Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்தாலும் நானே தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவர்

Featured Replies

Nimal-Siripala-De-Silva_14.jpg
 
தேசிய அர­சாங்கம் என்ற எண்­ணக்­க­ருவின் அடிப்­ப­டையில் தேசிய அர­சாங்­கத்­துக்கு நாங்கள் ஆத­ர­வ­ளித்­தாலும் நானே எதிர்க்­கட்சித் தலைவர். நான் அந்தப் பத­வியை விட்டு வில­க­மாட்டேன்.
 
எனது மனச்­சாட்­சியின் படி நானே எதிர்க்­கட்சித் தலை­வ­ராக பதவி வகிப்பேன் என்று எதிர்க்­கட்சி தலைவர் நிமால் சிறி­பால டி. சில்வா தெரி­வித்தார்.
 
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கரங்­களை பலப்­ப­டுத்­தவே சுதந்­திரக் கட்­சியின் 26 பேர் அமைச்சுப் பத­வி­களை பெற்­றுள்­ளனர். நாங்கள் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணை­ய­வில்லை. இறைச்­சுக்கும் முல்­லுக்கும் நாங்கள் அர­சாங்­கத்தில் இணை­ய­வில்லை. மாறாக 100 நாள் வேலைத்­திட்­டத்தை நிறை­வேற்­று­வ­தற்­கான வர­லாற்று விட­யத்தை முன்­னெ­டுக்­கவே ஆத­ரவு வழங்­கு­கின்றோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
 
கொழும்பில் நேற்று நடை­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது,
 
தேசிய அர­சாங்கம் பற்றி தொடர்ந்து பேசப்­பட்­டு­வந்­தது. இந்­நி­லையில் இது தொடர்பில் சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழுவும் மத்­திய குழுவும் தேசிய அர­சாங்கம் அமைக்க இணங்­கி­யது. அதா­வது ஜனா­தி­பதி மைத்­தி­ரி்­பால சிறி­சேன இந்த நாட்டின் தலை­வ­ரா­கவும் எமது கட்­சியின் தலை­வ­ரா­கவும் இருக்­கின்றார். எனவே அவரின் கரங்­களை பலப்­ப­டுத்தி 100 நாள் வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுக்கும் நோக்கில் தேசிய அர­சாங்­கத்தை அமைத்­துள்ளோம். எமது கட்­சியின் 26 பேர் அமைச்சுப் பொறுப்­புக்­களை ஏற்­றுள்­ளனர். இறைச்­சுக்கும் முல்­லுக்கும் நாங்கள் அர­சாங்­கத்தில் இணை­ய­வில்லை. மாறாக 100 நாள் வேலைத்­திட்­டத்தை நிறை­வேற்­று­வ­தற்­கான வர­லாற்று விட­யத்தை முன்­னெ­டுக்­கவே ஆத­ரவு வழங்­கு­கின்றோம்.
 
ஆனால் சுதந்­திரக் கட்­சியின் சில உறுப்­பி­னர்கள் அமைச்சுப் பத­வி­களை பெற்று ஜனா­தி­ப­தியின் கரங்­களை பலப்­ப­டுத்­தி­னாலும் பெரும்­பா­னமை உறுப்­பி­னர்கள் எதி­ர­ணி­யி­லேயே உள்­ளனர். எனவே நாங்கள் எதிர்க்­கட்­சியின் வகி­பா­கத்தை முன்­னெ­டுப்போம். அர­சாங்­கத்தை விமர்­சிக்­க­வேண்­டு­மாயின் விமர்­சிப்போம். மேலும் எமது கட்­சியின் தனித்­து­வத்தை இழக்­க­மாட்டோம். தேசிய அர­சாங்­கத்தை அமைத்தோம் என்­ப­தற்­காக ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் நாங்கள் இணைந்­து­விட்­ட­தாக அர்த்தம் இல்லை.
 
கடந்த மஹிந்த ராஜ­ப­க்ஷவின் அர­சாங்­கத்தில் ஐக்­கிய தேசிய கட்­சியின் 17 உறுப்­பி­னர்கள் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் ஆத­ரவு வழங்­கினர். அதுவும் ஒரு வகை­யி­லான தேசிய அர­சாங்கம் தான். எனவே தற்­போது நாங்கள் செய்­துள்­ளதை புதிய விடயம் என்று கூற முடி­யாது. இதில் அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் எந்தத் தவறும் இல்லை. ஜனா­தி­ப­திக்கு எந்தக் கட்­சியில் உள்­ள­வ­ரையும் ஜனா­தி­ப­தி­யாக நிய­மிக்­கலாம்.
 
எமது கட்­சியின் அமைச்­சர்கள் அமைச்­ச­ர­வையில் இருக்­கும்­போது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தங்­க­ளிலும் எமது தாக்­கத்தை செலுத்த முடியும். தேர்தல் முறை மாற்­றத்­தயும் விரை­வாக செய்­யு­மாறு கோரலாம். எனவே இவ்­வா­றான நோக்­கங்­க­ளுக்­காக தேசிய அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்கு ஆத­ரவு வழங்­கி­யுள்ளோம்.
 
தற்­போ­தைய நிலை­மையில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் இந்த அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்­றன. அதா­வது அமைச்­ச­ர­வை­யை­வி­டவும் உயர்ந்த மட்­டத்தில் உள்ள தேசிய நிறை­வேற்றுக் குழுவில் இந்த இரண்டு கட்­சி­களும் உள்­ளன. எனவே எங்­களை இவர்கள் குறை­கூற முடி­யாது.
 
எனினும் எதிர்க்­கட்­சிக்­கான பெரும்­பான்மை எமது பக்­கத்­தி­லேயே உள்­ளது. எனவே நாட்டின் எதிர்க்­கட்சித் தலைவர் என்ற பதவி என்­னி­டமே இருக்­க­வேண்டும். அதில் எந்த மாற்­றமும் ஏற்­பட முடி­யாது. எனது மனச்சாட்சியின் படி நானே தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பேன். என்னை மாற்றும் அதிகாரம் சபாநாயகருக்கு இருக்கின்றது. மேலும் எனது கட்சியின் கூறினால் பதவி விலகுவேன். எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவி சுதந்திரக் கட்சிக்கு கிடைத்த பதவியாகும். எனவே நான் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுககொடுக்க மாட்டேன்.
 
  • கருத்துக்கள உறவுகள்

கதாநாயகர்களும்  நாமே

வில்லன்களும் நாமே....

 

மாப்பிள்ளை என்றாலும்

பிணம் என்றாலும் 

மாலை எமக்கே....

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களே எல்லாமாக இருக்க விரும்புகிறோம். நாம் பெரும் விருட்சம். அதைப் பற்றி சிறுகொடிகள் இருக்க விரும்பினால் இருக்கட்டும். இல்லை சிங்கள பெளத்த நாடான இதை விட்டே ஓடட்டும். 

 

இதுதான் சிறீலங்காவில்.. சிங்களச் சித்தாந்தம்.  :icon_idea:  :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.