Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

8ஆவது ஐ.பி.எல். செய்திகளும் கருத்துகளும்

Featured Replies

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட்: ஐதராபாத் அணி வெற்றி

 

மொகாலி: பிரிமியர் லீக் தொடரின் 27வது லீக் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஐதராபாத் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1240418

  • Replies 449
  • Views 23.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

முதலிடத்துக்கு முன்னேறுமா சூப்பர் கிங்ஸ்?- சென்னையில் இன்று கொல்கத்தாவுடன் மோதல்
 

 

சென்னையில் இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸும், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதுகின்றன.

 

சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி, 5 வெற்றி, ஒரு தோல்வியை சந்தித் துள்ளதோடு, புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி யையும், 2 தோல்வியையும் பதிவு செய்துள்ளது. மற்றொரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அந்த அணி 7 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

 

இந்த சீசனில் சென்னையில் நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் வாகை சூடியுள்ள தோனி தலைமையிலான சூப்பர் கிங்ஸ் அணி, இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பதில் தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் கொல்கத்தா அணியும் பலம் வாய்ந்த அணியாக இருப்பதால் இன்றைய ஆட்டம் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சென்னையில் நடைபெற்ற கடந்த ஆட்டத்தில் பஞ்சாபை 97 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடிய சூப்பர் கிங்ஸ் அணி, அதேபோன்றதொரு ஆட்டத்தை இன்றும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சமபலம் கொண்டதாகத் திகழ்கிறது சூப்பர் கிங்ஸ். டுவைன் ஸ்மித், பிரென்டன் மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா, டுவைன் பிராவோ, டூபிளெஸ்ஸி, கேப்டன் தோனி என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது சூப்பர் கிங்ஸ்.

 

மிரட்டும் நெஹ்ரா

பந்துவீச்சைப் பொறுத்தவரை யில் ஆசிஷ் நெஹ்ரா தொடர்ந்து அசத்தி வருகிறார். இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 12 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் 2-வது இடத்தில் உள்ளார். ஈஸ்வர் பாண்டே, மோஹித் சர்மா ஆகியோர் நெஹ்ரா வுக்கு பக்கபலமாக பந்துவீசி வருகின்றனர். சுழற்பந்து வீச்சில் அஸ்வின்-ஜடேஜா கூட்டணி பலம் சேர்க்கிறது. தொடர்ந்து தடுமாறி வந்த ஜடேஜா, பஞ்சாபுக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பார்முக்கு திரும்பியிருக்கிறார்.

 

சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரையில் இந்த ஆட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது. அப்படி மாற்றம் செய்யப்படாதபட்சத்தில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் வீரர்களை மாற்றாத அணி என்ற பெருமையை மும்பையுடன் பகிர்ந்து கொள்ளும் சூப்பர் கிங்ஸ்.

 

சமபலம் கொண்ட கொல்கத்தா

கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணியும் பேட்டிங், பவுலிங் என சமபலம் கொண்டதாக இருந்தாலும், அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக ரன் குவிக்காதது அந்த அணியின் பலவீனமாக உள்ளது.

பேட்டிங்கை பொறுத்தவரையில் ராபின் உத்தப்பா, கேப்டன் கம்பீர், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், சூர்யகுமார் யாதவ், ஆன்ட்ரே ரஸல் என பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இவர்கள் அனைவருமே ஆட்டத்தின் போக்கை மாற்றும் ஆற்றல் பெற்றவர்கள்.

 

வேகப்பந்து வீச்சில் மோர்ன் மோர்கல், உமேஷ் யாதவ், ஆன்ட்ரே ரஸல் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். மோர்கல் இதுவரை 9 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். அந்த அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரேன் விதிமுறைக்கு மாறாக பந்துவீசுவதாக புகார் எழுந்துள்ளதால் கடும் நெருக் கடிக்கு உள்ளாகியிருக்கிறார். எனவே அவர் இடம்பெறுவாரா, இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அதனால் பியூஷ் சாவ்லாவையே நம்பியுள்ளது கொல்கத்தா.

 

இதுவரை

இவ்விரு அணிகளும் இதுவரை 14 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சூப்பர் கிங்ஸ் 9 முறையும், கொல்கத்தா 5 முறையும் வெற்றி கண்டுள்ளன.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article7149819.ece

  • தொடங்கியவர்

ஐபிஎல் கிரிக்கெட்: புள்ளிகள் அட்டவணை
 

 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடம் வகித்து வருகிறது. சென்னை அணி 2-ம் இடத்தில் உள்ளது.

அணிகளின் புள்ளிகள் அட்டவணை வருமாறு:

 

ராஜஸ்தான் ராயல்ஸ்: 8 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வி, 11 புள்ளிகள், நிகர ரன் விகிதம் +0.140

 

சென்னை சூப்பர்கிங்ஸ்: 6 போட்டிகளில் 5 வெற்றி, 1 தோல்வி, 10 புள்ளிகள், நிகர ரன் விகிதம் +1.609

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 6 போட்டிகளில் 3 வெற்றி 2 தோல்வி, 7 புள்ளிகள், நிகர ரன் வீகிதம் +0.310

 

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு: 6 போட்டிகளில் 3 வெற்றி 3 தோல்வி, 6 புள்ளிகள், நிகர ரன் விகிதம் +0.519

 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்: 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி, 6 புள்ளிகள், நிகர ரன் விகிதம் -0.074

 

டெல்லி டேர் டெவில்ஸ்: 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி 6 புள்ளிகள், நிகர ரன் விகிதம் -0.395

 

மும்பை இந்தியன்ஸ்: 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்வி, 4 புள்ளிகள், நிகர ரன் விகிதம் -0.553

 

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்வி 4 புள்ளிகள், நிகர ரன் விகிதம் -1.093
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88/article7150474.ece

  • தொடங்கியவர்

Knight Riders have won the toss and will bowl

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட்: சென்னை அணி பேட்டிங்

 

னை: பிரிமியர் லீக் தொடரின் 28வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் சென்னை மற்றும் கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பீர் முதலில்பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளார்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1241093

  • தொடங்கியவர்

கொல்கத்தாவுக்கு 135 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த சென்னை!

 

சென்னை:8வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 28வது லீக் ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாசில் வென்ற கொல்கத்தா, முதலில் ஃபீல்டிங் தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை கொல்கத்தாவுக்கு 135 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

 

6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்து 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

 

கேகேஆர் அணி 3 வெற்றி 2 தோல்விகளுடன் 3வது இடத்திலுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்றால், ராஜஸ்தான் அணியிடமிருந்து மீண்டும் ஒருமுறை முதலிடத்தை தட்டிப்பறிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ். இதனிடையே டாசில் வென்ற கொல்கத்தா கேப்டன் கம்பீர், தனது அணி முதலில் பவுலிங் செய்யும் என்றார். இதையடுத்து சென்னை பேட்டிங்கை தொடங்கியது. சென்னை அணியில் மாற்றம் ஏதுமில்லை. ஆனால் கொல்கத்தா அணியில் பவுலிங் சர்ச்சையால் முக்கிய வீரர் சுனில் நரைன் கழற்றிவிடப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்க்கலும் ஆடவில்லை. அதற்கு பதிலாக பேட்கம்மின்ஸ் மற்றும் பிராட் ஹாக் சேர்க்கப்பட்டுள்ளார். 44வயதான ஹாக் ஐபிஎல்லில் விளையாடும் வயது முதிர்ந்த வீரராகும்.

 

முதலில் பேட் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. டுபிளெசிஸ் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். ட்வைன் ஸ்மித் 25 ரன்களும், மெக்கல்லம் 19 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா தரப்பில் பியூஷ் சாவ்லா மற்றும் ஆன்ட்ரே ரசல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். எனவே, 135 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு கொல்கத்தா ஆட உள்ளது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-daily-guide-match-28-chennai-super-kings-vs-kolkata-knight-riders-225634.html

  • தொடங்கியவர்

Chennai Super Kings 134/6 (20/20 ov)
Kolkata Knight Riders 105/8 (18.1/20 ov)
Kolkata Knight Riders require another 30 runs with 2 wickets and 11 balls remaining

  • தொடங்கியவர்

Chennai Super Kings 134/6 (20/20 ov)
Kolkata Knight Riders 132/9 (20/20 ov)
Chennai Super Kings won by 2 runs

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட்: சென்னை அணி 'திரில்' வெற்றி

 

சென்னை: கோல்கட்டா அணிக்கு எதிரான பிரிமியர் லீக் கிரிக்கெட் (ஐ.பி.எல்.,) தொடரின் லீக் போட்டியில் சென்னை அணி 2 ரன்களில் 'திரில்' வெற்றி பெற்றது.இந்தியாவின் பல்வேறு பகுதியில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது.

 

இதில் சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடந்த 28வது லீக் போட்டியில் சென்னை அணி, கோல்கட்டா அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் 'டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்தது. எட்டக்கூடிய இலக்கை துரத்திய கோல்கட்டா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடு்த்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1241202

  • தொடங்கியவர்

சென்னை அணி ‘திரில்’ வெற்றி! * கோல்கட்டா போராட்டம் வீண்

 

சென்னை: பரபரப்பான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பவுலர்கள் பட்டையை கிளப்ப, சென்னை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. கடைசி பந்து வரை போராடிய கோல்கட்டா அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சென்னையில் நேற்று நடந்த எட்டாவது ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள் மோதின.

 

மூன்று மாற்றம்:

கோல்கட்டா அணியில் சுனில் நரைன், மார்னே மார்கல், போத்தாவுக்கு பதில் முறையே பிராட் ஹாக், கம்மின்ஸ், டஸ்காட்டே இடம் பெற்றனர். சென்னை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா கேப்டன் காம்பிர், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

 

 

நல்ல துவக்கம்:

சென்னை அணிக்கு வழக்கம் போல டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம் சேர்ந்து அதிரடி துவக்கம் தந்தனர். இவர்கள், கோல்கட்டா பந்துவீச்சை சிதறடித்தனர். கம்மின்ஸ் ஓவரில் மெக்கலம் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். மறுபக்கம் உமேஷ் யாதவ் ஓவரில் ஸ்மித் தன்பங்கிற்கு வரிசையாக ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்த நிலையில், பியுஸ் சாவ்லா ‘சுழலில்’ மெக்கலம்(19) வெளியேறினார். யூசுப் பதானின் நேரடி ‘த்ரோவில்’ ஸ்மித்(25) ரன் அவுட்டானார்.

 

தோனி ஏமாற்றம்:

இதற்கு பின் வந்தவர்கள் ஏனோதானோ என விளையாடினர். ஆன்ட்ரூ ரசல், அனுபவ ஹாக் கட்டுக் கோப்பாக பந்துவீச, ரன் வறட்சி ஏற்பட்டது. ரசல் ‘வேகத்தில்’ ரெய்னா(17), கேப்டன் தோனி(3) அவுட்டாகினர். சாவ்லா வலையில் டுவைன் பிராவோ(5) வீழ்ந்தார். ஹாக் பந்தில் ரவிந்திர ஜடேஜா(15) வெளியேறினார். கடைசி கட்டத்தில் டுபிளசி(29*), அஷ்வின்(9*) கைகொடுக்க, சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 134 ரன்கள் மட்டும் எடுத்தது.

கோல்கட்டா சார்பில் சாவ்லா, ரசல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

 

காம்பிர் மோசம்:

சுலப இலக்கை துரத்திய கோல்கட்டா அணிக்கு துவக்கத்தலேயே ‘ஷாக்’ காத்திருந்தது. ஈஷ்வர் பாண்டே ஓவரில், தான் சந்தித்த முதல் பந்திலேயே ‘கோல்டன் டக்’ அவுட்டானார் காம்பிர். பின் மனிஷ் பாண்டே, உத்தப்பா சேர்ந்து அதிவிரைவாக ரன் சேர்த்தனர். இந்த நேரத்தில் அஷ்வின் ‘சுழலில்’ உத்தப்பா(39), பாண்டே(15) வெளியேற, சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். சூர்ய குமார் யாதவ்(16) விரைவில் அவுட்டாக, கோல்கட்டா அணி 12.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

 

பின் பிராவோ பந்தில் யூசுப் பதான்(13) போல்டானார். ரசல்(4) வீணாக ரன் அவுட்டாக, போட்டி சென்னை பக்கம் வந்தது.

கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றிக்கு  17 ரன்கள் தேவைப்பட்டன. பிராவோ பந்துவீசினார். முதல் மூன்று பந்தில் ரன் இல்லை. 4வது பந்தில் டென் டஸ்காட்டே சிக்சர் அடித்தார். அடுத்த இரு பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பிய போதும், அணியை கரை சேர்க்க முடியவில்லை. கோல்கட்டா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 132 மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. டஸ்காட்டே(38), ஹாக்(2) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

7வது முறை

ஐ.பி.எல்., அரங்கில் 150 அல்லது அதற்கும் குறைவான ஸ்கோரை எடுத்து 7வது முறையாக வென்றது சென்னை அணி. இதன் மூலம் கோல்கட்டா(7) சாதனையை சமன் செய்தது.

 

அஷ்வின் காயம்

நேற்று 11.1வது ஓவரில் ரெய்னா வீசிய பந்தை சூர்யகுமார் யாதவ் அடித்தார். இதை தாழ்வாக ‘கேட்ச்’ செய்ய முயன்ற அஷ்வின் விரலில் காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. இதையடுத்து களத்தை விட்டு வெளியேறினர். இதனால், இவர் 2 ஓவர் மட்டுமே வீச முடிந்தது. இருப்பினும் சென்னை அணி வெற்றி பெற்று அசத்தியது.

 

 

மெக்கலத்துக்கு ‘அடி’

உமேஷ் யாதவ் வீசிய போட்டியின் கடைசி ஓவரின் முதல் பந்து, சென்னை வீரர் டுபிளசியின் விலா எலும்பு பகுதியில் பலமாக தாக்கியது. சிறிது நேரம் வலியால் அவதிப்பட்ட இவர், விரைவில் சகஜ நிலைக்கு திரும்பி, பேட்டிங்கை தொடர்ந்தார்.

 

44

ஐ.பி.எல்., அரங்கில் பங்கேற்ற மிக மூத்த வீரரானார் கோல்கட்டாவின் பிராட் ஹாக், 44. இவர், ராஜஸ்தானின் பிரவின் டாம்பேவை, 43, முந்தினார்.

 

 

11

நேற்று ஏமாற்றிய கோல்கட்டா கேப்டன் காம்பிர்(0), ஐ.பி.எல்., அரங்கில் அதிக முறை(11) ‘டக்’ அவுட்டான வீரர்கள் பட்டியலில் மும்பை அணியின் ஹர்பஜனுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார்.

 

விக்கெட் சரிவு

நல்ல துவக்கம் கிடைக்க, சென்னை அணி 42–0 என வலுவான நிலையில் இருந்தது. பின் விக்கெட் சரிவு ஏற்பட, 88/5 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. அதாவது 46 ரன்கள் இடைவெளியில் 5 விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், ஐ.பி.எல்., அரங்கில், சென்னை மண்ணில் தனது 3வது குறைந்த ஸ்கோரை(134/6) பதிவு செய்தது.

 

http://sports.dinamalar.com/2015/04/1430246065/ChennaiIPLcricketKolkata.html

  • தொடங்கியவர்

44 வயசானாலும் 'நச்'சுன்னு சாதனை படைத் பிராட் ஹாக்!

 

சென்னை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்று மயிரிழையில் தோல்வியைத் தழுவினாலும் கூட அந்த அணியின் பிராட் ஹாக் புதிய சாதனை படைத்தது, ஆறுதல் தந்திருக்கும். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்த சுழற்பந்து வீச்சாளருக்கு வயது 44 ஆகி விட்டது. இந்த வயதில், நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் சென்னையில் வைத்து ஒரு ஐபிஎல் சாதனையைப் படைத்தார். அது என்ன சாதனை என்றால் அதிக வயதில் ஐபிஎல் போட்டியில் ஆடியவர் என்ற சாதனைதான்.

 

44 வருடம் 81 நாட்கள் பிராட் ஹாகுக்கு 44 வருடம் 81 நாட்கள் வயதாகிறது. சுனில் நரீனுக்குப் பதில் கடைசி நேரத்தில் பிராட் ஹாக் ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்பட்டு நேற்றைய ஆட்டத்தில் விளையாடினார்.

 

 

முன்பு ராஜஸ்தான் கொல்கத்தா அணிக்கு வருவதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடியவர் பிராட் ஹாக். ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

2013ல் கடைசிப் போட்டி 2013ம் ஆண்டு இவர் கடைசியாக ஐபிஎல் போட்டியில் ஆடியிருந்தார். அதன் பின்னர் விளையாட முடியாத சூழல் நிலவியது. இப்போது 2 வருட இடைவெளிக்குப் பிறகு ஆடியுள்ளார்.

 

இளம் வீரர் சர்பிராஸ் கான் முன்னதாக நடப்பு ஐபிஎல்லில் மிகவும் இளைய வீரர் என்ற பெருமையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சர்பிராஸ் கான் பெற்றார். இவருக்கு வயது 17தான் ஆகிறது.

 

நல்லாத்தான் போட்டாரு நேற்றைய போட்டியில் பிராட் ஹாக் நன்றாகத்தான் பந்து வீசினார். 4 ஓவர்களை முழுமையாகப் போட்ட அவர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்

 

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/at-44-kkr-s-brad-hogg-sets-ipl-record-225700.html

  • தொடங்கியவர்

கொல்கத்தாவை கொக்கரிக்கவிட்டு, கொத்துக்கறி போட்ட சென்னை! கடைசி ஓவர் வரை பரபரப்பு

 

சென்னை:8வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 28வது லீக் ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதின. டாசில் வென்ற கொல்கத்தா, முதலில் ஃபீல்டிங் தேர்ந்தெடுத்தது. முதலில் பேட் செய்த சென்னை, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. என்ற எளிதான இலக்கையும் விரட்டி பிடிக்க முடியாத கொல்கத்தா 2 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையிடம் தோல்வியடைந்தது.

 

 

 முன்னதாக, சென்னை அணி கடந்த போட்டியில் ஆடிய வீரர்களுடன் அப்படியே களமிறங்கியது. ஆனால் கொல்கத்தா அணியில் பவுலிங் சர்ச்சையால் முக்கிய வீரர் சுனில் நரைன் கழற்றிவிடப்பட்டார். வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்க்கலும் ஆடவில்லை. அதற்கு பதிலாக பேட்கம்மின்ஸ் மற்றும் பிராட் ஹாக் சேர்க்கப்பட்டனர். 44வயதான ஹாக் ஐபிஎல்லில் விளையாடும் வயது முதிர்ந்த வீரராகும். முதலில் பேட் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. டுபிளெசிஸ் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். ட்வைன் ஸ்மித் 25 ரன்களும், மெக்கல்லம் 19 ரன்களும் எடுத்தனர்.

 

 

 கொல்கத்தா தரப்பில் பியூஷ் சாவ்லா மற்றும் ஆன்ட்ரே ரசல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். எனவே, 135 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு கொல்கத்தா ஆடியது. முதல் ஓவரிலேயே கவுதம் கம்பீர் தான் சந்தித்த முதல் பந்தில் டக் அவுட் ஆனார். ஈஸ்வர் பாண்டே பந்தில், டோணியிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார். ஆனால், மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா சரமாரியாக அடி விளாசினார். அவர் பதினேழே பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் மெக்கல்லத்திடம் கேட்ச் கொடுத்தார். இதன் பிறகு சிஎஸ்கே கை ஓங்கியது. மனிஷ் பாண்டே 15 ரன்கள், சூர்ய குமார் யாதவ் 16 ரன்கள் எடுத்து வெளியேறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யூசுப் பதான் 13 ரன்களிலும், ஆன்ட்ரே ரசல் 4 ரன்களிலும் வெளியேற கொல்கத்தாவின் முதுகெலும்பு உடைபட்டது.

 

 

பேட்கம்மின்ஸ் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 2 பந்துகளை சந்தித்து, பிராவோ பந்து வீச்சில் அடுத்தடுத்து டக் அவுட் ஆகினர். சென்னை ஸ்டேடியம் கைதட்டலால் அதிர்ந்தது. கடைசி இரு ஓவர்களில் வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கைவசம் கொல்கத்தாவிடம் இரு விக்கெட்டுகள் மட்டுமே இருந்தன. ஆஷிஷ் நெக்ரா வீசிய அந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது. உமேஷ் யாதவ் விக்கெட் வீழ்ந்தது. எனவே கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே கொல்கத்தாவிடம் இருந்தது. டென் டஸ்கத்தே, மற்றும் பிராட் ஹாக் களத்தில் இருந்தனர். பிராவோ கடைசி ஓவரை வீசினார். முதல் பந்து ஆப் சைடு பவுண்டரி எல்லையில் நின்ற பீல்டரிடம் சென்றது. ஆனால் டஸ்கத்தே ரன் ஓடவில்லை. ஆனால், அதற்கு அடுத்த இரு பந்துகளுமே டஸ்கத்தே பேட்டில் படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது.

 

இதனால் சென்னை ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், 4வது பந்தை சிக்சருக்கு தூக்கி ஷாக் கொடுத்தார் டஸ்கத்தே. எனவே கடைசி இரு பந்துகளில் 11 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 5வது பந்தில் டஸ்கத்தே பவுண்டரி அடித்தார். எனவே கடைசி பந்தில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தில் டஸ்கத்தே சிக்சர் அடித்தால், சூப்பர் ஓவரில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும் என்பதால் ரசிகர்கள் நகம் கடித்தனர்.

 

ஆனால் அந்த பந்தில் நான்கு ரன்கள் கிடைத்தன. எனவே 2 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி வாகை சூடியது. சென்னை தரப்பில் பிராவோ அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சென்னை அணி சிறப்பான பவுலிங் மற்றும், ஃபீல்டிங் காரணமாக, சிறு ஸ்கோரையும் கொல்கத்தாவை அடிக்கவிடாமல் வெற்றியை பறித்துவிட்டது. முதலில் கொல்கத்தாவை கொக்கரிக்கவிட்ட சென்னை பிறகு கொத்துக்கறி போட்டு வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், ராஜஸ்தான் ராயல்ஸை கீழே இறக்கி, புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது சென்னை.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-daily-guide-match-28-chennai-super-kings-vs-kolkata-knight-riders-225634.html

  • தொடங்கியவர்

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்விக்கு எங்கள் அணியில் உள்ள முன்வரிசை பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டமே காரணம் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் ஜார்ஜ் பெய்லி குற்றம்சாட்டியுள்ளார்.

 

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை தோற்கடித்தது சன்ரைஸர்ஸ். இந்த ஆட்டத்துப் பிறகு பேசிய பஞ்சாப் கேப்டன் பெய்லி, “எங்கள் அணியின் முன்வரிசை பேட்ஸ்மேன்கள் மீண்டும் சரியாக விளையாடாததால் தோல்வி கண்டிருக்கிறோம்.

 

இந்தத் தோல் விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். எங்கள் பேட்ஸ்மேன் கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடுவது அவசியம். ஆனால் அது அமையவில்லை. 151 ரன்கள் என்ற இலக்கு எட்டக்கூடியதுதான். ஆனால் முன்வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடாததால் வெற்றி பெற முடியவில்லை.

 

அதேநேரத்தில் எங்களின் பவுலிங் சிறப்பாக அமைந்தது. அதனால்தான் சன்ரைஸர்ஸை 150 ரன்களுக்கு சுருட்ட முடிந்தது. சரியான பந்துவீச்சு கூட்டணியை அமைக்க முயற்சிக்கிறோம்.

 

சந்தீப் சர்மா, அனுரீத் சிங் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் கடைசிக்கட்ட ஓவர்களிலும் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்” என்றார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/article7153599.ece

 

 

 

  • தொடங்கியவர்

சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் காயம்.. கை விரல்களில் தையல்..சென்னைக்கு பின்னடைவு!

 

சென்னை: சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு கை விரல்களில் காயம் ஏற்பட்டுள்ளதால், அடுத்த இரண்டு போட்டிகளில் சென்னை அணிக்காக அஸ்வின் விளையாட மாட்டார். சென்னை சேப்பக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி வீரர் ராபின் உத்தப்பா, மணிஷ் பாண்டே ஆகியோரின் விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தி சென்னைக்கு முக்கிய நேரத்தில் பிரேக்குகள் கொடுத்தார்.

 

இந்நிலையில், பீல்டிங்கின் போது அஸ்வினுக்கு கை விரல்களில் காயம் ஏற்பட்டது. நடுவிரலில் சதைகள் கிழிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து களத்தில் இருந்து வெளியேறிய அவர், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கைவிரல்களில் தையல் போடப்பட்டது. காயம் காரணமாக அவருக்கு இரண்டு போட்டிகளில் ஓய்வளிக்க சென்னை அணி முடிவெடுத்துள்ளது. சென்னை அணி நாளை மீண்டும் கொல்கத்தா அணியையும் மே 2ம் தேதி ஹைதரபாத் அணியையும் எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-injured-r-ashwin-for-2-csk-matches-225717.html

  • தொடங்கியவர்

ஐபிஎல் போட்டிகளில் "ஆப் ஸ்பின்" போட சுனில் நரீனுக்குத் தடை!

 

கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சாளர் சுனில் நரீன், ஐபிஎல் போட்டிகளில் ஆப் ஸ்பின் பந்து வீச்சை மேற்கொள்ள பிசிசிஐ தடை விதித்துள்ளது. இருப்பினும் நக்கிள் மற்றும் ஸ்டிரெய்ட் பந்து வீச்சை (the knuckle ball and the quicker straight ball) அவர் தொடரலாம். அவரது ஆப் ஸ்பின் பந்து வீச்சானது விதிமுறைக்குப் புறம்பாக இருப்பதால் அந்தப் பந்து வீச்சைத் தொடர நரீனுக்குத் தடை விதிக்கப்படுவதாக கூறியுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். இதை அவர் மீறினால் அது நோ பால் ஆக அறிவிக்கப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிசிசிஐ எச்சரித்துள்ளது.

 

 இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஐபிஎல்லின் சந்தேகத்துக்குரிய, சட்டவிரோத பந்து வீச்சு கொள்கை வகுப்பின்படி, ஐபிஎல் கமிட்டியானது கீழ்க்கண்ட முடிவுகளுக்கு வந்துள்ளது. சுனில் நரீனின் ஆப் ஸ்பின் பந்து வீச்சானது, பிசிசிஐ கிரிக்கெட் சட்டத்தின் 24.2 பிரிவின் கீழ் முரண்பட்டதாக உள்ளது. எனவே அவர் ஆப் ஸ்பின் முறையில் பந்து வீச தடை விதிக்கப்படுகிறது. ஐபில் உள்பட பிசிசிஐ நடத்தும் அனைத்து வகையான போட்டிகளிலும் அவர் ஆப் ஸ்பின் வீச தடை விதிக்கப்படுகிறது. இருப்பினும் நக்கிள் மற்றும் குவிக்கர் ஸ்டிரெய்ட் பந்து வீச்சை அவர் தொடரலாம்.

 

நரீன் மீண்டும் ஆப் ஸ்பின்னை தொடர்ந்தால், அவரது பந்தை நோ பால் ஆக நடுவர்கள் அறிவிப்பார்கள். மேலும் அவர் குறித்த அறிக்கையையும் நடுவர்கள் தர அறிவுத்தப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட பந்து வீச்சை அவர் தொடர்ந்தால் தானாகவே அவர் போட்டித் தொடரிலிருந்து சஸ்பெண்ட் ஆகி விடுவார் என்று அவர் கூறியுள்ளார். ஏப்ரல் 22ம் தேதி சுனில் நரீன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கலந்து கொண்டு பந்து வீசியிருந்தார். அப்போட்டியில் அவரது பந்து வீச்சு சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக நடுவர்கள் அறிக்கை அளித்தனர். இதைத் தொடர்ந்து சுனில் நரீன், சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா ஆர்த்திரோஸ்கோப்பி மற்றும் விளையாட்டு அறிவியல் மையத்திற்கு அனுப்பப்பட்டு பயோமெக்கானிக்கல் ஆய்வு முறையில் அவரது பந்து வீச்சு ஆராயப்பட்டது.

 

இங்கு தரப்பட்ட ஆய்வறிக்கை மற்றும் சம்பந்தப்பட்ட போட்டியில் அவர் பந்து வீசியது ஆகியவற்றை ஆராய்ந்த பின்னர் தற்போது ஆப் ஸ்பின் மட்டும் வீச சுனில் நரீனுக்கு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டே நரீன் பந்து வீச்சில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சாம்பியன்ஸ் லீக் டுவென்டி 20 போட்டியில் பந்து வீச தடை விதிக்கப்பட்டார். இதையடுத்து உலகக் கோப்பைத் தொடரில் சுனில் நரீன் பங்கேற்கவில்லை. விலகிக் கொண்டார்.

 

ஐபிஎல் தொடரிலும் அவர் பங்கேற்க ஆரம்பத்தில் பிசிசிஐ ஆட்சேபித்து வந்தது. பின்னர் சென்னையில் பந்து வீசி தன்னை நிரூபித்த பின்னர் நரீன் கலந்து கொள்ள அனுமதி கிடைத்தது. ஆனால் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நரீன். நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் சுனில் நரீன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/kkr-s-sunil-narine-banned-from-bowling-off-spin-ipl-2015-225725.html

  • தொடங்கியவர்

நல்ல பீல்டிங், நல்ல பவுலிங்: சென்னை வீரர்களுக்கு தோனி பாராட்டு

.

சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தி 12 புள்ளிகளுடன் ராஜஸ்தானை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது.

 

வலுவான அதிரடி சென்னை சூப்பர் கிங்ஸை 134 ரன்களுக்கு மட்டுப்படுத்திய பிறகே கொல்கத்தா தோற்கும் வேலைக்கே அங்கு இடமில்லை. அதுவும் 5 ஓவர்களில் 52/1 என்ற நிலையிலிருந்து மோசமான ஷாட் தேர்வு, சென்னை அணியின் பீல்டிங் மற்றும் பவுலிங்கினால் 9 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்து 2 ரன்களில் தோல்வி கண்டது

 

பேட்டிங்கில் சோடை போனாலும், பவுலிங், மற்றும் பீல்டிங் மூலம் மீண்டும் ஆட்டத்துக்குள் வந்தோம். சில வேளைகளில் ரெய்னா பந்து வீச்சிலும் எங்களுக்காக நன்றாக வீசினார்.

 

அவர் பந்தின் தையலை நன்றாகப் பயன்படுத்துகிறார், பேட்ஸ்மென்கள் தவறு செய்தால் விக்கெட்டுகளைக் கைப்பற்றக் கூடியவர் ரெய்னா. நாங்கள் 2 கேட்ச்களை கோட்டை விட்டோம், ஆனால் மொத்தமாக பீல்டிங் அருமை. ரஸலின் ரன் அவுட் எங்களுக்கு மிக முக்கியமாக அமைந்த்து.

 

கடைசியில் வேகப்பந்து வீச்சாளர்கள் சோபிக்காமல் போனால் என்ன செய்வதென்று ஜடேஜாவுக்கு ஒரு ஓவரை மீதம் வைத்திருந்தேன். அவரது 3 ஓவர்கள் மிக முக்கியமாக அமைந்தது. பிரெண்டம் மெக்கல்லம், பீல்டிங்கில் பொறிபறந்தது. நடு ஓவர்களில் அவர்களுக்கு நெருக்கடி கொடுத்தோம் இதனால் அவர்களால் ஸ்ட்ரைக்கை ஒருவரிடமிருந்து ஒருவருக்கு எளிதாகக் கொண்டு வர முடியவில்லை.

சில போட்டிகளில் தோல்வி ஏற்பட்டாலும், நன்றாக விளையாடுவது அவசியம். அதாவது 80% ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டும், இது ஒரு அருமையான வெற்றி” என்றார் கேப்டன் தோனி.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் இப்போது தங்கள் மண்ணில் 9 போட்டிகளை தொடர்ச்சியாக வென்றுள்ளது.

 

இலக்கை துரத்திய கொல்கத்தா அணியின் மோசமான பேட்டிங்

கோல்கத்தா இலக்கை துரத்தும் போது ராபின் உத்தப்பா மிக அருமையாக விளையாடினார். அவரது 16 பந்து 39 ரன்கள் கொல்கத்தாவுக்கு வெற்றியைப் பெற்று தந்திருக்கும். ஆனால் அஸ்வின், உத்தப்பா, மற்றும் மணீஷ் பாண்டே ஆகிய இருவரையும் வீழ்த்தினார். மணீஷ் பாண்டேயிற்கு தோனி ஒரு வாய்ப்பை ஏற்கெனவே கோட்டை விட்டிருந்தார். இதனை பாண்டே சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை.

 

ஜடேஜா, ரெய்னா பந்துவீசி 4 ஓவர்களில் 12 ரன்களையே விட்டுக் கொடுத்தனர். 13-வது ஓவரில் மோஹித் சர்மா வீச வந்தார். சூரியகுமார் யாதவுக்கு பிராவோ மிக அருமையான கேட்ச் ஒன்றை பிடித்து வெளியேற்றினார். 7-வது ஓவரில் அடிக்கப்பட்ட பவுண்டரிக்குப் பிறகு 19-வது ஓவரில்தான் பவுண்டரியே வந்தது.

டிவைன் பிராவோ, ஸ்பின்னர்களை விடவும் மெதுவாக வீசி விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். யூசுப் பத்தான் இறங்கும் போது 74 பந்துகளில் 67 ரன்கள் தேவை என்ற நிலை அவர் 18 பந்துகளை சாப்பிட்டு 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த பிறகு 28 பந்துகளில் 44 ரன்கள் என்று ஆனது.

 

கொல்கத்தாவின் ஒரே நம்பிக்கை ஆந்த்ரே ரசல்தான். ஆனால் அவரை 2-வது ரன்னுக்கு அழைத்து டென் டஸ்சாதே தவறு செய்ய ரசல் ரன் அவுட் ஆனார். டென் டஸ்சாதே தன் விக்கெட்டை தியாகம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் கூலாக இருந்தார். பிராவோவின் ஏறக்குறைய உருளும் ஸ்லோ பந்துகளும் ஆஷிஷ் நெஹ்ராவின் துல்லியமான யார்க்கர்களும் சென்னைக்கு வெற்றி தேடி தந்தன.

 

கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் பிராவோ வீசிய அருமையான பந்தினாலும் டஸ்சாதேயின் தாறுமாறான சுழற்றலாஉம் முதல் 3 பந்துகளில் ரன் எதுவும் வரவில்லை. பிறகு 4-வது பந்தில் சிக்ஸ், 5,6 வது பந்துகளில் பவுண்டரிகளை அடித்து 38 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். முதல் 3 பந்துகளில் ரன் இல்லாததால் கொல்கத்தா தோல்வி அடைந்தது. அஸ்வின் 2 ஓவர்கள் 5 ரன்கள் 2 விக்கெட். பிராவோ 22 ரன்களுக்கு 3 விக்கெட்.

 

பிராவோ ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக சாவ்லா, ஹாக், ரஸல் ஆகியோரது பந்து வீச்சுக்கு சென்னை அணி கட்டுப்பட்டு 134 ரன்களையே எடுத்தது. டு பிளெஸ்ஸிஸ் அதிகபட்சமாக 29 ரன்களையும், ஸ்மித் 25 ரன்களையும், மெக்கல்லம் 19 ரன்களையும், எடுக்க ரெய்னா 17 ரன்னில் அவுட் ஆனார். தோனி மீண்டும் ஒரு சொதப்பல் ஆட்டம் ஆடி 6 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/article7154175.ece

 

  • தொடங்கியவர்

பெங்களூரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸுக்கு பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான்?
 

 

பெங்களூரில் இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸும், ராஜஸ்தான் ராயல்ஸும் மோதுகின்றன.

இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகளைப் பதிவு செய்திருந்தாலும், அகமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது ராஜஸ்தான். அதனால் இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணிக்கு ராஜஸ்தான் பதிலடி கொடுக்குமா அல்லது இந்த முறையும் பெங்களூர் அணியே ஆதிக்கம் செலுத்துமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் பெங்களூர் அணி தனது சொந்த மண்ணில் இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளதால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே இந்த முறை வெற்றி பெற முயற்சிக்கும்.

 

 

 

நம்பிக்கை நாயகன் ரஹானே

ராஜஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் அஜிங்க்ய ரஹானேவும், பார்மில் இருக்கும் ஸ்டீவன் ஸ்மித்தும் சிறப்பாக ஆடும்பட்சத்தில் அந்த அணி நல்ல ஸ்கோரை குவிக்க வாய்ப்புள்ளது. ரஹானே 323 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இவர்கள் தவிர கேப்டன் வாட்சன், தீபக் ஹூடா, ஸ்டூவர்ட் பின்னி, ஜேம்ஸ் ஃபாக்னர் ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர்.

வேகப்பந்து வீச்சில் கிறிஸ் மோரிஸ், ஜேம்ஸ் ஃபாக்னர், ஸ்டூவர்ட் பின்னி, வாட்சன் ஆகி யோரை நம்பியுள்ளது ராஜஸ்தான். சுழற்பந்து வீச்சில் பிரவீண் டாம்பே நம்பிக்கையளிக்கிறார். 43 வயதான டாம்பே, இதுவரை 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் பெங்களூர் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார் என நம்பலாம்.

 

 

பலம் வாய்ந்த பேட்டிங்

இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்களூர் அணி 3-ல் வெற்றி கண்டுள்ளது. ஆனால் உள்ளூர் மைதானத்தில் ஒரு வெற்றி யைக்கூட சுவைக்கவில்லை. அதனால் இந்த ஆட்டத்தில் சிறப் பாக ஆட முயற்சிக்கும். டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ள பெங்களூர் இந்த ஆட்டத்தை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் என நம்பலாம்.

பெங்களூர் அணியில் கிறிஸ் கெயில், கேப்டன் கோலி, டிவில்லியர்ஸ், மன்தீப் சிங், தினேஷ் கார்த்திக், டேவிட் வியெஸ் என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். கோலியும், கெயிலும் டெல்லிக்கு எதிராக ஆடியதைப் போலவே இந்த முறையும் நல்ல தொடக்கம் ஏற்படுத்திக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

 

மிரட்டும் ஸ்டார்க்

மிட்செல் ஸ்டார்க்கின் வருகைக்குப் பிறகு பெங்களூர் அணியின் பந்துவீச்சு பலம் பெற்றுள்ளது. டெல்லி அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாக இருந்த ஸ்டார்க், ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் அச்சுறுத்தலாக இருப்பார் என நம்பலாம். ஸ்டார்க்கிற்கு பக்கபலமாக வருண் ஆரோன், டேவிட் வியெஸ் பந்துவீசி வருகின்றனர். சுழற்பந்து வீச்சில் இக்பால் அப்துல்லாவை நம்பி யுள்ளது பெங்களூர்.

 

இதுவரை…

இவ்விரு அணிகளும் இதுவரை 14 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி, தலா 7 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article7153594.ece?widget-art=four-all

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமையாகப் பிடித்தார்.. அவரது கண்ணில் ஒரு வெறி தெரிந்தது.. :huh: பிடியை கோட்டை விட்டால் அடுத்தமுறை ஏலத்தில் பிரச்சினை வருமே என்கிற ஏக்கமும் தெரிந்தது.. :D

  • தொடங்கியவர்

அருமையாகப் பிடித்தார்.. அவரது கண்ணில் ஒரு வெறி தெரிந்தது.. :huh: பிடியை கோட்டை விட்டால் அடுத்தமுறை ஏலத்தில் பிரச்சினை வருமே என்கிற ஏக்கமும் தெரிந்தது.. :D

 

உங்களது பிரச்சனை எப்போதும் ஏலம், காசு என்பதிலேயே இருக்கு. :icon_mrgreen::lol: பிராவோ மாதிரி வீரரை அவ்வளவு சுலபமாக சென்னை விடாது

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது பிரச்சனை எப்போதும் ஏலம், காசு என்பதிலேயே இருக்கு. :icon_mrgreen::lol: பிராவோ மாதிரி வீரரை அவ்வளவு சுலபமாக சென்னை விடாது

என்ன இப்பிடி சிம்பிளா சொல்லிட்டீங்கள். :huh:

சுத்திச் சுத்தி வந்து பார்த்தாலும் கடைசியில் பணம் என்பதில்தான் வந்து நிற்கும். திறைமையாக இருந்த மேற்கிந்தியத் தீவுகளின் அன்றைய அணியில் அவ்வளவு காசு இல்லை. அதனால் அமெரிக்காவில் கூடைப்பந்தில் நல்ல காசு என்றதும் இளைஞர்கள் அங்கு பறந்துவிட்டார்கள். இப்போது ராம்டின், பிராவோக்கள்தான் கதி. :o

பணம் பாதாளம்வரை பாயும். :D

  • தொடங்கியவர்

என்ன இப்பிடி சிம்பிளா சொல்லிட்டீங்கள். :huh:

சுத்திச் சுத்தி வந்து பார்த்தாலும் கடைசியில் பணம் என்பதில்தான் வந்து நிற்கும். திறைமையாக இருந்த மேற்கிந்தியத் தீவுகளின் அன்றைய அணியில் அவ்வளவு காசு இல்லை. அதனால் அமெரிக்காவில் கூடைப்பந்தில் நல்ல காசு என்றதும் இளைஞர்கள் அங்கு பறந்துவிட்டார்கள். இப்போது ராம்டின், பிராவோக்கள்தான் கதி. :o

பணம் பாதாளம்வரை பாயும். :D

 

உண்மைதான் :D  ஆனால் ஏதோ IPL இல் காசு, அதனால் தான் திறமையாக விளையாடுகிறார்கள் என்றும் சிலர் கருதுகிறார்கள் :)

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட்: பெங்களூரு அணி பேட்டிங்

 

பெங்களூரு: பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 29வது லீக் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் இந்த போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1241873

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட்: ராஜஸ்தான் அணிக்கு இலக்கு 201 ரன்கள்

 

பெங்களூரு: பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 29வது லீக் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் இந்த போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்துள்ளது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1241885

 

 


10.45pm The groundsmen and super-soppers are at work since the rain has subsided a bit. There are lots of water puddles as the poncho-clad groundsmen struggle to clear it away.


மழையால் போட்டி தடைப்பட்டுள்ளது

 

 

  • தொடங்கியவர்

தொடர்ந்து மழை பெய்வதால் போட்டி கைவிடபட்டது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.