Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 146

கிளியாகிப் பறக்கும் கனி

-    சேயோன் யாழ்வேந்தன்

மரத்தின் கனியொன்று

இலையோடு பறந்து போவது போல்

இதோ கிளி  பறந்து போகிறது

இந்த உலகமே நான் தான் என்பதுபோல்

அந்த மரம் ஒய்யாரமாக ஆடிக்கொண்டிருக்கிறது

காரணத்தோடு எதுவும் நடப்பதில்லை

காரணமின்றியும் எதுவும் நடப்பதில்லை

அது நடக்கிறது அவ்வளவே.

seyonyazhvaendhan@gmail.com

(நன்றி: திண்ணை)

Edited by seyon yazhvaendhan

  • 11 months later...
  • Replies 228
  • Views 34k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 2/10/2015 at 5:24 PM, seyon yazhvaendhan said:

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 100

 

ஸ்டிக்கர்

மாபெரும் தீர்க்கதரிசிகள் மறைந்துவிட்டார்களென்று

நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்

உங்கள் கண்முன் உலவும் தீர்க்கதரிசிகளைத் தவறவிடுகிறீர்கள்!

இப்போதெல்லாம் தீர்க்கதரிசிகள்

வெளிப்படையான நீதிபோதனைகளை வழங்குவதில்லை.

நவீன உலகுக்கேற்ப நீதிகளை

மறைபொருளாக வழங்குகிறார்கள்.

மதுக்கோப்பைகளில் நீங்கள் ஒட்டிக்கொள்ளும்

இஷ்ட தேவதையின் ஸ்டிக்கர்

குடிநோயாளி ஆவதிலிருந்து காக்கும்.

குறைந்தபட்சம் கோபத்தில்

கோப்பை உடைபடுவதையாவது தடுக்கும்.

சிகரெட் பெட்டிகளின் மீது

நீங்கள் ஒட்டி வைக்கும் உங்கள்

குழந்தைகளின் ஸ்டிக்கர்

கொஞ்சமேனும் புகைப்பழக்கத்தைக் குறைக்கும்

தலை நசுங்கிய ஒருவனின் படத்தை

ஸ்பீடா மீட்டரில் ஒட்டிக்கொள்வது

சாலையில் கவனமாக இருக்கவைக்கும்.

சக்தி மிக்க கடவுள்களின் ஸ்டிக்கர்களை

முதியவர்கள் மீது நிரந்தரமாக ஒட்டிவிடுவது

பூஜையறையில் இடம் கிடைக்கும்வரை

புழக்கடையிலாவது அவர்களது இருப்பை உறுதி செய்யும்!

 

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 99

எனக்குப் பேய் பிடித்திருக்கிறது

அவளுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்கிறார்கள்

இருக்கிறதா இல்லையாவென்று தெரியாவிட்டாலும்

எனக்கும் பேய் பிடித்திருக்கிறது

அவளுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக மட்டுமின்றி,

பேய்களுக்குக் கோயில் இல்லை

வேளா வேளைக்குப் பூஜை இல்லை

அபிஷேகம் அலங்காரம்

காணிக்கை உண்டியல் அறவே இல்லை

தேர் இல்லை திருவிழா இல்லை

சப்பார பவனி கூட இல்லை

கடவுளைப் போல் பேய்கள்

சாதி மதம் பார்ப்பதில்லை.

ஓட்டத்தான் வேண்டுமெனில்

கடவுள்களை ஓட்டிவிட்டு

பேய்களை ஓட்டுங்கள்

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 98

பாத்திரமறிந்து

 

பிச்சையிடுகிறது

தெய்வம்

தங்கத்தட்டில்

வைரக்கற்களையும்

அலுமினியத் தட்டில்

சில்லரைக் காசுகளையும்

 

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 97

 

சட்டெனப் பரவும் வெறுமை

 

யாருடனாவது

பேசிக்கொண்டிருக்கையில்

நடந்து சென்று கொண்டிருக்கையில்

வாகனம் ஓட்டிச்செல்கையில்

சட்டென்று

ஒரு வெறுமை கவ்வுகிறதா?

சுற்றிலும் பலர் இருந்தும்

யாரும் இல்லாததுபோல்

ஏதேதோ சப்தம் இருந்தும்

எதுவுமே இல்லாத

மௌனம் நிலவுவது போல்

உணர்வு மேலோங்குகிறதா?

ஆரம்பத்திலேயே நீங்கள்

கண்டுபிடித்துவிட்டதால்

அச்சப்படத் தேவையில்லை.

இந்த வெறுமை

விரவிப்

பரவி

உங்கள் உலகத்தையே

முற்றிலும்

ஆக்கிரமித்து

அதனால் நீங்கள்

முற்றிலும் தனிமைப்பட்டு

அந்த ஏகாந்தத்தை

நீங்கள் அனுபவிப்பது

மற்றவர்களுக்கு

பைத்தியக்காரத்தனமாகத் தெரிவது

உங்களுக்குப்

பிரச்சனையில்லையென்றால்

நீங்கள்

இப்போது செய்துகொண்டிருப்பதை

அப்படியே தொடருங்கள்.

அப்படி இல்லையென்றால் ...

நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்

புத்தகத்தை

மூடிவைத்துவிடுங்கள்

எழுதிக்கொண்டிருக்கும்

கவிதையை

இத்துடன் முடித்துக்கொள்ளுங்கள்.

மலைகள்

மரங்கள்

பறவைகளுடன்

தனிமையில்

இருக்கும்

பொழுதுகளைத்

தவிர்த்துவிடுங்கள்

தொடர்ந்து சில நாட்கள்

எல்லாத் தொலைக்காட்சி

நிகழ்ச்சிகளையும்

ரசித்துப் பாருங்கள்

குறிப்பாக

சமீபத்திய

தமிழ் சினி மாக்களைப் பாருங்கள்

மனைவியோடு ஒரு முறை

மாமியார் வீட்டுக்குப்

போய் வாருங்கள்

இந்தக் கூட்டு சிகிச்சையை

தொடருங்கள்

கொஞ்சநாளில்

அந்த வெறுமை

பரவுவது

நின்று

மெல்ல மறைய

ஆரம்பித்திருக்கும்

உங்கள் வாழ்க்கை

பழைய வண்ணங்களுக்குத்

திரும்பியிருக்கும்

உங்கள் பழைய

வாழ்க்கையை

தொடருங்கள்,

மறுபடி வெறுமை

தென்படும் வரை.

ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்

கொஞ்சம் பிசகினாலும்

நீங்கள் காலி.

 

 

கவிஞன் சாதாரணன். ஒரு கவிஞனாக நானும் சாதாரணன். மானுடத்தைப் பாடுவது, மானுடத்துக்குத் துணை நிற்கும் இயற்கையின் கூறுகளைப் பாடுவது கவிஞனின் பணி.

ஒரு புல்லும் ஒரு பறவையும் வேறொரு மனிதனும் தமக்கான கவிதைகளை ஒரு கவிஞன் மூலமாக எழுதிச் செல்கிறார்கள். கவிஞன் கவிதைக்கு ஒரு கருவி. கவிதையும் கவிஞனுக்கு ஒரு கருவி.

கவியரசர்கள், கவிச்சிற்றரசர்கள், மஹாகவிகள் என்று கவிஞர்களில் படிநிலைகள் தேவையில்லை என்பது என் கருத்து. 

ஆனால் சாதாரணனான கவிஞனின் கவிதைகள் சாதாரணமாகவும், சிறந்தவையாகவும் இருக்கலாம். ஒரு சாதாரணக் கவிஞனான எனது சாதாரணக் கவிதைகளுக்கு இடையில் நான் தேர்ந்தெடுக்கும் சில கவிதைகள் எனக்கு அசாதாரணமாகத் தோன்றும். மற்றவர்களுக்கு அப்படித் தோன்ற வேண்டுமென்ற கட்டாயமில்லை.

அப்படி எனக்குத் தோன்றும் கவிதைகளே இப்பதிவுகளில் இடம்பெறுகின்றன. (“ஒரு சாதாரணக் கவிஞனின் சாதாரணக் கவிதைகள்” என்றும் கொள்ளலாம் இவற்றை. இல்லையெனில் பிற கவிதைகளை பதிக்க “ஒரு சாதாரணக் கவிஞனின் சாதாரணக் கவிதைகள்” என்றொரு பக்கத்தையும் தொடங்கலாம்)

இந்தப் பக்கத்தில் பதிக்கப்படும் என் (அ)சாதாரணக் கவிதைகளைப் படித்துப் பகிருங்கள் இயன்றவரை. பகருங்கள் உங்கள் கருத்துகளை.

 

On 11/9/2016 at 12:54 PM, seyon yazhvaendhan said:

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 147

 

ஸ்டிக்கர்

மாபெரும் தீர்க்கதரிசிகள் மறைந்துவிட்டார்களென்று

நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்

உங்கள் கண்முன் உலவும் தீர்க்கதரிசிகளைத் தவறவிடுகிறீர்கள்!

இப்போதெல்லாம் தீர்க்கதரிசிகள்

வெளிப்படையான நீதிபோதனைகளை வழங்குவதில்லை.

நவீன உலகுக்கேற்ப நீதிகளை

மறைபொருளாக வழங்குகிறார்கள்.

மதுக்கோப்பைகளில் நீங்கள் ஒட்டிக்கொள்ளும்

இஷ்ட தேவதையின் ஸ்டிக்கர்

குடிநோயாளி ஆவதிலிருந்து காக்கும்.

குறைந்தபட்சம் கோபத்தில்

கோப்பை உடைபடுவதையாவது தடுக்கும்.

சிகரெட் பெட்டிகளின் மீது

நீங்கள் ஒட்டி வைக்கும் உங்கள்

குழந்தைகளின் ஸ்டிக்கர்

கொஞ்சமேனும் புகைப்பழக்கத்தைக் குறைக்கும்

தலை நசுங்கிய ஒருவனின் படத்தை

ஸ்பீடா மீட்டரில் ஒட்டிக்கொள்வது

சாலையில் கவனமாக இருக்கவைக்கும்.

சக்தி மிக்க கடவுள்களின் ஸ்டிக்கர்களை

முதியவர்கள் மீது நிரந்தரமாக ஒட்டிவிடுவது

பூஜையறையில் இடம் கிடைக்கும்வரை

புழக்கடையிலாவது அவர்களது இருப்பை உறுதி செய்யும்!

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 146

கிளியாகிப் பறக்கும் கனி

-    சேயோன் யாழ்வேந்தன்

மரத்தின் கனியொன்று

இலையோடு பறந்து போவது போல்

இதோ கிளி  பறந்து போகிறது

இந்த உலகமே நான் தான் என்பதுபோல்

அந்த மரம் ஒய்யாரமாக ஆடிக்கொண்டிருக்கிறது

காரணத்தோடு எதுவும் நடப்பதில்லை

காரணமின்றியும் எதுவும் நடப்பதில்லை

அது நடக்கிறது அவ்வளவே.

seyonyazhvaendhan@gmail.com

(நன்றி: திண்ணை)

 

  • 9 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 147

அடையாளம் தெரியாத நபரின் உடல்

                   - சேயோன் யாழ்வேந்தன்

இன்றும் ஓர் அடையாளம் தெரியாத நபரின்
சடலம் கிடைத்திருக்கிறது.
அவர் அடையாளம் தெரியாத நபர்களால்
சுடப்பட்டிருக்கிறார்
அடையாளம் தெரியாத நபர்தான் 
சடலத்தை முதலில் பார்த்திருக்கிறார்.
இன்னொரு அடையாளம் தெரியாத நபர்
அந்தச் செய்தியை அனைவருக்கும் சொல்கிறார்.
அடையாளம் தெரியாத நான்
இன்றும் என்ன செய்வதென்று தெரியாமல் 
அடையாளம் தெரியாத உங்களிடம்
சொல்லிக்கொண்டிருக்கிறேன.

 

  • கருத்துக்கள உறவுகள்

அடையாளம் இல்லாத கவிதையை அடையாளம் உள்ளவர்கள் நின்று ரசித்து செல்கின்றார்கள்.....!  ?

எல்லாக் கவிதைகளும் அருமை சேயோன்.....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.