Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

இனி என்ன பேசுவாய் இளம்மானே..

இளவேனில் போனதே பூமானே..

மழை நின்ற பின்னே..அன்பே..

நனைய அழைப்பதுவா காதல்

தூங்கிங் கிடந்தவரைத் தட்டி

தூங்கென்று சொல்லவதா பாசம்..

பசியில் இருக்கமெனை நோக்கி

பல்சுவையைக் காட்டுவதேன் நாளும்..

நடுக்கடல் வந்தவரைத் தோழி

தவிக்கவிடலாமோ தோணி

முத்துமுத்து மாலைகளைக் காட்டி

ஏழை முகத்தினில் ஏக்கம் காணல் நோட்டி ;)

  • Replies 1.9k
  • Views 182k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோட்டி என்று சொல்லியே சேர்த்து விட்டார்கள் பள்ளியில்

விட்டு விடுவேனா விடுகதைகள் நொடுக்குகள் அள்ளி வீசி

படிக்கும் பள்ளியையே குழப்பிவிட்டேனாம் என்றே தள்ளி

விட்டதால் களம் வந்து களமாடி அரட்டை அடிக்கும் கள்ளி

கள்ளிப் பாலூட்டிப்

பெண் சிசுவைக் கொல்வதும்

காதல் நினைவூட்டி

ஆண்மனதைக் கொல்வதும்...

பெண்ணே..

பெண்ணுரிமை கேட்கும்

நீயா செய்கிறாய்..

சொல்..

நிறுத்திவிட்டாயா..

சிசுக்கொலையை..

ம்..

அது ஆங்காங்கே

இருந்துகொண்டுதான்

இருக்கிறது

போகட்டும் விடு

நீக்கமற நிறைந்திருக்கும்

உன் மாயக்கண் காட்டும்

காதல் கொலையை

எப்போது

நிறுத்துவாய்?...

நிறுத்து வாயென்றேன்.... நிசமா நீ கேக்கலையே....

நீசச் சொல்லெடுத்து பாசம் போல் வீசிவிட்டாய்!

ஆசை மனங்கொண்ட ஆகாசக் கோட்டையெல்லாம்

தூசனைக்குள்ளாகி தூசியென ஆனதடி!

Edited by ஆதிவாசி

தூசியென ஆனதடி

தூயவளே உன் காதல்

பாசி போல ஆனதடி

பாவையே உன் காதல்

கொஞ்சி பேசிய காதல்

கொஞ்சமும் இல்லையெ

வஞ்சியே பதில் சொல்

மிஞ்சிய என் காதலுக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதலுக்கு கவிதை அழகு

பெண்ணுக்கு நாணம் அழகு

ஆணுக்கு வீரம் அழகு

குழந்தைக்கு மழலை அழகு

வானுக்கு நிலவு அழகு

கறுப்புக்கு வெள்ளை அழகு

வெள்ளைக்கு கறுப்பு அழகு

மொழிக்கு தமிழ் அழகு

தமிழர்களுக்கு தமிழீழம் அழகு

அழகுக்கு அழகு

சேரக்கும் ஆரணிப்

புடவை கட்டி

தாரணி தங்கையவள்

பூரணி வந்தபோது

பேரணியோ வென்றதொரு

பிரமை எழுந்ததடி..

தாரணிக்கும் சொன்னேன்..

பூரணிக்கும் சொன்னேன்..

உண்டி சுருங்குதல்

பெண்டிற்கு அழகாம்

என்று. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்றும் விடியும் விடியற் பொழுதே

விரைந்து நீயும் வந்துவிடு

இன்றும் மனதை மகிழ்ந்திட

வைக்கும் பாவொன்று படைத்திட

வருவாய் என்றே வாசல்வரை

வழி மேல்விழிதனை வைத்தேனே

தருவாய் என்றே நினைத்தவேலை

வருவாய் ஏதுமில்லாமலே மறைந்தாயே

மறைந்தாயே!

என உனை நோக்கிக் கூறின்

மறையாதோ எந்தன் உயிர்?

மாவீரனே!

இறக்கும்போது நீ மறைவதில்லை

அப்பொழுதுதான் உதிக்கின்றாய்!

உந்தன் உயிரே எம்மக்களின்

ஒளிக் கதிர்!

பகலிலும் முடங்கிய மலர்கள்

உன்னொளியால் இரவிலும் விரிகின்றன.

கதிரவன் கூட மேற்கிலும் கிழக்கிலும்

சுழற்சி முறையிலேயே வேலையைச் செய்கின்றான்

ஆனால் மேற்குலகுச் சூரியன்கள் மெத்தைமேல்

சயனித்திருப்பதால்

உலகெங்கும் நாள்முழுதும்

உன்னொளியின் துணையன்றோ உறுதுணையாய் இருக்கிறது.

எதிரியின் நெருப்பைப் புயலாய் அணைத்து-சுதந்திர

ஏழையின் உறுப்பைத் தென்றலாய் அணைக்கிறாய்.

ஆனால் மேதைகள் சிலர் விசிறிக்கல்லவா

நன்றி சொல்கின்றார்கள்!

மக்களின் தாகத்தை உன் குருதியால்

தீர்க்கின்றாய்.

ஆனால் சிலர்

போதைக்கன்றோ உன் குருதியைக் குடிக்கின்றார்கள்.

தமிழீழப் பயிருக்கு பாயும் உன் உயிர்மழை

களைகளுக்கும் பாய்கிறதே.

அவை பயிரை மேய்கிறதே.

மனம் நொந்து கேட்கிறேன்.

உன் உடையில் இரத்தக்கறை என்பவர்கள் - இவர்

இரத்தத்திலேயே கறையிருப்பதை என்றுணர்வர்?

கல்லறைதாயின் கருவறையில் வாழ்பவர்களை

சில்லறைக்கு சேதப்படுத்துபவர்கள்- இவர்

உடம்பே இவர்களின் கல்லறை என்பதை என்றறிவார்?

மறைந்தும் வாழுமுங்களை குறைபேசித் திரியும்

மறைந்து வாழ்பவர்கள்- இவரைக் கழித்தல்களின் கூட்டல்

என்றுரைப்பதில் ஏதும் தவறுண்டோ?

Edited by Sujeenthan

பாராட்டுகள் சுஜீந்தன்

தவறுண்டோ மம்மி

தங்கமேனி கொண்டேன்..

தளிரென இடையுங் கொண்டேன்

அழகை மறைக்குமாடை

தன்னைக் குறைத்துக்

கொண்டேன்..

அச்சம் எதற்கு..

ஆண்கள் அசடாகி

அலையும்போது..

மடம் எதற்கு

மம்மி

மங்கையர்

உலகவலம் வரும்போது

நாணம் எதற்கு

மம்மி

நங்கையர்

காலடியையே..நம்பி

ஆண்கள் கிடக்கும்போது

பயிர்ப்பு எதற்கு

மம்மி

பகுத்தறிவின் உச்சியில்

பெண் பாடம்

நடத்தும்போது

பெண் பாடம்

நடத்தும்போது

ஆமாம் போடு....இல்லாவிடில்

அடுப்புப்பக்கம் படுக்கையோடு ஓடு! :lol:

துடப்பக்கட்டை எடுத்து மறை! :D

இடக்கை ஒடுக்கி.....

வலக்கை கொண்டு

வாய் மூடு! :lol: :P

வாய் மூடு என்று சொல்லி

வாயிருந்தும் ஊமையாக

வாழும் வாழ்க்கை எதற்கு?

வான விலங்காய் மனிதனும்

வையகத்தில் வாழும் போது

வாய் எதற்கு மொழி பேச?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேச மொழியிருந்தும்

பேசா மடந்தையாய்

பேசும் உன் விழிகள்

பேசுகின்ற மௌனத்தின்

மொழியில்

உனக்குள்ளே தொலையும்

அந்தக் கணப்பொழுதுகள்

வேண்டும் வேண்டும் என்றே

தவிக்கும் மனசின்

காத்திருப்புக்களின் உச்சம்

உச்சம் அடைந்தபின்னும்..

மிச்சமேதும் உள்ளதோ என

அச்சம் கொண்ட பெண்ணாள்

சொச்ச உறை நீக்கி..

இச்சை கலைய..ஈரிதழ்

எச்சை கலந்த நிலை..

பச்சைப் பசுமரத்தாணியடி..

கச்சை இழந்தவனாய்..

பிச்சையென யாசிக்கும்

அச்சோ..காமுக விகாரனாய்..

சீச்சீ விடியலில்

வெட்கமடி வெட்கம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெட்கம் வந்து மனதை

தட்டிவிட்டுப் போகையில்

எட்டிப்போக முடியாமலே

பட்டென்று முகம்

கட்டுக்கடங்காமலே

மண்ணினை நோக்கி

மங்கையரின் வெட்கத்தை

மறைத்திடும் அழகு

கறுப்பிக்கு மட்டுமல்ல

ரணங்கள் கொண்ட மனது

காலங்கள்தான்

எத்துனை ஆனாலும்

கவலைக்கில்லை கட்டுப்பாடு

புரிந்து கொள்வதற்குத்தான்

நமக்கு ஆகுது

பல காலக்கெடு

மனதுக்கும் இல்லை

வேலிக்கோடு

கண்ணாடிதான் நமக்கு

நம்மை நாமே அறியப்

படுத்தும் காயத்தோடு!!

துன்பங்கள் வரின்

புண்படும் மனது

ஆறாத காயங்களோடு

சேர்ந்து பாழ்படும்

புதிய ரணங்கள் சேர்ந்து

தூக்கிப் போட்டு விடு

துன்பத்தை என்று நினைக்கும்

போது தூக்கிப் போட

விடாது துன்பத்தின்

ஆறுதல்கள்!!

ஆம்! - துன்பத்தோடு பழகிவிட்டதால்

எனக்கும் வந்து விட்டது - காதல்

என்ன எதன் மீதா?

துன்பத்தின் மீதுதான்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அந்தாதியில் கவி படைக்க வந்திருக்கும் விஜிவெங்கியை

வரவேற்கிறோம்

இறுதிசொல்லிலே கவிதை ஆரம்பித்தால் கவிதை அந்தாதிக்கு மேலும் அழகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துன்பத்தின் மீதுதான் துவளும் மனதும்

துள்ளும் துணையாய் கவி படைக்க விஜிவெங்கியும்

துணிவுடன் வந்திட்டதால்

துளிதுளியாய் மன சந்தோசங்களும்

வகைவகையாய் மனதினுள் பூத்திடுமே

மனதினில் பூத்திடுமா?

கார்காலம் நடைபயிலும் மார்கழி மாதமிதில்

மத்தாப்புச் சிரிப்புடனே ஓய்வுநாட் கொண்டாட்டம்

மலர்க் கொத்துக் கைமாற்றம்

மயங்குபாண குவளை இதழ் கொஞ்சத் தள்ளாட்டம்

இதே.....

கார்காலம் நடைபயிலும் மார்கழி மாதமிதில்

தாயகத்தின் மேனியெங்கும் பேயுறைதல் காண்கிலையோ?

ஆறாத இரணத்துடனே அடுத்தடுத்து இடப்பெயர்வு

பொதுசனத்தின் வாழ்வு

பிணவாடை வீசும் போர் மூளும் பூமியிலே தினம் குமுறும்

நிலை கண்டும் கலி கலைக்கும் எண்ணம்

இனியேனும் உன் மனதினில் பூத்திடுமா?

Edited by ஆதிவாசி

பூத்திடுமா என் வீட்டு

ரோசாச் செடி..

பூத் தாரேன் பூக்காரி

பக்கம் வாடி..

தோட்டத்திலே காய்த்திடுமா..

தக்காளி..

தங்கமணி கொஞ்சம்

கிட்டவாடி..

கொத்து கொத்தாய் குலை விடுமா..

கிணற்றடி செவிளை

இளநீர்க் காரி

இப்பவே வாடி..

பூத்திடுமா இல்லை

காய்த்திடுமா

என் அன்பு மனம்???

பூத்திருந்த மனதில் அன்பை

விதைத்து - நாள் ஒன்றுக்கு

உன் அன்பு அதரங்களினால்

நீர் ஊற்றி...

விதையான என் மனதை

மேலும் மேலும் அன்பெனும்

உரமிட்டு என்னை

மகிழ்வித்து....

செடியாய் வளர்ந்தது போல்

வளர்ந்த என் அன்பு...

ஒரு வார்த்தை சொல்லாதா

என காயாய் காய்த்திருந்தது

என் மனது...

உன் வார்த்தை பூவாய்

பூத்தது போல்...

பழமாய் பழுத்தது போல்

மலர்ந்தது....

உன் அம்மா எனும்

மழலை மொழி கேட்டு!!!!

பூத்து, காயாகி,

கனிந்து இப்போது

பழமாய் இனித்து

நிறைந்திருக்கின்றது

தாய்மை மனது!!!!

மனமொரு குரங்கென்று

சும்மாவா சொல்லி வைத்தார்

பணம் அதிகம் வேண்டும் என்றும்

பலான படம் பார்க்க சொல்லும்

பாவையை தீண்ட சொல்லும்

புட்டி நல்ல குடிக்க சொலும்

போதையிலே புலம்பித் தள்ளும்

பொய்யாக உறவாடும்

பெளவியமாய் நடக்கச் சொல்லும்

பொல்லாப்பு வந்துவிட்டால்

தன்னைத்தான் மாய்த்துக் கொள்ளும்

சொந்த மனையிருக்க

வேறு பெண் அழகை ரசிக்கும்

தன்னை ஏமாற்ற

"கலைக்கண்" பெயர் சூட்டும்- தன்

இருப்பை உறுதிசெய்ய

விண்வெளி சென்றெல்லாம்

ஆராய்ச்சி நடத்தி வைக்கும்

காணாதவை கண்டதாக

இறுமாப்பு தான் கொள்ளும்

பொருளாசை, புகழோடு,

பதவிக்காக தினம் மாயும்.

"மானம் கெட்டவனே" என்று

தன்னையே கடுந்து கொள்ளும்

கருத்த தோலன்

பருத்த தசையான்

வெறித்த கண்ணான்

உதிர்ந்த தலையான்

குட்டைக்காலான்

வெட்டிப்பேச்சான்

கோணல் வாயான்

குறுக்கால போவான்

நோயுடையான்

நரையுடையான்

நாறுவோன்

பிச்சைக்காரன்

கெட்டா சாதியான்

துரோகம் இழைத்தவன்

வாழ்வில் தோற்றவன்

தீண்டத்தகாதவன்

கொலைகாரன்

களவாடிப்பயல்

என்றெல்லாம்

தானாக முத்திரை குத்தும்

ஊரும் குத்த பார்த்து நிற்கும்

தாளாத வேதனையில்

தினம் துவண்டு

வாழ்வை போக்கும்

"நாளை வாழ்வோம்-

நாளை வாழ்வோம்" என்று

இற்றையை வீணடிக்கும்

நேற்றைய துன்பத்தை

அசைபோட்டு கவலை கொள்ளும்

"ஐயோ சாவு வருது"

என்று தினம் கிலி கொள்ளும்

செத்த பின "நான்" யார்

என்றெல்லாம் கேள்வி கேட்டு

சித்தம் கலங்கி

பைத்தியம் ஆகும்..

மனமல்ல "நான்"

மாந்தர் வரையறுத்த

வார்த்தைகளால் வார்த்துவிட..

மனமல்ல "நான்"

எண்ணக் கிடக்கைக்குள்

எழிதாய் அடக்கிவிட..

மனமல்ல "நான்"

"என்னை நானே" மாய்த்துக் கொள்ள...

அப்ப யாரய்யா "நான்"?

-திருக்குரு

பி.கு: இது "கறுப்பி" என்று தன்னை தாழ்த்தி பெயர் வைத்துள்ள தன்னிலையறியா பெண்ணினதும் அவரை போன்றோரினதும் சிந்தனைக்கு சமர்ப்பணம். <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் என்று வாழாமல்

நம் தமிழீழ விடுதலைக்காய்

நா வல்லமையால்

நயம்பட உரைத்தவர்

நம் பாலா அண்ணா

நோய் கொண்ட உடல்

நிதம் வாட்டியபோதும்

நிமிர்ந்தே நின்று உழைத்த

நின் ஆத்மா சாந்தியடைய

கண்ணீர் அஞ்சலிகள்

அஞ்சலிகள் செய்து

அழுகின்றோம் இன்று

எங்கே..

எங்கள் தேசச் சுவட்டை

வெள்ளைப் பட்டணங்களில்

தெ ள்ளத்தெளிவாக்கிய

புண்ணியரே பாலா அண்ணா

இக்கட்டான நிலையிலெம்மை

விட்டு மறைந்ததேனைய்யா

சிங்கத்தைமகனை

சங்கத்தமிழால்

தம்பி என்று

அழைத்து அன்பால்

கட்டிவைத்த அறம்

தெரிந்த ஐயா..

கொடுநோயில் தவித்ததிலும்..

சிங்களன் கொடுமை கண்டு

தானே ஐயா தவித்தாய்..

குமுறும் உன் உணர்வெங்கே..

கொந்தளிக்கும் வார்த்தை எங்கே..

பகுத்தறிவு எங்கே..

பாலா அண்ணா எங்கே..

ஈழ மண்ணிற்காய்

இன்னுயுர்

தந்த தேசக்குரலே

உன் ஆசைகள் பூவாகும்..

உன் ஏக்கங்கள் ஈடேறும்..

உன் ஆத்மா ஈழங் கண்டு

சில நாட்களுக்குள் சாந்தி பெறும்

பாலா அண்ணாவை

மணங்கொண்டு

தமிழ் ஈழத்தில்

குடிபுகுந்த தாயே

திருமதி அடேல்

பாலசிங்கம் அவர்களே..

உங்களுக்குண்டான நீங்காத்

துயரை எண்ணி

வருத்தங்கள் அம்மா..

உங்கள் மகத்தான சேவைக்கு

எங்கள் மண் வாழும்

மரங்கள் கூட தலை சாய்க்கும்

உன்னதமான உறவே தாயே..

''தாயே...தமிழ்த்தாயே''..

நீ

ஈன்றெடுத்த பிள்ளையில்

இன்னும் ஒன்று....

''மதியுரை அண்ணா ''

அவர் - மாண்டது ஏனோ..?

திம்பினில் இருந்து...

ஜெனீவா வரையும்

அவர் பேச்சு வார்த்தை...

இனிப் பேசிப் பயனிலை

என்றே -அவர்

மூர்ச்சை யாகிப் போனாரோ...?

அஞ்சலி செலுத்தினால்

அவர் ஆத்மா ஆறிடுமா...?

மலர்கின்ற ஈழத்தில்

மலரெடுத்து....

மாலைகட்டி...அவர்

துயிலுறும் இல்லத்தில்

வைப்போம்....

:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.