Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதை அந்தாதி

Featured Replies

மறக்க நினைக்கிறேன்

மாதவள் புன்சிரிப்பை..

மறக்க நினைக்கிறேன்

மங்கையவள் கண்ணழகை

மறக்க நினைக்கிறேன்

மாங்குயிலாள் தேன்குரலை

மறக்க நினைக்கிறேன்

மெல்லியலாள் கொடியிடையை

மறக்க நினைக்கிறேன்

கன்னியவள் கருங்கூந்தல்

மறக்க நினைக்கிறேன்

பேதைமகள் காதலதை..

ஏழைமகன் மறந்திட

காலத்தாலும் முடியாமல்..

கவலைகளும் முடியாமல்..

நினைவில்க் கரைந்துகொண்டு..

சபேசன் அண்ணா..

நீங்கள் சொன்னதுதான் சரி..விழைகிறேன் என்றுதான் வரும்..

ஆனாலும் விமர்சனங்களைத்தவிர்க்க நினைக்கிறேன் என்று மாற்றிவிட்டேன்.

நன்றி

Edited by vikadakavi

  • Replies 1.9k
  • Views 182k
  • Created
  • Last Reply

விழைகிறேனா அல்லது விளைகிறேனா?

பல இடங்களில் இரு மாதிரியும் எழுதி வைத்திருக்கிறார்கள்.

எனக்கு உறுதியாக தெரியவில்லை.

நான் "விழைகிறேன்" என்றுதான் எழுதியிருப்பேன்.

பயிர் விளைவதும் இதுவும் ஒன்றா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும்.

Edited by சபேசன்

பேதைமகள்

உனை எண்ணி

பேதலித்து போன காலம்

இன்று நினைகையிலும்

என் மனசு

நோகுமடி....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோகுமடி உன் இதயம் என்று தெரிந்தே

நோக விட்டது அது என் தவறு

நோய் நீக்கும் மருந்தாய்

நோக்கி என்னை ஒருமுறை நோக்கு

நோக்காமல் விட்டால் வருவேன் நானும்

நோக்கியா கொண்டுவந்து தருவேன்

தருவேன் என்று

சொல்லி

தராமல்ப்போன

நோக்கியாவை

நோக்கி...

நோக்கி...

ஏங்கிக் கிடக்கிறேன்..

வெறும் நோக்கியா

போதுமடி..ஸிம்

நானே போடுகிறேன்..

டொப்அப்

மட்டும்

நீ செய்துவிடு :blink::(

(ஆங்கில வார்த்தைகளுக்காக மன்னிக்கவும்.இந்த ஒன்றை மட்டும்..)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீயா சொன்னது நீதானா

நிலாவினை பார்த்து ரசித்தநேரமதில்

நிலாவைப்போல் முகம் என்றே

நெஞ்சுருக சொட்ட சொட்ட

நின் கவி தேனமுதமாய்

நினைந்திருந்த வேளைதனில்

நின்று நிதானித்து நிதர்சனமாய்

நிலவிலும் களங்கம் உண்டு என்றே

நிலாப்பெண்ணான என்னை

உதாசீனம் செய்ததும் ஏனோ

ஏனோ என்

தமிழச்சி வாழ்க்கை

கண்ணீரானது..

இவள் ஈழத்தில்

பிறந்தது யாரால்

சாபமானது..

மனிதப்பிறவிகள்

எடுப்பது உலகை

இரசிக்கத்தானே..

இவள் பிறவி

எடுத்தது உலகமிவள்

துயரை இரசிக்கத்தானோ..

வேதனையும் சோதனையும்

விரட்டுதம்மா தாயே...

யாருக்கும் இரக்கமில்லையா..

இறைவனும்

இங்கு இல்லையா

அழகாய்ப் பிறந்த

பெண்ணேன்-இன்று

அழுக்கு சூழக்கிடக்கிறாள்

இவள் அழுதபோது

துடிக்க அண்ணன்

தம்பி எங்கே..

விழிநீரை

விரல்கள் துடைக்க

உண்மை உறவு

இல்லை இங்கே..

ஏனோ என்

தமிழச்சி வாழ்க்கை

கண்ணீரானது..

இவள் ஈழத்தில்

பிறந்தது யாரால்

சாபமானது..

Edited by vikadakavi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் இருந்திருந்தால் இதயத்தில்

ஈரமுள்ளவளாய் இருந்திருப்பேன்

அகதியாய் வந்ததால் இங்கே

அகதிப் பணத்தை

அனுபவத்து அனுபவித்து

அனாதையாய் ஆதரவற்றுப் போனேன்

கையில்ல பணம் சேர்ந்த போதே

கூடி வந்த சொந்தங்களும் ஆதரவாய்

கை கொடுக்குமிங்கே வாழ்க்கையிலே

வாழக்கையிலே வரவுமுண்டு செலவுமுண்டு..

வந்த சொந்தம் வரவு..வரவிடு..

போன சொந்தம் செலவு

போகட்டும் விடு..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொந்தம் என்று சொல்ல

சொந்தமாய் ஒரு நாடில்லாமலே

அகதியாய் வந்த நாட்டையே

சொந்தம் கொண்டாடி

சொந்தநாடாக மனிதினில்

சொந்தமாக்கிய வாழ்க்கையில்

சொர்க்கமாய் காரும் பணம் என்றே

சொர்க்கமாய் வாழ்ந்தென்ன

சொந்தமாய் வாழ தமிழனுக்கு

சொந்தமாய் நாடு இல்லையே

இல்லையே..என்ற

சொல்லேனும்

எஞ்சி இருக்கிறதே..

என்பதுபோல்

மகிந்தாவின்

நாடகத்தில்

மெய் மறந்த உலகே..

தமிழனுக்கு எதுவும்

இல்லைத்தான்.

ஆனால் உனக்கு

கண் இருக்கிறதா..

கருணை இருக்கிறதே..

பகுத்தறிவேனும் இருக்கிறதா..

இருந்திருந்தால்தான்..

எங்கள் இழப்புகளை

நீ

இல்லாது செய்திருப்பாயே..

எங்கள் இருப்புகளை

நீ

உறுதி செய்திருப்பாயே..

உன் போலித்தனத்திற்கும்..

மகிந்தவின்

போக்கிரித்தனத்திற்கும்.

தமிழன் உயிர்

கூட்டங் கூட்டமாய்..

பலி கொடுக்கப்படுகிறதே..

இவர்கள்

அக்கிரமம்

பொறுக்காமல்தாளோ

புத்தனும் எப்போதும்

கண்மூடி இருக்கிறான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருணை உள்ளத்துடன்

காலமெல்லாம் சேவை செய்திட

கன்னியொருத்தி கிடைத்துவிடின்

காளையருக்கோ மகிழ்ச்சி

வெள்ளம்

வெள்ளம் கண்டு தோணி விடுவோம்

சின்னஞ் சிறுவயதில் -இன்று

வீட்டைக்கொண்டு வெள்ளம் போனதே..

எங்கே சொல்லுவது..

அலையின் நுரையில் காலை நனைப்போம்

ஆசை மேவிக்கொண்டு-எம்மை

மேவி கடலே போனதே..

யாரைக் கேட்டுக்கொண்டு...

கோடைவெயிலில் சிறுகாற்றுக் கேட்டு

கூரையில் ஜன்னல் வைத்தோம்..பெருஞ்

சூறைக்காற்றில் கூரை போனதே..

பாட்டியைக் கூட்டிக்கொண்டு...

கூதல் என்று போர்வை தேடினோம்..

மலையில் நம் வீடு..-எரி

மலைவெடித்து நெருப்புக்குழம்பு

ஓடுது மலையை மூடிக்கொண்டு..

மலர்களைப் படைத்தாய் ஆண்டவா..

மணமாலைக்கு என்றிருந்தோம்..-அது

பிணத்துக்கு மாலை ஆவதே

வாழ்வின் அர்த்தங்கள் என அறிந்துகொண்டோம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அர்த்தங்கள் ஆயிரம் சொன்னாய்

கர்ச்சீக்கும் மனதை அறியாமலே

மீறிடும் வார்த்தைகள்

ஏர் போட்டு உழுதிட இது

வயற்காணி அல்ல என்றபோதும்

தர்க்கம் வேண்டாம் என்றாய்

வர்க்கம் அதுவே தடை என்றே

பிரிந்தாய்

பிரிந்தாய் இளம்

பாவை எனை விட்டு

மறந்தாய் என் மழலை

மொழி கேட்காமல்

பறந்தாய் வானில்

பாவி எனை அழவைத்து

தகுமா இது உனக்கு

தங்கமே பதில்சொல்

பதில் சொல்லமுடியாது தோழி-சிலர்

பார்வைக்குத்தான் அப்பாவி

பனிக்கின்ற காதலைத்தோழி- உன்

பகட்டுக்கு தரமாட்டேன் போ நீ

பல சொல்லிப்பார்த்தேனே தோழி - கோடிப்

பணத்தாலே வளர்ந்திட்ட பூ நீ

பரிகாசம் செய்தாயே தோழி -நான்

படுஏழை மறந்தாயோ நீ

பழசெல்லாம் நினைத்தேனே தோழி - என்றும்

பொறுந்தாது நம் வாழ்வு போ நீ..

தங்கமே பதி சொல்

தாமதம்

இன்னும் ஏன்....??

காலக் கெடு முடிந்திற்று

காணவில்லை உன் பதில்

இன்னும் என்ன தயக்கம்...???

எத்தனை நாள்

மௌனித்து

என்னை

நீ சாகடிப்பாய்...??

இன்னும்

என்ன யோசிக்pன்றாய்...??

சத்தியமாய் சொல்கின்றேன்

உன் கருணை வாக்களிப்பு

கண்டிப்பாய்

எனக்கு வேண்டாம்...

உந்தன் நிஜ வாக்களிப்பு

நிஜச்சயம் எனக்கு வேண்டும்...

சிந்தித்தொரு பதில் சொல்

தாமதிக்காதே...

நம் வாழ்வு

நமக்கானது

உனக்கு மட்டும்

ஏனது விலக்கானது...???

நாடென்கிறாய்

சமுகம் என்கிறாய்

மனிதம் என்கிறாய்

இத்தனை கூப்பாடு

ஏதற்காய் போடுகின்றாய்...???

அயல் வீட்டீல்

ஒருவன் அழுகின்றான்

அங்கமிழந்தொருவன்

துடிக்கின்றான்...

கண்ணிழந்தொருவன்

தன் கடன் செய்ய

முடியா தவிக்கின்றான்...

பாலின்றி பாலகன்

பாலுக்காய் அழுகின்றான்

பாவையொருத்தி

வாழ்விழந்து தவிக்கின்றாள்...

சுடுகின்ற வீதியிலே

சுவடு பதித்தொருவன்

பாதனியின்றி பாவம்

பரிதாயமாய் நடக்கின்றான்...

இருக்க வீடின்றி

இதயமுடைந்தொருவன்

வீதியின் ஓரத்திலே

விழுந்து உறங்குகின்றான்...

இத்தனையும் காணாது

வந்தென்ன இங்கு

முழங்குகின்றாய்....???

மக்களை காக்க

மன்றேர போகின்றாயா....???

ஆட்சியிலேறி

அவரை காப்பாயா....???

வாக்கு வேட்டைக்கு

வாரி இறைக்கின்றீர்

கொணடு வந்து பல

திட்டங்கள் விரிக்கின்றீர்...

அத்தனையும் செய்வோமென்று

அற்புதமாய் முழங்குகின்றீர்

ஓட்டு விழுந்ததும்

ஓடி ஒளிந்திடுவீர்...

எம்மை காப்போமென

வீரப்பா பேசுpகன்றீர்

ஏலம் போகின்ற

ஏமாளி கூட்டங்களா நாம்

ஒன்றும் இல்லை உனக்கு

ஓடிப் போ.....

தாமதிக்காதே..

தாமதிக்காதே..என்று

தலையிலடித்து சொன்னேனே..

என்னவாயிற்று..

உன்னைப் பிடித்தவர்களுக்கும்..

உன் கோழைத்தனமும்

உன் தடுமாற்றமும்

பிடிக்காமல் போகிறதே..

கைநழுவிப்போனவர்கள் போக..

நீ காலாவதியாகிக்

கொண்டிருக்கிறாய் என்பதனை

மறந்துவிட்டாயே..

என்ன எதிர்பார்க்கிறாய்..

ஏன் இப்படி இருக்கிறாய்..

உன் மௌனத்தால்

என்னதான் சாதிப்பாய்..

நீ பேசாமாட்டாய்

எங்களையும் பேசவிடமாட்டாய்

நீ கோழை..

கோழைகள்..

எதனையும் வெல்ல முடியாது..

போடா..போ

உனக்கேது வெற்றி

கனாக்களில் மட்டும்

காலத்தை ஓட்டு..

காகிதத்தில் மட்டும்

உன் காதலைத்தீட்டி..

கொடுத்துவிடாதே.

குப்பையில் போடு..

கொடுத்தால்

கொலைக்குற்றம்

கடித்துக்குதறிவிடுவாள்..

மடையா..

தாழ்வுமனப்பான்மை கொண்ட

தனிப்பிறவியே..

மனதில் உறுதியும்..

இதயத்தூய்மையும்..

இனிய காதலும் எனக்கில்லையோ..

இருந்தால் ஏன்தான்

நீ இப்படி

தயங்கி வாழ்வாய்..

வெட்கமாய் இருக்கிறது..

எனக்குள் ஒருவனாய்

நான் ஒழிந்து

கிடப்பதை எண்ணி

இதயத்தூய்மை

இன்றுனக்கில்லை

அடித்து சொல்வேன்

அட பாவி நீ குள்ளன்...

கல்லான உன் நெஞ்சில்

கனிவு எப்படி வரும்....???

பணிவு எப்படி வரும்..???

பக்குவம் எப்படி வரும்..???

சீர் திருத்த வாதியாம்

சிரிப்பு வருகிறது

யாருக்கின்று உபதேசம்...???

பொல்லெடுத்து அடிக்கின்றாய்

பொறாமை இல்லை என்கின்றாய்

போட..போ..

யாருக்கு கதை விடுகின்றாய்...???

நஞ்சை

நாவில் இருத்தி

நயவஞ்சம் புரிகின்றாய்...

ஊருக்கா வந்தாய்

உபதேசம் சொல்ல

போட....போ...முன்

உன் ஊனத்தைகழுவு....

Edited by vanni mainthan

ஓடிப் போ தேசம் உன்னை அழைக்கிறது..

ஈழம் மலரக் காத்துக் கிடக்கிறது..-நாளை

எம்மண்ணில் கால்கள் பதிக்க உந்தன்..

கால்கள் கூசுமல்லவா..கைகள் நடுங்குமல்லவா..

என்ன நான் செய்தேன் என் மண்ணிற்கென்று

மனச்சாட்சி குடையுமல்லவா..இன்றே

ஓடிப் போ தேசம் உன்னை அழைக்கிறது..

இதுதான் வேளை..இன்றெடு வாளை..

எதிரிக்கு சொல்வோம்..ஓடு -இது..

எங்களின் தேசக் காடு

இரத்தம் கொதிக்குது..நெஞ்சு வெடிக்குது..

எந்தன் தங்கையைக் கெடுப்பான்..-அவன்..

அண்ணனைத் தெருவில் எரிப்பான்..

ஐயோ என்று அம்மா அழ.-என்

அன்னையின் தலையை உடைப்பான்

அவன் வெறியாட்டம்..போடும் என்

வீட்டு விறாந்தையில்.. இன்பங்கள்

கூடிக் கிடந்தோம்..இன்று யாவையும்

கண்முன் இழந்தோம்.அட இன்றே

ஓடிப் போ தேசம் உன்னை அழைக்கிறது..

கோழைகளல்ல கோழைகளல்ல வீரத்தமிழர் நாம்.

அண்ணனை வெட்டிய கைகளைக் கிழித்து

தூர எறிவோம் வா..அவன்..

நுரையீரல் பிழிவோம் வா..

அன்னையை அடித்த துப்பாக்கியால்

அவன் மண்டையுடைப்போம் வா

தங்கையைத்தொட்ட நாயின் தலையை

கொய்து எறிவோம் வா -தமிழா

ஒன்றாய்ச் சேரலாம் விடுதலை இன்றே காணலாம்..

வீரப்புலித்தமிழ் மக்களின் தாகம்

தமிழீழ தாயகம்..தமிழீழ தாயகம்..

விடுதலை விடுதலை

எனறே உலகில்

விடுதலை விடுதலை

என்ற குரல்கள்...

விடாது தொடராய்

விடிவிற்காய் ஒலிக்குது

விரைந்த வருமென்று

விடுதலை எண்ணி

விடமால் ஒலிக்கும்

இந்த குரல்களுக்கென்று

கிடைக்கும் விடுதலை....???

விடுதலை செய்வோம்

எம்முள் இருக்கும்

அழுக்கு எணணங்களை

பேராசைக் கூட்டங்களை..

எரிச்சல்..பொறாமையை

வெறுப்பை..ஏளனத்தை

இன்றே இப்பொழுதே.

விடுதலை செய்வோம்..

இன்றே

இந்த கணமே

உன்னை மறந்திருப்பேன்

இருந்தும்

உன்னை சுமக்கின்றேன்

ஏன்....???

உன்னில்

நான் கொண்ட

காதல் உண்மையடி...

உன்னில்

நான் வைத்த

பாசம் மெய்யடி...

என்னை

நீ

அவமதிப்பதாய்

உன்னை -நீ

அவதமதிக்கிறன்றாய்...??

எத்தனை முறை

என்னi இழித்திருப்பாய்

தீ சொல் கொண்டு

சுட்டிருப்பாய்...

இருந்தும்

உன்னை

நான் நேசிக்கின்றேன்

ஏன்...??

அது தான் காதலடி

புரிந்து கொள்....!!!

புரிந்துகொள் குழந்தாய்

அறிந்தும் அறியாமலும்..

ஆசைப்படுகிறாய்..அது

தப்பொன்று இப்போது

புரிந்துகொள் குழந்தாய்

முட்டாசு முட்டாசென்று

முட்டாள் வியாபாரி

மூடாமல விற்கிறான்..

கெட்ட கிருமியெல்லாம்.

கூடியேறிக் கும்மி

அடிக்குமம்மா..

வேண்டாமடா செல்லம்

வேறு அப்பா

வாங்கித் தருகிறேன்.

சொன்னாலும் கேட்காமல்.

ஏனம்மா அழுகிறாய்..

அப்பா சொன்னால்

புரிந்துகொள் குழந்தாய்

அப்போது அப்பா

சொன்னதும் கேட்கவில்லை

இப்போது அப்பா

சொன்னதும் கேட்கவில்லை

அப்பா சொன்னால் மட்டும் சரியும்

தப்பாய்தான் தெரியுமோ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.