Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

8ஆவது ஐ.பி.எல். செய்திகளும் கருத்துகளும்

Featured Replies

  • தொடங்கியவர்

Rajasthan Royals 189/2 (20/20 ov)
Delhi Daredevils 175/7 (20/20 ov)
Rajasthan Royals won by 14 runs

  • Replies 449
  • Views 23.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட் : ராஜஸ்தான் அணி வெற்றி

 

மும்பை: டில்லி அணிக்கு எதிரான பிரிமியர் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியாவின் பல்வேறு பகுதியில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான பிரிமிர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

 

இதன் வது 36வது லீக் போட்டியில் ராஜஸ்தான், டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்த களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்தது. கடின இலக்கை துரத்திய டில்லி அணி 20 ஓவரில் 175 ரன்கள் எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1244522

  • தொடங்கியவர்

24dhcp4.png

  • தொடங்கியவர்

நாளைய போட்டிகள்

 

37th match: Super Kings v RCB at Chennai on May 4, 2015

(16:00 local | 10:30 GMT)

 

38th match: KKR v Sunrisers at Kolkata on May 4, 2015

(20:00 local | 14:30 GMT)

  • தொடங்கியவர்

வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை: இன்று பெங்களூருவுடன் மோதல்

 

சென்னை: சென்னையில் இன்று நடக்கும் எட்டாவது ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதுகின்றன.   

                

சென்னை அணி கடந்த இரண்டு போட்டிகளில் தோற்ற சோகத்தில் உள்ளது. இன்று டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம் வலுவான துவக்கம் தர வேண்டும். இத்தொடரில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ள ரெய்னாவின் பங்களிப்பு அதிகம் தேவை. டுபிளசி, கேப்டன் தோனி,  டுவைன் பிராவோ, ஜடேஜா உள்ளிட்டோர் பொறுப்பாக செயல்பட்டால், இமாலய இலக்கை எட்டலாம்.             

 

                             

வருவாரா அஷ்வின்: கடந்த போட்டியில் ஐதராபாத் அணியின் வார்னர், தவான் சேர்ந்து சென்னை பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். மோகித் சர்மா, நெஹ்ராவும் சோபிக்கவில்லை. கடந்த இரு போட்டிகளில் ‘சுழல்’ நாயகன் அஷ்வின்(விரல் காயம்) இல்லாதது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இவர், சொந்த மண்ணில் இன்று விளையாடுவது சந்தேகமாக உள்ளது                            

 

கோஹ்லி விளாசல்: பெங்களூரு அணி தொடர்ந்து 3 வெற்றியை எட்டிய மகிழ்ச்சியில் உள்ளது. துவக்க வீரர்கள் கெய்ல், கேப்டன் கோஹ்லி ஜொலிக்கின்றனர். மழையால் பாதிக்கப்பட்ட கடந்த போட்டியில் இவர்களின் விளாசல் வெற்றிக்கு வித்திட்டது. டிவிலியர்ஸ் அதிரடிக்கு மாற வேண்டும். கோல்கட்டாவுக்கு எதிராக மன்தீப் சிங் 18 பந்தில் 45 ரன்கள் விளாசினர். இவர், இன்றும் மிரட்டினால், இத்தொடரில் ஏற்கனவே சென்னையிடம் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்க முயற்சிக்கலாம்.           

 

வேகப்பந்துவீச்சில் அசத்த ஸ்டார்க், ஆரோன், ஹர்சால் படேல் உள்ளனர். ‘சுழலில்’ சகால் எதிரணிக்கு நெருக்கடி தருகிறார். இருப்பினும், சென்னை அணி பேட்ஸ்மேன்களை சமாளிப்பது சற்று கடினம்தான்.     

                         

இதுவரை ...                       

ஐ.பி.எல்., அரங்கில் இரு அணிகள் மோதிய 18 போட்டிகளில் சென்னை 10, பெங்களூரு 7 வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.     

                   

மழை வருமா                       

போட்டி நடக்கும் சென்னையின் இன்றைய வானிலையை பொறுத்தவரை அதிகபட்சம் 35, குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியாக இருக்கும். மழை வர 10 சதவீதம் வாய்ப்பு உள்ளது.

 

 

கலக்குமா கோல்கட்டா     

இன்று கோல்கட்டாவில் நடக்கும் மற்றொரு லீக் போட்டியில் ஐதராபாத், கோல்கட்டா அணிகள் மோதுகின்றன.      

கோல்கட்டா அணியில் உத்தப்பா, கேப்டன் காம்பிர் என அசத்தலான வீரர்கள் உள்ளனர். மனிஷ் பாண்டே, சூர்யகுமார் சொதப்புவது பின்னடைவு. விளாசல் மன்னன் ரசல் ரசிகர்களுக்கு உற்சாகம் தர காத்திருக்கிறார். பந்துவீச்சில் கம்மின்ஸ், உமேஷ் ஏமாற்றுகின்றனர். சுழற்பந்துவீச்சாளர் பிராட் ஹாக், சாவ்லா நம்பிக்கை அளிக்கின்றனர்.      

ஐதராபாத் அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை நோக்கி களம் காண்கிறது. வார்னர், தவான் ஜோடி எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக உள்ளனர். இயான் மார்கன், நமன் ஓஜா பங்களிப்பு நிச்சயம் தேவை. ‘வேகத்தில்’ புவனேஷ்வர், பிரவீண் குமார் மிரட்ட வேண்டும். கடந்த போட்டியில் விக்கெட் வீழ்த்தாத பவுல்ட் இன்று சுதாரிப்பது அவசியம்

 

 

http://sports.dinamalar.com/2015/05/1430666754/ChennaiBangaloreIPLCricket.html

  • தொடங்கியவர்

பெங்களூர் அணிக்கு 149 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

 


20 ஓவர்களில் சென்னை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள்

 

  • தொடங்கியவர்

தடுமாறிய சென்னை பேட்ஸ்மேன்கள்..பெங்களூர் வெற்றிக்கு 149 ரன்கள் இலக்கு

 

சென்னை: பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல்லில் மொத்தமுள்ள 56 லீக் சுற்றில் இதுவரை 36 ஆட்டங்கள் முடிந்து விட்டன. ஆனாலும் இதுவரை எந்த அணியும் ‘பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்யவில்லை. அனைத்து அணிகளும் வாய்ப்பில் நீடிப்பதால் தொடர்ந்து மல்லுகட்டுகின்றன.

 

 

இதில் 37வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்சும் பலப்பரீட்சையில் இறங்கியுள்ளன. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் டோணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளதாக அறிவித்தார். இதன் படி சென்னை அணி முதலில் பேட் செய்தது. இதனிடையே முதல் ஓவரிலேயே சென்னைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஓவரின் கடைசி பந்தில் மிட்சேல் ஸ்டார்க் வீசிய பந்தில் ஸ்டெம்பு தெறித்து ஓட, ட்வைன் ஸ்மித் டக் அவுட் ஆனார்.

 

மெக்கல்லம் சிறிது அதிரடி காண்பித்து 15 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்தபோது, டேவிட் வைஸ் பந்து வீச்சில், இக்பால் அப்துல்லாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து ரெய்னாவுடன், டுப்ளசிஸ் ஜோடி சேர்ந்தார். 12 ஓவர்கள் முடிவில் சென்னை 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்து நிதான தொடக்கம் கண்டது. ஆனால், அதன்பிறகும், ரன்களை குவிக்க சென்னை தவறிவிட்டது. டுபிளெசிஸ் 24 ரன்களிலும், டோணி 29 ரன்களிலும், ஜடேஜா வழக்கம்போல சொதப்பலாக ஆடி 3 ரன்களிலும், அதிரடி காண்பித்த பவான் நேகி 13 ரன்களிலும் அவுட் ஆகினர். சென்னை அணியில், ரெய்னா மட்டுமே சிறப்பாக ஆடி 52 ரன்கள் விளாசினார்.

 

வழக்கமாக அதிரடியாக ரன் குவிக்கும் ரெய்னாவும், 46 பந்துகளில்தான் அந்த ரன்களை எட்ட முடிந்தது. ட்வைன் பிராவோ 2 ரன்களில் அவுட் ஆன நிலையில், மோகித் ஷர்மா ஆட்டத்தின் கடைசி பந்தில் ரன் அவுட் ஆகி பூஜ்யத்தில் வெளியேறினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பெங்களூரு தரப்பில் மிட்சேல் ஸ்டார்க், 4 ஓவர்கள் பந்து வீசி 24 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்ஷல் பட்டேல் மற்றும் டேவிட் வைஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-csk-vs-rcb-chennai-super-kings-win-toss-will-bat-first-226040.html

  • கருத்துக்கள உறவுகள்
image.jpg
  • தொடங்கியவர்

அசத்தல் பவுலிங்.. பெங்களூரை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை! 

 

சென்னை: பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. எளிய இலக்கை விரட்டிச் சென்றாலும், பெங்களூரு அணி .. ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஐபிஎல்லில் மொத்தமுள்ள 56 லீக் சுற்றில் இதுவரை 36 ஆட்டங்கள் முடிந்து விட்டன. ஆனாலும் இதுவரை எந்த அணியும் ‘பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்யவில்லை.

 

அனைத்து அணிகளும் வாய்ப்பில் நீடிப்பதால் தொடர்ந்து மல்லுகட்டுகின்றன.இதில் 37வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்சும் பலப்பரீட்சையில் இறங்கின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் டோணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளதாக அறிவித்தார். இதன் படி சென்னை அணி முதலில் பேட் செய்தது. இதனிடையே முதல் ஓவரிலேயே சென்னைக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

 

 

அந்த ஓவரின் கடைசி பந்தில் மிட்சேல் ஸ்டார்க் வீசிய பந்தில் ஸ்டெம்பு தெறித்து ஓட, ட்வைன் ஸ்மித் டக் அவுட் ஆனார். மெக்கல்லம் சிறிது அதிரடி காண்பித்து 15 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்தபோது, டேவிட் வைஸ் பந்து வீச்சில், இக்பால் அப்துல்லாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து ரெய்னாவுடன், டுப்ளசிஸ் ஜோடி சேர்ந்தார். 12 ஓவர்கள் முடிவில் சென்னை 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்து நிதான தொடக்கம் கண்டது. ஆனால், அதன்பிறகும், ரன்களை குவிக்க சென்னை தவறிவிட்டது. டுபிளெசிஸ் 24 ரன்களிலும், டோணி 29 ரன்களிலும், ஜடேஜா வழக்கம்போல சொதப்பலாக ஆடி 3 ரன்களிலும், அதிரடி காண்பித்த பவான் நேகி 13 ரன்களிலும் அவுட் ஆகினர். சென்னை அணியில், ரெய்னா மட்டுமே சிறப்பாக ஆடி 52 ரன்கள் விளாசினார். வழக்கமாக அதிரடியாக ரன் குவிக்கும் ரெய்னாவும், 46 பந்துகளில்தான் அந்த ரன்களை எட்ட முடிந்தது. ட்வைன் பிராவோ 2 ரன்களில் அவுட் ஆன நிலையில், மோகித் ஷர்மா ஆட்டத்தின் கடைசி பந்தில் ரன் அவுட் ஆகி பூஜ்யத்தில் வெளியேறினார்.

 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பெங்களூரு தரப்பில் மிட்சேல் ஸ்டார்க், 4 ஓவர்கள் பந்து வீசி 24 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்ஷல் பட்டேல் மற்றும் டேவிட் வைஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 149 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி பெங்களூர் பேட்டிங்கை தொடங்கியது. ஆட்டத்தின் 3வது ஓவரிலேயே ஈஸ்வர் பாண்டே பந்தில் ஸ்டம்பு சிதற நிக் மட்டின்சன் 4 ரன்களில் வெளியேறினார். இதைத்தொடர்ந்து அதிரடி காண்பித்த டிவில்லியர்ஸ், 14 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த நிலையில், ஈஸ்வர் பாண்டே வீசிய ஃபுல்டாஸ் பந்தில் மிட்-ஆப் திசையில் நின்ற டுபிளெசிஸ் வசம் பிடிபட்டார். வில்லியல்ஸ் அவுட்டான அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மண்டீப் சிங் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆகினார். இதனால், பெங்களூர் அணி, 5.2 ஓவர்களில், 34 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

 

ஆனால், பொறுப்பாக ஆடிய கேப்டன் கோஹ்லிக்கு, விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கொடுத்த பார்ட்னர்ஷிப்பால், ஸ்கோர் சீராக உயர்ந்தது. ஆனால், 14வது ஓவரின் கடைசி பந்தில் 48 ரன்களில் கோஹ்லி ரன் அவுட்டான நிலையில், 14.1வது பந்தில், தினேஷ் கார்த்திக் 23 ரன்கள் எடுத்த நிலையில், நெஹ்ரா பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து எதிர்பார்க்கப்பட்ட சர்ப்ராஸ் கான் 8 ரன்களிலும், டேவிட் வைஸ் 17 ரன்களிலும், ஸ்டார்க் 1 ரன்னிலும் அவுட் ஆகினர். ஹர்ஷல்பட்டேல் மற்றும் இக்பால் அப்துல்லா ஆகியோர் டக் அவுட் ஆகினர். கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவை என்ற நிலையில், பிராவோ பெங்களூருவின் கடைசி இரு விக்கெட்டுகளையும் முதல் நாலே பந்துகளில் வீழ்த்தினார். ஆனால் ரன் எதுவும் விட்டுக்கொடுக்கப்படவில்லை.

 

எனவே 24 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி பெற்றது. நெஹ்ரா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறைந்த ரன்னே எடுத்தாலும், பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கால் சென்னை வெற்றியை வசப்படுத்தியது. கடைசி இரு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்திருந்த சென்னைக்கு, இந்த வெற்றி பெரும் பூஸ்ட் கொடுத்துள்ளது. புள்ளி பட்டியலிலும், சென்னை முதலிடத்தை தக்க வைத்துள்ளது

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-csk-vs-rcb-chennai-super-kings-win-toss-will-bat-first-226040.html

  • தொடங்கியவர்

கோல்கட்டா அணி '167/7'


 

கோல்கட்டா: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோல்கட்டா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.எட்டாவது ஐ.பி.எல்., தொடரின் 38வது லீக் போட்டி கோல்கட்டாவில் நடக்கிறது. இதில் கோல்கட்டா, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

 

'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர், பீல்டிங் தேர்வு செய்தார். கோல்கட்டா அணியில் கம்மின்ஸ் நீக்கப்பட்டு ஜோகன் போத்தா சேர்க்கப்பட்டார். ஐதராபாத் அணியில் பவுல்டுக்குப் பதில் ஸ்டைன் இடம் பெற்றார்.

 

ஐதராபாத் அணியில் பவுல்டுக்குப் பதில் ஸ்டைன் இடம் பெற்றார். கோல்கட்டா அணிக்கு காம்பிர், உத்தப்பா ஜோடி துவக்கம் கொடுத்தது.

 

இதில் காம்பிர் 31, உத்தப்பா 30, ரசல் 1, மணிஷ் பாண்டே 33, டஸ்காட்டே 8 ரன் எடுத்தனர். பின் வரிசையில் போத்தா 12, உமேஷ் யாதவ் 6 ரன் எடுக்க, கோல்கட்டா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது. சாவ்லா (9), யூசுப் பதான் (30) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1245235

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கோல்கட்டா கலக்கல் வெற்றி


 

கோல்கட்டா: ஐ.பி.எல்., லீக் போட்டியில் அபாரமாக ஆடிய கோல்கட்டா அணி, ஐதராபாத்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

 

கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த எட்டாவது ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டியில் கோல்கட்டா, ஐதராபாத் அணிகள் மோதின.

 

ஐதராபாத் அணியில் பவுல்டுக்குப் பதில் ஸ்டைன் இடம் பெற்றார். 'டாஸ்' வென்ற ஐதராபாத் கேப்டன் வார்னர், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

 

நல்ல துவக்கம்:
கோல்கட்டா அணிக்கு காம்பிர், உத்தப்பா ஜோடி வலுவான துவக்கம் கொடுத்தது. இவர்கள், பவுண்டரிகளாக விளாச, ஸ்கோர் மிக விரைவாக உயர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்த நிலையில் காம்பிர்(31) அவுட்டானார். சிறிது நேரத்தில் உத்தப்பாவும்(30), 'பெவிலியன்' திரும்பினார். ரசல்(1) ஏமாற்றினார். அதிரடியாக ஆடிய மணிஷ் பாண்டே, 33 ரன்கள் எடுத்தார். டஸ்காட்டே(8), போத்தா(12), சூர்ய குமார் யாதவ்(6) நிலைக்கவில்லை.

 

பதான் அசத்தல்:
கடைசி கட்டத்தில் யூசுப் பதான்(30*) அதிவிரைவாக ரன் சேர்த்து கைகொடுத்தார். கோல்கட்டா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது.

உமேஷ் மிரட்டல்:
பின் சவாலான இலக்கை விரட்டிய ஐதராபாத் அணி, உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரிலேயே ஆட்டம் கண்டது. இவரது 'வேகத்தில்' வார்னர்(4), நமன் ஓஜா(0) போல்டாகினர். ஹாக் வலையில் ஷிகர் தவான்(15) சிக்கினார். மார்கன்(5) ரன் அவுட்டானார். விகாரி(6), பிபுல் சர்மா(1) ஏமாற்றினர். தனிநபராக போராடிய ஹென்ரிக்ஸ்(41), ஹாக் 'சுழலில்' அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய கரண் சர்மா, போத்தா ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் அடித்தார். இவர், இதே ஓவரில் 32 ரன்களுக்கு அவுட்டானார். பிரவீண் குமார் 12 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 132 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. புவனேஷ்வர்(11), ஸ்டைன்(1) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

 

ரசல் காயம்
உமேஷ் யாதவ் வீசிய போட்டியின் 3வது ஓவரின் 5வது பந்தை தவான் பவுண்டரிக்கு அனுப்பினார். இதனை தடுக்க தவறிய கோல்கட்டாவின் ரசல், எல்லைக் கோடு அருகே விழுந்தார். அப்போது இடது தோள்பட்டை பகுதியில் காயம் அடைந்தார். வலியால் அவதிப்பட்ட இவர், களத்தை விட்டு வெளியேறினார். சிறிது நேரத்திற்கு பின் மீண்டும் திரும்பினார்.

 

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1245235

  • தொடங்கியவர்

vg1jxs.png

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட் : மும்பை அணி-40/4
 

மும்பை: பிரிமியர் லீக் தொடரின் 39வது லீக் போட்டி மும்பையில் நடக்கிறது. இந்த போட்டியில் மும்பை , டில்லி அணிகள் மோதுகின்றன. இதில் ‛டாஸ்' வென்ற டில்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய டில்லி அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது.தொடர்ந்த களமிறங்கிய மும்பை அணி 5.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்துள்ளது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1245983

 

தற்சமயம் மீண்டும் மழையால்  போட்டி தடைப்பட்டுள்ளது.  D/L முறையில் மும்பை 16 ரன்கள் பின்தங்கி உள்ளது.


இந்த போட்டி இப்படியே கைவிடப்படுமானால் மழையால் டெல்லி வென்றதாக அறிவிக்கப்படும்

  • தொடங்கியவர்

மும்பை அணி நான்காவது வெற்றி

 

மும்பை: டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எட்டாவது ஐ.பி.எல்., தொடரின் 39வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் மும்பை, டில்லி அணிகள் மோதின.

 

'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் டுமினி, பேட்டிங் தேர்வு செய்தார். டில்லி அணியில் குர்விந்தர் சாந்து நீக்கப்பட்டு, இம்ரான் தாகிர் சேர்க்கப்பட்டார். மும்பை அணியின் உன்முக்த் சந்திற்குப் பதில், ஹர்திக் பாண்ட்யா இடம் பெற்றார்.

 

டில்லி அணிக்கு மயங்க் அகர்வால் (0), ஸ்ரேயாஸ் (19), டுமினி (28), கேதர் ஜாதவ் (16) நீடிக்கவில்லை. யுவராஜ் சிங் (57) அரைசதம் அடித்து அவுட்டானார். டில்லி அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது.

 

பின் களமிறங்கிய மும்பை அணி 19.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராயுடு (49), போலார்டு (26) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1246037

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட்: பெங்களூரு அணி பேட்டிங்

 

பெங்களூரு: பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 40வது லீக் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1246772

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட்: 46 பந்துகளில் சதமடித்து கெயில் அசத்தல்

 

பிரிமியர் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு 227 ரன்கள் இலக்கு

  • தொடங்கியவர்

கெய்ல் அதிவேக சதம்

 

பெங்களூரு: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு வீரர் கெய்ல் 46 பந்தில் சதம் அடித்தார்.
பெங்களூருவில் பஞ்சாப், பெங்களூரு அணிகள் மோதும் ஐ.பி.எல்., லீக் போட்டி நடக்கிறது. 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் பெய்லி, பீல்டிங் தேர்வு செய்தார்.
பஞ்சாப் அணியில் சேவக்கிற்கு பதில் மனன் வோரா சேர்க்கப்பட்டார். பெங்களூரு அணியில் கெய்ல் மீண்டும் இடம் பெற்றார்.

 

அதிரடி சதம்:
பெங்களூரு அணிக்கு கெய்ல், கேப்டன் கோஹ்லி ஜோடி துவக்கம் கொடுத்தது. ஜான்சன் வீசிய போட்டியின் 2வது ஓவரில் கெய்ல் 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 20 ரன்கள் விளாசினார் கெய்ல். 'டுவென்டி-20' கிரிக்கெட்டில் ஜான்சன் ஓவரில் இவ்வளவு ரன்கள் எடுத்த முதல் வீரர் கெய்ல் தான்.
தொடர்ந்து விளாசிய இவர், சந்தீப் சர்மா ஓவரில் 24 ரன்கள் எடுக்க, 22வது பந்தில் அரைசதம் எட்டினார். கோஹ்லி 32 ரன் எடுத்தார். மறுமுனையில் விளாசலை தொடர்ந்த கெய்ல், 46 வது பந்தில் சதம் அடித்தார்.

 

பெங்களூரு அணி 13.5 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. கெய்ல் (101), டிவிலியர்ஸ் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1246066

  • தொடங்கியவர்

RCB 226/3 (20/20 ov)
Kings XI Punjab 88 (13.4/20 ov)


Royal Challengers Bangalore won by 138 runs

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட்: பஞ்சாப்பை பந்தாடியது பெங்களூரு

 

பெங்களூரு: பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 40வது லீக் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இந்த போட்டியில் 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 

இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு துவக்க வீரர் கெய்லின் (117 ரன்கள் 57 பந்து) புயல்வேக சதம் கைகொடுக்க 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 226 ரன்கள் குவித்தது. இமாலய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, 13.4 ஓவர்களில் 88 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 138 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1246846

  • தொடங்கியவர்

js0bhv.png

 

 


qyyhj7.png

  • தொடங்கியவர்

'எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் பஞ்சாப்' *கெய்ல் 'புயல் வேக' சதம்
 

 

பெங்களூரு: ஐ.பி.எல்., தொடரில் கெய்லிடம் நேற்று வசமாக சிக்கியது பஞ்சாப் அணி. இவரது 'புயல்வேக' சதம் கைகொடுக்க, பெங்களூரு அணி 138 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

 

பெங்களூருவில் நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப், பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பஞ்சாப் கேப்டன் பெய்லி, 'பீல்டிங்' தேர்வு செய்தார். பஞ்சாப் அணியில் சேவக்கிற்கு பதில் மனன் வோரா சேர்க்கப்பட்டார். பெங்களூரு அணியில் கெய்ல் மீண்டும் இடம் பெற்றார்.

 

கலக்கல் துவக்கம்:
பெங்களூரு அணிக்கு கெய்ல், கேப்டன் கோஹ்லி சேர்ந்து அதிரடி துவக்கம் கொடுத்தனர். ஜான்சன் வீசிய போட்டியின் 2வது ஓவரில் கெய்ல் 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 20 ரன்கள் விளாசினார். 'டுவென்டி-20' கிரிக்கெட்டில் ஜான்சன் ஓவரில் இவ்வளவு ரன்கள் எடுத்த முதல் வீரர் இவர் தான்.
தொடர்ந்து விளாசிய இவர், சந்தீப் சர்மா ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி சேர்த்து 24 ரன்கள் எடுக்க, 22வது பந்தில் அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்த நிலையில், கோஹ்லி(32) அவுட்டானார்.

 

டிவிலியர்ஸ் அதிரடி:
அடுத்து வந்த டிவிலியர்ஸ் தன்பங்கிற்கு, கரண்வீர் சிங் ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் விளாசினார். இப்படி வந்தவர்கள் எல்லாம் அடித்து நொறுக்க, பஞ்சாப் பவுலர்களை பார்க்கவே பாவமாக இருந்தது. மின்னல் வேகத்தில் (46 வது பந்து) சதம் கடந்த கெய்ல் (57 பந்து, 117 ரன், 12 சிக்சர், 7 பவுண்டரி), அக்சர் படேல் 'சுழலில்' ஒரு வழியாக அவுட்டானார். தினேஷ் கார்த்திக்(8) நிலைக்கவில்லை. பெங்களூரு அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 226 ரன்கள் குவித்தது. டிவிலியர்ஸ்(47), சர்பராஸ் கான்(11) அவுட்டாகாமல் இருந்தார்.

 

விக்கெட் மடமட:
இமாலய இலக்கை விரட்டிய பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் பெங்களூரு பந்துவீச்சில் சத்தமில்லாமல் 'சரண்டர்' ஆகினர். ஸ்டார்க் வீசிய முதல் ஒவரில் மனன் வோரா(2) வெளியேறினார். முரளி விஜய்(2) ஏமாற்றினார். ஸ்ரீநாத் அரவிந்த் பந்துவீச்சில் மேக்ஸ்வெல்(1), சகா(13), மில்லர்(7), பெய்லி(2) போல்டாகினர். ஜான்சன்(1), அனுரீத் சிங்(0) உள்ளிட்ட 'டெயிலெண்டர்கள்' ஸ்டார்க்கிடம் வீழ்ந்தனர். பஞ்சாப் அணி 13.4 ஓவரில் 88 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது. தனிநபராக போராடிய அக்சர் படேல்(40) அவுட்டாகாமல் இருந்தார்.
இத்தொடரில் அனைத்து அணிகளிடமும் 'அடி' வாங்கிய பஞ்சாப், 8வது தோல்வியை சந்தித்ததால், 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. ஆட்டநாயகன் விருதை கெய்ல் வென்றார்.

 

 

3000
நேற்று 52வது ரன்னை எடுத்த போது, ஐ.பி.எல்., அரங்கில் 3000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார் பெங்களூருவின் கெய்ல். இவர் 76 போட்டிகளில் 3065 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் 3வது இடம் பிடித்தார். முதல் இரண்டு இடங்களில் முறையே சென்னையில் ரெய்னா(125 போட்டி, 3581 ரன்), மும்பையின் ரோகித் சர்மா(122 போட்டி, 3246 ரன்) உள்ளனர். நான்காவது இடத்தில் கோல்கட்டாவின் காம்பிர்(113 போட்டி, 3058 ரன்) உள்ளார்.
* 'டுவென்டி-20' அரங்கில் 14வது முறையாக சதம் அடித்தார் கெய்ல். இரண்டாவது இடத்தில் பிரண்டன் மெக்கலம்(6) உள்ளார்.

 

 

1500
பெங்களூரு சின்னசாமி மைதானம் கெய்லுக்கு மிகவும் ராசியானது. இங்கு 'டுவென்டி-20' போட்டிகளில் 1500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை நேற்று பெற்றார்.

 

 

12
நேற்று 12 சிக்சர்கள் விளாசிய கெய்ல், ஐ.பி.எல்., அரங்கில் மூன்றாவது முறையாக ஒரே இன்னிங்சில் 12 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்சர்கள் அடித்து சாதனை படைத்தார்.

 

 

அதிகமும், குறைவும்
நேற்று பெங்களூரு அணி எடுத்த 226/3 ரன்கள், எட்டாவது ஐ.பி.எல்., தொடரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. இதற்கு முன் ஏப்., 11ல் நடந்த போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிராக, சென்னை அணி 209/7 ரன்கள் எடுத்திருந்தது.
* பெங்களூருவுக்கு எதிராக 88 ரன்னுக்கு சுருண்ட பஞ்சாப் அணி, இத்தொடரில் குறைந்த பட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

 

 

இரண்டாவது பிரமாண்டம்
பஞ்சாப்புக்கு எதிராக 138 ரன்னில் வென்ற பெங்களூரு அணி, ஐ.பி.எல்., அரங்கில் இரண்டாவது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
இதற்கு முன் இதே பெங்களூரு மைதானத்தில் நடந்த முதல் ஐ.பி.எல்., (2008) போட்டியில், பெங்களூருவுக்கு (82/10) எதிராக, கோல்கட்டா அணி (222/3) 140 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது
* இத்தொடரில் பெற்ற சிறந்த வெற்றி இது தான். இதற்கு முன் சென்னை அணி, இதே பஞ்சாப் அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

 

 

'பீல்டிங்' மோசம்
பஞ்சாப் அணியின் பேட்டிங், பவுலிங் மட்டுமல்ல பீல்டிங்கும் மோசமாக இருந்தது. கெய்ல் இரண்டு முறை(27, 53 ரன்னில்) கொடுத்த 'கேட்ச்' வாய்ப்பை முறையே பெய்லி, வோரா கோட்டைவிட்டனர். இதை பயன்படுத்திய கெய்ல், சதம் அடித்து அசத்தினார்.

 

 

'கேமரா' சர்ச்சை
போட்டியின் 5வது ஓவரில் அனுரீத் சிங் வீசிய பந்தை கெயல் சிக்சருக்கு பறக்க விட்டார். அப்போது மைதானத்தின் உயரே இருந்த 'ஸ்பைடர் கேமரா' வயரில் பந்து பட்டதாக பஞ்சாப் வீரர்கள் அம்பயரிடம் புகார் கூறினர். இதையடுத்து சிக்சர் நிராகரிக்கப்பட்டு அது, 'டெட் பால்' என அறிவிக்கப்பட்டது. இந்த பந்தை மீண்டும் வீசிய போது கெய்லால் ஒரு ரன் தான் எடுக்க முடிந்தது.

 

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1246844

  • தொடங்கியவர்

ராஜஸ்தான் அணி தோல்வி


 

மும்பை: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியாவில் எட்டாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. மும்பையில் இன்று நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் வாட்சன் பவுலிங் தேர்வு செய்தார்.ஐதராபாத் அணிக்கு கேப்டன் வார்னர் 24 ரன்கள் எடுத்தார்.

 

 

சிறப்பாக செயல்பட்ட தவான் (54), மார்கன் (63) அரை சதம் அடித்தனர். ஹென்ரிக்ஸ் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ஐதராபாத் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்தது.

 

ராஜஸ்தான் அணிக்கு ரகானே (8), வாட்சன் (12), கருண் நாயர் (4) நிலைக்கவில்லை. ஹூடாவும் 7 ரன்களில் கிளம்பினார். சிறப்பாக செயல்பட்ட ஸ்மித் அரை (68) சதம் அடித்தார். பால்க்னர் (30), கிறிஸ் மோரிஸ் (34*) அதிரடி காட்டியபோதும், ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 194 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1246840

  • தொடங்கியவர்

பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது ஹைதராபாத்

 

மும்பை பிரபர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 201 ரன்கள் குவித்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத், 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது.

 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத், தங்களது அயல்நாட்டு வீச்சாளர்களான டிரெண்ட் போல்ட், டேல் ஸ்டெய்ன் இருவரையும் இன்றைய ஆட்டத்தில் சேர்க்கவில்லை. இஷாந்த் சர்மா ஆடினார்.

 

டேவிட் வார்னர் வழக்கம் போல் (24 ரன்கள், 18 பந்து, 5 பவுண்டரி) அதிரடித் தொடக்கம் கொடுக்க, ஷிகர் தவன் 35 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 54 ரன்கள் விளாசி மிடில் ஓவர்களை கவனித்துக் கொள்ள, பிறகு இயன் மோர்கன் 28 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 63 ரன்கள் விளாசினார். பொபாரா 17, மோய்சஸ் ஹெண்ட்ரிகேஸ் 20 ரன்களை சேர்க்க சன் ரைசர்ஸ் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது.

 

ராஜஸ்தான் அணியில் வாட்சன், தாம்பே, பாக்னர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் 4 ஓவர்களில் அஜிங்கிய ரஹானே, ஷேன் வாட்சன் ஆகியோர் விக்கெட்டுகளை இழந்தது. ஸ்டீவன் ஸ்மித் 40 பந்துகளில் 68 ரன்களை விளாசி ராஜஸ்தான் துரத்தலை உயிர்ப்புடன் வைத்திருந்தார், ஆனாலும் தேவைப்படும் ரன் விகிதம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

 

கடைசியில் 3 ஓவர்களில் 57 ரன்கள் தேவை என்ற நிலையில் சஞ்சு சாம்சன், ஜேம்ஸ் பாக்னர் அதிரடி ஷாட்களை ஆடினர். இவர்கள் இருவரும் புவனேஷ் குமாரிடம் ஆட்டமிழந்தனர். கடைசியில் கிறிஸ் மாரிஸ் இறங்கி பிரவீண் குமாரை 3 சிக்சர்கள் தொடர்ச்சியாக அடித்து 9 பந்துகளில் 22 ரன்கள் தேவை என்ற நிலைக்குக் கொண்டு வந்தார். ஆனால் கடைசியில் புவனேஷ், பிரவீண் குமார் வெற்றியைத் தடுத்தனர்.

 

ராஜஸ்தான் ராயல்ஸ் கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில் 10 ரன்களையே எடுக்க முடிந்தது. இதனால் 194/7 என்று முடிந்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் 14 புள்ளிகளில் உள்ளது. இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளன. சன்ரைசர்ஸ் அணி 10 புள்ளிகளுக்குச் சென்றனர். இன்னும் 4 ஆட்டங்கள் மீதமுள்ளன.

ஆட்ட நாயகனாக மோர்கன் தேர்வு செய்யப்பட்டார், அணிச் சேர்க்கையை சன் ரைசர்ஸ் மாற்றியதில் பலன் கிடைத்துள்ளது.

 

சுருக்கமான ஸ்கோர் விவரம்:

 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்: 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 201

 

மோர்கன்: 63

 

ஷிகர் தவன்: 54

 

ராஜஸ்தான் ராயல்ஸ்: 194/7

 

ஸ்டீவ் ஸ்மித் 68

 

கிறிஸ் மோரிஸ் 34 நாட் அவுட்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/article7181324.ece

  • தொடங்கியவர்

இதுதான் லாஸ்ட் வார்னிங்.. ஒழுங்கா பந்த போடனும்.. நரீனுக்கு பி.சி.சி.ஐ இறுதி எச்சரிக்கை!

 

மும்பை: கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரீன் பந்துவீச்சு, சர்ச்சைக்குறியதாக இருப்பதாக கூறி, நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஆஃப் ஸ்பின் வீச அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால், நடப்பு ஐ.பி.எல். தொடரில் சில போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக நரீன் விளையாடவில்லை. 

 

இந்நிலையில், சுனில் நரீனுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து அவரை மீண்டும் பந்து வீச பி.சி.சி.ஐ. அனுமதியளித்துள்ளது.

 

இன்னொரு முறை சுனில் நரீனின் பந்து வீச்சு, விதிமுறைகளை மீறும் வகையில் இருந்தால் அவருக்கு நிரந்தர தடை விதிக்கப்படும் என்றும் பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. இதையடுத்து, கொல்கத்தாவில் இன்றிரவு நடைபெறவுள்ள டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல். தொடரில் சுனில் நரீன், இதுவரை 69 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நடப்புத் தொடரில் 2 விக்கெட்டுகள் மட்டுமே அவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-sunil-narine-gets-final-warning-cleared-bowl-ag-226278.html

  • தொடங்கியவர்

Kolkata Knight Riders 171/7 (20/20 ov)
Delhi Daredevils 158/6 (20/20 ov)
Kolkata Knight Riders won by 13 runs

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.