Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சவின் குற்றங்கள் அம்பலப்படுவது போல அவுஸ்திரேலியாவும் வெளிப்படுகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ராஜபக்சவின் குற்றங்கள் அம்பலப்படுவது போல அவுஸ்திரேலியாவும் வெளிப்படுகிறது:
 
mr%20aus_CI.png

 

தை மாதம், 23, 2015 

நெருங்கிய நண்பர்களான அவுஸ்திரேலிய பிரதமர் ரொனிஅபோட்டும் மகிந்த ராஜபக்சவும் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் சந்தித்தபோது

முதல் தடைவையாக மக்கள் முன்னைய அரசாங்கத்தை தோற்கடித்து அகற்றிய தேர்தலின் பின்னரான சூழலில்,தோற்கடிக்கப்பட்ட ராஜபக்ச ஆட்சியினுடைய தீய செயற்பாடுகள் பற்றி மக்கள் முன் முன்வைக்கப்பட்டு வருகின்றமையானது புதிய சனாதிபதி பற்றிய கௌரவத்தை உயர்த்துவதற்கும் அவரும் அவருடைய ஆதரவாளர்களும் ஒரு புதிய சகாப்தம் நாட்டில் மலர்ந்து விட்டதாக கோருவதற்கும் வழிவகுக்கின்றது.     

அதே நேரத்தில்மைத்திரி மற்றும் வெட்கம் கெட்ட அவுஸ்திரேலிய அரசாங்கம் அடங்கலான மகிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்களது குற்றங்கள் மற்றும்பாசாங்குத்தனங்களையும் ஊடகங்கள் அம்பலப்படுத்திவருகின்றன. 

சித்திரவதைகளிலிருந்து தப்பி அவுஸ்திரேலியாவிற்கு வந்து அரசியல் தஞ்சம் கோரும் தமிழர்களை தடுத்து நிறுத்தும் முயற்சியில் முந்தைய தொழிற்கட்சி மற்றும் தற்போதையபழமைவாத கட்சி அரசாங்கம் ஆகியன வெறுமனே ராஜபக்சவிற்கு வெளிப்படையாக கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு மேலாக ஆதரவழிப்பதோடு நின்று விடாது அவரை காப்பாறுவதற்கு முழு அளவிலும் உதவின. 

சமீப காலங்களில்இனப்படுகொலை மற்றும் போர் குற்றங்கள் போன்ற மிகவும் கடுமையானகுற்றச்சாட்டுக்களிலிருந்து ராஜபக்ச விடுபட   தற்போதைய பிரதம மந்திரி ரொனி அபோட் முண்டு கொடுத்து நின்றார். அரசியல் தஞ்சம் கோருவோரை திருப்பியனுப்பும் இரு நாட்டு உடன்படிக்கையானது சர்வதேச சட்டத்தை மீறுகின்றதொன்றாகும். இது 2009 ஆம் ஆண்டு 70,000 அப்பாவி தமிழர்கள் நன்கு திட்டமிடப்பட்ட இனவழிப்பில் படுகொலை செய்யப்படதன் பின்னரான தொடர்ச்சியாக இது அமைகின்றது.   

கனடா மற்றும் இந்தியா பொதுநலவாய மாநாட்டு கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்த போது அவுஸ்திரேலிய பிரதமமந்திரி ரொனி அபோட் அதில் பங்கேற்க 2013 இல் கொழும்பு சென்றமையும், கொழும்பு சிறைகளில் நடைபெறும் சித்திரவதைகள் பற்றி எதுவும் கருத்தில் கொள்ளாமல் அதிர்ச்சியூட்டும் விதமாக ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரீசன் இரண்டு கடற்படை ரோந்துப் படகுகளை ராஜபக்சவிடம் கையளித்தமையும், அவுஸ்திரேலிய இராணுவ தளபதி மற்றும் மூத்த குடிவரவு துறை ஊழியர்கள் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராகவிருந்த கோத்தபாய ராஜபக்சவை கடந்த சித்திரை மாதம் கான்பெராவிற்கு வரவேற்று அவருடன் பரிசுகள் பரிமாறிக் கொண்டமையும் போர்க்குற்றவாளியை பாதுகாக்க அவுஸ்திரேலியா செய்தனவற்றில் விஞ்சியனவாக உள்ளது.

இலங்கை மீதான ஐ.நா.வின் போர்க்குற்ற விசாரணையைதடுக்க கடந்த பங்குனி மாதம் அவுஸ்திரேலியா எடுத்த முயற்சியானது எல்லாவற்றிலும் கண்டனத்திற்குரியதாக அமைகிறது. இதில் அவுஸ்திரேலியா தனது நட்பு நாடுகளான அமெரிக்கஇங்கிலாந்துமற்றும் கனடா போன்ற நாடுகளிற்கு எதிராக சீனாரஷ்யாசவூதி அரேபியா போன்ற மனித உரிமை சாம்பியன்களுடன் இணைந்து வாக்களித்துள்ளது.  

ராஜபக்சவின் சகாவான தற்போதைய சனாதிபதி, குடும்பசர்வாதிகாரத்தை மூழ்கடித்தல் என்று வெளிக்காட்டிக் கொண்டு தமது சகாக்களை காக்க எத்தனிக்கின்றார்.  இருந்த போதிலும், அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் எதனை பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் முனைகின்றன என்பது பற்றிய தகவல்களை துல்லியமாக ஆய்வு செய்யவேண்டியது முக்கியம்.

நாம் முதலில் தேர்தல் நடந்த நாளான தை மாதம் 8 ஆம்தேதி இரவைப் பார்ப்போமானால், நள்ளிரவு நெருங்க நெருங்க ராஜபக்சவின் தோல்வியும் நெருங்கிக் கொண்டிருந்தது.  பின்னர், அமைதியான முறையில் அதிகாரத்தை கையளித்ததாக வெளிநாட்டு அரசாங்கங்கள் பாராட்டு தெரிவித்தன.

உண்மையில், தேர்தலை மதிப்பிழக்க செய்து விட்டு இராணுவத்தை வீதிக்கு இறக்கி அவசரகால நிலை உத்தரவை பிறப்பிப்பதற்கு ராஜபக்ச தயாராகிக் கொண்டிருந்தமைக்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தேர்தல் முடிவுகளை பார்த்து தனது தோல்வியை உணர்ந்து கொண்ட பின்னர் மகிந்த ராஜபக்சசகோதரர் கோத்தபாய மற்றும் உச்ச நீதிமன்ற பிரதமநீதியரசர் மொஹான் பீரிஸ் அடங்கலான தனது விசுவாசிகள் குழுவை அழைத்தார் என்று கூறப்படுகிறது.

இந்த சதிப்புரட்சியின் அங்கமாக அட்டோனி ஜெனரல் அழைக்கப்பட்டு இதில் இறப்பர் முத்திரை குத்துமாறு கேட்கப்பட்டார். இதற்கு அட்டோனி ஜெனரல் மறுத்து விட ஏனைய சதிகாரர்களுடன் இணைந்து சதி நடவடிக்கைக்கு ராஜபக்ச முனைந்தார் என கொழும்பு டெலிகிராப் என்ற செய்தி ஊடகம் சுட்டிக்காட்டியது.

இது ஒரு ஊடக வதந்தியேயல்ல. இந்த சதிப்புரட்சி திட்டமிடப்பட்டதை கோத்தபாய ராஜபக்ச மறுதலிக்கையில், புதிய வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர இதனை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதோடு இது குறித்து பொலிஸ் விசாரணையையும் கோரியுள்ளார். இது புதிய அரசாங்கத்திற்கு மற்றொரு சோதனையாக போகிறது.

வெள்ளை வான் கடத்தல் கலாச்சாரத்தின் பின்னால் கோத்தபாய ராஜபக்சவே இருப்பதாக ராஜபக்சவின் முன்னால் அர்ப்பணிப்பான அமைச்சரான மேர்வின் சில்வா டெய்லி மிரர் பத்திரிகைக்கு கூறியிருப்பதை பார்க்கையில், சனநாயக தேர்தலை அகற்ற சதித் திட்டம் தீட்டியமையே எல்லாவற்றையும் விட மிகவும் மோசமானது என கூறி விட முடியாது.

ஆயிரக்கணக்கான இளையோரை இராணுவம் கடத்தி சிறைகளிற்கும் சித்திரவதை முகாம்களிற்கும் கொண்டு செல்லும் ஒரு தமிழினவழிப்பு ஆயுதமாகவே இந்த “வெள்ளை வான்கள்” நீண்டகாலமாக இருக்கின்றன. இப்படியான வெள்ளை வான் கலாச்சாரம் இருந்ததாக இதுவரை அரசாங்கத்தில் இருந்தவர்களில் எவருமே ஒப்புக்கொண்டதில்லை. ஆனால் இது குறித்து போலீசில் முறைப்பாட்டை கூட மேவின் சில்வா பதிவு செய்துள்ளார். பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை மற்றும் பத்திரிகை அலுவலகங்கள் மீதான தாக்குதல்களில் கோத்தபாயவுக்கு உள்ள தொடர்பு என்பன பற்றி இக் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குற்றங்களை கோத்தாபாய வழிநடத்த மேர்வின் சில்வாவின் ஒத்தாசைகளும் இருந்தது என்பதை இங்கு மறந்துவிடக் கூடாது.     

தை மாதம் 9 ஆம் தேதி அதிகாலை ஒரு முற்று முழுதான சர்வாதிகாரியாக வருவதற்கு மகிந்த சதி செய்து கொண்டிருந்த போது, இவர்களது 10 வருட ஊழல் நிறைந்த ஆட்சியின் விளைவாக வரப்போகும் தாக்கங்களை உணர்ந்தவர்களாக இவரது குடும்பம் அங்கும் இங்குமாக சிதறி வேறு இடங்களிற்கு போக எத்தனித்தார்கள். மகிந்தவின் சகோதரர்களான பொருளாதார அபிவிருத்திஅமைச்சராக இருந்த பசில் மற்றும் கோத்தபாய ஆகியோர் தாம் தோல்வியடைய போவதாக உணர்ந்தவுடன் நாட்டை விட்டு பறந்து விட்டனர் என்று இலங்கையில் உள்ள ஊடகங்கள் செய்தி தெரிவித்தன. மகிந்தவின் மகன்கள் சீனாவிற்கு போக இருந்ததாக உறுதிப்படுத்தப்படாத அறிக்கை ஒன்று கூறியது. பெரும்பாலான மக்கள் நடந்தும் சைக்கிளிலும் முச்சக்கர வண்டிகளிலும் பயணம் செய்யும் நாட்டில், இவர்கள் லம்போகினி வாகனங்களிலும் அரசாங்கம் வழங்கிய உலங்குவானூர்திகளிலும் நாட்டினுள் பயணம் செய்து மகிழ்ந்திருக்கிறார்கள்.  

அதேவேளை, ஒரு தசாப்தமாக ராஜபக்ச குடும்பத்தின் ஆடம்பர ஊதாரித்தனங்களை கடமையுணர்வுடன் தீவிரமாகமறுதலித்து வந்த அரசிற்கு சொந்தமான தொலைக்காட்சி ஒன்று, ராஜபக்ச குடும்பத்தின் நீதியற்ற ஆடம்பரங்கள் பற்றி வெளியிடும் சந்தர்ப்பத்தை எடுத்துள்ளது. லம்போகினி வாகனங்களை தேடி ராஜபக்ச வீட்டினுள் புகுந்து அதிரடி சோதனை நடத்திய போலீசார், அங்கு குளிரூட்டப்பட்டகழிப்பறைகள், நிரந்தர டிஜிட்டல் வீடியோ திரைகள் என்பன அடங்கிய ஆடம்பர உல்லாச வசதிகளை அவதானித்துள்ளனர்.

இலத்திரனியல் ஊடகங்களுடன் பல பத்திரிகைகளும் இணையத்தளங்களும் சொத்து குவிப்பு தொடர்பாக பல விடையங்களை வெளியிட்டுள்ளன. ஒன்றும் இல்லாமல் அரசியலிற்கு வந்தவரும் தற்போது மருத்துவ சிகிச்சைக்காகஅமெரிக்காவில் இருப்பதாக கூறப்படும் பசில், இந்த ஆட்சியில் பல விடுதிகள் மற்றும் ஆடம்பர வீடுகள் அடங்கலான ஏகப்பட்ட சொத்துக்களை குவித்துள்ளதாக மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அரச திறைசேரி பணத்தை பசில் முறையற்ற விதத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தியதாக மேர்வின் மேலும் தெரிவித்தார்.

பல பில்லியன் கணக்கான டொலர்கள் ராஜபக்ச ஆட்சியில் திருடப்பட்டது எனவும் அவற்றை கண்டுபிடிப்பதற்கு உலக வங்கிசர்வதேச நாணய நிதியம் மற்றும் இந்தியாவின்ரிசர்வ் வங்கி என்பன உதவ வேண்டும் எனவும்அமைச்சரவை பேச்சாளரும் புதிய சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரட்ன இந்த வாரம் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்தார். 

இதில் மிகவும் சிலவே இலங்கைக்கு வெளியில் இருக்கும் இலங்கை தொடர்பாக கடந்த தசாப்தத்தில் அடிப்படை ஆராய்வேனும் செய்தவர்களிற்கு புதியனவாக இருக்கும். நாம் இதில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியது என்னவெனில், தற்போதைய சனாதிபதியும் இந்த கொடூரமான, ஊழல் மிகுந்த ஆட்சியில் ஒரு முக்கிய பங்காளியாக இருந்துள்ளார் என்பதாகும். இந்த பத்து ஆண்டுகளில் இவர் மூத்த முக்கியஅமைச்சராக இருந்துள்ளார். அத்துடன், 70,000 தமிழ் மக்கள்2009 இல் கொல்லப்பட்ட போது இவர் சிறிது காலம் தற்காலிக பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்ததாக அவரே தனது வாயால் தெரிவித்துள்ளார்.

அவர் பெருமையுடன் இதனை தேர்தல் காலத்தில் கூறியதன் காரணம் என்னவெனில், தனது எதிர்வேட்பாளர் போரை முடிவிற்கு கொண்டு வந்தவர் என்ற பெருமையை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டிருப்பவரென்பதால், அந்த போரில் தானும் முக்கிய பங்கு வகித்ததாக வெளிக்காட்டி சிங்கள மக்களின் மனங்களை வெல்லவேயாகும்.  

எனவே, இவரும் ராஜபக்சாக்களை போல போர்க்குற்றவாளியே. இவரும் ஏனைய மகிந்த ராஜபக்சவுடன் தோளோடு தோள் நின்ற அமைச்சர்கள் போல இந்த ஊழல் ஆட்சிக்கு உடந்தையே. மக்களின் பணப்பைகளை நேரடியாக இவர் திருடியிருக்காதிருப்பினும் இவரும் இதனால் வந்த சலுகைகளை பெற்றவரே.

தம்மை காத்துக்கொள்ள கட்சிதாவிய ஏனையோரைப் போலவே, தற்போது இந்த புதிய சனாதிபதியும் நாட்டிற்கு உகந்ததை செய்வது என்ற புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அவாவிற்குப் பின்பாக மறைய விரும்புகிறார்.  

நாட்டில் நிலவும் தலையாய பிரச்சனையான வடக்கு மற்றும் கிழக்கில் நிலவும் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்பாக பேசுவதற்கு கூட சிறிசேனாவிற்கு எண்ணம் இருக்கவில்லை. தமிழர்கள் செறிந்து வாழும் இடங்களில் கொடிய இராணுவ ஆக்கிரமிப்பு தொடரப்போவதை அவர் தெளிவாக கூறியுமுள்ளார். அதாவது, அபகரிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்களும் வீதிகளும் மீளக் கையளிக்கப்படப் போவதில்லை. தமிழர்கள் தமது எதிர்காலத்தை தாமே தீர்மானிப்பதை அனுமதிக்கப் போவதில்லை. அதாவது, தமிழினவழிப்பு சிறிசேனாவின் ஆட்சியின் கீழ் தொடரத்தான் போகிறது. உலக நாடுகளும் அது குறித்து தமிழர்களிற்காக எதனையும் செய்துவிடப் போவதுமில்லை.  

சிறிசேனவும் ஏனைய மகிந்த ராஜபக்சவின் மூத்த அமைச்சர்களுடன் விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பது தவிர்த்து விட முடியாத உண்மையாகும். இப்போதே இவர் ஒரு நல்ல மீட்பாளர் என வெளிநாட்டு அரசாங்கங்கள் இவரின் புகழ் பாட அரம்பித்திருப்பதால் இவர் இதிலிருந்து விலக்களிக்கப்படுவார் என உறுதிபட கூறலாம். 

உலகின் மிகவும் தீய ஆட்சிகளில் ஒன்றிற்கு ஆதரவாகவும் உடந்தையாகவும் இருந்தவர் இவர் என்பதை சுயநல நோக்கங்களை மட்டுமே கொண்ட அவுஸ்திரேலியா போன்ற வெளி நாடுகள் தட்டிக்கழித்து விடுவர் அல்லது மறந்து விடுவர்.  

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115899/language/ta-IN/---.aspx#.VMRyilwBiU0.facebook

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.