Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் பிரதமர் ரணில்: என்ன நினைக்கிறது யாழ்ப்பாணம்?

Featured Replies

Ranil-Jaffna1-300x198.jpg
 
திடீரென ஒரு நல்ல செய்தி. ”கொழும்பு மிரர் வேலைசெய்யத் தொடங்கீற்றுது”. ஓம். சில தினங்களாக கொழும்பு மிரர்இணையத்துக்கு சூனியம் வச்சிட்டாங்கள். வெட்டிக்கொண்டு வர படாதபாடுபடவேண்டியாயிகிட்டுது. அப்படித்தான் ஆசிரியர் சொன்னார், விட்ட இடத்திலிருந்தும் ஆரம்பிக்கவேணும், அதேநேரத்தில் நிகழ்காலத்தையும் பிரதிபலிக்க வேணும் எண்டு. உடனடியாக ஒரு ஸ்டோரி பண்ணோனும்.
 
என்ன செய்யலாம், வடக்கிற்கான ரணிலின் பயணத்தில இருந்து ஆரம்பிப்பம். அதுவும் தமிழர்களின் அரசியலை தீர்மானிக்கும் மையமான யாழ்ப்பாணத்தின் இளையவர்கள் ரணிலின் யாழ்ப்பாண வருகை பற்றி என்ன நினைக்கிறார்கள்? சமூகவலைதளங்களில், ஊடகங்களில் தமிழர் அரசியல் பற்றி எழுதிவரும் இந்தத் தலைறையினரின் சிலரை சிக்கெனப் பிடித்தேன். பேஸ்புக்கில்.
செந்தூரன், இது அவரின் சொந்தப் பெயரல்ல. நானாக வைத்த பெயர். சரி, இப்போதைக்கு செந்தூரன் என்றே வைத்துக்கொள்ளுவோம்.
“அண்ண, ரணில் வருகை பற்றி கருத்துக்கூற முடியுமோ” தமிழிலயே மெசேஜ் அனுப்பினன்.
அண்ணன் உடனடியாகவே பதில் எழுதினார், “சொறி, இதில் தமிழ் விளங்குதில்ல, பின்னேரம் வந்து பதில் எழுதுறன்” – என்று. அவர் சொன்னது போலவே இரவு 10க்குள் தன் கருத்தை அனுப்பியிருந்தார். அப்படியே தருகிறேன், படித்துப் பாருங்கள்.
“எழுத்து நடையிலேயே தந்து விடுகிறேன் ஜெரா”,
 

Ranil-in-Jaffna-6.jpg

 

Ranil-in-Jaffna-4.jpg

 

“ரணில் விக்ரமசிங்ஹ”வை புரிந்து கொள்வது அல்லது விளங்கி கொள்வதென்பது, ஒருவகையில் ஏகாதிபத்தியத்தின் மறைமுகவர்களை விளங்கிக் கொள்வதற்கு சமனானது. நெருக்கடி மிக்க போரிடரில், பெரியதொரு மூச்சிடும் இடைவெளி தந்த 2002 இன் சமாதான காலத்தின் ஆளுமினத்து தூதுவராக மெச்சப்பட்ட பின்னணியிலேயே, பாதிப்பின் பெரும்பங்கினை சுமந்த மக்களால் நிராகரிக்கப்படத் தயங்காத இந்த மூத்த பேரினவாதியின் இன்றைய முகம் எவ்வகையிலும் மாற்றத்துக்குள்ளாகவில்லை என்பதை எம்மக்கள் தெளிந்தே வைத்துள்ளனர். ஊவா மாகாணத் தேர்தல் பிரச்சார மேடையொன்றில், மலையக சிங்கள தொழிலாளர்கள் மத்தியில், ஆங்கிலத்தில் உரையாற்றி- தொடர்ந்த மக்களின் கூச்சலையும் பொருட்படுத்தாமல் முழு உரையையும் ஆங்கிலத்திலேயே முடித்துவிட்ட “திமிருக்கு” – தமிழர்கள் “மாற்றம்” என்று பெயரிட்டு போற்றுமளவு பேயர்கள் இல்லை.
 
“வைட் கொலர்” மேலாதிக்கத்தின், பேரினவாத பூச்சு பூசப்பட்ட இந்தத் “தெரிவு செய்யப்படாத” பிரதமரின் பின்னால் எம்மக்களின் அவலங்களை தேரோட்டி பிழைப்பு நடாத்தும் தமிழ்தேசிய அரசியல்வாதிகள் மற்றும், தமிழ்பேசும் பேரினக் கட்சி முகவர்கள் நிச்சயமாகத் தங்களது இன்றைய நிலைக்கு வெட்கப்பட்டேயாகவேண்டும், தனிமையிலாவது. “நிலவிடுவிப்பு, கைதிகள்விடுதலை, புனர்வாழ்வின் பின் போராளிகள்- இன்னபிற போன்ற பரபரப்பில் உள்ள தேவைகளின் மீதான, ரணிலின் “அக்கறை”, வடகிழக்கு வாக்குகளின் மீது அப்பழுக்கற்ற பேரினவாதி ஒருவர் கொள்கின்ற சுயநலம் தவிர வேறில்லை” என்பதை எம்மக்களில் எவராவது தெரிந்து கொள்ள தவறின்- அல்லது காலம் தாழ்த்தின், அதை வேகமாக உணர்த்துவதே இன்றைக்குத் தமிழ் தேசிய அரசியலில் நீடிக்க விரும்பும் எவரினதும் முதல்பணியாக இருக்க முடியும்.
ஓவராகீட்டுதோ??
 
“அய்யோ அப்பிடியெல்லாம் இல்ல, நன்றி அண்ண”- என்று சொல்லியபடி மறுமுனையில் மற்றையவருக்கு தகவல் அனுப்பினேன்.  ரட்ணம் தயாபரன். யாழ்ப்பாணத்திலிருந்து மிக நீண்டகாலமாக ஊடகப் பணியாற்றியும், பலரை ஊடகப் பாதையில் அழைத்துச்செல்லும் முக்கியஸ்தராகவும் இருக்கிறார். பிரதமர் ரணிலின் யாழ். வருகையின் பெரும்பகுதியை களத்திலிருந்து அவதானித்தவர். செய்தியளித்தவர்.
 
“பிரதமர் ரணியில் யாழ். வருகை பற்றி என்ன நினைக்கிறீங்கள் அண்ண” சில மணிநேரங்கள் பதில் இல்லை. காரணம் அவர் பேஸ்புக் செய்தியை படித்திருக்கவில்லை. இரவு பார்த்தவுடன், “எந்த வழியில் தரவேண்டும்” என்று கேட்டார். ”போன் அல்லது பேஸ்புக்” என்று பதில் எழுதிக்கொண்டிருக்கும்போதே என்னுடைய தொலைபேசி, தயா அண்ணையின் அழைப்பினால் சிணுங்கியது.
“சொல்லுறன் எழுதிக்கொள்ளுங்கோ தம்பி”
 

Ranil-in-Jaffna8.jpg

 

”பிரதமர் ரணிலின் யாழ்ப்பாணத்துக்கான பயணம் முழுக்க முழுக்க படைத்தரப்பை திருப்திப்படுத்தவே. மூன்றுநாள் பயணத்தில் பெரும்பகுதியை, முழுமையான ஒரு நாளை படையினருடனேயே செலவிட்டார். அவர்களுடன் மதிய விருந்தையும் எடுத்துக்கொண்டார். உயர்மட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டார். ரணில் மேற்கிடம் நாட்டை அடகு வைத்துவிட்டார், இந்த நாட்டு அரசியல் பயணத்தில் கேடுவிளைவித்துவிட்டார் என்ற பார்வை தெற்கு மக்களிடம் உண்டு.
 
அதனை எதிர்கொள்ளவே, நான் எப்போதும் இராணுவத்தின் வசமே, சர்வதேசத்தை சமாளிக்கவே இந்த மாற்றங்கள் எல்லாம் என்பதை சொல்லவே இந்தப் பயணம்.
அடுத்து இந்தப் பயணத்தின் மூலம் மிகக் கெட்டித்தனமாக சர்வதேசத்தை ஏமாற்றியிருக்கிறார்.
 
இங்கு வைத்து 400 தமிழர்களைப் பொலிஸில் இணைத்துக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். இந்த 400 பேரும் வடமாகாண சபையின் ஆளுகைக்குட்பட்டவர்கள்போன்றும், 13 ஆம் சீர்திருத்த சட்டத்தின் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டது போன்றுமான ஒரு பிம்பத்தை ஊடகங்கள் உருவாக்குகின்றன. உண்மையில் நடந்தது அதுவல்ல. ஏற்கனவே பொலிஸ் மற்றும் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழர்களைப் போலவே இந்த 400 பேரும் பணியாற்றுவர். அவர்களுக்கென்று தனியிடமோ, முக்கியத்துவமோ இல்லை என்பதை தற்போது தமிழ் பொலிஸாராகக் கடமையாற்றுகின்றவர்களை அவதானித்தால் தெரியும்.
 

Ranil-in-Jaffna6.jpg

 

 

அதேபோலத்தான் வடக்கை கண்காணிக்க, இராணுவத் தலையீடுகளற்ற தனிப் பதவி ஒன்றை ஏற்படுத்த போவதாகவும் சொல்லியிருக்கிறார். வடக்கு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், நிர்வாகப்படுத்தவும், இங்குள்ள பிரச்சினைகளை வெளிக்கொணரவும், தமிழர்களாலேயே தெரிவுசெய்யப்பட்ட வடமாகாண சபை உயிர்ப்புடன் இருக்கும்போது இன்னொருவர் புதிதாக எதற்கு? வழங்கப்பட வேண்டிய அதிகாரங்களை மாகாண சபைக்கு வழங்கினால் அவர்கள் செயற்படமாட்டார்களா?
வசாவிளான், வளலாய் காணிகள் விடுவிப்பும் ஓர் ஏமாற்று நாடகம்தான். அபகரிக்கப்பட்ட 6300 ஏக்கர்களில் 1100 ஏக்கர்களை விடுவிப்பதாகக்கூறி வெறும் 250 ஏக்கர்களை மட்டுமே பொதுமக்களிடம் கையளித்தமைக்கு விழா எடுக்கிறார்கள். அந்த நிகழ்வுக்கு இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர், மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க போன்றவர்களும் கலந்துகொண்டு, அபகரிக்கப்பட்ட முழுநிலத்தையும் விடுவித்தது போன்ற ஒரு மாயையை சர்வதேசத்தின் முன் காண்பிக்கிறார்கள்.
 
இப்போது தமிழ் தரப்புக்களுடன் இன்னொரு முக்கிய விடயத்தையும் பேசத் தொடங்கியிருக்கின்றனர். ஜனாதிபதி மைத்திரி – பிரதமர் ரணில் தலைமையிலான அரசு தமிழர்களுக்கு இந்த வருடத்துக்குள் தீர்வைத் தரும். தந்தால் மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கையின் அடிப்படையில் உள்ளக விசாரணையையும் கைவிடுவோம் என்ற நிலைப்பாட்டுக்கும் வந்திருக்கின்றனர். இவையனைத்தும் பிரதமர் ரணிலின் யாழ்ப்பாண பயணத்தின் பின்னர் அவதானிக்கப்பட்டவைகள்தான்” என்று கடகடவென சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்தார் அண்ணன்.
அடுத்து ஆர்ட்டிஸ்ட் ஷான்.  பேஸ்புக்கின் மிகப் பிரபலமான பதிவர்களுள் ஒருவர். ஒவ்வொரு பதிவுக்கு 500 விருப்பங்களைக் கடக்கும் சாதனையாளர். வளர்ந்து வரும் ஓவியர். ஊடகத்துறையில் புதிதாக இறங்கியிருக்கும் ஓருவர்.
 

Ranil-in-Jaffna10.jpg

 

“பிரதமரின் யாழ்ப்பாண விஜயம் மட்டுமல்ல அண்மைக்காலத்தில் தென்னிலங்கை அரசியல்வாதிகளின் வடபகுதித் தரிசனமானது தமிழ் மக்கள்மீதுள்ள நிஜமான கரிசனமாகத் தென்படவில்லை. வரவிருக்கும் தேர்தலிற்கு சனாதிபதித் தேர்தல் போலவே தமிழ்ச் சிறுபான்மையினரின் குறிப்பிட்டளவு ஆதரவினை எதிர்பார்க்கின்றனர். சிங்கள மக்களது வாக்குகள் சரிசமப் பங்கீட்டில் ஊசலாடிக்கொண்டிருக்கும் தறுவாயில் தமிழ்மக்களது வாக்குகளே குறைநிரப்பிகளாகப்போகின்றன என்பதை நன்கு தெரிந்துவைத்துள்ளனர் என்றே கருதவேண்டியுள்ளது.
 
மாற்றத்திற்காக வாக்களித்த தமிழ்மக்களிடத்தே இந்த அரசியல் மாற்றம் எத்தகைய மாற்றங்களைத் தோற்றுவித்திருக்கின்றன என்பதை தேர்தலே சொல்லட்டும். ஏனெனில் தேர்தலை மையப்படுத்திய சலுகைகள் தமிழ்மக்களுக்கொன்றும் புதியவையல்ல!”
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட முன்னாள் தலைவரும், ஊடகத்துறையில் பணியாற்றிவருபவருமான கோமேஸ் என்ன சொன்னார்?
கேள்வியைக் கேட்டவுடன், “அண்ண, கொஞ்சமா வேணுமோ கனக்க வேணுமோ” என்பதைத்தான் பதிலாக எழுதினார்.
”டேய் தெரியுமடா உங்கட பஞ்சிக்குணம், கொஞ்சமாக, இரத்தின சுருக்கமாக டைப் பண்ணிவிடு தம்பி” என்றேன்.

 

Ranil-in-Jaffna7.jpg

 

”முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கும் ரணிலுக்கும் இடையே ஒரு இராஜ தந்திர யுத்தம், படைக்குறைப்பு என்ற போன்ற வார்த்தைகளை ஊடகங்களில் பேசவைத்துவிட்டு சென்றிருக்கிறார்.  இனி சில காலங்களுக்கு இதுதான் பேசுபொருள். ஆனால் உண்மையில் படைக்குறைப் நடந்ததா?
 
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எவ்வாறு வடபகுதிக்கு வந்தால் யாழ்ப்பாணத்தின் சந்து பொத்துகள் எல்லாம் இராணுவமும் பொலிசாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.  அதேபோலத்தான்  புதிய பிரதமர் இரண்டாம் முறை வடக்கிற்கு தனியாக வரும்போது சந்துபொந்துகள் எல்லாம் இராணுவமயம். இந்த சம்பவம் எதைச் சொல்கிறதெனில், பிரதமர் சொன்னதுபோல படைக்குறைப்பு சாத்தியமில்லை என்பதைத்தான்.
 
அத்துடன் பிரதமருக்கும் வடக்கின் முதலமைசச்ருக்கும் இடையிலான முரணை, தமிழர் பக்கமே திருப்பிவிட்டுச் சென்றுள்ளதையும், இப்போது முரண் பிரச்சினை தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் உருவாகி அது ஊடகங்களில் பிரபலம் பெறும் செய்தியாக மாறிவருவதையும் பார்க்கிறோம்”.
 

 

Ranil-in-Jaffna9.jpg

 

மதி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன். வெளிவாரியாக சட்டத்துறையிலும் பயின்றுகொண்டிருக்கிறார். அவரின் புரிதலின்படி பிரதமர் ரணிலின் பயணம் எப்படி இருந்தது என்பதற்கு என் அறைக்கு வந்து கருத்துச் சொன்னார்.
”ரணிலின் இரட்டைவேடம் வெளிப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் கணிசமான வாக்குகளைப் பெற்று பிரதிநிதியாக விளங்கும் முதலமைச்சர் வி்க்கினேஸ்வரனைச் சந்திக்க மாட்டேன் என்று சொல்லியுள்ளார்.
 
முதலமைச்சரையே அவர் அவமதிக்கின்ற சந்தர்ப்பத்தில், அவரை தெரிவுசெய்த தமிழர்களையும் அவமதித்துள்ளார். இந்தப் பயணம் முழுக்க முழுக்க எதிர்கால தேர்தல் நலன்களை அடிப்படையாகக் கொண்டதே தவிர புதிய ஆட்சி மாற்றத்துடன் தமிழர்களுக்கு தீர்வு தருவதற்காக அல்ல.
 
எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்குத்தான். ரணில் தமிழர்களை ஏமாற்றி அரசியல் செய்வதில் மிகுந்த தந்திரசாலி. எனவே வாக்குறுதிகளைக் கொடுத்து தமிழர்களை காத்திருக்க செய்துவிட்டுப் போயிருக்கிறார்,” என்று முடித்தார்.
ஆம், முன்னாள் போராளிகள், காணாமல் போனவர்களின் உறவுகள், நிலத்தை இழந்தவர்கள், வேலையற்ற பட்டதாரிகள் என அனைவரையுமே தேர்தல் முடியும்வரை காத்திருக்கச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

 

http://www.colombomirror.com/tamil/?p=3784

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா 100 நாள் முடியக்கிடையிலை இப்பிடியொரு வசந்தமான கட்டுரை.

  • கருத்துக்கள உறவுகள்
சீ மைத்திரி தருவார் !
எனக்கு 100 வீத நம்பிக்கை இருக்கு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.