Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத்தலைவரால், ரவிராஜ் அவர்கள் மாமனிதராகக் கெளரவம்

Featured Replies

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

10/11/2006 .

தாயக தேசத்தின் விடுதலையைத் தணியாத இலட்சியமாக வரித்து, அந்த உயரிய இலட்சியத்திற்காக அரும்பணி ஆற்றிவந்த ஒரு உயர்ந்த மனிதரைச் சிங்களம் பலிகொண்ட செய்தி எமது ஆழ்மனதில் ஒரு பூகம்ப அதிர்வாக இறங்கியிருக்கிறது. தமிழீழ தேச ஆன்மாவை ஒரு உலுப்பு உலுப்பியிருக்கிறது. நித்தம் சாவையும் அழிவையும் சந்தித்து வாழும் எம்மக்களை மீளவும் துயரச்சுமைக்குள் தள்ளியிருக்கிறது.

திரு. நடராசா ரவிராஜ் அவர்கள் ஒரு அற்புதமான மனிதர். அபூர்வமான குணவியல்புகள் கொண்டவர். பந்தபாசங்களுக்கு அடிமைப்பட்டு, பொருளுலகால் ஆட்டிப்படைக்கப்படும் ஒரு பொம்மை மனிதரல்ல அவர். தமிழீழ மண் மீதும் மக்கள் மீதும் ஆழமான பற்றும் பாசமும் கொண்டவர். சிறந்த அரசியலாளர். சட்டமும் நீதியும் தெரிந்தவர். இவரிடம் புரட்சியுணர்வும் புதுமை புரியவேண்டும் என்ற துடிப்பும் இருக்கிறது. நெஞ்சிலே துணிவும் மனதிலே தூய்மையும் இருக்கிறது. அத்துடன் இளமை மிடுக்கு இருக்கிறது. இவையெல்லாம் ஒன்றுதிரண்ட மனிதப்பண்பு இருக்கிறது. இந்தப் பண்பு, காண்பவர் நெஞ்சையெல்லாம் களவாடிக்கொள்கிறது.

அந்நிய ஆக்கிரமிப்பும் அதனால் எழுந்த அடிமை வாழ்வும் அவலமான சூழ்நிலைகளும் இவருக்கு சுதந்திர தமிழீழத்தின் தேவை பற்றிய தெளிவை ஊட்டின. சுதந்திரத்தின் மகிமை பற்றிய புரிதலை ஊட்டின. இவ்வாறு எழுந்த சிந்தனைத் தெளிவும் புரிதலும் அவரது சுயதரிசனமும் அவரை விடுதலையின் பாதையிலே தள்ளிவிட்டது. அவரும் இந்த விடுதலைப் பாதையிலே தொடர்ந்து பயணித்து, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் இலட்சியத்தையும் முழுமையாக முழுமனதுடன் ஏற்று, தேசவிடுதலைப் பணியாற்றினார். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பல்வேறு வழிகளில் பங்களிப்புச்செய்தார்.

பாராளுமன்ற அரசியலைப் பற்றிநின்றவாறு, தமிழ்த் தேசியத்திற்காக அயராது ஓய்வின்றி உழைத்தார். சிங்கள பௌத்த பேரினவாதம் கோலோச்சும் கொழும்புக் கோட்டையில் நின்றவாறு, அது புரியும் இன அழிப்பையும் இராணுவ அராஜகத்தையும் மனிதஉரிமை மீறல்களையும் உலகத்துக்கு உரக்கக்கூறினார். சிங்கள அரசின் பொய்யான பரப்புரைகளைத் தனது சொல்லம்புகளால் துளைத்தெறிந்தார். தனது சொல்லாற்றலையும் மொழிப் புலமையையும் பயன்படுத்தி, தமிழ் மக்களின் நீதிக்கான உரிமைப் போராட்டத்தை அதன் உண்மையான பக்கங்களில் சிங்கள மக்களுக்கும் உலகிற்கும் தெளிவாக எடுத்துக்கூறினார். சிங்களப் படைகளினதும் ஆயுதக்குழுக்களினதும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அஞ்சாத நெஞ்சுடனும் அபாரமான துணிவுடனும் அநீதியை எதிர்த்துப் போரிட்டார்.

திரு. நடராஜா ரவிராஜ் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது விடுதலைப் பணியைக் கௌரவிக்கும் முகமாக "மாமனிதர்" என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்துவிடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

(வே. பிரபாகரன்)

தலைவர்,

தமிழீழ விடுதலைப் புலிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.