Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் கூட்டமைப்பு

Featured Replies

tna_CI.jpg

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளதாக உத்தியோகப்பற்றற்ற கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்றின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவராக நிமால் சிறிபால டி சில்வா கடமையாற்றி வருகின்றார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான கூட்டணி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நிமால் சிறிபால டி சில்வா பிரதிநிதித்துவம் செய்கின்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆளும் கட்சியில் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டதனைத் தொடர்ந்து நிமால் சிறிபால டி சில்வா பதவி வகிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளே எதிர்பை வெளியிட்டுள்ளன.

ஜே.என்.பி. கட்சியின் விமல் வீரவன்ச, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் உதய கம்மன்பில, புதிய இடதுசாரி முன்னணியின் வாசுதேவ நாணயக்கார, மஹஜன கட்சியின் தினேஸ் குணவர்தன போன்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும், ஜே.வி.பி உள்ளிட்ட ஏனைய தரப்பினரும் நிமால் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் நீடிக்கக் கூடாது என கோரியுள்ளனர்.

பாராளுமன்றில் பெரும்பான்மை பலமுடைய தனியொரு கட்சியின் பிரதிநிதியே எதிர்க்கட்சித் தலைவராக இருக்க முடியும் என்பது மரபாகும்.

தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆளும் கட்சியில் இணைந்து கொண்டுள்ள காரணத்தினால், தனியொரு பெரும்பான்மை பலமுடைய கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திகழ்கின்றது.

இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனினும், தமிழ் கட்சியொன்றின் பிரதிநிதியொருவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவதனை பேரினவாத கட்சிகள் அனுமதிக்காது என தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்றின் பெரும்பான்மை பலத்தை வகித்து வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆளும் கட்சியில் இணைந்து கொண்டாலும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்வதில் தீவிர முனைப்பு காட்டும் என தெரிவிக்கப்படுகிறது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/117937/language/ta-IN/article.aspx

எதிர் கட்சி தலைவர் பதவியை சம்பந்தன் பெற்ருக்கொண்டு எதோ கிழிச்ச கொட்டபோரர். இப்ப உள்ளது போலவே பிறகும் இருப்பர். எல்லாம் தமிழனின் தலை எழுத்து.

எதிர்க்கட்சித் தலைவரா..? சம்பந்தன் நிலை..!

நாடாளுமன்ற விதிமுறைகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கும் நிலை ஏற்பட்டால், அந்தப் பதவியை நாம் ஏற்பதா, இல்லையா என எமது கட்சி கூடி ஆராய்ந்து இறுதி முடிவெடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற விதிமுறைகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கும் நிலை ஏற்பட்டால், அந்தப் பதவியை நாம் ஏற்பதா, இல்லையா என எமது கட்சி கூடி ஆராய்ந்து இறுதி முடிவெடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசு அமைத்துள்ள நிலையில் சுதந்திரக் கட்சி ஆளும் கட்சியாக மாறிவிட்டது. இந்நிலையில், நிமால் சிறிபால டி சில்வா ஆளும் கட்சியில் இருந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அவர் அந்தப் பதவியில் தொடரமுடியாத நிலை ஏற்பட்டால் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பலம் பொருந்திய கட்சியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்க வேண்டிய நிலை ஏற்படும்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்தால் அந்தப் பதவியை ஏற்பீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நாம் நாடவும் இல்லை அந்தப் பதவி வேறொரு கட்சியில் உள்ளவருக்குச் சென்றடையக்கூடாது என்று நாம் எண்ணவும் இல்லை.

வேறொரு கட்சியில் உள்ளவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பொறுப்பேற்றால் அதனை நாம் எதிர்க்கவும் மாட்டோம். ஆனால், நாடாளுமன்ற விதிமுறைகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே என்ற நிலைமை வருமானால் அந்தப் பதவியை நாம் ஏற்பதா, இல்லையா என்று எமது கட்சி கூடி ஆராய்ந்து இறுதி முடிவெடுக்கும்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி விடயத்தில் முன்னாள் அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஸ, மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருக்கும் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோரின் தனிப்பட்ட கருத்துகளோ அல்லது கூட்டுக் கருத்துகளோ ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

நாடாளுமன்றத்துக்கென விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளே எதிக்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும். எனவே, தனிப்பட்டவர்களின் கருத்துகள் செல்லுபடியற்றதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் கொஞ்ச நாட்களில் பாராளுமன்றம் கலைப்பதாக உருக்கிரார்கள். 

 

இப்ப சம்பந்தருக்கு குடுப்பதாக இருந்தால் இன்றைக்கே கலைத்தாலும் கலைப்பார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.