Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் தொடர்பான செய்திகள் :- தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்! அன்னப் பறவைக்கு வாக்களித்தார் சுமந்திரன்! Photo in

Featured Replies

நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்றுக்காலை 7 மணியளவில் அனைத்து  வாக்களிப்பு நிலையங்களில் ஆரம்பமானது .

sumathiran-1.JPG

யாழ்ப்பணத்தில் கற்கோவளம் பாடசாலையில் திரு மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரன் அவர்கள் வாக்களித்தார்.

sumathiran-2.JPG

வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் பூபாலசிங்கம் சஞ்சீவன் ஆகியோரும் இன்று குடத்தனை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் வாக்களித்தார்.

sumathiran-3.JPG
sumathiran-4.jpg
sumathiran-5.JPG
sumathiran-6.jpg

Edited by sudaravan

  • Replies 189
  • Views 8.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

எமக்கே வெற்றி நிச்சயம் வாக்களித்த பின் மாவை சேனாதிராஜா தெரிவிப்பு!

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல் பரபரப்பான சூழலில் இன்று நடைபெறுகிறது.

mavaiyar%20vote-1.JPG

இன்றுகாலை 7 மணிக்கு ஆரம்பமானது.

யாழில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தர்  மாவை சேனாதிராஜா.எமது கோரிக்கையை ஏற்று மக்கள் பொது எதிரணிக்கு வாக்களித்து வருகின்றனர். எமக்கே வெற்றி நிச்சயம் என்று தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/news/36727/57//d,article_full.aspx

  • தொடங்கியவர்

எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தற்போது தனது வாக்கை அளித்தார்!

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல் பரபரப்பான சூழலில் இன்று நடைபெறுகிறது.

இன்றுகாலை 7 மணிக்கு ஆரம்பமான  வாக்களிப்பு, மாலை 4 மணி வரை இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இன்றைய தேர்தலில் வாக்களிக்க 15,044,490 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 22 தேர்தல் மாவட்டங்களிலும், 12,314 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொலநறுவை மாவட்டத்தில்  எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தற்போது  வாக்களிப்பு  நிலையத்தில் தனது வாக்கை அளித்தார்.

maithiri%20srisena-1.JPG

http://www.pathivu.com/news/36728/57//d,article_full.aspx

  • தொடங்கியவர்

புத்தளத்தில் வாக்காளர்களை தடுக்கும் நோக்கில் வீதிக்கு குறுக்காக பாரிய மரத்தை வெட்டி வீழ்த்தி இடைஞ்சல்!

maram.JPGபுத்தளம்-அநுராதபுரம் வீதியில் பாரிய மரமொன்றை வெட்டி வீதிக்கு குறுக்காக வீழ்த்தியமையால் அவ்வீதியால் பயணிக்கவேண்டியவர்கள் சுமார் ஒன்றரை மணிநேரமாக காத்திருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டதாக தேர்தல்கள் கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், விரைந்து செயற்பாட்ட பொலிஸார் அந்த மரத்தை அங்கிருந்து அகற்றி, அவ்வீதியினுடனான போக்குவரத்தை சீர்செய்துள்ளனர்.

புத்தளத்திலிருந்து மன்னாருக்கு வாக்களிப்பதற்கு செல்லும் வாக்காளர்களை தடுக்கும் நோக்கிலேயே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்துடன் தொடர்புடைய குழுவினரே இந்த மரத்தை வெட்டி வீழ்த்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

http://www.pathivu.com/news/36729/57//d,article_full.aspx

  • தொடங்கியவர்

யாழ் தென்மராட்சியில் மக்கள் வாக்களிப்பில் ஆர்வமற்றநிலையில்!

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல் பரபரப்பான சூழலில் இன்று நடைபெறுகிறது.

 

இன்றுகாலை 7 மணிக்கு ஆரம்பமான  வாக்களிப்பு, மாலை 4 மணி வரை படை பெறுகின்றது.

யாழ்ப்பாணம் தென்மராட்சியில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடைபெறுகின்றது மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில்  மக்கள் வாக்களிப்பில் ஆர்வமற்றநிலையில் காணப்படுகின்றது . meesalai-1.JPGmeesalai-2.jpg

http://www.pathivu.com/news/36729/57//d,article_full.aspx

  • தொடங்கியவர்

வடமராட்சி அல்வாய்ப் பகுதியில் வாக்காளர்களை மிரட்டும் பாணியில் கிரனைட் தாக்குதல். http://pathivu.com/


மகிந்த ராஜபக்ச மெதமுலானவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார்!
voting.jpgசிறிலங்காவில் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 7 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

வாக்களிப்பு ஆரம்பமாகி இரண்டரை மணிநேரம் கடந்துள்ள நிலையில், இதுவரை சுமுகமாக வாக்குப்பதிவு இடம்பெறுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் சுறுசுறுப்புடன் வாக்களிக்கச் செல்கின்றனர்.

பல வாக்களிப்பு நிலையங்களில் காலையில் இருந்தே வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்த வாக்களித்து வருகின்றனர்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மெதமுலானவில் உள்ள ராஜபக்ச வித்தியாலயத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார்.
mahinda-medamulana.jpg

இதற்கிடையே, வாக்காளர்களைக் குழப்பும் விசமத்தனமான பேரப்புரைகளில் அரசதரப்பு ஈடுபட்டுள்ளது.

வடக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில், வெளியிடப்பட்டுள்ள போலி பிரசுரங்களில், வாக்களிக்க வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது.

அதேவேளை. அம்பாந்தோட்டையில், மகிந்த ராஜபக்சவுக்கு ஐதேக பிரதி தலைவர் சஜித் பிரேமதாச ஆதரவளித்துள்ளதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் சிறிலங்கா அரசாங்கம் அரச ஊடகங்கள் மூலமும் மகிந்தவுக்கு ஆதரவான பரப்புரைகளை முன்னெடுத்து வருகிறது.

எனினும், எந்தக் குழப்பமும் இன்றி வாக்களிக்குமாறு கண்காணிப்புக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

 

http://www.pathivu.com/news/36731/57//d,article_full.aspx

 

  • தொடங்கியவர்

வடமராட்சி அல்வாய்ப் பகுதியில் வாக்காளர்களை மிரட்டும் பாணியில் கிரனைட் தாக்குதல்.

http://www.pathivu.com/news/36732/57//d,article_full.aspx

சிறிலங்காவில் தேர்தல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும் - மீண்டும் பான் கீ மூன்

BanKiMoon_pathivu.jpgசிறிலங்காவில் தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் தொடர்ந்தும் வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அதன் பேச்சாளர் ஸ்ரீபன் டுஜாரிக் இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்னர்சிட்டி பிரஸ் இணையத்தளம் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த வாரம் சிறிலங்காவில் தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டும் என்று, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ{டன் தொடர்பு கொண்டு பான் கீ மூன் வலியுறுத்தி இருந்தார்.

இந்த விடயத்தில் பான் கீ மூன் திருப்தி கொண்டுள்ளாரா? என்று இன்னர் சிட்டி பிரஸ் கேள்வி எழுப்பி இருந்தது.

எனினும் இதில் பான் கீ மூன் திருப்தி அடைந்தாரா என்பது கேள்வி அல்ல என்றும், எனினும் இது குறித்து தொடர்ந்து பான் கீ மூன் சிறிலங்காவை வலியுறுத்தி வருவதாகவும் பேச்சாளர் கூறினார்.

 

எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் தமது வாக்கினை பதிவு செய்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாடா.. ஜனநாயக கடமையை முடித்துவிட்டு வந்துவிட்டேன். மானிப்பாய் இந்துக் கல்லூரியில் வாக்களித்தேன். சுமாரான கூட்டம். வெளியே ஒரு செக்யூரிட்டி கார்ட் (பள்ளிக்கூட ஊழியர்) ஒரேயொரு போலீஸ்காரர் கதிரையில் ஒய்யாரமாக இருக்கிறார். உள்ளே 2 போலீஸ். அவ்வளவுதான். செல்போனை ஆஃப் செய்துவிட்டு உள்ளே போக சொல்கிறார்கள்.  வேறு எந்த கெடுபிடியும் இல்லை.

 

இன்று காலை ஒரு இணையத்தளத்தில் யாழ்ப்பாணத்தில் பலத்த ராணுவக் கட்டுப்பாட்டுடன் வாக்களிப்பு என்று போட்டிருக்கு. மானிப்பாய் வீதி, சுதுமலை - தாவடி வீதியில் மருந்துக்குகூட  ராணுவம் இல்லை. கடையெல்லாம் திறந்திருக்கு. பள்ளிக்கூடங்கள் லீவு என்பதால் போக்குவரத்து குறைவு. மற்றும்படி இதுவரை சகஜநிலை.

 

நல்லவேளை, தேர்தலை பகிஷ்கரிக்க சொன்ன ஆட்களிடம் துப்பாக்கி இல்லாததால், தைரியமாக வாக்களிக்க செல்ல முடிந்தது. 

வடமராட்சியில் வாக்களிப்பு நிலையம் அருகே கைக்குண்டு வீச்சு – மக்களை அச்சுறுத்த முயற்சி JAN 08, 2015 | 5:27by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள்

grenade-300x199.jpgவடமராட்சியில் வாக்காளர்கள் வாக்களிப்பதை தடுக்கும் நோக்கில், சிறிலங்காப் படையினர் எனக் கருதப்படுவோரால் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அல்வாய் சிறிலங்கா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள காணிக்குள், இன்று காலையில் கைக்குண்டு ஒன்று வீசப்பட்டுள்ளது.

உந்துருளியில் வந்த இருவரே இவ்வாறு கைக்குண்டை வீசி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, வாக்களிப்பு நிலையத்துக்குப் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை தேர்தல் கண்காணிப்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

ஏற்கனவே, தமிழ்மக்கள் வாக்களிப்பதை தடுக்கும் நோக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் போலியான பிரசுரங்களை அரசதரப்பு வீசியிருந்தது.

அதனை வாக்காளர்கள் புறக்கணித்த நிலையிலேயே, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2015/01/08/news/2496

விறுவிறுப்பாக நடக்கிறது வாக்களிப்பு – மகிந்தவும் வாக்களித்தார் JAN 08, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

voting-300x200.jpgசிறிலங்காவில் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 7 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

வாக்களிப்பு ஆரம்பமாகி இரண்டரை மணிநேரம் கடந்துள்ள நிலையில், இதுவரை சுமுகமாக வாக்குப்பதிவு இடம்பெறுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் சுறுசுறுப்புடன் வாக்களிக்கச் செல்கின்றனர்.

பல வாக்களிப்பு நிலையங்களில் காலையில் இருந்தே வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்த வாக்களித்து வருகின்றனர்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மெதமுலானவில் உள்ள ராஜபக்ச வித்தியாலயத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார்.

voting.jpg

mahinda-vote.jpg

 

 

mahinda-medamulana.jpg

 

இதற்கிடையே, வாக்காளர்களைக் குழப்பும் விசமத்தனமான பேரப்புரைகளில் அரசதரப்பு ஈடுபட்டுள்ளது.

வடக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில், வெளியிடப்பட்டுள்ள போலி பிரசுரங்களில், வாக்களிக்க வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது.

அதேவேளை. அம்பாந்தோட்டையில், மகிந்த ராஜபக்சவுக்கு ஐதேக பிரதி தலைவர் சஜித் பிரேமதாச ஆதரவளித்துள்ளதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் சிறிலங்கா அரசாங்கம் அரச ஊடகங்கள் மூலமும் மகிந்தவுக்கு ஆதரவான பரப்புரைகளை முன்னெடுத்து வருகிறது.

எனினும், எந்தக் குழப்பமும் இன்றி வாக்களிக்குமாறு கண்காணிப்புக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

http://www.puthinappalakai.net/2015/01/08/news/2492

 

கள்ளவாக்கு போட முயற்சித்தால் தலையில் சுடவும்: மஹிந்த தேசப்பிரிய
 
08-01-2015 07:10 AM
 
a(252).jpg
வாக்களிப்பு ஒருவருடைய விருப்பமாகும் அந்த விருப்பத்தை பலவந்தமாகவோ அல்லது களவாகவோ அபகரிக்க முடியாது என்று தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, கள்ளவாக்கு போடுவதற்கு யாராவது வந்தால் அவருடைய தலையில் சுடுமாறு பொலிஸாருக்கு தான் பணித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேர்தல்கள் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொலிஸாருக்கு ஆகக்குறைந்த பலத்தை பயன்படுத்துவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனினும் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு முயற்சித்தால் முழங்காலுக்கு கீழே சுடுவதற்கு பொலிஸாருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதான என்று ஊடாகவியாளர் வினவினார்.

ஆகக்குறைந்த பலம் என்று ஒன்றுமில்லை. தற்போது தேவையானது அவசியமான அதிகாரமேயாகும். கள்ளவோட்டு போடுவதற்கு வருகின்றவர்களின் முழங்காலுக்கு கீழ் சுடவதனால் எந்த பிரயோசனமும் இல்லை. 

முழங்காலுக்கு கீழ் சுட வேண்டிய அவசியமில்லை. கள்ளவாக்கு போட்டுவதற்கு வந்தால் அல்லது குழப்பங்களை விளைவிக்க முயற்சித்தால் அவ்வாறானவர்களின்  தலையில் சுட வேண்டும் என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/137202#sthash.0gdqjpWF.dpuf

  • தொடங்கியவர்

அரியாலையிலும் வெடித்தது அடுத்த குண்டு. மூவருக்குச் சிறு காயங்கள்

http://www.pathivu.com/news/36735/57//d,article_full.aspx

சிரமம் பாராது உங்கள் சனனாயக கடமையை செய்ததுக்கு பாராட்டுக்கள்.

இருந்தாலும் நீங்கள் பொடிவைத்து பேசுவதை சுட்டி காட்டாமல் இருக்கமுடியாது.

  • தொடங்கியவர்

மரத்தில் ஏறி போராட்டம்! மஹிந்த ராஜபக்க்ஷ வெற்றியீட்டாவிட்டால் தான் மரத்திலிருந்து இறங்க போவதில்லை!

maram.jpgவாக்களித்துவிட்டு, வாக்களிப்பு நிலையத்திலிருந்து வெளியேறிய வாக்காளர் ஒருவர் வாக்குச்சாவடிக்கு அண்மையில் உள்ள மரமொன்றில் ஏறியமர்ந்து கொண்டுள்ளார்.

தான் வாக்களித்து விட்டதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த தேர்தலில் வெற்றியீட்டாவிட்டால் தான் மரத்திலிருந்து இறங்க போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் காலி, வந்துரம்ப எனுமிடத்திலேயே இடம்பெற்றுள்ளது.

அதே போல் மேலும் ஒரு தேர்தல் சம்பவம்;-

 உடுகமவில் முச்சக்கரவண்டியொன்றை சோதனைக்கு உட்படுத்திய போது அதில் வாக்குச்சீட்டுகள் போன்ற ஆவணங்கள் சிலவற்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவை எவ்வாறான ஆவணங்கள் என்பது தொடர்பில் கண்டறிவதற்கு தேர்தல்கள் ஆணையாளரின் உதவியை நாடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

1476882053Untitled-2.jpg

தேர்தல் முடிவுகளை மாற்றலாம் என்ற குற்றச்சாட்டை டெலிகொம் மறுப்பு

January 8, 2015  11:42 am

lg-share-en.gif
 

 

ஶ்ரீ லங்கா டெலிகொம் டேமினல் லைன் பாஸ்வேட் (passwords of the Sri Lanka Telecom terminal line) தெரிந்திருப்பின் தேர்தல் பெறுபேறுகளை மாற்றலாம் என ஊடகம் ஒன்றில் வௌியான செய்தியை அந்த நிறுவனம் (டெலிகொம்) மறுத்துள்ளது. 

இது குறித்து தேர்தல்கள் ஆணையாளருக்கு நேற்றையதினம் ஶ்ரீ லங்கா டெலிகொம்மின் குழு தலைமை நிறைவேற்று அதிகாரி தெரியப்படுத்தியுள்ளார். 

இதற்கு பதிலளித்த தேர்தல்கள் ஆணையாளர், இது போலியான குற்றச்சாட்டு என ஏற்கனவே தௌிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

மேலும் இவ்வாறான போலி குற்றச்சாட்டுக்கள் குறித்து அவர் கண்டனமும் வௌியிட்டுள்ளார். 

(அத தெரண தமிழ்)

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்.பருத்தித்துறை அல்வாய் வாக்களிப்பு நிலைய பற்றைக்குள் கைக்குண்டு வீச்சு -
08 ஜனவரி 2015
 
HRI%202_CI.jpg

யாழ்.பருத்தித்துறை அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள காணிக்குள் இன்று வியாழக்கிழமை (08.01.15) காலையில் கைக்குண்டு வீசப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிரிவு - 2 இன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.யவ்பர் தெரிவித்தார்.

 

மோட்டார் சைக்கிளில் சென்றிருந்த இருவரே இவ்வாறு கைக்குண்டை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, வாக்களிப்பு நிலையத்துக்கான பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அத்தியட்சகர் தெரிவித்தார்.

இது தொடர்பில் தங்களுக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து, கைக்குண்டு எறியப்பட்ட இடத்துக்கு கபே (CAFFE) உறுப்பினர்களை அங்கு அனுப்பி விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக CAFFE அமைப்பின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் தெரிவித்தார். -http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115291/language/ta-IN/article.aspx

 

  • தொடங்கியவர்

யாழ். மாவட்டத்தில் இதுவரை 20 வீதமான வாக்குப்பதிவு! ஒலிபெருக்கி மூலம் வாக்களிக்க செல்லுமாறு அறிவித்தல்!

oliperuki.JPGயாழ். மாவட்டத்தில் இதுவரை 20 வீதமான வாக்குப்பதிவுகளே  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

 

யாழ். மாவட்டத்தில் 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 வாக்காளர்கள் 526 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்து வருகின்றனர்.

 

இந்தநிலையில், இன்று காலை 7மணியில் இருந்து இதுவரை 20வீதமான வாக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதழ்  வாக்களிப்பில் மக்கள் ஆர்வமற்று இருப்பதால் உந்துமூவுருளிகளில் ஒலிபெருக்கியை கட்டி மக்கள் வாக்களிக்க செல்லுமாறு தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிக்கபாளர்கள்  அறிவித்தல் விடுக்கப்பட்டு வருகின்றனர்.

 

http://www.pathivu.com/news/36737/57/20/d,article_full.aspx

கள்ளவாக்குச் சீட்டுக்கள் பறிமுதல்

மத்துகம, நாராவல கனிஷ்ட வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் 155ஐ, கெப் ரக வாகனமொன்றுடன் மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கெப் ரக வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த மூவரையும் கைது செய்ததாகவும் பொலிஸார் கூறினர். - See more at: http://www.tamilmirror.lk/137215#sthash.UVMK0Jth.dpuf

  • தொடங்கியவர்

யாழ். மாவட்டத்தில் இதுவரை 20 வீதமான வாக்குப்பதிவு! ஒலிபெருக்கி மூலம் வாக்களிக்க செல்லுமாறு அறிவித்தல்!

oliperuki.JPGவடக்கினில் வாக்களிப்பு வீதம் திருப்தி! எனினும் மதியம் வரை 20 வீதம் தாண்டவில்லை!!

வடக்கு மக்கள் ஆட்சி மாற்றக்கோசத்துடன் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பினில் களமிறங்கியுள்ளனர். எனினும் காலை 11 மணிவரையினில் யாழ். மாவட்டத்தில் இதுவரை 20 வீதமான வாக்குப்பதிவுகளே  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 7 மணிக்கு நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையினில் வடக்கிலும் மக்கள் வரிசைகளில் காத்திருந்து வாக்களிப்பினில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாக இருக்கின்றது.  

pa-1.JPG

காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள வாக்களிப்பு மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.எனவே வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையினை பயன்படுத்துமாறு பல்வேறு தரப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

pa-2.JPG

அந்த வகையில் யாழில் இன்று காலை முதலே மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று மிகவும் சுறுசுறுப்பாக வாக்களித்து வருகின்றனர். எந்தவொரு அரசியல் அழுத்தமின்றி மக்கள் தாமாக திரண்டு வந்து வாக்களிப்பதனை காணக்கூடியதாக உள்ளது.மாகாணசபை தேர்தலுடன் ஒப்பிடுகையினில் வாக்களிப்பு வீதம் குறைவாக உள்ளபோதும் காலை முதல் வாக்களிப்பினில் ஆர்வத்துடன் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.குறிப்பாக இளம் சமூகத்தினர் வாக்களிப்பினில் ஆர்வம் கொண்டுள்ளனர்.

pa-3.JPG

பிரதான வீதிகள் வெறிச்சோடியுள்ள போதும் மக்கள் வாக்களிப்பு மைய சூழலினில் அதிகம் காணப்படுகின்றார்கள். எனினும் மயான அமைதி காணப்படுகின்றது.இராணுவத்தினரது பகிரங்க நடமாட்டங்களை காணமுடியாதேயுள்ளது.

pa-4.JPG

எனினும் காலை முதல் பரவலாக தேர்தலை புறக்கணிக்க கோரும் அநாமதேய குறுஞ்செய்திகள் தொலைபேசிகளிற்கு அனுப்பப்பட்டிருந்தது.இராணுவ புலனாய்வு கட்டமைப்பினால் அச்செய்திகள் அனுப்பப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

அதே போன்று வடமாகாணசபை ஒதுக்கப்பட்ட நிதியினை திருப்பிவிட்டதாக கூறும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தது.எனினும் பரவலாக நேற்றிரவு மஹிந்தவின் எஞ்சிய பேனர்களும் கிழிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டிருந்தது.

pa-5.JPG

இதனிடையே பருத்தித்துறை அல்வாய் பகுதியில் வாக்களிப்பு நிலையத்திற்கு அருகாமையில் கைக்குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அல்வாய் சிறிலங்கா பாடசாலையில் அமைந்துள்ள வாக்குசாவடிக்கு அருகாமையில் உள்ள பாழடைந்த வீட்டின் மீதே இனந்தெரியாத நபர்களால் இந்த கைக்குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதியில் அச்சம் நிலவுவதால் அப்பகுதியில் தற்போது பெருமளவில் பொலிசாரும் இராணுவத்தினரும்  குவிக்கப்பட்டுள்ளனர்.

pa-6.jpg

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தேர்தல் திணைக்கள அதிகாரிகள், பொலிசார்  மற்றும் இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.ஆயினும் அப்பகுதியினில் படைமுகாம் ஒன்றுமுள்ளது.

இதனிடையே யாழ். மாவட்டத்தில் வாக்குப்பதிவு திருப்தியாக உள்ளதாக  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்

வாக்களிப்பில் மக்கள் ஆர்வமற்று இருப்பதால் உந்துமூவுருளிகளில் ஒலிபெருக்கியை கட்டி மக்கள் வாக்களிக்க செல்லுமாறு தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிக்கபாளர்கள்  அறிவித்தல் விடுக்கப்பட்டு வருகின்றனர்.

 

http://www.pathivu.com/news/36737/57/20/d,article_full.aspx

  • தொடங்கியவர்

வடமாகாணத்திற்குட்பட்ட மாவட்டங்களிற்கான வாக்களிப்பு வீத விவரம்!

pa-3.JPGவடமாகாணத்திற்குட்பட்ட  மாவட்டங்களிற்கான வாக்களிப்பு வீதம் மதியம் 12 மணிவரை மந்தமாகாவே உள்ளது.குறிப்பாக யாழினில் வாக்களிப்பு வீதம் இந்நிலையினில் இருக்குமானால் 40 சதவீதத்தை தாண்டமாட்டதென எதிர்பார்க்கப்படுகின்றது.

பிந்திய விவரம்

யாழ்ப்பாணம் -25%

மன்னார்  -30%

கிளிநொச்சி -26%

முல்லைதீவு -19%

வவுனியா -30%

 

http://www.pathivu.com/news/36738/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் வெல்லுவாரா ??

போற போக்கை பார்த்தால் எல்லா மாவட்டத்தையும் கூட்டிப்பார்த்தாலும் 100% தேறாது போல கிடக்கு.

Edited by Sooravali

  • தொடங்கியவர்

இதுவரை கொழும்பில் 50% வாக்குப் பதிவு!

add%20size.JPGஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 07.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இன்று மாலை 04.00 மணிவரை மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்யமுடியும்.

இதன்படி இன்று முற்பகல் 11.30 வரையான காலப்பகுதியில் நுவரெலியாவில் 45 சதவீத வாக்குகளும், திருகோணமலையில் 25 சதவீத வாக்குகளும், புத்தளத்தில் 30 சதவீத வாக்குகளும், கேகாலையில் 45 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.கம்பஹாவில் 35 சதவீத வாக்குகளும், ஹம்பாந்தோட்டையில் 35 சதவீத வாக்குகளும், வவுனியாவில் 30 சதவீத வாக்குகளும், குருநாகலில் 32 சதவீத வாக்குகளும், பதுளையில் 40 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இதேவேளை இன்று நண்பகல் 12.00 மணி வரையான காலப்பகுதியில் கொழும்பில் 50 சதவீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 10.00 மணிவரை களுத்துறையில் 20 சதவீத வாக்குப் பதிவுகளும், காலியில் 20 சதவீத வாக்குப் பதிவுகளும், மட்டக்களப்பில் 11.7 சதவீத வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை 10.30 வரையான காலப்பகுதியில் கண்டியில் 40 சதவீதமும், மாத்தளையில் 40 சதவீதமும், மாத்தறையில் 27 சதவீதமும்,   வாக்குகள் பதிவாகியுள்ளன.

துவரையில் 35 வீதமானவர்கள், தமது வாக்குகளை பதிவுசெய்துள்ளதாக வன்னி தெரிவத்தாட்சி அதிகாரி பந்துல ஹரிஸ்சந்திர சுட்டிக்காட்டினார். பொலன்னறுவை மாவட்டத்தில் இதுவரையில் 41 வீதமான வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 35 வீதமான வாக்குகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தெரிவத்தாட்சி அதிகாரி ஆர்.சி.டி சொய்சா குறிப்பிட்டார். பதுளையில் 40 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவத்தாட்சி அதிகாரி ரோஹன கீர்த்தி திஸாநாயக்க கூறினார்.

நுவரெலியா மாவட்டத்தில் 50 வீதமானவர்கள் தமது வாக்குகளை பதிவுசெய்துள்ளதாக தெரிவத்தாட்சி அதிகாரி டி.பி.ஜி குமாரசிறி சுட்டிக்காட்டினார்.

கண்டி மாவட்டத்தில் 40 வீதமான வாக்குகளும், மாத்தறையில் 34 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

 

http://www.pathivu.com/news/36741/57/50/d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்
கூட்டணி கூத்தாடா தொடங்கிட்டுது .....
மக்களுக்கு அறிவு சுமந்திரன் அப்லோட் பண்ணிட்டார்....
புழுதி பறக்கிறது ...
பூமி வெடிக்குது ...
 
என்று இஞ்ச கொஞ்சபேர் திரிஞ்சிசினம் .... எல்லோருக்கும் அல்வாவா???
 
 
(இனி என்ன ஆமி குண்டடிச்சிடுது எண்டு ஒரு மர நிழலில் இழையார வேண்டியதுதான். வாக்கு போட்டவர்கள் எல்லாம் செத்து போன மாதிரி நாங்களும் நம்பிடுவம்) 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

கூட்டணி கூத்தாடா தொடங்கிட்டுது .....
மக்களுக்கு அறிவு சுமந்திரன் அப்லோட் பண்ணிட்டார்....
புழுதி பறக்கிறது ...
பூமி வெடிக்குது ...
 
என்று இஞ்ச கொஞ்சபேர் திரிஞ்சிசினம் .... எல்லோருக்கும் அல்வாவா???
 
 
(இனி என்ன ஆமி குண்டடிச்சிடுது எண்டு ஒரு மர நிழலில் இழையார வேண்டியதுதான். வாக்கு போட்டவர்கள் எல்லாம் செத்து போன மாதிரி நாங்களும் நம்பிடுவம்) 

 

இப்ப கொஞ்சம் பிக்கப் ஆகியிருக்கு. மானிப்பாய் இந்துக் கல்லூரியில் காலையில் 7, 8 பேர்தான் வரிசையில் நின்றார்கள். 12.30 க்கு சுமார் 30 பேர் நின்றார்கள்.  

ஏனுங்க, இலங்கை முளுக்களுமே 30 திலிருந்து 40 வீதந்தான் இதுவரைக்குமாமே?

தமிழ் பிரமுகர்கள் தேர்தலை பகிஸ்கரிக்க சொன்னதை சிங்களவங்களும் பின்பற்றினமோ?

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்
சன நெரிசலால் மக்கள் பலியாக போகிறார்கள்.......
வாக்கு சாவடி இருக்கும் இடங்களில் சாரணர் இயக்கம் போன்ற ஏதாவது ஒன்றை பணியில் இறக்கி மக்களை ஒழுங்கு படுத்த வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.