Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதை அந்தாதி

Featured Replies

பிரமாக்களாவோம் எம்

தேசத்தில்

ஒரு நாள் சத்ருக்கள்

சங்கரிக்கப்பட்டு..

பீடைகள்.. நசுக்கப்பட்டு

வாசப்பூக்கள்..

வண்ணமஙமாக..ஒரு

ஈழம்..

தமிழீழம் செய்யும்..

பிரமாக்களாவோம்..

நாங்களும்... :rolleyes:

  • Replies 1.9k
  • Views 183.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் விடிவுக்காய் மரணிப்போம் எம் மனிதர்களுக்காய்

நாங்களும் மீண்டும் எழுவோம் மக்களுகாய்

நாங்களும்புதிதாய் பிறப்போம் எம் விடுதலை மண்ணில்

நாங்களும் சிரிப்போம் எம் மக்களின் விடுதலையில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலையில் நீந்திடவே

வித்தாகிறோம் தினமும்

மீண்டு எழுவோம்

மீண்டும் நாம்

விழுத்தட்டும்

எத்தனை தடையெனிலும்

வீரமாக எழுவோம்

வீரர் நாம்

நாம் நாளையை எண்ணிக்

கனாக் காண்கிறோம்..

அவர்கள்..

எம் இரவுத்தூக்கத்தை

இல்லாமல் செயவதனைப் பற்றி

சிந்தித்துக்கொண்டிருக்கிறா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்ததி சந்திகளாக

நாம் வாழ்ந்த பூமியில்

நடக்கக் கூட நாதியற்று

மந்தைகளாக

நடத்தப்படுகின்றோம்

என்று தீரும்

நம் துயரம்

துயரம் தீரும் காலம்

தொலைவில் இல்லை

விடுதலை தூரமில்லை

நாம் தலைவணங்கி சாவதில்லை

சாதனைத் தலைவன்

சாதூர்யமாகத் தானே முடிவெடுப்பான்

அவன்

அரக்கர் தலை எடுப்பான்

அவன் சினப்பட்டால் சிங்களம் சிதறும்

அவன் விரல்களால் விடுதலை ஒளிரும்

அவன் பாதச் சுவட்டில் படரும் புல்லும்

வீரத்தமிழை புகழ்ந்தே மலரும்..

மலரும் எல்லாம்

பூக்களும்

பூசைக்காகதான்

ஆனாலும்

மலர்ந்த சில

பூக்கள்

கல்லறைக்கு

சமர்ப்பனமாகின்றது

இது யார்

செய்த தவறே

நான் அறியேன்

ஆனாலும் அவை

கண்ணீர்க்குள் மலரும்

பூக்கள்

பூக்கள்

மரங்கள்

தேனள்ளி வழங்கும்

குடங்கள்

வழிகின்ற

தேனுண்ண

ரீங்காரிக்கும்

வண்டுகள்

சில பூக்கள்

வண்டுகளின்

வருகைக்காக

காத்திருந்து

உடல் வாடி

உதிர்கின்றன...

சில பூக்கள்

வண்டுகளின்

ஸ்பரிச சுகத்தில்

மெய் சிலிர்த்து

சந்தோசமாய்

மடிகின்றன...

சில பூக்கள்

காற்றின்

பலாத்கார உறவில்

வேண்டாமென

தலையசைத்து

வேதனையோடு

மடிகின்றன

பூக்கள்

பூசைக்காகவென்று

யார் சொன்னது?

உண்மையில்

பூக்கள் மரங்களின்

புணர்ச்சி

உறுப்புக்கள்!

மரங்களின்

மகிழ்ச்சிக்காக

மலரும்

பூக்களை

மனிதர்கள் தங்கள்

மனங்களின் மகிழ்ச்சிக்காக

ரசிப்பதில்

தவறில்லை

கரங்கள் கொண்டு

காம்பு முறித்து

கிள்ளியெடுக்கும்

போதெல்லாம்

மரங்களும் கண்ணீர்

வடிக்கும் என்பதை மறவாதீர்

கடவுளுக்கு

அர்ச்சிக்கப்படும்

பூக்கள் எல்லாம்

ஏதோ ஒரு

புரியாத மொழியில்

புலம்புவதை கேட்கக்கூடாதென்றே

கடவுளும் கல்லானார்!

கடவுளும் கல்லானார்

என்பார் சிலர்

கல்லை ஏன் கடவுளாக்கினார்

என்பார் சிலர்..

கடவுளை பார்க்க

வேண்டுமென்பார் சிலர்..

கடவுளட பார்வைக்கு

தெரியாதென்பார் சிலர்..

கடவுள் யார் என்பார்க்கு

நான் சொல்வேன்..

உன் செயல்தான் கடவுள்..

உன் மனம்தான் கோவில்

நீதான் புனிதன்..நீ

நீ இன்னோர் உயிருக்காய்

வேதனை கொண்டால்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேதனை கொண்டால்

வாழ்க்கையில்லை

வாழத்தெரிந்தால்

வாழ்வில் சோகமில்லை

உனை பிரிந்தேன்

வாழத்தெரியாமல்

உனை நினைத்தேன்

வாழ்வைத் தொலைத்தபோது

ஏனெனில் உன்னை

பிரிந்த போது

தெரியவில்லை எனக்கு

வாழ்வைத் தொலைக்கிறேனென்று

தொலைகிறேனென்று

நீ சொன்னாய்

நான் நம்பவில்லை

உண்மையில்

தொலைந்து

விட்டாயே என்

உயிரே

உயிரே

என்றென்னை

உருகி

அழைத்தவளே...

உயிர்

மறந்து போனதென்ன?

வீணே வாய்பிதற்றுகின்ற

வார்த்தைகளை

உண்மையென்று நான்

உணர்ந்தது தான் என்ன?

உண்மைதான் பலரும்

மனிதர்களைக்

காதலிப்பதை விட

வார்த்தைகளைக்

காதலிப்பதே

அதிகம்...

அதிகம் அவள் பேசியதில்லை

உண்மை அவள் ஊமையில்லை

அவள் நிலாக்காலங்களில் மட்டும் வருவாள்..

நிலாக்காலங்களில்

வெளியே வர எனக்கு அனுமதியில்லை

அவளை நான் பார்த்ததில்லை

அவள் என்னைப் பார்த்ததில்லை

நாங்கள் காதலிக்கவும் இல்லை

எங்கள் காலம் முடிவதுமில்லை

அவளும் நானும் உங்கள் ஆர்வங்களை

அசைத்துப்பார்த்ததில்லை

எங்கள் அசைவுகள்

எங்களுக்கே தெரிவதில்லை

எனக்கு நேரம் அதிகமில்லை

என் அறிமுகம் முடியவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முடியவில்லை என்று முடங்கிக்கிடந்தாலும்

முனைந்திடுவேன் உனக்காய் முப்பதுநாள் விரதமிருந்து

மூன்னூறு தடவை நின் நாமம் ஜெபித்தபடியே நின்நலனுக்காய்

முருகனை வேண்டியே அடிஅழித்து தவமிருப்பேன்

தவமிருப்பேன் என்று

எப்படி உரைப்பேன்

என்னால் விரதம் கூட

இருக்கமுடியாதே..

வெள்ளிக்கிழமை கூட

விரும்புவேனே..

விதம்விதமாய்

அசைவ உணவுகளை...

பாவம் என்பாரே..

அது கொல்பவருக்கென்பேனே...

கொழுப்பு என்பாரே..

அது குறைந்திடுமென்பேனே..

அழகான மீன்களைப்பார் என்பார்..

அவை பொரித்தால் எப்படி இருக்குமென்பேனே..

சிறகடிக்கும் கோழியைப்பார் என்பாரே..

குழம்புவைத்தால் குதூகலமென்பேனே..

மாமியின் மகள் சொன்னால்

மாறுமோ பிறவிக்குணம்..

அவள் ஒருக்கால் ஒருவேளை விடச்சொன்னால்

யோசிக்கலாம்..

தவமாய் தவமிருக்கச்சொன்னால்..

அவள் வேண்டாம்..

அசைவம் போதும்..

போதுமென்று

நீர் உரைத்தாலும்

மனசுக்குள்

ஆசை நரைக்கவில்லை...

'சாது'வாக தான்

இருப்பீர்

காவி

தரிப்பீர்

ஆனாலும்

காரில் வருகின்றீர்

வசை சொற்களை

வாந்தி எடுக்கின்றீர்

மனித நேயம்

மலரவேண்டிய

மனங்களில்

முட்களை பரப்பி

முட்டாளாகின்றீர்...

பிழைக்க பல

வழிகள்

உண்டய்யா...

புத்தன் என்னும்

புனிதன் பேரைச்

சொல்லிப்

பிழைக்க

வெட்கமில்லையா?

அரசின் கீழிருந்து

தியானம்

செய்யாமல்

அரசில் ஆசை

ஏனய்யா?

சிரசு தடவிச்

சொல்லும்

பரிசு கெட்டதனம்

இதுவய்யா...

புத்தபிட்சு சொல் கேட்டு

ஆசோகன்

போர்வாள் மறந்தான்

லட்சம் பிட்சு கூடி

போர் செய்

போர் செய் என்று

கூர் வாள்

கொடுக்கின்றீர்

பிட்சு இல்லை நீர்

மரந்தான்...!

மரந்தான்

எவ்வளவு சிரமங்களுக்கு

மத்தியில் பூக்களையும் கிளைகளையும்..

தாங்கோ என்று தாங்குகின்றது

ஆனால் இந்தப்பூக்கள்..

பெண்ணிலேறி

மண்ணில் மடிவதிலேயே குறியாய்..

இருக்கிறது..

தெரிந்தும் தாங்கும்..மரம்...

பெற்ற தாய்தானே..

பெற்ற தாய்தானே

உலகின் அதியமென்றேன்

உன்னைக் காணும்

வரை அதை

விட அதிசயமாய்

நீயே வந்தாய்

இன்பதை சிலகாலம்

தந்துவிடடு

என்னைப்பிரிந்து

நீ ஏன் சென்றாய்

என்னை

குழத்தையாக்கிவனே

உனைப் பிரிந்தும்

வாழ்கின்றேன்

பாசத்தைத்தேடும்

சேயாய்

சேயாய்

சிறுபிள்ளையாய்

சின்னக்குழந்தையாய்

சிற்றாடைப்பூவாய்..

மார்பில் சேர்த்து..

மருதாணி தீட்டி

மஞ்சள் பூசி

மலர் சூடி

மாக்கோலம் தூவி

மணக்கோலங்கண்டு

மனம் நெகிழ்ந்து

துயர்மறைத்து

துவளும் உளம் தெரியாமல்

தூரம் அனுப்பி

தூவரமூடு தபாலுக்கு தவங்கிடந்து

துள்ளி வரும் பேரக்

குழந்கைக்காய்

குற்றுயிராய்க் காத்திருக்கும்

குழந்தைவேலு ஐயா..

இறுதிவரை ஏங்கிக்கிடந்த

இவள் முகமும் காணவில்லை..

இவள் ஈன்றதையும் காணவில்லை

ஆத்மதாகங்கள்..

அழிகின்ற கோலங்கள்

ஈழ அவலங்கள்..

அழுது தீர ஆழ்ந்த சோகங்கள்..

சோகங்கள் மட்டுமே வாழ்க்கை என்றால்

சொப்பனங்கள் எதற்கு.

வீழ்ச்சிகள் மட்டுமே வாழ்க்கை என்றால்

வீரம் எதற்கு.

இறப்புகள் மட்டுமே நிரந்தரம் என்றால்

பிறப்புகள் எதற்கு.

மவுனம் மட்டுமே நிரந்தரம் என்றால்

கேள்விகள் எதற்கு.

வாழவே பிறந்தோம்

வழிவிடு.

வழிவிடு வழிவிடு

வரிப்புலி வருவான் வழிவிடு...

வாளொடு வேங்கை

வருகின்ற போது

வம்புகள் வேண்டாம் ஒதுங்கிடு..

ஒட்டிடும் உடலில்

ஓராயிரம் துளைகள்

போட்டிடுவார்

புலி வழிவிடு

செய்தன பாவம் போதும் என்றால்

போகட்டும் திருந்தி வழிவிடு..

பட்டது போதும்

பாவங்கள் ஆயிரம்

ஈழம் வேண்டும்

வழி விடு

வழிவிடு உலகே

எமக்காய் வழிவிடு

எம் உணர்வுகள்

எம் வலிகள்

உனக்கு மட்டும்

ஏன் வேடிக்கையாய்

உள்ளது

நாம்கேட்பது

எம் சுகந்திரம்

எம் விடுதலை

புரிந்தும் ஏன்

மெளனமானாய்

நாங்களும் மனிதர்கள்

தான்

மனிதர்கள்தான் ..

நீங்களும்..

நாங்களும்..

நீங்கள்

உங்கள்

சிரிப்புக்காய்..

எங்களை

எரிப்பீர்கள்...

நாங்கள்

எங்கள்

சிரிப்புக்காய்

அகதிகளாய்

ஓடுவோம்..

மனிதர்கள்தான் ..

நீங்களும்..

நாங்களும்..

நீங்கள்

பசியை

அறியாமல்

புசிப்பீர்கள்...

நாங்கள்

புசிக்கக்

கிடைக்காது..

தவிப்போம்..

மனிதர்கள்தான் ..

நீங்களும்..

நாங்களும்..

நீங்கள்..

மெத்தையில்

தவழ்ந்து

உப்புவீர்கள்

நாங்கள்

கிழிந்த

பாய்

கிழிக்கத்

தேய்வோம்.

மனிதர்கள்தான் ..

நீங்களும்..

நாங்களும்..

நீங்கள்

பேசுதை

நாலுதிக்கும்

கேட்கும்

நாங்கள்

பேசுவது

நாலு

சுவருக்குள்

சாகும்

மனிதர்கள்தான் ..

நீங்களும்..

நாங்களும்..

இவையெல்லாம்

ஏன்

நீங்கள்

பெரும்பான்மை

நாங்கள்

சிறுபான்மை

என்பதாலா

இல்லை?

நம்

முன்னோடிகள்

பின்னோடிப்

பார்க்காததால்.!

//நாங்களும் மனிதர்கள்

தான் //

நாங்களும்

மனிதர்கள் தான்

அடிக்கடி இப்படிச்

சொல்லிக் கொள்வது

அவசியமாகிறது

மறந்துவிடுகின்ற

அபாயம் உண்டு

அடுத்தவரின் கரிசனையை

எதிர்பார்க்கின்ற போதெல்லாம்

ஏமாற்றங்கள் தான்

புரிந்து கொள்ளாமை

புரிந்தும் உணர்ந்து கொள்ளாமை

இப்படிப் பல காரணங்கள்

பிரச்சனை புரியாதவரெல்லாம்

பாதை இதுவெனச்

சொல்வதில்

அர்த்தமுண்டோ?

தள்ளி நின்று

வேடிக்கை பார்த்து

வேண்டாமெனத் தடுப்பதை

விடுவீர்

கிட்ட வாரும்

பிரச்சனையின்

வேர் தேடும்

பிறகு சொல்லும்

எது வழியென...

நாங்களும்

மனிதர்கள் தான்

விலங்குகளோடு

சண்டைபோடுகிறோம்!!!

விலங்குகள்

உடையுமோ?

விரதங்கள்

முடியுமோ?

விரக்தியோடு

புன்னகைப்பதைத் தவிர

எதுவும் தோன்றவில்லை....

Edited by kavi_ruban

எதுவும் தோன்றவில்லை - என்

நிலை விளங்கவில்லை

ஏந்திழை ஈட்டிப்பார்வையைத்தீட்டி

என்னுள் எறிந்தபோது

எதுவும் தோன்றவில்லை - என்

நிலை விளங்கவில்லை

உன் புன்னகை மெய்யா

பொய்யா ஊமைக்குசும்பா

என் எதிர்காலத்தை ஏழையாக்கும்

இராஜதந்திரமா

எதுவும் தோன்றவில்லை - என்

நிலை விளங்கவில்லை

என் கட்டுக்கடங்காத

ஹார்மோன்களை

சுண்டி இழுப்பதில்

உனக்கென்ன சுகமோ..

நான் எழுப்பி வைத்திருக்கும்

தீச்சுவரால் தடுக்கமுடியாத

புதுப்புது வைரஸ்களை

எப்படித்தான் கண்டுபிடிக்கிறாயோ..

எதுவும் தோன்றவில்லை - என்

நிலை விளங்கவில்லை

நீ டாம் நான் ஜெரி

இதுவா நீ எனக்கு

வைத்திருக்கும் பொறி

Edited by vikadakavi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.