Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

தவறுமோ..

அவள்

தாளநடை..

அதில் நளினமென்ன

நாணமென்ன..

அழகென்ன..

அடக்கமென்ன

துள்ளளென்ன..

துடிப்பென்ன..

குழைவென்ன..

கூத்தென்ன..

ஆனாலும் அவளை

வீட்டுக்கு

அழைத்துவந்தது

அன்னைக்கு விருப்பில்லை..

ரோஸி என நானழைத்தால்..

அன்னையோ..ராணி

என்கிறார்..

மேலைத்தேய நாய்க்குட்டிக்கு

ராணி என்று

ஙாரும் பெயர்

வைப்பார்களா..

  • Replies 1.9k
  • Views 182k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வைப்பார்களா பொன்சேகாவை அவன் இடத்தில்

தைப்பார்களா றம்புக்வெலவின் கெடுநாக்கைத் து

வைப்போமே முகமாலை கோயில் முன்னரணை

கைப்பற்றுமே தமிழ்ப்படை யாழ் மண்ணை..

:P

மண்ணை மறவாமல்..

எந்நாளும் எப்பொழுதும்..

நெஞ்சுருகி..நீர் வழிய..

ஆறுகடல் தாண்டி வந்தும்..

ஏழைநிலை மாறியுந்தான்..

நிம்மதி கொண்டிலேன்..

இன்பமேதுமறியேன்..

என்நிலை துயர்வலை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துயர்வலை கண்டு துவண்டிடும் மலைப்பில்

அன்புவலை கண்டு உருகிடும் அணைப்பில்

காதல்வலையில் சிக்கிடும் பிணைப்பில்

திருமணவலையில் வந்து விழும் இணைப்பில்

மயக்க வலையில் மயங்கிடும் விழி துடிப்பினில்

  • கருத்துக்கள உறவுகள்

துடிப்பினில் விளையுமாம் திருமண பந்தம்

மடிதனில் தனிமையில் தினமொரு சந்தம்

அடித்தது பரிசென துள்ளிடும் மனங்கள்

கடிதென விளங்கும் பிறிதொரு பொழுதில்

:huh:

பொழுது சாய்கையில் நிலவோ கொதிக்குது

பொல்லா நினைவுகள் சிறகை விரிக்குது

புழுதி மண்ணொரு கவிதை படிக்குது

பூவை சிரிப்பொலி புயலை வளர்க்குது

எழுதிப் போனவன் பிரம்மன் ஆனதால்

ஏழை என்விதி ஏளனப்படுகுது

ஏளனமானதென்றே ...

ஏன் அழுகிறாய் சாமி?

படைத்தவன் அவனென்றால்...

பூமியின்.........

பாதத்தின் அடியில் நெருப்பும்...

உச்சந்தலையில் பனியும்

ஏன் படைத்தான்?

இயற்கையின் மாற்றம்...

பிரம்மன் எழுதுகோலில்

மை நிரப்ப உதவியதோ??

அவன் எழுதட்டும்- எழுதட்டும்...

இன்னும் கேட்போம்!

Edited by வர்ணன்

கேட்போம்..நீலக்கடலைகள்

ஆர்ப்பரிக்கும் ஓசை கேட்போம்

நெஞ்சோடு தென்னங்கீற்று

பாடுமொரு கானம் கேட்போம்

சோலைக்குயில் கீதம் கேட்போம்

சோவென்ற மழைஒலி கேட்போம்

மழலை மொழி மயங்கிக் கேட்போம்

மூங்கில் தரும் நாதம் கேட்போம்

ஏழுஸ்வரம் இசையக் கேட்போம்

சில்வண்டு இரையக் கேட்போம்

நாதஸ்வர ஓசை கேட்போம்

மத்தளங்கள் ஒலிக்க கேட்போம்

சலங்கைகள் குதிக்கக்கேட்போம்

ஓடை சலசலக்கும் ஓசை கேட்போம்

பறவைகள் பாடுகின்ற பாடல் கேட்போம்

கேட்க நேரம் வேண்டின்

வேலைக்கு விடுப்புக் கேட்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேட்போம் பாடல்கள் கேட்போம்

அன்றும் இன்றும் என்றும் மயக்கும்

நேரிடை நிகழ்ச்சிதனில்

பாடல்களை

மெய்மறந்து கேட்டு ரசித்திட

ஆவலின் காத்திருப்புக்கள் மனசுக்குள்ளே

மனசுக்குள்ளே வந்த காதல்

மரம் கிளைகள் விடுவது போல்..

நெஞ்சுக்கூட்டில் வியாபித்து

நினைவுகள் அடைத்துப்போய்..

ஊன்றிய வேரில் அன்பே..

என் கல்லறைக்கும் இடமில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடமில்லை என்பதற்காக இறுதிவரை

உன் நினைவுதனை நெஞ்சில் சுமந்து

ஊன் உறக்கம் அனைத்தையும் துறந்து

தெருத் தெருவாய் அலைய நான் என்ன

பெண் தேவதாஸா

தேவதாஸ் பார்வதியை..

அம்பிகாபதி அமராவதியை..

லைலா மஜ்னுவை..

இன்னும் எத்தனை

ஜோடிகளை..

பார்த்து..பார்த்து

படித்தறிந்த பின்புந்தான்

புத்தி வரவில்லையே..

காதலா புத்தி வரவில்லையே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவில்லையே என்று வாசல் வரை

வழிமேல் விழி வைத்து பார்த்திருந்தேன்

வந்தபோது நினைத்துப் பார்க்காத மனம்

வராத போது எங்கே உன் கவிதையென்றே

வசமாகிப்போன கவிதையில் மட்டும்

உன்னை கண் தேடுதே

தேடுதே.. வானம்

ஓடிப்போன நிலாவை

ஒளிந்து கொண்ட

நிலாவுக்கு ஓலை

அனுப்பிப் பார்த்ததாம்

வரமாட்டேன் என்று

வண்ணநிலவு

பதில் அனுப்ப..

வானம் முகம் கறுத்து

முழங்கி

அழுதிட

கரும்பஞ்சு மேகமெல்லாம்.

என்னவோ ஏதோ என்று

முட்டி மோதி

துக்கதினம் அனுஸ்டிக்க

கால்நடையாய் நான்கூட

கருப்புப்குடை கொண்டு

அழைக்கிறேன்..

வெண்ணிலாவே

வெளியே வா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வா என்றவுடன் வந்திடுவேன்

வாசமுள்ள பூக்கள் கொண்டு வந்து

தந்திடுவேன் என்னை நகல் ஒன்று எடுத்திட

பார்த்திடுவாய் நீயும் என்னை விழிகள் பிதுங்கிட

நகல் எடுப்பதற்கு விலை பூக்களா என்றே

அசலாய் தந்திடுவேன் ஒரு பைசா குறையாமலே

குறையாமலே உன் அன்பு

அமுதசுரபியாய் ஓடும்..

குன்றிடாமலே..பரிவில்

பாதி ஜீவன் தேயும்..

நெற்றி வகிட்டில்

முத்தம் ஏற்று

நெஞ்சுக்கூட்டில் வாழும்..

உயிரே..

உன்னையல்லால்

இவ்வுலகில்-வேறு

என்னதான் எனக்கு

வேண்டும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேண்டும் துயர்தனை மறந்து உன் மடிமீது உறங்கிட மடி

வேண்டும் மீண்டும் உன் குழந்தையாய் கவலைதனை தொலைத்து

தோள்மீது கண்ணுறங்கிட வரம் வேண்டும் தாயே

தாயே....

என்னை கருவிலேற்றி

சுமந்த

கற்பக தருவே....

அழுது கேட்டுண்ட - நின்

முலைப்பால்

இறுதிவரையிருக்கும்

இவ் வுயிர் உடலில்

இருப்பிலிருக்கும் வரை..

முதல்

கண் கண்ட தெய்வம் நீ..

சிந்திதால்..

நீயொன்றே

நிஜத்தெய்வம்..

எத்தனை தவம்

செய்யினும்

தலை கீழாய்

நின்றாலும்..

பத்து மாதஞ்சுமந்து

பெற்றெனையெடுத்த

பெருங்கடன் தீருமோ.....?

Edited by kanithan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீருமோ தாகம்

தண்ணீர் பருகியதால் தீர்ந்திடுமோ

வருமோ சமாதானம்

பேசி கிடைத்திடுமோ விடுதலை

தருமோ தாயவள் அன்பு

தனித்திடும் புலத்தினில்

புலத்தினில் புலம்பலென்று - யாழ்க்

களத்தினில் தூயாப்பொம்மி

எழுத்தினில் எண்ணம் படைக்க

இழுக்கினில் உழலும் உள்ளம்

புழுங்கியே சாகக்கண்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்டேன் பழங்குடியை தன்

வாரணப்படைகளோடு வால் இல்லாமல்

குறும்புகள் செய்துவந்த வேளையில் கன்னத்தில்

கணமாய் அடியொன்று கொடுக்க வேண்டும் என்றே

தடியோடு காத்திருந்தபோது அடித்த

கடிகாரம் என் கனவையும் அழித்துவிட்டு போனதே

கனவழித்துப் போனதென்று

கடி காரத்தில் கோபமென்ன?

கன்னக்குழி தோண்டும்

கவி மீது கடுப்பென்ன?

வாரணம் கடப்பதற்கு - அன்று

இராமனுக்குப் பாலமிட்டோம்.

காரணம் தகுமென்றால்

கறுப்பிக்கும் சேவை செய்வோம்.

சேவை செய்வோம் எனத் தினமும்

செருக்காய் உரைப்போரே

செய்துவிட்டுப் பதிவிடலே

செழிப்பு என்பேன் நான் :icon_idea:

செய்வோம் - செந்

தமிழ்க்கோர் அரன்

போர் வலு மிகு...

பெய்வோம்- செந்னீர்

மழையென..

விடுதலை பயிர்

பயனுற....

செல்வோம் - கரும்

புலியென

எதிர் தடையுடைபட...

ஓயோம் - தாய்

நிலத்துயர் -விடை

பெறும்வரை.....

அஞ்சா நெஞ்சுரம்

அண்ணன் படை யிது

பஞ்சே - பகை

படையணி இனி.....!

ஓ... தாமதத்திற்கு வருந்துகிறேன்...

Edited by kanithan

  • கருத்துக்கள உறவுகள்

நான் இனி இரண்டில் எதனில் தொடங்குவேன்

ஊன் இனிக் கொள்ளார் இளையோர் ஏனெனில்

மீன் எனும் விழியாள் கறுப்பியின் இன்னெழில்

மான் இனம் நெகிழும் படியோர் அழகாம்

:P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.