Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்புக் கிடைக்க வேண்டியதை தட்டிப் பறிக்கிறது முஸ்லிம் காங்கிரஸ்! - யோகேஸ்வரன் எம்.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
yogeswaran-mp-200-news1.jpg

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்கக் கூடிய மாகாண அமைச்சு பதவிகளைக் கூட முஸ்லிம் காங்கிரஸ் சுவீகரிக்கின்ற நிலையே ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று மட்டக்களப்பு புதூர் இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலையின் முப்பெரும் விழாவில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

   

தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகள் இந்துமதத்திற்கு எதிராக இருக்குமானால் உடனடியாக அதில் இருந்து நான் விலகுவேன். நாம் எமது சமயத்தில் உறுதியாகவுள்ளோம். எனது சமயத்தினை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டேன். இந்த நாட்டில் இன்று இந்துக்களுக்கு நல்ல சந்தர்ப்பம் வாய்த்துள்ளது.

 

சிறந்த ஒருவர், நல்ல இந்து பாரம்பரியத்தில் வந்தவர் இந்துக்கலாசார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் அவர் எங்கும் செல்லும்போது மேலைநாட்டு உடையுடன் செல்வது கவலைக்குரியது. அவர் பாரம்பரிய இந்துக்குடும்பத்தில் பிறந்தவர். எனவே எமது பாரம்பரிய உடைகளை அணிந்து செல்லவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன்.

 

நாங்கள் மத்திய அரசாங்கத்தில் சிறந்த ஒருவரை இந்துக்கலாசார அமைச்சராக பெற்றோம். ஆனால் கிழக்கு மாகாண சபையின் பண்பாட்டு பகுதி இன்று எங்கள் கையைவிட்டு சென்றுள்ளது. கல்வி அமைச்சுடன் இணைந்திருந்த இந்த பண்பாட்டு அமைச்சும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கப்படவிருந்தது.

 

ஆனால் அவசர அவசரமாக அதனை இன்னுமொரு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த பெண்மணிக்கு முன்பிருந்த அரசாங்கத்தின் அனுசரணையுடன் வழங்கப்பட்டிருக்கின்றது. அதுதான் கேள்வியாக இருக்கின்றது. இப்போது எங்களுக்கு மத்தியில் மைத்திரி ஆட்சி, மாகாணத்தில் மகிந்தவின் ஆட்சி என்ற நிலைமை தோன்றியிருக்கின்றது.

 

தமிழ் தேசிய கூட்டமைப்பை இணைத்து செயற்பட விரும்பிய முஸ்லிம் காங்கிரஸ் முன்பிருந்த அரசாங்கத்தின் தொடர்பை வைத்துக்கொண்டு எங்களுக்கு ஆரோக்கியமாக தரப்படக்கூடிய மாகாண அமைச்சு பதவிகளைக்கூட சுவீகரிக்கின்ற நிலைமையை காண்கின்றோம்.

 

பொருத்தமற்ற விதத்தில் எங்களுக்கு அமைச்சுகள் இரண்டினை வழங்கலாம் என எண்ணுகின்றனர். காணி, கல்வி சார்ந்த அமைச்சு எங்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்த மாகாணத்தில் நாங்கள் நாற்பது வீதம் இருக்கின்றோம். கல்வி அமைச்சை வைத்திருப்பவர் ஒரு கல்விமானாக இருக்க வேண்டும்.

 

ஆனால் இன்று அந்த நிலை மாகாணத்தில் இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு கல்வி அமைச்சையோ, பண்பாட்டு அமைச்சையோ வழங்குவதென்றால் ஒரு பண்பாளரிடம் ஒரு கல்விமானிடம் தான் வழங்க வேண்டும். வடமாகாணத்தில் ஒரு வலயக்கல்விப் பணிப்பாளரிடம் வழங்கியிருக்கின்றோம்.

 

இங்கு நாங்கள் கல்வி அமைச்சை ஒரு கல்வி அமைச்சின் உதவிச் செயலாளருக்குத்தான் வழங்க தீர்மானித்திருந்தோம். ஆனால் இன்று அது வேறு ஒரு பெரும்பான்மையினத்தை சேர்ந்தவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவ்வாறான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு இன்றைய அரசாங்கம் பின்னணியில் இருந்து செயற்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் எங்களுக்கு தோன்றியுள்ளது.

 

இந்த நாட்டில் மாற்றம் ஒன்றிணை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் தற்போதைய அரசாங்கத்தினை வெற்றிபெற செய்யவேண்டும். பாடுபட்டு, வடக்கு கிழக்கு மக்களின் அதிக பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றிபெற்ற இந்த அரசாங்கம், ஏன் கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 11 ஆசனங்களை வைத்துள்ளது அவர்களுக்கு முதலமைச்சர் வழங்குங்கள் என்று தன்னுடன் இணைந்துள்ள கட்சிகளுக்கு கூறவில்லை.

 

இந்த அரசாங்கத்தினால் அதனைச் செய்ய முடியும். அதனை செய்யாமல் முதலமைச்சு பதவி வழங்கப்படாவிட்டாலும் காணி, கல்வி அமைச்சையாவது தமிழ் மக்களுக்கு வழங்காமல் பொருத்தமற்ற அமைச்சுகளை வழங்க முனைவது எந்தவிதத்தில் நியாயம். கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக உள்ள தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு செய்த உதவிக்கு இதுதானா இந்த அரசாங்கம் செய்யும் உதவி எனக் கேட்கின்றனர்.

 

இதற்கு விடை தெரிந்து கொள்வதற்கே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் ஜனாதிபதியை சந்திக்கச் சென்றுள்ளார். இதன்மூலம் நியாயமான முடிவு ஒன்று கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். இது தொடர்பில் நாங்கள் என்ன முடிவு எடுப்பது என்பதை விரைவில் மக்களுக்கு தெரியப்படுத்துவோம் என்றார்.

 

yogeshwaran-batti-event-010315-seithy%20

 

 

yogeshwaran-batti-event-010315-seithy%20

 

 

yogeshwaran-batti-event-010315-seithy%20

 

http://seithy.com/breifNews.php?newsID=127493&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண முதரமைச்சருக்கு வழங்கிய ஆதரவை விலக்கியது சுதந்திர கூட்டமைப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.