Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் எமது ஆட்சிக்காலத்தின் போதே தீர்வு: உறுதியளித்தார் ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1b79bc571e6d3b41b0df24651c00b574.jpg

எமது ஆட்சிக்காலத்தின் போதே மக்களின் உள்ளங்களில் எழும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன உறுதியளித்தார்.

 
 
இன்று காலை 10 மணியளவில் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட வளலாய் மற்றும் வசாவிளான் பகுதிகள் சில விடுவிக்கப்பட்டு  60 பேருக்கு காணி உரிமம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது .குறித்த நிகழ்விலே கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
 
மேலும்  கடந்த மூன்று மாத காலப்பகுதியிலே 3 தடவை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளேன்.முதலாவது வருகை தேர்தல் காலத்தின் போது உங்களிடம் வாக்கு கேட்பதற்காக வந்தேன் , இரண்டாவது அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டம் ஒன்றிற்கு வந்தேன் .இன்று மூன்றாவது தடவையே மக்களுக்கான காணிகளை கையளிப்பதற்காக இங்கு வந்துள்ளேன்.
 
இன்று இந்த நிகழ்வு என்பது எமது ஆரம்பமே தவிர இது ஒரு முடிவு என்று நீங்கள் எண்ணிவிடக்கூடாது. இதனை முடிவுறுத்த எமக்கு இன்னும் சில காலம் தேவைப்படுகிறது. இன்று நாங்கள் உங்கள் காணிகளை கையளிப்பது மட்டுமல்லாமல், இங்கே அழிந்துபோன கட்டுமானங்களை எல்லாம் மீளமைத்துத்தருவதும் எமது நோக்கமாகவுள்ளது.
 
இந்தப்பிரதேசத்துக்கு வந்து இந்தக் காணிகளைப் பார்த்தபோது எமது உள்ளத்திலே மிகவும் மனவேதனை ஏற்பட்டுள்ளது. நீங்கள் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கவில்லை. இந்தப்பகுதியை பார்த்தால் அது நன்றாகத் தெரியும். மாத்தளை,கண்டி, நுவரெலியா பிரதேசங்கள் போல அல்ல இந்த பிரதேசங்கள்.
 
இங்குள்ளவர்கள் குடிதண்ணீருக்கு என்ன செய்கிறார்கள் என்று நான் வடக்கு முதலமைச்சரிடம் கேட்டேன். அப்போதுதான் மக்கள் குடிதண்ணீருக்காக பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளனர் என்று தெரியவந்தது. காணிகளை விடுவிப்பது மட்டுமன்றி, உங்களுக்கு வாழக்கூய சூழலையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டிய அவசியம் எமக்கு இருக்கிறது.
.
 வடபகுதி மக்களது பிரச்சினைகளையும் நாம் கருத்தில் கொண்டு எதிர்வரும் காலத்தில் வடபகுதியில் பெரும் மாற்றத்தை கொண்டுவரவிருக்கிறோம். அதற்குத் தேவையான எல்லா வசதிகளையும் நாம் ஏற்படுத்திக்கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.
 
வடக்குமாகாண முதலமைச்சருக்கும் வடக்கு மாகாண சபைக்கும் நாம் பூரண வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கத் தயாராக இருக்கிறோம். 
 
இதேவேளை யுத்த காலத்தின் போதும் அதன்பிறகும் காணி தொடர்பான அழுத்தங்கள் உண்டு அது தொடர்பில் நான் நன்கு அறிவேன்.காணி தொடர்பான பிரச்சினை இன்றைக்குரிய பிரச்சினை மாத்திரம் அல்ல.காணிப்பிரச்சினை உலக அரசியலில் மாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளதுடன் உலக அளவில் கிளர்ச்சிகளையும் தோற்றுவித்துள்ளன.
 
காணிப்பிரச்சினைகளை மாத்திரம் அல்ல மக்களுக்கான அழுத்தங்களை கொடுக்கும் பிரச்சிiனையை தீர்ப்பதே எமது புதிய அரசின் கடப்பாடாகும்.
 
எனவே மக்களுக்கு நான் தெட்டத்தெளிவாக கூறுவது என்னவென்றால்.மக்களுக்கு ஏற்படும் பாரதூரமான பிரச்சினைகளுக்கு எமது ஆட்சிக்காலத்தின் போதே தீர்வு கிடைக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
 
 
dfhfffff.jpg

ரணிலினை குழப்பாமல் பார்த்தால் சரிதான் ..... குள்ளநரி 

ரணில் குழப்புராரோ இல்லையோ, சில தமிழ் அரசியல்வாதிகள் குழப்ப வெளிக்கிடுவினம். எதாவது முன்னேற்றம் வந்தால் எங்களது தமிழ் அரசியல்வாதிகளுக்கு பொறுக்காதே....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.