Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏ-9 பாதையை திறக்க வலியுறுத்துக-மறுத்தால் பொருட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

9 பாதையை திறக்க வலியுறுத்துக-மறுத்தால் பொருட்களை அனுப்புக: இந்தியாவுக்கு இராமதாஸ் வேண்டுகோள்

யாழ். ஏ-9 பாதையை திறக்க சிறிலங்காவை இந்திய வலியுறுத்த வேண்டும் என்றும் பாதை திறக்க மறுத்தால் 6 இலட்சம் ஈழத் தமிழர்களுக்கான அத்தியாவசிய பொருட்களை இந்திய அரசாங்கம் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்- அங்கே அமைதி ஏற்படும் என்று உலகத் தமிழர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில்இ ஜெனீவாவில் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருக்கிறது. தமிழர்கள் அனைவருக்கும் அது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

யாழ்ப்பாண தீபகற்பத்தை இதர பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையைத் திறக்கப் போவதில்லை என்ற சிங்கள இனவெறி அரசின் பிடிவாதப் போக்கே ஜெனீவாப் பேச்சுவார்த்தை முறிந்துபோனதற்கு முக்கிய காரணம். இலங்கை சிங்கள அரசின் மூர்க்கத்தனமான அந்தப் பிடிவாதம் கண்டனத்திற்குரியது.

ஈழத் தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வுஇ அங்கே ஈழத் தமிழர்கள் அனைவரையும் கொன்று குவிப்பதுதான் என்ற போக்கில் சிங்கள இனவெறி அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒருபுறம் முப்படைகளையும் கொண்டு மூர்க்கத்தனமாகத் தமிழர் பகுதிகளில் தாக்குதல் தொடுத்து நாள்தோறும் தமிழர்களைக் கொன்று குவித்து வருகிறது.

இன்னொரு புறத்தில் யாழ்ப்பாண தீபகற்பத்தில் வசிக்கும் 6 இலட்சம் ஈழத் தமிழர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள்இ மருந்து பொருட்கள் மற்றும் பெட்ரோல்இ டீசல் முதலியவற்றைச் செல்லவிடாமல் தடுத்து வருகிறது.

இதனால் யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் பசியினாலும்இ பட்டினியாலும் மடிந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது. ஒரே நாடு என்று சொல்லிக் கொண்டுஇ நாட்டின் ஒரு பகுதியில் வசிக்கும் மக்களைப் பசிஇ பட்டினியால் வதைத்துஇ மனிதப் படுகொலையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இது இன்னொரு வகையான யுத்தம்.

சிங்கள அரசின் இந்த மனிதாபிமானமற்றச் செயல் உலகில் வேறு எங்கும் கேட்டறியாத கொடுமையாகும்.

நம்முடைய கண் முன்னே நடக்கும் இந்தக் கொடுமையை இந்தியா இனியும் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது.

இராணுவம் மூடி வைத்துள்ள நெடுஞ்சாலையை உடனடியாகத் திறந்துவிடும்படி சிங்கள அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும். அதற்குக் கட்டுப்பட மறுத்தால் ஈழத் தமிழர்களைப் பட்டினிச் சாவில் இருந்து காப்பாற்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களையும்இ மருந்துப் பொருட்களையும் இந்தியா உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.

கடந்த முறை நடந்ததைப் போல வானூர்திகளைக் கொண்டு தமிழ் ஈழத்தில் உணவுப்பொருட்களை விநியோகிக்காவிட்டாலும்இ கப்பல்கள் வழியாக உணவுப் பொருட்களை இந்தியா அனுப்ப வேண்டும். செஞ்சிலுவைச் சங்க உதவியுடன் இந்த உணவுப் பொருட்களை ஈழத் தமிழர்களுக்கு வழங்க இந்தியா நடவடிக்கை ஊடுக்க வேண்டும். இதன் மூலம் பட்டினிச் சாவில் இருந்து 6 இலட்சம் ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற முன் வரவேண்டும்.

உலகில் இதுபோன்ற கொடுமைகள் நடந்தபோதெல்லாம் இந்தியா தன்னுடைய கண்டனக் குரலை எழுப்பி வந்திருக்கிறது. எனவே கூப்பிடும் தூரத்தில் இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் இந்தக் கொடுமையை இந்தியா இனியும் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது. இது தமிழகத்தில் வசிக்கும் தமிழர்களின் வேண்டுகோள் மட்டுமல்லஇ உலகெங்கும் வாழும் தமிழர்களின் வேண்டுகோளும்இ விருப்பமும் ஆகும்.

ஒட்டுமொத்தத் தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க இந்தியா தாமதமின்றி முன் வரவேண்டும். பட்டினிச்சாவில் இருந்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நன்றி புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.