Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் தொடர்ச்சியான வாழ்வாதார உதவித்திட்டங்கள்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார்:-

Lysa1_CI.JPG



லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் வாழ்வாதார உதவிகள் தேவைப்படும்  மக்களின் வாழ்க்கைத் தரத்தினை  மேம்படுத்துவதற்காக இன்றையதினம் 45 குடும்பங்களுக்கு  45 லட்சம்  ரூபா பெறுமதியான பணம்  வங்கியில் வைப்பிலிட்டு வங்கி கணக்குப் புத்தகங்கள்  வழங்கப்பட்டுள்ளன.  மாணவர்களின்  கல்விச் செயற்பாட்டுக்காக  1600 மாணவர்களுக்கு  16 லட்சம் ரூபா  பணம் வங்கியில் வைப்பிட்டு வங்கிகணக்குப்  புத்தகங்கள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. மேலும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் நிறைவுபெறும் வரையில் அவர்களுக்கு மாதாந்தம் இந்த கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்கபடும். அத்துடன்    கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தில் மேலும் பல மாணவர்கள் உள்வாங்கப்படுகின்றனர்.

மாற்றுத்திறன் உள்ள  சுயமாக தொழில் முயற்சியில் ஈடுபடவிரும்பும் 40 பயனாளிகளுக்கு முச்சக்கர சைக்கிள்கள் வழங்கி வைக்கப்படுவதுடன் தற்காலிக கூடாரங்களில் உள்ள  300 குடும்பங்களுக்கு வீடுகள்  அமைக்க கூரைத்தகடுகள் என்பனவும் வழங்கி வைக்கப்படுகின்றன. மற்றும்  சில சிறுவர் இல்லங்களுக்கு நுளம்பு வலைகள், படுக்கை விரிப்புக்கள், சுகாதாரப் பொதிகளும் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் 2015 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர மாணவர்களுக்குகான கணித, ஆங்கில, மேலதிக வகுப்புக்களும் உயர்தர கணித, விஞ்ஞானப்பிரிவு  மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளும் அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள  104 பாடசாலைகளையும் உள்ளடக்கிய  பாடசாலை மாணவர்களுக்கான முதல்உதவிப்பயிற்சி, வீதிப்போக்குவரத்து ஒழுங்கு நடைமுறை,  சுகாதார ஆரம்பக் கல்விக்கான நான்கு நாள்  பயிற்சிப் பட்டறை போன்றன  யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களின் ஊடாக நடத்தப்படுகின்றன.



யாழ்ப்பாணம்

வறிய குடும்பத்தைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு மாதாந்த கல்வி ஊக்கத் தொகையாக 1000 ரூபா வைப்பிலிடப்பட்ட வங்கிப் புத்தகங்கள்  வழங்கப்பட்டன.  மாற்றுத்தினாளிகள்  6 பேருக்கு முச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.  வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் அடிப்படையில்  10 பேருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பொறுமதியான காசோலைகள் என்பனவும்.


தெல்லிப்பளை மாவட்டச் செயலகப்பிரிவிற்குட்பட்ட 5 முகாம்களுக்கு 2 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளன.



கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்ட  பாடசாலைகளை உள்ளடக்கிய 950 மாணவர்களுக்கு, விபத்து மற்றும் ஆரம்ப சுகாதாரம் குறித்த நான்கு நாட்கள் பயிற்சி பட்டறையும்  தர்மபுரம்  மத்திய கல்லூரியில் பாடசாலை மாணவர்களுக்கான மாலை நேர வகுப்புகளும்  இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. அதேவேளை வறிய குடும்பத்தைச் சேர்ந்த 201 மாணவர்களுக்கு மாதாந்த கல்வி ஊக்கத் தொகையாக 1000 ரூபா வைப்பிலிடப்பட்டு  வங்கிப் புத்தகங்கள்  வழங்கப்பட்டன. மேலும் 148 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள்  பளையிலும், கிளிநொச்சியிலும் வழங்கி வைக்கப்பட்டன.



மன்னார்

மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட தம்பனைக்குளம் ம.வி பாடசாலையில் தெரிவு செய்யப்பட்ட 7 மாணவர்களுக்கு வங்கிக்கணக்குகள் திறக்கப்பட்டு மாதாந்தம் ஆயிரம் ரூபாய்  கல்வி ஊக்குவிப்புக்காக வைப்பிலிடப்பட்டு வங்கிப்புத்தகம் மற்றும் கற்றல் உபகரணங்கள் ஆகியவை வழங்கி வைக்கப்பட்டன.

இதே போன்று மன்னார் மாவட்டத்தைச சேர்ந்த சுமார் 200 மாணவர்களுக்கு இவ்வாறு இன்றைய தினம்  வங்கிக்கணக்குகள் திறக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து  வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்படும் தம்பனைக்குளம் கிராம மக்கள் தற்போது மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பூ மலர்ந்தான் கிராமத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் 275 குடும்பங்களில் முதலில் 100 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள்  அமைக்க தேவையான கூரைத்தகரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ்.கேதீஸ்வரராஜ் தலைமையில்  இடம்பெற்ற இந்நிகழ்வில் மடு பிரதேசச்செயலாளர் சத்தியசோதி, ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் மாவட்ட திட்டமிடல் அலுவலகர் சி.யூலியன், மடு திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா

வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை  வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.  வவுனியா கல்மடு மகாவித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா வடக்கைச்சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகையாக  1000 ரூபா வைப்பிலிடப்பட்ட வங்கிப் புத்தகங்கள்  வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

இதேவேளை வவுனியா வடக்கு கல்வி வலய மாணவர்களுக்கான கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கோடு ஞானம் அறக்கட்டளையினால் மாலை நேர வகுப்புகளும் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகையும் ஞானம் அறக்கட்டளையினால் வழங்கப்பட்டடிருந்ததுடன் வவுனியா மாவட்டத்தில் 400 மாணவர்களுக்கு  இவ் உதவித்தொகை  மாதாந்தம் வழங்கப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உதவிகள் தேவைப்படும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இன்று  ஐந்து பேருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பொறுமதியான காசோலைகளும்  மாற்றுத்திறனாளிகள்  8 பேருக்கு முச்சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. வவுணதீவு பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் நிர்மலராசன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இவற்றை வழங்கி வைத்தார்.

அம்பாறை

அம்பாறை மாவட்டத்தில்      வறிய குடும்பத்தைச் சேர்ந்த 1400 மாணவர்களுக்கு மாதாந்த கல்வி ஊக்கத்தொகையாக 1000 ரூபா வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக 600 மாணவர்களுக்கு 1000 ரூபா வைப்பிலிடப்பட்ட வங்கிப் புத்தகமும், புத்தகப்பையும் வழங்கப்பட்டன. அத்துடன்  வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஐந்து பேருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பொறுமதியான காசோலைகளும் மாற்றுத்திறனாளிகள்  4 பேருக்கு முச்சக்கர வண்டிகள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன. இந்த வைபம் ஞானம் அறக்கட்டளையின்  அக்கறைப்பற்று தலைமைக் காரியாலயத்தில்  இன்றைத்தினம் நடைபெற்றது.

சம்மாந்துறையில் க.பொ.த. சாதாரணத்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு விசேட வகுப்புகள் என்பனவும் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் நடத்தப்படுகின்றன.
 
பயன்பெற்ற பயனாளிகள் அனைவரும்  லைக்கா மொபைல் நிறுவனத்தின் தலைவர் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜாவை வாழ்த்தி தங்களது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

.ஞானம் அறக்கட்டளை நிதியம் மன்னாரில்  பல்வேறு நல உதவித் திட்டங்களை மேற்கொண்டு உள்ளது -
 

 

மன்னார்  மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தம்பனைக்குளம் ம.வி பாடசாலையில் தெரிவு செய்யப்பட்ட 7 மாணவர்களுக்கு வங்கிக்கணக்குகள் திறக்கப்பட்டு மாதாந்தம் ஆயிரம் (1000-00) ரூபாய் நிதி கல்வி ஊக்குவிப்புக்காக வைப்பிலிடப்பட்டு வங்கி புத்தகம் மற்றும் கற்றல் உபகரணங்கள் ஆகியவை வழங்கி வைக்கப்பட்டன.

இதே போன்று மன்னார் மாவட்டத்தைச சேர்ந்த சுமார் 200 மாணவர்களுக்கு இவ்வாறு இன்றைய தினம் (2) வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கினால் பாதீக்கப்படும் தம்பளைக்குளம் கிராம மக்கள் தற்போது மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பூ மலர்ந்தான் கிராமத்தில் மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் 275 குடும்பங்களில் முதலில் 100 குடும்பங்களுக்கு தற்காலிக வீடு அமைக்க தேவையான கூரைத்தகரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சயாக  மன்னார் மாவட்டத்தில் உள்ள வயேதிபர் இல்லம் மற்றும் சிறுவர் காப்பகம் ஆகியற்றில் உள்ள அனைவருக்கும் மதிய உணவுகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வுகளில் மடு பிரதேசச் செயலாளர் சத்தியசோதி,ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் மாவட்ட திட்டமிடல் அலுவலகர் சி.யூலியன்,மடு திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்...

ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் ஸ்தாபகரும்,லைக்கா மொபைல் நிறுவனத்தின் தலைவருமான சுபாஸ்கரன் அல்லிராஜா வின் 43 ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் இன்று திங்கட்கிழமை பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/117146/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.