர்

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து தி.மு.க. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

jaya.jpgபுதுடெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, தி.மு.க. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுதலை செய்து உத்தரவிட்டார்.

ஜெயலலிதாவின் விடுதலையை தொடர்ந்து சர்ச்சை எழுந்தது. இதையடுத்து ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே மேல்முறையீடு செய்திருந்தது.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து தி.மு.க. சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஜெயலலிதா விடுதலை மற்றும் லெக்ஸ் பிராபர்ட்டி தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் க. அன்பழகன் சார்பில் வழக்கறிஞர் வி.ஜி.பிரகாசம்,  உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் 2 மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுக்களில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை கர்நாடக உயர் நீதிமன்றம்  பின்பற்ற தவறிட்டன் போன்ற அம்சங்களை சுட்டிக்காட்டி  மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

http://www.vikatan.com/news/article.php?aid=49052

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.