Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்படையால் தாக்கப்பட்டனர் இந்திய மீனவர்கள்! யாழினில் வைத்தியசாலையினில் அனுமதி!!

Featured Replies

இலங்கைக்கடற்படையினரால் தாக்கப்பட்டு காயமடைந்த இந்திய மீனவர்கள் மூவர் யாழினில் வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பினில் காயமடைந்தவர்கள் தெரிவிக்கையினில் எங்களைச் சுற்றிவளைத்தனர். பின்னர் எங்கள் படகில் ஏறிக்கைகளைப்பின் பக்கமாகக் கட்டிவிட்டுக் கயிற்றினாலும், துப்பாக்கியின் பின்பக்கத்தினாலும் கடுமையாகத் தாக்கினர் என் நேற்று நீதிமன்றில் தெரிவித்தனர்.

பருத்தித்துறைக் கடற்பரப்பை அண்மித்துக் கைதாகிய 37 இந்திய மீனவர்களில், இலங்கைக் கடற்படை யினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் படகின் மாலுமிகள்  மூவரையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சிறைச்சாலைக் காவலர்களுக்குப் பருத்தித்துறை நீதிவான் மா.கணேசராஜா நேற்று உத்தரவிட்டார்.

  அத்துடன் மருத்துவப் பரிசோத னைக்கு உட்படுத்திச் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை எதிர் வரும் தவணையில் மன்றில் சமர்ப் பிக்குமாறும் யாழ் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளுக்கு நீதிவான் இதன்போது உத்தரவிட்டார்.   கைதான இந்திய மீனவர்கள் 37 பேரும் நேற்று பருத்தித்துறை நீதி வான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டனர்.
மாலை 6 மணியளவில் நான்கு டோறா படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் எங்களைச் சுற்றிவளைத்தனர்.   

 பின்னர் எங்கள் மீன்பிடிப் படகில் ஏறி எங்களுடைய கைகளைப் பின்புறமாகக் கட்டி வைத்துக் கயிற்றினாலும், துப்பாக்கியின் பின்பக்கத்தினாலும் கடுமையாகத் தாக்கினர்.   அதன் பின்னர் எங்கள் அனைவரது கைகளையும் கட்டிக் கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்றனர் என நீதிவானிடம் தெரிவித்தனர்.

காயமடைந்த சிவபெருமாள் செந்தில்குமார் (வயது-39), தங்கவேல் ரவிச்சந்திரன் (வயது-37), இடும்பன்சாமி கந்தவேள் (வயது-34) ஆகிய மூவரும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 

http://www.pathivu.com/news/38985/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இரட்டை மடிப்பு வலைகளை விட்டெறிந்துவிட்டு வாருங்கள் மீன் பிடிப்போம்.

 

தவிர, உங்களது அரசாங்கத்திடம் கேளுங்கள் எதற்காக ஆழ்கடலில் நெடுநாள் பயணம்செய்து மீன்பிடிப்பதற்கான பயிற்சியை குறிப்பாகத் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு வழங்கவில்லை.

 

இந்தியாவின் தென்கோடிக்கடலில் மீன்வளப்பற்றாக்குறை ஏன் நடந்தது என்பதைக் கண்டறிய தகுதிவாய்த ஆணைக்குழு இதுவரை ஏன் நியமிக்கப்படவில்லை?

என

 

எமது கடற்பரப்பில் மீன்வளத்தினை அதிகரிப்பதற்கான பவளப்பாறைகளை மீளவும் வளர்க்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தினீர்களா? உங்களது இரட்டை மடிப்பு வலை எமது கடற்பிரதேசத்தின் மீன்களது இனப்பெருக்கத்துக்கும் சிறிய மீன்களது வளர்ச்சிக்கும் உறுதுணை வளங்குபவை. அவைகள் நீங்கள் கடலின் அடிஆழம்வரை சென்றுபவளப்பாறைகளைக் கிளறி அவைகளை அழித்தொழிக்கும் இரட்டை மடிப்பு வலைகளைப் பாவிக்கிறீர்கள்.

 

கடந்த காலங்களில் இப்படியாக உங்களது கடற்பிரதேசங்களில் மீன்பிடித்தமையாலேயே அக்கடற்ப்பிரதேசங்களில் மீன் வளம் முற்ரிலுமாகவே அழிக்கப்பட்டிருக்கின்றன.

 

கடந்த முப்பது வருடங்களாக இருந்த நெருக்கடிகள் எமது மீனவர்களுக்கு இப்போது ஓரளவு குறைவாகவே இருக்கின்றது. அந்தவேளையில் உங்களது இச்செயல்கள் வெந்தபுண்ணில் வேல்பாச்சுவதுபோலவே உள்ளது.

 

கொசுறாக ஒரு செய்தி,

 

இப்படி மீன் வளம் பாதிப்பதற்கான பவளப்பாறைகள் டுகைகளை மீண்டும் கடலின் அடியில் ஏற்படுத்துவதற்கான ஒரு தொழில்நுட்பம் எப்போதோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,

 

ஒரு குறிப்பிட்ட வலுவுள்ள மின்சாரத்தின் அணோட் இணைப்பை, ஒழுங்குபடுத்தப்பட்ட  கம்பிவலைகளில் பவளப்பாறப் படிமங்களைக் கட்டி  அவற்றை கடலின் நிலப்பரப்பில்வைத்து தொடர்ந்து அணோட் இணைப்பை வழங்கிவந்தால்  குறிப்பிட்ட காலத்துக்குள் மீண்டும் பவளப்பாறைகளது வளர்ச்சி அதிகரித்து அக்கடற்ப்பிரதேசத்தில் பவளப்பாறைகள் அதிகரிக்கும் சூழல் ஏற்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர் பிரச்சனைக்கு மிக விரைவில் தீர்வு காணப்படும்.....1977 இல்......தமிழக முதலமைச்சர்.......மீனவர் பிரச்சனைக்கு மிகவிரைவில் தீர்வு காணப்படும் 2015இல் இந்தியா பிரதமர்

வராத  என்று  சொன்னால்  பிறகு  பிறகு  எதுக்கு  வாறாங்க  இந்த  தமிழ்நாட்டு  கொள்ளை  கூட்டம் .

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே.. தமிழ் நாட்டுக் கொள்ளைக் கூட்டம் என்றிட்டார் அண்ணே. நாங்க பயந்து போனம்.. கட்டுமரம் தடக்கி விழுந்ததை.. அவரின் அன்புக்குரிய சிங்கள கடற்படை தாக்கினதா சொல்ல அண்ணன் விடுவாரா பின்ன. ஊரிலை.. அண்ணனுக்கு நேவிக்காரன்... பூவரசம் பூவை போட்டுத்தானே கன்போட்டால அடிச்சவன். அண்ணன் மறந்திட்டர். அவ்வளவு ருசி.. பிரான்ஸ் சொகுசு. :lol::D

எங்கள்  மீனவர்  வளங்களை  சூறையாடி  போவது ஏற்க்க முடியாது  அவர்கள்  மீன்  பிடிப்பது  ஒன்றும்  அம்பாம்தோட்டையில்  இல்லை  வடக்கு  கடலில் ....

 

தாயும்  பிள்ளையும்  ஆனாலும் வாயும்  வயிறும்  வேறு  உறவு  என்று  சொல்லு  எங்க  மீனவர்களின்  வாழ்வாதாரத்தில்   கைவைக்க  கூடாது  பாருங்கோ ..

 

சும்மா  சீனுக்கு  நீங்க  புலம்பெயர்  போராளிகள்  கத்துவது  போல  அல்லா  அங்கு  அவர்கள்  பசியுடன்  இருக்க  தமிழ்நாட்டுக்காரன்  மீனை  அள்ளி   போவது  அனுமதிக்க  முடியாது  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் வந்து குடியேறி அள்ளுறான். அதைக் கவனிக்க வக்கில்ல.

 

தமிழ்நாட்டுக்காரன் 5 மணி நேரம் மீன்பிடிச்சு இல்லாததை கொண்டோடிடுவான் என்று புலம்பிற உங்களை..??!

 

தமிழ்நாட்டுக்காரனுக்கு மீன் தான் சாப்பாடு. சிங்களவனை விட அவனுக்கு ஈழத்தமிழனின் வலியும் பசியும் கூடத் தெரியும். சீமான் எங்களுக்கா அங்க தன்னை வருத்துவது போல. :icon_idea::)

சிங்கள இனவெறிக் கும்பல வழிநடத்தலில்  பல வகையிலும் சிங்கள ஒட்டு குழுக்கள் போட்டி போட்டிக்கொண்டு புலம் பெயர் தமிழர் /  இலங்கைத் தமிழர் / தமிழக மக்கள்    மத்தில்  குழப்ப வேலைகள் செய்து  வருகின்றன. :D  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.