Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெங்கை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
டெங்கை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகள்
1fdaef905e402b1655b141af2e57b68f.jpg
முதலமைச்சரின் தீர்மானத்திற்கமைய விசேட டெங்குக் கட்டுப்பாட்டு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
 
நேற்றைய தினம் குருநகர்  பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் விசேட டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
 
அதில் மொத்தமாக 1090 குடியிருப்புகள் பார்வையிடப்பட்டன. இவற்றில் நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவான சூழல் கொண்ட 215 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் 35 இடங்களில் நுளம்புக் குடம்பிகளும் இனங்காணப்பட்டன. 
 
53 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவான சூழலினைக் கொண்டிருந்தமையால் எச்சரிக்கை அறிவித்தல்கள் வழங்கப்பட்டதுடன்,14 குடியிருப்பாளர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
அப்பகுதியிலுள்ள 2 பாடசாலைகள் பார்வையிடப்பட்டு 1 பாடசாலையில் நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவான இடத்தில் நுளம்புக்குடம்பிகள் இனம்காணப்பட்டமையால் அன்றைய தினமே குறித்த பாடசாலைக்கு எதிராக எச்சரிக்கை அறிவித்தலும் வழங்கப்பட்டது.
 
மேலும் 2 கல்வி நிறுவனங்கள் பரிசோதனை செய்யப்பட்ட போது நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவான இடங்கள் இல்லாமல் நல்ல நிலையில் காணப்பட்டது.
 
அப்பகுதியிலுள்ள 9 அரச நிறுவனங்கள் பரிசோதனை செய்யப்பட்ட போது 1 அரச நிறுவனத்தில் நுளம்புப்பெருக்கத்திற்கு ஏதுவான இடம் இனங்காணப்பட்டு உடனடியாகவே அழிக்கப்பட்டது.
 
அத்துடன் 10 தனியார் நிறுவனங்கள் பரிசோதனை செய்யப்பட்டு  2 நிறுவனங்களில் நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவான இடங்கள் இனங்காணப்பட்டு உடனடியாகவே அழிக்கப்பட்டது.
 
மேலும் 3 தொழற்சாலைகள் பரிசோதனை செய்யப்பட்டு அவ் 3 தொழிற்சாலைகளிலுமே நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவான இடங்கள் இனங்காணப்படடு உடனடியாகவே அழிக்கப்பட்டது.
 
அப்பகுதியிலுள்ள 30 பொது இடங்கள் பரிசோதனை செய்யப்பட்டபோது 11 இடங்களில் நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவான இடங்கள் இனங்காணப்பட்டதுடன்,8 இடங்களில் நுளம்புக் குடம்பிகளும் இனங்காணப்பட்டன.
 
இவற்றில் 9 இடங்களிற்கு எதிராக எச்சரிக்கை அறிவித்தல் வழங்கப்பட்டதுடன் 1 இடத்திற்கு எதிராக வழக்குத் தாக்கலும் மேற்கொள்ளப்பட்டது.
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=599373824221470714#sthash.g5wMR0mT.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.