Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் ஜெசிக்கா.............

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க முகநூலில்.. ஜெசிக்கா போன்ற சிறுமிகளை அட் பண்ணுறதில்ல. மேலும் அவர்களின் முகநூல்.. நடவடிக்கைகளில் பங்களிப்பதோ.. இல்ல பதிவிடுவதோ இல்லை. விஜய் நிகழ்ச்சிகள் சிலவற்றை தேடற் பொறி இனங்காட்டின்.. யு ரியுப் பார்ப்பது தவிர வேறு பார்ப்பதில்லை.

 

இதில.. சைபர் புளியுங் என்று போனால்.. ஜெசிக்கா தான் பல கேள்விகளுக்குள் சிக்க நேரிடும். அதனால் அவரை எல்லாம் எங்க பக்கத்துக்கு அனுமதிக்கிறதில்ல. :lol::D

 

16 வயசு வரை சின்னப்பிள்ளை சின்னப்பிள்ளையாகவே இருக்கட்டும். அதனை ஏன் பெரிய பிள்ளை ஆக்குவான். பின் சிரமப்படுகுது.. குத்துது குடையுதுன்னு கஸ்டப்படுவான். :)

  • Replies 204
  • Views 26.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெறும் காழ்ப்புணர்வுடன் கருத்துக்களை வைப்பதைக் கள உறுப்பினர்கள் தவிர்க்கவேண்டும். யாழ் களம் ஆரோக்கியமான விமர்சனங்களையே கள உறுப்பினர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றது.

நன்றி

 

 

மதிப்புக்குரிய நியானி அவர்களே,

 

இந்த உரையாடலின் முதலாவது பக்கத்தில் இருந்து எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு கருத்துக்களாய் வாசித்து வாருங்கள். உண்மையில் எத்தனை கருத்துக்களில் ஆரோக்கியமான, காழ்ப்புணர்வுடன் இல்லாத விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளது? 

 

 

கனடாவில் பிறந்த ஒரு சிறுமி எம் மொழிகற்று அதை அழகாக உச்சரித்து 65-70 பாடல்களை மனப்பாடம் செய்து அத்தனை அழகாகக பாடிய திறமையை பாராட்டாமல்

இந்தளவிற்கு காழ்ப்புணர்வோடு அநாகரிகமாக அந்த சிறுமியையும் அவள் குடும்பத்தையும் எள்ளி நகையாடும் சிலரை நினைத்தால் வெறுப்பாக இருக்கின்றது.

உங்களுக்கு எல்லாம் மனச்சாட்ச்சி இல்லையா? உங்கள் அரசியல் ஆய்வுகளை அரசியலோடும் அதை விளையாடுபவர்களோடும் வைத்துக்கொள்ளுங்கள்...தயவு செய்து இந்த சிறுமியின் திறமையில் வேண்டாம்.

 

அந்த சிறுமி பாடசாலை போகவேண்டும் படிக்கவேண்டும் கிடைத்த பரிசை யாருக்கு கொடுக்கனும் என்பதெல்லாம் அவளதும் அவளது பெற்றோரதும் தனிப்பட்ட முடிவு..இதில் உங்கள் முடிவு தேவையில்லாதது அது பற்றி நீங்கள் முதலைக்கண்ணீர் வடிக்கவும் தேவையில்லை.

 

அந்த சிறுமிக்கு எதிராக எழுதிய கருத்துக்களை வாசித்தபோது முதன் முதலாக யாழில் எதற்காக இணைந்தேன் என்று நினைத்து வேதனைப்பட்டேன்.

இவ்வளவு வக்கிரமாக கருத்தெழுதும் உங்கள் போன்றவர்களுடன் அண்ணா தம்பி என்று உரிமையுடன் கதைத்ததை நினைத்து வெட்கப்பட்டேன்.

 

தயவு செய்து இங்கு அந்த சிறுமியின் திறமையையும், அதன் உயர்ந்த உள்ளத்தையும் எள்ளி நகையாடும் நீங்கள முதலில் உங்களை திருத்திக்கொள்ளுங்கள் சமுதாயம் தானாக திருந்தும். உங்களை போன்ற குறுகிய மனம் உடையவர்கள் திருந்தும் மட்டும் எமக்கு விடுதலை கிடைத்தும் ஒரு பலனும் இல்லை!!!!!

 

 

( இத்திரியில் தொடர்ந்தும் பந்தி பந்தியாக எழுதி உங்கள் நேரத்தை வீணாக்கவேண்டாம். நீஙகள் தலை கீழாக நின்று எப்படி கூப்பாடு போட்டாலும் அந்த சிறுமியின் திறமைக்கும், உயர்ந்த உள்ளத்திற்கு முன்னால் நீங்கள் எல்லாம் .......................)

 

நன்றி

வணக்கம்

 

கிட்டு மாமா காலம் தொடக்கம் டக்கி மாமா காலம்வரை நாங்கள் நாட்டிற்கு இரவு, பகலாக எவ்வளவு செய்கின்றோம், செய்தோம் அக்கா.

 

வலதுகையினால் போய்வருவது இடது கையுக்கு தெரியாமலும், இடது கையினால் போய் வருவது வலது கையுக்கு தெரியாமாலும், எமது புலமைப்பரிசில் காசை பல்கலைக்கழகத்திற்கு டிமிக்கு கொடுத்துவிட்டு வடக்கு, கிழக்கில் வாடும் முன்னாள் போராளிகளிற்கு அனுப்புவது தொடக்கம் தினமும் ஒரு தடவை மட்டும் உணவு உண்டு மிகுதி நேரங்களில் தண்ணீர் மாத்திரம் அருந்தி அதில் மிச்சம் பிடிக்கும் எல்லாக்காசையும் ஶ்ரீ லங்கா சிறையில் வாடும் போராளிகளின் தேவைகளிற்கு பயன்படுத்துகின்றோம். 

 

எமது வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு நாம் தெரு ஓரமாய் வசிக்கின்றோம். அதில் சேமிக்கும் காசை அடுத்தகட்ட ஈழப்போரிற்காய் சேமிக்கின்றோம்.

 

இங்கே பாருங்கள் அக்கா.

 

நீங்கள் ஒரு ஜெசிக்கா பற்றி கவலைப்படுகின்றீர்கள். நாங்கள் ஆயிரம் வியூசிகாக்களை நினைத்து கண்ணீர் வடிக்கின்றோம்.

 

நாட்டிற்கு எவ்வளவோ செய்யும் எங்களை நீங்கள் ஒருவரும் கண்டுகொள்ளாமல் கேவலம் இந்தப்பதினாழு வயது சிறுமியை நீங்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினால் எங்களால் அதை தாங்கிக்கொள்ளமுடியுமா? இனி, ஒவ்வொரு வருடமும் இப்படி சூப்பர் சிங்கர் 5, 6, 7, 8, 9, 10 என படை, படையாய் புதியவர்கள் வருவார்கள், பாராட்டு பெறுவார்கள்.

 

ஆனால், எங்கள் நிலமை? இப்படியே விட்டால் எங்களை கண்டுகொள்ளப்போவது யார்?

 

தொடர்ந்து நாங்கள் புறக்கணிப்புக்கு உள்ளாகுவோம். அதனால் மனநிலை குன்றி முழு பைத்தியமாகியும் விடுவோம்.

 

நாம் மனநிலை குன்றி பைத்தியமாகிவிட்டால் எங்கள் தாய் நாட்டை காப்பாற்றுவது யார்? தாய் நாட்டை கட்டி எழுப்புவது யார்?

 

சிறிய பாம்பானாலும், பெரிய பொல்லால் அடிக்க வேன்டும்.

 

இந்தச்சிறுமி நாளை பெரிய பிள்ளையாய் வளர்ந்து நாளை சுமந்திரனின் தலமைக்கு பின்னால் போகமாட்டாள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

 

முளையிலேயே கிள்ளினால்தான் எமது இனத்தை நாம் காப்பாற்றமுடியும்.

 

நாங்களும் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுகின்றோம். கவிதை, கதை எல்லாம் நன்றாக வரும்.. கதை எழுதுவோம், கதை விடவும் தெரியும். நல்லாய் பாட்டுக்கள் போடுவோம்.

 

எமக்கு ஜெசிக்கா போல் பாட எல்லாம் வராது. ஆனால், சுமாராய் நிலா நிலா வா வா பாடலை இராக, தாளங்களுடன் பாடமுடியும். அதனால் என்ன?

 

எங்களைப்பற்றி பேசுங்கள். எங்களை புகழுங்கள். எமக்கு பச்சை புள்ளிகளை வாரி வழங்குங்கள். நாம் மெதுமெதுவாக அமைதி அடைகின்றோம்.

 

இல்லாவிட்டால், நாங்களும் இருக்கின்றோம் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துவதற்கும், எங்களை மற்றவர்கள் திரும்பிப்பார்க்க வைப்பதற்கும் ஜெசிக்கா என்ன ஜெசிக்கா உங்கள் பிள்ளையே நாளை சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடைக்கு வந்தாலும் ஜெசிக்காவிற்கு செய்ததையே செய்வோம் என்பதை தெரிவித்துகொள்கின்றோம்.

அதைக் காட்டிக்கொடுத்து தான் உங்க அசைல வாழ்வை உறுதிப்படுத்திக் கொண்டீங்கன்னு உலகத்துக்கே தெரியும். காட்டிக்கொடுக்க.. எவனாலும் முடியும்.. எலிகளாலும் முடியும். போராடுவது எல்லாராலும் முடியாது. நிச்சயம் எலிகளால் முடியாது. அதுங்க பதுங்கி.. கொள்ளையடிச்சு.. கொறிச்சு தின்று தான் வாழ்ந்து சாகுங்க. :lol::D

 

ஓ இப்ப உலகமும் மொக்கு கூட்டமா?  போற போக்குல உங்கள தவிர புத்திசாலி யாரும் உலகில இருக்க மாட்டாங்க போல இருக்கே.   :lol:

 
சுப்பிரமணிய சாமி உங்கட கூட்டத்தை ட்விட்டரில எலி எலி என்டு டங்குவார கிழிக்கிறார் என்டா நீங்களும் ஏன் சார் உங்கள நீங்களே எலி என்கிறீங்க. நீங்க லண்டனில பதுங்கி இருந்து கொண்டு இந்த வீர வசனம் தேவையா  :lol:  :lol:

எங்கள் எதிர்ப்பை.. நாங்கள்.. சினிமா வியாபார ஊடகமான.. விஜய் ரீவி எம்மவர்களின் திறமைக்கான அளவு கோலாக்கப்படுவதையும்.. சிறுவர் வியாபாரம் பண்டங்கள் ஆக்கப்படுவதையும்.. அதனை திறமை வளர்ப்பு என்ற போர்வையும் முன்னெடுப்பதையுமே கண்டிக்கிறோம்.

 

ஆனால் விஜய் ரீவி தங்கபாலுவுக்கு வெள்ளை அடிக்கும்.. என்ற அரசியலையும் செய்ய தயங்காது என்பது தற்போது நிதர்சனமாகியுள்ளது. இதே விஜய் ரீவி எம்மக்களின் செத்து மடிந்த போதும்.. இதையே தான் செய்து கொண்டிருந்தது.

 

அப்போது புலம்பெயர் மக்களை நோக்கி விஜய் ரீவி வந்த போது இன்று அதன் நிகழ்ச்சிக்கு வக்காளத்து வாங்கும்.. இதே யாழின் உறுப்பினர்கள்.. அன்று தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்தார்கள்.

 

இதே யாழில்.. இந்த நிகழ்ச்சியை.. சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம்.. என்று வகைப்படுத்தி இட்ட தலைப்பும் இதே யாழில் உள்ளது.

 

முதலில் எமக்கு ஒரு கொள்கை வேண்டும். அதில் தெளிவு வேண்டும். பின் அதில் பிடிப்பு வேண்டும். இது இப்போ யாழில் உள்ளவர்களிடம் அருகி வருகிறது.

 

நாங்கள் அநியாயத்துக்கு உதவும் கொள்கையோடு இல்லை. அது எங்கள் வீட்டுக்கு சீதேவியை கொண்டு வரும் என்பதற்கா...அநியாயத்தை.. நியாயம் என்று காட்டக் கூடாது. அது அபந்தம். அப்படி ஒரு அபந்தத்தை யாழில் இப்ப தாராளமா காண முடிவது.. ஆச்சிரியமில்லை.காரணம்.. பலரின் முகமூடிகள்.. கிழியும் தருணம் இது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். :):icon_idea:

 

ஸப்பாஆ முடியல..இவங்களின்ட முதலை கண்ணீருக்கு ஒரு அளவே இல்லையா
நாட்டில சிறுவர் கையில துவக்கை குடுத்து  கொலை களத்திற்கு அனுப்ப அதை பார்த்து விசிலடித்த கூட்டமெல்லாம் இப்ப ஒரு சிறுவர் பாட்டு நிகழ்ச்சியையே சிறுவர் துஸ்பிரயோகம் என்டுது. 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கட வாதம் எப்பிடியிருக்கு என்றால்.. அவ குட்டைப் பாவாடை போட்டா.. நான் தப்பு பண்ணிட்டேன்.. :o

cyber-bullying பண்ணுகிற நீங்கள்தான் முதல்ல நிறுத்தவேணும்.. மற்றவை எல்லாம் அடுத்த படி.. ஏன்.. நீங்களே முகநூலுக்கு எழுதிப் போடுறது.. :huh:

 

cyber-bullying பற்றி முறைப்பாடு கொடுப்பதற்கு பல வழிமுறைகள் உள்ளனவே. உங்களுக்கு திருமணம் ஆகி ஜெசிக்கா போல் ஒரு புதல்வி இருந்தால், அவர் மீது cyber-bullying செய்யப்படும்போது முறைப்பாடு கொடுக்கமாட்டீர்களா? cyber-bullying செய்யப்படுகின்றது என்று நீங்கள் சந்தேகப்பட்டால் இந்த முறைப்பாட்டை நீங்கள் ஏன் செய்யக்கூடாது? சம்மந்தப்பட்டவர்களை விசாரிக்கவேண்டியவர்கள் விசாரிக்கும் வகையில் விசாரிக்கும்போது அது cyber-bullying செய்யும் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமையும்.

ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சிறுமி ஒருவரின் சாதனையைப் பலர் கொண்டாடினாலும், ஒரு சிலர் கருத்துச் சுதந்திரம் எனும் போர்வையில் காழ்ப்புணர்வுடனும், வன்மத்துடனும் தொடர்ச்சியாகக் கருத்துக்களைப் பதிந்துவருகின்றனர். இச்செயலானது ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழ் சமூகத்தைப் பற்றிய எதிர்மறையான தோற்றப்பாட்டை உருவாக்குவதாக கள உறவுகள் சிலர் விசனமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்தும் அனுமதிக்கமுடியாது என்பதால் இத்திரி பூட்டப்படுகின்றது.

நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.