Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற பெண் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்

Featured Replies

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற பெண் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்
[ சனிக்கிழமை, 07 மார்ச் 2015, 12:10.02 AM GMT ]
AMPARAI5809_1.JPG
யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து விசாரணைக்குச் சென்ற பெண்ணொருவர் மூர்க்கத்தனமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பிணக்கு ஒன்றினையடுத்து குறித்த பெண் மீது மற்றொருவர் முறைப்பாடு செயதுள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண்ணை நேற்று முற்பகல் 11 மணிக்கு விசாரணைக்கு வருமாறு பொலிஸார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இந்த விசாரணைக்கான கடிதமும் முறைப்பாடு செய்தவரிடமே பொலிஸாரினால் கொடுக்கப்பட்டு சம்பந்தப்ட்ட பெண்ணிடம் வழங்கப்பட்டுள்ளது.

இறுதிநேரத்தில கிடைத்த அழைப்பையடுத்து குறித்த பெண் நேற்று நண்பகல் 12 மணியளவில் பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார்.

உரிய நேரத்துக்கு விசாரணைக்காக வருகை தராமை தொடர்பில் குறித்த பிணக்கை விசாரிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர் பெண்ணை ஏசியுள்ளார்.

விசாரணைக்கு பொலிஸார் உரிய முறையில் அழைப்பு விடுத்திருக்க வேண்டும். முறைப்பாடு செய்தவரிடமே அழைப்புக்கான கடிதம் வழங்கப்பட்டமை தவறானது. அத்துடன் இறுதிநேரத்திலேயே இந்த அழைப்பு எனக்கு கிடைத்திருந்தது. இதனால்தான் வருகை தருவதற்கு காலதாமதம் சென்றது என்று இந்தப் பெண்ணும் வாதிட்டுள்ளார்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கதிரையிலிருந்த பெண்ணை கிழே விழுத்தி தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலரும் பெண்ணின் தலைமயிரைப் பிடித்திழுத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.

கதறக்கதற தாக்குதல் நடத்திய பொலிஸார் பெண்ணை சிறைக்கூண்டுக்குள் அடைத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தை பொலிஸ் நிலையத்தில் நின்ற பொதுமக்கள் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குறித்த பெண் மீது ஆண் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பெண் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென நேரில் கண்ட பொதுமக்கள் முறையிட்டுள்ளனர்.

http://www.tamilwin.com/show-RUmtyDTbSUmrzI.html

 

  • கருத்துக்கள உறவுகள்
போலிஸ் நிலையத்திற்கு நாளும் நாளும் பலர் சென்று வருகிறார்கள் 
இவருக்கு ஏதும் நடந்தால் இவர் முன்னைநாள் குற்றவாளியாக இருக்கவேண்டும்.
அப்படி இருக்கும்போது அவரை அடிப்பது போலிசின் கடமை.
 
                                          -கனடா அரசியல் அறிஞர் விடுதி தலைமை கூட்டணி-
                                                                        தலைவர் 
                                                                    07/03/2015

நல்ல செய்தியாக இருக்கு ,

நம்மட ஊரில் ஒருவர் இருந்தார் அவருக்கு ஆங்கில படம் என்றால் காணும் .அவர் படம் பார்த்துவிட்டு வரும்போது படத்தின் கதையை கேட்டால் 

"சிவப்பு சட்டை போட்டவரும்  மஞ்சள் சட்டை போட்டவரும் கொள்ளை அடிக்க போனார்கள் .பிறகு கறுப்பு சட்டை போட்டவனை சுட்டார்கள் என்பார் "

இப்படித்தான் இப்ப வாலுகள் தளங்கள் அதிக செய்திகளை விடுகின்றன ,

 

அதை நம்ப ரசிக்க உலகம் முழுக்க ஆட்கள் இருக்கினம் . :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.