Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் இயக்க உறுப்பினர்களுக்கு தொழில் வாய்ப்புத் திட்டமொன்று அவசியம்: - டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Duglasdevanantha-200-seithy-news.jpg

புலிகள் இயக்கம் உள்ளிட்ட ஏனைய தமிழ் இயக்கங்களின் முன்னாள் உறுப்பினர்கள் நலன்கருதி தொழில்வாய்ப்புத் திட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் தான் கடந்த அரசுகளிடமும் கோரிக்கைகளை முன்வைத்திருந்ததாகவும், எமது மக்கள் நலன்கருதிய திட்டங்களை முன்னெடுப்பதற்கு தடையாக இருந்துவரும் சுயலாப தமிழ்த் தலைமைகளின் செயற்பாடுகள் காரணமாகவே இத்திட்டமும் செயல்வடிவம் பெறாமல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

   

தமிழ் இயக்கங்களில் ஆரம்பந்தொட்டே தங்களை இணைத்துக் கொண்டிருந்த பல உறுப்பினர்கள், உரிய கல்வித்தகைமைகள் உட்பட ஏனைய தகைமைகளைக் கொண்டிராத நிலையில் காணப்படுகின்றனர். அதேநேரம், பல்வேறு தொழில் ரீதியிலான திறமைகளை கொண்டவர்களும், இவர்களில் உள்ளனர் எனவே, உரியவர்களை இனங்கண்டு இவர்களுக்கு ஏற்ற வகையிலான தொழில்வாய்ப்புக்களையும் அல்லது சுயதொழில் வாய்ப்புக்களையும் உரிய தொழிற் பயிற்சிகளையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வித வருமான வழிகளும் இல்லாத நிலையில் மேற்படி உறுப்பினர்களும், அவர்களது குடும்பங்களும் பல்வேறு துன்ப துயரங்களை அனுபவித்து வருவதையும், கடந்த காலங்களில் தன்னால் இயன்றளவில் இவர்களில் பலருக்கு உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் அவர்கள், திட்டமிடப்பட்ட பொறிமுறையொன்றின் ஊடாக இவர்கள் தொழில் முயற்சிகளுக்குள் உள்வாங்கப்படுவது அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

http://seithy.com/breifNews.php?newsID=126682&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை காட்டிக்கொடுத்து கதிரை ஏறி பிழைத்தீர். இப்ப கூட்டுச்சேர்த்து உழைக்கப்பாக்கிறீர். நல்ல பிழைப்பு.

உழைத்து பிழையும். தெரியும் அருமை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.