Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

OCCUPATION 101

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

OCCUPATION 101

 

http://youtu.be/dwpvI8rX72o

 

 
Occupation 101 – Voices of the silenced majority என்பது பலஸ்தீனப் போராட்டம் பற்றியதொரு ஆவணப்படம். இப்படத்தின் உள்ளடக்கம் பற்றிப் பேசுவதற்கு முன்னால் அது பற்றியதொரு சிறிய அறிமுகம். சுபியான் ஒமைஸ் மற்றும் அப்துல்லாஹ் ஒமைஸின் தயாரிப்பு எழுத்து மற்றும் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியானது. பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்கள் தமது அனுபவங்களை பேச்சு அறபு மொழியில் பகிர்ந்து கொள்ளும் போது அதற்கான ஆங்கில மொழி உபதலைப்பு வழங்கப்பட்டுள்ளது. தவிர அனைத்து நேர்காணல்களும் ஆங்கில மொழியிலானது.
 
பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பினால் மேற்குக்கரை மற்றும் காஸாவில் ஏற்பட்ட பாதிப்புக்கள், அநியாயங்களை உலகுக்கு எடுத்துச்சொல்வதே இப்படத்தின் நோக்கம். பலஸ்தீன் – இஸ்ரேல் பிரச்சினைகளுக்கு பின்னாலுள்ள உண்மைகள் பற்றி வரலாற்று ஆதரங்களுடன் ஸியோனிஸத்தின் எழுச்சியிலிருந்து இரண்டாவது இன்திபாழாப் போராட்டம் வரையான காலப்பகுதி வரை பேசுகிறது.
 
Occupation+1.jpg
 

இத்திரைப்படத்தில் அதிகமாக அமெரிக்க - இஸ்ரேலிய புலமையாளர்களின் நேர்காணல்களையும் ஏனைய புத்திஜீவிகள், மதத்தலைவர்கள் மனித நேயப்பணியாளர்கள், மனிதநேய ஆர்வலர்கள், அரசுசாரா சர்வதேச தொண்டுநிறுவனங்களின் பிரதிநிதிகள் போன்றோரின் நேர்காணல்களைக் காணமுடிகிறது. நேர்காணலுக்கு உள்வாங்கப்பட்டவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் யூதர்களென்பது குறிப்பிடத்தக்கது. இவ்யூத அறிஞர்கள் அனைவரும் மேற்குக்கரை, கிழக்கு ஜெரூஸலம் மற்றும் காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களையும், அநியாயங்களையும் வன்மையாகக் கண்டிக்கின்றனர். இவர்களின் நியாயபூர்வமான கண்டமானது இத்திரைப்படத்துக்கு மேலும் வலுச்சேர்க்கிறது எனலாம். கிட்டத்தட்ட முப்பதுக்கும் அதிகமான பிரபல்யமானவர்களின் நேர்காணல்களை இது உள்ளடக்கியுள்ளது.
உதாரணத்துக்காக சிலர்.....
1. ஜேம்ஸ் ஈ அகின்ஸ் – சவூதி அரேபியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர்
2. எட்வர்ட் வோகர் : இஸ்ரேலுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர்
3. பேராசிரியர் இயான் பெபே : இஸ்ரேலிய வரலாற்றாசிரியர் – ஹைபா பல்கலைக்கழகம்
4. பேராசிரியர் நோம் ஸோம்ஸ்கி – மொழியியலாளர்
5. ஆமிரா ஹாஸ் – இஸ்ரேலின் ஹராரத் பத்திரிகையின் செய்தியாளர்

 
Occupation+2.jpg
 

சிறந்த திரைப்படத்துக்கான பல விருதுகளை இவ் ஆவணப்படமும் பல திரைப்படவிழாக்களில் வென்றுள்ளது.
1. “Golden Palm” விருது மற்றும் Best Editing” விருதை 2007ம் ஆண்டு சர்வதேச Beverly Hillsதிரைப்படவிழாவில் பெற்றது.
2. மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளை சிறப்பாகச் சுட்டிக்காட்டியமையால் ஹொலிவூட் திரைப்படவிழாவின் “Artivist” விருதைப் பெற்றுக்கொண்டது.
3. 2007ம் ஆண்டு New Orleans இல் இடம்பெற்ற சர்வதேச மனித உரிமைகளுக்கான திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்படத்துக்கான விருதை பெற்றுக்கொண்டது.
4. Rivers Edge திரைப்பட விழாவில் சிறந்த கருத்தாக்கத்திற்கான விருதைப் பெற்றுக்கொண்டது.

 
Occupation+3.jpg

அயர்லாந்துஅல்ஜீரியாஇந்தியாஅமெரிக்காதென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெற்றஇனவெறித்தாக்குதல்கள்வன்முறைகள் பற்றிய சிறிய அறிமுகத்தோடு பலஸ்தீன் பற்றியபிரச்சினை அறிமுகப்படுத்தப்படுகிறது1880களில் ஐரோப்பாவிலிருந்து வெளியேறி பலஸ்தீனில்குடிபெயர ஆரம்பிக்கும் யூதர்கள் முதல் இரண்டாவது இந்திபாழாப் போராட்டம் வரையானகாலப்பகுதியில் இடம்பெற்ற பல முக்கிய நிகழ்வுகளைக் கூட இது சுட்டிக்காட்டுகிறதுஇந்தவகையில் இக்கால இடைவெளியில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளான 1920ம் ஆண்டில் நடந்தகலவரங்கள்1948ம் ஆண்டு யுத்தம்1976ம் ஆண்டு யுத்தம்1987ம் ஆண்டின் முதலவதுஇந்திபாழாப் போராட்டம்ஒஸ்லோ சமாதானப் பேச்சுவார்த்தைகுடியேற்றங்களின் விஸ்தரிப்பு,2000ம் ஆண்டு இந்திபாழாப் போராட்டம் போன்ற பலவகையான தலைப்புகள் பற்றிப் பேசுகிறது.அத்தோடு தடுப்புச் சுவர்காஸாவிலிருந்தான இஸ்ரேலின் வெளியேற்றம்இஸ்ரேலின்மனிதாபினமில்லாத காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களின்அனுபவங்கள் என்பவற்றையும் உள்வாங்குகிறது.
 
பலஸ்தீனப் பிரச்சினை பற்றியதொரு பூரணமான தெளிவை வழங்க இவ் ஆவணப்படம்முனைவதோடு அவை பற்றித் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளவற்றை முடியுமானவரைஎடுத்துக்காட்ட முனைகிறதுபலஸ்தீனப் போராட்டம் பற்றிய தெளிவில்லாமல் தப்பபிப்பிராயம்கொண்டு பலஸ்தீனர்களை தீவிரவாதிகள் எனச் சொல்வோருக்கு சரியான ஆதாரங்களுடன்பதிலளிக்கிறதுஇஸ்ரேலின் இராணுவ நிர்வாகத்தின் கீழ் பலஸ்தீன மக்கள் நாளாந்தம்எதிர்கொள்ளும் அவஸ்தையைஅவலநிலையை நேர்காணல்களூடாக தத்ரூபமாகஎடுத்துச்சொல்வதோடு அதனை நிரூபிக்கக்கூடிய காட்சிகளும் அவற்றுக்கிடையேஉள்வாங்கப்பட்டுள்ளமையானது திரைப்படத்தை மேலும் மெருகூட்டுகிறது.
 
பிரச்சினைகளுக்கான அடிப்படைகளையும்அவை முடிவில்லாமல் தொடர்வதற்கானகாரணங்களையும் மத்திய கிழக்கின் முன்னணி புத்திஜீவிகளும் சமாதான ஆர்வலர்கள்,பத்திகையாளர்கள்மத அமைப்பைச்சார்ந்தவர்கள்மனிதநேயப் பணியாளர்கள் தமதுஅனுபங்களால் விளக்கமுற்படுகின்றனர்இவர்களது அறிக்கைகளையும் கண்டனங்களையும்அமெரிக்க ஊடகங்கள் எப்போதும் தங்களது ஊடகங்களில் இருந்து தவிர்த்தே வந்துள்ளது.
 
Occupation+4.jpg
 
மீடியாக்களின் பக்கச்சார்பானதும் பலஸ்தீனர்களுக்கு எதிரான திட்டமிட்ட புறக்கணிப்பையும் குறிப்பிடத்தக்களவு புலப்படுத்துகிறது. இஸ்ரேல் சமாதானத்தை நேசிப்பதாகவும், முஸ்லிம்களே பயங்கரவாதிகள் என்று மேற்கத்தேய மீடியாக்களினால் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டுள்ள போலித் தோற்றத்தை தர்க்கரீதியாகாக் கேள்விக்குள்ளாக்குகிறது. பலஸ்தீனப் பிரச்சினையில் அமெரிக்காவின் வகிபாகம் எடுத்துக்காட்டப்படுவதோடு இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு அமெரிக்க நிதியுதவிகள் செலவு செய்யப்படுவதை புள்ளிவிபரங்களுடன் நிரூபிக்கிறது. மனிதாபிமானமற்ற இஸ்ரேலின் கொள்கைகளை சாத்தியமாக்க அமெரிக்கா நிதியுதவி மற்றும் வீட்டோ அதிகாரத்தின் மூலம் மேற்கொண்ட மனித இனத்துக்கு எதிரான செயல்களை திறம்பட எடுத்துச்சொல்கிறது.
 
பலஸ்தீனப் பிரச்சினை பற்றிய சரியான அறிவு இல்லாதவர்கள்கூட இத்திரைப்படத்தை பார்க்கும் போது அதன் மீதான தேடலை நோக்கி இயல்பாகவே செல்லத்தூண்டும் வகையில் இதன் காட்சி அமைப்புக்களும், வரலாற்று ஆதாரங்களும், நேர்காணல்களும் உள்ளன. அண்மைய இலங்கை சூழலைப் பொறுத்தவரை இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் டொனால்ட் பெரேரா பலஸ்தீன் பற்றிக் கூறிய கருத்துக்கள் பலஸ்தீன் பற்றிய ஒரு ராஜதந்திரியின் அறிவின்மையையே காட்டுகிறது. பலஸ்தீனப் பிரச்சினை பற்றிய தெளிவில்லாமல் அது பற்றி விமர்சிப்போருக்கு இந்த ஆவணப்படம் பற்றிய அறிமுகத்தை வழங்குவதன் மூலம் அப்பிரச்சினை பற்றிய சரியான அறிவூட்டலை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தமுடியும். 90 நிமிடங்களைக்கொண்ட இப்படம் நேரமே சென்றது தெரியாமல் இருந்தது அதன் தரத்துக்கும் காட்சியமைப்புக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
 
Occupation+5.jpg
 

சர்வதேச சட்டங்களுக்கும் சராசரி மனித உரிமைகளுக்கும் அப்பால் இயங்கிக் கொண்டிருக்கும் அரசே இஸ்ரேல் என்பதை சிறந்த காட்சிகளினூடாக இலகுவில் உணர்த்த தயாரிப்பாளர்கள் முயற்சித்துள்ளனர். நேர்காணல்களின் உள்ளடக்கம் கனதியாகவும், நேர்காணலுக்கு உள்ளானவர்கள் முக்கிய பிரபல்யங்களாக இருப்பதனாலும் இப்படம் தாக்கம் நிறைந்தது. இத்திரைப்படத்தை தயாரிப்பதற்கு அதன் தயாரிப்பாளர்களுக்கு ஐந்து வருடங்கள் ஏன் எடுத்தது என்பது அதனைப் பார்க்கும் போது புலப்படுகிறது. இப்படத்தை பார்க்கும் போது யார் உண்மையான தீவிரவாதிகள் குற்றவாளிகள் என்பது தெளிவாகப் புரியும். பலஸ்தீனப் பிரச்சினை பற்றிய அறிவில்லாதவர் கூட தனது மனச்சாட்சியின் படி குற்றவாளி,  தீவிரவாதி யார் என்பதை கண்டுகொள்வர். பலஸ்தீனர்கள் அனுபவிக்கும் கொடுமையானது தென்னாபிரிக்காவில் கறுப்பு இனத்தென்னாபிரிக்க மக்கள் அனுபவித்ததை விட அதிகம் என்று நெல்சன் மண்டேலாவும், Desmond Tutu வும் கூறியது உண்மை என்பதை இத்திரைப்படத்தை பார்க்கும் போது தெளிவாகும்.
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.