Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்புத் துறைமுக நகர கட்டுமானத்தை நிறுத்துமாறு சீனாவுக்கு சிறிலங்கா எச்சரிக்கை

Featured Replies

கொழும்புத் துறைமுக நகர கட்டுமானத்தை நிறுத்துமாறு சீனாவுக்கு சிறிலங்கா எச்சரிக்கை MAR 05, 2015 | 1:39by கார்வண்ணன்in செய்திகள்

Colombo-Ports-300x200.jpgகொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தா விட்டால், சீன நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹாசிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்துடன் செய்து கொண்ட உடன்பாட்டுக்கு அமைய, 1.5 பில்லியன் டொலர் முதலீட்டில், கொழும்புத் துறைமுக நகரை நிர்மாணிக்கும் பணியில் சீன அரசுத்துறை நிறுவனமான, சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

எனினும், இந்த உடன்பாடு, சட்ட நடைமுறைகளை மீறியும், சுற்றாடல் பாதிப்புகளைக் கவனத்தில் கொள்ளாமலும், செய்து கொள்ளப்பட்டதாக கூறி, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் இந்த திட்டத்தை மீளாய்வு செய்து வருகிறது.

இந்த விசாரணைகள் முடியும் வரையில், கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு சீன நிறுவனத்திடம் சிறிலங்காவின் முதலீட்டுச்சபை கடந்தமாதம் கேட்டிருந்ததாக, சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் காசிம் தெரிவித்தார்.

எனினும் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், துறைமுக நகர நிர்மாணப் பணிகளை சீன நிறுவனம் துரிதப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கபீர் காசிம்,

“அவர்கள் அதனை நிறுத்த வேண்டும். இந்த விசாரணைகள் முடியும் வரை, துறைமுக நகர நிர்மாணப் பணிகளை இடைநிறுத்த தேவையான நடவடிக்கைகளை சிறிலங்காவின் துறைமுகங்கள் அமைச்சு மேற்கொள்ளும்.

அவர்கள் அதனை நிறுத்தாவிட்டால், மேலதிக நடவடிக்கைகள் எதையும் எடுக்க முடியாத வகையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து சீன நிறுவனத்திடம் இருந்து கருத்து எதுவும் வெளியாகவில்லை.

http://www.puthinappalakai.net/2015/03/05/news/4150

ஒங்கள கையெடுத்தி கொம்பிட்டு கேட்கிரேன் மோடயாவா மோடியா வந்து போய்க்காட்டிலும் நித்தாட்டுகள்.(அமைச்சருக்காக)

 

  • கருத்துக்கள உறவுகள்

வெல்டன்.... ஸ்ரீலங்கா.welldone.gif
ஸ்ரீலங்காவுக்கு.... இவ்வளவு, துணிவு வந்தது... ஆச்சரியமாய் இருக்கு. :lol:

கொழும்பு துறைமுக நகரத்தை தடுப்பதில் ஏன் எல்லோரும் மல்லுக்கட்டி நிற்கிறார்கள் என்பது எனக்குப் புரியாத விடயமாகவே உள்ளது. மத்தல விமானநிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம் என்பன உறுதியான ஆரம்ப ஆய்வுகளின்றி செயல்படுத்தப்பட்ட திட்டங்கள். ஆனால் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் இருக்கும் துறைமுகத்தின் அபிவிருத்தியே. இந்நகரமானது இலங்கையின் பிரதான வர்த்தக மையமாக எதிர்காலத்தில் வருவதற்கான சந்தர்ப்பங்களே அதிகம். முறைகேடுகள், துஷ்பிரயோகங்கள், சுற்றுச் சூழல் பாதிப்புகள் இருப்பின் அவற்றை முறைப்படி விசாரணை செய்து தவறுகளை நிவர்த்தி செய்த பின் இத்திட்டம் தொடரப்பட வேண்டும்.
 
இந்நகரமானது கடலை தரையாக்கியே நிர்மாணிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தினால் கொழும்பு துறைமுகமும் விஸ்தரிக்கப்பட்டு நவீனமயமாக்கப்படவுள்ளது. இத்திட்டத்தால் கொழும்பு நகரம் புதுப்பொலிவுடனும் வர்த்தக மையமாகவும் உருமாற்றமடையும். வெறுமனே மகிந்தா சீனா என்பதால் எதிர்க்காது ஒரு வர்த்தக ரீதியான முதலீடாக நோக்க வேண்டும். அத்துடன் ஒரு நாட்டுடன் செய்யப்பட்ட வர்த்தக ரீதியிலான உடன்பாட்டை அரசாங்கம் மாறியதும் நிறுத்துவதோ அல்லது தடை செய்வதோ சுலபமில்லை. அவ்வாறு நிறுத்தினாலும் நட்ட ஈடு கொடுக்க வேண்டி வரும். நிறுத்திவிட்டு எதுவுமில்லாமல் அரைகுறை திட்டத்திற்கு நட்ட ஈடு, முதலீடு என்பவற்றை கொடுப்பதைவிட பிழைகளை திருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.
 
இத் திட்டம்பற்றிய காணொளி : 
 
The Colombo port city project is a joint venture between Sri Lanka Ports Authority and China Communications Construction Company Ltd (CCCC). The city will be build upon the area reclaimed from the sea adjacent to historic Galle Face green, Colombo, Sri Lanka. The total land area will be 230 hectares (568 acres). The project began on September 2013 (Ceremonially Commenced on 17th September 2014)

The City will comprise of Marina & Yacht Club, Formula One Race Track, Central Boulevard, Central Railway station, Sea view luxury apartments and Five star hotels, Luxury Shopping and Entertainment center, Office spaces and state of the art business center, Water sports venues, Aquarium, World Class Cinema and Theater, Sea Front Promenade and All the other facilities a modern city needed. 

Total Project Cost: - $15 Billion
Commencement: -- September 2013 (Ceremonially commenced by Hon. President Mahinda Rajapakse and Chinese President Xi Jinpin on the 17th of September 2014)
Duration: - 1st Phase, 39 months.
 
மூலம் : காணொளியின் முகவரி
 
கொழும்பு புதிய துறைமுகத்தின் கொள்கலன் பகுதி காணொளி. 
 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

அபிவிருத்தி திட்டம் என்னவோ நல்லாத்தான் இருக்கு.. ஆனால் அதை சீனா செய்வதுதான் சில நாடுகளுக்கு பிரச்சினையா இருக்கு.. (ஆனால் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள்.. :lol: )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.