Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கில் தனியார் காணிகளை மீள ஒப்படைக்குமாறு முப்படைகளுக்கும் உத்தரவாம்!

Featured Replies

வடக்கு, கிழக்கில் சிறிலங்கா படையினர் வசம் உள்ள தனியார் காணிகளில், பாதுகாப்புக் கரிசனைக்குரியவை தவிர்ந்த ஏனையவற்றை பொதுமக்களிடம் மீள ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஆயுதப்படைகளின் தளபதிகளுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முப்படைகளின் தளபதிகளும், ஏற்கனவே குழுவொன்றை அமைத்துள்ளனர்.

அத்துடன் அந்தப் பகுதிகளின் முறையான நில உரிமையாளர்களைக் கண்டறியும் பணியும் இடம்பெற்று வருகிறது.

முக்கியமான, பாதிக்கப்படக் கூடிய, முப்படைகளுடனும் நேரடியாகத் தொடர்புடைய பகுதிகள் தவிர்ந்த பிற காணிகளை உடனடியாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு தனக்கும், முப்படைகளின் தளபதிகளுக்கும், சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளதாகவும், பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை வடக்கு, கிழக்கின் நிர்வாக கட்டமைப்புகளிலும் விரைவில் மாற்றங்கள் இடம்பெறும் என்று அறியப்படுகிறது.

மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் தடைசெய்யப்பட்டுள்ள ஆயுதங்கள், வெடிபொருட்கள் தவிர்ந்த, ஏனைய பொருட்கள் அனைத்தும், வடக்கு, கிழக்கிற்கும் அனுமதிக்கப்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்க தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/news/36969/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

Maithripala_Si.jpg

 

நல்ல செய்தி. நன்றி, மைத்திரி பால சிறிசேன.
இதனை, உடனடியாக... சாதுர்யமாக பயன்படுத்த எம்மக்கள் முனைய வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் சம்பூரிலும் மக்கள்,  ஆக்கிரமிக்கப் பட்ட தமது காணிகளில், 

தாமாகவே... குடியேறி உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

பிக்குகள்... உசாராக முன்னம், தமிழ் மக்கள் உடனடியாக தமது காணிகளுக்கு செல்ல வேண்டும்.
அதிக அவகாசம் கொடுத்தால்.... பல எதிர்ப்புகள் சிங்களப் பகுதியிருந்து, மைத்திரிக்கு வரலாம்.

Edited by தமிழ் சிறி

Maithripala_Si.jpg

 

நல்ல செய்தி. நன்றி, மைத்திரி பால சிறிசேன.

இதனை, உடனடியாக... சாதுர்யமாக பயன்படுத்த எம்மக்கள் முனைய வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் சம்பூரிலும் மக்கள்,  ஆக்கிரமிக்கப் பட்ட தமது காணிகளில், 

தாமாகவே... குடியேறி உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

பிக்குகள்... உசாராக முன்னம், தமிழ் மக்கள் உடனடியாக தமது காணிகளுக்கு செல்ல வேண்டும்.

அதிக அவகாசம் கொடுத்தால்.... பல எதிர்ப்புகள் சிங்களப் பகுதியிருந்து, மைத்திரிக்கு வரலாம்.

 

 

என்ன பழக்கம்; ஜனாதிபதி என்றால் ஏதும் குறையோ.மற்றயது உங்களின் காணிகளும் அனியாயம் என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
இப்படி முன்னைய அரசும் ஒரு பம்மாத்து விட்டது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.