Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று சிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் – படைபலத்தைக் காட்டும் அணிவகுப்புகள் இல்லை

Featured Replies

இன்று சிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் – படைபலத்தைக் காட்டும் அணிவகுப்புகள் இல்லை FEB 04, 2015 | 0:00by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

sri-lanka-independence-day-300x200.jpgசிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் நிகழ்வு இன்று கோட்டே சிறி ஜெயவர்த்தனபுர நாடாளுமன்றக் கட்டட மைதானத்தில் மிக எளிமையான முறையில் நடைபெறவுள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நிகழ்வுகளில் பங்கேற்று சிறிலங்காவின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவார்.

இந்த நிகழ்வில் பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

எனினும், முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இந்த நிகழ்வுக்கு அழைக்கப்படவில்லை.

முன்னதாக இந்த நிகழ்வு மகிந்த ராஜபக்சவின் சொந்த இடமான  வீரகெட்டியவில் பிரமாண்டமான முறையில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

ஆனால் புதிய அரசாங்கம் இந்த நிகழ்வை கொழும்புக்கு மாற்றியுள்ளதுடன், ஆடம்பரமற்ற வகையில், எளிமையாக நடத்தவும் ஒழுங்கு செய்துள்ளது.

இன்றைய நிகழ்வில், முப்படையினர் மற்றும் காவல்துறையினரை உள்ளடக்கிய 5500 படையினரின் அணிவகுப்பு இடம்பெறும்.

அதேவேளை, முன்னைய ஆண்டுகளில் இடம்பெற்றது போல சிறிலங்கா விமானப்படையின் விமான சாகச அணிவகுப்பு இடம்பெறாது.

அத்துடன், போர்த்தளபாடங்கள் தாங்கிய இராணுவ வாகனங்களின் அணிவகுப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.

அணிவகுப்புக் கட்டளை அதிகாரிகளை தாங்கிய இரண்டு இராணுவ வாகனங்கள் மட்டுமே இன்றைய அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது,

http://www.puthinappalakai.net/2015/02/04/news/3364

 

  • தொடங்கியவர்

<இன்றைய "சுதந்திர தினத்தில்” இதை சொல்வது, சாலப்பொருத்தமானது எனவும் நினைக்கின்றேன். நன்றி, வரதன் கிருஷ்ணா..!> இந்த நொடியில் என் மனதில்….(04/0215)

எனது நேற்றைய டுவீட்டில், "தமிழ் தேசிய பிரச்சினை என்பது இலங்கை ராஜ்ஜியத்துடனான சச்சரவு ஆகும்; அது இலங்கை அரசாங்கத்துடனானது அல்ல" என்று நான் குறிப்பிட்டேன். இது தனக்கு விளங்கவில்லை, முடிந்தால் விளக்குங்கள் என்று நண்பர் வரதன் கிருஷ்ணா கேட்டுள்ளதை காலையில் கவனித்தேன். . (டுவீட்டில் 140 நகர்வுகளுக்குள் சுருக்கமாக மட்டுமே சொல்ல முடியும்). இதோ இங்கே முடிந்தவரை மிகவும் எளிமையாக விளக்க முயல்கிறேன். இதைவிட எளிமைப்படுத்த முடியுமானால் நண்பர்கள் யாராவது விளக்கலாம்.

இலங்கை நாடு என்ற "ராஜ்ஜியம்" நிரந்தரமானது. இலங்கையின் "அரசாங்கம்" என்பது காலத்துக்கு காலம் வந்து போகும் நிரந்தரமற்றது ஆகும். இது நமது நாட்டுக்கு மாத்திரம் அல்ல, தேர்தல் முறைமையை கொண்ட உலகின் எந்த ஒரு நாட்டுக்கும் பொருந்தும்.

நாம் ஆளும் கட்சியில், இருந்தாலும் சரி, எதிர்கட்சியில் இருந்தாலும் சரி, நாம் அனைவரும் இலங்கை ராஜ்ஜியத்தில் பங்காளிகளாக இருக்க வேண்டும். ஆனால், எதிர்கட்சியில் இருந்தால், ஆளும் அரசாங்கத்தில் பங்காளிகள் இல்லை.

இன்னும் சொல்லப்போனால், இந்த நாட்டு போலிஸ், முப்படைகள், அரசு பணியாளர்கள் ஆகியோர் இலங்கை ராஜ்ஜிய ஊழியர்கள் ஆவர். அவர்கள் அரசாங்க பணியாளர்கள் அல்ல. அவர்களது விசுவாசம் ராஜ்ஜியத்தை நோக்கியதே தவிர, அரசாங்கத்தை நோக்கியது அல்ல.

ஆகவேதான் சொல்கிறேன், இலங்கையில் தமிழ் தேசிய பிரச்சனை என்பது தமிழ் மக்களுக்கும், நிரந்தரமன இலங்கை ராஜ்ஜியத்துக்கும் இடைப்பட்டது ஆகும். அதை அந்த அடிப்படையில்தான் தீர்க்க முயலவேண்டும். இடைக்கிடை வந்து போகும் இலங்கை அரசாங்கங்களில் வெவ்வேறு முகங்களை பார்த்து, தமிழ் தேசிய இனப்பிரச்சினை தீர்ந்துவிட்டதாக நினைக்க கூடாது. ஏனென்றால், இலங்கையில் பேரினவாதம், தமிழ் மக்களை தமது அரசாங்கத்தில் எதையாவது கொடுத்து, பங்காளிகளாக்க எப்போதும் முயன்று வந்துள்ளது. ஆனால், இலங்கை ராஜ்ஜியத்தில் நம்மை சம பங்காளிகளாக கருதி இடம்தர, அது எப்போதும் தயங்குகிறது.

அரசாங்கம் என்பதை முற்று முழுதாக நிராகரிக்க நான் சொல்லவில்லை. அது அவசியமானது. அதனுடன் பேசலாம். உரையாடக்கூடிய ஒரு அரசு இப்போது தோன்றியுள்ளது. இது கடந்த காலத்தை விட முன்னேற்றகரமானது. ஆனால், தீர்வு என்பது, நிரந்தரமான இலங்கை ராஜ்ஜியத்தில், நிரந்தரமான பங்காளிகளாக தமிழ் மக்களை மாற்றுவது ஆகும். அந்த தீர்வை பெற இன்றைய அரசாங்கத்தை பயன்படுத்தலாம். வேண்டுமானால், இலங்கை அரசில் பங்காளிகளாக கூட மாறலாம்.

ஆனால், இந்த அரசில் பங்காளிகளாகிவிட்டு, அதை இலங்கை ராஜ்ஜியத்தில் பங்காளிகளாகிவிட்டோம் என்று திரித்து மாயத்தோற்றம் காட்டி விடக்கூடாது. இந்த அரசில் பங்காளியாவதன் மூலம் மாத்திரம், தமிழ் தேசிய இனத்தின் பிரச்சினை தீர்வை எட்டி விடாது. ஏனென்றால் நாளை, இந்த அரசு மாறி, மீண்டும் மகிந்த அரசு மாதிரி வேறு ஒரு அரசு வந்துவிட்டால் எமது பங்களிப்பு முடிந்துவிடும். ஆகவே இன்றைய அரசை பயன்படுத்தி, "நிரந்தரமான இலங்கை ராஜ்ஜியத்தில் நாம் பங்காளிகள்" என்ற தீர்வை தேட வேண்டும்.

இதையே நான் இங்கே சொல்ல முயல்கிறேன். இன்றைய "சுதந்திர தினத்தில் இதை சொல்வது, சாலப்பொருத்தமானது எனவும் நினைக்கின்றேன். நன்றி, வரதன் கிருஷ்ணா….!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

article_1423024496-cartoon2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கருத்து மனோ கணேசனிடம் இருந்து..

இதில் கூட்டமைப்பிற்கு சில நெருக்கடிகள் இருந்திருக்கும் என்றே நினைக்கின்றேன். அமெரிக்கா, மேற்குலக நாடுகள், இந்தியா போன்றவை ஒருமைப்பட்ட இலங்கையினை ஏற்றுக்கொள்ளக்கூடிய சில சமிக்கைகளை காட்டுமாறு நிர்ப்பந்திருக்கலாம்.
 
ஏப்பிரலில் தேர்தலைச் சந்திக்கப்போகும் கூட்டமைப்பு இவ்வாறான விடயத்தை தான்தோன்றித்தனமாக செய்ய ஒன்றும் தெரியாத பாப்பாக்கள் இல்லை. நிச்சயமாக ஏதோ வெளிக்காரணி இதன் பின்னால் உள்ளதாகவே தெரிகின்றது.
 
பொறுத்திருந்துதான் பார்ப்போமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.