Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டி Jaffna central vs St johns (படங்கள் இணைப்பு)

Featured Replies

  • தொடங்கியவர்

மத்திய கல்லூரி 16.1 ஓவர்கள் நிறைவில் 37 ஓட்டங்களுக்கு3 விக்கெட்

  • தொடங்கியவர்

மத்திய கல்லூரி 25.3 ஓவர்கள் நிறைவில் 62 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்

  • தொடங்கியவர்

மத்திய கல்லூரி 63.2 ஓவர்கள் நிறைவில் 132 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்

  • தொடங்கியவர்

மத்திய கல்லூரி85.5  ஓவர்கள் நிறைவில் 188 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்


 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

109th BATTLE OF THE NORTH.
SJC 300/7d and 136/7d
JCC 164/10 and 188/10
Congratulations St John's College.

  • தொடங்கியவர்

வடக்கின் போரில் வென்றது பரியோவான்

 

2yx58ya.jpg

யாழ். மத்திய கல்லூரி மற்றும் யாழ்.பரியோவான் கல்லூரி ஆகிய அணிகளுக்கிடையிலான மாபெரும் ‘வடக்கின் 109 ஆவது’ பெரும் துடுப்பாட்ட போட்டியானது யாழ்.மத்திய கல்லுரி மைதானத்தில் வியாழகிழமை காலை 9.45 மணியளவில் ஆரம்பமாகி நிலையில் இன்று மூன்ம் நாள் ஆட்டம் நடைபெற்றது.

இந்த போட்டியை பொறுத்தவரை யாழ்.பரியோவான் கல்லூரி பலம் அணியாக விளங்கியமை மட்டும் இல்லாமல்,  யாழ். மத்திய கல்லூரி அணியை தனது சிறந்த துடுப்பாட்டத்தின் மூலம் வெற்றி கொண்டுள்ளமை குறிபிடத்தக்கது .

 

 

மேலும் சென்றவருடம் இடம் பெற்ற 108வது போட்டியில் இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டமானது சமநிலையிலே முடிவடைந்தமையும், இப்போது நடை பெற்று இருக்க கூடிய 109 வது பெரும் துடுப்பாடம் பரியோவான் கல்லூரிக்கு வெற்றி அளித்துள்ளமை மிக்க மகிழ்ச்சியாக உள்ளதாக பாடசாலை சமூகம் தெரிவித்து இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

மேலும் இப்போட்டி எந்த வித அசம்பாவிதங்களும் இடம் பெறாமல் யாழ் போலீஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது .

 

http://yarlsports.com/?p=1199&cat=16

  • கருத்துக்கள உறவுகள்

பரியோவான் வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.  :)

1zgz5es.jpg

இந்த படத்தை பார்த்தது இன்று எனக்கு நித்திரை வராது .

 

இரண்டாம் காதலின்? களம்.அதையும் எழுதினால் போச்சு . :icon_mrgreen:  

பரியோவான் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் .

  • தொடங்கியவர்

வடக்கின் போர். யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி வெற்றி

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரர்கள் போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை சமப்படுத்த வேண்டும் என்ற முடிவுடன் எடுத்த நடவடிக்கைகள் யாவற்றையும் தமது வியூகத்தினால் முறியடித்த யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி வடக்கின் பெரும் போர் துடுப்பாட்டப் போட்டியின் 109-வது போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடை பெற்று மூன்றாவது நாளான இன்று சனிக்கிழமை பகல் போட்டி ஆரம்பமாகியதும் துடுப் பெடுத்தாடிய சென்ஜோன்ஸ் கல்லூரி மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.

 

மொத்தமாக 09 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

வெற்றிக்காக 273 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய மத்திய கல்லூரி 188 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

இதில் ஆரம்ப வீரராக களமிறங்கிய நிரோசன் பொருமையாக விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 276 பந்துகளில் 8 நான்குகள், 3 ஆறுகளுடன், 72 ஓட்டங்களையும், கார்த்தீபன் 7 நான்குகள், அடங்கலாக 35 ஓட்டங்களையும், கௌதமன் 4 நான்குகள் அடங்கலாக 26 ஓட்டடங்களையும், நிரோஜன் 17 ஓட்டங்களையும், கிருபாகரன் 14 ஒட்டங்களையும் பெற்றனர்.

 

சென்.ஜோன்ஸ் கல்லூரி சார்பாக பந்துவீச்சில் கபில்ராஜ் 17.1 ஓவர்கள் பந்துவீசி 6 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 40 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், கிசாந்திகன் 12 ஓவர்கள் பந்துவீசி 34 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்களையும், துவாரகசீலன், கஜீபன், ஜதுசன், லோகதீஸ்வரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

 

109 வது போட்டியில் சாதனையாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு துடுப்பாட்ட மட்டைகள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்கள் வருமாறு:

 

சிறந்த துடுப்பாட்டவீரர் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் ஜெனிபிளமிங், சிறந்த பந்துவீச்சாளராக சென்.ஜோன்ஸ் கல்லூரியின் கிசாந்திகன், சிறந்த களத்தடுப்பாளராக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் கௌதமன், சிறந்த சகல துறை வீரராக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் திரேசன், சிறந்த விக்கெட் காப்பாளராக சென்.ஜோன்ஸ் கல்லூரியின் கபில்ராஜ், ஆட்டநாயகனாக சென்.ஜோன்ஸ் கல்லூரியின் ஜெனிபிளமிங் ஆகியோர் தெரிவாகினர்.

 

 

jaffna_SJC_11_zpsmau4b33y.jpg

 

jaffna_SJC_15_zpsj625ciei.jpg

 

jaffna_SJC_12_zpscrdzew6r.jpg

 

jaffna_SJC_13_zpsbf4xjmpo.jpg

 

jaffna_SJC_14_zpse8ptadv2.jpg

 

jaffna_SJC_9_zps9lt2ubrw.jpg

 

jaffna_SJC_10_zpso99plisz.jpg

 

jaffna_SJC_8_zpsb3yognc9.jpg

 

jaffna_SJC_7_zpscocvq35p.jpg

 

jaffna_SJC_6_zpshobmojfd.jpg

 

jaffna_SJC_2_zpsrobl1hcy.jpg

 

jaffna_c_2_zpswfxkyflt.jpg

 

Tamilwin


jaffna_c_4_zpsf7lsdumb.jpg

 

jaffna_c_3_zps2blcyc15.jpgjaffna_SJC_5_zpsqn6hz6ws.jpg

 

 

jaffna_SJC_5_zpsqn6hz6ws.jpg

 

jaffna_SJC_4_zpshj66eu2f.jpg


jaffna_SJC_3_zps4xl6pifw.jpg

 

jaffna_SJC_1_zpsxdz0z58b.jpg

 

jaffna_c_1_zpsnhhfkrai.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.